பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

11/29/2012

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் நாளை உலக படிக்கும் நாள்

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் நாளை உலக படிக்கும் நாள்
கடைப்பிடிக்க வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த நாளில்
பாடத்தை தவிர்த்து பொது அறிவு நூல்கள், பத்திரிக்கைகள், முக்கிய அரசியல்
கட்சி தலைவர்கள் குறித்த பாடங்களை படிக்க செய்ய வேண்டும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக வேல்டு டே நவம்பர் மாதம் 30ம் தேதி
கொண்டாடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தமட்டில் உலக
வேல்டு டே இதுவரை கொண்டாடியதாக தெரியவில்லை என்று கூறப்படுகிறது. உலக
படிக்கும் நாள் (வேல்டு ரீடிங் டே) தமிழகத்தில் இந்த ஆண்டு நாளை கொண்டாட
கல்வித்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக அனைத்து மாவட்ட
முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், மாவட்ட தொடக்க கல்வி
அதிகாரிகள் ஆகியோருக்கு கல்வித்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் நாளை (30ம் தேதி) உலக படிக்கும் நாள் பள்ளிகளில் கண்டிப்பாக கொண்டாட
வேண்டும். இதன்படி நாளை அனைத்து பள்ளிகளிலும் பாடங்களை தவிர பொது அறிவு
நூல்கள், கலை, இலக்கியம் சம்பந்தமான புத்தகங்கள், அறிவியல், கம்ப்யூட்டர்
சம்பந்தமான புத்தகங்கள், முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் பற்றிய
விபரங்கள், பழைய வரலாறுகள் உள்ளிட்ட தகவல் அடங்கிய புத்தகங்களை மாணவ,
மாணவிகள் வாசிக்க செய்ய வேண்டும். அதோடு நாளைய தமிழ் மற்றும் ஆங்கில தினசரி
பேப்பர்களை படிக்க செய்ய வேண்டும். கண்டிப்பாக பாடம் அல்லாத புத்தகங்களை
மாணவ, மாணவிகளை கண்டிப்பாக வாசிக்க செய்து உலக படிக்கும் நாளை கல்வித்துறை
அனைத்து பள்ளிகளிலும் கடைப்பிடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் வேல்டு ரீடிங் டே
குறித்த விபரத்தை முதன்மை கல்வி அதிகாரி ராமச்சந்திரன் தெரிவித்து
பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு பாடம் அல்லாத பொது அறிவு நூல்கள் உள்ளிட்ட
புத்தகங்களை வாசிக்க செய்ய வேண்டும். இது சம்பந்தமான நடந்த நிகழ்ச்சியை
போட்டோவுடன் முதன்மை கல்வி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று
தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து நாளை மறுநாள் (1ம் தேதி) அனைத்து
பள்ளிகளிலும் எய்ட்ஸ் ஒழிப்பு தினம் கொண்டாட வேண்டும் என்றும், எய்ட்ஸ்
நோய் சம்பந்தப்பட்ட தகவல்கள், அந்த நோய் எப்படி வருகிறது, அந்த நோயாளிகளை
சமுதாயத்தில் எப்படி பார்த்து கொள்ள வேண்டும். சிகிச்சை முறைகள் உள்ளிட்ட
விபரங்களை மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அரசு
உத்தரவிட்டுள்ளது.
இதனால் நாளையும், நாளை மறுநாளும் பள்ளிகளிலும்
பாடத்தை தவிர்த்து இது போன்ற நிகழ்ச்சிகள் நடக்கும் வாய்ப்பு
ஏற்பட்டிருப்பதாகவும், தமிழகத்தில் முதல் முதலாக கல்வித்துறை சார்பில் நாளை
தான் உலக படிக்கும் நாள் கொண்டாடப்படுவதாகவும், இதற்கு முன்னர் இதுபோன்று
கொண்டாட வில்லை என்று கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

முப்பருவ கல்வி முறை திட்டம் : டிச., 7ம் தேதி கடைசி நாள்

முப்பருவ கல்வி முறை திட்டத்தின் அடிப்படையில் தயார் செய்யப்பட்ட புத்தகங்களை, ஒப்புதல் பெற, வரும், டிச., 7 கடைசி நாளாகும். இதுகுறித்து, மாநில பொதுபள்ளி கல்வி வாரியம் மற்றும் பள்ளி கல்வி இயக்குனர் தலைவர் வெளியிட்ட அறிக்கை: மாநில பொதுப் பள்ளி கல்வி வாரியத்தால் ஒப்புதல் வழங்கப்பட்ட, மூன்றாம் பருவ பாடத்திட்டத்தின் அடிப்படையில், 1 முதல் 8 வகுப்புகளுக்கு, தமிழ் பாடம் நீங்கலாக, இதர பாடப் புத்தகங்களை, முப்பருவ கல்வி முறை திட்டத்தின் அடிப்படையில், தயார் செய்யப்பட்ட புத்தகங்களுக்கு ஒப்புதல் பெற விரும்புவோர், பாடப் புத்தகங்களின், இரண்டு நகல்களை, "உறுப்பினர் - செயலர் மாநில பொதுப் பள்ளி கல்வி வாரியம் மற்றும் பள்ளி கல்வி இணை இயக்குனர் (இடைநிலைக் கல்வி), கல்லூரி சாலை, சென்னை-6' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவேண்டும். பாடப் புத்தகங்கள், மல்டி கலரிலும், ஏ4 அளவிலும், 80 ஜி.எஸ்.எம்., ஹைடெக் மப்லித்தோ பேப்பரிலும், சிடிபி பிரின்டிங்கிலும், 200 ஜி.எஸ்.எம்., வர்ஜின் கேட்டெட் போர்டு அட்டையும் இருக்க வேண்டும். ஒவ்வொரு பாடப் புத்தகத்தின் தோராய விலை குறிப்பிட வேண்டும்.
1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு தமிழ் பாடம் நீங்கலாக இதர பாடப் புத்தகங்கள் அனுப்பி வைக்க வேண்டும். வரைவு பாடப்புத்தகங்களுக்கு ஒப்புதல் அளிப்பது மாநில கல்வி வாரியத்தின் இறுதி முடிவுக்குட்பட்டது. 7ம் தேதி மாலை, 5:00 மணிக்குள் அனுப்பப்பட வேண்டும். முப்பருவ முறை திட்டத்தின் கீழ், 2012-13ம் கல்வி ஆண்டில், 1 முதல் 8ம் வகுப்புகள் வரை, இறுதி செய்யப்பட்ட, மூன்றாம் பருவ பாடத்திட்டம் மாநில பொதுப்பள்ளி கல்வி வாரியத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டு பெற்றோர், மாணவர், பள்ளிகள் மற்றும் பொது மக்கள் பார்வைக்காக இணைய தளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

Dearness Allowance from January 2013 for Central Government Employees and Pensioners


Dearness Allowance for Central Government employees will be estimated twice in a year based on the movements in the AICPI for Industrial workers. The Fifth Central Pay Commission had adopted the AICPI (IW) using the 1982 series for estimation of DA. The Government has developed a new series with base 2001, with effect from January 2006. It is possible to generate the back data series with base 2001, with the help of the stipulated linking factor of 4.63. The 2001 series has an extended coverage of 78 centers compared to the 70 centers in the 1982 series. The Commission, therefore, recommends that the AICPI (IW) with base 2001 may, henceforth, be used for the purpose of calculating DA till it gets revised. The base year should be revised as frequently as feasible. So with the base of 2001=100 the AICPI Number for Industrial Workers has been arrived every month.
So the past twelve months (starting from January 2012 to December 2012) AICPIN –IW average has to be worked out to find the Rate of Dearness Allowance to be paid from January 2013 to the Central government employees using the following formula
Dearness Allowance with effect from January 2013 = (Average of AICPI-IW for the last 12 months( from
Jan 2012 to Dec 2012) – 115.76)X100/115.76
AICPIN – IW  from January 2012 released by Labour Bureau ,Government  of  India
Month & YearAICPI Number for Industrial Workers
January 2012198
February 2012199
March  2012201
April 2012205
May 2012206
June 2012208
July 2012212
August 2012214
September 2012215
October 2012To be released
November 2012To be released
December 2012To be released

