பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

9/09/2014

மாறிவரும் ஆசிரியர் - மாணவர் உறவு முறை

நமது கல்வி முறையில், ஆசிரியர்-மாணவர் உறவுமுறை என்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. பொதுவாக நாம் ஒரு ஆசிரியரை வெறுத்தால் அவர் நடத்தும் பாடத்தை வெறுப்போம். ஒரு ஆசிரியரை விரும்பினால் அவர் நடத்தும் பாடத்தையும் விரும்புவோம்.
இன்றைய நிலையில் பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில், குழு மனப்பான்மையின் அடிப்படையில் ஆசிரியர்களை வெறுக்கும் மனோபாவம் மாணவர்களிடம் உள்ளது. ஆனால் இது சரியா? என்பதை சுயமாக சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒரு ஆசிரியரை வெறுத்து நாம் நடந்துகொண்டால், அவர் எப்படி நம்மை விரும்புவார்? நமது படிப்பு விஷயத்தில் எப்படி தனிப்பட்ட அக்கறை செலுத்துவார்? ஒரு ஆசிரியரை அறிந்துகொள்வது, ஒரு மாணவர் என்ற முறையில் நமக்கு பெரும் துணைபுரியும். ஒவ்வொரு ஆசிரியரும் மனிதர்தான். அந்தவகையில் அவருக்கும் விருப்பு-வெறுப்புகள் உண்டு. எனவே ஒரு நல்ல மாணவர் அந்தவகை உளவியலை புரிந்து நடந்துகொள்ள வேண்டும். ஆசிரியர் உங்களுடன் உண்மையிலேயே ஒரு நண்பராக நடந்துகொள்வதுதான், அருடன் நல்ல உறவை பேணுவதற்கான அடையாளம். இதன்மூலம் நீங்கள் பாடவிஷயத்தில் நல்ல புலமையை பெறமுடியும். அதற்கு அந்த ஆசிரியர் எவ்வளவு வேண்டுமானாலும் உதவுவார். உங்களின் சந்தேகங்களை எந்த தயக்கமும், பயமும் இன்றி கேட்கலாம். மேலும் பாடம் சம்பந்தமாக உங்களின் அறிவு மற்றும் செயல்பாடுகள் பற்றி உண்மையான மற்றும் ஆழமான மதிப்பீடுகளை ஆசிரியர் உங்களுக்கு வழங்கி, உங்களின் உண்மைநிலைப் பற்றி உங்களுக்கு புரியவைப்பார். ஆசிரியரிடம் நல்ல உறவை பேணும் மாணவர், பாடம் சம்பந்தமான பிரச்சினைகள் மட்டுமின்றி சில தனிப்பட்ட பிரச்சினைகளையும் பகிர்ந்து, அதற்கான அக்கறையுள்ள ஆலோசனைகளைப் பெறலாம். ஆசிரியருடன் நல்ல உறவை பேணுவதென்பது, அவரிடம் அளவுக்கு மீறி உரிமை எடுத்துக்கொள்வது என்றில்லை. அவரை சரியாகப் புரிந்து, அவரின் அன்பையும், ஆதரவையும் பெற்று நம் நிலையை வளப்படுத்திக் கொள்வதுதான்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக