G.O. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
G.O. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
10/29/2015
3/31/2015
பத்தாம் வகுப்பை +2க்கு இணையாக கருதும் அரசாணை திருத்தம் வெளியீடு
லேபிள்கள்:
G.O.
3/17/2015
TNPTF கோரிக்கை ஏற்பு - குறுவள மைய பயிற்சிக்கு ஈடுசெய் விடுப்பு அனுமதி - அரசாணை வெளியீடு
லேபிள்கள்:
G.O.
12/08/2014
தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப்பள்ளிகளின் பட்டியல்
லேபிள்கள்:
G.O.
10/31/2014
10/24/2014
ஆசிரியர் பயிற்சி படிப்பை +2க்கு இணையாக கருதும் அரசாணை
லேபிள்கள்:
G.O.
9/19/2014
4/07/2014
4/04/2014
2/07/2014
1/07/2014
1/04/2014
பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களின் CPS விவரங்களும் Data Center லேயே பதிவு செய்யப்படும்.
லேபிள்கள்:
court news,
cps,
G.O.
இதுவரை தொடக்கக்கல்வி இயக்கத்தில் பணிபுரிந்த ஆசிரியர்களின் TPF & CPS விவரங்கள் அனைத்தும் கிண்டி அண்ணா நூலகம் அருகே உள்ள Data Center லும், பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரிந்த ஆசிரியர்களின் GPF & CPS விவரங்கள் அனைத்தும் சென்னை, அண்ணா சாலையில் உள்ள மாநில தலைமை கணக்காயர் அலுவலகத்திலும் (AG Office ) சேகரிக்கப்பட்டு வந்தது.
அரசாணைக்கு இங்கே சொடுக்கவும் 
ஆனால் 01.01.2014 முதல் பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களின் CPS விவரங்களும் Data Center லேயே பதிவு செய்யப்படும். இதனால் அவர்களுக்கு கூடிய விரைவில் Data Center மூலமாக புதிய CPS எண் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதே சமயம் GPF விவரம் தொடர்ந்து AG Office லேயே பதிவு செய்யப்படும். AG Office மூலமாக தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்களுக்கு CPS வருடாந்திர Schedule அனுப்பப்பட்டு வந்தது. ஆனால் Data Center மூலமாக இது போன்ற Schedule முழுமையாகவும், முறையாகவும் பெரும்பாலான ஆசிரியர்களுக்கு அனுப்பிவைக்கப்படாததால் புதிதாக இந்த அலுவலகத்தின் கீழ் வரக்கூடிய பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்களுக்கு இந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
10/10/2013
8/21/2013
8/14/2013
8/02/2013
சாதி மதம் குறிப்பிடாமல் பள்ளியில் சேர்க்க அரசு அரசானை
லேபிள்கள்:
G.O.
8/01/2013
01.01.2006 முதல் 31.05.2009 வரை பழைய ஊதிய விகிதத்தில் தேர்வு நிலை/ சிறப்புநிலை அடைந்து அதற்குப்பின் புதிய ஊதிய விகிதத்தில் ஊதிய நிர்ணயம் செய்துக்கொண்டவர்களுக்கு கூடுதல் 3% உண்டா ? - ஓர் ஆய்வு
லேபிள்கள்:
Educational News,
G.O.
அரசாணையின் முதல் பத்தியை கவனிக்கவும் :
01.01.2006க்கு பின் 10/ 20 வருட சாதாரண (பதவியுயர்வின்றி) நிலையிலேயே தேர்வு/ சிறப்பு நிலை முடித்தோர்க்கு புதிய ஊதிய விகித மாற்றமின்றி கூடுதலாக 3% மட்டுமே ஊக்க ஊதியம் மட்டுமே அதே மாற்றமற்ற Pay band மற்றும் Grade Pay விற்கு அளிக்கப்படுகிறது.
அரசாணையின் தலைப்பிலேயே "Grant of one additional increment of 3% of basic pay to employees on award of Selection Grade / Special Grade in the Revised Scales of pay" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. in the Revised scales of pay என்பது கவனிக்கப்படவேண்டிய ஒன்றாகும்.
அரசாணையின் முதல் பத்தியில் முந்தைய அரசானை 234 பற்றி கூறப்பட்டுள்ளது.
இரண்டாவது பத்தியில் சங்கங்களின் கோரிக்கை பற்றியும் குறைதீர்க்கும் பிரிவின் முடிவு பற்றியும் கூறப்பட்டுள்ளது.
பத்தி 3 இல் 1.1.2006 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள Revised scales of pay - இல் selection grade/special grade நிலையை அடையும் போது an additional increment benefit (3% + 3%) பெற அரசு வகை உத்தரவிட்டுள்ளது.
