மானாமதுரை உதவித் தொடக்கக்கல்வி அலுவலரின் தொடர் ஆசிரியர் விரோதபோக்கை கண்டித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, சிவகங்கை மாவட்டக்கிளையின் சார்பாக சிவகங்கை மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலகம் முன்பு இன்று (2.12.2014) நடைபெற இருந்த மாவட்ட அளவிலான கண்டன ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தொடக்கக்கல்வி இயக்குனர் மதிப்புமிகு.இளங்கோவன் அவர்கள் மாநிலப் பொதுச் செயலளாளருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு குற்றச்சாட்டுகள் குறித்து 15 நாட்களுக்குள் விரைந்து விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளதால் இயக்குனரின் உறுதிமொழிக்கு மதிப்பளித்து மாவட்ட ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட தடங்கல்களுக்கு வருந்துகிறோம். ஒத்துழைப்பு நல்கிய மாவட்ட, வட்டார, நகரப் பொறுப்பாளர்களுக்கும், உறுதுணை புரிந்த தேழமைச்சங்க நிர்வாகிகளுக்கும் மாவட்டக்கிளையின் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். இப்பிரச்சணை குறித்து வருகிற 7.12.2014 அன்று சென்னையில் நடக்க இருக்கும் மாநிலச் செயற்குழுவில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள மாநிலச் செயற்குழுவை மாவட்ட மையம் கேட்டுக்கொள்ளும் என்ற தகவலையும் உறுப்பினர்களுக்கு இதன் மூலம் தெரியப்படுத்திக்கொள்கிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக