பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

மின்னஞ்சல் மூலம் பதிவுகளை பெறலாம்

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

12/25/2014

பத்தாம் வகுப்பு தேர்வு கால அட்டவணையில் மாற்றம் இல்லாத நிலையில், கடந்த வாரத்தில் சில செய்தித்தாள்கள் வெளியிட்ட செய்தி தவறானது என தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு


தொடக்கக் கல்வி - பள்ளி மாணவர்கள் மனச்சிதைவு காரணமாக தற்கொலை செய்து கொண்டவர்களின் விவரம் கோரி உத்தரவு


12/24/2014

இடைநிலை ஆசிரியர் ஊதியம் குறித்த நீதிமன்ற தீர்ப்பும்,”அதனை அமுலாக்கமுடியாது “ என்றநிதிச்செயலர் கடிதமும்-ஓர் அலசல் கட்டுரை-

2015-ம் ஆண்டின் வரையறுக்கப்பட்ட மற்றும் விடுமுறை நாட்கள்


ஆசிரியர்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்ய சட்டம்

கட்டாய கல்வி சட்டத்தின்கீழ் சேர்க்கை நடத்த மாட்டோம்: தனியார் பள்ளிகள்

சென்னை: கட்டாய கல்வி சட்டம் கீழ், மாணவர்களை சேர்த்த தனியார் பள்ளிகளுக்கு, அதற்கான கட்டணத்தை தமிழக அரசு இதுவரை கொடுக்கவில்லை. எனவே, அடுத்த ஆண்டு சேர்க்கையை நடத்தப் போவதில்லை என, தனியார் பள்ளிகள் தெரிவித்துள்ளன.
25 சதவீதம்
நாட்டில், 6 - 14வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, கல்வி அடிப்படை உரிமை. நலிவுற்ற மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட
குழந்தைகளுக்கு, தனியார் பள்ளிகளில், 25 சதவீதம் இடம் அளிக்க வேண்டும். அதற்கான கட்டணத்தை அரசே வழங்கும் என்பது, கட்டாய கல்வி சட்டத்தின் அடிப்படை. இந்த சட்டம், 2009ல் அமலுக்கு வந்தபோதும், தமிழகத்தில், 2011ல் அமல்படுத்தப்பட்டது.
அதன்பின், இச்சட்டத்தின் படி மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. தனியார் பள்ளிகளில், கடந்த 2013 - 14ல், 49,864 மாணவர்; 2014 - 15ல், 89,954 மாணவர் என, 1,39,818 பேர், இரண்டு ஆண்டுகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இப்பள்ளிகளுக்கு, வகுப்பு அடிப்படையில், 5,000 - 6,000 ரூபாயை கட்டணமாக அளிக்க, தமிழக அரசு முடிவெடுத்தது.
இந்த வகையில், 2013 - 14ல், 25.13 கோடி ரூபாய்; 2014 - 15ல், 45.27 கோடி ரூபாய் வழங்க வேண்டும். ஆனால், இரண்டு ஆண்டுகளாக, இந்த கட்டணத்தை தமிழக அரசு வழங்கவில்லை.
இதுகுறித்து, தமிழ்நாடு, நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகள் சங்க பொதுச் செயலர், நந்தகுமார் கூறியதாவது: தமிழக அரசு, எங்களுக்கு தர வேண்டிய, கட்டணத் தொகையை தரவில்லை. பள்ளிகளின் முதல்வர் பெயரில் வங்கி கணக்கு துவக்குமாறு கூறினர்; துவக்கிவிட்டோம். மாணவர் சேர்க்கை குறித்த அனைத்து விவரங்களையும் அளித்து விட்டோம்.
ஆனால், இதுவரை, கட்டணத் தொகை கிடைக்கவில்லை. கடந்த ஆண்டுக்கான பணத்தை, இந்த ஆண்டு செப்டம்பரில் தருவதாக கூறினர்; இதுவரை தரவில்லை. சமீபத்தில், மத்திய அரசு, அந்த பணத்தை தரமுடியாது என்று கூறியிருப்பதாக தகவல் வந்துள்ளது.
விவர அறிக்கை
அதேநேரம், பெற்றோர் பல வகைகளில் எங்களை மிரட்டுகின்றனர். கல்வித்துறை அதிகாரிகளும் அவர்களுக்கு ஆதரவாக உள்ளனர். எனவே, அடுத்த ஆண்டு, 25 சதவீத மாணவர் சேர்க்கையை நடத்தப் போவதில்லை என முடிவு செய்துள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.
இதுகுறித்து, கல்வித்துறை தரப்பில் கேட்டபோது, "கடந்த ஆண்டு கட்டணம் தொடர்பான விவர அறிக்கை, தயாரிக்கப்பட்டு அதற்கான கோப்பு, நிதித்துறையில் உள்ளது. இன்னும் அனுமதி வரவில்லை. வந்ததும், கொடுத்து விடுவோம். இந்த ஆண்டிற்கான கட்டணத்திற்கு, மத்திய அரசு அனுமதிபெற, கோப்பு அனுப்பப்பட்டுள்ளது" என்றனர்.
மத்திய அரசு மறுப்பு ஏன்?
கடந்த 2013 - 14ல், மாணவர் சேர்க்கையின்போது, தமிழக அரசு, குறைந்தபட்ச கட்டணத்தை நிர்ணயித்தது. ஆனால், மாணவர்களை சேர்த்த பள்ளிகளை பொறுத்தவரை, கட்டணம் வேறுபட்டது. இதுகுறித்த அறிக்கை மத்திய அரசிற்கு சமர்ப்பிக்கப்பட்டது. மத்திய அரசோ, அரசு பள்ளிகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணமே தரப்படும் என கூறியது. தமிழக அரசின் அறிக்கைபடி, கட்டணத்தை தர மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

12/20/2014

தொடக்கக் கல்வி - இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில், பட்டதாரி ஆசிரியர் தகுதி பெற்று நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளிக்க அரசு பரிசீலிக்க ஏதுவாக விவரம் அளிக்க இயக்குனர் உத்தரவு


நிலுவையில் உள்ள கோப்புகளை விரைந்து முடிக்க உத்தரவு


பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி - தினமலர் செய்தி வெளியீடு


12/14/2014

கண்டிப்புக்கு பரிசு -தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் !


ஆசிரியப்பயிற்றுநர்களை பள்ளிக்கு மாறுதல் செய்ய வேண்டும் என்ற மதுரை உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பின் நகல்

CPS online service

SSA & SMC பயிற்சிகள்- தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கண்டிப்பு
ஆசிரியர் கண்காணிப்பு கல்வித்துறை ஏற்பாடு6வது பொருளாதர கணக்கெடுப்பு பணிக்கு மதிப்பூதியம் அளிக்க TNPTF கோரிக்கை. தினத்தந்தி(14.12.14) செய்தி வெளியீடு


12/12/2014

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, சிவகங்கை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் வட்டார கிளைகளின் மின்னஞ்சல் முகவரிகள்


உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கான பயிற்சிTNPTF மாநில செயற்குழு முடிவுகள்12/04/2014

மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான முறையில் அலுவலக நடவடிக்கைகள் அமைய தொடக்கக்கல்வித்துறை உத்திரவு

அனைத்து அலுவல்களுக்கும் மாதிரி படிவங்கள் மற்றும் அலுவலக குறிப்புறைகள் வழங்கி கடைபிடிக்க உத்திரவு தொடக்கக்கல்வித்துறையில் உள்ள லட்சக்கணக்காண ஆசிரியர்கள் சார்ந்த விடுப்பு, உயர்கல்வி, முன்அனுமதி, மருத்துவவிடுப்பு, ஈட்டியவிடுப்பு, அரைச்சம்பள விடுப்பு, வைப்புநிதி முன்பணம் கோரல், பகுதி இறுதிப்பணம் கோரல்,சேமநலநிதி கணக்கீடு,ஊக்கஊதியம் அனுமதித்தல், பதவிஉயர்வுக்குண்டான ஊதிய நிர்ணயம்,பண்டிகை முன்பணம்,மருத்துவ விடுப்பு அனுமதித்தல்,ஆண்டு ஊதிய உயர்வு அனுமதித்தல்,பொன்ற நடைமுறைகள் அந்தந்த உதவித்தொடக்கக்கல்வி அலுவலகப்பணியாளர்களால் அவர்கள் ஏற்கனவே கையாண்ட நடைமுறைகளின்படி அலுவலககுறிப்புகளும்,ஆணைகளும் வழங்கப்பட்டு வந்தன ஆனால் தமிழகம் முழுவதும் உள்ளஅனைத்து உதவித்தொடக்கக்கல்வி அலுவலகங்களிலும் ஒரே மாதிரியான வழிமுறையிணை பின்பற்ற தொடக்கக்கல்வித்துறை இயக்குனரகம் மூலம் ”மாதிரிப்படிவங்கள்,அலுவலகநடைமுறைக்கடிதம்,அலுவலகசெயல்முறை ஆணைகள் மற்றும்,பணிப்பதிவேட்டில் பதிய மாதிரி சீல்கள்” ஆகியன நிர்வாகப்பயிற்சியின் போது வழங்கப்ப்ட்டுள்ளது. .அதனை கடைபிடிக்க கோரப்பட்டு அனைத்து உதவிதொடக்கக்கல்விஅலுவலகங்களுக்கும் உரிய மாவட்டக்கல்வி அதிகரிகள் வாயிலாக அனுப்பப்படுள்ளதாக அறியப்படுகிறது.

