4/19/2013
4/09/2013
அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் கணக்கிடுவதில் பாரபட்சம் கூடாது - உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
லேபிள்கள்:
court news,
Educational News
09.8.1989 அன்று தமிழக அரசு ஓர் அரசாணையை வெளியிட்டது. 1.6.1988 அன்றோ அல்லது அதற்கு பிறகோ பணியிலிருந்து ஓய்வுபெறும் அரசு ஊழியர்களின் அகவிலைப் படியில் அதிகபட்சம் 13 % மட்டுமே ஓய்வூதியம் கணக்கிட எடுத்துக் கொள்ளப்படும் என்று அரசாணையில் கூறப்பட்டிருந்தது. எனினும் 1.1.1996ஆம் தேதியிலிருந்து ஓய்வு பெறுவோருக்கு இந்த ஓய்வூதியக் கணக்கீட்டு முறையில் மாற்றம் செய்யப்பட்டது. அரசின் இந்த நடவடிக்கை காரணமாக 1.6.1988 முதல் 31.12.1995 வரை பணியிலிருந்து ஓய்வு பெற்ற தமிழக அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டனர். இது தொடர்பாக கள்ளக்குறிச்சி வட்டார ஓய்வுபெற்ற அரசு அலுவலர்கள் சங்கம் உள்பட ஏராளமான ஓய்வூதியர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி ஓய்வூதியர்களுக்கு சாதகமாகத் தீர்ப்பளித்தாலும், அந்தத் தீர்ப்பை உயர் நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகளைக் கொண்ட அமர்வு ரத்து செய்தது. இதனை எதிர்த்து ஓய்வூதியர்கள் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கில் கடந்த ஜனவரி மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வெவ்வேறு காலகட்டத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு வெவ்வேறு ஓய்வூதியக் கணக்கீட்டு முறையைப் பின்பற்றி ஓர் அரசு பாரபட்சம் காட்டக் கூடாது என்று அந்தத் தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இது தொடர்பான 9.8.1989ஆம் தேதியிட்ட அரசாணை செல்லாது என்று கூறி அதனை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், பாரபட்சமற்ற, ஒரேவிதமான ஓய்வூதியக் கணக்கீட்டு முறையை அரசு பின்பற்றுமாறு தனது தீர்ப்பில் கூறியுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பின் மூலம் 1.6.1988-ம் தேதிக்கும் 31.12.1995-ம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் ஓய்வுபெற்ற ஆயிரக்கணக்கான ஓய்வூதியர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அரசு உரிய உத்தரவைப் பிறப்பிக்கும் என்ற எதிர்பார்ப்பில் அவர்கள் காத்திருக்கின்றனர்.
17 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
லேபிள்கள்:
Educational News
தொடக்க கல்வியில் நேரடி நியமனம் மூலம் 350 பட்டதாரி ஆசிரியர்களும், பதவி உயர்வு மூலம் 399 பட்டதாரி ஆசிரியர்களும் நியமிக்கப்பட உள்ளனர். சிறுபான்மை மொழி பட்டதாரி ஆசிரியர்கள் 21 பேர் நியமிக்கப்படுகிறார்கள். இடை நிலை ஆசிரியர்கள் 3ஆயிரத்து 433 பேர் நியமிக்கப்படுகிறார்கள்.
பள்ளிக்கல்வி இயக்குனரகம் மூலம் பட்டதாரி ஆசிரியர்கள் 5,081 பேர்கள் நியமிக்கப்படுகிறார்கள். மேலும் 260 தையல் ஆசிரியர்களும் 4 இசை ஆசிரியர்களும், 888 உடற்கல்வி ஆசிரியர்களும் நியமிக்கப்படுகிறார்கள். முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 2494 பேர் நியமிக்கப்படுகிறார்கள்.
மாநகராட்சி பள்ளிகளில்பட்டதாரி, முதுகலை பட்டதாரி, உடற்கல்வி ஆசிரியர்கள் உள்பட அனைத்து தரப்பு ஆசிரியர்களாக 232 பேர் நியமிக்கப்படுகிறார்கள்.
இவை அனைத்தும் கடந்த ஆண்டில் நிரப்பப்படவேண்டியவை. மொத்தத்தில் 16ஆயிரத்து 400 பேர் நியமிக்கப்படுகிறார்கள்.
இந்த தகவலை பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்
லேபிள்கள்:
பத்திரிக்கைச்செய்தி
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் படி ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வுகளை நடத்த வேண்டும் என ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் சிóல வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
இட ஒதுக்கீட்டின் கீழ் வரும் தலித்கள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்டோருக்கு தகுதித் தேர்வு மதிப்பெண்களில் 5 சதவீதம் வரை தளர்த்த வேண்டும் என ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் தெரிவித்துள்ளது.
ஆந்திரம், அசாம், ஒடிசா போன்ற மாநிலங்களில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 முதல் 20 சதவீதம் வரை தகுதித் தேர்வு மதிப்பெண்கள் தளர்த்தப்பட்டுள்ளன. ஆனால் தமிழகத்தில் மதிப்பெண்கள் தளர்த்தப்படாததால் இட ஒதுக்கீட்டால் பயன்பெறுபவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
69 சதவீத இட ஒதுக்கீடு தவிர மீதமுள்ள 31 சதவீதம் என்பது இட ஒதுக்கீட்டால் பயன் அடைவோர் உள்பட அனைவருக்கும் உரியது. ஆனால், தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் பொதுப் பிரிவு என்பது இட ஒதுக்கீட்டால் பயன் அடையாதவர்களுக்கு மட்டும் என ஒதுக்கப்பட்டுள்ளது. உதாரணமாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் முதலிடம் பெற்றவரின் மதிப்பெண் 122. பொதுப்பட்டியலில் முதலிடம் பெற்றவரின் மதிப்பெண் 116.
இவ்வாறு ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் இட ஒதுக்கீட்டு கொள்கைக்கு மாறாகவும், சமூக நீதியை மறுக்கும் வகையிலும் வெளியிடப்பட்டுள்ளது. வரும் ஜூலையில் நடைபெறவுள்ள தகுதித் தேர்வில் கடந்த ஆண்டில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு ஏற்பட்ட பாதிப்புகளை நிவர்த்தி செய்யும் வகையில் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
இப்பிரச்னையில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தகுதித் தேர்வு மதிப்பெண்களில் தேவையான சதவீதம் தளர்த்த வேண்டும் என ஜி. ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

ஆசிரியர் சங்க சிக்கண நாணய கூட்டுறவு சங்ங தேர்தல்
லேபிள்கள்:
Singai TNPTF NEWS
4/08/2013
TNPTF கோரிக்கை மாநாடு
லேபிள்கள்:
Singai TNPTF NEWS,
TNPTF NEWS
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)