பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

7/25/2012

வேலைவாய்ப்பு புதிவை புதுப்பிக்க மறந்தவர்களுக்கு அரசு சிறப்பு சலுகை

2008, 2009, 2010-ம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. இதன்படி மூன்று மாதங்களுக்குள் ஆன்லைன் மூலமாகவோ அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலமாகவோ தங்கள் பதிவினைப் புதுப்பித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

   இது குறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் மகேசன் காசிராஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
2008, 2009 மற்றும் 2010 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு மீண்டும் ஒரு முறை புதுப்பித்து கொள்ள சிறப்பு புதுப்பித்தல் சலுகையை தமிழக அரசு வழங்கியுள்ளது. இச்சலுகையை பெற விரும்பும் மனுதாரர்கள் அரசாணை வெளியிடப்படும் நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் ஆன்லைன் மூலமாகவோ அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலமாகவோ தங்கள் பதிவினைப் புதுப்பித்துக் கொள்ளலாம். 18.10.2012-க்குப்பின் பெறப்படும் கோரிக்கைகள் நிராகரிக்கப்படும்.
   1.01.2008-க்கு முன் புதுப்பிக்க தவறியவர்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. இணையதளம் மூலம் பதிவினை புதுப்பிக்க இயலாதவர்கள் சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு வேலைவாய்ப்பு அடையாள அட்டையின் நகலுடன் நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமோ மனு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Elementary Dept. No Cost Foot Wear Online Entry

அரசு பள்ளிகளில் தமிழுக்கு கெட்அவுட், ஆங்கிலத்துக்கு கட்அவுட்டா?: தமிழக அறிஞர்களின் கூட்டமைப்பு

சென்னை: அரசு தொடக்கப்பள்ளியில் ஆங்கில வழிக்கல்வியை அறிமுகப்படுத்தும் திட்டத்தை தமிழக அரசு உடனே கைவிட வேண்டும் என்று தமிழக அறிஞர்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் குமரி அனந்தன், பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் உள்ளிட்டோர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில்,
தனியார் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்விக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இந்நிலையில் மாநில அரசு நடத்தும் துவக்கப்பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை ஆங்கில வழிக்கல்வியை புகுத்த தமிழக அரசு முடிவு செய்திருப்பது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் ஆகும்.
அனைத்து பாடங்களையும் தாய்மொழியில் கற்பிக்க வேண்டும் என்பது சான்றோர்களின் எண்ணம். அவர்களின் எண்ணத்தைப் புறக்கணிக்கும் வகையில் உள்ள இந்த திட்டத்தால் தமிழ் நெஞ்சங்கள் கொதித்துள்ளன. தமிழகத்தில் தாய்மொழியாம் தமிழை புறக்கடையில் நிறுத்திவிட்டு ஆங்கில ஆதிக்கத்துக்கு முக்கியத்துவம் தரும் தமிழக அரசின் இந்த திட்டத்தை கண்டிக்கிறோம்.
தமி்ழ் மொழியைக் காத்து, குழந்தைகளின் வாழ்வு வளம் பெற தமிழ் வழிக்கல்வியையே தொடர வேண்டும் என்றும், ஆங்கில வழிக்கல்வித் திட்டத்தை உடனே கைவிட வேண்டும் என்றும் தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம் என்றனர்.
 Oneindia Tamil

இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலைக் கழகத்தின் B.Ed.,&M.Ed.,பாடப்பிரிவுக்கான நுழைவுத் தேர்வு தேதி மாற்றம் 26.08.2012 அன்று நடைபெறும் என அறிவிப்பு.

7/24/2012

மாணவரை துன்புறுத்தினால் நடவடிக்கை: பள்ளிக் கல்விச் செயலர் சபிதா கடும் எச்சரிக்கை

"மாணவருக்கு, மன ரீதியாகவோ, உடல் ரீதியாகவோ ஆசிரியர் தண்டனை அளிக்கக் கூடாது. மீறினால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வித் துறை செயலர் சபிதா எச்சரித்தார்.

பெரம்பலூர் மாவட்டத்தில், தனியார் பள்ளி மாணவர் ஒருவரை சிறுநீர் குடிக்கச் சொல்லி, அடித்து, துன்புறுத்திய ஆசிரியர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். சிறுநீர் கழிக்க ஆசிரியர் அனுமதிக்காத நிலையில், வகுப்பிலேயே மாணவர் சிறுநீர் கழித்தார். இதனால், ஆசிரியர் கொதிப்படைந்து, மாணவரை நையப் புடைத்தனர். இந்த விவகாரம், பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பல தனியார் பள்ளிகளில், சிறிய மாணவ, மாணவியரைக் கூட, வகுப்பு நேரத்தில் சிறுநீர் கழிக்க, ஆசிரியர் அனுமதிக்காத கொடூரம் நடக்கிறது. சிறுநீர் கழிக்காமல் அடக்கி வைத்தால், நாளடைவில் பெரிய பிரச்னையை ஏற்படுத்தும்.

இதுகுறித்து, பள்ளிக்கல்வித் துறை செயலர் சபிதாவிடம் கேட்டபோது, "மாணவருக்கு, உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தண்டனை அளிக்கக் கூடாது. அப்படியிருந்தும், சில தனியார் பள்ளிகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து விடுகின்றன. இதை ஆசிரியரும், பள்ளி நிர்வாகமும் தவிர்க்க வேண்டும். மீறினால், சம்பந்தப்பட்டவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

நன்றி:
 

எஸ்.எஸ்.ஏ. கல்வி திட்டத்தில் பல லட்சம் சுருட்டல்?

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி திட்டம் சார்பில் நடந்த பள்ளி மேலாண்மை பயிற்சி வகுப்பு, வாழ்வியல் திறன் பயிற்சி முகாமிற்கு ஒதுக்கப்பட்ட நிதியில், முறைகேடு நடந்துள்ளதால், இதுகுறித்து விசாரிக்க தனி குழுவை கலெக்டர் அமைத்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி திட்டம் சார்பில், வட்டார வளமையங்கள் மூலம் துவக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு, கடந்த மார்ச் மாதம் பள்ளி மேலாண்மை பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.

அதே போல், ஒவ்வொரு ஒன்றியத்திலும், பள்ளி செல்லா குழந்தைகளுக்கான பகல் நேர சிறப்பு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கடந்த மார்ச் மாதம் வாழ்வியல் திறன் பயிற்சி வகுப்பு நடந்தது.மூன்று நாள் பயிற்சி இந்த இரு பயிற்சி வகுப்புகள் நடத்துவதற்கு, மாவட்டம் முழுவதும் பல லட்சம் ரூபாய் செலவிடப்பட்டது.

பள்ளி மேலாண்மை குழு பயிற்சி வகுப்பில், பயிற்சி பெற்ற உறுப்பினர்கள், மூன்று நாள், குறுவள மையத்தில் தங்கி பயிற்சி பெற வேண்டும். ஆனால், எந்த உறுப்பினர்களும் பயிற்சி மையத்தில் தங்கி பயிற்சி பெறவில்லை. பலர் பயிற்சி வகுப்பிற்கு வரவே இல்லை.

பயிற்சி பெறும் ஒவ்வொரு உறுப்பினருக்கும் காலை சிற்றுண்டிக்கு 25 ரூபாயும், மதியம் சாப்பாட்டிற்கு 40 ரூபாயும், இரவு சாப்பாட்டிற்கு 40 ரூபாயும், காலை மற்றும் மாலையில் தேநீர் மற்றும் நொறுக்குத்தீனிக்காக 40 ரூபாயும் நிதி ஒதுக்கப்பட்டது. விதிகள் மீறல் மேலும், பயிற்சி வகுப்பில் ஜெனரேட்டர் வசதி, சாமியானா, ஒலிபெருக்கி உள்ளிட்ட ஏற்பாடு செய்வதற்கும் நிதி ஒதுக்கப்பட்டது.

அதே போல், பள்ளி செல்லா குழந்தைகளுக்கு நடந்த வாழ்வியல் திறன் பயிற்சி வகுப்பிற்கும் ஒரு குழந்தைக்கு, 100 ரூபாய் வீதம் நான்கு நாள் பயிற்சி முகாமிற்கு, தலா 400 ரூபாய் வீதம் ஒதுக்கப்பட்டது. பயிற்சி முடித்த இந்த குழந்தைகளை, அவரவர் வயதிற்கு தகுந்தாற்போல், பள்ளிகளில் சேர்க்க வேண்டும். தொடர்ந்து ஒரு ஆண்டு, இந்த குழந்தைகளை ஆசிரியர் பயிற்றுநர்கள் கண்காணிக்க வேண்டும்.

ஆனால், அனைவருக்கும் கல்வி திட்ட உதவி அலுவலர், வட்டார வளமைய மேற்பார்வையாளர், ஆசிரியர் பயிற்றுநர்கள், இந்த இரு பயிற்சி முகாம்களுடைய விதிமுறையை பின்பற்றவில்லை. முறைகேடு புகார் இதற்காக, அனைவருக்கும் கல்வி திட்டத்தில் ஒதுக்கீடு செய்த நிதியில், 60 சதவீதம் பணத்தை அனைவருக்கும் கல்வி திட்ட அதிகாரிகள் கூட்டணி அமைத்து முறைகேடு செய்தனர்.

அனைவருக்கும் கல்வி திட்ட பயிற்சி முகாம் செலவினங்களை மேற்கொள்ள, உதவி தொடக்க கல்வி அலுவலர், வட்டார வளமைய மேற்பார்வையாளர் பெயர்களில் வங்கியில் இணைப்பு கணக்கு உள்ளது.

ஓசூர் அருகே தளி ஒன்றியத்தில் நடந்த, பள்ளி மேலாண்மை குழு பயிற்சி வகுப்பு, வாழ்வியல் திறன் பயிற்சி வகுப்பு நடத்தியதில், பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. கலெக்டர் மகேஷ்வரன், முறைகேட்டை விசாரிக்க தனிக்குழு அமைத்துள்ளதால், அதிகாரிகள் பெரும் கலக்கம் அடைந்துள்ளனர்.

நன்றி:
 

B.Ed.,Exam Application Form

Relaxation of condition relating to enhancement of age of superannuation of teachers in state institutions consequent of the implementation of the revised pay scales on the basis of 6lh Pay Commission recommendations

The Cabinet today approved the proposal to relax the condition of enhancement of age of superannuation of teachers to 65 in state institutions for the implementation of the revised pay scales on the basis of 6lh Pay Commission recommendations and become eligible for receiving Central share of 80% of the arrear payment.
It also decided that reimbursement of 80% of the Central share of the arrears be paid in 2-3 instalments to those States who have already made the payment and submitted their proposals for reimbursements to the Central Government.
The decision of Cabinet is expected to provide relief to teachers in State institutions with the payment of arrears. It will also benefit State Governments, who will be able to make the arrear payment in instalments and also claim reimbursements simultaneously.
Background:
Following the revision of pay scales of Central Government employees on the recommendation of the 6ifl Pay Commission, the pay scales of teachers and other equivalent cadres was revised and age of superannuation was enhanced to 65 in December 2008. The scheme of revised pay scales was essentially for teachers in Central Educational Institutions. However, provisions of the Scheme could be made applicable by State Governments, to Universities and Colleges coming under the purview of the State Governments, provided the State Governments adopt and implement the scheme as a composite scheme, including the enhanced age of superannuation.
The Central Government decided to provide financial assistance to the extent of 80% as reimbursement to those State Governments, which may opt for these revised pay scales for the period 1.1 2006 to 31.3.2010 The remaining 20% was to be met by the State Government from its own resources. The Central assistance was subject to the condition relating to the enhancement of the age of superannuation of university and college teachers to 65 years.
Many State Governments had requested the Central Government to waive the condition relating to enhancement of age of superannuation of teachers to 65 years as they were finding it difficult to accept the condition relating to enhancement of age of superannuation and the condition that the State Governments should first disburse the arrears and then seek reimbursement from Central Government to the extent of 80% of these arrears.

7/23/2012

பதவி உயர்வுக்கு முன்பே மாறுதல் கலந்தாய்வு: இடைநிலை ஆசிரியர்கள் அதிர்ச்சி

தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கவுன்சலிங் வரும் 30ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு முன்பே 23ம் தேதி பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுவதால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தை பொறுத்தவரை பள்ளிக் கல்வித் துறையில் 6, 7, 8ம் வகுப்புகளில் மட்டுமே இடைநிலை ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இந்த வகுப்புகளுக்கு புதிதாக இடைநிலை ஆசிரியர் பணியிடம் என்பது கிடையாது. இதனால் பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் பணியிட மாறுதல் பெற்றாலோ, பதவி உயர்வு பெற்றாலோ மட்டுமே காலியிடம் உருவாகும் நிலை உள்ளது. தற்போது பணி நிரவலுக்காக பல இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களாக மாற்றப்பட்டுள்ளன. இதனால் பள்ளிக் கல்வித் துறையில் தற்போதைய நிலையில் பல மாவட்டங்களில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் இல்லாத நிலை உள்ளது.

வரும் 30, 31ம் தேதிகளில் இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறுவதற்கான கவுன்சலிங் நடக்கிறது. எனவே அதற்கு பின்னரே இடைநிலை ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் என தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் தமிழக பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் (பணி மேலாண்மை) ராஜராஜேஸ்வரியிடம் கடந்த 11ம் தேதி கோரிக்கை விடுத்தது. அவரும் பதவி உயர்வுக்கு பின்னர் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்துவதாக கூறியிருந்தார். இதனால் ஆகஸ்ட் முதல் வாரம் தான் இடைநிலை ஆசிரியர்கள் கலந்தாய்வு நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

இந்நிலையில் வரும் 23ம் தேதி நடக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வின் போதே இடைநிலை ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வும் நடத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. காலியிடங்கள் இல்லாத நிலையில் கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளது இடைநிலை ஆசிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில அமைப்புச் செயலாளர் இசக்கியப்பன் கூறுகையில், "இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்ற பின்னர் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தினால் காலியிடங்கள் உருவாகும். ஆனால் பதவி உயர்வுக்கு முன்பே பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதை பள்ளிக் கல்வித் துறை மறு பரிசீலனை செய்ய வேண்டும்" என்றார்.

நன்றி: Dinakaran

கல்வி தகவல் மேலாண்மை முறை மற்றும் ஸ்மார்ட் கார்ட் திட்டம் -பள்ளிகளில் பூர்த்தி செய்து தயார் நிலையில் வைக்கவேண்டிய படிவங்கள்

நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச நாள்கள்கூட வகுப்புக்கு வராத மாணவர்கள் தேர்வு எழுத உரிமை கோர முடியாது என்று உயர் நீதிமன்றம் கூறியுள்ளது

செங்கல்பட்டு அரசு சட்டக் கல்லூரியைச் சேர்ந்த பி. கீதா உள்ளிட்ட 9 மாணவர்கள் உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். போதுமான நாள்கள் வகுப்புக்கு வரவில்லை என்று கூறி தேர்வு எழுத அனுமதிக்க முடியாது என்று கல்லூரி நிர்வாகம் கூறுகிறது. எங்களை தேர்வு எழுத அனுமதிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அவர்கள் கோரினர். 
இந்த மனுக்கள் மீது கடந்த மே மாதம் விசாரணை நடத்திய உயர் நீதிமன்றம், மாணவர்களை தேர்வு எழுத அனுமதிக்குமாறு உத்தரவிட்டது. எனினும் இந்த வழக்கின் முடிவு தெரியாமல் தேர்வு முடிவை வெளியிடக் கூடாது என்று கூறியிருந்தது. 
இந்நிலையில் இந்த வழக்கினை நீதிபதி கே.சந்துரு விசாரித்தார். அப்போது, கல்லூரி சார்பில் ஆஜரான அரசு கூடுதல் வழக்குரைஞர் பி.சஞ்சய்காந்தி, நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச நாள்கள் (75 சதவீத நாள்கள்) கண்டிப்பாக வகுப்புக்கு வர வேண்டும் என்ற நிபந்தனையை ஏற்றுக் கொண்டே மாணவர்கள் கல்லூரியில் சேர்ந்தனர். ஆனால் இந்த மாணவர்கள் போதிய நாள்கள் வகுப்புக்கு வரவில்லை. 
இத்தகைய சூழ்நிலையில் மாணவர்கள் வகுப்புக்கு வராததன் காரணத்தை பரிசீலித்து, நியாயமான காரணமாக இருந்தால் மாணவர்களை தேர்வுக்கு அனுமதிக்கும் அதிகாரம் கல்லூரி முதல்வருக்கு உள்ளது. எனினும் 9 சதவீத நாள்கள் மட்டுமே முதல்வரால் விதிவிலக்கு அளிக்க இயலும். 
ஆனால் முதல்வரின் இந்த விதிவிலக்கைப் பெறும் அளவுக்குக்கூட மனுதாரர்கள் வகுப்புக்கு வராததால் அவர்களை தேர்வுக்கு அனுமதிக்க இயலாது என்று அவர் வாதிட்டார். அவரது இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி கே. சந்துரு, மாணவர்களின் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

7/17/2012

O Ms.No. 261
Dt : July 17, 2012
 Pay Grievance Redressal Cell – Extension of the tenure of Pay Grievance Redressal Cell and Appointment of a Member – Orders – Issued.
Letter No. 39664
Dt : July 12, 2012
  State Public Sector Undertakings/ Statutory Boards-Enhancement of Maternity Leave from 90 days to 180 days Extension of the facility to the Women Employees of State Public Sector Undertakings/ Statutory Boards-regarding
பள்ளிக்கல்வி - மேல்நிலைக்கல்வி-முதுகலை ஆசிரியர் பணியிடங்கள்- நேரடி மற்றும் பதவி உயர்வு மூலம் நியமனம் - கல்வித்தகுதிகள் -இணையாக கருதுதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
பள்ளிக் கல்வி - அனைத்து வகை அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளுக்கான பொதுவான சட்டம் மற்றும் விதிகளை வகுப்பதற்கு ஆலோசனை வழங்க வல்லுநர் குழு (Expert Committee) அமைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
  1. அனைவருக்கும் தரமான கல்வி வழக்க இயக்குநர்செயல்முறை
  2. விலையில்லா சீருடை வழங்கும் திட்டம் இயக்குநர் செயல்முறை
  3. தொடக்கக் கல்வி - அனைத்து தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் 01.09.2011ல் உள்ள மாணவர்கள் எண்ணிக்கை யின்படி உபரி இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்கள் பணிநிரவல் மற்றும் பொது மாறுதல் விவரம் அளிக்க தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு.
  4. இயக்குநர் சந்திப்பு(11.07.2012)
  5. RTI letter Regarding Aided school BT promotion

பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆகஸ்ட் முதல் வாரம் கலந்தாய்வு

தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆகஸ்ட் முதல் வாரம் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிய வந்துள்ளது.

தமிழகத்தில் தொடக்க கல்வித் துறை, பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மே மாதம் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கலந்தாய்விற்கான விண்ணப்பங்கள் கடந்த மே மாதம் பெறப்பட்டது. பின்னர் விண்ணப்பங்கள் பெறுவது நிறுத்தப்பட்டு கலந்தாய்வு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது முதுநிலை ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வு, பதவி உயர்வு ஆகியவை முடிந்துள்ளது. தொடக்க கல்வித் துறையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வும் முடிந்தது. பட்டதாரி ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வு வருகிற 23, 24ம் தேதிகளில் நடக்கும் நிலையில், பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு எப்போது நடக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை இடைநிலை ஆசிரியர்கள் மத்தியில் குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது.

