பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Singai TNPTF NEWS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Singai TNPTF NEWS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

2/16/2016

சிவகங்கை மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் சாலை மறியல்: 2000 பேர் கைது

சிவகங்கை மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் சாலை மறியல்: 2000 பேர் கைது

சிவகங்கை மாவட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் நடத்திய அரசு ஊழியர்கள் 2000 பேர் கைது செய்யப்பட்டனர்.
  ஊதிய உயர்வு, புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதில், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினரும் திங்கள்கிழமை இணைந்து போராடினர். 
 சிவகங்கையில் அரண்மனைவாசல் முன்பாக அரசு ஊழியர்கள் அனைவரும் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அரசு ஊழியர் சங்க மாவட்டத்தலைவர் செல்வக் குமார் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களைத் தடுத்து 707 பேரை போலீஸார் கைது செய்தனர்.
காரைக்குடி:காரைக்குடியில் கண்ணதாசன் மணி மண்டபம் முன்பாக அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கிருந்து, போராட்டக் குழுவின் சிவகங்கை மாவட்டத் தலைவர் செல்லமுத்து தலைமையில், காரைக்குடி வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக மறியல் செய்வதற்கு ஊர்வலமாக புறப்பட்டனர். அப்போது டி.எஸ்.பி (பொறுப்பு) கருப்புச்சாமி தலைமையிலான போலீஸார் தடுத்து நிறுத்தியதால் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களை அப்புறப்படுத்தி 312 பெண்கள் உள்பட 363 பேரை போலீஸார் கைது செய்தனர்.
 மானாமதுரை: மானாமதுரை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடந்த மறியல் போராட்டத்தில் பெண்கள் உள்பட 450 -க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர். மறியலின்போது தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கோஷம் எழுப்பினர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்தனர்.
 திருப்பத்தூர்:  திருப்பத்தூர் அண்ணாசிலையருகே நடைபெற்ற போராட்டத்தில், ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டி தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் துணைத் தலைவர் சுரேஷ், வட்டக்கிளைச் செயலர் மகாலிங்க ஜெயகாந்தன் முன்னிலை வகிக்க அரசு ஊழியர் சங்கத்தினர் 460 பேர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் போலீஸாரால் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். மறியலில் ஊரக வளர்ச்சித் துறை சாலைப்பணியாளர் சங்கம், சத்துணவு மற்றும் அங்கன்வாடிப் பணியாளர்கள், மருந்தாளுநர்கள் சங்கம் ஆகிய சங்கங்களைச் சேர்ந்த ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
இளையான்குடி: இளையான்குடி வாள்மேல்நடந்த அம்மன் கோயில் அருகே அரசு ஊழியர்கள், சத்துணவு மற்றும் அங்கன்வாடி, ஊட்டச்சத்து ஊழியர்கள், ஆசிரியர்கள் மறியல் போராட்டம் நடத்தினர். இப் போராட்டத்தில் 211 பெண்கள் உள்பட 258 பேர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். போலீசார் அவர்களைக் கைது செய்தனர்.

9/11/2014

சிங்கம்புணரி வட்டார ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உதவி தொடக்கக் கல்வி அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு வட்டாரத் தலைவர் ஞான அற்புதராஜ் தலைமை வகித்தார். வட்டார செயலர் பாலகிருஷ்ணன் கோரிக்கை விளக்கவுரை நிகழ்த்தினார்.
மாவட்டத் தலைவர் முத்துப்பாண்டியன் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் அரசுப் பணியாளர் நடத்தை விதிகளை சுட்டிக்காட்டி உரிமைகளைப் பறிக்கும் அடக்குமுறையை கைவிட வேண்டும். ஆண்டு முழுவதும் மாறுதல் ஆணைகள் என்பதை கைவிட வேண்டும்.
ஆசிரியர்கள் சேமநல நிதி கணக்குச்சீட்டு மற்றும் ஓய்வூதியத் திட்டத்தில் செலுத்திய தொகைக்கு கணக்குச்சீட்டு வழங்கிடல் வேண்டும்.
மேற்படிப்பு அனுமதிக்கு உரிய காலத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. வட்டார செயற்குழு உறுப்பினர் அஜ்மிர் நன்றி கூறினார்.


9/10/2014

சிங்கம்புணரியில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு பணியாளர் நடத்தை விதிமுறைகளை சுட்டிக்காட்டி தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ள செயல்முறை உத்தரவினை கண்டித்து உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிங்கம்புணரியில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாரத்தலைவர் ஞானஅற்புதராஜ் தலைமை வகித்தார். வட்டார செயலாளர் பாலகிருஷ்ணன் கோரிக்கை விளக்க உரை ஆற்றினார். மாவட்டத்தலைவர் முத்துப்பாண்டியன் சிறப்புரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தில் வட்டார துணை செயலாளர் பாலா, கூட்டுறவு சங்க தலைவர் சரேஷ், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் வைரம், வட்டார செயற்குழு உறுப்பினர்கள் பாண்டி, கௌசல்யா, கஸ்தூரி, மெர்லின் சுகந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வட்டார செயற்குழு உறுப்பினர் அஜ்மீர் நன்றி கூறினார்.




7/28/2014

2.8.2014 - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி இயக்க நாள்

அனைத்து வட்டார, மாவட்ட, நகர கிளைகளில் இயக்க கொடியேற்றி முன்னோர்களின் தியாகங்களை நினைவு கூர்ந்து வருங்கால சந்ததியினை ஒரு சமரசமற்ற போராளிகளாக தயார் படுத்துவோம்!!

இழந்த உரிமைகளை மீட்டெடுக்க உறுதி கொள்வோம்!

புரட்சிகர வாழ்த்துக்களுடன்...............
முத்துப்பாண்டியன்@TNPTF


7/22/2014

தரமற்ற பள்ளிக்கட்டிடம் கட்டியதை சுட்டிக்காட்டும் தலைமையாசிரியரை பந்தாடும் அரசியல். உண்மை அறிய முயல்வாரா? மாவட்ட ஆட்சியர்.

சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் ஒன்றியம் தர்மபட்டி பள்ளியில் தலைமையாசிரியர் திரு.செலவமணி நேர்மைக்கு பெயர் பெற்றவர். தவறு நடக்கும் பக்கம் ஒரு மில்லி மீட்டர் அளவு கூட சாயமாட்டார். அப்பள்ளிக்கு அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பாக கட்டப்பட்ட வகுப்பறை தரமற்றதாகவும், முறையான வவுச்சர் இன்றியும் இருந்துள்ளது. இது குறித்து கிரமக்கல்விக்குழு தலைவரிடம் நியாயம் கேட்டுள்ளார். இதனால் கோபமுற்ற கிரமக்கல்விக்குழு தலைவர் தலைமயாசிரியர் மீது அடுக்கடுக்கான புகார்களை பொய்யாக அனுப்பியுள்ளார். இது குறித்து கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர் விசாரணை மேற்கொண்டு எவ்வித முன்னேற்றமும் இல்லை. எவ்வளவு நெருக்கடி வந்தாலும் தன் நேர்மை எண்ணத்திலிருந்து தளராத தலைமையசிரியரை பழி வாங்க நினைத்த கிராமக்கல்விக்குழு தலைவர் தன் சொந்தபந்தங்களையும் அவர்களின் குழந்தைகளையும் தூண்டிவிட்டு மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்துள்ளார். இதன் உண்மை நிலையை அறியாத மாவட்ட ஆட்சியர் தலைமையாசிரியரை இடமாற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளார்.  தன் சொந்த கிராமத்திற்கே தரமற்ற கட்டிடத்தை கட்டிய ஊராட்சி தலைவரை தட்டிக்கேட்ட தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுப்பது எவ்விதத்தில் நியாயம்?. அபபுறம் ஏன் தலைமையாசிரியருடன் கிரமக்கல்வி குழுவை இணைக்க வேண்டும். கொள்ளையடிக்கும் எண்ணத்துடன் கல்வி கூடங்களின் மீது தரமற்ற கட்டிடப் பணியினை மேற்கொண்டவர்கள் மற்றும் உறுதுணை புரிபவர்கள் நிச்சயம் பதில் கூறியே ஆக வேண்டும். மாவட்ட ஆட்சியரும் தீவிர விசாரனை மேற்கொள்ள வேண்டும் என்பதே எமது அவா.

7/08/2014

ஆபத்தை அறியாத சிங்கம்புணரி அரசு ஊழியர் - ஆசிரியர் குடியிருப்பு.

சிங்கம்புணரியில் பணியாற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி 1971ல் அப்போதைய அமைச்சர் மதிப்புமிகு சிங்கம்புணரி மாதவன் அவர்களால் கொண்டுவரப்பட்ட என்.ஜி.ஓ. காலனி குடியிருப்பு இன்று கிட்டதட்ட 45 ஆண்டுகளை கடந்து தன் நிலை மாறி சிதிலமடைந்துள்ளது. இந்த குடியிருப்பில் தங்காத ஆசிரியர் பெருமக்களே கிடையாது. அதே போல் அங்கு டியூசன் படிக்காத சிங்கம்புணரி மாணவர்களே இல்லாத அளவிற்கு நம்முடன் இரண்டற கலந்து விட்ட குடியிருப்பு. 40 வீடுகளை கொண்ட குடியிருப்பில் ஒரு காலத்தில் ஆசிரியர்கள் மட்டுமே குடியிருந்தார்கள். காலப்போக்கில் கட்டிடம் தன் உறுதி தன்மையை இழக்கவும் ஆசிரியர்கள் மெல்ல மெல்ல அங்கே இருந்து நகர்ந்து விட்டார்கள். தற்பொழு கடைநிலை ஊழியர்கள்தான் முழுவதுமாக ஆக்கிரமித்து உள்ளனர்.
இக்கட்டிடத்தின் அவல நிலையை அறிந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன் நாங்கள் சார்ந்த தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மூலம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு புகார் மனு அளிக்கப்பட்டது. உடனடியாக களத்தில் இறங்கிய அதிகாரிகள் இக்கட்டிடங்கள் குடியிருக்க தகுதியில்லை எனவும் உடனடியாக இடித்து 200 வீடுகள் கட்ட கருத்துரு அனுப்பப்போவதாக தெரிவித்தார்கள். நாடகள் உருண்டோடிவிட்டன. காரியம்தான் நடக்க வில்லை.  தற்பொழுது மௌலிவாக்கம் விபத்திற்கு பின்னால் என்னை தொடர்புகொண்ட தினத்தந்தி நிருபர் நண்பர் தனசேகரன் அரசு ஊழியர் - ஆசிரியர் குடியிருப்பின் தற்போதைய நிலையை கேட்டறிந்தார். நாமும் முழு விளக்கம் அளித்தோம். அதன் பின்னால் இது குறித்து தங்கள் செய்தி தாளில் செய்தி வெளியிட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதியளித்தார். அதன் தொடர்ச்சியாக நேற்று காலை நானும் அவரும் குடியிருப்பின் சிதிலமடைந்த பகுதிகளை புகைப்படம் எடுக்க அங்கு சென்றோம். அங்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.  அங்கு குடியிருக்கும் குடியிருப்பாளர்கள் ஒருவர் கூட தங்கள் வீட்டை திறந்து காட்ட தயாராக இல்லை. அப்படி வீட்டை திறந்து காட்டினால் எங்களை உடனடியாக காலி செய்ய சொல்லி அதிகாரிகள் மிரட்டுவார்கள் என்ற நம்மிடம் அவர்கள் சொன்ன காரணம் சற்று அதிர்ச்சியாகவே இருந்தது. நடக்கப்போகும் ஆபத்தை உணராமல் அரசு ஊழியர்களே அப்பாவி போல் பேசுவது எப்படி நியாயம்?. ஆற்றோரத்தில் கட்டப்பட்டுள்ள அக்கட்டிடம் மழை காலங்களில் தண்ணீரால் சூழப்பட்டுவிடும். குறைந்த வாடகை என்பதால் நாமே ஆபத்தை தேடிக்கொள்ளலாமா?. அரசு இப்பகுதியில் பணியாற்றும் அரசு ஊழியர் - ஆசிரியர்களுக்கு வகைப்படுத்தப்படாத வீட்டு வாடகை பட்டியலில் வைத்து குறைந்த அளவு வாடகை படி கொடுப்பதும் ஒரு காரணம். எனவே அரசாங்கமாவது விழித்து கொண்ட துரித நடவடிக்கை மூலம் இக்கட்டிடங்களை அகற்றி விட்டு புதிய கட்டிடங்கள் உருவாக்கி தர முன் வரவேண்டும். அப்படி கட்டும்பொழுது தற்பொழுது குடியிருக்கும் குடியிருப்பாளர்களுக்கு முன் உரிமை அளிக்கலாம். என்.ஜி.ஓ. காலனி குடியிருப்பு என்பதும் சிங்கம்புணரியின் அடையாளங்களுள் ஒன்று. அடையாளம் மாறாமல் பாதுகாக்க நாம் அனைவரும் முயல்வோம். இந்த முயற்சிக்கு ஆதரவு அளித்து வரும் தினத்தந்தி நாளிதழுக்கும், நம் கருத்தினை மையப்படுத்தி செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கும் நான் சார்ந்துள்ள தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

4/19/2014

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நடத்திய தேர்தல் சிறப்பு பயிற்சி வகுப்பு

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, சிங்கம்புணரி வட்டாரக் கிளையின் சார்பாக தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச் சாவடி அலுவலர்களுக்கான சிறப்பு பயிற்சி மற்றும் கலந்துரையாடல் வகுப்பு 18.4.2014 அன்று சிங்கம்புணரி பள்ளி எண்-4ல் நடைபெற்றது. பயிற்சியினை மாவட்டப் பொதுக்குழு உறுப்பினர்கள் இராகவன், வைரம் மற்றும் வட்டாரத்தலைவர் ஞான அற்புதராஜ் ஆகியோர் அளித்தனர். இப்பயிற்சியில் ஆசிரியர்களுக்கு ஏற்பட்ட அனைத்து வகை சந்தேகங்களும் தீர்த்து வைக்கப்பட்டன. மேலும் வாக்கு பதிவு அன்று நிரப்பப்பட வேண்டிய படிவங்கள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. பயிற்சியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மன நிறைவு தெரிவித்தனர். தேர்தலை எவ்வித பிரச்சனைகளுக்கும் இடம் கொடாமல் நடத்தவும், தேர்தல் பயிற்சியில் கிடைக்காத தெளிவினை தங்களின் உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டும் என்ற சமூக நோக்கின் அடிப்படையிலும் இயக்கம் இப்பணியினை மேற்கொண்டது. பயிற்சியில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பாக தேர்தல் அலுவலர்களுக்கான விளக்க குறிப்பு வழங்கப்பட்டது.

3/20/2014

மாஸ்டர்.வா.இராமுண்ணியின் 42ஆவது நினைவு நாள்

இயக்கம்கண்ட நாயகன் மாஸ்டர்.வா.இராமுண்ணியின் 42ஆவது நினைவு நாள் 20.3.2014. அவரது இலட்சியப்பாதையில் சமரசமற்ற போராளிகளாகப் பயணம் தொடர்வோம்.

1/11/2014

TNPT - சமூகம் சார்ந்த பணி

இன்று பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி , சிங்கம்புணரி வட்டாரக்கிளையின் சார்பாக பிஸ்கட் பாக்கெட் மற்றும் குடி தண்ணீர் வழங்கப்பட்டது. 1500 பக்தர்களுக்கு வழங்கப்பட்ட இச்சேவை கடந்த நான்கு வருடங்களாக தொடர்கிறது. சமூகம் சார்ந்த பணிகளில் ஒரு பகுதியாக இயக்கம் இதை செய்து வருகிறது.

1/10/2014

திகிலான இரவு -9.01.2014


நேற்று இரவு சிங்கம்புணரி வட்டார அலுவலகத்தில் பொறுப்பாளர்களுடன் உரையாடிகொண்டிருந்தோம். இரவு 8.30 மணியிருக்கும், நமது வட்டாரத்தைச் சார்ந்த இயக்க உறுப்பினர் திரு. அஜ்மீர் அவர்களிடமிருந்து அவசர தொலைபேசி. சிங்கம்புணரியிலிருந்து 5கி.மீ தொலைவில் கல்லம்பட்டி சாலையில் மலை பாம்பினால் மறிக்கப்பட்டுள்ளேன், அவசரமாக வரவும் என கூறி தொலைபேசி துண்டிக்கப்பட்டது. உடனடியாக நாம் இயக்க பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் 10க்கும் மேற்பட்டவர்களுடன் இருசக்கர வாகனத்தில் புறப்பட்டோம். 3நிமிடத்திற்குள் இடத்தை அடைந்தோம். மிகப்பெரிய மலை பாம்பு சாலையின் குறுக்கே கிடந்ததைப் பார்த்து ஆச்சரியப்பட்டு போனோம். பின்பு நம் வாகனங்களின் ஒளியை கண்டவுடனும், அதிர்விலும் பாம்பு நகரத் தொடங்கியது. உடனடியாக நாம் சிங்கம்புணரி தீயணைப்பு மற்றும் மீட்பு துறையைச் சார்நத நண்பர் பிரகாஷ் அவர்களுக்கு தகவல் தெரிவித்தோம். நமது நண்பர்களால் பாம்பு சுற்றி வளைக்கப்பட்டது. உடனடியாக பாம்பு அருகில் உள்ள புளிய மரத்தில் மிக வேகமாக ஏறி பதுங்கிக் கொண்டது. 20 நிமிடத்தில் தீயணைப்பு வீரர்கள் வருகை புரிந்தார்கள். பின்பு நம் இயக்க உறுப்பினர்களின் உதவியுடன் மரத்தில் ஏறி உலுப்பி பின் கீழே விழ வைத்து பாம்பு பிடிக்கப்பட்டது. 8அடிக்கு மேல் நீளமுள்ள அந்த பாம்பு மலை பாம்பு வகையைச் சார்ந்த வெங்கணத்தி என்று கூறினார்கள். பின்பு இரவு 10 மணிக்கு பிரான்மலை மலைக்காட்டில் பாம்பு விடப்பட்டது. மிகவும் இருட்டான அந்த இரவில் வாகனத்தின் ஒளியை பயன்படுத்தி  பாம்பு பிடிக்கப்பட்டது என்பது குறிபிபடத்தக்கது. எவ்வளவோ சமூகம் சார்ந்த பணிகளை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செய்து கொண்டிருந்தாலும் நேற்றைய இரவு என்பது திகிலாக கழிந்தது. ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் பயணிக்கும் சாலையில் இருந்த பாம்பை பத்திரமாக மீட்டு காட்டில் விட்டு திரும்பியது என்பது மற்க்க இயலாத நிகழ்வுதான்.

