பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

12/24/2015

2016-ம் ஆண்டில் வெள்ளி, திங்கள்கிழமைகளில் அரசு விடுமுறை தினங்கள்

சென்னை 
2016-ம் ஆண்டில் தமிழக அரசு அறிவித் துள்ள 9 அரசு விடுமுறை தினங்கள், வெள்ளி மற்றும் திங்கள் கிழமைகளில் வருவதால், அரசு ஊழியர்கள், பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சியடைந்துள் ளனர். 
2016-ம் ஆண்டுக்கான தமிழக அரசு விடுமுறை நாட்களை தமிழக தலைமைச் செயலர் கு.ஞானதேசிகன் வெளியிட்டுள்ளார். 
தமிழக அரசு அலுவலகங்கள், தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கி கள் உட்பட அனைத்து வர்த்தக வங்கி களுக்கும், பொதுத்துறை நிறுவனங்கள், அரசு கழகங்கள், வாரியங்களுக்கும் இந்த விடுமுறை பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
அரசு அறிவித்துள்ள விடுமுறை அடிப்படையில், ஜனவரி 1-ம் தேதி புத்தாண்டு, மார்ச் 25ம் தேதி புனிதவெள்ளி, வங்கிக்கணக்கு முடிப்பு நாள் ஏப்ரல் 1-ம் தேதி, தெலுங்கு வருடப்பிறப்பு ஏப்ரல் 8-ம் தேதி ஆகியவை வெள்ளிக்கிழமையில் வருவதால், தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் விடுமுறை இருக்கும். 
அதேபோல், சுதந்திரதினம், விநாயகர் சதுர்த்தி, மிலாடிநபி ஆகியவை திங்கள் கிழமைகளில் வருவதாலும் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைக்கும். தீபாவளி, கிறிஸ்துமஸ், காந்தி ஜெயந்தி, மே தினம், உழவர் திருநாள், திருவள்ளுவர் தினம் ஆகியவை வார விடுமுறை தினங்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வருவது குறிப்பிடத்தக்கது. 

Dinamani news


சிவகங்கை மாவட்டச் செயற்குழு கூட்டம் இன்றைய (24.12.15) தினமலரில் செய்தி


நமது கோரிக்கை இன்றைய (24.12.2015) தினகரனில்


12/22/2015

சிவகங்கை மாவட்டச் செயற்குழு எதிரொலி .பள்ளிகளில் துப்புரவு பணியாளர் நியமனத்திற்கு நிதி ஒதுக்கீடு

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, சிவகங்கை மாவட்டச் செயற்குழு பள்ளிகளில்  துப்புரவு பணியாளர் நியமிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி தொடர்ந்து தமிழக அரசை வலியுறுத்தி வந்தது. இதன் காரணமாக அரசு துப்புரவு பணிக்கு நிதி ஒதுக்கி ஆணை வெளியிட்டுள்ளது. அரசாணை எண் 151ன் படி
ஆரம்பப்பள்ளிக்கு - ரூ1050
நடுநிலைப்பள்ளிக்கு - ரூ1500
உயர்நிலைப்பள்ளிக்கு - ரூ2250
மேல்நிலைப்பள்ளிக்கு - ரூ3000
என நிதி ஒதுக்கி அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இந்த நிதி பள்ளிகளுக்கு விரைவில் வழங்கப்படும். மாணவர் எண்ணிக்கையின் அடிப்படையில் நிதி ஒதுக்க வேண்டும் என மீண்டும் கோரிக்கை வைத்துள்ளோம்

அரசு உதவி பெறும் பள்ளிகளின் வேலை நாட்கள் குறித்து இயக்குனருடன் பொதுச்செயலாளர் பேச்சு

தமிழ்நாட்டில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளின் வேலை நாட்கள் காலண்டலர் ஆண்டின் அடிப்படையில் ஜனவரி முதல் டிசம்பர் வரை உள்ள நாட்கள் கணக்கிடப்படுகிறது. அதன் அடிப்படையில் இந்தாண்டு சில பள்ளிகள் முழுமையான வேலை நாட்களை எட்ட இயலாத சூழல் உள்ளதாகவும் இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் திரு.பாலச்சந்தர் அவர்கள் மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குநரிடம் முறையிட்டார்கள். அதற்கு இயக்குநர் அவர்கள் வேலை நாட்கள் குறைவு குறித்து மாவட்டம் வாரியாக கணக்கெடுத்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக பொதுச்செயலாளர் அவர்களிடம் உறுதியளித்துள்ளார்கள். எனவே வேலை நாடகள் பற்றாக்குறை குறித்து உதவி பெறும் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கவலைகொள்ள தேவையில்லை நன்பர்களே. தொடர்ந்து பல்வேறு விசயங்கள் குறித்து விவாதிக்க வருகிற 29.12.2015க்குள் தொடக்கக்கல்வி இயக்குநரை நேரடியாக சந்திக்க பொதுச்செயலாளர் திட்டமிட்டுள்ளாரக்ள் தோழமைகளே...

சிவகங்கை மாவட்டச் செயற்குழு கூட்டம் செய்தி தினத்தந்தியில்


சிவகங்கையில் ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டம்

சிவகங்கையில் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி  மாவட்ட செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் தாமஸ் அமலநாதன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் புரட்சித்தம்பி முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலர் முத்துப்பாண்டியன் வரவேற்றுப் பேசினார். இதில், 2016ஆம் ஆண்டு பிப்ரவரியில் கோவில்பட்டியில் நடைபெறும் மாநில மாநாட்டில் மாநில பொறுப்பாளர்கள் அனைவரும் பங்கேற்பது, மத்திய அரசு அமல்படுத்த உள்ள புதிய கல்விக் கொள்கையின் ஆபத்துகள் குறித்து மாவட்ட அளவில் கருத்தரங்குகள் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்டப் பொருளாளர் குமரேசன், மாநில செயற்குழு உறுப்பினர் வேதராஜசேகரன், வட்டாரச் செயலர்கள் பால்துரை, ஜேம்ஸ்கென்னடி, ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

12/21/2015

சிவகங்கை மாவட்டச் செயற்குழு கூட்டம் செய்தி தினகரனில்


சிவகங்கை மாவட்டம் பொதுக்குழு அழைப்பிதழ்


13.12.2015 - மாநிலச் செயற்குழு முடிவுகள்




வருந்துகிறோம்

வருந்துகிறோம்
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, சிவகங்கை மாவட்டத் துணைச்செயலாளர் திரு.வி.சி.சண்முகம் அவர்களின் சகோதரர் இயற்கை எய்திய செய்தி கேட்டு மாவட்ட கிளை மிகுந்த வருத்தமடைகிறது. அவரது குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த வருத்தத்தை இயக்கம் தெரிவித்துக்கொள்கிறது. இறுதிச்சடங்கு சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் ஒன்றியம், புழுதிப்பட்டியில் இன்று(21.12.15) முற்பகல் 11.00 மணிக்கு நடைபெறும் என தெரிவித்துக்கொள்கிறோம்.
துயரத்தில் பங்கெடுக்க அலைபேசி எண்: 9787753344

19.12.2015 சிவகங்கை மாவட்டச் செயற்குழு முடிவுகள்


12/18/2015

தேர்தல் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்காமல் இழுத்தடிப்பு - தினகரன் செய்தி வெளியீடு.


தேர்தல் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்காமல் இழுத்தடிப்பு - The New Indian express செய்தி வெளியீடு

அரையாண்டு தேர்வுகள் அட்டவணை வெளியீடு


சென்னை: மழையால் ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுகள், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 11ம் தேதி துவங்கி, 27ம் தேதி வரை நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ளது. தற்போது தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் டிசம்பர் மாதம் 7ம் தேதி அரையாண்டுத் தேர்வுகள் வழக்கமாக நடைபெறும். இதற்காக தயாராகி வந்த நிலையில் நவம்பர் 8ம் தேதி முதல் சென்னை, கடலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி டெல்டா மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்தது. இதனால் தேர்வுகள் ஜனவரி மாதம் நடைபெறும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார், அதன்படி பிளஸ் 2 வகுப்புக்கான அரையாண்டுத் தேர்வு ஜனவரி 11ம் தேதி தொடங்குகின்றன. மாநிலம் முழுவதும் பொதுவாக நடைபெறும் இந்தத் தேர்வுகளுக்கான கால அட்டவணையை பள்ளிக் கல்வி இயக்ககம் இன்று வெளியிட்டுள்ளது. பிளஸ் 2 வகுப்புக்கான கால அட்டவணை விவரம்:
ஜனவரி 11 - மொழிப்பாடம் முதல் தாள்
ஜனவரி 12 - மொழிப்பாடம் இரண்டாம் தாள்
ஜனவரி 13 - ஆங்கிலம் முதல் தாள்
ஜனவரி 14 - ஆங்கிலம் இரண்டாம் தாள்
ஜனவரி 18 - வணிகவியல், வீட்டு மனையியல், புவியியல்
ஜனவரி 19 - கணிதம், விலங்கியல், மைக்ரோ பயாலஜி,
ஜனவரி 21 - இயற்பியல், பொருளாதாரம்,
ஜனவரி 22 - வேதியியல், கணக்குப் பதிவியல்,
ஜனவரி 25 - உயிரியல், தாவரவயில், வரலாறு, வணிகக் கணிதம்
ஜனவரி 27 - கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ-கெமிஸ்ட்ரி, புள்ளியியல்,
தேர்வுகள் காலை 10 முதல் 1.15 வரை நடைபெறும். இதில் முதல் 10 நிமிடங்கள் வினாத்தாளைப் படித்துப் பார்க்கவும், அடுத்த 5 நிமிடங்கள் விடைத்தாளில் உள்ள விவரங்களைப் பூர்த்தி செய்யவும் வழங்கப்படும்.
10ம் வகுப்பு அரையாண்டு தேர்வுகள் அட்டவணை:
ஜனவரி 11 - மொழிப்பாடம் முதல்தாள்
ஜனவரி 13 - மொழிப்பாடம் 2ம் தாள்
ஜனவரி 18 - ஆங்கிலம் முதல் தாள்
ஜனவரி 20 - ஆங்கிலம் 2ம் தாள்
ஜனவரி 22 - கணிதம்
ஜனவரி 25 - அறிவியல்
ஜனவரி 27 - சமூக அறிவியல்
அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வு 10 முதல் 12ம் வகுப்பு தேர்வுகளுடன் சேர்த்து 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கும் ஜனவரி 11-ல் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேதிகளுக்கு முன்னர் அரையாண்டு தேர்வுகள் நடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அறிவித்துள்ளார்.

தேர்தல் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்காமல் இழுத்தடிப்பு - தினத்தந்தி செய்தி வெளியீடு


12/17/2015

இரண்டாம் பருவத் தேர்வு விடுமுறையில் மாற்றம் இல்லை.

தேர்வு விடுமுறை டிசம்பர் 23 முதல் ஜனவரி 1 வரை
ஜனவரி 2 பள்ளி மீண்டும் திறப்பு
ஜனவரி 4 முதல் இரண்டாம் பருவத் தேர்வு எதிர்பார்ப்பு

ஜேக்டோ கூட்டம் முடிவுகள்

1. டிசம்பர் மாவட்ட மறியல் மழை வெள்ள பாதிப்பால் ஜனவரி 30, 31, மற்றும் பிப்ரவரி முதல் தேதிக்கு மாற்றம்.
2. மாவட்ட ஜேக்டோ கூட்டத்தை உடனடியாக கூட்டுதல்
3. மாநில உயர்மட்ட ஜேக்டோ அடுத்த கூட்டம் வருகிற ஜனவரி 10ந் தேதி திருச்சியில் கூட்டுவது என முடிவாற்றப்பட்டது.
4. ஜனவரி 27, 28, 29 ஆகிய தேதிகளில் ஆசிரியர் சந்திப்பு
5. அரசு உத்தரவிடாமல் சில மாவட்டங்களில் அக்டோபர் 8 வேலை நிறுத்த ஊதியம் பிடித்ததை இயக்குநரிடம் முறையிடுவது
6. அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மாநில திட்ட இயக்குனரின் ஆசிரியர் விரோதபோக்கு குறித்து நேரிடையாக இன்றே சந்தித்து முறையிடுவது  உள்ளிட்ட முடிவுகள் முடிவாற்றப்பட்டன.

