பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

11/28/2013

டிசம்பர் 4 டிட்டோ ஜாக் கூட்டம்

திசம்பர் 4ல் நடக்கும் மாவட்ட டிட்டோஜாக் கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாள்கள் கலந்து கொண்டு இயக்கங்கள் எடுத்த முடிவினை எவ்வாறு திட்டமிட்டு நிறைவேற்றுவது என்பது குறித்து தங்களது ஆக்கப்பூர்வமான கருத்துக்களை பகிர வேண்டுகிறேன். ஒன்று சேர்ந்து நாம் கொடுக்கும் அழுத்தம் நிச்சயம் மாநில அரசின் கவனம் நம் பக்கம் திரும்ப வாய்ப்புள்ளது. எனவே எடுத்து முடிவினையொற்றி களப்பணியாற்ற தயாராகுங்கள். கூட்டு நடவடிக்கை ஒன்றே நம் துயரோட்டும். சகோதர இயக்கங்களின் பொறுப்பாளர்களோடு கைகோர்ப்போம். கோரிக்கை வென்றெடுப்போம். இயக்கங்கள் கடந்து ஒரே குடையின் கீழ் இயங்குவோம். வெற்றி வெகு தூரம் இல்லை.
என்றும் இயக்கப்பணியில்..
முத்துப்பாண்டியன்@TNPTF

டி.டி. மருத்துவக் கல்லூரி : தமிழக அரசு ஏற்று நடத்த தயார்

திருவள்ளூரில் அமைந்துள்ள டி.டி. மருத்துவக் கல்லூரியை அரசு ஏற்று நடத்த தயாராக இருப்பதாகவும், நீதிமன்றம் உத்தரவிட்டால், அதை ஏற்பதாகவும் அரசு தரப்பில் உயர்நீதிமன்றத்தில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
டி.டி. மருத்துவக் கல்லூரிக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதியை ரத்து செய்ததால், அதில் படித்து வந்த ஏராளமான மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டனர்.
அவர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, அரசு தரப்பில் ஆஜரான அரசு வழக்குரைஞர் சோமையாஜி, டி.டி. மருத்துவக் கல்லூரியை அரசு ஏற்று நடத்துவது குறித்து பரிசீலித்து வருவதாகவும், நீதிமன்றம் உத்தரவிட்டால் அதனை ஏற்க தயார் என்றும் கூறினார்.
இதையடுத்து நீதிபதி வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைத்தார்.

சம்பளம், தீபாவளி போனஸ் கட் தொண்டாமுத்தூர் ஒன்றிய பள்ளி ஆசிரியர்கள் அதிருப்தி

கோவை தொண்டாமுத்தூர் ஊரா ட்சி ஒன்றிய பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு கடந்த மாதம் வர வேண்டிய சம்பளமும் தீபாவளி போனசும் கிடைக்கவில்லை என்று ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.
கோவை தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 2828 ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் 2286 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு கடந்த மாதத்திற்கான சம்பளம் மற்றும் தீபாவளி பண்டிகைக்கான போனஸ் ஆகியவை இதுவரை கிடைக்கவில்லை.
இதன் காரணமாக இப்பகுதி ஆசிரியர்கள் தீபாவளி பண்டிகையை சரியான முறையில் கொண் டாட முடியாத நிலை ஏற்பட்டது. இது குறித்து ஆசிரியர் ஒருவர் கூறுகையில் ‘கடந்த ஆண்டு வரை எங்களுக்கு எந்தவித பிரச்சனையும் சம்பளம் சார்ந்து வந்தது கிடையாது. இந்த ஆண்டு தான் இப்படி நடந்துள்ளது. இது குறித்த சரியான பதிலை அதிகாரிகள் தெரிவிக்க மறுத்துவருகின்றனர். இப்பிரச்சனையின் காரணமாக இந்த தீபாவளி பண்டிகையை கொண்டாடமுடியாமல் போனது‘ என்றார்.
இது குறித்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஜெயராஜ் கூறுகையில் “தொண்டாமுத்தூர் பகுதியில் மட்டும் தான் இப்படி ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது என்பது சரியான தகவல் தான்.
இது குறித்து ஏ.இ.இ.ஒவிடம் விளக்கம் கேட்டேன். பண்டிகையின் காரணமாக ‘பில்‘ செய்வதில் சில சிக்கல்கள் இருந்தது. இதன் காரணமாக தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள சில ஆசிரியர்களுக்கு மட்டும் சம்பளம் மற்றும் போனஸ் கிடைக்கவில்லை. அதுவும் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. ஆசிரியர்கள் கவலைபட தேவையில்லை‘ என்றார்.

வரும் கல்வியாண்டில் பள்ளி செல்லா குழந்தைகள், மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு சிறப்பு கவனம்


2014-15 ஆம் கல்வி ஆண்டிற்கான ஆண்டு திட்ட நிதி வரைவில் பள்ளி செல்லா குழந்தைகளை மீள பள்ளியில் சேர்த்தல் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் முன்னேற்றம் ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்று அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி கூறினார்.
ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டார வள மையத்தில் அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி தலைமையில் விருதுநகர் மாவட்ட வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கான மீளாய்வுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது அவர் கூறியதாவது: மாணவர்கள் அனைவரும் தொடக்க நிலை வகுப்புகளிலே தமிழ், ஆங்கிலம் வாசித்தல், எழுதுதல் மற்றும் அடிப்படை கணிதத்திறன்களை முழுமையாக பெற்று உயர் தொடக்க வகுப்புகளுக்குச் செல்ல வேண்டும். அதற்கான முயற்சிகளை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் மேற்கொள்ள வேண்டும். மாணவர்களுக்கான கற்றல் அடைவுத்திறன் தேர்வுகளை மாதம் ஒரு முறை நடத்தி, பின்தங்கிய மாணவர்கள் மீது அதிக தனிக்கவனம் செலுத்த வேண்டும். தானே கற்றல் உபகரணங்களைப் பயன்படுத்தி மாணவர்களின் அடிப்படை கணிதத்திறன்களை வளர்க்க ஆசிரியர்கள் முன்வர வேண்டும். அதற்கான வளப்படுத்துதல் பயிற்சி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும். மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான ஆதார அறை பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்.
2014-15 ஆம் கல்வி ஆண்டிற்கான ஆண்டு திட்ட நிதி வரைவில் பள்ளி செல்லா குழந்தைகளை மீள பள்ளியில் சேர்த்தல் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் முன்னேற்றம் ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். பிற மாநிலங்களில் இருந்து நம் மாநிலத்திற்கு புலம் பெயர்ந்த மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக அவரவர் தாய்மொழியிலேயே பாட புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன என்றார் அவர்.
இக்கூட்டத்தில் விருதுநகர் மாவட்ட கூடுதல் முதன்மைகல்வி அலுவலர் சுவாமிநாதன், உதவித்திட்ட அலுவலர் மாடசாமி, ஸ்ரீவில்லிபுத்தூர் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பாலமுருகன் மற்றும் கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் ராமலட்சுமி, மாவட்ட புள்ளியியல் அலுவலர், கணக்காளர் மற்றும் பொறியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பொங்கலுக்குப் பின் டி.இ.டி., ஆசிரியர் நியமனம் : இறுதி தேர்வில், கடும் போட்டி உறுதி

ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற்றவர்கள்பொங்கல் பண்டிகைக்குப் பின்பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். வெயிட்டேஜ் மதிப்பெண் காரணமாகதேர்ச்சி பெற்றவர்கள்இறுதி
தேர்வுப் பட்டியலில் இடம்பிடிக்க, கடும் போட்டியை சந்திக்க உள்ளனர்.

ஆகஸ்ட், 17, 18 தேதிகளில் நடந்த டி.இ.டி.தேர்வில், 27 ஆயிரம் பேர்தேர்ச்சி பெற்றனர். எனினும்அரசு பள்ளிகளில், 15 ஆயிரம் இடங்கள் மட்டுமேகாலியாக உள்ளன. டிசம்பர் இறுதிக்குள்,சான்றிதழ் சரிபார்ப்பை நடத்தி முடித்திடடி.ஆர்.பி.,திட்டமிட்டுள்ளது. ஜனவரி முதல் வாரத்திற்குள்இறுதி தேர்வுப் பட்டியல் தயாரானால்பொங்கல் முடிந்ததும், 15 ஆயிரம் பேரும்,பணி நியமனம் செய்யப்படுவர் எனஉயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடும் போட்டி உறுதி : டி.இ.டி.தேர்வில், 150க்கு, 60 சதவீதம் (90மதிப்பெண்) எடுத்தவர்கள்தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இறுதி தேர்வானதுபள்ளி படிப்பு மற்றும் பட்ட படிப்புகளில் எடுத்த மதிப்பெண்களும்கணக்கில் கொள்ளப்பட்டுஅதில் பெற்ற மதிப்பெண், 40க்கு கணக்கிடப்படும்.
டி.இ.டி.தேர்வில் எடுத்த மதிப்பெண், 60க்கு கணக்கிடப்பட்டு,மொத்தத்தில், 100க்குதேர்வர் பெற்ற மதிப்பெண் அடிப்படையில்,இறுதி தேர்வுப் பட்டியல் தயாரிக்கப்படும்.

இடைநிலை ஆசிரியரை பொறுத்தவரைபிளஸ் 2க்கு, 15மதிப்பெண்ஆசிரியர் பட்டய தேர்வுக்கு, 25 மதிப்பெண் என, 40மதிப்பெண் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில்பிளஸ் 2 தேர்வில், 90சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்றவர்களுக்கு மட்டுமே, 15 மதிப்பெண் முழுமையாக கிடைக்கும். அதேபோல்,ஆசிரியர் பட்டய தேர்வில், 70 சதவீதம் மற்றும் அதற்கும் அதிகமாக மதிப்பெண் பெற்றிருந்தால் தான், 25 மதிப்பெண்முழுமையாக கிடைக்கும். இல்லையெனில்இந்த மதிப்பெண் குறையும்.

கடும் போட்டி : அதேபோல்பட்டதாரி ஆசிரியரை பொறுத்தவரை,பிளஸ் 2க்கு, 10 மதிப்பெண்பட்ட படிப்பிற்கு, 15 மதிப்பெண் மற்றும் பி.எட்.படிப்பிற்கு, 15 மதிப்பெண் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இந்த, 40 மதிப்பெண்களையும்முழுமையாக பெற வேண்டும் எனில்முறையே, 90 சதவீதம், 70 சதவீதம் (பட்டப் படிப்பு மற்றும் பி.எட்.,) மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இத்துடன்டி.இ.டி.,தேர்வில், 90 சதவீத மதிப்பெண் (150க்கு, 135 மதிப்பெண்) பெற்றிருப்பவர்களுக்கு மட்டுமேவேலை உறுதி. மற்றவர்கள்கடும் போட்டியை சந்திக்க வேண்டியிருக்கும்.


கடந்த தேர்வுகளில்காலி பணியிடங்களை விடதேர்ச்சி பெற்றவர் எண்ணிக்கை குறைவாக இருந்ததால்வெயிட்டேஜ் மதிப்பெண்கள் கணக்கிடாமல்தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வேலை கிடைத்தது. ஆனால்தற்போதுகாலியிடங்கள் எண்ணிக்கை குறைவாகவும்தேர்ச்சி பெற்றிருப்பவர் எண்ணிக்கை,அதிகமாகவும் இருப்பதால்இந்த போட்டி ஏற்பட்டுள்ளது.

கற்பித்தலில் புதிய அணுகுமுறை விரிவுரையாளர்களுக்கு பயிற்சி

மாநில ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் சார்பில் கற்பித்தலில் புதிய அணுகுமுறைகள் குறித்து பயிற்சி அளிக்க திட்டமிட்டது. மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறவனங்களில் பணியாற்றும்  முதுநிலை விரிவுரையாளர்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. வாய் மொழியாக படித்து கற்றல், செய்கைகள், பரிசோதனைகள் மூலம் கற்பித்தல், புதிய பாணியில் கற்பித்தல் உள்ளிட்ட தலைப்புகளில் பயிற்சி இருக்கும். கடந்த அக்டோ பர், செப்டம்பர் மாதங்களில்  240 முதுநிலை விரிவுரையாளர்கள் பயிற்சி பெற்றனர்.

அடுத்த கட்டமாக டிசம்பர் 5 மற்றும் 6ம் தேதிகளில் சென்னையில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் மேலும் 120 பேர் பயிற்சி பெற உள்ளனர். இந்த பயிற்சி பெறும் முதுநிலை விரிவுரையாளர்கள்,  ஆசிரியர் பயிற்று நிறுவனங்களில் படிக்கும் மாணவ மாணவியருக்கு பாடங்களுடன் இதையும் கற்பிப்பார்கள். மேலும், அந்தந்த வட்டார வள மையங்களில்  அடங்கிய பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிப்பார்கள்.

EMIS பணியில் தலைமை ஆசிரியர்களின் சிரமங்களை பற்றி The New Indian Express ஆங்கில செய்தித்தாள் வெளியிட்ட செய்தியும், கருத்துப் படமும்



TNPTF உள்ளிருப்பு போராட்டம்

TNPTF கண்டனம்

11/27/2013

பி.ஏ. ஆங்கில தொடர்பியலும், பி.ஏ. ஆங்கிலமும் ஒன்றா? ஐகோர்ட்டில் 3 நீதிபதிகள் விசாரணை

பி.ஏ.,ஆங்கில தொடர்பியல், பி.ஏ., ஆங்கிலத்திற்கு இணையானதா? என முடிவு செய்ய மதுரை ஐகோர்ட் கிளையில் 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச்
விசாரணையை துவக்கியது.

கோவில்பட்டி பாண்டவர்மங்கலம் நாடார் தங்க சுபா லட்சுமண் ஏற்கனவே தாக்கல் செய்த மனு: "தமிழ்நாடு திறந்தவெளி பல்கலையில், பி.ஏ., (ஆங்கில தொடர்பியல்)2011 ல் தேர்ச்சி பெற்றேன். இது பி.ஏ., ஆங்கிலத்திற்கு இணையானது என பல்கலை தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. பி.எட்.,தேர்ச்சியடைந்தேன். 2012 அக்.,14 ல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி அடைந்தேன்.
ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைத்தனர். ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் "பி.ஏ.,ஆங்கில தொடர்பியல், பி.ஏ., ஆங்கில பாடத்திற்கு இணையானது அல்ல" என நிராகரித்தார். இதைரத்து செய்ய வேண்டும்." இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி எஸ்.நாகமுத்து உத்தரவு: "கீதா என்பவர் எம்.எஸ்.சி.,(கணித பொருளாதாரம்) படித்திருந்தார். அதை எம்.ஏ.,(பொருளாதாரம்) பட்டத்திற்கு இணையாக கருதி ஆசிரியர் பணி (2011-12) வழங்க உத்தரவிட வேண்டும் என, ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
அரசுத்தரப்பில் "எம்.எஸ்.சி.,(கணித பொருளாதாரம்) எம்.ஏ., (பொருளாதாரம்) பட்டத்திற்கு இணையானது அல்ல என 1974 ல் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக ஆய்வு செய்தவல்லுநர் குழு "எம்.எஸ்.சி., (கணித பொருளாதாரம்) எம்.ஏ.,(பொருளாதாரம்) பட்டத்திற்கு இணையானது" என 2013 ஏப்.,30 ல் தெரிவித்தது.
பெஞ்ச், "மனுதாரர் 2011-12க்கு ஆசிரியர் பணி கோர முடியாது. எதிர்காலத்தில் பணி வாய்ப்பு கோரலாம்" என உத்தரவிட்டது. இரு பட்டங்களும் இணையானது எனில் பட்டம் வாங்கிய தேதியிலிருந்து அவை செல்லுபடியாகும். எனவே, பெஞ்ச் உத்தரவிலிருந்து மாறுபடுகிறேன்.
பி.ஏ.,ஆங்கில தொடர்பியல், பி.ஏ.,ஆங்கில பாடத்திற்கு இணையானதா? என ஆய்வு செய்ய தமிழக பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் குழு அமைக்க வேண்டும். அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இதை கூடுதல் நீதிபதிகள் விசாரிக்க தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கிறேன்" என்றார்.
இம்மனு மற்றும் வேறு சில பாடப்பிரிவுகள் தொடர்பான மனுக்கள் நீதிபதிகள் எம்.ஜெய்சந்திரன், எம்.வேணுகோபால், டி.ராஜா கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தன. விசாரணையை நீதிபதிகள் இன்று (நவ.,27) ஒத்திவைத்தனர்.

கற்றலில் பின்தங்கிய மாணவர்களுக்கு பயிற்சி

திண்டுக்கல் மாவட்டத்தில் கற்றலில் பின்தங்கிய ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுகுமார் தேவதாஸ் கூறியதாவது: "அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் சார்பில் அரசுப் பள்ளிகளில் கற்றலில் பின்தங்கிய ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்று மாத பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சிக்காக, மேலாண்மை குழு மூலம் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இவர்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 வழங்கப்படும். கற்றல், கற்பித்தல் உபகரணங்கள் வாங்க ரூ.350 அளிக்கப்படும். இவர்கள், தினமும் தலா இரண்டு மணி நேரம் காலை, மாலை இரு வேளைகளிலும் பயிற்சி அளிப்பர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 155 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் இப்பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள கோ.ராமநாதபுரம், அணைப்பட்டி கள்ளர் பள்ளி, நத்தம் மகளிர் பள்ளி, நத்தம் கோவில்பட்டி ஆண்கள் பள்ளி, கோபால்பட்டி, திண்டுக்கல் மகளிர் பள்ளி, வேடசந்தூர் மகளிர் பள்ளி, பழநி மகளிர் பள்ளி ஆகிய 8 இடங்களில் கூடுதலாக தலா ஒரு மையம் அமைக்கப்பட்டுள்ளது, என்றார். 

அனுபவத்திற்கான மதிப்பெண் வழங்குவதில் டி.ஆர்.பி., கட்டுப்பாடு: 50 சதவீதம் பேர் பாதிப்பு

"மாநில தகுதித் தேர்வு (ஸ்லெட்), தேசிய தகுதித் தேர்வு (நெட்)க்கு முந்தைய பணி அனுபவத்திற்கு மதிப்பெண் கிடையாது" என, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) அறிவித்துள்ளது. இதன் காரணமாக 50 சதவீதத்திற்கு மேற்பட்டோருக்கு அனுபவத்திற்கான மதிப்பெண் முழுமையாக கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
கடும் பாதிப்பு
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 1,093 உதவி பேராசிரியரை நியமனம் செய்வதற்காக சென்னையில் மூன்று மையங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடந்து வருகிறது. இதில், 15 ஆயிரம் பேருக்கு இரு கட்டங்களாக சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட உள்ளது.
தேர்வுக்கான 34 மதிப்பெண்களில் ஆசிரியர் பணி அனுபவத்திற்கு மட்டும் 15 மதிப்பெண் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏழரை ஆண்டு பணி புரிந்திருந்தால் முழுமையான மதிப்பெண் கிடைக்கும். அதன்படி, விண்ணப்பித்துள்ளவர்களில் ஏராளமானோர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் பெற்றவர்களாக உள்ளனர். இவர்கள், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தின் முதல்வர் பரிந்துரையுடன் கல்லூரி கல்வி இயக்குனரிடம் இருந்து அனுபவ சான்றிதழை பெற்றுள்ளனர்.
இந்நிலையில், "ஸ்லெட்" மற்றும் "நெட்" தகுதியை பெற்றதற்குப் பின் உள்ள அனுபவம் மட்டுமே கணக்கில் கொள்ளப்பட்டு மதிப்பெண் வழங்கப்படும்" என டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. "ஸ்லெட்" மற்றும் "நெட்" தகுதிக்கு முந்தைய அனுபவம் கணக்கில் வராது. இதனால் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் என, கூறப்படுகிறது. டி.ஆர்.பி.,யின் புதிய நிபந்தனை குறித்த அறிவிப்பு, நேற்று, சான்றிதழ் சரிபார்ப்பு மையங்களில் தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்டதும் விண்ணப்பதாரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். லேடி வெலிங்டன் கல்லூரி வளாகத்தில் விண்ணப்பதாரர்கள் திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இது குறித்து, காமராஜர் பல்கலையின் உறுப்பு கல்லூரி (சாத்தூர்) ஆசிரியர் பெருமாள் கூறியதாவது: "கடந்த 2006, 09ல் உதவி பேராசிரியர் தேர்வு நடந்தது. அதில், நெட்- ஸ்லெட் தகுதிக்கு முந்தைய பணி அனுபவமும் கணக்கில் கொள்ளப்பட்டு மதிப்பெண் வழங்கப்பட்டது. ஆனால், இப்போது நெட் - ஸ்லெட் தகுதிக்கு பிந்தைய அனுபவம் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும் என, கூறுகின்றனர்.
நான்கு முறை அறிவிப்பை (நோட்டிபிகேஷன்) வெளியிட்டு டி.ஆர்.பி., குழப்புகிறது. டி.ஆர்.பி.,யின் இந்த அறிவிப்பால் மொத்த விண்ணப்பதாரர்களில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு ஏற்படும். நெட் - ஸ்லெட் தகுதியை பெற்றபின் தான் ஆசிரியர் பணியாற்ற தகுதி எனில் இத்தனை ஆண்டுகளாக கல்லூரிகளில் பணியாற்ற அனுமதித்தது ஏன்? கடந்த காலங்களில் ஒட்டுமொத்த அனுபவத்தை கணக்கில் எடுத்துக்கொண்ட டி.ஆர்.பி., இப்போது மறுப்பது ஏன்? இதற்கெல்லாம் டி.ஆர்.பி., பதிலளிக்க வேண்டும்." இவ்வாறு, பெருமாள் கூறினார்.
புகார் குறித்து டி.ஆர்.பி., உறுப்பினர் - செயலர், வசுந்தரா தேவியிடம் விளக்கம் பெற முயன்றும் அவர் "பிசி"யாக இருப்பதாகவும், இப்போது "பேச முடியாது" என்றும் ஊழியர்கள் தெரிவித்தனர்.

ஐந்தாண்டு திட்டங்களில் உயர்கல்விக்கு ரூ.50 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும்

அடுத்த இரு ஐந்தாண்டு திட்டங்களில் மத்திய அரசு உயர்கல்விக்கென 50 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய உள்ளது" என, பல்கலை மானியக் குழு துணைத் தலைவர் தேவராஜ் தெரிவித்தார்.
கோவையில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது: "எவ்வளவு அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும் தரமான கல்வி போதிக்க ஆசிரியர்கள் அவசியம். இதை மனதில் வைத்து ஆசிரியர்களின் தரத்தை மேம்படுத்த ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் பல்கலை ஒன்றை ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் பல்கலை மானியக் குழு உருவாக்கியுள்ளது.
அடுத்த 2 ஐந்தாண்டு திட்டங்களில் உயர்கல்வியை மேம்படுத்த மத்திய அரசு 50 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யவுள்ளது. இதில், 25 ஆயிரம் கோடி ரூபாய் சிறப்பாக செயல்படும் தனியார் கல்வி நிறுவனங்களில் தொழில் சார்ந்த கல்வி அளிக்கவும், பாடங்களை உருவாக்கவும் வழங்கப்படும்.
மீதமுள்ள 25 ஆயிரம் கோடி ரூபாய் பல்கலை மானியக் குழுவுக்கு உயர்கல்வி மேம்பாட்டுக்கு செலவிட வழங்கப்படும். இந்திய கலாசார மேம்பாட்டுக்கும், சிறந்த ஆசிரியர்களை உருவாக்கவும், இந்த நிதி பயன்படும். அடுத்த 10 ஆண்டுகளில் இந்த நிதி செலவிடப்படும்." இவ்வாறு, தேவராஜ் பேசினார்.

அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலர் ஆய்வு

அனைவருக்கும் கல்வித்திட்ட, மாநில திட்ட அலுவலர் பூஜாகுல்கர்னி செவ்வாய்க்கிழமை மதுரை வந்தார். மதுரையிலுள்ள அனைவருக்கும் கல்வித் திட்ட அலுவலகத்தில், காலையில் விருதுநகர் மாவட்ட அனைவருக்கும் கல்வித்திட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள், அனைவருக்கும் கல்வித்திட்ட மேற்பார்வையாளர்கள் உள்ளிட்டோருடன் அவர் ஆலோசனை நடத்தினார். மாவட்டத்தில் திட்டத்தை தொய்வின்றி செயல்படுத்துமாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். மாலையில், மதுரை மாவட்ட அனைவருக்கும் கல்வித் திட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கூ.பார்வதி, மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சி.அமுதவல்லி மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள், திட்ட மேற்பார்வையாளர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

தோழமையுடன் நன்றி பகிர்கிறோம்.......

எமது அமைப்பின் நெடுநாள் கோரிக்கையை ஏற்று நாம் விரும்பிய இடத்தையே தேர்வு செய்து சிங்கம்புணரி  உதவித் தொடக்கக்கல்வி அலுவலகம் கட்டுவதற்கு பல்வேறு தடங்கல்களுக்கு மத்தியில் இடம் ஒதுக்கீடு செய்த சிங்கம்புணரி தேர்வுநிலை பேரூராட்சியின்  தலைவர் மதிப்புமிகு லெட்சுமி பிரியா ஜெயந்தன் அவர்களுக்கும், துணைத்தலைவர் மதிப்புமிகு நித்யா (எ) தொல்காப்பியன் அவர்களுக்கும், செயல் அலுவலர் அவர்களுக்கும், மாமன்ற உறுப்பினர் மதிப்புமிகு செந்தில்கிருஷ்ணன் அவர்களுக்கும் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் எமது இயக்கத்தின் சார்பாக நன்றியை தோழமையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

அதிகாரிகள் அலட்சியம் மாறுமா?

நாடு முழுவதும் மூன்று கோடிக்கும் அதிகமான வழக்குகள் நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கின்றன. தாமதிக்கப்படும் நீதி, மறுக்கப்படும் நீதி என்று முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்கள் அனைவருமே உணர்ச்சிப்பூர்வமாக பேசுவார்கள். ஆனால், வழக்குகளை விரைவாக முடிக்க அவர்கள் எடுக்கும் நடவடிக்கைகளில் அவ்வளவு வேகம் இருக்காது. இந்த சூழ்நிலையில், லோக் அதாலத் முறையில் வழக்குகள் பைசல் செய்யப்படுவது வரவேற்கத்தக்கது.

கடந்த 23ம் தேதியன்று, உச்ச நீதிமன்றம் தொடங்கி அனைத்து நீதிமன்றங்களிலும் லோக் அதாலத் நடத்தப்பட்டது. ஒரே நாளில் நாடு முழுவதும் 39 லட்சம் வழக்குகள் எடுத்து கொள்ளப்பட்டு, அவற்றில் பெரும்பான்மையான வழக்குகளில் தீர்வும் காணப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் மட்டும் 13 லட்சத்து 77,252 வழக்குகள் பைசல் செய்யப்பட்டு, ரூ.1113 கோடியே 75 லட்சத்துக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இது மற்ற மாநிலங்களை காட்டிலும் அதிகம்.
இப்படி லோக் அதாலத் மூலம் விபத்து இழப்பீடு, வங்கிக் கடன் உள்ளிட்ட வழக்குகள் தீர்வு காணப்படுவதால், நீதிமன்றங்களில் வழக்குகளின் எண்ணிக்கை குறையும். இதன் மூலம், நீதிமன்றங்களின் சுமை குறைந்து குற்ற வழக்குகளில் விரைவில் தீர்ப்பு கூறப்படும். எனவே, லோக் அதாலத் பணியில் நீதித்துறையின் சாதனையை பாராட்டலாம்.

இது ஒரு புறமிருக்க, சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தமிழக அரசின் கல்வித்துறை உயர் அதிகாரிகளுக்கு எதிராக 321 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. 2011 முதல் 2012ம் ஆண்டு வரை நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தாததால், இவை தாக்கல் செய்யப்பட்டன. அரசு பள்ளிகளில் பணியாற்றும் 140 இடைநிலை ஆசிரியர்கள், 102 சிறப்பு ஆசிரியர்கள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள் 51 பேர், சிறப்பு ஆசிரியர்கள் 28 பேர் என பலர் இவற்றை தாக்கல் செய்திருக்கின்றனர். இதே போல், மற்ற துறை அதிகாரிகள் மீது போடப்பட்டுள்ள அவமதிப்பு வழக்குகளை சேர்த்தால், அவை இன்னும் அதிகமாகும்.

  நீதித்துறையின் முயற்சியால் லோக் அதாலத் மூலம் நிலுவையில் உள்ள வழக்குகள் குறைக்கப்பட்டாலும், அரசு உயர் அதிகாரிகளின் அலட்சியத்தால் இது போன்ற வழக்குகள் எண்ணிக்கை அதிகமாகி வருகின்றன. எனவே, நீதிமன்ற உத்தரவுகளை அதிகாரிகள் உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும். அல்லது மேல்முறையீடு செய்ய வேண்டும். அதிகாரிகளின் அலட்சியம் நீதித்துறையின்  பணியில் குறுக்கிடுவது போல் இருக்கக் கூடாது.

11/26/2013

ரூ.1 கோடி கேட்டு கடத்தப்பட்ட மதுரை பள்ளி மாணவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார்

மதுரை தபால்தந்தி நகர் நட்சத்திர நகர் பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார். இவர் பரவை காய்கறி மார்க்கெட்டில் உருளைக்கிழங்கு மொத்த வியாபாரம் மற்றும் ஒப்பந்ததாரராகவும் இருந்து வருகிறார். இவரது மகன் கிரண் ரோகித் (வயது 14). மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் குலேசன் பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற கிரண் ரோகித் மாலையில் வீடு திரும்பினார். பள்ளியில் இருந்து பஸ்சில் வந்த அவர் நட்சத்திர நகரில் இறங்கி தனது வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த இன்னோவா கார் திடீரென கிரண்ரோகித்தை வழிமறித்து நின்றது. பின்னர் அதில் இருந்து இறங்கிய ஒரு கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் கிரண்ரோகித்தை குண்டுகட்டாக தூக்கி காரில் ஏற்றியது. பின்னர் அந்த கார் மின்னல் வேத்தில் அங்கிருந்து சென்று மறைந்தது.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த அப்பகுதியினர் மதுரை தல்லாகுளம் போலீஸ் உதவி கமிஷனர் அலுவலகத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் உதவி கமிஷனர் தனபால் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் இது பற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணனுக்கு தகவல் கொடுத்தனர்.
காரில் கடத்தப்பட்ட மாணவன் யார்? அவரை கடத்தியது யார்? எதற்காக கடத்தினார்கள்? என்று போலீசார் சம்பவ இடத்தில் துரிதமாக விசாரணை நடத்திக் கொண்டிருந்தனர்.
இதற்கிடையே கிரண்ரோகித்தின் தந்தை ரவிக்குமாருக்கு செல்போனில் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர் கிரண்ரோகித்தை தாங்கள் கடத்தி வைத்திருப்பதாகவும், ரூ.1 கோடி கொடுத்தால் உயிருடன் விட்டுவிடுவதாகவும் கூறியுள்ளான். அப்போதுதான் ரவிக்குமாருக்கு தனது மகன் கடத்தப்பட்டுள்ளான் என்ற விபரம் தெரியவந்தது. உடனடியாக அவரும் போலீசில் புகார் அளித்தார்.
மாணவர் காரில் கடத்தப்பட்டதால் அந்த காரை போலீசார் மடக்கி பிடிக்க மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட அனைத்து மாவட்ட தலைநகரங்களில் உள்ள போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி அனைத்து மாவட்ட எல்லை பகுதிகளிலும் உள்ள சோதனை சாவடிகள் உஷார்படுத்தப்பட்டன.
இதனை தொடர்ந்து சோதனை சாவடிகளை கடந்து செல்லும் வாகனங்களை போலீசார் தீவிரமாக கண்காணித்தனர்.
இந்தநிலையில் இரவு 8.30 மணியளவில் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே கிள்ளுக்கோட்டை பிரிவு ரோடு பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தினர். ஆனால் அந்த கார் நிற்காமல் சென்றது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் மற்றொரு வாகனத்தில் அந்த காரை துரத்தி சென்றனர்.
ஆனால் தொடர்ந்து சென்ற அந்த கார் சிறிது தூரத்தில் ரெயில்வே கேட்டை கடந்து செல்ல முடியாமலும், பாதை தெரியாமலும் நின்றது.
அதற்குள் அந்த இடத்திற்கு வந்த போலீசார் காரில் இருந்தவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் காரில் இருந்த 3 பேர் அங்கிருந்து தப்பி ஓடினார்கள். டிரைவரும் இறங்கி ஓட முயன்றபோது இன்ஸ்பெக்டர் வேலுசாமி மற்றும் போலீசார் மடக்கினார்கள். அப்போது அரிவாளால் போலீசாரை அந்த கும்பல் தாக்க முயன்றது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் வேலுசாமி தனது கைத்துப்பாக்கியை எடுத்து தப்பி ஓடியவர்கள் மீது சுட்டார். 3 ரவுண்டு சுட்டதில் ஒருவருக்கு மட்டும் காலில் குண்டு பாய்ந்து ரோட்டில் சுருண்டு விழுந்தார். மற்ற 3 பேரும் தப்பி விட்டனர்.
காருக்குள் போலீசார் பார்த்தபோது அதில் பயந்த நிலையில் பள்ளி மாணவன் இருப்பதை கண்டனர். அவரிடம் விசாரித்த போது மதுரையில் இருந்து தான் கடத்தப்பட்டதாக தெரிவித்தான். இதையடுத்து மாணவன் கிரண்ரோகித்தை பத்திரமாக மீட்டு கீரனூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். இதுபற்றிய தகவல் மதுரை போலீசாருக்கும் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் காயம் அடைந்தவரிடம் விசாரித்ததில் அவர் திருச்சி கீழபுலிவார்டு ரோட்டை சேர்ந்த கணேசன் (40) என்று தெரியவந்தது. பின்னர் அவரை திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் தப்பி ஓடியவர்களில் ஒருவன் கடத்தப்பட்ட மாணவரின் தாத்தாவிடம் கார் டிரைவராக வேலை பார்த்தவன் என்று தெரியவந்துள்ளது. பணத்துக்காக திட்டமிட்டு அவர்கள் இந்த கடத்தல் சம்பவத்தை அரங்கேற்றியதும் போலீசாருக்கு தெரியவந்துள்ளது.
தப்பி ஓடியவர்களை பிடிக்க திருச்சி சரக டி.ஐ.ஜி. அமல்ராஜ் உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடும் பணியை தீவிரப்படுத்தினர்.
இந்தநிலையில் இன்று காலை கீரனூர் அருகே உள்ள பள்ளத்துப்பட்டி பகுதியில் கரும்பு தோட்டத்திற்குள் பதுங்கியிருந்த மாணவன் கடத்தலில் தொடர்புடைய பிரபு (30) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது திண்டுக்கல் மாவட்டம் கோனாபட்டியை சேர்ந்தவர் என்றும், அவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு கடத்தப்பட்ட மாணவன் கிரண் ரோகித்தின் தாத்தாவிடம் டிரைவராக வேலை பார்த்ததும் தெரிய வந்தது.
மேலும் இந்த கடத்தலுக்கு பிரபுதான் மூளையாக செயல்பட்டுள்ளார் என்ற தகவலும் கிடைத்துள்ளது. இவர் தற்போது திருச்சியில் வாடகை கார் ஓட்டி வருகிறார். அப்போதுதான் பிடிபட்ட டிரைவர் கணேசனுடன் பழக்கம் ஏற்பட்டு இந்த கடத்தல் சம்பவத்தை அரங்கேற்றி உள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த கடத்தலில் ஈடுபட்டது சந்துரு, குமார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த கடத்தல் சம்பவம் மதுரை, திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வாடகைப்படி வரிச் சலுகை கணக்கீடு

TNPTF-பெண் ஆசிரியர்கள் வட்டார மாநாடு

மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு பதவி உயர்வு

11/25/2013

தொடரும் இரட்டைப்பட்டம் வழக்கு விசாரணை. அடுத்த கட்ட விசாரணை டிசம்பர்-13

இன்று ( 25.11.2013) சென்னை உயர்நீதி மன்றத்தில் முதல் அமர்வில் தலைமை நீதியரசர் மதிப்புமிகு ராஜேஸ்குமார் அகர்வால் மற்றும் நீதியரசர் சத்தியநாரயணா முன்னிலையில் 12.15க்கு விசாரணைக்கு வந்தது. இதில் அரசு தரப்பு வழக்குரைஞர் தன்னுடைய எதிர் உரையை தாக்கல்  செய்ய குறைந்தது ஒரு வார கால அவகாசம் வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அதனை ஏற்றுக்கொண்ட நீதியரசர்கள் அரசு தரப்பு எதிர் உரையை தயார் செய்து அதற்கான பதிலை பெறுவதற்கு இரட்டைப்பட்ட வழக்கறிஞர்களிடம் 10 தினங்களுக்குள் அளிக்க வேண்டும். அவர்கள் அதற்கான பதிலை 13.12.2013க்குள் தயார் செய்து முடித்திருக்க வேண்டும் எனவும், அடுத்த கட்ட விசாரணை 13.12.2013க்கு முதல் அமர்வில் நடைபெறும் எனவும் தெரிவித்தனர். டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் நீதிபதிகள் தங்கள் நீதி மன்றத்தை மாற்றிக்கொள்ளும் சூழலில் நீதியரசர் சத்தியநாரயணா அவர்கள் மதுரை பலகைக்கு மாற்றப்படவுள்ளதாக தெரிகிறது. எனவே வருகிற 13.12.2013 அன்று நீதியரசர் சத்தியநாரயணா அவர்கள் இவ்வழக்கிற்காக சிறப்பு வரவாக சென்னை உயர்நீதிமன்றம்  முதல் அமர்விற்கு வர உள்ளார். அன்று மதியம் 2.15க்கு வழக்கு விசாரணைக்கு வரும். அன்று விசாரணை நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பள்ளிக்கூடங்கள் உருவாக்குவது இயந்திரங்களையா, மாணவர்களையா?

வாழ்க்கையில் மறக்க முடியாதது பள்ளிப்பருவம். ஒரு மனிதனை மனிதனாக உருவாக்க அடித்தளமிடக்கூடியதும் பள்ளிப்பருவமே. தான் நினைக்கும் எண்ணங்களை தன் சக நண்பர்களுடனும், பெற்றோருடனும் அதிகமாகவும் உரிமையோடும் பகிர்ந்துகொள்வதும் மாணவப்பருவத்திலே தான். மனம் மகிழ்ச்சியான தருணங்களிலும், விளையாட்டுகளிலும் அதிகமாக ஈடுபடுவதும் மாணவப்பருவத்திலேதான்.
பகைமையை எளிதாக மறப்பதும், பாசத்தை உருவாக்குவதுமான சூழ்நிலைகள் அதிகமாக ஏற்படுவதும் மாணவப்பருவத்திலேதான். தன்னுடைய எதிர்காலத்தை தீர்மானிப்பதாகக் கருதும் இரண்டு கட்டங்களான பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு ஆகியவற்றை காண்பதும் மாணவப் பருவத்திலேதான். இப்படிப்பட்ட அருமையான மாணவப்பருவத்தை எந்த அளவுக்கு நாம் ரசித்து வாழ வேண்டும். ஆனால் ரசிக்கும்படியாகவா இருக்கிறது பள்ளிப்பருவம்?
தமிழ்ப் பள்ளிக்கூடங்களை விட, ஆங்கிலப் பள்ளிக்கூடங்களில்தான் மாணவர்களுக்கு அதிகம் மன நெருக்கடிகள் ஏற்படுகிறது. ஏனெனில் தமிழ் வழிக் கல்வியில் பயிலும் மாணவர்களைவிட ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் தவிர்த்து, கூடுதலான பாடங்கள் கற்றுத்தரப்படுகிறது. அது போக பெற்றோரும் போதாக்குறைக்கு பள்ளி விட்டு வந்தவுடன், பயிற்சி வகுப்புகளுக்கும் அனுப்புகின்றனர். பிள்ளைகளும், பெற்றோரும் சந்திக்கும் வேளைகள் குறைந்து விடுகின்றது.
சனி, ஞாயிறுகளிலும் செல்லக்கூடிய சிறப்பு வகுப்புகள் குழந்தைகளை பெற்றோரிடமிருந்து மட்டுமல்லாது, உறவினர்களிடம் இருந்தும் தள்ளி வைத்து விடுகின்றது. அது தவிர்த்து முக்கியமான விசேஷ நாட்களில் விடுமுறை எடுப்பதற்கும் பள்ளி நிர்வாகங்கள் அனுமதிப்பதில்லை.
சில பண்டிகைகளின் போது அந்த குறிப்பிட்ட மதத்தைச்சேர்ந்த மாணவர்களுக்கு மட்டுமே விடுமுறை அளிக்கிறார்கள். பாடம் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர்களும், கல்வி நிலையத்தை நடத்தும் கல்விமான்களும் கல்வியை எந்த அளவுக்கு புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதற்கு இந்த நடைமுறைகளே சாட்சி. பண்டிகைகள் என்பதே கொண்டாடும் சமூகத்தவர் பிற சமூகத்தினருடன் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து சகோதரத்துவத்தை வளர்ப்பதற்கும், சமத்துவத்தை பேணுவதற்கும் உதவுவதுமாகும். அப்படிப்பட்ட நாட்களில் மாணவப் பருவத்தைச் சேர்ந்த குழந்தைகளின் மன நிலையை எண்ணிப் பாருங்கள்.
பல திறமைகளை வெளிப்படுத்தும் வயதில், சிறிது கூட ஒய்வின்றி ஒரே பாடங்களை மட்டும் கற்கக்கூடிய இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். வீட்டில் யாரேனும் கடைக்கு போகச்சொன்னாலும், அவன் பிளஸ் 2 படிக்கிறான் அவனை தொந்தரவு செய்யாதீர்கள் என பதில் கிடைக்கும். உறவினர்களின் வீட்டில் நடக்கும் நிகழ்வுகளுக்கு குழந்தைகளை அழைத்துச் சென்றால்தானே அவர்களுக்கும் யார் உறவினர்கள் என்று தெரியும்.
பள்ளிக்கூடங்களும், பயிற்சி வகுப்புகளும் மட்டுமே பாடம் படிக்கும் இடங்கள் அல்ல. இது போன்ற உறவினர் வீடுகளும், மகிழ்ச்சியும் துக்கமுமான சம்பவங்கள் கூட வாழ்க்கைக்கான பாடங்களை கற்றுத்தரும் சிறப்புவாய்ந்த இடங்கள் அல்லவா. யார் உறவினர்கள் என்றே தெரியாமல் இந்தத் தலைமுறை வளர்வதற்கு பயிற்சி வகுப்புகளும், அதனை மறைமுகமாக ஊக்குவிக்கும் பள்ளிக்கூடங்களும் மட்டுமே காரணம்.
படிக்கும் நாட்களில் சனி, ஞாயிறு விடுமுறைகள் கிடைப்பதில்லை என்றால் படிப்பு முடிந்தவுடன் வரக்கூடிய ஏப்ரல், மே விடுமுறைகளிலும் கூட மாணவர்களின் மகிழ்ச்சி பறிபோகிறது என்பது மிகவும் கொடுமையான ஒன்றாகும். விடுமுறைக் காலங்கள் ஓய்வு காலம் மட்டுமல்ல, பல நண்பர்களுடன் சேர்ந்து விளையாட்டு, உறவினர் வீடுகளுக்கு சென்று உறவைப் புதுப்பித்தல், புதிய ஊர்களுக்கு சுற்றுலா சென்று அந்த ஊர்களையும், மனிதர்களையும் கண்டுகொள்வதற்கான வாய்ப்பும் கிடைக்கும் வெகுமதியான காலங்கள் அவை. அப்படிப்பட்ட நாட்களின் சுவையை அறிய முடியாத வகையில் பள்ளிக்கூடங்கள் மாணவர்களை கட்டிப்போட்டுவிடுகின்றன.
ஒன்பதாம் வகுப்பு முடித்த மாணவர்களின் நிலையும், பதினொன்றாம் வகுப்பு முடித்த மாணவர்களின் நிலையும், இன்று ஐ.ஏ.எஸ்.க்கு தயாராகுபவர்களை விடவும், கொட்டும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும் நாட்டை காக்கும் ராணுவ வீரர்களின் பணியை விட கடுமையான ஒன்றாக பார்க்கும் மனோநிலை இன்று ஏற்பட்டிருக்கிறது.
இப்படி மாணவர்களின் மனதை வளப்படுத்த வேண்டிய பள்ளிகள், நஞ்சை விளைவிக்கும் வகையில் செயல்படுவது எதிர்கால சமுதாயத்திற்கு நல்லதா? பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் பள்ளியில் படிக்க வேண்டும், கல்லூரியில் படிக்க வேண்டும், நல்ல வருமானத்தை ஈட்ட வேண்டும் என்பதை மட்டும் விரும்புகிறார்களா? அல்லது சமுதாய அக்கறை உள்ள நல்ல குடிமகனாக, இயற்கையை, மனிதனை, மொழியை நேசிப்பவானாகவும், அன்பும் பண்பும் மிக்க அடுத்த தலைமுறையை உருவாக்குபவனாகவும் வளர வேண்டும் என விரும்புகிறார்களா? என்பதை முடிவு செய்ய வேண்டும்.
பள்ளிக்கூடங்களும், தங்கள் மாணவர்கள் வருமானம் ஈட்டக்கூடிய இயந்திரங்களாக உருவாக வேண்டுமா? தலைமுறைகளை கடந்தும் பயன்படக்கூடிய நற்குணங்களை உடைய மண்ணின் மைந்தர்களாக, பண்பாளர்களாக மாணவர்கள் உருவாக வேண்டுமா? என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டிய நேரமிது.

பணி ஓய்வு பெற்றதும் அதிகாரிகள் அரசியலில் ஈடுபட கூடாது: மத்திய அரசுடன் தேர்தல் கமிஷன் 'போர்'

புதுடில்லி : 'பணியிலிருந்து ஓய்வுபெறும் அரசு ஊழியர்கள், உடனடியாக, அரசியல் கட்சிகளில் சேருவதை தடை செய்து, குறிப்பிட்ட காலம் நிர்ணயிக்க வேண்டும்' என்ற, தேர்தல் கமிஷனின் தொடர்ந்த வேண்டுகோளை, மத்திய அரசு நிராகரித்த வண்ணமாக உள்ளது.

பணிக்காலத்தில் செயல்பாடு:


அரசின் உயர்பதவிகளில் இருக்கும் அதிகாரிகள், பணியிலிருந்து ஓய்வுபெற்ற உடனேயே, தங்களுக்கு பிடித்தமான அரசியல் கட்சிகளில் சேர்ந்து, அக்கட்சிக்காக பாடுபடுகின்றனர். இதனால், அவர்களின் பணிக்காலத்தில், அவர்களின் செயல்பாடு எப்படி இருந்திருக்கும் என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.நம் நாட்டில், தேர்தல் பணிகள், அரசு அதிகாரிகளால் தான் மேற்கொள்ளப்படுகின்றன. அதனால், அத்தகைய அதிகாரிகளின் தேர்தல் பணி, எந்த அளவுக்கு, நடுநிலைமையுடன் இருந்திருக்கும் என்பதில் கேள்விக்குறி எழுந்தது.இதையடுத்து, இந்தப் பிரச்னையில் தலையிட்ட தேர்தல் கமிஷன், மத்திய அரசின் பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறைக்கு, கடந்த ஆண்டில், கடிதம் எழுதி, 'ஓய்வுபெறும் அதிகாரிகள், உடனடியாக அரசியல் கட்சிகளில் சேருவதை தடை செய்ய வேண்டும்' என கோரியது.அதை தவறாக புரிந்து கொண்ட மத்திய அரசு, 'அவ்வாறு தடை விதிக்கப்பட்டால், அது அடிப்படை உரிமைகளுக்கு எதிராக அமைந்து விடும்' என தெரிவித்ததுடன், 'தேர்தலில் போட்டியிட அனைவருக்கும் உரிமை உள்ளது' என்றது.

இதையடுத்து, தேர்தல் கமிஷன், மத்திய அரசுக்கு மீண்டும் கடிதம் எழுதி, 'தேர்தலில் போட்டியிடுவது பற்றி நாங்கள் சொல்லவில்லை. தேர்தலில் போட்டியிடுவது அனைவரின் அடிப்படை உரிமை என்பது எங்களுக்குத் தெரியும். நாங்கள் சொல்வது, அரசு அதிகாரிகள் ஓய்வுபெற்ற உடன், அரசியல் கட்சிகளில் சேரக் கூடாது என்பது தான்' என, விளக்கமாக கடிதம் எழுதியது.

மீண்டும் கடிதம்:


அந்த கடிதத்தையும் ஏற்காத மத்திய அரசு, அதை நிராகரித்தது. எனினும், விடாப்பிடியாக, தேர்தல் கமிஷன், சமீபத்தில், மீண்டும், ஒரு கடிதத்தை எழுதி, 'அதிகாரிகளாக இருந்து பணி ஓய்வு பெற்றவர்கள், அரசியலில் சேர, குறிப்பிட்ட கால நிர்ணயம் செய்யப்பட வேண்டும்' என, வலியுறுத்தியுள்ளது.இந்த விவகாரத்தில், மத்திய அரசும், தேர்தல் கமிஷனும், விடாப்பிடியாக இருக்கின்றன.

பள்ளிக்கு "டிமிக்கி' கொடுக்கும் ஹெச்.எம்.,கள் மாணவர்கள் கல்வித்தரம் பாதிப்பு: கல்வியாளர்கள் கடும் அதிருப்தி

 "பல்வேறு காரணங்களுக்காக வெளியே செல்லும் ஹெச்.எம்.,கள், பள்ளிக்கு, "டிமிக்கி' கொடுப்பதால், மாணவர்களின் கல்வித்தரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அதனால், கல்வித்துறை அதிகாரிகள் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும்' என, கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் உள்ள, 385 யூனியன்களில், 34 ஆயிரத்து, 871 துவக்கப்பள்ளி, 9,969 நடுநிலைப்பள்ளிகள் செயல்படுகிறது. அவற்றில், இரண்டு லட்சத்து, 12 ஆயிரத்து, 105 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். அதில், 53 லட்சத்து, 32 ஆயிரத்து, 613 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, தமிழக அரசு, 14 வகையான நலத்திட்ட உதவிகள் வழங்குகிறது. அதன்படி, விலையில்லா புத்தகம், நான்கு செட் சீருடை, காலணிகள், புத்தகப் பை, கணித உபகரணப்பெட்டி, புவியியல் வரைபடம், நோட்டுகள் உள்ளிட்டவை அடங்கும். அவை, ஒன்றாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. விலையில்லா நலத்திட்ட உதவிகள் அனைத்தும், அந்தந்த மாவட்ட ஒன்றியங்களில் உள்ள ஏ.இ.இ.ஓ., அலுவலகம் மூலம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அவற்றை, அந்தந்தப்பள்ளி துவக்க, நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் பள்ளிக்கு வந்து அனுமதி நோட்டில் எழுதிவிட்டுச் சென்று பெற்றுவர வேண்டும். விலையில்லா நலத்திட்டம் மற்றும் தொடக்கக் கல்வித்துறை சார்பான தகவல்கள், கல்வித்தர முன்னேற்றம் குறித்த கூட்டங்களுக்கும், தலைமையாசிரியர்கள் சென்று வருகின்றனர்.
மேலும், அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் வழங்கப்படும் பள்ளி பராமரிப்பு மற்றும் மானியத் தொகையை பெறுவதற்கு வங்கிக்கும் செல்வது, பள்ளிக்கு தேவையான கட்டிட வசதி, கழிப்பிடம், சுற்றுச்சுவர் போன்ற வசதிகளை பெறுவதற்கும், மாநில இயக்குனரகம், மாவட்ட திட்ட அலுவலகம் ஆகியவற்றுக்கு, புள்ளி விவரங்கள் தொடர்பான கூட்டம் நடக்கிறது.
பல்வேறு கூட்டங்களுக்கு, தலைமையாசிரியர் செல்லவேண்டி உள்ளதால், அடிக்கடி பள்ளி வேலை நேரத்தில், வெளியே சென்று வருகின்றனர். குறிப்பாக, 75 சதவீதம் தலைமையாசிரியர்கள், காலையில் கூட்டத்துக்கு சென்றால், மதியம் பள்ளிக்கு வருவதில்லை என்றும், மாலையில் கூட்டம் என்றால், காலையில் பள்ளிக்கு வராமல், "டிமிக்கி' கொடுப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.
கல்வியாளர்கள் சிலர் கூறியதாவது: பெரும்பாலான தலைமையாசிரியர்களுக்கு, பெயரளவில் ஒரு வகுப்பு மட்டுமே உள்ளது. அதில், ஒரு சிலரைத் தவிர, மற்றவர்கள் பாடம் நடத்துவதில்லை. விலையில்லா நலத்திட்ட உதவிகள் பெற, எஸ்.எஸ்.ஏ., பள்ளி பராமரிப்பு நிதி எடுக்க, கூட்டங்களுக்கு செல்வது என, 75 சதவீதம் பள்ளி தலைமையாசிரியர்கள், ஓ.பி., அடிக்கின்றனர்.
அதனால், துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், கல்வித்தரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஓ.பி., அடிக்கும் தலைமையாசிரியர்கள் மீது, கல்வித்துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தலைமையாசிரியரின் வகுப்புகளை, கல்வி அதிகாரிகள் சிறப்புக் கவனம் செலுத்தி ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