பள்ளிக் கல்வித் துறையை பொறுத்தவரை தற்போது 6, 7, 8ம் வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர் புதிய நியமனம் கிடையாது. பட்டதாரி ஆசிரியர்கள் தான் நியமிக்கப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே 6, 7, 8 வகுப்புகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களே தற்போது பணியிட மாறுதல் கலந்தாய்வை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். கடந்த 31.05.2012 நிலவரப்படி காலியாக இருந்த இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தும் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நிரவலுக்காக பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களாக மாற்றப்பட்டன.

இதனால் பள்ளிக் கல்வித் துறையில் தற்போதைய நிலவரப்படி இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இல்லாத நிலை உள்ளது. எனவே வரும் ஜூலை 30ம் தேதி இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறுவதற்கான கலந்தாய்வு நடக்கிறது. இந்த கலந்தாய்வின் போது ஏற்படும் இடைநிலை ஆசிரியர் காலியிடங்களின் அடிப்படையில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

இதுகுறித்து தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில அமைப்புச் செயலாளர் இசக்கியப்பன் கூறுகையில், தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையில் தற்போதைய நிலையில் இடைநிலை ஆசிரியர்கள் காலியிடங்கள் எதுவும் இல்லாத நிலையில் பதவி உயர்வால் ஏற்படும் காலியிடங்களின் அடிப்படையில் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டுமென்று பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் (பணியாளர் நலன்) ராஜ ராஜேஸ்வரியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவுடன் ஏற்படும் காலியிடங்களின் அடிப்படையில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நன்றி:

7/14/2012

ஆகஸ்ட் மாதம், 31ம் தேதிக்குள், புதிய காப்பீட்டு திட்டத்திற்கான அடையாள அட்டைகளை தயாரித்து, சம்பந்தப்பட்ட அரசு அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்திற்கு, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

"தி யுனைட்டட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிட்' நிறுவனம், வரும் ஜூலை முதல் தேதி முதல், புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனமாக, தேர்வு செய்யப்பட்டுள்ளது..புதிய திட்டத்தின் கீழ் அடையாள அட்டை வழங்குவது தொடர்பாக, புதிய அரசாணை ஒன்றை நிதித்துறை பிறப்பித்துள்ளது.இதில், சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனம், அட்டை வழங்குவதற்கான விண்ணப்பங்களை, அரசு அலுவலகங்களில் உள்ள, சம்பளக் கணக்கு அதிகாரிகளுக்கு, அனுப்பி வைக்க வேண்டும். அவர்கள், தங்கள் அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு, அந்த விண்ணப்பத்தை அளித்து, பூர்த்தி செய்து, பெற்று, மீண்டும், காப்பீட்டு நிறுவனத்திற்கு அளிக்க வேண்டும்.

20ம் தேதிக்குள் விண்ணப்பம்: இதில், ஏற்கனவே பயன்பெறும் ஊழியர்கள், புதியதாக சேர்ந்துள்ள ஊழியர்கள், என அனைவரும், தங்கள் குடும்பத்தினர் பற்றிய தகவல்களுடன், விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ,வரும் 20ம் தேதிக்குள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அளிக்கவேண்டும். அந்த விண்ணப்பங்களை, இம்மாதம் 31ம் தேதிக்குள், காப்பீட்டு நிறுவனத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பத்தை பெறும் காப்பீட்டு நிறுவனம், ஆகஸ்ட் மாதம், 31ம் தேதிக்குள், புதிய காப்பீட்டு திட்டத்திற்கான அடையாள அட்டைகளை தயாரித்து, சம்பந்தப்பட்ட அரசு அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.ஒரு வேளை புதிய அடையாள அட்டையை தொலைத்து விட்டால், 50 ரூபாய் செலவில், புதிய அட்டையை, ஊழியருக்கு, காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும் என்றும் அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

தொடக்கக்கல்வி - தொடக்கக்கல்வி - முன்னாள் தமிழக முதலமைச்சர் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்த நாளான ஞாயிற்றுகிழமையன்று விழா எடுத்து சிறப்பாக கொண்டாட இயக்குனர் உத்தரவு.


7/13/2012

ஜீலை 13 இராமுண்ணி பிறந்தநாள்


Today we are celebrating TNPTF Founder Master RAMUNNI Birthday. We are very proud to be in this association. www.mptnptf.blogspot.com

7/11/2012

குற்றம் சாட்டப்பட்ட அரசு ஊழியரை நீதிமன்றம் விடுவித்தாலும், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கலாம் - அரசு விளக்கக் கடிதம் வெளியீடு

  1. இவலச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை சட்டம் 2009- ன்படி தொடக்கக் கல்வி இயக்கத்தில் கட்டுப்பாட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய நகராட்சி அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஆசிரியர் மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் உபரிபாக உள்ள இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியடங்களை கூடுதல் தேவையுள்ள பள்ளிகளுக்கு பணிநிரவல் செய்திடல்- ஆணை வெளியிடப்படுகிறது.
  2. PAY CELL PETITION
  3. 2012-13 உபரிப்பணியிடமாறுதல் வெளியப்படையான செயல்முறைகள் வேண்டுதல் சார்பு
  4. G.O=264

7/10/2012

ஆசிரியரிடம் லஞ்சம் வாங்கிய கல்வித்துறை அதிகாரி கைது

திருநெல்வேலி: ஆசிரியரிடம் ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கல்வித்துறை அதிகாரி லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். நெல்லை மாவட்டம் ரெட்டியார்புரத்தை சேர்ந்தவர் எபினேசர் ஜெபக்கனி. இவர் கடந்த 2001ம் ஆண்டு ஆசிரியர் பணியில் சேர்ந்தார். இவருக்கு கடந்த 2007ம் வரையிலான ஆண்டிற்கு சம்பளம் கிடைக்கவில்லை. இது குறித்து அவர் மாவட்ட கல்வித்துறை அதிகாரியிடம் புகார் செய்தார்.

இவரது மனுவை பரிசீலனை செய்த கல்வித்துறை அலுவலகத்தில் பணிபுரியம் ஜெரால்டு வசீகரன்(45), 8 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டார். லஞ்சம் கொடுக்க மறுத்த எபினேசர், லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., தங்கசாமியிடம் புகார் மனு அளித்தார். அவரது ஆலோசனையின் பேரில் ரசாயனம் தடவிய 8 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்த போது ஜெரால்டு வசீகரனை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஜெரால்டு விசாரணைக்கு பின்னர் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். ஜெரால்டு முன்னர் நெல்லையில் பணிபுரிந்தபோது லஞ்ச புகார் காரணமாக நான்குநேரிக்கு மாற்றப்பட்டார். பின்னர் அவர் மீண்டும் நெல்லை வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
  1. Announcements - District Revenue Administration - Issue of Community, Nativityand Income certificates to all sixth standard students studying in all schoolsof Tamil Nadu - Implementation of the Scheme - Orders issued.
  2. பள்ளிக்கல்வி அமைச்சர், அரசு செயலர், இயக்குநர் அறிவுரைகள்
  3. உபரி பணியிடம் கணக்கிடுதல் விபரம்
  4. அனைத்து பள்ளிகள் உரிய நேரத்தில் தொடங்கவும், ஆசிரியர் மாணவர்கள் சுத்தமாகவும், பள்ளி வளகங்கத்தை சுத்தமாக வைத்திருக்க பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உத்தரவு.
  5. GO.123 fin(paycell)dep.dated:10.04.2012 Grivence Redressal அமைப்பின் கடிதம்
  6. காமராஜர் பிறந்த நாளை(ஜீலை-15) கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடும் அரசாணை
  7. மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் பள்ளிப் பாவையிடல் சார்பு
  8. Letter No. 35574/PGC/2011-3,  dated: 23.04.2012  
  9. New Health Insurance Scheme, 2012 
  10. CCE FORM
  11. 2012-13 SABL cards,Laders,Grop cards,in colur picture & complet method& instruction for Std  1-4
  12. இயக்குநருக்கு அமைப்பின் கடிதம்
  13. அதிகமாக காலியிடங்கள் உள்ள மாவட்டங்களில் பள்ளிகள்  பட்டியல் கோருதல் சார்பு
  14. Elementary Director Instruction about INSPIRE Award 2012-13
  15. தொடக்கக் கல்வி - ஊராட்சி. நகராட்சி.அரசு மற்றும் உதவிபெறும் தொடக்க-நடுநிலைப்பள்ளி- ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் ஆடை மற்றும் அணிகலன்கள் அணிந்து வருதல் -சார்பு

7/04/2012

THANKS



TNPTF



தொடக்க கல்வித்துறை கவுன்சிலிங் ஜூலை 21 ம் தேதி தொடங்குகிறது.

ஜூலை 21
முற்பகல்  பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் ஒன்றியத்திற்குள் மற்றும் ஒன்றியம் விட்டு ஒன்றியம்
பிற்பகல் பட்டதாரி ஆசிரியர் இடம் மாறுதல் ஒன்றியத்திற்குள் மற்றும் ஒன்றியம் விட்டு ஒன்றியம்
ஜூலை 22
பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் மற்றும்  இடம் மாறுதல் மாவட்டம் விட்டு மாவட்டம்
ஜூலை 28
இ .நி .ஆசிரியர் பணி நிரவல் மற்றும்  இடம் மாறுதல் ஒன்றியத்திற்குள்
ஜூலை 29
இ .நி .ஆசிரியர் பணி நிரவல் மற்றும்  இடம் மாறுதல் ஒன்றியம் விட்டு ஒன்றியம்
ஜூலை 31
இ .நி .ஆசிரியர் பணி நிரவல் மற்றும்  இடம் மாறுதல் மாவட்டம் விட்டு மாவட்டம் 

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வில் முறை கேடாக வழங்கப்பட்ட மாறுதல் ஆணையை ரத்து செய்து மறு கலந்தாய்வு நடத்த வேண்டும் - ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வில் முறை கேடாக வழங்கப்பட்ட மாறுதல் ஆணையை ரத்து செய்ய வேண்டும். ஜூன் 5க்குள்  மறு கலந்தாய்வு நடத்த வேண்டும் என ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கெடு விதித்துள்ளது.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலச் செயற்குழு கூட் டம் மதுரையில் மாநில தலைவர் கண்ணன் தலை மையில் நடந்தது. மதுரை மாவட்ட செயலாளர் முருகன் வரவேற்றார். இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய துணைத்தலைவர் கணேசன் முன்னிலை வகித்தார். மாநிலப் பொரு ளாளர் மோசஸ் வரவு செலவு அறிக்கை சமர்ப்பித்தார்.
தமிழ்நாடு தொடக்க கல்வித்துறையில் கடந்த மாதம் 27,28 மற்றும் 29ம் தேதிகளில் பட்டதாரி தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆகியோருக்கு இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடந்தது.
ஒளிவுமறைவற்ற கலந்தாய்வு நடத்தாமல் கட்சியினர் பெயரில், உயர் அலுவலர்களின் பரிந்துரை களின் அடிப்படையில் காலிப் பணியிடங்களை ஒளித்து வைத்து அத்துமீறல்கள் நடந்தன. இதை இக்கூட்டணி வன்மையாக கண்டிக்கிறது.
சட்டவிரோதமாக கலந்தாய்வு இல்லாமல் முறையின்றி வழங்கப்பட்டுள்ள இடமாறுதல் ஆணைகளை ரத்து செய்ய வேண்டும். வரும் 5ம் தேதிக்குள் பிரச்னைக்குரிய ஒன்றியங்களில் மறு கலந்தாய்வு நடத்த வேண்டும்.
வரும் 21ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடை பெறும் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்ட தாரி ஆசிரியர் உபரி பணியிட மாறுதல் மற்றும் பணியிட இடமாறுதல் களை எவ்விதப் புகாருக்கும் இடமின்றி வெளிப்படையான, தூய்மையான முறையில், ஒளிவுமறைவின்றி நடத்த வேண்டும். நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.
கூட்டத்தில் மாநிலப் பொதுச் செயலாளர் முருக செல்வராசன், மாநில துணைத்தலைவர்கள் மலர்விழி, மயில், ஜோசப்ரோஸ், சந்திரமோகன், மாநிலச் செயலாளர்கள் மணிமேகலை, முருகேசன் கலந்துகொண்டனர்.

தொடக்கக்கல்வித்துறையின் கீழ் உள்ள தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் 01.07.2012 அன்றுள்ளப்படி ஆசிரியர்களின் காலிப்பணியிடம், கூடுதல் தேவையுள்ள பணியிடங்கள் மற்றும் உபரி பணியிடங்கள் விவரங்கள் கோரப்பட்டுள்ளது - திருத்தப்பட்டது.

7/03/2012

இந்திய கல்வி உரிமைச் சட்டத்தில் தெளிவில்லை: சென்னை உயர்நீதிமன்றம்

இந்தியக் கல்வி உரிமைச் சட்டத்தில் தெளிவில்லாத பகுதிகள் சில உள்ளன, சட்ட அமலாக்கத்தினைக் கண்காணிப்பது யார் என்பதும் குழப்பமாக இருக்கிறது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு குறை கூறியிருக்கிறார்.
மூன்றாண்டுகள் முன்பு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அச்சட்டம் செல்லுபடியாகும் என அண்மையில்தான் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
அனைவருக்கும் கல்வியை உறுதி செய்வதாகக் கூறும் அச்சட்டத்தின் கீழ், அனைத்து தனியார் பள்ளிகளும், அவை அமைந்திருக்கும் பகுதிகளில் வாழும் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கென 25 சத இடங்களை முதல் வகுப்பில் ஒதுக்கவேண்டும்.
அத்தகைய ஒதுக்கீட்டின் கீழ் இடம் கோரி விண்ணப்பித்து, நிராகரிக்கப்பட்ட, மாணவர் ஐவரின் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது கல்வி உரிமைச் சட்டத்திற்கு முரணானது, எனவே அக்குழந்தைகளை சேர்த்துக்கொள்ளுமாறு பள்ளி நிர்வாகங்களுக்கு உத்திரவிடவேண்டும் எனக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர்.
வழக்கில் சம்பந்தப் பட்ட ஐந்து பள்ளிகளில் நான்கு நலிவடைந்தோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரும் முன்பே மாணவர் சேர்க்கையை முடித்துவிட்டதாகக் கூறின. மற்றொன்று நலிவடைந்த மாணவர்களைத் தாங்களாகவே தெரிவு செய்து 25 சத இடங்களை நிரப்பிவிட்டதாகக் கூறியது.
வாதப் பிரதிவாதங்களைக் கேட்ட நீதிபதி சந்துரு, சட்டமே குழப்பமாயிருக்கும்போது நிர்வாகத்தினரின் நடவடிக்கை சட்டத்திற்கு முரணாக இருப்பதாகக் கூறமுடியாது என்றார்
குறிப்பாக ஒரு பகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட பள்ளிகள் இருந்தால், எந்தப் பள்ளியில் சேர்ப்பது என்ற உரிமை பெற்றோர்களுக்கு இருக்கிறதா என்பது தெரியவில்லை, ஒரு பள்ளி சட்டத்திற்குப் புறம்பாக ஒரு மாணவரைச் சேர்க்க மறுத்தால், சேர்த்துக்கொள்ளுங்கள் என்று சம்பந்தப்பட்ட நிர்வாகத்திற்கு உத்திரவிடும் அதிகாரம் எந்த துறைக்கு இருக்கிறது என்பதும் இந்த சட்டத்தில் வரையறுக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டி, இச்சூழலில் எந்த நிர்வாகத்தினாலும் உத்திரவு பிறப்பிக்க இயலாது என்று நீதிபதி கூறினார்.
கல்வி ஆர்வலர்கள் இத் தீர்ப்பிற்குப் பிறகாவது சட்டம் அமலாவதைக் கண்காணிக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என அவர் வலியுறுத்தினர்.
தீர்ப்பை ஆராய்ந்து அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என கல்வித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

அரசு பள்ளிகளில் சத்துணவு திட்டத்தை நவீனப்படுத்த பயிற்சி

அரசு பள்ளிகளில், தினமும் ஒவ்வொரு மெனு, 13 வகை சாப்பாடு, ஐந்து வகை முட்டை ஸ்பெஷல் என அசத்தல் திட்டத்தில், சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்களுக்கு பயிற்சியளிக்கப்படுகிறது. புகை, கரி படிந்த இருளான சமையல் அறை, ஒடுங்கி கறை பிடித்த பாத்திரங்கள், சுகாதாரமில்லா சாப்பாடு, பள்ளத்தை நோக்கி பாயும் சாம்பார்... இவையெல்லாம், அரசு பள்ளி சத்துணவுக் கூடங்களின் அடையாளம்.         தற்போது, பள்ளி சத்துணவு திட்டத்தை, அரசு கொஞ்சம் கொஞ்சமாக, நவீனப்படுத்தி வருகிறது. முதல் கட்டமாக, ஆண்டுதோறும் புதிய பாத்திரங்கள், விறகுக்கு பதிலாக காஸ் இணைப்பு என, பிரச்னைகளுக்கு தீர்வு கண்டு வருகிறது. ஆனால், பள்ளி சத்துணவு சமைக்கும் முறையில், பெரிய மாற்றங்கள் ஏற்படவில்லை. அரசு வழங்கும் நிதியை கொண்டு, பள்ளிகளில் உயர் தரமாக தினமும் விதவிதமான, "மெனு' கொடுத்து, அசத்த முடியும் என்பதை, "செப்' தாமு நிரூபித்துள்ளார்.       சென்னை சைதாபேட்டை, மாந்தோப்பு அரசு பள்ளியில், உணவுத் துறை அமைச்சர் சம்பத் முன்னிலையில், "செப்' தாமு மாணவர்களுக்கு கமகம மணத்துடன், சத்துணவு தயாரித்து கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி, 16 மாவட்டத்திலுள்ள சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்களுக்கு சுவையான ஆரோக்கியமான சத்துணவு சமைப்பது, சுகாதார முறைகளை கடைபிடிப்பது குறித்து, பயிற்சி அளித்துள்ளார். "செப்' தாமு, கோவையில்,     "தினமலர்' நிருபரிடம் கூறியதாவது: பள்ளிகளில் சத்துணவு சுவையாக இல்லாததால், மாணவர்கள் சாப்பாட்டை முழுமையாக சாப்பிடாமல், வீணாக கொட்டுவதை பார்த்ததால், மாணவர்களுக்கு சுவையான சாப்பாடு வழங்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. தற்போது, சத்துணவில் சாப்பாடு, சாம்பார், வாரத்தில் ஐந்து நாள் அவித்த முட்டை, ஒரு நாள் கொண்டைக் கடலை அல்லது பாசிப்பயறு அல்லது உருளைக் கிழங்கு வேகவைத்து கொடுக்கப்படுகிறது. அதே பொருட்களை கொண்டு, உயர் தரத்துடன், ஆரோக்கியமான முறையில், சுவையான சாப்பாடு தயாரித்து கொடுக்க வேண்டும் என்பதற்காக திட்டமிட்டேன். அரசு வழங்கும் நிதிக்குள், இந்த திட்டத்தை அமைத்தேன். சத்துணவில், கொண்டைக் கடலை பிரியாணி, தக்காளி புலாவ், வெஜிடபிள் பிரியாணி, தக்காளி, புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லி, கீரை சாதங்கள், பிஸ்மலாபாத், கடலை குழப்பு சாதம், சாம்பார் சாதம், பிரைடு ரைஸ், காய்கறி கலந்து மசால் சாதம் ஆகிய, 13 வகையான நாவுக்கு ருசியான சாப்பாடு தயாரிக்க முடியும். இந்த திட்டத்தை "டெமோ' பார்க்க, சென்னையில், ஸ்பெஷல் மெனு அடிப்படையில், சத்துணவு தயாரித்து கொடுத்தேன். குழந்தைகள் உணவை வீணடிக்காமல், மறுபடியும் விரும்பி வாங்கி சாப்பிட்டனர். குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில், விதவிதமான உணவு வகைகள் சமைக்க, பயிற்சி அளித்து வருகிறேன். இதன் மூலம், சத்துணவு திட்டத்தில் மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையுள்ளது. இவ்வாறு, "செப்' தாமு தெரிவித்தார்

7/02/2012

குறிப்பிட்ட பள்ளியில் இடம் கோர முடியாது : உயர் நீதிமன்றம்

மாணவ சேர்க்கைக்கு இடம் வழங்கும் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும், தாங்கள் குறிப்பிட்ட பள்ளியில் சேர்க்கை கோர முடியாது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. குறிப்பிட்ட பள்ளியில்தான் சேர்க்கை வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அனைவருக்கும் இலவசக் கல்வி என்ற சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் 25% ஏழை மாணவர்களுக்கு இலவசமாக கல்வி அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஆனால், தாங்கள் குறிப்பிட்டு ஒரு பள்ளியில் சேர்க்கை பெற வழிமுறை இல்லை என்றும், அனைவருக்கும் இலவசக் கல்வி என்ற சட்டம் அமலாக்கப்படுவதை கண்காணிக்க அமைப்பு இல்லை என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

பணி நியமனத்தில் முறைகேடா? தேர்வு வாரிய உறுப்பினரை ஆசிரியர்கள் முற்றுகை

திருச்சி : திருச்சியில் ஆசிரியர் நியமனத்திற்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணியின்போது  தேர்வு வாரிய உறுப்பினரை பட்டதாரி ஆசிரியர்கள் நேற்று முற்றுகையிட்டனர்.
கடந்த 2010, 11ம் ஆண்டில் காலியான பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு, வேலைவாய்ப்பு பதிவுமூப்பு அடிப்படையில் நியமனம் செய்ய கடந்த மாதம் 23, 24 தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி திருச்சி புத்தூர் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இதில் திருச்சி, புதுக் கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

வருகை தராதவர்களுக்கு நேற்று சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்தது. 5 மாவட்டங்களை சேர்ந்த 76 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. இதில் முதுநிலை தமிழ் ஆசிரியை ஒருவர், பட்டதாரி ஆசிரியர்கள் 16 பேர் என மொத்தம் 17 பேர் பங்கேற்றனர். ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் சங்கர் தலைமையில் அலுவலர்கள் சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டனர். சான்றிதழ் சரி பார்ப்பு பணி நடந்த பகுதியில் 100க்கும் மேற்பட்ட பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் காத்திருந்தனர். சரிபார்ப்பு பணியை பார்வையிட்டுவிட்டு வெளியே வந்த  தேர்வு வாரிய உறுப்பினர் சங்கரை வெளியில் காத்திருந்த பட்டதாரிகள் முற்றுகையிட்டனர்.

சான்றிதழ் சரிபார்ப்பிற்கு எங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. எங்களையும் அனுமதிக்க வேண்டும் என்றனர். இதற்கு சங்கர், பதிவுமூப்பு அடிப்படை யில், ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே தற்போது சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கிறது என்றார். இதுகுறித்து திருச்சியைச் சேர்ந்த முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பாலசுப்பிரமணியம் கூறுகையில், Ô விடுபட்ட ஆசிரியர் பணியிடங்களில் சீனியாரிட்டி மூலம் பணி நியமனம் என்பதால் பணி நியமனத்தில் முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளதுÕ என்றார்.

கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்த மறுப்பு :ஆசிரியர்கள் மீது கல்வியாளர்கள் அதிருப்தி

நாமக்கல்: ஆறு முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கும் வகையில், மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்தை, ஒரு சில தலைமையாசிரியர்கள் செயல்படுத்த மறுப்பதால், கல்வியாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2009, கடந்த 2010ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி, மத்திய அரசு நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தியது. இச்சட்டத்தின்படி, ஆறு முதல் 14 வயது வரை குழந்தைகள் அனைவருக்கும் கல்வி உரிமையாக்கப்பட்டுள்ளது. இச்சட்டம், குழந்தைகளுக்கான உரிமைகள், பள்ளியின் பொறுப்பு, ஆசிரியரின் கடமைகள், பள்ளி மேலாண் குழுவின் பணிகள் என பல முக்கிய அம்சங்களுடன் ஏழு அத்தியாயங்களில், 38 சட்டப்பிரிவுகளில் கூறப்பட்டள்ளது. அதன்படி, ஆறு முதல் 14 வயது வரை ஒவ்வொரு குழந்தையும், அருகாமைப் பள்ளியில் தொடக்கக் கல்வி முடியும் வரை இலவசமாக, கட்டாயமாக கல்வி பெறுவதற்கு உரிமை உண்டு.ஆறு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள், பள்ளியில் சேரவில்லை அல்லது சேர்ந்து நின்று விட்டனர் என்றால், வயதுக்கு ஏற்ற வகுப்பில் அக்குழுந்தை சேர உரிமை உண்டு. ஒவ்வொரு குழந்தைக்கும், இலவச கட்டாயத் தொடக்கக் கல்வியை வழங்குவது மாநில அரசின் கடமை.ஒவ்வொரு பள்ளியும், ஆறு முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இலவச கட்டாயக் கல்வியை வழங்க வேண்டும். குறிப்பிட்ட பள்ளிகள், முதல் வகுப்பில் குறைந்தது, 25 சதவீதம் அருகாமைப் பகுதியில் உள்ள நலிந்த பிரிவுகள், வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த குழந்தைகளை சேர்ந்து தொடக்கக் கல்வி முடிக்கும் வரையில் இலவசக் கல்வியை வழங்க வேண்டும். எந்தப்பள்ளியும், ஒரு குழந்தையை சேர்க்கும் போது, எந்தவொரு கல்விக் கட்டணமும் வசூலிக்கக் கூடாது. எந்தவொரு தேர்வுக்கும் உட்படுத்தக் கூடாது. வயது சான்றிதழ் இல்லை என்பதற்காக பள்ளிச் சேர்க்கையை மறுக்கக்கூடாது. பள்ளிச் சேர்க்கை காலம் முடிந்த பின்பும், குழந்தையை பள்ளியில் சேர்க்க வேண்டும். அதன்படி, நாமக்கல் மாவட்டம் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 2012-13ம் கல்வி ஆண்டில், 0-14 வயது வரை உள்ள பள்ளிச் செல்லா குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், 6-14 வயது வரை பள்ளிச் செல்லா குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி, 15 யூனியனில் மேற்கொள்ளப்பட்டது. அதில், பள்ளிச் செல்லா குழந்தைகள் திட்டக்கூறு, கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா, உண்டு உறைவிட மையங்கள் மற்றும் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டம் உள்ளிட்ட அனைத்து கூறுகளிலும் சேர்த்து மொத்தம், 1,987 பேர் கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்களை, மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒருசில ஊராட்சி துவக்கப்பள்ளியில், குழந்தைகளை சேர்க்க, தலைமையாசிரியர்கள் மறுப்பு தெரிவிப்பதாக, "பகீர்' குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எவ்வித சான்றும் இல்லை எனக்கூறி தட்டிக்கழிப்பதாகவும் புகார் கூறப்படுகிறது.அரசின் சட்டத்தை முழுவதையும் அறிந்து கொள்ளாமல், அவர்கள் தான்தோன்றித்தனமாக நடந்து கொள்வது, கல்வியாளர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது. இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்தாத அத்தகைய ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, அரசின் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த முடியும் என்பது நிதர்சனமான உண்மை.

