பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

11/29/2011

பள்ளிக்கல்வித்துறை

பள்ளிக் கல்வி - முதுகலை ஆசிரியர் நியமனம் - வேலை வாய்ப்பக பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் செய்யும் முறையை மாற்றி, எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலமாக நியமனம் செய்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.

School Education Department

G.O Ms. No. 180
Dt : November 15, 2011
 School Education – Right of Children to Free and Compulsory Education Act 2009 – Reimbursement of per child expenditure for admission of children enrolled under 25% reservation belonging to weaker section and disadvantaged group in unaided schools–Orders issued
G.O Ms. No. 181
Dt : November 15, 2011
 School Education – The Right of Children to Free and compulsory Education Act(RTE)-2009 conducting of Teacher Eligibility Test(TET) – Orders – Issued.

11/20/2011

இந்த ஆண்டிற்குள் 55,000 ஆசிரியர்கள் நியமனம்: பள்ளி கல்வித்துறை அமைச்சர் சி. வி. சண்முகம்

நெல்லை: தமிழகத்தில் இந்த ஆண்டிற்குள் அரசு பள்ளிகளில் 55,000 ஆசிரியர்கள் நியமிக்கப்படவிருக்கிறார்கள் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள் என மொத்தம் 14,377 பேர் நியமிக்கப்படுவார்கள். பகுதி நேர ஆசிரியர்களாக 16,000 பேர் நியமிக்கப்படுவார்கள். இதைத் தொடர்ந்து இந்த ஆண்டிற்குள் 55,000 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றார்.

அதன்படி ஆசிரியர்களை நியமிக்க அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. 15525 பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் 3187 பேர், பகுதி நேர ஆசிரியர்கள் 16549 பேர் நியமிக்கப்படுகிறார்கள். இது தவிர தொடக்கப் பள்ளிகளில் கூடுதல் பணியிடங்களில் 3565 இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

ஆசிரியர் அல்லாத பணியிடங்களையும் நிரப்ப அரசு அனுமதி அளித்துள்ளது. அதில் 5000 அலுவலக உதவியாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். மத்திய இடை நிலை கல்வி திட்டத்தின் கீழ் 544 ஆய்வக உதவியாளர்கள் 344 அலுவலக உதவியாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். நடுநிலைப்பள்ளிகளில் 831 தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
 
எழுச்சிமிகுத் தோழர்களே!!!
                                                        வணக்கம். PFRDA மசோதாவை எதிர்த்து நவம்பர் 25ல் புதுதில்லியில் நடைபெறும் பேரணியில் கலந்துகொள்ள சிவகங்கை மாவட்டக் கிளையின் சார்பாக நான் செல்ல இருப்பதால் என்னால் புதிய இடுகைகள் எதுவும் இட இயலாத நிலையில் உள்ளேன். எனவே பார்வையாளர்களும், ஆசிரியர்களும் பொருத்தருள வேண்டுகிறேன். 
                                                                                   
தோழமையுடன்...
ஆ.முத்துப்பாண்டியன்
மாவட்டத் தலைவர்
சிவகங்கை மாவட்டம்.



11/19/2011

தமிழகத்தில் தொடக்க கல்வித் துறையில் 3,135 ஆசிரியர்கள் விரைவில் நியமனம்

தமிழகத்தில் தொடக்க கல்வித் துறையில் 3,135 ஆசிரியர்களை நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் 2010-11ம் கல்வி ஆண்டில் காலியாக இருந்த 1,792 இடைநிலை ஆசிரியர்களை நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் உரிய சீனியாரிட்டி, இன சுழற்சியுடன் 1:5 என்ற வீதத்தில் தகுதியானவர்களின் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய வெப்சைட்டில் வெளியிடப்பட்டுள்ளது.இந்த பட்டியலில் உள்ளவர்களுக்கு அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலகங்கள் மூலம் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தொடக்க கல்வி அலுவலகங்களில் சமர்ப்பிக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.இதற்கிடையில் 1.6.2011 நிலவரப்படி தொடக்க கல்வித் துறை கட்டுப்பாட்டின் கீழ் தமிழகத்தில் காலியாக உள்ள 1,886 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள், 7 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், 1,366 பட்டதாரி ஆசிரியர்களும் நியமனம் செய்யப்படுகின்றனர். 124 பேர் பதவி உயர்வு மூலம் நியமிக்கப்படுகின்றனர். மொத்தம் 3,135 ஆசிரியர்களை விரைவில் நியமிக்க அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.இதனால் ஏற்கனவே 1,792 இடைநிலை ஆசிரியர்கள், தற்போது 3,135 ஆசிரியர்கள் உட்பட மொத்தம் 4,887 ஆசிரியர்களை நியமிக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.மேலும், தமிழக சட்டசபையில், 5,423 ஆசிரியர்களை நியமனம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித் துறை அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார். இந்த பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக தொடர்ந்து குழப்ப நிலையே நீடிக்கிறது. ஏற்கனவே உள்ள நடைமுறைப்படி வேலைவாய்ப்பு அலுவலக சீனியாரிட்டி அடிப்படையில் இவர்கள் நியமனம் செய்யப்படுவாரா அல்லது ஆசிரியர் தேர்வு வாரிய போட்டி எழுத்து தேர்வு அடிப்படையில் நியமனம் செய்யப்படுவாரா என்பது தொடர்பாக அரசு இன்னும் தெளிவாக அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இதனால் பி.எட் பட்டதாரிகள் இதனை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
Source : Dinamalar

பள்ளிக்கல்வித்துறையில் 13 இணை இயக்குநர்கள் பணி மாற்றம்

சென்னை, நவ.19- பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் 13 இணை இயக்குநர்கள் மாற்றப்பட்டனர். பணியாளர் தொகுதி இணை இயக்குநராக ராஜ ராஜேஸ்வரி நியமிக்கப்பட்டார்.

சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.அய். வளாகத்தில் பள்ளிக்கல்வித் துறையின் பல்வேறு இயக்குநரகங்கள் உள்ளன. அந்த இயக்குநரகங்களில் பணிபுரியும் 13 இணை இயக்குநர்கள் மாற்றப்பட்டுள்ளனர். அவர்களின் பெயர்களும், அவர்கள் ஏற்க உள்ள பணியிடங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. அவர்கள் இதுவரை பணிபுரிந்த இடம் அடைப்பு குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.

1. வீ.ராஜராஜேஸ்வரி - இணை இயக்குநர், பணியாளர் தொகுதி, பள்ளி கல்வி இயக்குநரகம் (மேல்நிலைக்கல்வி)

2. எஸ்.உமா- இணை இயக்குநர், மேல்நிலைக்கல்வி, பள்ளிக்கல்வி இயக்குநரகம் (அனைவருக்கும் கல்வி திட்டம்)

3. சி.உஷாராணி- இணை இயக்குநர், நாட்டு நலப்பணிதிட்டம் (கூடுதல் உறுப்பினர், ஆசிரியர் தேர்வு வாரியம்)

4. வீ.மோகன்ராஜ், இணை இயக்குநர், தொழில்கல்வி (பள்ளிச்சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம்)

5.எஸ்.லதா, இணை இயக்குநர், தொடக்க கல்வி இயக்ககம் (ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம்)

6. பி.ஏ.நரேஷ், இணை இயக்குநர், இடைநிலைக்கல்வி, அரசு தேர்வுகள் இயக்குநரகம் (மெட்ரிகுலேசன் பள்ளிகள்)

7. ஏ.கருப்பசாமி, இணை இயக்குநர், மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநரகம் (கூடுதல் உறுப்பினர், ஆசிரியர் தேர்வு வாரியம்)

8. எம்.பழனிச்சாமி, இணை இயக்குநர், ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநரகம் (பணியாளர் தொகுதி, பள்ளிக்கல்வி இயக்குநரகம்)

9. கே.தங்கமாரி, இணை இயக்குநர், அனைவருக்கும் கல்வி திட்டம் (பொதுநூலகம்)

10. இரா.பிச்சை, இணை இயக்குநர், பொது நூலக இயக்ககம் (தொடக்க கல்வி இயக்குநரகம்)

11. எஸ்.சேதுராமவர்மா, இணை இயக்குநர், கூடுதல் உறுப்பினர்-1, ஆசிரியர் தேர்வு வாரியம் (தொழில்கல்வி, பள்ளிக்கல்வி இயக்குநரகம்).

12. டி.உமா, கூடுதல் உறுப்பினர், ஆசிரியர் தேர்வு வாரியம் (நாட்டு நலப்பணித் திட்டம்),

13. வி.பாலமுருகன், இணை இயக்குநர், பள்ளிச்சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநரகம் (இடைநிலைக்கல்வி)
 

குடோன்களில் மக்கும் ரூ.200 கோடி பாட புத்தகங்கள்


 
ழைய பாடத்திட்டத்தின் கீழ், 200 கோடி ரூபாய் செலவில் அச்சடிக்கப்பட்ட பாடப் புத்தகங்கள், பாடநூல் கழகம் மற்றும் ஆந்திர மாநில அச்சகங்களின் குடோன்களில், மக்கி வருகின்றன. அச்சிட்ட நிறுவனங்களுக்கு பணம் வழங்கப்படாததால், அச்சக உரிமையாளர்கள் புலம்பி தவிக்கின்றனர்.

"சமச்சீர் கல்வித் திட்டத்தையே அமல்படுத்த வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதை அடுத்து, ஏற்கனவே தயாராக அச்சிடப்பட்டிருந்த சமச்சீர் கல்வி புத்தகங்களில், சில பகுதிகளை நீக்கி, நடப்பு கல்வியாண்டில் வினியோகிக்கப்பட்டன.

வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே, பழைய பாடத்திட்டத்தின் கீழ், அவசரம் அவசரமாக 200 கோடி ரூபாய் செலவில், தமிழகம் மற்றும் ஆந்திராவில் உள்ள அச்சகங்களில், பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டன. சுப்ரீம் கோர்ட் உத்தரவு காரணமாக, இந்த பாடப் புத்தகங்கள் அப்படியே குடோன்களில் தேங்கி, வீணாகி வருகின்றன.புத்தகங்களை என்ன செய்வது என, தமிழக அரசு, எந்த முடிவும் எடுக்கவில்லை; அதே நேரத்தில், பாடப் புத்தகங்களை அச்சிட்ட உரிமையாளர்களுக்கும், இதுவரை பணம் வழங்கவில்லை. இதனால், அச்சக உரிமையாளர்கள் புலம்பித் தவித்து வருகின்றனர்.

புலம்பல்:
இதுகுறித்து, அச்சக உரிமையாளர் ஒருவர் கூறியதாவது:பாடப் புத்தகங்கள், 150 அச்சகங்களில் அச்சடிக்கப்பட்டடன. ஒவ்வொரு அச்சகத்திற்கும், 10 முதல், 15 லட்சம் ரூபாய் என, 22.50 கோடி ரூபாய் வரை, பாட நூல் கழகம் தர வேண்டியுள்ளது. இதைப் பற்றி கேட்டாலே, வாய் திறக்க மறுக்கின்றனர்.
 இது சம்பந்தமாக, பாடநூல் கழகத்தில் இரு முறையும், கோட்டையில் இரு முறையும், எங்களிடம் அமைச்சர் பேசினார். அப்போது, "லாபமோ, நட்டமோ எதுவாக இருந்தாலும், அதை அரசு ஏற்றுக்கொள்ளும். உங்களை பாதிக்க விட்டுவிட மாட்டோம். பில் தொகை கண்டிப்பாக விரைவில் வழங்கப்படும்' என்றார்.

ஆனால், இதுவரை ஒரு பைசா கூட வரவில்லை.வழக்கமாக, பாடப் புத்தகங்களை அச்சிட்டு வழங்கினால், பில் தொகையில், 80 சதவீதம் 10 நாட்களிலும், மீதம் 20 சதவீத பணம் அதற்கு பிறகு விரைவில் கிடைக்கும். ஆனால், பழைய பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டு, பல மாதங்களாகியும், பணம் தராமல் இருப்பது வேதனையை ஏற்படுத்தியுள்ளது.பணம் கிடைத்தால், அது எங்களின் தொழில் வளர்ச்சிக்கு பயன்படும். பில் தொகையை விரைவில் தருவதற்கு, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.உத்தரவை காணோம்.
 பாடநூல் கழக வட்டாரங்கள் இது குறித்து கூறும்போது, "பழைய பாடப் புத்தகங்களை என்ன செய்வது என்பது குறித்தோ, அச்சிட்ட உரிமையாளர்களுக்கு பணம் வழங்குவது குறித்தோ, அரசு எவ்வித உத்தரவையும், எங்களுக்கு வழங்கவில்லை. எனவே, நாங்கள் எந்த முடிவையும் எடுக்க முடியாது' என தெரிவித்தனர்.
Source: Dinamalar

சத்துணவுப் பணியாளர்களை தனியார் பள்ளிகள் நியமிக்க முடியாது

மதுரை : ""தனியார், சிறுபான்மைப் பள்ளிகளில், சத்துணவு ஊழியர்களை நியமனம் செய்யும் உரிமை, அரசுக்கு உண்டு. தனியார் பள்ளி நிர்வாகங்கள், உரிமை கோர முடியாது'' என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. பல்வேறு தனியார் பள்ளி நிர்வாகங்கள் சார்பில், விருதுநகரை சேர்ந்த அழகிரிசாமி உட்பட 10 பேர் தாக்கல் செய்த மனுவில், "சிறுபான்மை மற்றும் தனியார் பள்ளி சத்துணவு மையங்களில், ஊழியர்களை நியமிக்க, அவர்களுக்கு உரிமை இல்லை என்ற அரசு உத்தரவை, ரத்து செய்ய வேண்டும்' என கோரியிருந்தனர்.

மனு, நீதிபதி கே.சந்துரு முன்னிலையில், விசாரணைக்கு வந்தது. நீதிபதி பிறப்பித்த உத்தரவு: அரசு, ஏற்கனவே சத்துணவு மைய சமையல்காரர் மற்றும் உதவியாளர்களை இட ஒதுக்கீட்டின்படி நியமிக்க உத்தரவிட்டது. புதிய உத்தரவில், சிறுபான்மை, தனியார் பள்ளி நிர்வாகங்கள், அப்பகுதியை சேர்ந்த 5 பேரை, பரிந்துரை செய்ய வேண்டும். அதில், ஒருவரை கலெக்டரின் நேர்முக உதவியாளர், பணி நியமனம் செய்வார்.

சிறுபான்மை, தனியார் பள்ளிகளில், அரசின் 100 சதவீத நிதியில் மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்படுகிறது. எனவே, ஊழியர்களை பணி நியமனம் செய்யும் உரிமை அரசுக்கே உண்டு. தனியார் பள்ளி நிர்வாகங்கள் உரிமை கோர முடியாது. மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. இவ்வாறு, உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நன்றி: தினமலர்

முதுகலை ஆசிரியர்களாக 1,100 பேருக்கு பதவி உயர்வு

 
சென்னை : முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங், சென்னையில் நேற்று நடந்தது. இதில், 1,100 பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்களாகப் பதவி உயர்வு செய்யப்பட்டு, உத்தரவுகள் வழங்கப்பட்டன. மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில், 2,612 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில், 1,305 பணியிடங்கள், தகுதி வாய்ந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு, முதுகலை ஆசிரியர்களாகப் பதவி உயர்வு வழங்குவதற்கான கவுன்சிலிங், சென்னை, எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில், நேற்று நடந்தது.

பள்ளிக் கல்வி இணை இயக்குனர் ராஜராஜேஸ்வரி தலைமையில், சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நாகராஜ முருகன் மற்றும் அலுவலர்கள், கவுன்சிலிங்கை நடத்தினர். காலையில், காலியிட விவரங்கள் அடங்கிய பட்டியல்கள், மாவட்ட வாரியாக, பள்ளியின் முகப்பில் வெளியிடப்பட்டன. பணி மூப்பு அடிப்படையில், பாட வாரியாக, ஆசிரியர்கள் அழைக்கப்பட்டு, அவர்கள் விரும்பிய இடங்களுக்கு, முதுகலை ஆசிரியர்களாகப் பதவி உயர்வு செய்து, அதற்கான உத்தரவுகளை, ராஜராஜேஸ்வரி வழங்கினார்.

நேற்று ஒரே நாளில், 1,100 பேர், பதவி உயர்வு ஆணைகளைப் பெற்றனர். மீதமுள்ள காலிப் பணியிடங்கள், நேரடிப் பணி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளது. பொறுப்பேற்பு: இதற்கிடையே, பள்ளிக் கல்வித் துறையில், மேல்நிலைக் கல்வி இணை இயக்குனராக இருந்து வந்த ராஜராஜேஸ்வரி, பணியாளர் தொகுதி இணை இயக்குனராக, நேற்று மாற்றம் செய்யப்பட்டார். நேற்று, பிற்பகலில், புதிய பொறுப்பை இவர் ஏற்றுக்கொண்டார்.

பணியாளர் தொகுதியில் இருந்த பழனிச்சாமி, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித் துறையில் பொறுப்பேற்றுக் கொண்டார். மற்ற அதிகாரிகளில் சிலர் இன்றும், சிலர் திங்கட்கிழமையும் பொறுப்பேற்கத் திட்டமிட்டுள்ளனர்.
நன்றி: தினமலர்