12/19/2013

சிவகங்கை மாவட்டத்தில் கல்வித்துறையை குழப்பும் குறுந்தகவல்கள்

சிவகங்கை மாவட்டத்தில் தொடக்கக்கல்வித்துறையில் கடந்த சில நாட்களாக குறுந்தகவல்கள் ஆசிரியர்களை குழப்பி வருகிறது. பள்ளி வேலை நாட்கள் பொதுவாக மாவட்டத்திற்கு ஏற்ப மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர்களே திட்டமிடும் வழக்கம்தான் இது நாள் வரை இருந்து வருகிறது. ஆனால் நேற்று சில ஒன்றியங்களில் சனிக்கிழமை வேலை நாள் இல்லை என அறிவித்து அந்த செய்தி குறந்தகவல்களாக மாவட்டம் முழுமையும் உள்ள ஆசிரியர்களுக்கு பரப்பப்பட்டுள்ளது. ஆனால் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அளித்துள்;ள விடுமுறை பட்டியலில் சனிக்கிழமை வேலை நாளாகவும் அன்று தேர்வு நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலரை தொடர்புகொண்டு கேட்டபொழுது, பள்ளி வேலை நாளை பொறுத்தவரை அனைத்து உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்களிடமும் காலண்டர் கொடுத்துள்ளேன் அதை பின்பற்றச் சொல்லி அறிவுறுத்தியுள்ளேன் என நம்மிடம் தெரிவித்தார். இது சம்பந்தமாக உதவித் தொடக்க்கல்வி அலுவலர்களை தொடர்பு கொண்டால் ஒவ்வொருவரும் மாறுபட்ட பதிலை தருகிறார்கள். புதிய காலண்டர் வருங்காலங்களிலதான் பயன்படுத்த வேண்டும் எனவும் தற்பொழுது பழைய விடுமுறை பட்டியலே தொடரும் எனவும் சில உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்களும், இல்லை புதிய காலண்டர்படி சனிக்கிழமை விடுமுறை என சில உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்களும் முரண்பட்டு கருத்து தெரிவிக்கின்றனர். இந்த குழப்பமான சூழலில் சிவகங்கை மாவட்டங்களில் ஒரு சில ஒன்றியங்களில் வருகிற சனிக்கிழமை விடுமுறை அறிவித்து  சனிக்கிழமை நடைபெற உள்ள தேர்வுகள் இன்று நடத்தப்பட்டுள்ளது. மற்ற ஒன்றியங்களில்  பழைய விடுமுறை பட்டியல்படி சனிக்கிழமை வேலை நாளாகவும், தேர்வு நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மாவட்டத்திற்குள் நிகழ்ந்துள்ள குழப்பத்தால் ஆசிரியர்கள் குழம்பி நிற்கின்றனர் என்பதுதான் உண்மை. வருங்காலங்களில் இந்த குழப்பங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்பதே நம் அவா.

12/15/2013

TNPTF முன்னெடுத்த கோரிக்கை வென்றது. ரூ 57 இலட்சம் கடன் அனுமதி.

சிங்கம்புணரி கூட்டுறவு சங்கத்தில் ஆசிரியர்களின் கடன் கோரிய விண்ணப்பம் 6 மாத காலமாக கிடப்பில் போடப்பட்டதை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தன் கையிலெடுத்து கடந்த வெள்ளிக்கிழமை (13.12.2013) அன்று சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பொது மேலாளரை சந்திதத்து கோரிக்கை விடுத்தனர். இயக்கத்தின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை உணர்ந்த பொது மேலாளர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதன் விளைவாக நேற்று 17 ஆசிரியர்களின் விண்ணப்பத்தை ஏற்றக்கொண்டு உடனடியாக ரூ 57 இலட்சத்தை அனுமதித்து உத்தரவிட்டுள்ளார். சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு நாளை (16.12.2013) சிங்கம்புணரி சிக்கன நாணய கூட்டுறவு சங்கத்தில் காசோலைகள் வழங்கப்படும். மேலும் சங்கத்தில் நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை உடனடியாக சிவகங்கைக்கு அனுப்புவும் பொது மேலாளர் கேட்டுக்கொண்டார். 6 மாத காலமாக நிலுவையில் இருந்த பிரச்சனை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கையிலெடுத்த 18 மணி நேரத்துக்குள் முடிவுக்கு வந்தது. இதனால் சிங்கம்புணரி - எஸ்.புதூர் ஒன்றியங்களில் பணிபுரியும் ஆசிரியர் - அரசு ஊழியர்கள் மகிழ்வு அடைந்தனர். இந்த விசய்தில் போர்கால நடவடிக்கை எடுத்து உடனடி தீர்வு கண்ட சிவகங்கை மாவட்ட மத்திங கூட்டுறவு வங்கியின் பொது மேலாளர் அவர்களுக்கும், வங்கி ஊழியர்களுக்கும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறது. 

சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளருடன் TNPTF நிர்வாகிகள் சந்திப்பு

சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பொது மேலாளரை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் சிங்கம்புணரி வட்டார பிரச்சனை சம்பந்தமாக சந்தித்து பேசினர். அப்பொழுது சிங்கம்புணரி மற்றும் எஸ்.புதூர் ஒன்றியங்களில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களை உறுப்பினர்களாக கொண்டு என்.என்.518 ஆசிரியர்-அரசு ஊழியர் சிக்கன நாணய கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இதில் கடந்த 6மாத காலமாக எவ்வித கடனும் அனுமதிக்காமல் காலம் தாழ்த்துவதை சுட்டிக்காட்டி இயக்கம் தன்னுடைய அதிர்ப்தியை தெரிவித்தது. இயக்கம் வைத்த கோரிக்கையின் நியாயத்தை புரிந்துகொண்ட பொது மேலாளர் உடனடியாக் முதல் தவனையாக 17 நபர்களுக்கு ரூ56 இலட்சத்தை விடுவிப்பதாக நம்மிடம் உறுதியளித்தார். மேலும் இந்தாண்டு கூடுதலாக ரூ10 கோடி கோரியுள்ளதாகவும், வருகிற 19ந் தேதி சென்னையில் நடைபெறும் கூட்டத்தில் வலியுறுத்தப் போவதாகவும் நம்மிடம் தெரிவித்தார். 30 நிமிடம் நீடித்த இச்சந்திப்பில் சிவகங்கை TNPTF மாவட்டத்தலைவர் முத்துப்பாண்டியன், NN518 கூட்டுறவு சங்க வட்டாரத்தலைவர் சுரேஷ், சிங்கம்புணரி TNPTF வட்டாரத்தலைவர் ஞான அற்புதராஜ், TNPTF மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் பொன்.பால்துரை, NN518 கூட்டுறவு சங்க இயக்குநர் பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

12/10/2013

நிறைவேறியது எமது இயக்கத்தின் கோரிக்கை

எமது இயக்கம் நெடுநாளாக கோரி வந்த சிங்ம்புணரி உதவித் தொடக்கக்கல்வி அலுவலகத்திற்கான இடம் இன்று நடைபெற்ற பேரூராட்சி கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்காக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சிங்கம்புணரி பேரூராட்சிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறது. தீர்மானம் நிறைவேறிய செய்தியறிந்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் உடனடியாக பேரூராட்சித் தலைவர் திருமதி லெட்சுமி பிரியா ஜெயந்தன், துனைத்தலைவர் திரு. நித்யா என்ற தொல்காப்பியன், 5வது வார்டு கவுன்சிலர் திரு. செந்தில்கிருஷ்ணன், மூத்த கவுன்சிலர் திரு.திருமாறன், கவுன்சிலர்கள்  திரு.சதீஸ்குமார், திருமதி.ரேவதி, திரு.இராஜா, மற்றும் செயல் அலுவலர் ஆகியோரை சந்தித்து தமது நன்றியை தெரிவித்தனர். மற்றொரு நாளில் அனைத்து உறுப்பினர்களையும் சந்தித்து தமது நன்றியை தெரிவிக்க இயக்கம் திட்டமிட்டுள்ளது. நாம் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் தற்பொழுது அலுவலகம் உள்ள நியூ காலனியிலேயே இடம் ஒதுக்கீடு செய்து தீர்மானம் நிறைவேற்றியமைக்கு இயக்கம் தனது நன்றியை தெரிவித்துக்கொண்டது.

11/11/2013

அரசு ஊழியர்- ஆசிரியர்களின் ஏக்கத்தை கவனிக்குமா? கருவூலகத்துறை.