தகவல்: திரு.பாலச்சந்தர், மாநிலப்பொதுச்செயலாளர், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
பகிர்வு: முத்துப்பாண்டியன், மாவட்டச் செயலாளர், சிவகங்கை மாவட்டம்

மழை வெள்ள பாதிப்பால் ஜேக்டா மாவட்ட மறியல் தேதி ஒத்தி வைப்பு

மழை வெள்ள பாதிப்பால் ஜேக்டோ சார்பாக டிசம்பர் மாதத்தில் நடைபெற இருந்த மாவட்ட மறியல் வருகிற ஜனவரி 30, 31 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய தேதிக்கு ஒத்தி வைத்து மாநில ஜேக்டோ கூட்டத்தில் இன்று முடிவாற்றப்பட்டது.

The New Indian Express 17.12.2015


12/14/2015

தொடரட்டும் உதவிக்கரங்கள்..

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகில் உள்ள கிராமங்களில் வெள்ளத்தால் பாதிபக்கப்பட்ட மக்களுக்கு 13.12.2015 அன்று 30 இலட்சத்திற்கு மேல் மதிப்புள்ள நிவாரண பொருட்களை வழங்கிய தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் அடுத்த இலக்கு விழுப்புரம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தை நோக்கி தன் உதவிக்கரத்தை நீட்ட முடிவெடுத்துள்ளது. எனவே கொடை உள்ளம் கொண்ட உறுப்பினர்கள் தங்கள் உதவி கரத்தை நீட்டுமாறு மாநில அமைப்பு கேட்டுக்கொள்கிறது.
இதற்கிடையில்  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் தூய்மை படுத்தும் பணியினை 16.12.2015 முதல் 5 நாட்களுக்கு மேற்கொள்ள இருக்கிறது. விருப்புமுள்ள தன்னார்வல ஆசிரியர் தோழர்கள் மாவட்ட செயலாளர் மூலம் மாநில அமைப்பை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அவசரம்!!! அவசியம்!!!

 மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் தூய்மைப்படுத்தும் பணியில் வருகிற 16.12.2015 முதல் 5 நாட்களுக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஈடுபட இருக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆர்வமுள்ள தன்னார்வல ஆசிரியர் தோழர்கள் மாவட்டச் செயலாளர் வழியில் மாநிலப்பொதுச் செயலாளரிடம் பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சிவகங்கை மாவட்டத்தை சார்ந்த ஆசிரியர் நண்பர்கள் மாவட்டச் செயலாளரிடம் உடனடியாக தங்கள் பெயரை பதிவு செய்யும்படி மாவட்ட கிளையின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

12/12/2015

Dinthanthi 11.12.2015


உயர்கல்வியை வணிக மயமாக்குவதை கைவிட ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்

உயர்கல்வியை வணிக மயமாக்குவதை கைவிட வேண்டுமென மத்திய அரசுக்கு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.
 தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கை:
 டிச.15 முதல் டிச.18 வரை கென்யா தலைநகர் நைரோபியில் நடைபெற உள்ள உலக வர்த்தக மாநாட்டில் உயர்கல்வி தொடர்பான சாசனத்தில் இந்தியா கையெழுத்திட உள்ளது. இதன் மூலம் 160 நாடுகள் உயர் கல்வியை இந்தியாவுக்குள் கொண்டுவர வாய்ப்புள்ளது. இது இந்தியாவின் உயர்கல்வியை ஆபத்தான நிலைக்கு கொண்டு செல்லும்.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் 8.14 சதவிகிதம் பேர் மட்டுமே உயர் கல்வி பெற்றுள்ளனர். இந்த ஒப்பந்தம் கொண்டு வந்தால் உயர்கல்வி பெறுவோரின் எண்ணிக்கையில் மிகப்பெரிய சரிவை ஏற்படுத்தும். இதன் மூலம் இந்தியர்களுக்கு என்ன கல்வி கற்பிக்க வேண்டும் என்பதை அந்நிய நாட்டு நிறுவனங்களே முடிவு செய்யும். கல்விக்கு அரசு அளிக்கும் மானியம் முற்றிலும் நிறுத்தப்படும். எனவே இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடக் கூடாது. இதை வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு ஆசிரியர் அமைப்புகள் பொதுமக்களுடன் இணைந்து விரைவில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே மத்திய அரசு உயர் கல்வியை வணிக மயமாக்குவதை கைவிட வேண்டுமென அதில் குறிப்பிட்டுள்ளார்.