அனைத்து தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளின் காலிப் பணியிடம்/ கூடதல் தேவையுள்ள பணியிடம் / உபரி பணியிடம் ஆகியவற்றை 01.07.2012 நிலவரப்படி தொடக்கக்கல்வி அலுவலர் கோரியுள்ளார் மேலும் உபரி பணியிடம் உள்ள பள்ளியின் இளையவரைய குறிப்பிட ஆணை


IGNOU M.Ed., - 2013 Admission Notification Released

M.Ed is a two-year professional programme, designed and developed jointly by the Distance Education Council (DEC), IGNOU and National Council of Teacher Education (NCTE).

  • Minimum Duration: 2 Years
  • Maximum Duration: 4 Years
  • Course Fee: Rs. 36,000
  • Eligibility:- 55%  in BEd./BElEd
  • Minimum Age: No bar 
  • Maximum Age: No bar 
  • Application Cost: Rs.500/-
  • Last Date to submit filled in application form to the concerned regional centre: 15th July, 2012
  • For prospectus & more details visit www.ignou.ac.in

தேவையை விட அதிகம் உள்ள பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியருக்கு பணியிட மாறுதல் மற்றும் பொது மாறுதல் கலந்தாய்வு

தொடக்கக் கல்வித் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறையில், பள்ளிகளின் தேவையை விட கூடுதலாக பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களை, தேவை உள்ள பள்ளிகளுக்கு பணியிட மாற்றம் செய்யும் கலந்தாய்வு, 13ம் தேதி முதல் நடக்கிறது.

        இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை, 30 மாணவருக்கு, ஒரு ஆசிரியர் என்ற வீதத்திலும்; 6, 7, 8 ஆகிய வகுப்புகளில், 35 மாணவருக்கு, ஒரு ஆசிரியர் என்ற வீதத்திலும் இருக்க வேண்டும். ஆகையால், கூடுதலாக உள்ள பட்டதாரி ஆசிரியர் மற்றும் பற்றாக்குறை உள்ள பள்ளிகள் குறித்து, விவரம் சேகரிக்கப் பட்டது. 
        அதன் அடிப்படையில், தேவையுள்ள பள்ளிகளுக்கு ஆசிரியர்களை மாற்றுவதற்காக, கலந்தாய்வு நடத்தப்படுகிறது. பள்ளிக்கல்வி இயக்கத்தின்கீழ் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியருக்கு, 13ம் தேதி துவங்கி, 30ம் தேதி வரையும்; தொடக்கக் கல்வித் துறையின்கீழ் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியருக்கு, 21ம் தேதி துவங்கி, 31ம் தேதி வரையும், பணி நிரவல் (கூடுதல் ஆசிரியர் பணியிட மாற்றம்) மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடக்கிறது.

அரசுப் பணியாளர் காப்பீட்டுத் திட்டத்தில் மேலும் 61 மருத்துவச் சிகிச்சைகளை சேர்த்தும், வீடு கட்டும் திட்டத்திற்கான, முன்பண உச்ச வரம்பை உயர்த்தியும், முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

தமிழக அரசின் செய்திக்குறிப்பு:
தற்போது அதிகரித்து வரும் கட்டுமானப் பொருட்களின் விலையேற்றத்தை கருத்தில் கொண்டு, கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் அரசு ஊழியர்களுக்காக வழங்கப்படும், வீடு கட்டும் முன்பணக் கடன் உச்ச வரம்பு, 15 லட்சத்தில் இருந்து 25 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட் டது. அகில இந்திய பணி அலுவலர்களுக்கான வீடு கட்டும் முன்பண உச்சவரம்பு 25 லட்சத்தில் இருந்து 40 லட்சம் ரூபாயாக உயர்த்தி, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

அரசுப் பணியாளர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை மேம்படுத்தி, வரும் நான்கு ஆண்டுகளுக்கு, அதாவது இன்று முதல் வரும் 2016ம் ஆண்டு ஜூலை 30ம் தேதி வரை நீட்டித்து, மத்திய அரசின் பொதுத் துறை
நிறுவனமான, "யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ்" நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தவும் உத்தரவிட்டார். இதை மேம்படுத்த, மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில், ஏற்கனவே ஒப்பளிக்கப்பட்ட 52 மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சைகளுடன், கூடுதலாக 61 மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 113 மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கு இத்திட்டத்தின் கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன.

மேலும், ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச மருத்துவக் காப்பீட்டு நிதியானது இரண்டு லட்சத்தில் இருந்து நான்கு லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அளவிற்குட்பட்டு எத்தனை முறை வேண்டுமானாலும், அரசு ஊழியர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். இத்திட்டத்தின் கீழ், அரசு பணியாளர்கள், சத்துணவு அமைப்பாளர்கள் உள்ளிட்ட 13 லட்சத்து 50 ஆயிரம் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பயன் பெறுவர்.