பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

5/30/2014

TNPTF மாநில அமைப்பின் சார்பில் தலைமை தேர்தல் அதிகாரி திரு.பிரவீன்குமார் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில அமைப்பின் சார்பில் தலைமை தேர்தல் அதிகாரி திரு.பிரவீன்குமார் அவர்களிடம் அளிக்கப்பட்ட மனு விவரம்: 1. பெண்ணாசிரியர்கள், மாற்று திறனாளிகள்,உடல்நலக்குறைவு உள்ள ஆசிரியர்களுக்கு தேர்தல் பணி ஒதுக்குவதில் போக்குவரத்து வசதியுள்ள பகுதி ஒதுக்கப்படும் என்ற அறிவுரை பின்பற்றப்படவில்லை.அடுத்து வரவுள்ள தேர்தல்களில் இந்நடைமுறை பின்பற்றப்படவேண்டும. 2.B.L.O பணியில் உளள ஆசிரியர்கள் அனைவரையம் உடனடியாக விடுவிக்க வேண்டும். 3. ஆசிரியர்களை தொலைதூரத்தில் தேர்தல் பணியில் அனுப்புவதை கைவிடவேண்டும். 4.வாக்காளர் பட்டியல் சேர்க்கை,நீக்கம்,சிறப்பு முகாம் என நான்கு வருடங்களாக பணி செய்த தலைமை ஆசிர்யர்களுக்கு ரூ.150 மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட தொகை வழங்க வேண்டும்.

TNPTF பாராட்டு

தமிழ்நாடுஆரம்பப்பள்ளிஆசிரியர்கூட்டணி மாநில செயற்குழு கூட்டத்தில் பணி நிறைவு பெற்ற தூத்துக்குடி மாவட்ட செயலாளர் தோழர் முத்தையா. தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் தோழர் குருசாமி ஆகியோருக்கு பாராட்டு விழா நடந்தது.



50 மாணவர்கள் உள்ள தொடக்கப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி தொடங்க அரசு உத்தரவு

50 மாணவர்களும், அதற்கு மேலும் உள்ள இரு ஆசிரியர்கள் பணிபுரியும் தொடக்கப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை நிகழாண்டில் தொடங்கிட அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் தொடக்க, உயர்நிலைப் பள்ளிகளில் தமிழக அரசு ஆங்கில வழிக்கல்வியை கடந்தாண்டு தொடங்கியது. இதில், கடந்தாண்டு முதல் வகுப்பு, 6-ஆம் வகுப்புகளில் மட்டும் ஆங்கில வழிக்கல்வி தொடங்க கட்டாயமாக்கப்பட்டது. மேலும், மூன்று ஆசிரியர்கள் பணிபுரியும் தொடக்கப்பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வி வகுப்புகளை தொடங்க கல்வித் துறை உத்தரவிட்டது. இரு ஆசிரியர்கள் பணிபுரியும் தொடக்கப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி தொடங்க கட்டாயமில்லை என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால், நிகழ் கல்வியாண்டில் கடந்த ஆண்டு விடுபட்டத் தொடக்கப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வி வகுப்புகள் தொடங்கிட தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களும் தங்களுக்கு கீழ் உள்ள உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களிடமும் இதைச் செயல்படுத்திட உத்தரவிட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள், தங்கள் ஒன்றியத்தில் பணியாற்றும் இரு ஆசிரியர்கள் மட்டும் பணிபுரியும் தொடக்கப் பள்ளிகளின் தலைமையாசியர்களிடம் ஆங்கில வழிக் கல்வி தொடங்க ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதில் இரு ஆசிரியர்கள் பணிபுரியும் தொடக்கப் பள்ளிகளில் 50 மாணவர்களும், அதற்கும் அதிகமாக மாணவர்கள் இருந்தால் அந்தப் பள்ளிகலில் கட்டாயம் ஆங்கில வழிக் கல்வியை தொடங்கிட கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர். அதேபோல, 50 மாணவர்களுக்கும் குறைவாக இருக்கும் தொடக்கப் பள்ளிகளில் அந்தந்தப் பள்ளி ஆசிரியர்கள் விரும்பினால் ஆங்கில வழிக் கல்வியை தொடங்கி கொள்ளவும் கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

மழை நீர் சேகரிக்கும் பள்ளிக்கு பரிசு


மோடி நிர்வாகத்தில் புதுமை


டிப்ளோமா தகுதியுடன் பி.எட், படிக்கலாம் - கோர்ட் உத்தரவு


பத்தாம் வகுப்பில் தமிழ் கட்டாயமாவதால் பிற மொழி மாணவர்கள் தவிப்பு


5/29/2014

விலையில்லா பாடநூல்கள் மற்றும் விலையில்லா சீருடைகள் பள்ளி திறந்தவுடன் வழங்கப்படும்


அரசுப்பள்ளி மாணவர்களுக்கு IITயில் பயிற்சி


ஆசிரியர்கள் சேமநல நிதி (TPF) -31.03.2014வரை இறுதி இருப்பு கணக்குத் தொகை மாநில கணக்காயரிடம் ஒப்படைத்தல் சார்ந்து-தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறை.



தேர்வு விடைத்தாள் நகல்கள் இணையத்தில் பதிவேற்றம்


புதிதாக நியமிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் புதிய பென்ஷன் திட்டத்தில் சேர்ந்தால் மட்டுமே ஊதியம்

தமிழக அரசு 1.4.2003 முதல் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் என்ற புதிய பென்ஷன் திட்டத்தை (சிபிஎஸ்) தமிழ அரசு ஊழியர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. அவ்வாறு புதிதாக நியமனம் செய்யப்பட்ட அரசு ஊழியர்கள் ஏராளமானோர் புதிய பென்ஷன் திட்டத்தில் சேரவில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் 1.4.2003க்கு பிறகு நியமிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் அனைவரும் புதிய பென்ஷன் திட்டத்தில் சேர்ந்து சிபிஎஸ் பதிவு எண் பெற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. புதிய அரசு ஊழியர்கள் சிபிஎஸ் எண் பெறுவதற்கு அந்தந்த துறை தலைவர்கள், அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய அரசு ஊழியர்கள் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் சேருவதற்கான படிவத்தை பூர்த்தி செய்து அதனை துறை தலைவர் வாயிலாக அரசின் டேட்டா சென்டருக்கு அனுப்பி வைக்க வேண்டும். அங்கிருந்து சிபிஎஸ் எண் பெற்றுக்கொள்ள வேண்டும். 1.4.2003க்கு பிறகு நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்களில் புதிய பென்ஷன் திட்டத்தில் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே இனி ஊதியம் கோரப்பட வேண்டும். புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்திற்கான எண் பெறுவதற்காக மேலும் 3 மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டு ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அனைத்து துறை தலைவர்களும், தலைமை அதிகாரிகளும், சம்பள பிரிவில் உள்ள அதிகாரிகளும் புதிய ஊழியர்கள் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்து அதற்கான எண் பெறுவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெட் தேர்வில் மாற்றம் கொண்டு வர UGC திட்டம்


அரசு/அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் துரிதமான முறையில் அமைக்க-தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனர் செயல்முறை



தமிழை முதன்மை பாடமாக எடுக்க கட்டாயப்படுத்த கல்வித்துறை முடிவு


உபரி ஆசிரியர்களை தேவைப்படும் பள்ளிக்கு மாற்ற முடிவு


பள்ளிகள் திறப்பதில் மாற்றமில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்


பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமைச் சட்டம்


5/25/2014

இயற்கையை நேசிக்க இசையால் அசத்தும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்

இயற்கையை நேசிக்க இன்றைய தலைமுறைக்கு ஏற்ற  வகையில் எளிமையான பாடல்களில் ஒரு குறுந்தகட்டு ஆல்பத்தை வெளியிட்டு அசத்தி வருகிறார்கள் முக நூல் தோழர் மகேந்திர பாபு குழுவினர். நண்பர் மகேந்திர பாபு பாடல்கள் இயற்ற பாடிய அனைவரும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் என்பது நமக்கு கிடைத்த பெருமை. பள்ளிகளில் ஆண்டு விழாக்களில் பயன்படுத்தும் நோக்கில் லாப நோக்கமின்றி வெளியிட்டுள்ள இக்குறுந்தகட்டை அனைத்து ஆசிரியர் பெருமக்களும் ரூ50 சலுகை விலையில் வாங்கி ஆசிரியர் குழுவை பெருமை படுத்த வேண்டும். தோழர் மகேந்திரபாபு மற்றும் குழுவினர்க்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வாழ்துகளை தெரிவித்துக்கொள்கிறது.
தொடர்புக்கு: மு.மகேந்திர பாபு - 97861 41410

5/22/2014

மதிப்பெண் சான்றிதழில் எழுத்து பிழையா? : தலைமை ஆசிரியர் "சஸ்பெண்ட்' உறுதி

பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் தொடர்பாக, தேர்வுத் துறை வழங்கிய சுற்றறிக்கையை, சரியாக அமல்படுத்தாத தலைமை ஆசிரியர் மீது, "சஸ்பெண்ட்' நடவடிக்கை எடுக்கப்படும்' என, தேர்வுத் துறை நேற்று தெரிவித்தது. பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதிய, 8.21 லட்சம் மாணவ, மாணவியருக்கு, நேற்று, அவரவர் பள்ளிகளில், மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மதிப்பெண் சான்றிதழில், ஒரு எழுத்துப்பிழை கூட இருக்கக் கூடாது என்பதற்காக, தேர்வுத் துறை இயக்குனர், தேவராஜன், பல மாதங்களுக்கு முன்பே, பல நடவடிக்கைகளை எடுத்தார். இதற்கென தனி படிவம் அச்சடித்து, அதில், மாணவ, மாணவியரின் முழுமையான விவரங்களை பதிவு செய்து, அதில், மாணவர், பெற்றோர், வகுப்பு ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் ஆகிய அனைவரையும், கையெழுத்திடச் செய்தார். இந்த படிவத்தில் தவறு செய்தால், அதற்கு, சம்பந்தபட்ட பள்ளி தலைமை ஆசிரியரே பொறுப்பு ஏற்க நேரிடும் எனவும், இயக்குனர் எச்சரித்திருந்தார். அதன்படி, பெறப்பட்ட படிவங்களின் அடிப்படையில், மதிப்பெண் சான்றிதழ்கள் அச்சிடப்பட்டன. எனினும், யாராவது தவறு செய்திருந்தால், அதை முன்கூட்டியே சரிசெய்து, புதிய மதிப்பெண் சான்றிதழ் தரவும், தேர்வுத் துறை ஏற்பாடு செய்திருந்தது. அச்சிடப்பட்ட சான்றிதழ்கள், கடந்த, 17ம் தேதி காலை, பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டன. தலைமை ஆசிரியர்கள், மதிப்பெண் சான்றிதழை சரிபார்த்து, அதில், ஏதாவது பிழை இருந்தால், மாணவரின் பதிவு எண்ணை குறிப்பிட்டு, மதிப்பெண் சான்றிதழில் உள்ள பிழை என்ன, அதை நிவர்த்தி செய்ய, சரியான தகவல்கள் ஆகியவற்றை குறிப்பிட்டு, தேர்வுத் துறை, "இ - மெயில்' அனுப்ப வேண்டும் என, தேர்வுத் துறை உத்தரவு பிறப்பித்திருந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, சுற்றறிக்கை அனுப்பப்பட்டு, அவர்கள் மூலம், தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கவும், ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதன்படி, நேற்று முன்தினம், மாலை வரை, 19 ஆயிரம் சான்றிதழ்களில், பிழை இருப்பதாக, தலைமை ஆசிரியர் சுட்டிக்காட்டினர். இதையடுத்து, பிழைகள் சரி செய்யப்பட்டு, 19 ஆயிரம் புதிய மதிப்பெண் சான்றிதழ்கள், உடனடியாக அச்சிடப்பட்டு, பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டன. இவ்வளவு முன்னேற்பாடு செய்தும், காஞ்சிபுரம் உள்ளிட்ட, சில மாவட்டங்களில், தேர்வுத் துறையின் உத்தரவை சரியாக அமல்படுத்தவில்லை என, கூறப்படுகிறது. குறிப்பாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில், பெயரில் பிழை, பிறந்த தேதியில் பிழை என, பல வகை பிழைகள் ஏற்பட்டிருப்பதாக, ஆசிரியர் ஒருவர் தெரிவித்தார். இதுகுறித்து, தேர்வுத் துறை வட்டாரம் கூறியதாவது: பிழையான மதிப்பெண் சான்றிதழை, மாற்றிக்கொடுக்க, தயாராக உள்ளோம். ஆனால், முன்கூட்டியே, பிழையை சரிசெய்யாத, தலைமை ஆசிரியர் மீது, "சஸ்பெண்ட்' நடவடிக்கை எடுக்கப்படும். தவறான மதிப்பெண் சான்றிதழை, தலைமை ஆசிரியர், தேர்வுத் துறைக்கு எடுத்து வர வேண்டும்.
மாணவர்கள் வரக்கூடாது. இவ்வாறு, தேர்வுத் துறை தெரிவித்தது. இந்த அதிரடியால், தலைமை ஆசிரியர்கள் கலக்கம் அடைந்து உள்ளனர்.

உதவி/கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் பணிமாறுதல் மூலம் மீளவும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக விருப்ப மாறுதல் சார்ந்து-தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறை.மற்றும் அது சார்ந்த படிவம்.

 



அரசு ஊழியர்களின் விடுமுறையைக் குறைக்கக் கோரி வழக்கு : தீர்ப்பு ஒத்திவைப்பு.

ஒரு ஆண்டுக்கு 196 நாட்கள் மட்டுமே அரசு ஊழியர்கள் பணிபுரிவதாகவும், சம்பளக் கமிஷன் பரிந்துரைப்படி விடுமுறை நாட்களை குறைக்கக் கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.
பொது நலன் மனுவில், அரசு ஊழியர்கள் சனி, ஞாயிறு என 104 நாட்களும், தேசிய மற்றும் பிற விடுமறைகள் 18ம், தற்செயல் விடுப்பு 15ம், ஈட்டிய விடுப்பு 15ம், மருத்துவ விடுப்பு 12 என மொத்தமாக ஒரு ஆண்டுக்கு 164 நாட்கள் விடுமுறை எடுக்கின்றனர். அதன்படி பார்த்தால் அவர்கள் ஆண்டுக்கு 196 நாட்கள் தான் பணியாற்றுகின்றனர். இது குறித்து 2008ஆம் ஆண்டு சம்பளக் கமிஷன் பரிந்துரையில், அரசு அலுவலகங்களில் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள விடுமுறை நாட்களை குறைக்க வேண்டும். விடுமுறையை 2 முதல் 8 நாட்களாக கட்டுப்படுத்த வேண்டும். தேசிய விடுமுறை (குடியரசு தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி) நாட்களின் போது மட்டும், அரசு அலுவலகங்கள் மூடப்பட வேண்டும் என பரிந்துரைத்தது என்று கூறப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த மதுரைக் கிளை நீதிபதிகள் என். கிருபாகரன், எஸ். வைத்தியநாதன் ஆகியோர் கொண்ட அமர்வு, இடைக்கால உத்தரவு பிறப்பிப்பதாகக் கூறி தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

2013-2014ஆம் ஆண்டிற்கான இலவச பேருந்து அனுமதி சீட்டு மேலும் மூன்று மாதங்களுக்கு (ஆகஸ்ட் 2014 வரை) பயன்படுத்திக்கொள்ள - இயக்குனரின் செயல்முறை.


10-ம் வகுப்பு முடிவு அறிய சிறப்பு எஸ்.எம்.எஸ். வசதி


பள்ளி மாணவர்களுக்கு கடந்தாண்டு வழங்கிய பஸ் பாஸ் ஆகஸ்ட் வரை செல்லுபடியாகும்

நடப்பு கல்வியாண்டு தொடங்கி 3 மாத காலத்திற்கு கடந்தாண்டு பயன்படுத்தப்பட்ட பழைய பஸ் பாஸ் செல்லுபடியாகும் என போக்குவரத்து கழகங்களுக்கு அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த பஸ் பாஸ்கள் பள்ளிகள் திறக்கப்பட்டு 2 மாதங்கள் கழித்துதான் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நிலை யை தவிர்க்கும் வகை யில், நடப்பு கல்வியாண்டிற்கான இலவச பஸ் பாஸ் முன்கூட்டியே வழங்கிட பள்ளி கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டு வந்தது. இதற்காக பஸ் பாஸ் தேவை பட்டியலை ஒவ்வொரு பள்ளியும் முன்கூட்டியே தயாரித்து போக்குவரத்து கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தமிழக பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், தேவை பட்டியல் தயாரித்து பஸ் பாஸ்கள் அச்சடித்து மீண்டும் மாணவர்களுக்கு வழங்க காலதாமதம் ஏற்படும் என்பதால் கடந்த ஆண்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பஸ் பாஸ் 3 மாத காலத்திற்கு செல்லுபடியாகும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: பள்ளி மாணவர்களுக்கு கடந்த கல்வியா ண்டில் வழங்கப்பட்ட இலவச பஸ் பாஸ் நடப்பு கல்வியாண்டில் ஆகஸ்ட் வரை 3 மாத காலத்திற்கு பயன்படுத்திக்கொள்ள அரசு அனுமதி வழங்கி உள்ளது.கடந்த ஆண்டு வழங்கப்பட்ட பழைய பஸ் பாஸ் வைத்துள்ள மாணவர்களை அரசு பஸ்கள் ஏற்றி செல்ல வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், பழைய பஸ் பாஸ் காணாமல் போயிருந்தால், பள்ளி சீருடையில் மாணவர்கள் இருந்தால் அந்த மாணவர்களை அரசு பஸ்கள் கட்டாயம் ஏற்றி செல்ல வேண்டும். பஸ் பாஸ் இல்லை என்பதற்காக எக்காரணம் கொண்டும் மாணவர்களை ஏற்றாமல் பஸ்கள் செல்லக்கூடாது என்று போக்குவரத்து கழகங்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது என்றனர்.

கல்வித்துறை விதி எண் 76 மற்றும் 77 ன்படி, பள்ளிகளில் விடுமுறை நாட்களில் வகுப்பு நடத்த தடை கோரி வழக்கு

விடுமுறை நாட்களில் பள்ளிகளில் வகுப்பு நடத்த தடை கோரிய மனு மீது ஐகோர்ட்டில் விசாரணை நடந்தது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த அருண் என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொது நல மனு:தமிழகத்தில் அரசு, தனியார் மற்றும் அரசு உதவி பெறும் 15 ஆயிரம் பள்ளிகள் உள்ளன. இதில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் படிக்கின்றனர். பள்ளிகள் அனைத்தும் தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை இயக்குநரின் கட்டுபாட்டில் உள்ளன. பள்ளி கல்வி விதிப்படி ஒரு நாளைக்கு 5.40 மணி நேரத்திற்கு குறையாமலும், ஆண்டுக்கு 200 நாளும் பள்ளி நடக்க வேண்டும்.இதில் 180 நாட்கள் கல்வி கற்பிக்கவும், 20 நாட்கள் தேர்வுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன.&ஆனால் மெட்ரிக் பள்ளிகள் மற்றும் சில அரசு பள்ளிகளில் விடுமுறை நாட்களில் வகுப்பு நடக்கிறது. தனியார் பள்ளிகள் ரேங்க் பெறும் போட்டியில் 10ம் வகுப்பு பாடத்தை 9ம் வகுப்பிலும், 12ம் வகுப்பு பாடத்தை 11ம் வகுப்பிலும் நடத்துகிறார்கள். இதற்காக மாணவர்களை படிக்கும் இயந்திரமாக மாற்றுகிறார்கள். இதனால் ஏற்படும் மன அழுத்தத்தால் சில மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர்.சமச்சீர் கல்வியின் நோக்கம் பாதிக்கிறது. சில பள்ளிகளில் மாணவர்களுக்கு விடுப்பு தர மறுக்கின்றனர். எனவே நீதிமன்றம் தலையிட்டு கல்வித்துறை விதி எண் 76 மற்றும் 77 ன்படி, விடுமுறை நாட்களில் வகுப்பு நடத்த அனுமதிக்க கூடாது என மனுவில் கூறியிருந்தார்.இந்த மனுவை நேற்று நீதிபதிகள் என்.கிருபா கரன், எஸ்.வைத்தியநாதன் பெஞ்ச் விசாரித்தது. மனு குறித்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக கூறி ஒத்திவைத்தனர்.<

உரியதுறை அனுமதியுடன் இரண்டு பட்டங்களை ஒரே கால அட்டவணையில் வெவ்வேறு நாட்களில் தேர்வு எழுதினால் அவருக்கு ஊக்க ஊதியம் அனுமதிக்கலாம். RTI


பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு உடனடி தேர்வு அட்டவணை வெளியீடு

பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு உடனடி தேர்வு அட்டவணையை, தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.
தேர்வுத்துறை அறிவிப்பு: பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகளில், தேர்ச்சி பெறாத மாணவர்கள், குறிப்பிட்ட பாடத்தை, உடனடியாக எழுதி, நடப்பு கல்வி ஆண்டிலேயே, உயர்கல்வியை தொடர, உடனடி தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி, பிளஸ் 2 உடனடி தேர்வு, ஜூன், 18ம் தேதி முதல், 30ம் தேதி வரையிலும், பத்தாம் வகுப்பு உடனடி தேர்வு, ஜூன், 23ம் தேதி முதல், 30ம் தேதி வரையிலும் நடக்கும். இவ்வாறு, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
 தேர்வு அட்டவணை விவரம்: நாள் / பாடம்
பிளஸ் 2 : ஜூன் 18 மொழி முதல் தாள்
 ஜூன் 19 மொழி இரண்டாம் தாள்
ஜூன் 20 ஆங்கிலம் முதல் தாள்
ஜூன் 21 ஆங்கிலம் இரண்டாம் தாள்
ஜூன் 23 இயற்பியல், பொருளியல்
ஜூன் 24 கணிதம், விலங்கியல், மைக்ரோ-பயாலஜி
ஜூன் 25 வணிகவியல், புவியியல், ஹோம் சயின்ஸ்
 ஜூன் 26 வேதியியல், கணக்குப்பதிவியல்
ஜூன் 27 உயிரியல், வரலாறு, தாவரவியல்,வணிகக் கணிதம்
 ஜூன் 28 கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ-கெமிஸ்ட்ரி'
ஜூன் 30 தொழிற்பாட தேர்வுகள், அரசியல் அறிவியல், புள்ளியியல்.
பத்தாம் வகுப்பு:  ஜூன் 23 மொழி முதல் தாள்
 ஜீன் 24 மொழி இரண்டாம் தாள்
ஜூன் 25 ஆங்கிலம் முதல் தாள்
ஜூன் 26 ஆங்கிலம் இரண்டாம் தாள்
ஜூன் 27 கணிதம் ஜூன் 28 அறிவியல்
 ஜூன் 30 சமூக அறிவியல்

குமரியில் தலைமை ஆசிரியர்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவு வாபஸ்


இந்தியாவில் உள்ள போலி பல்கலைக்கழகங்கள்: யூஜிசி அறிவிப்பு

இந்தியாவில் உள்ள போலி பல்கலைக்கழகங்களின் பட்டியலை, பல்கலைக்கழக மானியக் குழு (யூஜிசி) வெளியிட்டுள்ளது. போலி பல்கலைகள் அதிக எண்ணிக்கையில் உத்திர பிரதேசத்தில் 9 என்ற அளவிலும், அதற்கடுத்து தில்லியில் 5 பல்கலையும் உள்ளன.
பிகார், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்ட்ரா, தமிழ்நாடுமற்றும் மேற்கு வங்காளம் உள்பட 7 போலி பல்கலைக்கழகங்கள் உள்ளன.
யூஜிசி வெளியிட்டுள்ள 21 போலி பல்கலைக்கழகங்கள் விபரம்:

1. Maithili University/Vishwavidyalaya, Darbhanga, Bihar.

2.Commercial University Ltd., Daryaganj, Delhi.

3. United Nations University, Delhi.

4.Vocational University, Delhi.

5. ADR-Centric Juridical University, ADR House, 8J, Gopala Tower, 25 Rajendra Place, New Delhi - 110008.

6. Indian Institute of Science and Engineering, New Delhi.

7. Badaganvi Sarkar World Open University Education Society, Gokak, Belgaum, Karnataka.

8. St. John's University, Kishanattam, Kerala.

9. Kesarwani Vidyapith, Jabalpur, Madhya Pradesh.

10. Raja Arabic University, Nagpur, Maharashtra.

11. D.D.B. Sanskrit University, Putur, Trichi, Tamil

12. Indian Institute of Alternative Medicine, Kolkatta.

13. Varanaseya Sanskrit Vishwavidyalaya, Varanasi (UP) Jagatpuri, Delhi.

14. Mahila Gram Vidyapith/Vishwavidyalaya, (Women's University) Prayag, Allahabad, Uttar Pradesh.

15. Gandhi Hindi Vidyapith, Prayag, Allahabad, Uttar Pradesh.

16. National University of Electro Complex Homeopathy, Kanpur, Uttar Pradesh.

17. Netaji Subhash Chandra Bose University (Open University), Achaltal, Aligarh, Uttar Pradesh.

18. Uttar Pradesh Vishwavidyalaya, Kosi Kalan, Mathura, Uttar Pradesh.

19. Maharana Pratap Shiksha Niketan Vishwavidyalaya, Pratapgarh, Uttar Pradesh.

20. Indraprastha Shiksha Parishad, Institutional Area,Khoda,Makanpur,Noida Phase-II, Uttar Pradesh.



21. Gurukul Vishwavidyala, Vridanvan, Uttar Pradesh.

2014-15ம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட வேண்டிய மேல்நிலைபள்ளிகள் பட்டியல்.

வரும் கல்வியாண்டில் உயர்நிலை பள்ளியில் இருந்து மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்த வேண்டிய அரசு பள்ளிகளின் பட்டியல் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் வரும் 2014-15ம் கல்வியாண்டில் அரசு உயர்நிலை பள்ளிகளில் இருந்து மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட வேண்டிய பள்ளிகளின் பட்டியலை தயாரித்து அனுப்ப பள்ளி கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்விஅலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே அரசு மேல்நிலை பள்ளிகள் உள்ள இடங்களில் ஒரு அரசு உயர்நிலை பள்ளியை தரம் உயர்த்துவதை விட, அரசு மேல்நிலை பள்ளிகளே இல்லாத இடத்தில் உள்ள உயர்நிலை பள்ளிகளை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 பள்ளிகள் தரம் உயர்த்த பொதுமக்கள் பங்குத்தொகையாக ரூ.2 லட்சம் செலுத்தப்பட்டிருக்க வேண்டும். அருகருகில் மேல்நிலை பள்ளிகள் இருந்து பங்கு தொகை கட்டியிருந்தாலும் அந்த பகுதியில் புதிதாக ஒரு அரசு உயர்நிலை பள்ளியை மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 8 கி.மீ. தூரத்திற்குள் ஒரு மேல்நிலை பள்ளி இருக்க வேண்டும் என்று அரசாணை உள்ள நிலையில், அப்பள்ளியில் மாணவர் எண்ணிக்கை அதிகம் இருப்பின் அதன் அருகில் மற்றொரு உயர்நிலை பள்ளியை மேல்நிலைபள்ளியாக தரம் உயர்த்தலாம் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் கடந்த காலங்களில் பள்ளிகள் தரம் உயர்வதற்காக பொதுமக்களால் பங்குத்தொகை செலுத்தப்பட்டு இதுவரை தரம் உயர்த்தப்படாத பள்ளிகளின் விவரங்களை பட்டியலிட்டு அந்த பள்ளிகளுக்கு முன்னுரிமை அளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.இதனை தொடர்ந்து மாவட்ட கல்வி அலுவலர்கள் தரம் உயர்த்தப்பட உள்ள பள்ளிகள் பட்டியல், முன்னுரிமை பட்டியல் விபரங்களை மாவட்ட வாரியாக தயாரிக்கும் பணியை தொடங்கியுள்ளனர்.

எந்த ஒரு செயல் செய்யும்பொழுதும் திட்டமிடல் அவசியம் வங்கி மண்டல மேலாளர் பேச்சு

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நேர்மறை எண்ணங்கள் தொடர்பான கலந்துரையாடல் பயற்சி மாணவர்கள் ,பெற்றோர் முன்னிலையில் நடைபெற்றது.கலந்துரையாடல் பயற்சிக்கு வந்திருந்தோரை 6 ம் வகுப்பு மாணவர் வசந்தகுமார் ஆங்கிலத்தில் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தங்கினார். 7 ம் வகுப்பு மாணவி சமயபுரத்தாள் பள்ளியில் கடந்த ஓராண்டு காலத்தில் நடந்த நிகழ்சிகள் குறித்து ஆங்கிலத்திலும் , 5 ம் வகுப்பு மாணவி சுபலெட்சுமி அழகிய தமிழிலும் பேசி அனைவரையும் ஆச்சர்யத்தில் முழ்க வைத்தனர்.பாண்டியன் கிராம வங்கியின் மண்டல மேலாளர் கவிஞர் சபாரெத்தினம் மாணவர்கள் மற்றும் பெற்றோரகளிடையே நேர்மறை எண்ணங்கள் தொடர்பான கலந்துரையாடல் நடத்தினார்.அவர் பேசுகையில் , நாம் எல்லா விஷயங்களையும் எட்டி பிடிக்க முடியும்.இது விந்தை உலகம்.பருப்பு வடையை வைத்து எலியை பிடிப்பது போல ஆசிரியர் நடத்தும் பாடத்தை மட்டும் படிப்பது சிறந்த செயலாகாது .மெய்,வாய்,கண்,மூக்கு ,செவி,மனம் இவைகளை ஒருங்கினைத்தலே ஆறறிவாகும்.மனித மூளையின் எடை 1400 கிராம் உள்ளது.அதில் 700 கிராம் வலது புறமும் ,700 கிராம் இடது புறமும் உள்ளது.வலது புற மூளை ஒரு பூவை பார்த்து பூ அழகாக இருக்கிறது என்று நினைக்கும்.இடது புறத்தில் உள்ள 700 கிராம் மூளையோ அப்பூவை அல்லி வட்டம் ,புள்ளி வட்டம் என தனித்தனியாக பூக்களின் இதழ்களை பிரித்து அப்பூவின் சிறப்பை பாழாக்கிவிடும் .நேரம் பொன் போன்றது.நாம் ராகு காலம் எம கண்டம் என்று கூறி நேரத்தை வீனடிக்கக்கூடாது .எந்த ஒரு செயல் செய்யும் பொழுதும் திட்டமிடல் அவசியம்.மண்ணில் பிறந்த நாம் உலகில் ஏதேனும் சாதிக்க வேண்டும் .கல்வியில் சிறந்து விளங்குவது என்பது மட்டும் போதாது.அனுபவ அறிவும் அவசியம்.அறிவை தேடி நாம் ஓடிகொண்டே இருக்க வேண்டும்.நூலகங்குளுக்கு சென்று அறிய வகை புத்தங்களைபடிக்கபழகி க்கொள்ளவேண்டும் .ஆங்கில ஏடுகளை படிக்கும் பழக்கத்தை உருவாக்கிக்கொள்ளவேண்டும் .ஆங்கில அகராதியை படிக்க வேண்டும்.ஒரு நாளைக்கு மூன்று வார்த்தைகள் வீதம் ஒரு மாதத்திற்கு 90 வார்த்தைகள் படித்து விடலாம்.மனிதன் பாம்பு,மனைவி , மைக் இவை மூன்றிற்கும் பயப்பிடுகிறான்.மைக் முன்பு பேசுவதற்கு நாம் சிறுவயதிலேயே பள்ளியில் படிக்கும்போதே மேடையில் பேசி பழக வேண்டும்.அதற்கு நிறைய வாய்ப்பு பள்ளியில்தான் அமையும்.அதனை நன்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும்.எக்காரணத்தை கொண்டும் நம் பெற்றோரை மற்றவர்களிடம் விட்டு கொடுக்க கூடாது.சாமியார் ஒருவரிடம் வண்ணத்து பூச்சியை வைத்து இளைஞர்கள் நடத்தும் வேடிக்கையை கதையாக விளக்கமாக எடுத்து கூறி,உன் வாழ்க்கை உன்கையில் என்பதை மாணவர்களுக்கு எளிதாக புரியும் வகையில் எடுத்து கூறினார். சிறு வயதில் கனவு பெரிதாக இருக்க வேண்டும்.அப்துல் கலாம் அறிவுறுத்துவது இதைத்தான் அறிவுறுத்துகிறார்.ஏன் ,எதற்கு என்று சிந்திக்க வேண்டும்.என்று பேசினார்.கலந்துரையாடல் பயிற்சியில் 5 ம் வகுப்பு மாணவி பரமேஸ்வரி மேலாளர் கூறிய பழமொழியை ஆங்கிலத்தில் கூறுமாறு கேள்வி எழுப்பினார்.உடனே மேலாளரும் ஆங்கிலத்தில் பழமொழியை மொழிபெயர்த்து கூறினார்.கலந்துரையாடலில் மாணவி சௌமியா ,அபிநயா ,சொர்ணாம்பிகா ,ராஜேஸ்வரி,,நடராஜன் ,மாணவர் சன்முகப்ரகாஷ்ஆகியோர் கேள்விகள் கேட்டு பதில் பெற்றனர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியை சாந்தி,கலாவல்லி,வாசுகி ஆகியோர் செய்திருந்தனார்.நிறைவாக 8 ம் வகுப்பு மாணவர் அஜித் ஆங்கிலத்தில் நன்றி கூறினார். ஏராளமான பெற்றோரும் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

M.L.A.களுக்கு புகார் அனுப்ப இ.மெயில் முகவரி



பள்ளிகளுக்கு புத்தகம் வழங்க கல்வித்துறை மும்முரம்


ஓய்வு பெறும் நாளன்றே ஓய்வூதிய ஆணை. மத்திய அரசில் அறிமுகம்


அரசு ஊழியர்களின் விடுமுறையை குறைக்க வழக்கு


நாளை 10-ம் வகுப்பு ரிசல்ட்


5/21/2014

அங்கீகாரம் பெறாத 49 பள்ளிகளை மூட தமிழக அரசு உத்தரவு!

கோவையில் அங்கீகாரம் பெறாமல் இயங்கி வந்த 49 மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கோவையில் அங்கீகாரம் பெறாமல் 49 மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகள் இயங்கி வந்தது. இதையடுத்து அந்த பள்ளிகள் அங்கீகாரம் பெற கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் அந்த பள்ளிகளின் நிர்வாகம் இதுவரை அனுமதி பெறவில்லை. இதையடுத்து அந்த 49 பள்ளிகளையும் மூட மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். மேலும், அந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்கும் பணியையும் அந்தந்த பள்ளிகளே மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். கோவை: கோவையில் அங்கீகாரம் பெறாமல் இயங்கி வந்த 49 மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கோவையில் அங்கீகாரம் பெறாமல் 49 மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகள் இயங்கி வந்தது. இதையடுத்து அந்த பள்ளிகள் அங்கீகாரம் பெற கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் அந்த பள்ளிகளின் நிர்வாகம் இதுவரை அனுமதி பெறவில்லை. இதையடுத்து அந்த 49 பள்ளிகளையும் மூட மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்

பெற்றோர், மாணவர்களை கவரும் அரசுப் பள்ளி

கூடலூர்: கூடலூர் புளியாம்பாறையில் உள்ள அரசு பள்ளியில், மாணவர்களை சேர்க்க வலியுறுத்தி வெளியிட்டுள்ள நோட்டீஸ் பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
ஆங்கிலத்தின் மீதுள்ள ஆர்வம்; தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, பெரும்பாலான பெற்றோர், தங்கள் பிள்ளைகளை தனியார் ஆங்கில பள்ளிகளில் சேர்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால், நகர் புறங்களுக்கு அடுத்ததாக, கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளும் மூடப்படும் சூழல் உருவாகி வருகிறது. இதனை தடுக்கும் வகையில், அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழிக்கல்வியை படிப்படியாக கொண்டு வர அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதில், மாவட்டத்தில் தற்போது, 27 அரசு பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், அரசு பள்ளி குறித்து பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பல்வேறு நிர்வாகங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. உதாரணமாக, கூடலூர் புளியாம்பாறையில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவங்க பள்ளி, நிர்வாகம், தனியார் பள்ளிகளுக்கு இனையாக துண்டு பிரசுரங்களை வெளியிட்டுள்ளது.
அதில், ஊராட்சி ஒன்றிய பள்ளியில் மாணவர்களுக்கு தரமான கல்வி; அரசு சார்பில் கிடைக்கும் அனைத்து இலவச திட்டங்கள்; பள்ளியில் உள்ள ஆங்கில பிரிவு போன்ற தகவல்களை வெளியிட்டுள்ளது. இதனை வரவேற்றுள்ள பல பெற்றோர்கள், அந்த பள்ளியில் தங்கள் குழந்தைகளை சேர்க்க முடிவு செய்துள்ளனர்.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, சிவகங்கை மாவட்டச் செயலாளர் திரு.தாமஸ் அமலநாதன் அவர்கள் பணியாற்றும் பள்ளியின் மாணவர் சேர்க்கைக்காக தினதந்தி நாளிதழில் வெளியான விளம்பரம்


இரட்டைப்பட்டம் வழக்கை உச்ச நீதி மன்றம் ஏற்றுக்கொண்டதற்கான உத்தரவு

ஆசிரியர் சங்கங்களின் அங்கீகாரம் ரத்தாகுமா? பரபரப்பை ஏற்படுத்திய அரசின் கடிதம்.

அரசுக்கு எதிராக தேர்தல் சமயத்தில் ஸ்டிரைக்கில் ஈடுபட்ட ஆசிரிய சங்கங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்வது தொடர்பாக விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளதால், ஆசிரியர் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆசிரியர்களை உறுப்பினர்களாக கொண்டு பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் செயல்படுகின்றன. கடந்த மார்ச் 6ம் தேதி "இடை நிலை ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வை அமல்படுத்த வேண்டும்" என்ற கோரிக்கையை முன் வைத்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மற்றும் தமிழக ஆசிரியர் கூட்டணி ஆகிய சங்கங்கள் விடுத்த அழைப்பை ஏற்று, பல ஆசிரியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். இந்நிலையில், தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் முன்னேற்றப் பேரவை மாநில தலைவர் ஆரோக்கியதாஸ், மாநில முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:"ஆசிரியர்களை ஸ்டிரைக் நடத்த அழைப்பு விடுத்த தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொது செயலர் மீனாட்சி சுந்தரம், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாநிலதலைவர் அண்ணா மலை ஆகியோர் ஓய்வு பெற்ற அரசு ஆசிரியர்களாக உள்ளனர். ஆசிரியர்களுக்கான நன்னடத்தை விதிப்படி, அவர்கள் சங்கங்களின் முக்கிய நிர்வாக பொறுப்புகளில் இருக்க முடியாது; அவர்களை நன்னடத்தை விதிகள் எதுவும் கட்டுப்படுத்தாது. எனவே, அவர்கள் தலைமையில் செயல்படும் சங்கங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்; அச்சங்கங்களை மாவட்ட, மாநில அளவிலான எவ்விதபேச்சு வார்த்தைக்கும் அழைக்க கூடாது" என, கூறப்பட்டிருந்தது. இக்கடிதம் தொடர்பாக அரசு துணை செயலர் செல்வராஜ், தொடக்க கல்வி இயக்குனருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "ஆசிரியர் சங்கங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்வது தொடர்பான புகார் மனு மீது தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மனு மீதான புகார் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விவரத்தை முதல்வரின் தனிப்பிரிவுக்கு வரும் 15 நாட்களுக்குள் "ஆன்-லைன்" மூலம் தெரிவிக்க வேண்டும்." இவ்வாறு ஆரோக்கியதாஸ் கூறியுள்ளார்.அரசின் இந்நடவடிக்கை, ஆசிரிய வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவப் படிப்பு - 25 ஆயிரத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் விநியோகம்

சென்னை: தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, 25 ஆயிரத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில், 19 அரசு மருத்துவக் கல்லுாரிகளில், அகில இந்திய ஒதுக்கீடு, 15 சதவீதம் போக, மீதம், 2,172 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. சென்னையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லுாரியில், 85 இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம், 14ம் தேதி துவங்கியது.
முதல் நாளில், 12,138 மாணவ, மாணவியர் விண்ணப்பங்களை ஆர்வமுடன் பெற்றுச் சென்றனர். நேற்று(மே 20ம் தேதி) 1,225 பேர் விண்ணப்பங்கள் பெற்றுள்ளனர். ஆறு நாட்களில், 25 ஆயிரத்து 474 விண்ணப்பங்கள் தரப்பட்டுள்ளன.
இம்மாதம், 30 தேதி வரை விண்ணப்பம் கிடைக்கும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, ஜூன் 2ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

தோழர் ஆர். உமாநாத் காலமானார்

விடுதலைப் போராட்ட வீரர், விடுதலைக்குப் பின் இந்தியாவில் சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவதற்கான தொண்டில் தம்மை ஒப்படைத்துக்கொண்ட போராளி, தமிழகத்தில் பொதுவுடைமை இயக்கத்தைக் கட்டி வளர்த்த முன்னோடி, செங்கொடித் தொழிற்சங்கத்தின் மூத்த தலைவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் ஆர். உமாநாத் காலமானார்.

வெயில் கொடுமையின் காரணமாக பள்ளி திறக்கும் நாளை ஒத்தி வைக்க கல்வித் துறை ஆலோசணை


5/20/2014

திருச்சியில் நடைபெற்ற இரட்டைப்பட்டம் வழக்கின் ஒருங்கிணைப்பாளர் கூட்டத்தில் மாவட்ட தொடர்பாளர்கள் அறிவிப்பு

திருச்சியில் கடந்த 18.5.2014 அன்று இரட்டைப்பட்டம் ஒருங்கிணைப்பு கூட்டம் மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஹோட்டலின் கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்தை வருமானவரி துறை ஆய்வாளர் திரு.மீரான் இப்ரான் அலி சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். கூட்டத்தில் இதுவரை நீதி மன்றத்தில் நடந்த வழக்கின் தன்மை மற்றும் தற்போதைய உச்ச நீதி மன்றத்தில் வழக்கின் நிலை குறித்து வழக்கை நடத்தி வரும் திரு.கலியமூர்த்தி, திரு.ஆரோக்கிய ராஜ், திரு.கருணாலய பாண்டியன் ஆகியோர் எடுத்துரைத்தனர். புது தில்லியில் உச்ச நீதி மன்றத்தில் வழக்கை தாக்கல் செய்தது முதல் இது வரை நடந்த நிகழ்வுகள் எடுத்து வைக்கப்பட்டது. வழக்கில் புதிதாக இணைய விருப்பம் உள்ளவர்களுக்கு வசதியாக மாவட்ட அளவில் தொடர்பாளர்களையும் இக்கூட்டம் அறிவித்தது. இதில் உச்ச நீதி மன்றத்தில் வழக்கில் இணைபவர்களுக்கு மட்டும் 1.1.2012 முன்னுரிமை பெற்றுத் தரப்படும் என்ற வழக்குரைஞரின் உறுதிமொழி தெரிவிக்கப்பட்டது. மேலும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற இரட்டைப்பட்டம் பெற்ற ஆசிரியர் நண்பர்கள் திரளாக கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல விசயங்கள் விரிவாக அலசப்பட்டன. இறுதியில் மாவட்ட தொடர்பாளர்களை இறுதி செய்து அவர்கள் மூலம் சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் இருந்து புதிதாக வழக்கில் இணைபவர்களை இறுதி படுத்த முடிவாற்றப்பட்டது.
முதன்மை ஒருங்கிணைப்பாளர்கள்:
1. திரு.கலியமூர்த்தி - 9894718859
2. திரு.ஆரோக்கியராஜ் - 9942575162
நிதி நிர்வாகம்:
1. திரு.கருணாலய பாண்டியன் - 9894192500
2. திரு. கணேஷ் - 9976105153
மாவட்ட தொடர்பாளர்கள்:
1. திருவள்ளூர் :
திரு.ரவிச்சந்திரடு - 9150008128
2. வேலூர் :
திரு. மனோகரன் - 9786267860
3. காஞ்சிபுரம்: 
திரு.தனசேகர் - 7639564875,
 திரு.ஏழுமலை - 8695172249
4. விழுப்புரம் : 
திரு.சம்சுதீன் - 9443520224
5. திருவண்ணாமலை: 
திரு.பழனி - 9488659005,
திரு.இராமச்சந்திரன் - 9865310066,
திரு.விஸ்வநாத் -9842942105
6. பெரம்பலூர்: 
திரு.தில்லைவாசன் - 8786171750
7. நெய்வேலி: 
திரு. ராஜாராமன் - 9443983707
8. திண்டுக்கல்: 
திரு.நாகராஜன் - 9659598438
9. கடலூர்: 
திரு.விக்டர் ஜோரமைஸ் - 9715662185
10. கிருஷ்ணகிரி, தருமபுரி: 
திரு.தமிழரசன் - 7402730720, 9942839031
11. கோவை, ஈரோடு, திருப்பூர் :
திரு. திருமுருகன் - 9788008897
12. நாமக்கல், சேலம், திருச்சி, கரூர்: 
திரு.சுரேஷ்குமார் - 9942222257, 9787777788
திரு.ரமேஷ் - 7502109065
13. விருதுநகர்: 
திரு.பால்பாண்டி - 8015931279, 9442956782
14. சிவகங்கை: 
திரு.கணேஷ் - 9976105153
15. இராமநாதபுரம்: 
திரு.வேலுச்சாமி - 9443612656
16. புதுக்கோட்டை:
 திரு.சவுரிராஜன் - 9843935646, 7598275646
17. கண்ணியாகுமரி, திருநெல்வேலி: 
திரு.மார்டின் - 9788879815
18 தேனி : 
திரு.முருகன் - 9698475899

5/16/2014

இரட்டைப்பட்டம் நிலை பற்றி வழக்குரைஞரின் கடிதாம



இரட்டைப்பட்டம் ஒருங்கிணைப்பு கூட்டம். 18.5.2014 அன்று திருச்சியில் நடைபெறுகிறது.

இரட்டைப்பட்டம் பயின்று முடித்து உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தவர்களின் கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஹேட்டலில் வருகிற 18.4.2014 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெற இருக்கிறது. இது குறித்து வழக்கை எடுத்து நடத்தும் ஒருங்கிணைப்பாளர்கள் நம்மிடம் கூறியதாவது
இரட்டைப்பட்டம் சார்பில் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தோல்வியடைந்த நிலையில் எங்கள் சார்பில் உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளோம். உச்ச நீதி மன்றம் தமிழ்நாடு அரசு மற்றும் யு.ஜி.சி.க்கு நோட்டீஸ் அனுப்பியது. மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்த பொழுது யு.ஜி.சி. 10+2+3+1என்ற அடிப்படையில் பயின்றால் அந்த டிகிரி செல்லுபடியாகும் என பதில் மனு தாக்கல் செய்தது. இந்த நிலையில் வழக்கின் தன்மை குறித்தும் வழக்கில் விருப்பமுள்ளவர்களை புதிதாக இணைப்பதற்கும் ஆலோசணை கூட்டம் திருச்சியில் வருகிற ஞாயிற்று கிழமை நடைபெற உள்ளது. இவ்வழக்கில் இணைய விருப்பம் உள்ளவர்கள் தங்கள் சுய விபர பட்டியலுடன், சான்றிதழ் நகல்களையும் கொண்டு வர வேண்டும். மேலும் உச்ச நீதி மன்ற வக்காலத்தில் கையொப்பம் இடுவதற்கு தயாராக அவர்கள் வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். கூட்டம் காலை 10.00 மணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஹோட்டலில் நடைபெறும். உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தவர்களுக்கு 1.1.2012 முதல் முன்னுரிமையின் அடிப்படையில் தீர்ப்பு கிடைப்பது உறுதி என வழக்குரைஞர்கள் எங்களிடம் உறுதியளித்துள்ளனர். இது சம்பந்தமாக வழக்குரைஞர் சங்கரன் ஒரு அறிக்கையையும் வெளியிட்டுள்ளார். மேலும் தகவல்களுக்கு கீழ்கண்ட நபர்களை தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்கிறோம்.மேல் விபரங்களுக்கு கீழ் கண்ட தொடர்பாளர்களை தொடர்பு கொள்ளலாம்.1. திரு. கலியமூர்த்தி - 9894718859 (விழுப்புரம்) 2. திரு.ஆரோக்கியராஜ் - 9942575162 (சிவகங்கை)3.திரு.கணேஷ் - 9976105153 (சிவகங்கை)4.திரு.கருணாலய பாண்டியன் - 9894192500 (திருவள்ளூர்) 5.திரு.இரவிச்சந்திரடுலு - 8608273362 6.திரு. விஸ்வநாத் - 9842942105

5/14/2014

அண்ணாமலை பல்கலைகழகம் - Hall Ticket May -2014

Hall Ticket for Directorate of Distance Education - May 2014 Examinations

Enter Roll Number / Register Number  

Instructions to Candidates writing exams at Annamalainagar, Chennai, Chengalpattu and other States in India. (Except Pudhuchery & Karaikal)

மாநில அளவில் போராட தலைமையாசிரியர்கள் முடிவு


பிளஸ்-2 தேர்ச்சி குறைவிற்கான காரணம் - தலைமையாசிரியர்கள் விளக்கத்தால் கல்வித்துறை அதிர்ச்சி


மதிப்பெண் பட்டியல் தரவிறக்கம் செய்யலாம்


5/13/2014

ஆசிரியர் பயிற்சி விண்ணப்பம் விநியோகம்


CBSE மாணவர்களுக்கு கல்லூரி அட்மிசனில் சிக்கல்


தலைமையாசிரியர் பதவி உயர்வில் சிக்கல்


ஆசிரியர்களை பலிகடாவாக்கும் கல்வித்துறை - ஆசிரியர்கள் அதிருப்தி


ஆசிரியர்களை பலிகடாவாக்கும் கல்வித்துறை


ஆசிரியர்களின் பொது மாறுதலுக்கான விண்ணப்பங்கள்; இயக்குநர் பதில்

ஆசிரியர்களின் பொது மாறுதலுக்கான விண்ணப்பங்கள் ஜூன் மாதம் 2வது வாரத்திற்கு மேல் பெறப்பட்டு ஜூலை 2வது வாரத்தில் ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என பள்ளிக் கல்வி இயக்குநர்அவர்களும், தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களும் தெரிவித்துள்ளனர்.

பிறந்த தேதி திருத்தம் செய்வது எப்படி?

பள்ளி /கல்லூரி சான்றிதழ்களில் பிறந்த தேதியோ, வருடமோ, மாதமோ தவறாகக் குறிப்பிடப்பட்டிருந்தால் அந்தந்த எல்லைக்குட்பட்டசிவில்முன்சீஃப்) நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து மாற்றிக்கொள்ள வேண்டும். இதற்கு பிறப்புச் சான்றிதழ் இணைக்க வேண்டும். ஒருவேளை பிறப்புச் சான்றிதழ் இல்லாத பட்சத்தில் உள்ளூர் மருத்துவர் ஒருவரிடம் சான்றிதழ் வாங்கிக் கொடுக்க வேண்டும்.நீதிமன்றத்தின் தீர்ப்பு நகலை வைத்து பள்ளி/கல்லூரி மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ் ஆகியவற்றில் மாற்றக் கோரி விண்ணப்பிக்கலாம். எங்கே விண்ணப்பிப்பது? பள்ளி மாற்றுச் சான்றிதழில் திருத்தம் மேற்கொள்ள அந்தந்தப் பள்ளியில் விண்ணப்பிக்க வேண்டும்.கல்லூரி மாற்றுச் சான்றிதழில் திருத்தம் மேற்கொள்ளஅந்தந்தப் பல்கலைக்கழகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். பத்தாம் /பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் பிறந்த தேதி திருத்தம் செய்ய அரசு தேர்வுத்துறை இயக்குநரகத்துக்கு அனைத்து சான்றுகளையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். முகவரி
Government of Tamil NaduDirectorateof Government ExaminationDPI Complex, College Road, Chennai

இரட்டைப்பட்டம் வழக்கில் புதிய திருப்பம் - இரட்டைப்பட்டம் செல்லும் என் யு.ஜி;சி; அறிவிப்பு

இரட்டைப்பட்டடம் வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் தள்ளுபடியானதை தொடர்ந்து அதன் ஒருங்கிணைப்பாளர்கள் புது தில்லி உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இவ்வழக்கு உச்ச நீதி மன்றம் 6வது அமர்வில் நீதியரசர்கள் இரதாகிருஷ்ணன் மற்றும் விக்ராம் சிங்சென் முன்னிலையில் 25வது வழக்காக கடந்த 02.05.2014 அன்று விசாரணைக்கு வந்தது. இதில் அரசு மற்றும் பல்கலைகழக மானியக் குழுவிற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். வழக்கினை முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதியும், இன்றைய மூத்த வழக்குரைஞரான கிரி அவர்கள் பங்கேற்று வாதாடினார். வழக்கை ஏற்றுக்கொண்ட நீதி பதி அவர்கள் 7.5.2014 அன்று உத்தி வைத்தனர்.  வழக்கானது மீண்டும் 9.05.2014 அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அதில் பங்கெடுத்த யு.ஜி.சி. 10+2+3+1 என்ற அடிப்படையில் பயின்றால் அந்த படிப்பு தகுதியானது பதில் அளித்தது. இருந்தாலும் விரிவாக பதிலுரை தாக்கல் செய்ய கால அவகாசம் தேவைப்படுவதாக யு.ஜி.சி. கேட்டுக்கொண்டது.  தமிழக அரசும் கால அவகாசம் கேட்டுள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே உச்ச நீதி மன்றத்தில் வழக்கை தாக்கல் செய்த அனைவருக்கும் வழக்கு குறித்த விபரம் அனுப்ப நீதி மன்றம் முனைந்துள்ளது. அதன் பின் வழக்குரைஞர்கள் மூலம் உச்ச நீதி மன்றத்தை நாடியுள்ளவர்களின் பட்டியல் இறுதி செய்யப்படும்.
இது குறித்து இதன் ஒருங்கிணைப்பாளர் திரு.கலியமூர்த்தி அவர்கள் நம்மிடம் கூறியதாவது: இரட்டைப்பட்டம் வழக்கை உச்ச நீதி மன்றம் ஏற்றுக்கொண்டது என்பதே எங்களுக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறோம். ஏனென்றால் வழக்கியல் நியாயம் இல்லாமல் உச்ச நீதி மன்றம் எந்த வழக்கையும் ஏற்றுக்கொள்வதில்லை. இதில் யு.ஜி.சியும் எங்களுக்கு சாதகமாக பதில் அளித்துள்ளது. இதில் யாருடைய பதவி உயர்வையோ அல்லது பணியமர்த்துவதையோ தடுப்பது எங்கள் நோக்கம் அல்ல. ஆனால் அதே நேரத்தில் உச்ச நீதி மன்றத்தை நாடிள்ள அனைவருக்கும் 1.1.2012 முன்னுரிமையை பெறுவது என்பது உறுதியாகி விட்டது. எனவே நாங்கள் இந்த முறை உறுதியாக வெற்றியடைவோம்.  இது குறித்து இரட்டைப்பட்டம் படித்து பதவி உயர்வை தவறவிட்டவர்கள் மற்றும் ஆசிரியர் தகுதி தேர்வில் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களின் கூட்டம் சென்னை அல்லது திருச்சியில் தேர்தல் முடிவுக்கு பின்பு நடத்துவதற்கு ஆலோசணை செய்து வருகிறோம் என்றார். மேல் விபரங்களுக்கு கீழ் கண்ட தொடர்பாளர்களை தொடர்பு கொள்ளலாம்.
1. திரு. கலியமூர்த்தி - 9894718859 (விழுப்புரம்)
2. திரு.ஆரோக்கியராஜ் - 9942575162 (சிவகங்கை)
3.திரு.கணேஷ் -   9976105153 (சிவகங்கை)
4.திரு.கருணாலய பாண்டியன் - 9894192500 (திருவள்ளூர்)
5.திரு.இரவிச்சந்திரடுலு - 8608273362
6.திரு. விஸ்வநாத் - 9842942105

5/09/2014

இரட்டைப்பட்டம் வழக்கை ஏற்றுக்கொண்டது உச்ச நீதி மன்றம்

இரட்டைப்பட்டம் வழக்கை ஏற்றுக்கொண்டது உச்ச நீதி மன்றம்
இரட்டை பட்ட வழக்கை உச்ச நீதி மன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. இது இவ்வழக்கில் பெரிய விசயமாக கருதப்படுகிறது

பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி தீவிரம்


அரசு பள்ளிகளில் LKG & UKG வகுப்புகள்


நர்சரி மாணவர் சேர்க்கை தடை நீக்கம்


பயிலரங்கு அழைப்பிதழ்