சேலம்: சேலம் அருகே 12 ஆம் வகுப்பு மாணவன் பள்ளி வகுப்பறையிலேயே கத்தியால் கொடூரமாகக் குத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த நடுப்பட்டி அரசு மாதிரி பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவன் சந்தோஷ். பள்ளியில் பாடவேளை நடந்து கொண்டிருந்த போது மாணவன் சந்தோஷ் இருந்த வகுப்பறைக்குள், திடீரென புகுந்த 2 பேர் மறைத்து எடுத்து வந்த கத்தியால் மாணவன் சந்தோஷை குத்தினர்.
உடனடியாக இருவரும் மோட்டார் சைக்கிளில் தப்பியோடிவிட்டனர். காயமடைந்த சந்தோஷ் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல், அருப்புக் கோட்டை ஆகிய பள்ளி மாணவர்களின் கொலை சம்பவத்தையடுத்து சேலம் மாவட்டத்திலும் பள்ளி மாணவன்மீது கொலைவெறி தாக்குதல் நடந்துள்ளது மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக