பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

2/25/2016

வருந்துகிறோம்.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, சிங்கம்புணரி வட்டாரக் கிளையின் பொருளாளரும், சிறுமருதூர் நடுநிலைப்பள்ளியின் கணித பட்டதாரி ஆசிரியருமான திரு.மு.பாலசுப்பிரமணியன் அவர்களின் பாட்டி திருமதி.குருவம்மாள் அவர்கள் தற்பொழுது காலமானார். அன்னாரது இறுதிச்சடங்கு நாளை (26.2.2016) பிற்பகல் 3.00 மணிக்கு சிங்கம்புணரி பாரதிநகரில் அமைந்துள்ள அவரது இல்லத்திலிருந்து நடைபெறும். அம்மையாரின் மறைவிற்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, சிவகங்கை மாவட்டக் கிளை தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது. 

சிவகங்கையில் தொடர் வேலை நிறுத்த விளக்கக் கூட்டம்

இனிய தோழமைகளே...
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கமும், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியும் இணைந்த போராட்ட குழுவின் சார்பாக நடந்த தொடர் வேலை நிறுத்தம், அதையொட்டி நடைபெற்ற அமைச்சர் அளவிலான பேச்சு வார்த்தை மற்றும் துறை செயலர்களின் சந்திப்பு ஆகியவை குறித்தும், தற்போதைய நிலை குறித்தும் மாநில நிர்வாகிகள் வருகிற 27.2.2016 அன்று காலை 10 மணிக்கு சிவகங்கை மாவட்ட அலுவலகத்தில் விளக்க இருக்கிறார்கள். மேலும் தங்களின் சந்தேகங்களுக்கும் விளக்கமளிக்க இருக்கிறார்கள். எனவே இயக்த்தின் மாநில, மாவட்ட, வட்டார, நகர நிர்வாகிகளும் மற்றும் உறுப்பினர்களும் தவறாது பங்கேற்க வேண்டுகிறேன்.
என்றும் இயக்க பணியில்
ஆ.முத்துப்பாண்டியன்
மாவட்டச் செயலாளர்
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
சிவகங்கை மாவட்டம்

2/24/2016

இச்சந்திப்பில் முக்கிய துளிகள்

இன்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பொறுப்பாளர்கள் மற்றும் தமிழ்நாடு ஆரம்பபப்ள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத் தலைவர் திரு.மோசஸ் ஆகியோர் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை செயலாளர் திரு.பா.வி.டேவிதார் அவர்களையும் மற்றும் நிதி துறையில் அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. கே.சண்முகம் அவர்களையும் சந்தித்து கோரிக்கைகள் குறித்து விவாதித்தனர்.
இச்சந்திப்பில் முக்கிய துளிகள்:
1.முதல்வர் அறிவித்த அறிவிப்புகளில் எஞ்சியுள்ளவைகளுக்கு ஓரிரு நாளில் அரசாணை வெளியீடு
2. சி.பி.எஸ். திட்டத்தில் ஓய்வு பெற்றவர்கள் மற்றும் இறந்தவர்களுக்கு உடனடியாக பங்கு தொகையுடன், அரசின் பங்கும் சேர்த்து தொகை வழங்கிட அரசாணை இரண்டு நாட்களுக்குள் வெளியிட உறுதி
3. சி.பி.எஸ். திட்டத்தை பழைய ஓய்வூதிய திட்டமாக மாற்ற அமைக்கப்படவுள்ள குழு உறுப்பினர்களின் பட்டியல் விரைவில் வெளியிட உறுதி.
4. இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய மாற்றம் குறித்து விரிவான ஆலோசனை செய்யப்பட்டு வருவதாகவும் தற்பொழுது உள்ள சூழலில் இயலவில்லையென்றால் 7வது ஊதியக்குழுவில் இக்குறைகள் களையப்படும் வண்ணம் உடனடியாக குழு உறுப்பினர்களை அறிவிப்பது என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இயக்கத்தின் பிரதான கோரிக்கையான இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய மாற்றத்தில் அதிக கவனம் கொடுக்கப்பட வேண்டும் என நமது சார்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.
5.வேலைநிறுத்த நாட்களில் ஊதியம் பிடித்தம் இல்லையெனவும், அதை முறைப்படுத்திடவும் ஆணை வழங்கப்படும் எனவும் உறுதி அளிக்கப்பட்டது
அலைபேசி வழி தகவல்: திரு.ச.மோசஸ், மாநிலத் தலைவர்
பகிர்வு: திரு.ஆ.முத்துப்பாண்டியன், சிவகங்கை மாவட்டச் செயலாளர்

2/22/2016

சிவகங்கை மாவட்டப் பொதுக்குழு முடிவுகள் இன்றைய தினமலர் நாளிதழில் 22.2.2016


சிவகங்கை மாவட்டப் பொதுக்குழு முடிவுகள் இன்றைய தினகரன் நாளிதழில் 22.2.2016


சிவகங்கை மாவட்டப் பொதுக்குழு முடிவுகள் இன்றைய தினத்தந்தி நாளிதழில் 22.2.2016


2/20/2016

வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைப்பு. அரசு ஊழியர் ஆசிரியர் போராட்டக்குழு அறிவிப்பு.

இன்று நடைபெற்ற அரசு ஊழியர் மற்றும் அனைத்து ஆசிரியர் போராட்டக்குழு தற்பொழுது நடத்தி வரும் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. நிதியமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் குழு நமது போராட்டக்குழுவை தற்பொழுது பேச்சு வார்த்தைக்கு அழைத்துள்ளது. முதல்வரின் அறிவிப்புகளில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் குறித்து அறிக்கையையும் அமைச்சர் குழு கோரியுள்ளது.
முதல்வர் அவர்கள் சட்டமன்றத்தில் அறிவித்த நமது அறிவிப்புகளை சில திருத்தங்களுடன் அரசாணை வெளியிடவும், மத்திய அரசு ஊழியருக்கு இணையான ஊதியம் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் என்ற பிரதான கோரிக்கையை மையப்படுத்தியும் நமது போரட்டக்குழு சார்பாக தயாரிக்கப்பட்ட அறிக்கையுடன் மாநில பொறுப்பாளர்கள் இன்று இரவு 8.00 மணிக்கு அமைச்சர் பெருமக்களை சந்திக்கின்றனர். அதன் அடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட கால கெடுவுக்குள் கோரிக்கைள் நிறைவேறாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து போராட்டக்குழு கூடி முடிவு செய்யும்.
தகவல்: திரு.செ.பாலச்சந்தர், பொதுச்செயலாளர், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
பகிர்வு: திரு.ஆ.முத்துப்பாண்டியன், சிவகங்கை மாவட்டச் செயலாளர்

2/16/2016

சிவகங்கை மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் சாலை மறியல்: 2000 பேர் கைது

சிவகங்கை மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் சாலை மறியல்: 2000 பேர் கைது

சிவகங்கை மாவட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் நடத்திய அரசு ஊழியர்கள் 2000 பேர் கைது செய்யப்பட்டனர்.
  ஊதிய உயர்வு, புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதில், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினரும் திங்கள்கிழமை இணைந்து போராடினர். 
 சிவகங்கையில் அரண்மனைவாசல் முன்பாக அரசு ஊழியர்கள் அனைவரும் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அரசு ஊழியர் சங்க மாவட்டத்தலைவர் செல்வக் குமார் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களைத் தடுத்து 707 பேரை போலீஸார் கைது செய்தனர்.
காரைக்குடி:காரைக்குடியில் கண்ணதாசன் மணி மண்டபம் முன்பாக அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கிருந்து, போராட்டக் குழுவின் சிவகங்கை மாவட்டத் தலைவர் செல்லமுத்து தலைமையில், காரைக்குடி வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக மறியல் செய்வதற்கு ஊர்வலமாக புறப்பட்டனர். அப்போது டி.எஸ்.பி (பொறுப்பு) கருப்புச்சாமி தலைமையிலான போலீஸார் தடுத்து நிறுத்தியதால் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களை அப்புறப்படுத்தி 312 பெண்கள் உள்பட 363 பேரை போலீஸார் கைது செய்தனர்.
 மானாமதுரை: மானாமதுரை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடந்த மறியல் போராட்டத்தில் பெண்கள் உள்பட 450 -க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர். மறியலின்போது தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கோஷம் எழுப்பினர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்தனர்.
 திருப்பத்தூர்:  திருப்பத்தூர் அண்ணாசிலையருகே நடைபெற்ற போராட்டத்தில், ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டி தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் துணைத் தலைவர் சுரேஷ், வட்டக்கிளைச் செயலர் மகாலிங்க ஜெயகாந்தன் முன்னிலை வகிக்க அரசு ஊழியர் சங்கத்தினர் 460 பேர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் போலீஸாரால் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். மறியலில் ஊரக வளர்ச்சித் துறை சாலைப்பணியாளர் சங்கம், சத்துணவு மற்றும் அங்கன்வாடிப் பணியாளர்கள், மருந்தாளுநர்கள் சங்கம் ஆகிய சங்கங்களைச் சேர்ந்த ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
இளையான்குடி: இளையான்குடி வாள்மேல்நடந்த அம்மன் கோயில் அருகே அரசு ஊழியர்கள், சத்துணவு மற்றும் அங்கன்வாடி, ஊட்டச்சத்து ஊழியர்கள், ஆசிரியர்கள் மறியல் போராட்டம் நடத்தினர். இப் போராட்டத்தில் 211 பெண்கள் உள்பட 258 பேர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். போலீசார் அவர்களைக் கைது செய்தனர்.

