பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

10/31/2015

சிங்கம்புணரியில் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா


சிங்கம்புணரியில் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா



நாளை சிங்கம்புணரியில் நடைபெறும் இயக்கச் செம்மல்களுக்கான பாராட்டு விழாவில் ஒவ்வொரு ஆசிரியருக்கும் மாநிலத் தலைவரால் வழங்கப்பட உள்ள நினைவு கேடயம்


தொடக்கக்கல்வி இயக்குநருடன் சந்திப்பு


நமது கோரிக்கை இன்றைய தினத்தந்தியில் செய்தியாக வெளியீடு

10/29/2015

சிவகங்கை மாவட்ட விடுமுறை செய்தி - குழப்பும் ஊடகங்கள்

நாளை தேவர் ஜெயந்தியை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி, களையார்கோயில் ஆகிய 5 ஒன்றியங்களுக்கு மட்டும் விடுமுறை அறிவித்துள்ளதாக முற்பகலே நம்மை அலைபேசியில் தொடர்புகொண்டு மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் தெரிவித்தார். மேலும் இந்த விடுமுறையை வருகிற 28.11.2015 அன்று பணி செய்து சமன் செய்யவும், மருதுபாண்டியர் குருபூஜையன்று அளித்த விடுமுறையை வருகிற 21.11.2015 அன்று பணி செய்து சமன் செய்யவும் உத்தரவிட்டுள்ளதாக நம்மிடம் தெரிவித்தார். இச்செய்தியை நாமும் மாவட்ட முழுமைக்கும் உள்ள நிர்வாகிகள் மூலம் குறுஞ்செய்தி வழியில் தெரிவித்திருந்தோம். இந்நிலையில் ஒரு சில ஊடகங்கள் நாளை சிவகங்கை மாவட்டம் முழுமைக்கும் விடுமுறையை மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்துள்ளதாக செய்தி வெளியிட்டு வருவதாக இயக்க உறுப்பினர்கள் தொடர்ந்து நம்மை அலைபேசியில் தொடர்புகொண்டு விளக்கம் கேட்டு வருகிறார்கள். அதிகார பூர்வமாக மேற்கண்ட 5 ஒன்றியங்களுக்கு மட்டுமே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஊடகங்கள் வழியாக வரும் செய்திகள் அதிகாரபூர்வமான அறிவிப்பு அல்ல. உறுதியான செய்தியானால் நமது அமைப்பு வழியாக செய்தி அனுப்பப்படும். எனவே 5 ஒன்றியங்கள் தவிர்த்து மற்ற ஒன்றியங்களில் வழக்கம்போல் பள்ளிகள் செயல்படும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, சிவகங்கை மாவட்ட கிளையின் சார்பாக அறிவிக்கப்படுகிறது. மாற்றமிருந்தால் நாளை காலையில் செய்தி அனுப்பப்படும். இது  குறித்து அலைபேசி அழைப்பை தவிர்க்க வேண்டுகிறேன்.

நமது கோரிக்கை தினகரன் (28.10.2015) நாளிதழ் செய்தி வெளியீடு


தேசிய திறன்றி தேர்வு நுழைவு சீட்டு பதிவிறக்கம் செய்ய இயக்குனர் ஆணை


துவக்க/நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களின் வைப்பு நிதி (TPF) கணக்குகள் மாநில கணக்காயருக்கு மாற்றம் - - அரசாணை வெளியீடு



பெண் ஆசிரியர் மாநாட்டில் கலந்துகொள்ளும் பெண் தோழர்களை வாழ்த்துவோம்


சிவகங்கை மாவட்டத்தில் 5 ஒன்றியங்களுக்கு நாளை விடுமுறை. மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் அறிவிப்பு

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம், காளையார்கோயில் ஆகிய 5 ஒன்றியங்களுக்கு நாளை (30.10.2015) விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் திரு.முத்துப்பாண்டியன் அவர்களிடம் அலைபேசியில் தெரிவித்துள்ளார்கள். இதற்காக வருகிற 28.11.2015 அன்று ஈடு செய் வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது. மேலும் மருதுபாண்டியர் குரு பூஜைக்காக விடப்பட்ட விடுமுறையை வருகிற 21.11.2105 அன்று வேலை செய்து ஈடு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

10/25/2015

கல்வியை பாதுகாக்க கோரி நவம்பர் 26 புதுதில்லியில் நடைபெறும் பேரணியில் கலந்துகொள்ளும் சிவகங்கை மாவட்ட நிர்வாகிகள்

1. ஆ.முத்துப்பாண்டியன்
2. ச.ஞானஅற்புதராஜ்
3. அ.பாண்டியன்
4. மு.க.புரட்சித்தம்பி
5. எஸ்.ஞானஜேம்ஸ்
6. ஆர்.ஜோசப்
7. எல்.தமிழ்மாறன்
8. வி.சி.சண்முகம்
9. ப.ரமேஷ்குமார்
10. வி.ஜான் பிரிட்டோ
11. எம்.ஐ.எ.மைக்கேல் ராஜ்
12. எலி;ஜான் அந்தோனி
13. எம்.சகாயதைனேஸ்
14. எம்.ஆரோக்கியராஜ்
15. எம்.அருள் இளங்கோ
16. வி.ரவி
17. எஸ்.முத்துக்குமார்
18. கே.ஜெயமுருகன்
19. கே.சத்தியசீலன்

10/14/2015

நமது கோரிக்கையை இன்றைய (14.10.2015) தினத்தந்தி செய்தி வெளியீடு


தமிழக நிதித்துறை செயலரது கடித விபரம்:கடித எண்;55891/நிதித்துறை/நாள்;08/10/2015

அரசு ஊழியர்கள் & ஆசிரியர்களுக்கு ஊதியக்குழு வழங்கிய ஊதிய விகிதத்தை மீண்டும் திருத்தியமைக்க தனிநபராகவும், சங்கங்கள் மூலமாகவும் பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளதால்-
'ஊதிய முரண்பாடுகள் ஆராய (Examining the Pay anamolies) - ஊதியக்குழுவிற்கு முன்னர் மற்றும் பின்னர் ஊழியர்கள் உள்ள ஊதியக்கட்டு விவரங்கள்,
குறிப்பிட்ட ஊதியக்கட்டில் துறை வாரியாக உள்ள ஊழியர்களது மொத்த எண்ணிக்கை, நிரப்பப்பட்ட இடங்கள், காலியிடங்கள், யார் அதிகார வரம்பிற்குட்பட்ட பதவி, கல்வித்தகுதி, பணி விபரங்கள் பொறுப்புகள்' கோரி தமிழக நிதித்துறை செயலர் அனைத்து துறை அரசு செயலர்களுக்கும் - கடிதம் (08.10.2015) எழுதியுள்ளார்.
விரிவான துறை சார்ந்த ஊதியக்கட்டு (PAY BAND) தகவல்கள் - '30.11.2015 அல்லது அதற்கு முன்பாகவே (on or before 30.11.2015)' துறை சார்ந்த செயலர்கள் தவறாது தொகுத்து அனுப்பி வைக்க கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.

அரசுக்கு நாம் (Sivagangai TNPTF) அனுப்பிய கோரிக்கை மனுவை 14.10.2015 தினகரன் நாளிதழ் செய்தியாக வெளியீடு


10/13/2015

ஜேக்டோ பொதுக்குழு கூட்டம்

ஜேக்டோ பொதுக்குழு கூட்டம்

ஜேக்டோ(JACTTO) மாநிலப் பொதுக்குழு கூட்டம் வருகிற 31.10.2015 அன்று சனிக்கிழமை சென்னையில்

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,
மாநிலப் பொதுச் செயலாளர்
தோழர் செ.பாலச்சந்தர்
 தலைமையில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் ஒவ்வொரு இயக்கங்களின் மாநிலத் தலைவர், பொதுச்செயலாளர் மற்றும் மாநிலப் பொருளாளர் கலந்து கொள்ள இருக்கின்றனர். இக்கூட்டம் சென்னை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அலுவலகத்தில் நடைபெற உள்ளது. வேலை நிறுத்தத்திற்கு பின்பு நடைபெறும் முதல் பொதுக்குழு என்பதால் அதி முக்கியத்துவம் வாய்ந்த கூட்டமாக கருதப்படுகிறது.


ஒற்றுமையின் பலத்தை அரசுக்கு உணர்த்துவோம்...
உரிமையை போராடி பெறுவோம்...
வெற்றி எட்டும் தூரத்தில்

தொடர்ந்து உன்னோடு பயணிப்பேன்...

தோழமையோடு...
ஆ.முத்துப்பாண்டியன்
TNPTF மாவட்டச்செயலாளர்
ஜேக்டோ மாவட்ட உயர்மட்டக்குழு உறுப்பினர்

தமிழக அரசு ஊழியர் / ஆசிரியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்பு.

தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு 6% அகவிலைப்படி ஜுலை'15 முதல் உயர்த்தி வழங்குவதற்கான அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுசார்பான கோப்பில் இன்று காலை மாண்புமிகு தமிழக முதல்வர் கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

நமது கோரிக்கையை நக்கீரன் இணையம் செய்தியாக வெளியீடு

Click Here
திருப்பத்தூர் தாலுகாவை வகைப்படுத்தப்பட்ட  
வீட்டு வாடகைப்படி பட்டியலில் சேர்க்க கோரிகை

சிவகங்கை மாவட்டம் 1985ம் ஆண்டு இராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து பிரிந்து தனியாக செயல்படுகிறது. இதில் சிவகங்கை, மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி, தேவகோட்டை, காரைக்குடி, திருப்பத்தூர் மற்றும் காளையார்கோயில் என 8 தாலுகா செயல்பட்டு வருகிறது. இதில் திருப்பத்தூர் தாலுகாவை தவிர மற்ற தாலுகாவிற்கு உட்பட்ட அனைத்து ஊர்களும் வகைப்படுத்தப்பட்ட வீட்டு வாடைகைப்படி பட்டியலில் வைக்கப்பட்டு  முறையான வீட்டு வாடகைப்படி அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆனால் திருப்பத்தூர் தாலுகாவிற்கு உடபட்ட சிங்கம்புணரி, திருப்பத்தூர் மற்றும் எஸ்.புதூர் ஆகிய ஒன்றியங்கள் மட்டும் வகைப்படுத்தப்படாத வீட்டு வாடகைப்படி பட்டியலில் இருப்பதால் மிக குறைந்த வீட்டு வாடகைப் படி மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து பணியாற்றாமல் அடிக்கடி மாறுதலாகி மற்ற பகுதிகளுக்கு செல்லும் நிலை உள்ளது. இந்நிலையை மாற்றக்கோரி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன் தமிழ்நாடு அரசிற்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது.

திருப்பத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட திருப்பத்தூர், சிங்கம்புணரி மற்றும் எஸ்.புதூர் ஆகிய ஒன்றியங்கள் தமிழக அரசின் வகைப்படுத்தப்படாத வீட்டு வாடைகைப் பட்டியலில் வெகு காலமாக இருந்து வருகிறது. இங்கு மாவட்டத்தின் மற்ற பகுதிகளை ஒப்பிடுகையில் மிக குறைவான வீட்டு வாடைகைப்படியே வழங்கப்படுகிறது. 

திருப்பத்தூர் தாலுகா தொழில் துறையில் மிகவும் முன்னேறி அரசிற்கு அதிக வருவாய் ஈட்டும் பகுதியாக வளர்ந்துள்ளது. மேலும் மக்கள் தொகை வெகுவாக அதிகரித்துள்ள இப்பகுதிகளில் வீட்டு வாடகையும் மிக அதிகமாக அதிகரித்துள்ளது. ஆனால் நகரங்களுக்கு ஈடாக முன்னேறியுள்ள இப்பகுதிகளில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வீட்டு வாடகைப்படி மிகவும் சொற்ப தொகை மட்டுமே வழங்கப்படுகிறது. 

மாவட்டத்தில் மற்ற பகுதிகளில் முறையான வீட்டு வாடகைப்படி வழங்கப்பட்டு வரும் நிலையில் திருப்பத்தூர் தாலுகாவில் மட்டும் குறைவான வீட்டு வாடகைப்படி வழங்குவதால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இப்பகுதிகளில் பணியாற்றுவதை தவிர்த்து வருகின்றனர். மேலும் இங்கு பணியாற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மற்ற பகுதிகளுக்கு அடிக்கடி மாறுதலாகி சென்று விடுகின்றனர். இதனால் இங்கு அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் அதிக காலிப்பணியிடங்கள் காணப்படுகிறது. இதனால் அரசாங்கம் சார்ந்த பணிகளில் தொய்வு ஏற்படுவதோடு மாணவர்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

தமிழக அளவில சுமார் 58 ஒன்றியங்கள் மட்டுமே வகைப்படுத்தப்படாத வீட்டு வாடகைப்படி வழங்கப்படுகிறது. நகர வளர்ச்சிக்கு ஏற்ப பல ஒன்றியங்கள் வகைப்படுத்தப்பட்ட பட்டியலில் இணைக்கப்பட்டு முறையான வீட்டு வாடகைப்படி வழங்கப்படுகிறது. எனவே சிவகங்கை மாவட்டத்திலேய அதிக தொழில் துறையை கொண்டுள்ள திருப்பத்தூர் தாலுகாவை வகைப்படுத்தப்பட்ட பட்டியலில் இணைத்து முறையான வீட்டு வாடகைப்படி வழங்க வேண்டும் என தமிழக அரசை நாங்கள் கேட்டுக்கொண்டுள்ளோம். 

இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி தமிழக முதல்வர், தலைமைச் செயலர், நிதித்துறை செயலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோருக்கு கேரிக்கை மனு அனுப்பியுள்ளோம். ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் நெடு நாள் கோரிக்கையை தமிழ்நாடு அரசு நிறைவேற்றும் என நம்புகிறோம். மேலும் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தாலுகா அளவில் அரசு ஊழியர்களோடு இணைந்து கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்து பரிசசீலித்து வருகிறோம்.

- நா.ஆதித்யா

10/06/2015

முகவரி இல்லாமல் முணுமுணுப்பவரின் முகத்திரையை கிழித்தெறிந்து உண்மையை உணர்த்திடு தோழா...


இனிய தோழமையே...
ஜேக்டோ வேலை நிறுத்த களப்பணியில் நீ களைத்திருக்கும் வேலையில் முகவரியில்லா சங்கங்களை வைத்து வேலை நிறுத்தம் வாபஸ் என்று ஊடகங்களில் அளிக்கும் பேட்டிதான் இந்த ஆண்டின் தலை சிறந்த நகைச்சுவையாக இருக்கும் என்பதை நீ அறிவாய். கடந்த இரண்டு நாட்களாக நாம் இதுவரை அறிந்திராத பெயர்களில் சங்கம் என்ற பெயரில் நாங்கள் ஜேக்டோ வேலை நிறுத்தத்தில் பங்கேற்க போவதில்லை என்ற அறிவிப்புகள் நம் வீட்டு மழலைகளின் ஏளனத்திற்கு சிரிப்புக்கும் ஆளான செய்தி நீ அறிவாய்.
ஜேக்டோவின் உறுதியை அறிந்த அரசு ஆளே இல்லாத இயக்கங்களின் தலைவர்களை வைத்து வாபஸ் நாடகத்தை அரங்கேற்ற துவங்கியுள்ளது. ஒரு பக்கம் பேச்சு வார்த்தை மறுபக்கம் குழப்பம் விளைவிக்கும் போக்கு. தனிச்சங்க நடவடிக்கையிலேயே இந்த சூட்சமத்தையெல்லாம் உடைந்தெறிந்த உனக்கு இன்று அசுர பலத்தோடு களம் காணும்பொழுது இதெல்லாம் ஒரு பொருட்டேயில்லை என்பதை நானறிவேன். இருந்தாலும் வதந்திகளுக்கு வரப்பில்லை. வாய்ப்பு கிடைக்குமிடமெல்லாம் அது வழிந்தோடும் என்பதால் நீ கொஞ்சம் கவனத்தோடு களப்பணியாற்று. இரண்டு நாட்களாக உனது ஆசிரியர் சந்திப்பில் 100 சதவீத ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கிறார்கள் என்ற மகிழ்வான செய்தி அறிந்து நானும் பெருமையடைந்தேன். உளவு துறை மூலம் அரசின் செவிகளுக்கும் இது எட்டியுள்ளது என்பதுதான் உண்மை.
  இடைநிலை ஆசிரியர்களின் துயர் துடைக்க பிறந்த அவதாரம் என்று தன்னை பிரகடனம் செய்துள்ளவர்களின் இன்றைய டி.வி. பேட்டி அவர்களின் முகத்திரையை கிழத்தெறிந்து உண்மை முகத்தை இந்த உலகிற்கு காட்டியுள்ளது. பழமைவாத சங்கங்கள் என்று நம்மைப்பற்றி குறை கூறி நம்மை போன்ற இடைநிலை ஆசிரியரியர்களை ஏமாளியாக்க ஆடிய கபட நாடகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 15 அம்ச கோரிக்கையில் நமது பிரதான கோரிக்கையான இடைநிலை ஆசிரியரின் தர ஊதிய மாற்றம், எதிர் கால வாழ்க்;கையை கேள்வி குறியாக்கும் தன்பங்கேற்பு ஓய்வூதிய திட்டம ஒழிப்பு இருந்தபொழுதும் ஏன் இந்த எதிர் சவுடால்.
ஒன்றை மட்டும் சக ஆசிரியர்களுக்கு தெளிவு படுத்த மறந்து விடாதே. ஊடகங்கள் வாயிலாக வேலை நிறுத்தம் வாபஸ் மற்றும் பங்கேற்க போவதில்லை என்று வெற்று அறிவிப்புகள் வெளியிடும் சங்கங்கள் எதுவும் ஜேக்டோவில் இல்லையென்ற உண்மையையும், இவைகள் ஆளும் கட்சிகளாக வரும் அரசியல் தலைவர்களின் அடிவருடிகளாக மாறி ஆசிரியர்களின் நலன்களுக்கு எதிராக நடக்கும் பகல் வேடதாரிகள் என்பதை மட்டும் தெளிவு படுத்து தோழா. அக்டோபர் 8 பதில் சொல்லட்டும்.
உண்மையை உரக்கச் சொல்லுவோம்!!!  உரிமையைப் போராடி பெறுவோம்!!!
தொடர்ந்து உன்னோடு பயணிப்பேன்....
தோழனாக...
ஆ.முத்துப்பாண்டியன்
TNPTF மாவட்டச் செயலாளர் 
சிவகங்கை மாவட்

1.10.2015 அன்று நடந்த சிவகங்கை மாவட்டச் செயற்குழு முடிவுகள்


Dinakaran



ஜேக்டோவிற்கு அனுப்பப்பட்ட அழைப்பு கடிதம்


ஜேக்டோ வேலை நிறுத்தத்தில் பங்கேற்பதால் பள்ளியை நடைமுறைப்படுத்த உதவி மற்றும் கூடுதல் உதவித் தொடக்கக்கல்வி அலுவலருக்கு கொடுக்கப்பட வேண்டிய மாதிரி கடிதம். அவசியம் ஏற்பட்டால் மட்டும்


10/05/2015

பேச்சு வார்த்தை நடத்த ஜேக்டோவுக்கு அவசர அழைப்பு

பேச்சு வார்த்தை நடத்த ஜேக்டோவுக்கு அவசர அழைப்பு

கல்வித்துறைச் செயலர் மதிப்புமிகு சபிதா அவர்கள் பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநருடன் இன்று மாலை அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். இதற்காக தொடக்கக்கல்வி இயக்குநர் அவசரஅவசரமாக சிவகங்கையிலிருந்து சென்னை புறப்பட்டார். ஆலோசனை கூட்டம் நிறைவடைந்த சிறிது நேரத்தில் ஜேக்டோ உயர்மட்ட குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு வந்தது. நாளை இயக்குநர் தலைமையில் முதல் கட்ட பேச்சு வார்த்தை நடைபெறுகிறது. பேச்சு வார்த்தையில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலப் பொதுச் செயலாளர் திரு.செ.பாலச்சந்தர் அவர்கள் அவசர பயணமாக கன்னியாகுமரியிலிருந்து சென்னை புறப்பட்டார். 
இயக்குநர் அளவிலான பேச்சுவார்த்தைக்கு பின்னால் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மதிப்புமிகு.சபிதா அவர்கள் ஜேக்டோவுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
ஒற்றுமையின் பலத்தை அரசுக்கு உணர்த்துவோம்...
உரிமையை போராடி பெறுவோம்...
வெற்றி எட்டும் தூரத்தில்
தொடரட்டும் வேலைநிறுத்த களப்பயணம்


தொடர்ந்து உன்னோடு பயணிப்பேன்...
தோழமையோடு...
ஆ.முத்துப்பாண்டியன்
TNPTF மாவட்டச்செயலாளர்
ஜேக்டோ மாவட்ட உயர்மட்டக்குழு உறுப்பினர்

ஜேக்டோவின் கோரிக்கையை நெருங்கும் அரசாங்கம்.... அவசர தகவல் கேட்கும் கல்வித்துறை

இனிய தோழமையே...
அக்டோபர் 8 அடையாள வேலை நிறுத்தத்தை நோக்கி உன் பயணத்தை நகர்த்திக்கொண்டிருக்கும் வேலையில் நம்; கோரிக்கைகள் குறித்து சற்று மௌனம் கலைக்க துவங்கியிருக்கிறது அரசாங்கம். இன்று (5.10.15) மதியம் கல்வித்துறையின் மாவட்ட உயர் அலுவலர்களுக்கு அவசர அவசரமாக மின்னஞ்சல் செய்தியால் மாவட்ட கல்வித்துறை பரபரத்துள்ளது. 1.6.2006ல் பணி வரன்முறைப்படுத்தப்பட்டு கால முறை ஊதியம் பெற்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன நாள் முதல் கால முறை ஊதியம் வழங்கினால் அரசுக்கு எவ்வளவு செலவித் தொகை ஏற்படும் என உத்தேச மதிப்பினை உடனடியாக அளிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
இச்செய்தி மகிழ்ச்சி என்றாலும், இது மட்டுமல்ல நமது கோரிக்கை என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு பதிலாக இடைநிலை ஆசிரியர்களின் தர ஊதியத்தை மத்தியப்பள்ளி ஆசிரியர்களுக்கு இணையாக உயர்த்துவதில் என்ன தயக்கம் என்று நமக்கு புரியவில்லை. சுமார் 40,000 ஆசிரியர்கள் மட்டுமே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கோமா நிலையிலிருக்கும் நோயாளிக்கு சிகிச்சையளிப்பதுதான முக்கியம் என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும். அல்லது அக்டோபர் 8 புரியவைக்கும் என்பதை நீ நிருபித்து காட்ட வேண்டும்.
ஜேக்டோ தலைவர்கள் உனக்கு இட்ட கட்டளைப்படி உன்னோடு பணியாற்றும் சக ஆசிரியத் தோழனையும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுத்து. அக்டோபர் 8 என்பது தமிழக வரலாற்றில் இடம்பெறும் நமக்கான நாள். வீட்டில் உள்ளவர்கள் சம்மதம் இல்லை அதனால் வேலைக்கு செல்ல வேண்டும் என கோரிக்கை விடும் உன் சக ஆசிரியரின் குடும்பத்திற்கும் புரிய வை நமது இழப்பை. இன்று தவற விட்டோமானால் என்றும் பெற முடியாது என்பதை உணர்த்து.
கடந்த கால போராட்டத்தில் கிட்டதட்ட 10,000க்கும் மேற்பட்ட பெண் ஆசிரியர்கள் ஒரு மாத சிறையில் வாடி பெற்று தந்த உரிமையை இழந்து நிற்கிறோம் என்பதை எடுத்துக்காட்டு. சிறை வளாகத்தில் உயிர் நீத்த தியாகி கருப்பணன் போன்றோர்களின் தியாகத்தால் பெற்ற உரிமை எங்கே? என சிந்திக்க தூண்டு. இங்கு போராடாமல் எதுவும் கிடைத்ததில்லை என்பதை விளக்கு.
15 அம்ச கோரிக்கைகளில் எதாவது இரண்டு கோரிக்கைகள் நிறைவேற்றினால் வேலை நிறுத்தம் பிசுபிசுக்கும் என தப்பு கணக்கு போடுபவர்களுக்கு நமது ஒற்றுமையை உணர்த்தும் தினமாக அமையட்டும் அக்டோபர் 8. உரிமை மீட்பு போரில் பின்னடைவு என்பது இல்லை என்பதை மீண்டும் நிருபிப்போம். கோரிக்கை வெல்லும் வரை கோடி கைகள் ஒன்றிணையும் என்பதை உணர்த்துவோம்.
 இயக்கம் மறந்து சங்கமிப்போம்...
இறுதி வெற்றி நமதென்போம்....

தொடர்ந்து உன்னோடு பயணிப்பேன்...

தோழமையோடு...
ஆ.முத்துப்பாண்டியன்
TNPTF மாவட்டச்செயலாளர்
ஜேக்டோ மாவட்ட உயர்மட்டக்குழு உறுப்பினர்

10/04/2015

மாவட்டச் செயற்குழு கூட்டம் செய்தி ஜனசக்தி நாளிதழில் நன்றி: ஜனசக்தி ( 4.10.15)


சிவகங்கையில் ஆசிரியர்களுக்கு சம்பளம் இழுபறி


மாவட்டச் செயற்குழு தினமலர்(4.10.15) செய்தி வெளயீடு


Daily Thanthi 3.10.15


1.10.2015 சிவகங்கை மாவட்டச் செயற்குழு கூட்டம் முடிவுகள் தினமணியில் செய்தியாக வெளிவந்துள்ளது


தீக்கதீர் செய்தி வெளியீடு 3.10.2015


அங்கீகாரமில்லாத சுயநிதிப்பள்ளிகளை மூட ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்
சிவகங்கை, அக்.2-தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சிவகங்கை மாவட்டசெயற்குழு கூட்டம் வியாழனன்று தாமஸ் அமலநாதன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் புரட்சித்தம்பி முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன் தீர்மானங்களை முன் மொழிந்தார். மாவட்ட துணைச் செயலாளர் இரவி,மாநிலப்பொதுக்குழு உறுப்பினர்கள் வேதராஜசேகரன், சிங்கராயர், மாவட்டப பொருளாளர் குமரேசன் உள்ளிட்ட மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக தமிழ்நாட்டில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஊதியம் வழங்கவேண்டும். புதிய பென்சன் திட்டத்தைக் கைவிடவேண்டும். அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க வேண்டும். கல்வியை மேம்படுத்த வேண்டும்.அங்கீகாரமில்லாத சுயநிதிப் பள்ளிகளை உடனடியாக மூடுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினகரன் செய்தி வெளியீடு 3.10.15


10/02/2015

சிவகங்கை மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலராக புதிதாக பொறுப்பேற்றுள்ள மதிப்புமிகு.பார்த்தசாரதி அவர்களை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக வரவேற்று பொன்னாடை அணிவித்தபொழுது




27.9.2015 மாநிலச் செயற்குழு முடிவுகள்



சிவகங்கையில் தொடக்கக்கல்வி இயக்குனர் மீளாய்வு கூட்டம்

வருகிற 5.10.2015 அன்று சிவகங'கையில் சிவகங்கை மாவட்ம், இராமநாதபுரம் மாவட்டம், விருதுநகர் மாவட்டம் ஆகிய மூன்று மாவட்டங்களை சார்ந்த முதன்மைக்கல்வி அலுவலர்கள், கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர்கள், மாவட்டக்கல்வி அலுவலர்கள், மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர்கள், உதவி மற்றும் கூடுதல் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் ஆகியோர் பங்கேற்கும் மீளாய்வு கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கான தொடக்கக்கல்வி இயக்குனர் மதிப்புமிகு இளங்கோவன் மற்றும் இணை இயக்குனர்கள் இருவர் சிவகங்கை வருகை தர உள்ளனர். இதற்கான விரிவான ஏற்பாடுகளை மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் திரு.பார்த்தசாரதி மேற்கொண்டு வருகிறார்.