12/09/2015

சிங்கம்புணரி ஒன்றியத்தில் 1000 மாணவர்களுக்கு உதவி. கடல் கடந்த மனித நேயம். சிங்கப்பூர் சிறுவனின் ஈகை உள்ளம்.

சிங்கப்பூரை சேர்நத செல்வன் சரவேஸ் தனது பிறந்த நாள் அன்று வருடந்தோறும் சிங்கம்புணரி ஒன்றியம் எஸ்.கோவில்பட்டி மாணவர்களுக்கு அறு சுவை உணவுடன் கற்றல் உபகரண பொருட்கள் கொடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். நாம் கடந்த மாதம் நண்பர் அஜ்மீர் அவர்களிடம் ஒவ்வொரு வருடமும் ஒரே பள்ளி மாணவர்கள் பயனடைகிறார்கள். ஏன் அதை மற்ற பள்ளிகளுக்கு விரிவு படுத்தக்கூடாது என கோரிக்கை வைத்தோம். இந்தாண்டு சர்வேஸ் அவர்களது பிறந்த நாள் அன்று சிங்கம்புணரி ஒன்றியத்தில் தொடக்க நடுநிலைப்பள்ளிகளில் பயிலும் பல்வேறு பள்ளிகளை சார்ந்த சுமார் 1000 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி சிறப்பித்துள்ளார்கள். மேலை நாட்டு நாகரீத்தில் திளைத்திற்கும் சிங்கப்பூரை சேர்ந்த செல்வன் சர்வேஸ் தயாள குணத்துடன் செயல்பட்டது ஆச்சரியப்பட வைக்கிறது. சர்வேஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள். அடுத்தாண்டு ஒன்றியத்தில் அனைத்து மாணவர்களுக்கும் இது விரிவடைய வேண்டும். ஏழை மாணவர்கள் பயனடைய வேண்டும். இதற்கு உறுதுணையாக இருந்த சிங்கம்புணரி வட்டாரத்துணைச் செயலாளர் தோழர்  அஜ்மீர் அவர்களுக்கும் என் தனிப்பட்ட முறையில் நன்றி.

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் TNPTF வெள்ள நிவாரண உதவி

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வருகிற 13.12.2015 ஞாயிற்றுக்கிழமை அன்று கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண உதவி மேற்கொள்ள இருக்கிறது. இயக்கம் வழியாக உதவ விரும்பும் இயக்க தோழர்கள் மாநிலப் பொருளாளரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.


TNPTF அவசர மாநிலச் செயற்குழு

அவசர மாநிலச் செயற்குழு
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் அவசர மாநிலச் செயற்குழு வருகிற 13ந் தேதி ஞாயிற்று கிழமை கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் நடைபெற உள்ளதாக மாநிலப் பொதுச்செயலாளர் மதிப்புமிகு செ.பாலச்சந்தர் அறிவித்துள்ளார்கள். இதையே அறிவிப்பாக ஏற்றுக்கொள்ளும்படி மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறாரகள்.
பண்ணுருட்டி
பண்ருட்டி (ஆங்கிலம்:Panruti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். பலாப்பழத்திற்கும், முந்திரிக்கும் புகழ் பெற்றது பண்ருட்டி. பாட்டெழுதுவதில் சிறந்து விளங்கியதால், பண் உருட்டி, உருட்டி பண்ணுருட்டி என்று பெயர் பெற்றது.
மக்கள் வகைப்பாடு
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 60,323 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். பன்ருட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 76.19% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 76%, பெண்களின் கல்வியறிவு 62% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 72.99% விட கூடியதே. பண்ருட்டி மக்கள் தொகையில் 6,257 ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
தொழில்[தொகு]
வறண்ட தட்ப வெப்ப காலநிலையைக் கொண்டது. இங்கு செம்மண் மிகுந்துள்ளது. எனவே, பலாவை பயிரிடுகின்றனர். இதை முந்திரி தோப்பிற்கு இடையே ஊடு பயிராக பயிர் செய்ய முடியும். இது ஏப்ரல், மே மற்றும் சூன் மாதங்களில் பலன் தரக்கூடியது
பண்ருட்டி தொடர்வண்டி நிலையம்
முக்கிய பிரமுகர்கள்
பண்ருட்டி இராமச்சந்திரன் முன்னாள் அமைச்சர்.
பஞ்சவர்ணம் பண்ருட்டி நகராட்சியின் முன்னாள் தலைவர், நூல் ஆசிரியர்.
சினேகா தமிழ் திரைப்பட நடிகை.
தங்கர் பச்சான் - திரைப்பட இயக்குனர், ஒளிப்பதிவாளர், மற்றும் எழுத்தாளர் ஆவார்.

தோழர்களே

மாநிலச் செயற்குழுவிற்கு பண்ருட்டி வரும் தோழர்கள் விருத்தாச்சலம் வழியாக தொடர்வண்டியில்  விழுப்புரம் நிலையத்திற்கு வர வேண்டும். விழுப்புரத்திலிருந்து 30 கி.மீட்டர் தூரம் மட்டுமே உள்ள பண்ருட்டிக்கு பேருந்து வசதி உள்ளது. பயணிகள் இரயில் விழுப்புரத்திலிருந்து காலை5.35க்கு பண்ருட்டிக்கு புறப்படும். மேலும் விபரங்களுக்கு மாநிலப்பொருளாளர் தோழர் ஜீவானந்தம் அவர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

12/07/2015

உயர் கல்வியை வணிகநோக்கமாக்கும் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை இந்திய அரசு தவிர்க்க வேண்டும். மத்திய அரசுக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள்.

சிவகங்கை: உர்கல்வியை வணிக மயமாக்கும் நோக்கில் உலக வர்த்தக அமைப்பின்(WTO), கல்வியை சந்தை பொருளாக மாற்றும் ஒப்பந்தத்தில்(GATS) இந்தியா கையெழுத்திட உள்ளது. இதனால் உயர்கல்வியானது வர்த்தக மயமாக்கப்பட்டு ஏழை மாணவர்களுக்கு எட்டா கணியாகிவிடும் ஆபத்து உள்ளதாக ஆசிரியர் அமைப்புகள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டத்தலைவர் தாமஸ் அமலநாதன், மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன், மாவட்டப் பொருளாளர் குமரேசன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது
இந்திய அரசு உயர்கல்வியை வணிகமயமாக்க 2004லிருந்து முனைப்பு காட்டி வருகிறது. அன்று துவங்கிய பேச்சுவார்த்தை முற்று பெற்று வருகிற டிசம்பர் 15 முதல் 18 வரை கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியில் நடைபெறும் உலக வர்த்தக அமைப்பு மாநாட்டில் நிரந்தர ஒப்பந்தமாக மாற்றுவதற்குரிய சாசனத்தில் இந்தியா கையெழுத்திட உள்ளது. இது இந்தியாவின் உயர்கல்வியை ஆபத்தான நிலைக்கு இழுத்துச் செல்லும். இந்த ஒப்பந்தம் மூலம் உலக அளவில் உள்ள 160 நாடுகளின் உயர்கல்வி நிறுவனங்கள் இந்தியாவிற்குள் வந்து கடை திறப்பதற்கான வாசல் திறக்கப்பட உள்ளது.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்திய மக்கள் தொகையில் 8.14 சதவீத பேர் மட்டுமே உயர்கல்வி பெற்றுள்ளனர். நாடு விடுதலை அடைந்து 68 ஆண்டுகள் ஆன பிறகும் 10 சதவீதத்திற்கு குறைவானவர்களே உயர்கல்வி பெறும் வாய்ப்பு பெற்றுள்ளனர் என்பது தேசத்தின் அவமானமாகும். இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால் உயர் கல்வி பெறுபவர்களின் எண்ணிக்கை மிகப்பெரிய சரிவை ஏற்படுத்தும். இதன் மூலம் உலக நாடுகளுக்கு தேவையான கொத்தடிமை தொழிலாளர்களை உருவாக்கும் தொழிற்சாலைகாளக உயர்கல்வி நிறுவனங்கள் மாற்றப்படும். என்ன கற்பிக்கப்பட வேண்டும் என்பதை அந்நிய நாட்டு நிறுவனங்களே முடிவு செய்யும். மேலும் உயர்கல்விக்கு அரசாங்கம் கொடுக்கும் மானியங்களும் முற்றிலும் நிறுத்தப்படும்.