விளக்கம்:
31.12.2005 - இன் போது பணியில் இருந்தவர்கள் 1.1.2006 இல் புதிய விகிதத்தில் ஊதிய நிர்ணயம் செய்திருப்பார்கள். (தொகுப்பூதியதாரர்கள் 1.6.2006 இல் )
1.1.2006 அன்று தேர்வுநிலை பெறாத இடைநிலை ஆசிரியர்கள் 5200 -20200 +G.P.2800 லும், தேர்வுநிலை பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் 9300 விகிதத்தில் G.P.4300 லும் வைக்கப்பட்டிருப்பர்.
இவ்வாறாக 1.1.2006 இல் புதிய ஊதிய விகிதத்தில் செய்யப்பட்ட ஊதிய நிர்ணயத்தை தொடர்ந்து 2800 தர ஊதியத்தில் உள்ள தேர்வுநிலை பெறாத இடைநிலை ஆசிரியர்கள், தேர்வுநிலை அடையும்போது தற்போது கூடுதலாக 3% INCREMENT பெற்று கொள்ளலாம். உதாரணமாக 2800 தர ஊதியத்தில் உள்ள ஒருவர் 2008 ஆம் ஆண்டு தேர்வுநிலையை அடைந்திருந்தால் அப்போது 3% INCREMENT பெற்றிருப்பார். அவர் தற்போது கூடுதலாக 3% INCREMENT சேர்த்து கணக்கிட்டுகொள்ளலாம். நிலுவைத்தொகை கிடையாது. பணப்பயன் 1.4.2013 முதல் பெறலாம்.
இதைபோல 1.1.2006 இல் தேர்வுநிலை பெற்று 9300 ஊதிய விகிதத்தில் 4300 தர ஊதியத்தில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டவர்கள், அவர்கள் சிறப்புநிலை (Special Garde) அடையும்போது கூடுதலாக 3% INCREMENT பெற்றுகொள்ளலாம்.
தொகுப்பூதியதாரர்களும் மற்றும் அதற்க்கு பின்னர் நியமிக்கப்பட்டவர்களும் தேர்வுநிலை அடையும்போது 3% + 3% INCREMENT பெற்றுகொள்ளலாம்.
சுருக்கமாக சொன்னால் REVISED SCALES OF PAY இல் தேர்வுநிலை/சிறப்புநிலை பெறுபவர்கள் 3% + 3% INCREMENT பெறலாம்.
OPTION அளித்து தேர்வு நிலை பெற்றவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம்:
OPTION அளித்து தேர்வுநிலை ஊதிய நிர்ணயமான 9300 + G.P. 4300 இல் ஊதியம் நிர்ணயம் செய்துகொண்டவர்கள் சிலர் நாங்களும் 1.1.2006 இக்கு பின்னர்தான் தேர்வுநிலை பெற்றோம் எனவே எங்களுக்கும் கூடுதலாக 3% உண்டா என்று கேட்கின்றனர். இல்லை என்றால் சங்கடப்படுகின்றனர். எனவே விளக்கம் கூற விரும்புகிறோம்.
முக்கியமாக 01.01.2006 முதல் 31.05.2009 வரை தேர்வு/ சிறப்பு நிலை முடித்தவர்களுக்கே OPTION கொடுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.
உதாரணமாக 1.1.2008 இல் தேர்வுநிலை பெற்றவர்கள் 1.1.2006 இல் புதிய ஊதிய விகிதத்தில் ஊதிய நிர்ணயம் செய்யும்போது 5200 - 20200 + 2800 தான் பெற இயலும். எனவே அவர்1.1.2006 இல் புதிய ஊதிய விகிதத்தில் ஊதிய நிர்ணயம் செய்துகொள்ளாமல், 1.1.2008 வரை முந்தைய அதாவது பழைய ஊதிய விகிதத்திலேயே இருந்துவிட்டு, அதாவது பழைய ஊதிய விகிதத்தில் தேர்வு நிலைப்பெற்று விட்டு 1.1.2008 இல் புதிய ஊதிய விகிதத்தில் தங்களது ஊதியத்தை நிர்ணயம் செய்துகொண்டிருப்பார். அவருக்கு அப்போது எந்த 3% சதவீதமும் அளிக்கப்பட்டிருக்காது.
இங்கே மீண்டும் நினைவுப்படுத்திக்கொள்வோம் "Grant of one additional increment of 3% of basic pay to employees on award of Selection Grade / Special Grade in the Revised Scales of pay". அதாவது புதிய ஊதிய விகிதத்தில் தேர்வு/ சிறப்பு நிலை முடித்தோர்க்கு கூடுதலாக 3% என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே 3% பெறாதவருக்கு கூடுதலாக 3% எப்படி அளிக்க இயலும்?
இங்கு கவனிக்கவேண்டியது என்னவென்றால் OPTION அளித்தவர்கள் பழைய ஊதிய விகிதத்தில் தான் தேர்வுநிலை பெற்று, பின்னர் புதிய ஊதியத்திற்கு வருகின்றனர். இவர்கள் அடுத்ததாக சிறப்புநிலை பெறும்போதுதான் இந்த 3%+3% பெற இயலும்.
7/25/2013
மூன்று நபர் குழு அறிக்கையின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள அரசாணைகள்
லேபிள்கள்:
G.O.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)