     We can assume with the above data that the AICPI Number for Industrial Workers for the remaining three months will be around 215 only, as there is no any abnormal fluctuation in AICPI for the last three months .

If it is so, the expected Dearness Allowance likely to be paid with effect from January 2013 will be 80%

Private Schools Fee Determination Committee


Fee fixed for the year 2012-2015 - Court cases - Part II -District wise Particulars

Justice Thiru S.R Singaravelu,
Chairman, Private Schools Fee Determination Committee, Chennai - 600 006.

COMMON SYLLABUS

11/26/2012

சிவகங்கையில் மாவட்ட பொதுக்குழு மற்றும் கருத்தரங்கம்


தலைமை: ஆ.முத்துப்பாண்டியன் மாவட்டத்தலைவர்

முன்னிலை: திரு.ஜோசப் ரொஸ், மாநிலத்துணைத்தலைவர்
                            திரு. க.பாஸ்கரன், மாநில செயற்குழு உறுப்பினர்

வரவேற்புரை: ஆ.தாமஸ் அமலநாதன், மாவட்டச்செயலாளர்

வாழ்த்துரை: திரு.முத்துச்சாமி, முன்னாள் மாவட்டச்செயலாளர்
                         திரு.வெ.நீலமேகம், முன்னாள் மாநிலத்துனைத்தலைவர்

நன்றியுரை: சிங்கராயர், மாவட்டப்பொருளாளர்

சிறப்புரை:  சங்க வரலாறு - திரு.கண்ணன், மாநிலத்தலைவர்

           எதிர்காலச்சவால்கள் -திரு.முருக.செல்வராசன்,   மாநிலப்பொதுச்செயலாளர்.

பங்கேற்ற அனைவருக்கும் மாவட்டக்கிளையின் சார்பாக நன்றி

Pension Fund Regulatory and Development Authority (PFRDA) Bill-2011


The Pension Fund Regulatory and Development Authority Bill, 2005 was initially introduced in Lok Sabha in March, 2005 to provide for a statutory PFRDA. However, since the Bill and the official amendments, based on the recommendations of the Standing Committee on Finance, could not be considered by the Lok Sabha, the Bill lapsed on dissolution of the 14th Lok Sabha.
The Government has announced in the Budget 2011-12 that the revised PFRDA Bill would be moved in the Parliament. Accordingly, PFRDA Bill, 2011 was introduced in Lok Sabha on the 24th March, 2011 to provide for a statutory regulatory body the Pension Fund Regulatory and Development Authority (PFRDA) under the provisions of the Bill. The legislation sought to empower PFRDA to regulate the New Pension System (NPS). The PFRDA Bill, 2011 was referred to the Standing Committee on Finance on the 29th March, 2011 for examination and report thereon. The Standing Committee on Finance gave its Report on 30th August, 2011.
The Government decided to accept the recommendations of the Standing Committee on Finance. Based on the recommendations of the Standing Committee, the official amendments to the PFRDA Bill-2011 a proposal to move these additional official amendments in the ensuing session of the Parliament, was approved by the Union Cabinet in its meeting held on 4th October, 2012.
The PFRDA Bill, 2011, inter alia, provides for:
(i) Establishing a statutory Pension Fund Regulatory and Development Authority (PFRDA):
(a) to promote old age income security by establishing, developing and regulating pension funds;
(b) to protect the interests of subscribers to various schemes of pension funds.
(ii) Empowering PFRDA to :
(a) regulate the New Pension System and other pension schemes not covered under any other Act;
(b) register and regulate pension funds and the central recordkeeping agency;
(c) frame investment guidelines for pension funds;
(d) levy monetary penalties for violations of various provisions of the PFRDA Act;
(iii) Imprisonment upto 10 years by courts for contravention of the PFRDA Act, etc. or fine upto Rs. 25 crore or both; and
(iv) Subjecting subordinate legislation to Parliamentary scrutiny.
Source: www.financialservices.gov.in
[http://financialservices.gov.in/PFRDA%20Bill_2011.pdf]

11/23/2012

G.O.385 Dated 2.11.12

பள்ளிக் கல்வி - ஆசிரியர்களுக்கு சேரவேண்டிய பண, பணி மற்றும் இதரப்பலன்களை உரிய நேரத்தில் பெற அவர்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க அனைத்து கல்வி அலுவலகங்களிலும் சிறப்பு - ஆசிரியர் குறைதீர்க்கும் முகாம் திட்டத்தை அறிமுகப்படுத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
NEW

21.11.12 அன்று 7 அம்ச கோரிக்கை ஆர்ப்பாட்டம் - சிங்கம்புணரி

DSC_0473.JPG

DSC_0475.JPG

DSC_0476.JPG

11/21/2012

NAGAI DEEO-PA SUSPEND -DINAKARAN PETER MAMA NEWS

IGNOU

பகிர்தல்

கடந்த 28 நாட்களாக செயல் இழந்த என்னுடைய இணைப்பை சரிசெய்யவில்லை. பல முறை தொலைபேசி வழியாகவும் நேரடியாகவும் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. தனியார் நிறுவனங்கள் போட்டிபோட்டுக்கொண்டு பலவித வசதிகளை அளிக்கும் நிலையில் அரசு நிறுவனத்தின் அவலநிலையை நினைத்தால் கேவலமாக இருக்கிறது. 

11/20/2012

ஆசிரியர் பணி நியமனத்தில் முறைகேடு? மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், நேர்முக உதவியாளர் பணியிடை நீக்கம்


நாகை மாவட்டத்தில், ஆசிரியர் பணி நியமனத்தில் எழுந்த முறைகேடு புகாரைத் தொடர்ந்து அம் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் எஸ். மார்த்தாள் பிரபாவதி, அவரது நேர்முக உதவியாளர் வை. திருவள்ளுவன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 5 பேரை பணி நியமனம் செய்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் எஸ். மார்த்தாள் பிரபாவதி உத்தரவிட்டார். பணியேற்ற 5 பேரில் 2 பேர் முழு ஊதியம் பெற்றுள்ளனர். 3 பேரின் ஊதியம், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களின் ஆட்சேபனையால் இதுவரை வழங்கப்படவில்லை. கடந்த வியாழக்கிழமை சென்னையில் பள்ளிக் கல்வித் துறை செயலாளர் தலைமையில் அனைத்து மாவட்ட கல்வித் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில், நாகை உள்பட சில மாவட்டங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களும் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இந் நிலையில், நாகை மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் எஸ். மார்த்தாள் பிரபாவதி வெள்ளிக்கிழமையும், அவரது நேர்முக உதவியாளர் வை. திருவள்ளுவனை சனிக்கிழமையும் பணியிடை நீக்கம் செய்து பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

அரசு விடுமுறை நாட்கள் - 2013

11/14/2012

அறிவிப்பு

கடந்த வாரம் சிவகங்கை மாவட்டத்தில் அரசின் அனுமதி மறுக்கப்பட்டு ஒத்தி வைக்கப்பட்ட 7அம்ச கோரிக்கை ஆர்ப்பாட்டம் வருகிற 21.11.2012 அன்று நடத்துமாறு சிவங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வட்டாரச்செயலாளர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

காவலர், துப்புரவு பணியாளர் பணிக்கு 3,640 பேர் தேர்வு

அரசுப் பள்ளிகளில் பணிபுரிய, காவலர்கள், 1,470 பேர் மற்றும் துப்புரவு பணியாளர்கள், 2,170 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியல், தமிழக அரசு இணையதளத்தில்  நேற்று வெளியிடப்பட்டன. அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், காவலர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களை நியமனம் செய்வது தொடர்பான அறிவிப்பு, ஏற்கனவே வெளியாகி இருந்தது. வேலை வாய்ப்பு பதிவு அடிப்படையில், இவர்கள் அனைவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்
இதுகுறித்து, கல்வித்துறை வட்டாரங்கள் கூறுகையில்,""இரு பணிகளுக்கும், குறிப்பிட்ட கல்வித்தகுதி நிர்ணயிக்கப்படவில்லை. வேலை வாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில், அனைவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சிலர், 5ம் வகுப்பு படித்துள்ளனர். சிலர், 7ம் வகுப்பு படித்துள்ளனர். இவர்கள், விரைவில், பணி நியமனம் செய்யப்படுவர்'' என, தெரிவித்தன. சம்பளமாக, 10 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும் என தெரிகிறது.

குழந்தைகள் தின விழா அரசாணை

11/09/2012

வருந்துகிறேன்

எனது வீட்டின் இணையதள இணைப்பு பழுதடைந்துள்ளது. அதனால் என்னால் பதிவுகள் மற்றும் குறுந்தகவல் சேவை அளிக்க இயலவில்லை. முகநூல் நண்பர்களிடமும் தொடர்புகொள்ள இயலவில்லை. இயலாமைக்கு வருந்துகிறேன். தொலைதொடர்புதுறையில் உள்ள சேவை குறைபாட்டினால் 15 தினங்களாக சரிசெய்யபடவில்லை.



தீபாவளி முன்பணம் உயர்வு

Award of cash incentive to the Government employees who have rendered 25 years of unblemished service - Orders Issued

Fee fixed for the year 2012-2015 - Court cases

Justice Thiru S.R Singaravelu,
Chairman, Private Schools Fee Determination Committee, Chennai - 600 006.

District wise Particulars (CLICK)

அரசு ஊழியர்கள் நீதிமன்ற வளாகத்தில் நுழைய கட்டுபாடு- அரசாணை வெளியீடு

முப்பருவ கல்வி மற்றும் தொடர் மதிப்பீட்டு முறை திட்டத்தை, அடுத்த கல்வியாண்டில் (2013 - 14) ஒன்பதாம் வகுப்பிற்கும், அதற்கு அடுத்த கல்வியாண்டில், 10ம் வகுப்பிற்கும் நீட்டிப்பு செய்ய, தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சிவபதி கூறியுள்ளார்.


முப்பருவ கல்வி மற்றும் தொடர் மதிப்பீட்டு முறை திட்டம், அடுத்த கல்வியாண்டில், ஒன்பதாம் வகுப்பிற்கு நீட்டிப்பு செய்ய, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது,'' என, பள்ளிக்கல்வி அமைச்சர் சிவபதி கூறினார்.கல்விக்கான மத்திய ஆலோசனை வாரியத்தின் கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது. இதில், பள்ளிக்கல்வி அமைச்சர் சிவபதி பேசியதாவது:கல்வி மேம்பாட்டிற்காக, தமிழக முதல்வர், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டம் தொடர்பாக, 15 அரசாணைகள் வெளியிடப்பட்டு, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.முப்பருவ கல்வி மற்றும் தொடர் மதிப்பீட்டு முறை திட்டத்தை, அடுத்த கல்வியாண்டில் (2013 - 14) ஒன்பதாம் வகுப்பிற்கும், அதற்கு அடுத்த கல்வியாண்டில், 10ம் வகுப்பிற்கும் நீட்டிப்பு செய்ய, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.இவ்வாறு அமைச்சர் சிவபதி பேசினார்.

பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவில், 13 வகை கலவை சாதங்கள்


பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவில், 13 வகை கலவை சாதங்கள், முட்டையில் நான்கு வகை மசாலா உணவுகள் அறிமுகப் படுத்தப் படுவதாக, முதல்வர் ஜெயலலிதா, சட்டசபையில் அறிவித்தார். அறிக்கையில் ஜெயலலிதா கூறியிருப்பதாவது:

சத்துணவு திட்டத்தை, காலத்திற்கு ஏற்ப மாற்றவும், குழந்தைகளின் விருப்பத்திற்கு ஏற்ப, உணவு முறையில் மாற்றம் ஏற்படுத்தவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. புதிய உணவு முறை குறித்து, சமையற் கலைஞர்கள், ஊட்டச் சத்து நிபுணர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டது.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மாநகராட்சி பள்ளி மற்றும் ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட அந்தநல்லூர் ஊராட்சி பள்ளியிலும், சோதனை முறையில்,கொண்டைக்கடலை புலவு சாதம் மற்றும் மிளகுத்தூள் கலந்த முட்டை தயாரித்து, பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. இதை, பள்ளிக் குழந்தைகள் விரும்பி உண்பது கண்டறியப்
பட்டதால், 13 வகை கலவை சாதங்கள், முட்டையில் நான்கு வகை மசாலாக்களை, சமையல் நிபுணர்கள் தயாரித்து, விளக்கம் செய்து காட்டினர். இதன் அடிப்படையில், புதிய உணவு வகைகளை, சத்துணவு திட்டத்தில் படிப்படியாக அறிமுகம் செய்ய, அரசுமுடிவெடுத்துள்ளது.

இந்த புதிய உணவு வகைத் திட்டம், ஒவ்வொரு மாவட்டத்திலும், முதலில் ஒரு பகுதியில் மட்டும், முன்னோடி திட்டமாக அறிமுகப்படுத்தப்படும்; அந்த பகுதியில், இந்த புதிய உணவு முறை திட்டத்தின் செயல்பாடு குறித்து அறிந்த பின், மற்ற வட்டாரங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.


11/06/2012

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு கொண்டு செல்லும் ஆவணங்கள்!

ஆசிரியர் தகுதி தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வில் 19 ஆயிரத்து 246 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் சான்றிதழ் சரிபார்த்தல் 6–ந்தேதி தொடங்குகிறது. ஆசிரியர் தகுதி தேர்வு இந்தியா முழுவதும் புதிதாக ஆசிரியர் பணியில் சேர்வதற்கு அவர்கள் பி.எட்.படித்திருந்தாலும், இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்திருந்தாலும் அந்தந்த மாநில அரசு நடத்தும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் என்று மத்திய அரசு சட்டம் கொண்டுவந்தது.
அதன்படி தமிழ்நாட்டில் கடந்த ஜூலை 12–ந்தேதி ஆசிரியர் தகுதி தேர்வு, முதல் முதலாக நடத்தப்பட்டது. இதில் 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் ஆர்வத்துடன் தேர்வு எழுதினார்கள். ஆனால் அவர்களில் 2ஆயிரத்து 500 பேர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இது தேர்வு எழுதியவர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை தந்தது.எதனால் இந்த அளவுக்கு தேர்ச்சி விகிதம் குறைந்தது என்று விசாரித்ததில் அவர்களுக்கு கேட்கப்பட்ட கேள்விகளும் மிகக்கடினமாக இருந்தன. தேர்வு எழுதவும் 1½ மணிநேரம் போதவில்லை என்று தெரிந்தது.

தேர்வு முடிவு வெளியீடு
இதைத்தொடர்ந்து மீண்டும் ஆசிரியர் தகுதித்தேர்வு, கடந்த அக்டோபர் 14–ந்தேதி நடத்தப்பட்டது. ஏற்கனவே தேர்வு எழுதியவர்கள் இந்த தேர்வை எழுதினால் அவர்கள் தேர்வு கட்டணம் கட்டவேண்டியதில்லை என்று கூறி தேர்வு நடத்தப்பட்டது.அந்த தேர்வில் இடை நிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு தாள்–1 என்றும் பி.எட். படித்தவர்களுக்கு 2–வதுதாள் என்றும் குறிப்பிடப்பட்டது.தாள்–1 தேர்வை 2 லட்சத்து 78ஆயிரத்து 725 பேர்களும், 2–வது தாள் தேர்வை 3 லட்சத்து 77 ஆயிரத்து 973 பேர்களும் எழுதினார்கள். அதாவது மொத்தம் 6 லட்சத்து 56 ஆயிரத்து 698 பேர் எழுதினார்கள். அந்ததேர்வுகளின் முடிவு நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

19 ஆயிரம் பேர் தேர்ச்சி
முதல் தாளில் 10 ஆயிரத்து 397 பேர்களும், 2–வது தாளில் 8ஆயிரத்து 849 பேர்களும் 60 சதவீத மார்க்கும் அதற்கு மேலும் எடுத்து தேர்ச்சிபெற்றுள்ளனர். மொத்தத்தில் 19ஆயிரத்து 246 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.பட்டதாரி ஆசிரியர்களுக்கு காலிப்பணியிடங்கள் 18 ஆயிரம் உள்ளது. அதனால் தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் 8849 பேர் மட்டுமே உள்ளதால் இவர்கள் அனைவருக்கும் வேலை கிடைக்கும். அதே நேரத்தில் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் 7 ஆயிரத்து 500 மட்டுமே உள்ளதால் தேர்ச்சி பெற்ற இடை நிலை ஆசிரியர்களில் பெரும்பாலானவர்களுக்கு வேலை கிடைக்கும்.வேலைக்காக சான்றிதழ் சரிபார்ப்பு 6–ந்தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் நடக்க உள்ளது. அவர்களுக்கு அழைப்புக்கடிதம் எதுவும் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் இருந்து அனுப்பப்பட வில்லை. அவர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிட்டுள்ள அழைப்பு கடிதத்தை பதிவிறக்கம் செய்து சான்றிதழ் சரிபார்த்தலில் கலந்துகொள்ளவேண்டும்.

சான்றொப்பம் இட்ட சான்றிதழ் ஜெராக்ஸ்
சான்றிதழ் சரிபார்க்க வரும்போது அனைத்து ஒரிஜினல் சான்றிதழ்களும், அந்த சான்றிதழ்களின் 2 ஜெராக்ஸ் காப்பிகளும் சான்றொப்பம் இட்டபடி(அட்டஸ்டடு காப்பி) கொண்டுவரவேண்டும்.இடை நிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் (முதல்தாள் எழுதி தேர்ச்சிபெற்றவர்கள்) மேற்கண்ட சான்றிதழ்களுடன் மாவட்ட வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அட்டையையும் கொண்டுவரவேண்டும். மேலும் வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அட்டையின் ஜெராக்ஸ் எடுத்து மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரியிடம் சான்றொப்பம் பெற்று 2 காப்பி கொண்டுவரவேண்டும்.

இதுதொடர்பாக அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரிகளுக்கும் வேலைவாய்ப்பு இயக்குனகம் உரிய அறிவுரை வழங்கி உள்ளது.இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரியிடம் கேட்டதற்கு தேர்வு முடிவு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் நேற்று நள்ளிரவு அல்லது இன்று (சனிக்கிழமை) காலை கண்டிப்பாக தெரிந்துகொள்ளலாம் என்றனர்.

ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

ஆசிரியர் தகுதிதேர்வுக்கு உரிய தற்காலிக கீ ஆன்சர் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் முதலில் வெளியிடப்பட்டது. பின்னர் ஆன்சர் குறித்த கருத்துக்கள் வரவேற்கப்பட்டன. அதற்கு கால அவகாசம் ஓரு வாரம் கொடுக்கப்பட்டது.பின்னர் அனைத்து கருத்துக்களும் பெறப்பட்டு, பின்னர் பாட ரீதியாக நிபுணர்களை அழைத்து அவர்கள் தந்த ஆன்சர் கொண்டு விடைத்தாள்(ஓ.எம்.ஆர்.ஷீட்) மதிப்பீடு செய்யப்பட்டு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

தவறுகள்
ஏராளமானவர்கள் ஒ.எம்.ஆர்.ஷீட்டில் (விடைத்தாளில்) விடையை கட்டத்திற்குள் சரியாக அடிக்கவில்லை. பல தவறுகளை செய்திருந்தனர். வினாத்தாளில் உள்ள சீரியல் எண்ணை விடைத்தாளில் குறிப்பிடவில்லை. அப்படிப்பட்ட விடைத்தாள்களை மதிப்பீடு செய்யாமல் தள்ளுபடி செய்துவிட்டோம். பலர் பழைய தேர்வு எண்ணை குறிப்பிட்டு இருந்தனர். இருப்பினும் அவர்களின் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டன.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

ஆசிரியர்களின் குறைகளை தீர்க்க சிறப்பு முகாம்

ஆசிரியர்களின் ஊதியம், தேர்வு நிலை, பதவி உயர்வு உள்ளிட்ட உரிமைகள் மற்றும் சலுகைகளை பெறுவதில் உள்ள சிரமங்களை போக்க, சிறப்பு ஆசிரியர் குறை தீர்க்கும் முகாம் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித்துறையின் கீழ், பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள், தங்களுக்கு சேர வேண்டிய ஊதிய உயர்வு, தேர்வு நிலை, சிறப்பு நிலை, பதவி உயர்வு மற்றும் இதர உரிமைகள், சலுகைகள் பெறுவதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

எனவே, ஆசிரியர்களின் பண, பணி மற்றும் இதர பலன்கள் உடனுக்குடன் கிடைக்கும் வகையிலும், அனைத்து கல்வி அலுவலகங்களிலும், சிறப்பு குறை தீர்க்கும் முகாம் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று, பள்ளிக் கல்வி இயக்குனர், அரசிற்கு கடிதம் எழுதினார்.இதை, தமிழக அரசு, சிறப்பு ஆசிரியர் குறை தீர்க்கும் முகாம் திட்டத்தை அறிமுகப்படுத்த முடிவெடுத்து, இதற்கான அரசாணையையும் வெளியிட்டுள்ளது. இதற்கான, நடைமுறைகளையும் வெளியிட்டுள்ளது.

இதன்படி, ஒவ்வொரு மாதமும், முதல் சனிக்கிழமையில், தொடக்க கல்வித்துறை சார்ந்த ஆசிரியர்களுக்கு, உதவி தொடக்க கல்வி அலுவலகத்திலும்; அனைத்து உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு, மாவட்ட கல்வி அலுவலகங்களிலும் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடக்கும். இதில் பெறப்படும் மனுக்களை, பரிசீலித்து உடன் நடவடிக்கை எடுத்து உரிய உத்தரவு வழங்கப்பட வேண்டும்.

இரண்டாம் சனிக்கிழமைகளில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நடக்கும் சிறப்பு முகாமில், தொடக்க கல்வி, மாவட்ட கல்வி அலுவலரிடம் இருந்து பெறப்படும் மனுக்களை பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுத்து உத்தரவு வழங்கப்பட வேண்டும்.

மூன்றாம் சனிக்கிழமைகளில், தொடக்க பள்ளி கல்வி இயக்ககங்களில் நடக்கும் சிறப்பு குறை தீர்க்கும் முகாமில், மாவட்ட தொடக்க கல்வி மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது. முகாமில், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் வரமுடியாவிட்டால், அவரின் நெருங்கிய உறவினர்கள் பங்கேற்கலாம்.