11/24/2013

பள்ளிகளில் ஆசிரியர் காலியிட விபரங்கள் சேகரிப்பு

அரசு, நகராட்சி உயர்நிலை,மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள ஆசிரியர், தலைமை ஆசிரியர், ஆசிரியர் அல்லாதோர் விபரங்களை பள்ளி கல்வித்துறை சேகரித்து வருகிறது.
2013 நவ.,1ல், தலைமை ஆசிரியர் உட்பட அனைத்து வகை ஆசிரியர் காலிப் பணியிடங்கள், 2013 நவ.,1 முதல் 2014 மே 31 வரை பணிநிறைவு காரணமாக ஏற்படும் காலி பணியிட விபரங்கள் சேகரிக்கப்படுகிறது.

இதேபோல்,தொடக்க கல்வி அலுவலகங்கள், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், 2013 நவ.1 வரை காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர், உதவியாளர், கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர், 2013 நவ.,1 முதல் 2015 மார்ச் 14 வரை, ஓய்வு பெறுவதால் ஏற்படும் காலி பணியிட பட்டியலை அனுப்ப, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பத்து விதமான பாதுகாப்பு அம்சங்களுடன் ஆசிரியர் தகுதிச் சான்றிதழ்

தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட உள்ள ஆசிரியர் தகுதிச் சான்றிதழ்.

ஆசிரியர் தகுதித் தேர்வு, சான்றிதழ் விநியோகம்

ஆசிரியர் தகுதித் தேர்வு, மறுதேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கான ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் ஓரிரு வாரங்களில் விநியோகிக்கப்பட உள்ளது. இந்தச் சான்றிதழ்கள் இ-பார்கோடு உள்ளிட்ட 10 விதமான பாதுகாப்பு அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தேர்வு எழுதியவரின் பெயர், பிறந்த தேதி, பதிவு எண், தேர்ச்சி பெற்ற தாள், விருப்பப் பாடம், மொழிப்பாடம், மதிப்பெண் உள்ளிட்ட விவரங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

ஆசிரியர் தகுதித் தேர்வு, மறுதேர்வு ஆகிய இரண்டுத் தேர்வுகளிலும் உரிய தகுதிகளோடு வெற்றி பெற்ற 18,600 பேருக்கான சான்றிதழ்கள் அச்சிடப்பட்டுள்ளன. சட்டவிரோதமாக வேறு யாரும் இந்தச் சான்றிதழ்களை அச்சிடாதவாறு ரகசிய பாதுகாப்பு அம்சங்கள் இந்தச் சான்றிதழில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இரண்டு தேர்வுகளிலும் வெற்றி பெற்ற 18,600 பேரில் பெரும்பாலானோர் அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிக்குச் சென்றுள்ளனர். வெறும் 7 பேர் மட்டும் தங்களுக்குச் சான்றிதழே போதும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் தெரிவித்துள்ளனர்.

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை கற்பிக்க பணியில் சேரும் அனைத்து ஆசிரியர்களும் ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.

2010 ஆகஸ்ட் 21-க்குப் பிறகு பணியில் சேர்ந்த ஆசிரியர்களும் இந்தத் தேர்வை எழுதுவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற பிறகு 7 ஆண்டுகள் வரை இந்தச் சான்றிதழ் செல்லத்தக்கதாக இருக்கும். ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் இந்தத் தேர்வை எழுதலாம்.

தமிழிலேயே விவரங்கள்: ஆசிரியர் தேர்வு தொடர்பான அனைத்து விவரங்களும் இதுவரை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிடப்பட்டு வந்தன. இனி அந்த விவரங்கள் அனைத்தும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

அதேபோல், ஒவ்வொரு ஆசிரியர் தேர்வுக்கும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள், தகுதியான படிப்புகள் என்ன என்பன உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய ஆசிரியர் தேர்வுக் கொள்கையும் இப்போது உருவாக்கப்பட்டு வருகிறது.

தகுதியில்லாதவர்களும், வேறு படிப்புகளைப் படித்தவர்களும் ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பித்து ஏமாற்றமடைவதைத் தவிர்க்கவும், ஆசிரியர் தேர்வில் குழப்பங்களைக் களையவும் இது உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு பள்ளிகளில் 6,545 தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க கல்வித்துறை உத்தரவு

எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு நெருங்குவதால் மாணவர்கள் நலன் கருதி 6 ஆயிரத்து 545 தற்காலிக ஆசிரியர்களை உடனடியாக நியமித்துக் கொள்ள கல்வித்துறை முதன்மை செயலாளர் சபீதா உத்தரவிட்டுள்ளார்.
தமிழக பள்ளிகளில் சுமார் 16 ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை பாட வாரிய நியமிக்க இன்னும் சில மாதங்கள் ஆகும் என கூறப்படுகிறது.

இதற்கிடையில், அரையாண்டு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஆண்டு இறுதி தேர்வுக்கும் இன்னும் 4 மாதங்களே உள்ளன. இந்நிலையில், பல பள்ளிகளில் 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு பாடம் நடத்த ஆசிரியர் பற்றாக்குறையாக உள்ளதால், இருக்கிற ஆசிரியர்களை வைத்து சமாளித்து வருகின்றனர். இதனால் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கல்வித்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலன் கருதி, தமிழ், சிறுபான்மை மொழி, வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், இந்திய பண்பாடு மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை 1 ஆகிய பாடங்கள் தவிர இதர பாடங்களில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 645 முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலி இடங்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் தொகுப்பூதியம் அடிப்படையில் தற்காலிக ஆசிரியர்களை நியமித்துக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேபோல் தமிழ் மற்றும் சமூக அறிவியல் தவிர இதர பாடங்களில் உள்ள 3 ஆயிரத்து 900 பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு மாதம் ரூ.4 ஆயிரம் தொகுப்பூதியம் அடிப்படையில் தற்காலிக ஆசிரியர்களை பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நியமித்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புதிய ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படும் வரையோ அல்லது அதிகபட்சமாக 7 மாதங்கள் வரையோ இவர்கள் தற்காலிகமாக பணிபுரிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியத்தை தலைமை ஆசிரியர்கள் மூலம் வழங்க ஏதுவாக ரூ.20.18 கோடி ஒதுக்கீடு செய்தும் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் சபீதா உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து மாவட்ட வாரியாக தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் முதன்மை கல்வி அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இறுதி கட்ட விசாரணையை எதிர்நோக்கும் இரட்டைப்பட்டம் வழக்கு.(25.11.2013)

இரட்டைப்பட்டம் வழக்கு தன்னுடைய இறுதி கட்ட விசாரணையை எதிர் நோக்கி வருகிற 25.11.2013 அன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் முதல் அமர்வில் தலைமை நீதியரசர் மற்றும் நீதியரசர் சத்திய நாராயணா முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது.  வரிசை எண் 21ல் பட்டியிலடப்பட்டுள்ளதால்  காலை அமர்விலே விசாரணை எல்கையை தொட்டு விடும். அரசு தரப்பு மற்றும் மூன்றாண்டு கால படிப்பு வழக்குரைஞர்களின் வாதங்கள்  நடைபெற உள்ளதால் அதன் விசாரணை திங்கள் கிழமை நிறைவடைந்து விடும். தீர்ப்பு ஓரிரு வாரங்களில் வெளியாகும். விசரணையை நிலைமையை தொடர்ந்து அறிந்து கொள்ள நமது வலைத்தள முகவரியான  என்பதுடன் தொடர்பில் இருக்கவும்

	COURT NO. 1
                                 HON'BLE THE CHIEF JUSTICE
                            HON'BLE  MR JUSTICE M. SATHYANARAYANAN
         TO BE HEARD ON MONDAY THE 25TH DAY OF NOVEMBER 2013  AT 10.30 A.M.
				(SITTING IN THE CHIEF JUSTICE'S COURT)
21.    WA.529/2013  M/S. G. SANKARAN              M/S.ROW AND REDDY                     
       (W.A.)       E.RANGANAYAKI                 S.SATISHKUMAR                 
                    B.THINGALAVAL                 V.GOVARDHANAM     
 HIGH COURT OF JUDICATURE AT MADRAS
.

STFI_ ஒரு கோடி கையெழுத்து இயக்கம்


  
இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பாக பெண்களைக் காக்க, பெண்களுக்காக- பத்து லட்சம் பேரிடம் இந்திய நாடு முழுவதும் பெற்ற கையெழுத்து இயக்க படிவங்களை கடந்த 18.11.2013 அன்று இந்திய குடியரசுத் தலைவரை ராஷ்டிரபதி பவனில்சந்தித்து வழங்கிய போது .-அகில இந்திய தலைவர்கள். STFI அகில இந்தியத்துணைத் தலைவரும், திண்டுக்கல் மாவட்ட முன்னாள் TNPTF  மாவட்டச்செயலாளருமான தோழர் கணேசன் உடன் உள்ளார.

11/23/2013

ஏமாற்றம் தரும் டிட்டோ ஜாக் தீர்மானங்கள்


ஆசிரியர் இயக்கங்கள் ஒன்றாக இணைந்து போராட வேண்டும் என விரும்பிய ஆயிரக்கணக்கான ஆசிரியர்களுள் நானும் ஒருவன். இந்த விருப்பம் நிறைவேறியதில் அளவில்லா மகிழ்ச்சி அடைந்தேன். இரண்டு அம்ச கோரிக்கையை மையப்படுத்தி ஒரு மிகப்பெரிய போராட்டம் நிகழப்போகிறது என்ற அளவில்லா சந்தோசத்துடன் டிட்டோ ஜாக் கூட்டம் 9ந் தேதி நிறைவடைந்தது. 20.11.2013 ஆவலுடன் காத்திருக்கிறேன்..... முதல் அமர்வில் மாவட்ட அளவிலான அமைப்பை ஏற்படுத்துவது என முடிவாற்றப்பட்ட என்ற செய்தி சரியான திசையை நோக்கி டிட்டோ ஜாக் நகர்கிறது என்பது புரிந்தது. ஆனால் மாலையில் நடந்த இரண்டாம் அமர்வில் இரண்டு அம்ச கோரிக்கைகளுக்கு பதிலாக 7 அம்ச கோரிக்கை என்பது என்னை மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி விட்டது. இதற்கு ஆயிரம் காரணங்கள் சொன்னாலும் அதை ஏற்க மனது வரவில்லை. அனைவருக்கும் ஏற்ற கோரிக்கை இருந்தால்தான் எல்லாரையும் ஈர்க்க முடியும் என்பது ஏற்றுக்கொள்ள இயலவில்லை. சங்கவாதி என்பவன் யாருக்கு பாதிப்போ அவனுக்காக களத்தில் இறங்க வேண்டும் என்பதை இலட்சியமாக கொள்ள வேண்டும். அதற்காக அனைவரையும் தயார்படுத்த வேண்டும். இந்த 7அம்ச கோரிக்கைகளில் மிகப்பெரிய ஆபத்து நிறைந்துள்ளது. அரசாங்கம் இந்த கோரிக்கைகளில் எளிதான இரண்டு கோரிக்கைகளை நிறைவேற்றி தன்னுடைய ஜனநாயக கடமையை முடித்துக்கொண்டால் இந்த 7 இயக்கங்களில் பாதி போராட்டக்களத்தில் கடைசி வரை நிக்குமா?. நான் இந்த வினாவை ஒரு  ஆசிரியராக இருந்து கேட்கின்றேன். இடைநிலை ஆசிரியர்களின் வாழ்வாதர கோரிக்கை கிடப்பில் போடப்பட்டால் என்ன செய்வது? ஏன் இந்த நிலை மாற்றம்.  இயக்க தலைவர்கள் சற்று சிந்திக்க பணிந்து வேண்டுகிறேன். இது இயக்க தலைமைகளை விமர்சதிப்பதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. எண்ணற்ற இடைநிலை ஆசிரியர்களின் மனதில் தோன்றுகின்ற வினாவாகத்தான் நான் இதை பார்க்கின்றேன். இன்றை நிலையில் களத்தில் சூடாக இருக்கின்ற இடைநிலை ஆசிரியர்களின் ஊதியமாற்ற பிரச்சனைளை கையிலெடுத்து போரட்டக்களத்தில் வீராவேசத்துடன் போராடினால் நிச்சயம் நாம் வென்றெடுக்கலாம். அதை விடுத்து மற்ற கோரிக்கைகளை இத்துடன் இனைத்து போராடுவது என்பது முதன்மை கோரிக்கையின் வலிமை ஆளும் அரசுக்கு புரியாமல் போய்விடும். 7 அம்ச கோரிக்கை என்பது இடைநிலை ஆசிரயர்களை மீண்டும் ஏமாற்ற களத்திற்கு இட்டுச்செல்லும் அபாயம் உள்ளது.  என்னுடைய கருத்தை சொல்வதற்று எனக்கு உரிமை உண்டு என்பதால் இதை பதிவிடுகிறேன். எங்கள் இயக்க பொதுச்செயலாளருக்கும் என்னுடைய அதிருப்தியை அலைபேசி வாயிலாக பதிவு செய்துள்ளேன். இது என்னுடைய தனிப்பட்ட பதிவு மட்டுமே. இது எந்த விதத்திலும் என்னுடைய மாவட்டக்கிளையை கட்டுப்படுத்தாது. எது எப்படி இருந்தாலும் என் இயக்க தலைமை எனக்கு இடும் கட்டளையை என் சிரமேற்கொண்டு நிறைவேற்ற தயாராகவே உள்ளேன். வருகிற திசம்பர் 4ந் தேதி மாவட்ட அமைப்பு கூட்டத்தை எதிர்நோக்கி என் கவனத்தை திசை திருப்பியுள்ளேன். எங்கள் மாவட்டத்திற்கு மாவட்ட தொடர்பாளாராக நியமிக்கப்பட்டுள்ள தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் அவர்களோடு இணைந்து களப்பணியாற்றும் நாளை ஆவலுடன் எதிர் நோக்கி உள்ளேன். கோரிக்கைகள் வென்றெடுக்கு கோடிக்கைகள் இணையட்டும். இறுதி வெற்றி நமதே!
என்றும் இயக்கப்பணியில்........
முத்துப்பாண்டியன்.ஆ
மாவட்டத்தலைவர்@TNPTF