பன்முக பண்பாட்டைக் கொண்ட இந்தியாவில் 'வேற்றுமையில் ஒற்றுமை' என்ற அடிப்படை கோட்பாட்டிற்கு எதிராக கலாச்சாரஒருமைப்பாட்டை முன் வைத்து, பல அடுக்கு கல்வி முறையைத் தொடரச் செய்து சமூக பதற்றத்தை உருவாக்கக்கூடிய கூறுகளை தற்பொழுது வெளியிடப்படும் புதிய கல்விக்கொள்கையின் விவாத பொருளாக்கப்பட்டுள்ளது. இது குறித்த கருத்து கேட்பு கூட்டங்களை கண் துடைப்பாக மத்திய அரசு நடத்தி முடித்துள்ளது. புதிய கல்விக்கொள்கை காவிமயமாக வெளிவரும் ஆபத்து உள்ளது. இதனால் வரலாறுகள் உண்மைக்கு புறம்பாக திரித்து எழுதி வெளியிடப்படவுள்ளது.
உலக வர்த்தக அமைப்பின் (WTO) சேவையில் வர்த்தகத்திற்கான பொது ஒப்பந்தத்தின்(GATS) கீழ் உயர் கல்வியில் சந்தையை அனுமதிக்க இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது. கல்வியின் பொருளையே மாற்றும் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடக்கூடாது.
நைரோபியில் வருகிற டிசம்பர் 15 முதல் 18 வரை நடைபெவுள்ள உலக வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகளின் 10வது வர்த்தக அமைச்சர்கள் மாநாட்டிற்கு முன்னதாக, இந்தியா 2004 மற்றும் 2005ல் தெரிவித்துள்ள விருப்பங்களை திரும்பப்பெற வேண்டும். திரும்ப தவறினால் நமது கல்வி என்பது சந்தையின் நிலைக்குத் தகுந்தாற்போல் பணம் இருப்பவர் மட்டுமே பெறக்கூடிய ஒரு பண்டமாக மாறிவிடும்.
இந்திய மக்கள் இதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். இதற்கான பேச்சுவார்த்தை மிகவும் இரகசியமாக மக்களுக்கு தெரியாமல் நடைபெறுகிறது. இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடக்கூடாது எனக்கோரி குளிர்கால கூட்டத்தொடர் ஆரம்பித்த கடந்த நவம்பர் 26 அன்று பள்ளிக்கல்லூரி மற்றும் பல்கலைகழக ஆசிரியர் அமைப்பு மற்றும் மாணவர் அமைப்புடன் இணைந்து இந்திய தலைநகரில் பாராளும் மன்றம் நோக்கி மாபெறும் பேரணியை நடத்தி முடித்துள்ளோம். தமிழக அளவில் பல்வேறு ஆசிரியர் அமைப்புகள் மற்றும் பொது மக்களை இணைத்து மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.
எனவே மத்திய அரசு உயர்கல்வியை வணிகமயமாக்குவதையும், வகுப்பு வாதத்தை திணிப்பதையும் உடனடியாக கைவிட வேண்டும் என எங்கள் அமைப்பின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

பொதுச்செயலாளர் அறிவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில அமைப்பு ரூபாய் இரண்டு இலட்சம் வழங்கி தன்னுடைய உதவியை தொடங்கியுள்ளது. மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மற்றும் சென்னை மக்களுக்கு உதவ விரும்பும் மாவட்ட, வட்டார, நகர கிளைகள் மற்றும் தனி நபர்கள் மாநில மையம் மூலம் வழங்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அவ்வாறு உதவ விரும்பும் கிளைகள் மற்றும் நபர்கள் மாநிலப் பொருளாளர் தோழர் ஜீவானந்தம் அவர்களை 9488786893 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு மாநிலப் பொதுச்செயலாளர் தோழர் பாலச்சந்தர் அறிவித்துள்ளார்கள். பாதிப்புக்குள்ளாகும் மக்களை காப்பதில் என்றும் முன்னிலை வகிக்கும் என்பதை நிரூபிப்போம்.
தோழமையுடன்...
முத்துப்பாண்டியன்.ஆ
மாவட்டச்செயலாளர்
சிவகங்கை