உதவி கருவூலகங்களில் பட்டியல் பதிவேற்றப்பட்டவுடன் அதற்கான வவுச்சர் எண்ணை வாங்க மாவட்ட கருவூலத்திற்கு செல்ல வேண்டிய அவலம் அனைத்து சம்பளம் பெற்றுத் தரும் அலுவலகங்களுக்கும் உள்ளது. அறிவியல் எவ்வளவோ முன்னேறி தகவல் தொழில் நுட்பம் வளர்ந்த இந்த காலத்தில் கூட இந்த நிலையை மாற்றாமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை. இதனால் சில நேரங்களில் தவறுதலாக பதிவேற்றப்படும் பணத்தை மீளபபெற முடியாமல் அரசு ஊழியர்கள் தவிக்க வேண்டிய சூழல் உள்ளது. அவ்வாறு தவறாக செலுத்தப்படும் பணம் எந்த தலைப்பின் கீழ் சேர்ந்துள்ளது என்பது பரியாத புதிராகவே உள்ளது. மாவட்ட கருவூலத்தில் சென்று வவுச்சர் எண் கேட்டால் பிரிவு அலுவலர்கள் அவ்வளவு எளிதாக அதை பதிவு பண்ணிக் கொடுப்பதில்லை என்பதுதான் நிஜம். இதனால் ஊழியர்களுக்கு கால விரயம் ஏற்படுவதுடன் தேவையில்லாத மன உளைச்சலும் ஏற்படுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள இந்த பிரச்சணைக்கு மாநில கருவூலத்துறை தீர்வு காண முயல வேண்டும் என்பதே நமது அவா. மிஸ்ஸிங் கிரெடிட் ஆன பல கணக்குகள் திரும்ப கிடைக்க வழியில்லாமல் ஊழியர்கள் புலம்புவதை தவிர்க்க சம்பந்தப்பட்ட உதவி கருவூலகங்களே வவுச்சர் எண்ணை வழங்கும் நடவடிக்கையை கொண்டு வரலாம். இதனால் தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள் பயன் பெறும். சம்பளம் பெற்றுத்தரும் அலுவலகங்களுக்கும், கருவூலத்திற்கும் ஒரு நல்ல புரிந்துணர்வு வேண்டும். இன்றைய அவசர யுகத்தில், ஊழியர் பற்றாக்குறை நிலவும் நேரத்தில் வீண் அலைச்சல்களை போக்கும் நல்லெண்ண அடிப்படையில் சம்பந்தப்பட்ட உதவி கருவூலகங்களே வவுச்சர் எண்ணை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டுமாய் மாநில கருவூலகத்துறையை தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

10/02/2013

TNPTF ன் கோரிக்கைகள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்- தொடக்கக் கல்வி இயக்குநர் உறுதி.

தொடக்கக் கல்வி இயக்குநர் - TNPTF மாநிலப் பொறுப்பாளர்கள் சந்திப்பு.
6-9-2013 மற்றும்27-9-2013 ஆகிய இரு நாட்கள் தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களை TNPTF மாநிலப் பொறுப்பாளர்கள் சந்தித்து கோரிக்கைகள் குறித்து பேசியுள்ளனர்.
* 6-9-13 சந்திப்பு:
ஆகஸ்ட் மறியலுக்கு பின் நடைபெற்ற சந்திப்பு என்பதால் போராட்டத்தின் தாக்கம் இயக்குநரின் சந்திப்பின் போது வெளிப்பட்டது.
மறியல் போராட்டத்தின் போது பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளை நடத்துவதில் ஏற்பட்ட சிரமங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.வேலை நாளில் மறியல் என்பதால் போராட்டம் அரசின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. நீண்ட நாள்களாய் நிலுவையிலுள்ள கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தருமாறு இயக்குநரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
*27-9-13 இயக்குநர் சந்திப்பு.
இச்சந்திப்பின் போது முன்னர் கொடுத்த கோரிக்கைகள் மீது சம்பந்தப்பட்ட மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு கோரிக்கைகளுக்கான உத்தரவுகள் தயார் நிலையில் உள்ளதாகவும் ஓரிரு நாள்களில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு உத்தரவு கிடைக்கும் என்று இயக்குநர் உறுதியளித்துள்ளார்.
*TNPTF ன் போராட்டக் கோரிக்கைகளான இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு, CPS இரத்து பற்றி இயக்குநர் கவனமுடன் கேட்டுக்கொண்டதாகவும் இக்கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
மேற்கண்ட தகவல்களை நம்முடைய மாநிலப் பொதுச்செயலாளரும் மாநிலத் தலைவரும் மதுரையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் நம்மிடையே பகிர்ந்து கொண்டனர்.

9/11/2013

சிங்கம்புணரியில் கையூட்டு நிறுத்தப்பட்ட வரலாறு.

சிங்கம்புணரியில் 2007க்கு முன்னால் உதவித்தொடக்கக்கல்வி அலுவலகம் மற்றும் கருவூலத்தில் சர்வ சாதரணமாக கையூட்டு பெறுவது என்பது நடைமுறையில் இருந்து வந்தது. 2007க்கு பின்னால் தமிழ்நாடு ஆரமப்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மறு கட்டமைப்பு செய்யப்பட்டு இயக்க எழுச்சி நாள் மூலம் முன்னாள் பொதுச்செயலாளர் தோழர் பர்வதராஜன் அவர்களின் இயக்க பேரூரையோடு எழுச்சி கண்டது. அதன் பின்னாள் மாற்று இயக்கமில்லா ஒன்றியமாக சிங்கம்புணரி மாற்றம் கண்டது. இயக்கம் அலுவலகத்தில் நடக்கும் தில்லுமுல்லுகளை கொஞசம் கொஞசமாக களைய தொடங்கியது. ஒரு கட்டத்தில் உதவித்தொடக்கக்கல்வி அலுவலகத்தில் கையூட்டு என்பது கருவூலக ஊழியர்கள் சிலரின் வலுக்கட்டாயமான வசூல் என்பது தெரியவந்தது. உடனடியாக இயக்கத்தின் முக்கிய பொறுப்பாளர்கள் மற்றும் செய்தி ஊடகத்தோடு சிங்கம்புணரி கருவூலகம் முற்றுகையிடப்பட்டது. கருவூலத்தில் இருந்து குறிப்பிட்ட அலுவலரால் உதவித்தொடக்கக்கல்வி அலுவரகத்துக்கு அனுப்பப்பட்ட துண்டுச்சீட்டு நமக்கு கிடைத்தது. பார்த்ததும் அதிர்ச்சி. அதில் மளிகை கடை சிட்டை போல் வரவேண்டிய கையூட்டு பண பாக்கி இன வாரியாக, தேதி வாரியாக எழுதப்ட்டிருந்தது. இது குறித்து நீண்ட விவாதம் கருவூல அலவலரிடம் நடந்தது. அதன்பின் மறுநாள் தினத்தந்தி முக்கிய செய்தியாக சிங்கம்புணரி கருவூலகம் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியால் முற்றுகை என தமிழகம் முழுமைக்கும் செய்தி வெளியிட்டது. அச்செய்தி உயர் அலுவலர்களின் பார்வைக்கு சென்று விசாரணை துவங்கியது. நாமும் மாவட்டக்கிளையின் உதவியோடு மாவட்ட கருவூலக அதிகாரியிடம் மனு அளித்தோம். அப்போதைய மாவட்ட கருவூலக அலவலர் திரு. முரளிதரன் அவர்கள் இயக்கத்தின் மீது அதிக மரியாதை செலுத்தி நாம் கொடுத்த மனுவிற்கு உடனடியாக விசாரணை அதிகாரியை நியமித்து அனைத்து உண்மைகளையும் வெளிகொணர்ந்து அதற்கு காரணமான அலுவலரை உடனடி இடமாற்றம் செய்தார். தனிப்பட்ட தொலை பேசி எண் கொடுத்து தினமும் ஒரு மாத காலத்திற்கு கருவூல செயல்பாடுகள் குறித்து அலைபேசியில்  நம்மிடம் உரையாடினார். நாமும் இது குறித்த அனைத்து தகவல்களையும் கருவூலத்துறையின் அப்போதைய ஆணையாளர் மதிப்புமிகு. மோகன் பியாரே அவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்தோம். இதன் காரணமாக அன்றைய தினம் நிறுத்தப்பட்ட கையூட்டு இதுநாள் வரையில் தொடர்கிறது. சிங்கம்புணரி கருவூலத்தில் பணம் பெறும் அனைத்து அலவலகங்களும் செய்ய தயங்கிய இச்செயலை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கையில் எடுத்து அதில் வெற்றியும் கண்டது. அதன் மூலம் சிங்கம்புணரி மற்றும் எஸ்.புதூர் ஒன்றியங்களில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன் அடைந்தனர். உதவித்தொடக்கக்கல்வி அலுவலகத்திற்கான மிக அவசியமான தேவைகளை நிறைவேற்ற தேவைப்படும் பணத்திற்காக இயக்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க ஒன்றியத்தில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களையும் மாதத்திற்கு ஆர்.டி.ரூ.500 செலுத்த ஏற்பாடு செய்தோம். அதன் மூலம் பெறப்படும் கமிசன் தொகையை அலுவலகத்தின் அத்தியாவசிய தேவைக்கு பயன்படுத்திக்கோண்டோம் அதன் கணக்கு வழக்குகளை இயக்கத்திற்கு முறையாக தெரியப்புடுத்த கட்டாயப்படுத்தினோம். ஒன்றியம் கையூட்டு இல்லாத ஒன்றியமாக திகழ்கிறது. இதற்கு ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி. இது யார் மனதையும் புன்படுத்தும் நோக்கில் பதிவிடப்படவில்லை. நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க வெளியிட்டோம்.

உண்மையை உரக்கச் சொல்லுவோம்!!!
உரிமையைப் போராடி பெறுவோம்!!!
_________________MP@TNPTF_______________________