பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

6/21/2013

பட்டதாரி பதவி உயர்வு கனவு தகர்ந்தது.

2013-14ம் கல்வி ஆண்டில் தொடக்கக்கல்வி துறையில் பட்டதாரி பதவி உயர்வு கவுன்சிலிங் இல்லை என தொடக்கக்கல்விஇயக்குநர்  திட்டவட்டமாக அறிவித்துள்ளதாக நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன . ஏனென்றால் 2011-12ம் கல்வி ஆண்டில் TRBயிடம் இருந்து பெறப்பட'ட 1623(GO 170) பணியிடங்களை திரும்ப ஒப்படைக்க வேண்டியுள்ளதால் பதவி உயர்வு நடக்க வாய்ப்பில்லை என உறுதி. இதனால் பதவி உயர்வு வேண்டி காத்திருக்கும் ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

6/19/2013

அறிவிப்பு

ஆசிரியர் நலன் சார்ந்த பிரச்சணைகளை பற்றி விவாதிப்பதற்கு நமது இயக்க பொறுப்பாளர்கள் (TNPTF) வருகிற வெள்ளிக்கிழமை (21.6.13)தொடக்கக்கல்வி இயக்குநர் உள்பட உயர் கல்வி அதிகாரிகளை சந்திக்க உள்ளனர்.

ஆசிரியர் தகுதித்தேர்வு: எந்தெந்த பட்டப்படிப்புகள், இணையான கல்வித்தகுதி கொண்டவை? ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு


       ஆசிரியர் தகுதித்தேர்வில் எந்தெந்த பட்டப்படிப்புகள் இணையான கல்வித்தகுதி கொண்டவை? என்ற பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:–

தமிழ்–ஆங்கிலம்

பி.ஏ. தமிழ் – பி.ஏ. பயன்பாட்டு தமிழ் (திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம்), பி.ஏ. கம்ப்யூட்டர் பயன்பாட்டுடன் தமிழ் (நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம்)
 
        பி.ஏ. ஆங்கிலம் – பி.ஏ. கம்யூனிகேஷன் இங்கிலீஷ் (மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்), பி.ஏ. கம்ப்யூட்டர் பயன்பாட்டுடன் ஆங்கிலம், பி.ஏ. பங்ஷனல் இங்கிலீஷ், பி.ஏ. சிறப்பு ஆங்கிலம், பி.ஏ. ஆங்கிலம் (தொழிற்கல்வி) (காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம்)

கணிதம்–இயற்பியல்

பி.எஸ்சி. கணிதம் – பி.எஸ்சி. புள்ளியியல், பி.எஸ்சி. கணிதம் (கம்ப்யூட்டர் பயன்பாடு)

பி.எஸ்சி. இயற்பியல் – பி.எஸ்சி. இண்டஸ்ட்ரியல் எலெக்ட்ரானிக்ஸ் (பாரதிதாசன் பல்கலைக்கழகம்), பி.எட். படிப்பில் இயற்பியல் படித்திருக்க வேண்டியது கட்டாயம், பி.எஸ்சி. இயற்பியல் (சி.ஏ.) (கோவை பாரதியார் பல்கலைக்கழகம்), பி.எஸ்சி. இயற்பியல் (இன்ஸ்ட்ருமென்டேஷன் டிப்ளமோ கட்டாயம்) (பாரதியார் பல்கலைக்கழகம்)

தாவரவியல்–விலங்கியல்

பி.எஸ்சி. தாவரவியல் – ஒருங்கிணைந்த 5 ஆண்டு எம்.எஸ்சி, லைப் சயின்ஸ் பட்டம் (பிளான்ட் சயின்ஸ், மைக்ரோ–பயாலஜி, பயோ–டெக்னாலஜி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று சிறப்பு பாடம்) (பாரதிதாசன் பல்கலைக்கழகம்), பி.எஸ்சி. பிளான்ட் பயோ–டெக்னாலஜி (சென்னை பல்கலைக்கழகம்), பி.எஸ்சி. சுற்றுச்சூழல் உயிரியல் (மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்), பி.எஸ்சி. பிளான்ட் பயாலஜி, பயோ–டெக்னாலஜி (பாரதியார் பல்கலைக்கழகம்)

பி.எஸ்சி. விலங்கியல் – ஒருங்கிணைந்த 5 ஆண்டு எம்.எஸ்சி. லைப் சயின்ஸ் பட்டம் (அனிமல் சயின்ஸ் சிறப்பு பாடம்) (பாரதிதாசன் பல்கலைக்கழகம்), பி.எஸ்சி சுற்றுச்சூழல் விலங்கியல் (சென்னை பல்கலைக்கழகம் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகம்)

வரலாறு
பி.ஏ. வரலாறு – பி.ஏ. வரலாறு மற்றும் சுற்றுலா (பாரதியார் பல்கலைக்கழகம்)

மேற்கண்ட பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

தகுதித்தேர்வு விண்ணப்பத்தை எந்த மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்திலும் சமர்ப்பிக்கலாம் ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி அறிவிப்பு

தகுதித்தேர்வு விண்ணப்பத்தை எங்கு வாங்கியிருந்தாலும் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை எந்த மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்திலும் சமர்ப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் அறிவொளி தெரிவித்தார்.

தகுதித்தேர்வு விண்ணப்பம்
 
         ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான விண்ணப்ப படிவங்கள் கடந்த 17–ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் வழங்கப்பட்டு வருகின்றன. இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் போட்டிப்போட்டு விண்ணப்பங்களை வாங்கிய வண்ணம் உள்ளனர்.
 
           விண்ணப்ப படிவத்தின் விலை ரூ.50 ஆகும். தேர்வுக் கட்டணம் ரூ.500. ஆதி திராவிடர்கள், பழங்குடியின வகுப்பினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு ரூ.250 மட்டும். தேர்வு கட்டணத்தை விண்ணப்பத்துடன் கொடுக்கப்படும் செலான் மூலம் பாரத ஸ்டேட் வங்கி கிளையிலோ அல்லது இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிலோ அல்லது கனரா வங்கியிலோ செலுத்தலாம்.
எந்த அலுவலகத்திலும் கொடுக்கலாமா?
 
          விண்ணப்பத்தை சமர்ப்பிக்க மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்திற்குச் செல்லும்போது விண்ணப்பத்தின் ஜெராக்ஸ் நகலையும் வைத்துக்கொள்ள வேண்டும். கையெழுத்திடப்பட்டு கொடுக்கப்படும் அந்த ஜெராக்ஸ் பிரதி தான் ஒப்புகைச்சீட்டாக கருதப்படும்.
 
         இதற்கிடையே, விண்ணப்பம் வாங்கிய பள்ளியின் அதிகார எல்லைக்குள் உள்ள மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்தில் (டி.இ.ஓ. ஆபீஸ்) மட்டும்தான் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டுமா? அல்லது எந்த டி.இ.ஓ. அலுவலகத்திலும் சமர்ப்பிக்கலாமா? என்ற கேள்வி ஒருசில விண்ணப்பதாரர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
 
ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி பதில்
 
            காரணம் சில விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தை எங்கேயாவது ஒரு பள்ளியில் வாங்கி இருப்பார்கள். அவர்களின் வீடு வேறு மாவட்டத்தில் இருக்கக்கூடும். இதுபோன்ற நிலையில், பூர்த்தி செய்த விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கென்று விண்ணப்பம் வாங்கிய பள்ளிக்கு உள்பட்ட டி.இ.ஓ. அலுவலகத்திற்கு செல்வதால் அவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படும். தமிழகம் முழுவதும் 66 மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளப்படும் அனைத்து விண்ணப்பங்களுமே கடைசியில் சென்னையில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்திற்கு தான் வரும்.
 
              இந்த பிரச்சினை குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர் அறிவொளியிடம் கேட்டபோது, ‘‘தகுதித்தேர்வுக்கான விண்ணப்பத்தை, விண்ணப்பம் வாங்கிய அரசு மேல்நிலைப்பள்ளிக்கு உட்பட்ட டி.இ.ஓ. அலுவலகத்தில்தான் கொடுக்க வேண்டும் என்பதில்லை. வசதிக்கு ஏற்ப எந்த டி.இ.ஓ. அலுவலகத்திலும் சமர்ப்பிக்கலாம். எங்கு வாங்கப்பட்ட விண்ணப்பங்கள் என்றெல்லாம் பார்க்காமல் அனைத்து டி.இ.ஓ. அலுவலகங்களிலும் விண்ணப்பங்களை வாங்கிக்கொள்வார்கள்’’ என்று தெரிவித்தார்.

புரளிகளை நம்ப வேண்டாம்

  இரட்டை பட்டம் பற்றிய வழக்கு இது வரை விசாரணைக்கு வரவில்லை. வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டதாக பல நண்பர்களிடம் தொலைபேசி அழைப்பு அதிகம் வருகிறது.  விசாரணை அடுத்த வாரம் வரலாம் என எதிர்பார்க்கிறோம்.