SSA - 06.12.2014 அன்று நடைபெறவுள்ள குறுவள மைய பயிற்சியில் எவ்வித மாற்றமில்லை; பயிற்சி வழக்கம் போல் நடைபெறும்

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் 06.12.2014 அன்று "குழந்தைகளின் அடைவு குறித்த கலந்துரையாடல்" என்ற தலைப்பில் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு குறுவள மைய பயிற்சி நடைபெறவுள்ளது. அன்றைய தினம் கார்த்திகை தீப திருவிழா வருவதால், அன்றைய தினத்தில் நடைபெறவுள்ள குறுவளமைய பயிற்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது. ஆனால் பயிற்சி திட்டமிட்டப்படி நடைபெறும் என்று அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அந்தந்த மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட மாவட்டத்திற்கு மட்டும் ஒத்திபோக வாய்ப்புள்ளது.

மாணவர்களின் பெற்றோர் உயிரிழக்க நேரிட்டால் அரசு வழங்கும் நிதியுதவி அதிகரிப்பு

பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியரின் குடும்பத்தில் வருவாய் ஈட்டும் நபர் உயிரிழந்தால் வழங்கப்படும் நிதியை ரூ.75 ஆயிரமாக அதிகரித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா வெளியிட்டுள்ள அரசாணையின் விவரம்:
சட்டப்பேரவையில் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, மாணவர்களின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்துவிட்டாலோ, நிரந்தர முடககம் அடைந்தாலோ, வருவாயின்மை காரணமாக கல்வியைத் தொடர முடியாத நிலை ஏற்படும் சமயத்தில், அவர்களது குழந்தைகள் தொடர்ந்து கல்வி கற்கும் வகையில் நிதி வழங்கப்படுகிறது.<
1 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியர் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும் நிதியை ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.75 ஆயிரமாக உயர்த்தி வழங்க ஆணையிடப்படுகிறது. இந்த நிதி அரசு நிதி நிறுவனங்களில் வைப்புத் தொகையாக வைக்கப்பட்டு, அதில் இருந்து கிடைக்கிற வட்டித் தொகை, முதிர்வுத் தொகை ஆகியவை அந்த மாணவ, மாணவியரின் கல்விச் செலவுக்காகவும், பராமரிப்புக்காகவும் பயன்படுத்தப்பட வேண்டும். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்திட தேவையான நிதியை ஒதுக்கீடு செய்ய ஏதுவாக உரிய கருத்துருக்களை பள்ளிக் கல்வி இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்குநர் ஆகியோர் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர் என அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துறை முன் அனுமதி பெறாமல் உயர் கல்வி பயின்றமைக்கு ஊக்க ஊதியம் கோரும் நேர்வுகள் குறித்து அறிவுரைகள் சார்பு தொடக்கக் கல்வி இயக்குனர் செயல்முறை


12/03/2014

இயக்க வளர்ச்சி நிதி

சிவகங்கை மாவட்டப் பொதுக்குழு உறுப்பினர் திருமுருகன் தன் இல்ல புதுமணை புகு விழாவில் இயக்க வளர்ச்சி நிதியாக ரூ1000த்தை மாநிலத் தலைவரிடம் வழங்குகிறார்

தினகரன் செய்தி வெளியீடு


உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கு சென்னையில் நிர்வாக பயிற்சி

உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான, நிர்வாகப் பயிற்சி, சென்னையில் அளிக்கப்பட்டது. தொடக்கக் கல்வி இயக்கம் கட்டுப்பாட்டில் பணிபுரியும், 836 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு, நிர்வாகப் பயிற்சி அளிக்க, அரசு உத்தரவிட்டது.
அதன்படி, முதல் கட்டமாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த, 73 பேருக்கு, சென்னையில், பயிற்சி வகுப்பு நடந்தது. பள்ளிக்கல்வி துறை அமைச்சர் வீரமணி, 32 தலைப்புகள் கொண்ட, உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான கையேடை வெளியிட்டார். மேலும், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், ஆங்கில உச்சரிப்பை, சரியான முறையில் கற்க வேண்டும் என்பதற்காக, தயார் செய்யப்பட்டுள்ள குறுந்தகதடையும், அமைச்சர் வெளியிட்டார். பயிற்சி வகுப்பு துவக்க நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் சபிதா, அனைவருக்கும் கல்வி இயக்க, மாநில திட்ட இயக்குனர் பூஜாகுல்கர்னி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். தொடக்கக் கல்வித்துறை இயக்குனர் இளங்கோவன் வரவேற்றார்.

இயக்குனர்கள் மாற்றம்...


பள்ளிக்கல்வித் துறை இயக்குனராக இருந்த திரு.வி.சி.இராமேஸ்வர முருகன் அவர்கள் SCERT இயக்குனராக மாற்றம்,

திரு.த.கண்ணப்பன் அவர்கள் பள்ளிக்கல்வித் துறை இயக்குனராக நியமனம்.

தகவல் நன்றி: TNPTF, வேலூர் மாவட்டம்.

12/02/2014

12 ஆம் வகுப்பு மாணவனுக்கு கத்திக் குத்து: சேலம் அருகே பள்ளியில் கொடூரம்!

சேலம்: சேலம் அருகே  12 ஆம் வகுப்பு மாணவன்  பள்ளி  வகுப்பறையிலேயே   கத்தியால் கொடூரமாகக் குத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த  நடுப்பட்டி அரசு மாதிரி பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவன் சந்தோஷ்.  பள்ளியில் பாடவேளை  நடந்து கொண்டிருந்த போது மாணவன் சந்தோஷ் இருந்த வகுப்பறைக்குள், திடீரென  புகுந்த 2 பேர் மறைத்து எடுத்து வந்த கத்தியால் மாணவன் சந்தோஷை குத்தினர்.

உடனடியாக இருவரும் மோட்டார் சைக்கிளில் தப்பியோடிவிட்டனர். காயமடைந்த சந்தோஷ் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில்   அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக   காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திண்டுக்கல், அருப்புக் கோட்டை ஆகிய பள்ளி மாணவர்களின்  கொலை சம்பவத்தையடுத்து சேலம் மாவட்டத்திலும்  பள்ளி மாணவன்மீது கொலைவெறி தாக்குதல் நடந்துள்ளது மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

மாவட்டம் ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு. தொடக்கக்கல்வி இயக்குனரின் வேண்டுகோளுக்கிணங்க TNPTF மாவட்ட மையம் முடிவு

மானாமதுரை உதவித் தொடக்கக்கல்வி அலுவலரின் தொடர் ஆசிரியர் விரோதபோக்கை கண்டித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, சிவகங்கை மாவட்டக்கிளையின் சார்பாக சிவகங்கை மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலகம் முன்பு இன்று (2.12.2014) நடைபெற இருந்த மாவட்ட அளவிலான கண்டன ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.  தொடக்கக்கல்வி இயக்குனர் மதிப்புமிகு.இளங்கோவன் அவர்கள் மாநிலப் பொதுச் செயலளாளருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு குற்றச்சாட்டுகள் குறித்து 15 நாட்களுக்குள் விரைந்து விசாரணை மேற்கொண்டு  உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளதால் இயக்குனரின் உறுதிமொழிக்கு மதிப்பளித்து மாவட்ட ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட தடங்கல்களுக்கு வருந்துகிறோம். ஒத்துழைப்பு நல்கிய மாவட்ட, வட்டார, நகரப் பொறுப்பாளர்களுக்கும், உறுதுணை புரிந்த தேழமைச்சங்க நிர்வாகிகளுக்கும் மாவட்டக்கிளையின் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.  இப்பிரச்சணை குறித்து வருகிற 7.12.2014 அன்று சென்னையில் நடக்க இருக்கும் மாநிலச் செயற்குழுவில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள மாநிலச் செயற்குழுவை மாவட்ட மையம் கேட்டுக்கொள்ளும் என்ற தகவலையும் உறுப்பினர்களுக்கு இதன் மூலம் தெரியப்படுத்திக்கொள்கிறோம்.


மாநிலச் செயற்குழு கூட்டம் அழைப்பிதழ்