11/21/2013

2002ஆம் ஆண்டு முதல் ஏற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான 3% காலி பணியிடங்களை நிரப்ப - சிறப்பு தேர்வு நடத்த விவரங்கள் கோரி தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு

அரசுப்பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை: பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் பாதிப்பு

மாணவர்களுக்கான பயிற்சியில் கவனம் செலுத்தும் சி.பி.எஸ்.இ.,

தொடர்ச்சியான மற்றும் விரிவான மதிப்பீட்டு செயல்பாட்டை(Continuous and Comprehensive Evaluation - CCE), ஆசிரியர்களுக்கும், பள்ளி முதல்வர்களுக்கும் மேற்கொள்வது வழக்கமான ஒன்றாக இருக்கும் நிலையில், சி.பி.எஸ்.இ., அந்தப் பயிற்சியை மாணவர்களுக்கும் அறிமுகப்படுத்தியுள்ளது.
இப்பணிக்காக தனியார் ஏஜென்சிகள் நாடப்பட்டுள்ளன. இந்த பயிற்சி செயல்பாட்டில், CCE -ன் பலவிதமான அம்சங்களில், 1 நாள் அல்லது 2 நாள் பயிற்சி பட்டறைகள், அந்த ஏஜென்சிகளால் நடத்தப்படும். இந்த பயிற்சி பட்டறைகளில் கலந்துகொள்வது மாணவர்களின் விருப்பம் சார்ந்தது. ஆனால், ஆசிரியர்களுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு, வாழ்க்கைத் திறன்கள், படித்தல் ப்ரோகிராம், புத்தாக்க மற்றும் தலைமைத்துவப் பண்புகள், தகவல்தொடர்பு வியூகங்கள், கேரியர் கவுன்சிலிங், மனநலம் மற்றும் வயதுக்கோளாறு தொடர்பான வழிகாட்டல்கள், படிப்பு தொடர்பான திறன்கள் மற்றும் கற்றல் வியூகங்கள், பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு சுயதிறன் கட்டமைப்பு திட்டங்கள், படைப்பாக்க எழுத்து, கதை சொல்லுதல், எழுதுதல் மற்றும் மொழி பெயர்த்தல், பேரிடர் மேலாண்மை, நிதி பற்றிய அறிவு உள்ளிட்ட பல விஷயங்களின்பால் இந்த CCE பயிற்சி திட்டத்தில் கவனம் செலுத்தப்படும் என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆசிரியர்களின் நியமனத்தை ரத்து செய்யும் உத்தரவுக்குத் தடை

தகுதித் தேர்வு தேர்ச்சி பெறாத ஆசிரியர்களின் நியமனத்தை ரத்து செய்யும் அரசின் உத்தரவுக்கு, மதுரை ஐகோர்ட் கிளை தடை விதித்தது.
மத்திய அரசு இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை (2009) அமல்படுத்தியது. இதன்படி பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் அல்லது பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர்வதற்கு தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,), தகுதித் தேர்வு நடத்துகிறது. இதுவரை 3 தகுதித் தேர்வுகள் நடத்தி முடிவுகள் வெளியாகியுள்ளன.
தகுதித் தேர்வு விதிமுறை அமலுக்கு வந்த பின்னும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் தகுதித் தேர்வு தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை நியமித்து வந்தனர். அவர்களின் நியமனத்திற்கு கல்வித்துறை ஒப்புதல், சம்பளம் வழங்கியது. தமிழக பள்ளிக் கல்வி இயக்குனர் நவ.,7 ல் பிறப்பித்த உத்தரவு:
தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் கிடைக்கப் பெறாததால், சில நிபந்தனைகள் அடிப்படையில், தகுதித் தேர்வு தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை, அரசு உதவி பெறும் பள்ளிகளின் காலிப் பணியிடங்களில் நிரப்பிக்கொள்ளலாம் என்ற கோரிக்கை ஏற்க முடியாது. தகுதித் தேர்வு குறித்த பள்ளிக்கல்வித்துறை அரசாணை (181- 2011 நவ.,15) வெளியான பின், நியமிக்கப்பட்ட 499 ஆசிரியர்களின் பணிநியமனம் ரத்து செய்யப்படுகிறது.
அதன் பின் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆசிரியர்களின் நியமனத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டிருந்தால், மாவட்டக் கல்வி அலுவலர்கள் உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். இதை எதிர்த்து இளையாங்குடி அருகே சாலையூர் ஹமீதியா மேல்நிலை பள்ளி தாளாளர், தேனி நாடார் சரஸ்வதி மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் சுப்பிரமணிய சிவா உட்பட சிலர், மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு:
கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2010 ஏப்.,1 முதல் அமலானது. தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு, தேர்ச்சி பெற 5 ஆண்டுகள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நியமனத்தை ரத்து செய்வது சரியல்ல. பள்ளிக்கல்வி இயக்குனரின் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டனர்.
நீதிபதி எஸ்.நாகமுத்து முன், மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் வக்கீல்கள் ஐசக்மோகன்லால், லஜபதிராய், லூயிஸ் ஆஜராகினர்.
நீதிபதி: 2012 ஆக.,26 க்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் நியமனத்தை ரத்து செய்யும் உத்தரவிற்கும், பள்ளிக் கல்வி இயக்குனரின் உத்தரவிற்கும் தடை விதிக்கப்படுகிறது என்றார்.

தமிழக மாணவிகளுக்கு வாரத்திற்கு ஒருமுறை சத்து மாத்திரை

தமிழகம் முழுவதும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஞாபகசக்தி அதிகரிக்கவும், அரசு பொதுத் தேர்வில் சோர்வு இல்லாமல் படிக்கவும், எதிர்காலத்தில் நல்ல ஆரோக்கியமாக இருக்க வாரத்திற்கு ஒருமுறை இரும்பு சத்து மாத்திரை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான மாத்திரைகள் தூத்துக்குடி உள்ளிட்ட அனைத்து மாவட்டத்திற்கும் அனுப்பப்பட்டு வருகிறது.
தமிழக அரசு கல்வித்துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா லேப்டாப் உள்ளிட்ட 14 வகையான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேசிய சுகாதார இயக்கம் மூலம் மத்திய, மாநில அரசுகள் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
தமிழகம் முழுவதும் 6 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகளில் வைத்து வாரம் தோறும் வியாழக்கிழமை அன்று மாணவ, மாணவிகள் மதியம் சாப்பிட்ட பிறகு ஆசிரியர்கள் முன்னால் வீக்லி அயர்ன் ஹோலிக் ஆசிட் சப்ளிமென்ட்சேன் என்கிற இரும்பு சத்து மாத்திரை வழங்கப்படுகிறது.
இந்த மாத்திரை சாப்பிடும் மாணவ, மாணவிகளுக்கு ரத்த சோகை வராது. நல்ல புத்திசாலி மாணவர்களாக வருவார்கள். நல்ல பசி எடுக்கும் என்பதால் நன்றாக சாப்பிட்டு மாணவ, மாணவிகள் ஆரோக்கியமாக இருப்பதற்கும், சோர்வு என்பது அறவே நீங்குவதற்கும் வாய்ப்பு ஏற்படும் என்று டாக்டர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
அரசு பொதுத்தேர்வில் அதிக மார்க் பெறுவதற்கு வாய்ப்பு ஏற்படும். ஞாபககச்தி மாணவ, மாணவிகளுக்கு அதிகரிக்கும் என்றும், மறதி என்பதே இருக்காது. அந்த அளவிற்கு இந்த இரும்பு சத்து மாத்திரை சூப்பர் பவராக மாணவ, மாணவிகளை ஆக்கிவிடும் என்றும் டாக்டர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
வாரம், வாரம் மாணவ, மாணவிகளுக்கு மாத்திரை வழங்குவதற்காக அனைத்து மாவட்டத்திற்கும் மாத்திரைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்வித்துறை சா ர்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மொத்தம் எவ்வளவு மாணவ, மாணவிகள் படிக்கிறார்கள் என்பதை கண்டறிந்து பள்ளிகள் வாரியாக தேவைப்படும் மாத்திரைகளை அவர்கள் அனுப்பி வைப்பர்.
ஒரு பள்ளிக்கு ஆண்டுக்கு 52 வாரத்திற்குரிய மாத்திரை வழங்கப்பட்டு விடும். வாரம் தோறும் வியாழக்கிழமை ஆசிரியர்கள் முன்பாக மாணவ, மாணவிகள் கட்டாயம் அதனை சாப்பிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பள்ளி செல்ல விடுபட்டவர்களுக்கு சத்துணவு மையங்கள் மூலமாக அயன்சத்து மாத்திரை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கலெக்டர் ரவிக்குமார் ஆலோசனையின் பேரில் சுமார் மூன்றரை லட்சம் மாணவ, மாணவிகளுக்கு இந்த இரும்பு சத்து மாத்திரை வழங்குவதற்கு சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் உமா தலைமையில் சுகாதாரத்துறையினர் ஏற்பாடு செய்து வருவதாக கூறப்படுகிறது.  இந்த திட்டத்தை எப்படி சிறப்பாக செயல்படுத்தலாம் என்பது குறித்து தென் மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை, சுகாதாரத்துறை, சத்துணவுத் துறை உள்ளிட்ட துறை அதிகாரிகளுடன் மதுரையில் ஆலோசனை கூட்டமும் நடந்துள்ளது.
இதனால் இந்த திட்டத்தை செயல்படுத்த அதிகாரிகள் தயார் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. முதல்வர் ஜெ.,இந்த திட்டத்தை சென்னையில் வைத்து துவக்கி வைத்த பிறகு மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்படும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
அனேகமாக புத்தாண்டு பரிசாக பள்ளி மாணவ, மாணவிகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த இந்த திட்டம் வருவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. பள்ளிகள் மூலம் இந்த திட்டம் செயல்படுத்துவதால் திட்டம் நல்ல முறையில் செயல்படுகிறது என்பதை உறுதி செய்து கொள்ளும் வாய்ப்பு இருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சத்து மாத்திரைகளை இளம் பருவத்திலே மாணவிகள் சாப்பிடும் வாய்ப்பு கிடைப்பதால் அவர்கள் திருமணமாகி சென்ற பிறகு குழந்தை பேறுகால காலத்தில் பெண்களுக்கு அதிகமாக ஏற்படும் ரத்தசோகை, ரத்த பற்றாக்குறையால் பிரசவ காலத்தில் சங்கடப்படுவது போன்ற சூழ்நிலை முழுமையாக இல்லாத நிலை ஏற்படும். இதன் மூலம் பெண்கள் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு ஆரம்பத்திலே உறுதி கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இது தவிர ஆறு மாதத்திற்கு ஒருமுறை மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரையும் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த வகை பூச்சி மருந்து மாத்திரைகளும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகளில் வைத்து வழங்கப்படுகிறது. இதன் மூலம் மாணவ, மாணவிகளுக்கு கிருமிகள் ஏற்படாமல் கட்டுப்படுத்தப்படுவதுடன் அவர்களுக்கு நல்ல பசி ஏற்பட்டு நன்றாக சாப்பிடும் வாய்ப்பும், அஜீர கோளாறுகளும் ஏற்படாமல் இருக்கும் வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

சி.பி.எஸ்.இ., பள்ளிகளை அரசின் கட்டுக்குள் கொண்டு வர திட்டம்

தமிழகத்தில் இயங்கும், சி.பி.எஸ்.இ., பள்ளிகளை, மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர, அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ''இந்த விவகாரம் குறித்து, முதல்வர், உரிய முடிவை எடுப்பார்,'' என,பள்ளி கல்வித்துறை செயலர், சபிதா தெரிவித்தார்.
தமிழகத்தில், மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கு அடுத்தபடியாக, சி.பி.எஸ்.இ., பள்ளிகள், அதிகளவில் இயங்கி வருகின்றன. இரு ஆண்டுகளுக்கு முன் வரை, 250 பள்ளிகள் வரை தான் இருந்தன. தற்போது, 300ஐ தாண்டி விட்டன. இரு ஆண்டுகளில், 100 பள்ளிகளுக்கு, தடையில்லா சான்றிதழ்களை,பள்ளி கல்வித் துறை வழங்கி உள்ளது.தமிழகத்தில், தமிழகத்தைச் சேர்ந்தவர்களால் தான், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் நடத்தப்படுகின்றன. ஆனால், தமிழக அரசின் எந்த விதிமுறைகளுக்கும் கட்டுப்படாமல்,தனி ராஜ்ஜியமாக, இந்த பள்ளிகள் இயங்கி வருகின்றன. சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கான கல்வி கட்டணத்தை, கட்டண நிர்ணய குழு நிர்ணயிக்கிறது. எனினும், அனைத்து சி.பி.எஸ்.இ.,பள்ளிகளும், இந்த வரம்பிற்குள் வருவதில்லை.மாணவர் சேர்க்கையிலும், எவ்வித வரன்முறையும் இல்லாமல், தாங்கள் நினைத்தபடி, எவ்வளவு மாணவர்களை வேண்டுமானாலும் சேர்க்கின்றனர். சமீபத்தில், 'சி.பி.எஸ்.இ., பள்ளிகள் துவங்க, மாநில அரசுகளிடம், தடையில்லா சான்றிதழ் வாங்கத் தேவையில்லை' என, சி.பி.எஸ்.இ., போர்டு அறிவித்தது, சி.பி.எஸ்.இ., பள்ளி நடத்துவோரிடையே, மேலும், குஷியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சி.பி.எஸ்.இ., பள்ளிகளை, மாநில அரசின் கட்டுக்குள் கொண்டுவர, கல்வித்துறை அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. இது குறித்து, பள்ளி கல்வித்துறை செயலர், சபிதா கூறியதாவது:
மாநில அரசின் விதிமுறைகள், சட்ட திட்டங்கள்,சி.பி.எஸ்.இ., பள்ளிகளையும் கட்டுப்படுத்தும்' என, சி.பி.எஸ்.இ.,சட்டத்திலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, கல்வி கட்டணம்,மாணவர் சேர்க்கை உள்ளிட்ட விவகாரங்களில், சி.பி.எஸ்.இ.,பள்ளிகளை, ஒழுங்குபடுத்தும் வகையில், தமிழக அரசு, நடவடிக்கை எடுக்க, திட்டமிட்டுள்ளது.இந்த கருத்தை, முதல்வரின் கவனத்திற்கு, கொண்டு செல்ல உள்ளோம். அப்போது, முதல்வர்,உரிய முடிவை எடுப்பார்.இவ்வாறு, சபிதா தெரிவித்தார்.
அரசின் முடிவு குறித்து, செயின்ட் ஜான்ஸ் குழும பள்ளிகளின்,முதுநிலை முதல்வர், கிஷோர்குமார் கூறுகையில், ''தமிழக அரசின் முடிவை வரவேற்கிறோம். மத்திய அரசு என்ன சொல்கிறதோ,அதைத்தான், தமிழக அரசும் கூறுகிறது. எனவே, தமிழக அரசின் Advertisement விதிமுறைகளை பின்பற்றுவதில், எங்களுக்கு, எந்த பிரச்னையும் இருக்கப் போவதில்லை,'' என, தெரிவித்தார்.
கல்வியாளர், ராஜகோபாலன் கூறியதாவது: கர்நாடகத்தில், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் உட்பட அனைத்து வகை பள்ளிகளும்,மாநில அரசின் கட்டுப்பாட்டில், பல ஆண்டுகளாக இயங்கி வருகின்றன. பேராசிரியர் யஷ்பால் குழு, 'சி.பி.எஸ்.இ.,பள்ளிகளுக்கான பாட திட்டங்களை மட்டும், சி.பி.எஸ்.இ., போர்டு வழங்கினால் போதும்; இதரபணிகளை, அந்தந்த மாநில அரசுகளே கவனிக்கலாம்' என, தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நியமிக்கப்பட்ட மத்திய குழுவும், 'சி.பி.எஸ்.இ., பள்ளிகள், மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் செயல்படலாம்' என,தெரிவித்துள்ளது. எனவே, சி.பி.எஸ்.இ., பள்ளிகளை, தமிழக அரசின் கட்டுக்குள் கொண்டு வருவதில், தவறு ஒன்றும் இல்லை.இவ்வாறு, ராஜகோபாலன் தெரிவித்தார்.
நடப்பு கல்வி ஆண்டு இறுதிக்குள், சி.பி.எஸ்.இ., பள்ளிகளை,தமிழக அரசின் கட்டுக்குள் கொண்டு வருவதற்கான விதிமுறைகள் வெளியிடப்படும் என்றும், அடுத்த கல்வி ஆண்டில் இருந்து, சி.பி.எஸ்.இ., பள்ளிகள், தமிழக அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் என்றும், கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தற்கொலைக்கு முயலும் மாணவர்கள். அலரும் ஆசிரியர்கள்

குரூப்-2 தேர்வுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு

சென்னை: டிச., 1ல் நடக்க உள்ள குரூப் - 2 தேர்வுக்கு, அரசுப் பணியாளர் தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி.,) இணையதளத்தில், நேற்று, ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டது.
சார் பதிவாளர், வணிக வரித்துறை உதவி அலுவலர், தொழிலாளர் நல ஆய்வாளர், இந்து அறநிலையத்துறை அலுவலர், வேலைவாய்ப்பு இளநிலை அலுவலர் உள்ளிட்ட பதவிகளில், காலியாக உள்ள, 1,060 பணியிடங்களை நிரப்ப, டிச., 1ல், போட்டித் தேர்வு நடக்கிறது. 7.5 லட்சம் பேர், தேர்வை, எழுத உள்ளனர். இவர்களுக்கான ஹால் டிக்கெட் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in), நேற்று வெளியிடப்பட்டது.
தேர்வர்கள், தங்களது பதிவு எண்களை பதிவு செய்து, ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TET தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு நாளை வேலைவாய்ப்பு பதிவு விவரம் சரிபார்ப்பு

மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு திட்டம் தலைமை ஆசிரியர்களுக்கு ரூ.8 ஆயிரம் செலவு

பள்ளிக் கல்வித் துறையில் அரசு 16 வகையான இலவச திட்டங்களை செயல்படுத்துகிறது. இது போக மாணவர்கள் பற்றிய முழு விபரங்களை பதிவு செய்யும், தகவல் மேலாண்மை முறைமை (இஎம்ஐஎஸ்) திட்டத்தையும் செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. இத்திட்டத்தின் கீழ் மாணவர்களின் விபரங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, அவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். அந்த கார்டு மூலம் மாணவர் பற்றிய முழு விபரங்களையும் எளிதாக கண்டறிய முடியும்.தற்போது, இந்த பணிகளுக்காக தமிழகம் முழுவதும் ஆரம்ப, நடுநிலைப்பள்ளிகளில் மாணவர்களின் விபரங்கள் 30.9.12ம் தேதி அடிப்படையில் சேகரிக்கப்பட்டுள்ளது. இவற்றை இணையதளத்தில் பதிவு செய்ய ஒரு மாணவருக்கு ரூ.15 வீதம் தலைமை ஆசிரியருக்கு செலவாகியுள்ளது.

அதன்பின், மேலும் மாணவர்கள் விபரங்களை சேர்ப்பதற்கு ஒவ்வொரு பள்ளிக்கும் குறுந்தகடு வழங்கப்பட்டு, 2 நாள் அவகாசத்தில் உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதற்கான செலவையும் பள்ளி தலைமை ஆசிரியர்களே செய்தனர்.இந்நிலையில் 30.4.2013 நிலவரப்படி தகவல் தருமாறு கோரப்பட்டது. மேலும், மாணவர்களின் புகைப்படமும், ஆதார் எண்ணும் பதிவு செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டது. இதனால் ஒரு மாணவருக்கு மேலும் ரூ.20 என்ற வீதம் தலைமை ஆசிரியர்கள் செலவு செய்துள்ளனர்.இது தவிர ஆரம்பப்பள்ளிகளில் கடந்த ஆண்டு 5ம் வகுப்பும், நடுநிலைப்பள்ளிகளில் 8ம் வகுப்பும் முடித்த மாணவர்கள் உயர்கல்விக்காக வேறு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். இந்த வகை மாணவர்களின் புகைப்படத்தையும், ஆதார் எண்ணையும் சேகரிப்பதில் மிகுந்த நடைமுறை சிக்கல்களை தலைமை ஆசிரியர்கள் சந்தித்துள்ளனர். சேகரிப்பதற்கான கால அவகாசமும் வழங்கப்படவில்லை.

இதனால், தமிழகம் முழுவதும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு குறைந்தது ஆயிரம் ரூபாய் முதல் 8 ஆயிரம் ரூபாய் வரை செலவு ஏற்பட்டதாக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயலாளர் முருகேசன், செயலாளர் சுடலைமணி உள்ளிட்ட நிர்வாகிகள் தெரிவித்தனர்.இந்த பணிகளை செய்வதற்கு கிராமப்பகுதியில் வசதி குறைவாக உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள், புகைப்பட கலைஞர் மற்றும் கணினி படித்தவர்களை தேடி அலையும் நிலை உள்ளதால் கற்றல், கற்பித்தல் பணியும் பாதிக்கப்படுகிறது என அவர்கள் கூறுகின்றனர்.அதேபோல பல நூறு கோடி ரூபாய் மதிப்பில் புத்தகப்பை, புத்தகங்கள், காலணி, சீருடை போன்ற பெரிய இலவச திட்டங்களை கல்வித்துறை செயல்படுத்தும் போது அவற்றை பள்ளிகளுக்கு எடுத்து செல்வதற்கான வழிச் செலவினங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் அவர்கள் அரசை வலியுறுத்தி உள்ளனர்.

தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோஜேக்) –ன் பொதுக்குழு கூட்டம்

தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோஜேக்) –ன் பொதுக்குழு கூட்டம் 20.11.2013 புதன் காலை 11.00 மணி அளவில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி அலுவலகத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாலர் திரு.செ.முத்துசாமி அவர்கள் தலைமை யேற்றார். தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி,தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் மன்றம், தமிழக ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூடடணி, தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம் ஆகிய ஏழு அமைப்புகளின் சார்பில் உயர் மட்டக் குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1. டிட்டோஜேக் கூட்டமைப்பு மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு கூட்டத்தை 04.12.2013 புதன் அன்று மாலை தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கூட்டுவதெனவும்.., 2. மாவட்ட அமைப்பாளராகப் பொறுப்பெற்று கூட்டமைப்பை ஒருங்கிணைத்து வழிநடத்திட சங்க வாரியாக கீழ்கண்ட மாவட்டங்களுக்கு ஒதுக்கீடு 1. ஆறாவது ஊதிய குழுவில் நடுவனரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கியுள்ள ஊதியத்தை தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்களுக்கு 01.01.2006 முதல் தமிழக அரசும் வழங்கிட வேண்டும். 2. பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தை முற்றிலும் இரத்து செய்திட வேண்டும். 3. ஆறாவது ஊதியக் குழுவில் தேர்வுநிலை, சிறப்பு நிலைக்கு தனியாக ஊதிய விகிதமும், தர ஊதியமும், நிர்ணயம் செய்திட வேண்டும். 4. (அ) FR 22 ன் படி பதவி உயர்வுக்கு 6% வழங்கிட வேண்டும் (ஆ) FR 4(3) விதியை நடைமுறைப்படுத்திட வேண்டும். 5. ஆசிரியர் தகுதித்தேர்வை (TET) உடனடியாக இரத்து செய்து வேலைவாய்ப்பக முன்னுரிமைப்படி ஆசிரியர் நியமனங்களை அமல்படுத்திட வேண்டும். 6. இலவச கட்டாய கல்வி சட்டத்தின் படி தொடக்க கல்வியில் தமிழ்வழி கல்வி முறை தொடர்ந்திட வேண்டும். 7 . அனைத்து நடுநிலைப்பள்ளிகளிலும் தமிழ் ஆசிரியர், வரலாறு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு, பதவி உயர்வின் மூலம் நிரப்பிட வேண்டும்.

11/20/2013

டிட்டோ - ஜாக் கூட்டம் - மாவட்டங்கள் பங்கீடு

சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் டிட்டோ-ஜாக் மாவட்ட தொடர்பாளாராக செயல்படுவார்கள்.

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி

நாமக்கல்,ஈரோடு,திருப்பூர்,மதுரை,மற்றும் சென்னை ஆகிய 5 மாவட்டங்கள்

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

சிவகங்கை,தர்மபுரி, இராமநாதபுரம்,பெரம்பலூர்,திருவள்ளூர் ஆகிய 5 மாவட்டங்கள்

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்

நாகை,திருவாரூர்,கிருஷ்ணகிரி,திருநெல்வேலி ஆகிய 4 மாவட்டங்கள்

தமிழக ஆசிரியர் கூட்டணி

அரியலூர்,திண்டுக்கல்,சேலம்,நீலகிரி  ஆகிய 4 மாவட்டங்கள்

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

தேனி,காஞ்சிபுரம்,விருதுநகர்,தூத்துகுடி, கன்யாகுமரி ஆகிய 5 மாவட்டங்கள்

தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

தஞ்சாவூர்,திருச்சி,புதுக்கோட்டை,கரூர் ஆகிய 4 மாவட்டங்கள்

தமிழ்நாடு தொடக்கநடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம்

திருவண்ணாமலை,வேலூர்,விழுப்புரம்,கடலூர் ஆகிய 4 மாவட்டங்கள்

டிட்டோ-ஜாக் கூட்டத்தில் தலைவர்கள்கருத்து பரிமாற்றம்.

திருமிகு.பாலசந்தர்
டிட்டோ-ஜாக் கூட்டத்தில் தலைவர்கள்
திருமிகு.செ.முத்துசாமி
திருமிகு.ரெங்கராஜன்
திருமிகு.தியோடர் ராபின்சன்
திருமிகு.விசெண்ட் பால்ராஜ்
திருமிகு.தாஸ்
திருமிகு.சேகர்
                 

டிட்டோ-ஜாக் இன்றைய (20.11.2013) கூட்டத்தின் முதல் அமர்வு முடிவுகள்

இன்றைய கூட்டம் முத்துச்சாமி அரங்கில் கூடியது. இன்றைய முதல் அமர்வில் ஒவ்வொரு இயக்கமும் தலா 4 மாவட்டங்களை பிரித்துக்கொள்வது எனவும் எஞ்சியுள்ள 3 மாவட்டங்களை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி போன்ற இயக்கஙகள் பங்கிட்டு கொள்வது என முடிவு செய்யப்பட்டது..முதலில் மாவட்ட அமைப்பு ஏற்படுத்த முடிவு எட்டப்பட்டது.  மதிய அமர்வு மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது. அதில் இரண்டு கோரிக்கைகளோடு இன்னும் சில கோரிக்கைகள் சேர்க்க கலந்தாலோசிக்கப்படும் என தெரிகிறது. மற்ற பணி நிலை ஆசிரியர்களை ஈர்ப்பதாக அது அமையும். மாவட்ட கூட்டங்களில் மாநில நிர்வாகிகள் பங்கேற்க முடிவாற்றப்பட்டது. மாவட்ட அமைப்பு கூட்டங்களை டிசம்பர் 4ந் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டது.

தரம் உயர்ந்தும் பணியிடம் இல்லை

அரசு பொது விடுமுறை நாட்கள் - தமிழக அரசு வெளியீடு

58 சதவீத மாணவர்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு

கொத்தடிமை ஊதியத்தில் பட்டதாரி ஆசிரியர்கள்

நீதி மன்ற வழக்குகளை கண்காணிக்க கண்காணிப்பாளர் நியமனம் - TRB

சிறந்த அறிவியல் கண்டுபிடிப்பு - நத்தம் மாணவர்கள் தேர்வு

பேரணாம்பட்டு அருகே மாணவனை பிரம்பால் அடித்த ஆசிரியர் மீது 3 பிரிவுகளில் வழக்கு

பேரணாம்பட்டு அருகே உள்ள அணங்காநல்லூர் மோட்டூர் நிலையத்தை சேர்ந்த ஆனந்தன் மகன் நவீன் (வயது 9). பல்லலகுப்பம் தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறான்.
நேற்று முன்தினம் பள்ளியில் ஆசிரியர் கலையரசன் மாணவன் நவீனை பிரம்பால் முதுகு மற்றும் உடம்பில் அடித்தார். வீட்டுக்கு சென்ற மாணவன் மயக்கமடைந்தான்.
இதனையடுத்து நவீன் குடியாத்தம் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான். இதுபற்றி மாணவனின் பெற்றோர் பேரணாம்பட்டு போலீசில் புகார் செய்தனர்.
இந்த நிலையில் வேலூர் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அதிகாரி ரங்கநாதன் ஆஸ்பத்திரிக்கு சென்று மாணவனை பார்வையிட்டார்.
மேலும் சம்பந்தபட்ட பள்ளிக்கு சென்று ஆசிரியர்களிடம் விசாரித்தார். பள்ளிகளில் குழந்தைகளை அடிக்க கூடாது. அன்பு, அரவணைப்பு மூலம் திருத்த வேண்டும். மீறினால் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக பேரணாம்பட்டு போலீசார் ஆசிரியர் கலையரசன் மீது இளம் சிறார் பாதுகாப்பு சட்டம், கல்வி உரிமை சட்டம் உள்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கலையரசன் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாமல் பணியாற்றும் 499 ஆசிரியர்கள் பணியில் நீடிக்க கூடாது: பள்ளி கல்வித்துறை உத்தரவு

தமிழ்நாட்டில் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகள், அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளிகள், அரசு உதவிபெறும் உயர்நிலைப்பள்ளிகள், அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள் என்று 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணி புரிகிறார்கள்.

கல்வித்தரம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக 14 வயது வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும், ஆசிரியர் தகுதி தேர்வை அந்தந்த மாநில அரசுகள் நடத்த வேண்டும் என்றும் 2009-ம் ஆண்டு மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தது. இதை தமிழக அரசு கடந்த 2011-ம் ஆண்டு நவம்பர் மாதம் 15-ந் தேதி முதல் அமல்படுத்தி வருகிறது.

அதன்படி 2011-ம் ஆண்டு நவம்பர் மாதம் 11-ந் தேதிக்கு பின்னர் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தகுதி தேர்வில் வெற்றி பெறாதவர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டிருந்தால் அந்த நியமனம் செல்லாது என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி சதவீதம் குறைவாக உள்ளதால் தேர்ச்சி பெற்றவர்கள் அனைவரும் அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பணியில் தான் சேருகிறார்கள். அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர யாரும் முன்வருவதில்லை.

இந்த நிலையில் 2011-ம் ஆண்டு நவம்பர் 15-ந் தேதிக்கு பின்னர் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்ந்த இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் நியமனம் செல்லத்தக்கது அல்ல. இருப்பினும் மாணவர்கள் நலன் கருதி அவர்களுக்கு விதி விலக்கு அளிக்கலாமா என்று பள்ளி கல்வித்துறை ஆலோசித்தது.

ஆனால் அதற்கு வழி வகுக்காமல் 2011-ம் ஆண்டு நவம்பர் மாதம் 15-ந் தேதிக்கு பின்னர் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்ந்த இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணி செல்லத்தக்கது அல்ல என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து நீதிமன்ற முடிவை ஏற்று பள்ளி கல்வித்துறை தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பி உள்ளது.

அதில் 2011-ம் ஆண்டு நவம்பர் மாதம் 15-ந் தேதிக்கு பின்னர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாமல் பணியாற்றும் 499 ஆசிரியர்கள் பணியில் நீடிக்கக்கூடாது என்று கூறி உள்ளது.

11/19/2013

மீண்டும் குழந்தை தொழிலாளர்களாக மாறும் மாணவர்களை தடுக்க கோரிக்கை

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சிறார் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் மீண்டும் குழந்தை தொழிலாளர்களாக மாறி வருவதை தடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வறுமை மற்றும் பல்வேறு காரணங்களால் பள்ளிக்கு செல்லாமல், பல குழந்தைகள் பல்வேறு கூலி வேலைகளுக்கு சென்று வருகின்றனர். மேலும், ஒரு சில குழந்தைகள் சிறு வயது முதல் பேப்பர் பொறுக்குதல், மது பாட்டில்களை சேகரித்து விற்பனை செய்தல் போன்ற செயல்களை செய்து வருகின்றனர். இவர்கள் சமூக விரோதிகளாகவும் மாறி வருகின்றனர்.
இந்நிலையில், பள்ளியில் இடைநின்று குழந்தை தொழிலாளர்களாக மாறும் குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சிறார் பள்ளிகள் யூனியனுக்கு இரண்டு என்று மொத்தம் 20 பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டது.
குழந்தை தொழிலாளர்களை அதிகாரிகள் கண்டறிந்து இப்பள்ளிகளில் சேர்த்து வந்தனர். இந்த ஆண்டு மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட குழந்தை தொழிலாளர்கள் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டு அவர்களை சிறப்பு பள்ளியில் சேர்த்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் பல குழந்தை தொழிலாளர் சிறப்பு பள்ளிகளில் நாள் ஒன்றுக்கு நான்கு மாணவர்களுக்கு மேல் பள்ளிக்கு வருவதில்லை. பள்ளிக்கு வராத மாணவர்களுக்கும் வருகை பதிவை போட்டு அங்கு பணியில் உள்ள ஆசிரியர்கள் மாத சம்பளம் வாங்குகின்றனர்.
குறிப்பாக, காவேரிப்பட்டணம் ஜீவாநகர் மற்றும் அம்பேத்கார் நகர் ஆகிய, இரண்டு இடங்களில், அதிக அளவில் குழந்தை தொழிலாளர்கள் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டு அங்கு குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சிறார் பள்ளிகளில் 50 குழந்தைகள் படிப்பதாக வருகை பதிவேட்டில் உள்ளது.
இந்த, இரண்டு பள்ளிகளிலும் சேர்க்கப்பட்ட மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்லாமல் மீண்டும் தொழிற்சாலைகளுக்கும், பேப்பர் பொறுக்குதல், பாட்டில் பொறுக்குதல் போன்றவற்றை செய்து வருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது.
மாவட்டத்தில் உள்ள அனைத்து குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சிறார் பள்ளிகளில் ஒவ்வொரு நாளும் எவ்வளவு மாணவர்கள் வருகின்றனர்; எத்தனை பேர் வருவதில்லை என்பதை அந்தந்த வட்ட உதவி திட்ட கல்வி அலுவலர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், மாவட்ட திட்ட அலுவலர்கள் ஆகியோர் ஆய்வு செய்ய வேண்டும், என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆய்வில், மாணவர்கள் இல்லாமல் பொய்யான வருகை பதிவை போடும் சிறப்பு பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்து எந்த நோக்கத்திற்காக சிறார் சிறப்பு பள்ளிகள் தொடங்கப்பட்டதோ அந்த நோக்கத்தை நிறைவேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அரையாண்டுத் தேர்வு: குறைந்த மதிப்பெண் பெறும் 10, பிளஸ் 2 மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி

"அரையாண்டுத்தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெறும் 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு ஒன்றிய வாரியாக சிறப்பு பயிற்சியளிக்கப்பட உள்ளதாக" விருதுநகர் மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி ஜெயக்குமார் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: "10,11,12ம்வகுப்பு மாணவர்களுக்கு இரண்டாம் பருவ இடைத்தேர்வுகள் இன்று(நேற்று) துவங்கி உள்ளன. இத்தேர்வு முடிந்து பாட ஆசிரியர் அந்த விடைத்தாளை திருத்தியபின் சில மாணவர்களின் வினாத்தாள் திருத்தப்பட்டதை தலைமையாசிரியர் மீண்டும் சரிபார்ப்பார். இடைத்தேர்வில் குறைவான தேர்ச்சி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு டிசம்பர் முதல் வாரத்தில் பயிற்சியளிக்கப்படும்.
அரையாண்டுத்தேர்வில் குறைவான தேர்ச்சிபெறும் அரசு, அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஜனவரி 2வது வாரத்தில் பயிற்சியளிக்கப்படும்.
அரையாண்டுத்தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்ற பள்ளி மாணவர்களை கண்டறிந்து அவர்களை இறுதித்தேர்வில் அதிக மதிப்பெண் பெற வைக்கும் நோக்கில் ஜனவரி இறுதி அல்லது பிப்ரவரியில் ஒன்றிய வாரியாக அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களைக்கொண்டு பயிற்சியளிக்கப்பட உள்ளது.
புயல், மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 10ம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வு நவ.,24ல் நடக்கிறது. இதில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு ஆராய்ச்சி படிப்பு வரை அரசு கல்வி உதவி கிடைக்கும்" என்றார்.