2/13/2016

இனியும் காலம் செல்லாது இடைநிலை ஆசிரியத் தோழனே!

இனியும் காலம் செல்லாது
இடைநிலை ஆசிரியத் தோழனே!
காரணங்கள் ஏதும் சொல்லாது
களமிறங்கு வேலை நிறுத்தத்தில்!!
இழப்பதற்கு இனியேதும் நமக்கில்லை
பெறுவதற்கு ஓய்வூதியம், ஊதியமிருக்கு!!
எதிர்வரப்போகுது தேர்தல் தேதி!
உடன்வரப்போகுது ஊதியக் குழு!!
கட்டம்பார்த்து காலம் கணிக்கும்
திட்டமேதும் உனக்கு இருக்கோ?
திட்டம்தீட்டி தலைமை அறிவிக்க
நாட்கள்தான் நமக்கு இருக்கோ?
நமக்கான வாழ்க்கை மட்டுமல்ல
நம் மக்களுக்கான வாழ்க்கையும்
நமது கரங்களில் தரப்பட்டுவிட்டது!
கையறு நிலையில் இருந்தோர்க்கு
கிடைத்தாயிற்று வேலை நிறுத்தத்
திறவுகோல் - திறந்திடத் தீவிரி!
சங்கம் பார்த்து சங்கமிக்க
மாநாட்டு கூட்டத்திற்கு அல்ல,
வாழ்வாதார உரிமைப் போராட்டத்தில்
கருதிய களத்திற்கு உண்மையோடு,
ஆசிரியப் பேரின உரிமையில்
ஆ.ப கூட்டணி அழைக்கிறது!
உறுதியோடு எழுந்துவா தோழனே!!
நம்மிடம் பாடம் பயின்றிட்ட
அரசூழியரின் போராட்டம் பார்!
கற்றோரின் உரிமை வேட்கையே
இத்தனை மாபெரிது எனில்,
கற்பிப்போராகிய நம் வீரம்
அதனினும் மேல் அன்றோ!
மாற்றுத் திறனாளி மையத்தினர்
மாற்றம் நிகழவில்லை எனில்
முற்றுகை உடன் நிகழ்த்தப்படும்
என்று உரைத்த துணிவங்கே!
முழுத்திறனும் நமக்கு இருந்தும்
முதல்வர் சொல்லும் வரை
பொறுப்போம் எனும் குனிவிங்கே!
மறியலில் சிறை நிறைத்தும்
மனந்திறக்க மனதில்லை அரசிற்கு!
அமைச்சர் கூட்டத்தின் நிகழ்வினை
அறிவிக்க மனமில்லை தலைமைக்கு!
16-ல் பதில் சொல்லாவிட்டால்
17-ல் கூடுவோம் என்கின்றனர்,
2011-ல் அளித்த வாக்கை
இன்று வரை காக்காதவர்
நாளை செய்வார் என்று
நம்பி வந்த காரணமேனோ?
உடன்பாடு எட்டப்படா விட்டால்
உடனே அடுத்த அறிவிப்பென,
காலையில் கூடியெடுத்த முடிவு
மாலையில் மாயமான காரணமேனோ?
40ஆண்டுகள் போராடிப் பெற்றதை
நாசமாக்கியது போன ஆட்சி!
நாலரை ஆண்டுப் போராட்டங்களுக்கு
மசியவேயில்லை இந்த ஆட்சி!!
இறுதி மறியலுக்குப்பின் - அடுத்த
அறிவிப்பேயில்லை, ஜேக்டோ சாட்சி!!!
ஆட்சியைப் நெருக்கும் காலமிது
புரட்சியைப் பெருக்கும் காலமிது
பறிக்கப்பட்ட உரிமை அனைத்தையும்
இருந்தபடி மீட்டெடுக்க - அறிவியுங்கள்
அடுத்தகட்ட போராட்டத்தை என்று
நீயும்நானும் கேட்டது போன்று
போராளிப் பாசறையும் கேட்டதன்று!
கூட்டமைப்பில் பதிலில்லை எனினும்
கூட்டணிக்குள் பதில் உரைக்க
கூட்டிய மாநாட்டில் ஒலித்தது,
ஆசிரியர் வாழ்வினைக் காத்திட
அனைவர் உணர்வினை மதித்திட
உறுதியான இறுதிப் போராட்டமாம்
வேலை நிறுத்தப் போராட்டம்!!
மாநாட்டுப் பிரகடனத்தை - நம்
மனம் விரும்பிய தீர்மானத்தை
மாநிலக் கூட்டமைப்பிற்கு அறிவித்து
மறுபதிலேதும் இதுவரை இல்லை!
பொறுமைக்கான காலமோ நமக்கில்லை!
கூட்டமைப்பு உடையவில்லை என்று,
கூட்டணித் தீர்மானப்படியே இன்று
இறுதியான தீர்மானத்தை, திருச்சியில்
உறுதியுடன் அறிவித்துள்ளது - அரசு
ஊழியருடன் வேலை நிறுத்தத்தில்
உடன் சேர்கிறோம் நாங்களுமென்று!
1988, 2002-03 ஆண்டுகள் போன்று!!
சிவப்புப் காரர்கள் கூட்டமது
சேராதே நீயும் என்னும்
சிறுபுத்திக் காரர்கள் கூற்றை
சிந்தையில் ஏற்றும் முன்னர்,
சிவப்புக் கம்பளம் விரித்துச்
சிறப்பிக்க நாதியுண்டா நாட்டிலென
சிந்தித்துச் சீர் பொருந்து!
உறுதியான உரிமைப் போராட்டமே
இறுதியான உயிர்ப்பு மருந்து!!
வேலையற்ற வீணர்கள் சொல்லும்
தேவையற்ற வாதங்கள் போல
வெண்ணெய் திரண்டு வரும்போது
பானையை உடைக்க அல்ல!
வெருங்கையோடு அமர்ந்து இருக்காது
வெண்ணெய்யைத் திரளச் செய்யவே,
கடைபவர்களுடன் கரம் கோர்க்க
களம் நோக்கி அழைக்கிறது!
இனியும் காலம் செல்லாது
இடைநிலை ஆசிரியத் தோழனே!
இழப்பதற்கு இனியேதும் நமக்கில்லை
பெறுவதற்கு ஓய்வூதியம், ஊதியமிருக்கு!!
கையறு நிலையில் இருந்தநமக்கு
கிடைத்தாயிற்று வேலை நிறுத்தத்
திறவுகோல் - திறந்திடத் தீவிரி!
கற்றுத் தந்த வரலாற்றுப்படி,
பற்றி எரியட்டும் போராட்டத்தீ!
ஆணவப் போக்கைச் சாம்பலாக்கி
ஆவணம் படைப்போம் ஒன்றாகி!!
கோடிக்கைகள் ஒன்றிணைவோம்!
கோரிக்கைகள் வென்றிடுவோம்!!
உரிமைகளை மீட்டெடுக்க
ஓங்கி ஒலிக்கட்டும்
ஆசிரியர் அரசூழியரின்
ஆக்கப்பூர்வ ஒற்றுமை
அரசூழியர் இயக்கங்களுடனான
வேலைநிறுத்த அழைப்பிற்காக,
✒செல்வ.ரஞ்சித்குமார் (செ.கு.உ)
த.நா ஆ.ப ஆசிரியர் கூட்டணி,
பொன்னமராவதி.

2/11/2016

நமது செய்தி பல்வேறு செய்தி தாள்களில்





அவசர மாநிலச் செயற்குழு கூட்டம்.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வரலாற்று சிறப்பு மிக்க மாநில மாநாடு தீர்மானங்களை நிறைவேற்ற கோரியும், ஜேக்டோவின் அமைச்சரவை மட்டத்திலான பேச்சு வார்த்தைக்கு பின்னால் தற்போதை சூழலில் மாநில மாநாடு தீர்மானங்களை எவ்வாறு அமுல்படுத்திட வேண்டும் என்பது குறித்து முடிவாற்றவும் அவசர மாநிலச் செயற்குழு நாளை (12.2.2016) காலை 10.00 மணிக்கு திருச்சியில் கூடுவதாகவும், அதில் மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் தவறாது பங்கேற்றிடவும் மாநிலப் பொதுச்செயலாளர் தோழர் பாலச்சந்தர் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.
இடைநிலை ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி களையும் வரை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தன் போராட்ட நிலையில் இருந்து ஒரு அடி கூட பின் வாங்காது.

2/09/2016

அரசு ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தம். மாணவர்களுக்கு சத்துணவு வழங்குவதில் சிக்கல்

அரசு ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தம். மாணவர்களுக்கு சத்துணவு வழங்குவதில் சிக்கல்.
சத்துணவு பணிகளை ஏற்க மாட்டோம் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திட்டவட்டம்.
சிவகங்கை: தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் உள்ளிட்ட 68 சங்கங்களை சார்ந்த 4 இலட்ச அரசு ஊழியர்கள் நாளை முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இதில் சத்துணவு ஊழியர்களும் முழுமையாக ஈடுபட உள்ளனர். இதனால் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதை சமாளிக்க தலைமையாசிரியர்கள் சத்தணவு வழங்கும் பொறுப்பை ஏற்று மாணவர்களுக்கு தரமான சத்துணவை தங்கு தடையின்றி வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த முடிவிற்கு ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
இது குறித்த தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் ஆ.முத்துப்பாண்டியன், மாவட்டத் தலைவர் ஆ.தாமஸ் அமலநாதன், மாவட்டப் பொருளாளர் மு.குமரேசன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் சத்துணவு பணியாளர்கள் தங்களது நியாயமான கோரிக்கைகள் குறித்து பல்வேறு கட்டங்களாக கடந்த நான்கரை ஆண்டுகளாக போராடி வருகின்றனர். அவர்களது நியாயத்தை உணர்ந்து அவர்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்து தீர்வு காண அரசு முயற்சிக்க வேண்டும். அதை விடுத்து அவர்களது போராட்டத்தை நசுக்கும் விதமாக சத்துணவு பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடு வைக்க முயற்சிப்பதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். எங்கள் ஆசிரியர்கள் சத்துணவு பணிகளை ஏற்க மாட்டார்கள் என மாவட்ட நிர்வாகத்திற்கு  திட்டவட்டமாக தெரிவித்துவிட்டோம். மேலும் அரசு ஊழியர் சங்கங்களின் தொடர் வேலை நிறுத்தத்தை ஆதரிக்கும் விதமாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகங்களுக்கு முன்னாள் நாளை மாலை 5.00 மணிக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆதரவு ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளோம்.  எனவே அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு அரசு தீர்வு கான வேண்டும் இல்லையேல் ஆசிரியர்களும் அவர்களுடன் இணைந்து தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என அவர்கள் தெரிவித்தார்கள்.

இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய ஊதியம் வழங்கக்கோரி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்





இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய ஊதியம் வழங்கக்கோரி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநாடு பிரகடனம்
கோவில்பட்டி, பிப். 8 -
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் 6வது மாநில மாநாடு கோவில்பட்டியில் பிப்ரவரி 5, 6, 7 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. மாநாட்டின் நிறைவு நாளன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் ச.மோசஸ் தலைமை தாங்கினார். துணைப் பொதுச் செயலாளர் ச.மயில் வர வேற்புரையாற்றினார்.கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் துரைப் பாண்டியன், இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்தி யப் பொருளாளர் தி.கண்ணன் ஆகி யோர் வாழ்த்துரை வழங்கினர். கூட்டத்தில் சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் எம்எல்ஏ சிறப் புரையாற்றினார். மாநாட்டுப் பிரகட னத்தைப் பொதுச் செயலாளர் செ. பாலசந்தர் வெளியிட்டுப் பேசினார்.அப்போது அவர் வெளியிட்ட மாநாட்டுப் பிரகடனம் வருமாறு:ஆசிரியர் இயக்க முன்னோடிகள், நமது இயக்கத் தோழர்கள் 40 ஆண்டுகாலம் மிகக்கடுமையாகப் போராடி, கண்ணீரும் செந்நீரும் சிந்திதங்கள் இன்னுயிரை ஈந்து 01.06.1988 முதல் பெற்றுத் தந்த மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் என்பது, ஆறாவது ஊதியக் குழுவை அமல்படுத்தியதன் மூலமாக01.01.2006 முதல் இடைநிலை ஆசிரியர்களிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான இடை நிலை ஆசிரியர்கள் கடந்த 7 ஆண்டுகாலமாக குமுறலுடனும், கொந் தளிப்புடனும் உள்ளனர்.
தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்தியஊதியம் பெறுவதற்காக முதன் முதலாக போராட்டக்களம் கண்டதுநமது பேரியக்கம். அதற்காக வேறுஎந்த இயக்கத்தையும்விட தனிச்சங்க நடவடிக்கையாக அதிகப் போராட்டங்களை நடத்திய நமதுஇயக்கம், கூட்டுப் போராட்டங்களி லும் முழுமையாக ஈடுபட்டு இன்று வரை சமரசமின்றிப் போராடிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள இப்பெரும் அநீதி உடனடியாகக் களைப்பட வேண்டும். தமிழக அரசு உடனடியாக இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்கிட வேண்டும்.ஆசிரியர்கள், அரசு ஊழியர் களின் எதிர்கால வாழ்வாதாரத்தைப் பறித்து, அவர்களது எதிர் காலத்தைக் கேள்விக்குறியாக்கி, அவர்களின் முதுமைக் காலத்தை இருண்டகாலமாக்கிவிட்ட தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்திடக்கோரி வேறு எந்த ஆசிரியர் அமைப்புகளையும் விட மிகக்கடுமையான போராட்ட நடவடிக்கைகளிலும், அகில இந்தியவேலைநிறுத்தப் போராட்டங்களி லும் தொடர்ந்து ஈடுபட்டு வரும்நமது இயக்கம் இம்மாநில மாநாட்டின் மூலமாக தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதி யத் திட்டத்தை நடைமுறைப்படுத்த மத்திய, மாநில அரசுகளை வலி யுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

மேற்கண்ட இரண்டு கோரிக்கை கள் உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கை களை வலியுறுத்தி ஜேக்டோ பேரமைப்பின் சார்பில் பலகட்டப் போராட்டங்களை நடத்தியும் தமிழக அரசு கண்டுகொள்ளாத நிலையில் இன்றைய காலச்சூழ் நிலைகளையும், தமிழ்நாட்டு ஆசிரியர்களின் உணர்வுகளையும், அவர்களின் கொந்தளிப்பான மனநிலையையும் கருத்தில் கொண்டு ஜேக் டோ பேரமைப்பு உடனடியாகக் கூடிதமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்10.02.2016 முதல் நடைபெறுவதாக அறிவித்துள்ள காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்துடன் இணைந்த போராட்ட நடவடிக் கைகளை அறிவித்திட வேண்டும் எனவும், அவ்வாறு ஜேக்டோ பேரமைப்பு முடிவெடுப்பதில் கால தாமதம் ஏற்படும் சூழலில், தமிழ் நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்திட மாநிலச் செயற்குழு தீர்மானித்துள்ளதை இம்மாநில மாநாடு அங்கீகரிக்கிறது. கூட்ட முடிவில் மாநிலப் பொருளாளர் ச.ஜீவானந்தம் நன்றி கூறினார்.