அறிவிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அறிவிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
12/18/2015
அரையாண்டு தேர்வுகள் அட்டவணை வெளியீடு
சென்னை: மழையால் ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுகள், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 11ம் தேதி துவங்கி, 27ம் தேதி வரை நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ளது. தற்போது தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் டிசம்பர் மாதம் 7ம் தேதி அரையாண்டுத் தேர்வுகள் வழக்கமாக நடைபெறும். இதற்காக தயாராகி வந்த நிலையில் நவம்பர் 8ம் தேதி முதல் சென்னை, கடலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி டெல்டா மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்தது. இதனால் தேர்வுகள் ஜனவரி மாதம் நடைபெறும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார், அதன்படி பிளஸ் 2 வகுப்புக்கான அரையாண்டுத் தேர்வு ஜனவரி 11ம் தேதி தொடங்குகின்றன. மாநிலம் முழுவதும் பொதுவாக நடைபெறும் இந்தத் தேர்வுகளுக்கான கால அட்டவணையை பள்ளிக் கல்வி இயக்ககம் இன்று வெளியிட்டுள்ளது. பிளஸ் 2 வகுப்புக்கான கால அட்டவணை விவரம்:
ஜனவரி 11 - மொழிப்பாடம் முதல் தாள்
ஜனவரி 12 - மொழிப்பாடம் இரண்டாம் தாள்
ஜனவரி 13 - ஆங்கிலம் முதல் தாள்
ஜனவரி 14 - ஆங்கிலம் இரண்டாம் தாள்
ஜனவரி 18 - வணிகவியல், வீட்டு மனையியல், புவியியல்
ஜனவரி 19 - கணிதம், விலங்கியல், மைக்ரோ பயாலஜி,
ஜனவரி 21 - இயற்பியல், பொருளாதாரம்,
ஜனவரி 22 - வேதியியல், கணக்குப் பதிவியல்,
ஜனவரி 25 - உயிரியல், தாவரவயில், வரலாறு, வணிகக் கணிதம்
ஜனவரி 27 - கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ-கெமிஸ்ட்ரி, புள்ளியியல்,
தேர்வுகள் காலை 10 முதல் 1.15 வரை நடைபெறும். இதில் முதல் 10 நிமிடங்கள் வினாத்தாளைப் படித்துப் பார்க்கவும், அடுத்த 5 நிமிடங்கள் விடைத்தாளில் உள்ள விவரங்களைப் பூர்த்தி செய்யவும் வழங்கப்படும்.
10ம் வகுப்பு அரையாண்டு தேர்வுகள் அட்டவணை:
ஜனவரி 11 - மொழிப்பாடம் முதல்தாள்
ஜனவரி 13 - மொழிப்பாடம் 2ம் தாள்
ஜனவரி 18 - ஆங்கிலம் முதல் தாள்
ஜனவரி 20 - ஆங்கிலம் 2ம் தாள்
ஜனவரி 22 - கணிதம்
ஜனவரி 25 - அறிவியல்
ஜனவரி 27 - சமூக அறிவியல்
அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வு 10 முதல் 12ம் வகுப்பு தேர்வுகளுடன் சேர்த்து 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கும் ஜனவரி 11-ல் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேதிகளுக்கு முன்னர் அரையாண்டு தேர்வுகள் நடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அறிவித்துள்ளார்.
12/17/2015
இரண்டாம் பருவத் தேர்வு விடுமுறையில் மாற்றம் இல்லை.
லேபிள்கள்:
அறிவிப்பு
தேர்வு விடுமுறை டிசம்பர் 23 முதல் ஜனவரி 1 வரை
ஜனவரி 2 பள்ளி மீண்டும் திறப்பு
ஜனவரி 4 முதல் இரண்டாம் பருவத் தேர்வு எதிர்பார்ப்பு
ஜனவரி 2 பள்ளி மீண்டும் திறப்பு
ஜனவரி 4 முதல் இரண்டாம் பருவத் தேர்வு எதிர்பார்ப்பு
12/02/2014
மாவட்டம் ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு. தொடக்கக்கல்வி இயக்குனரின் வேண்டுகோளுக்கிணங்க TNPTF மாவட்ட மையம் முடிவு
மானாமதுரை உதவித் தொடக்கக்கல்வி அலுவலரின் தொடர் ஆசிரியர் விரோதபோக்கை கண்டித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, சிவகங்கை மாவட்டக்கிளையின் சார்பாக சிவகங்கை மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலகம் முன்பு இன்று (2.12.2014) நடைபெற இருந்த மாவட்ட அளவிலான கண்டன ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தொடக்கக்கல்வி இயக்குனர் மதிப்புமிகு.இளங்கோவன் அவர்கள் மாநிலப் பொதுச் செயலளாளருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு குற்றச்சாட்டுகள் குறித்து 15 நாட்களுக்குள் விரைந்து விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளதால் இயக்குனரின் உறுதிமொழிக்கு மதிப்பளித்து மாவட்ட ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட தடங்கல்களுக்கு வருந்துகிறோம். ஒத்துழைப்பு நல்கிய மாவட்ட, வட்டார, நகரப் பொறுப்பாளர்களுக்கும், உறுதுணை புரிந்த தேழமைச்சங்க நிர்வாகிகளுக்கும் மாவட்டக்கிளையின் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். இப்பிரச்சணை குறித்து வருகிற 7.12.2014 அன்று சென்னையில் நடக்க இருக்கும் மாநிலச் செயற்குழுவில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள மாநிலச் செயற்குழுவை மாவட்ட மையம் கேட்டுக்கொள்ளும் என்ற தகவலையும் உறுப்பினர்களுக்கு இதன் மூலம் தெரியப்படுத்திக்கொள்கிறோம்.
9/09/2014
ஆசிரியர்களே உஷார்
லேபிள்கள்:
அறிவிப்பு
இன்று (9.9.2014) சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் ஒன்றியத்திற்கு உட்பட்ட காஞ்சிப்பட்டி ஆரம்பப்பள்ளியில் முதல் வகுப்பில் படிக்கும் மாணவன் தன் தந்தை வெளிநாட்டில் இருந்து கொண்டுவந்த சாக்லேட்டை(சீன தயாரிப்பு) ஆசையுடன் அனைத்து மாணவர்களுக்கும் பகிர்ந்து கொடுத்துள்ளான். மாணவர்கள் சாக்லெட் உண்ட சிறிது நேரத்திற்குள் 16க்கும் மேற்பட்ட மாணவர்கள் தொடர் வாந்தி எடுத்துள்ளனர். உஷாரான தலைமையாசிரியர் அதிகாரிகளுக்கும், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகளுக்கும் தகவல் கொடுத்து துரித வேகத்தில் மருத்துவமனையில் சேர்த்தனர். தற்பொழுது சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகச்சை பெற்று வரும் மாணவர்கள் நலமுடன் இருப்பதாக TNPTF நிர்வாகிகள் நம்மிடம் தெரிவித்தனர். தகவல் அறிந்த AEEO, DEEO மற்றும் CEO அனைவரும் மருத்துவமனையில் முகாமிட்டுள்ளனர். எனவே ஆசிரியப்பெருமக்களே தங்கள் பள்ளி மாணவர்கள் கொண்டு வரும் தின்பண்டங்களை சோதனைக்கு உட்படுத்த தவறாதீர். மாணவர் நலனே நமக்கு முக்கியம். மாணவர்களுக்கு விரைவாக சிகிச்சை மேற்கொண்ட மருத்துவமனை மருத்துவர்களுக்கும் அதற்கு உறுதுணை புரிந்த தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலத்துணைத்தலைவர் தோழர் ஜோசப் ரோஸ் மற்றும் மாவட்டச்செயலாளர் தோழர் தாமஸ் அமலநாதன் மற்றும் நிர்வாகிகளுக்கும் இயக்கத்தின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
8/21/2014
தமிழகத்தில் விரைவில் 12,588 ஆசிரியர்கள் நியமனம்: பள்ளிக்கல்வி செயலர் சபிதா
லேபிள்கள்:
அறிவிப்பு,
Educational News
திண்டுக்கல்: தமிழகத்தில் இந்த ஆண்டில் 12,588 ஆசிரியர்கள், விரைவில் நியமிக்கப்பட உள்ளனர் என, பள்ளிக்கல்வித் துறை செயலர் சபிதா தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் கல்வி அதிகாரிகள் கலந்து கொண்ட ஆய்வுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் கல்வித்துறைக்கு 65 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் மாவட்டங்களில் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட சரிந்துள்ளது; இதை சரிசெய்ய வேண்டும்.
நான்கு ஆண்டுகளில் காலியாக இருந்த 76,684 பணியிடங்களில் 53,288 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த ஆண்டு 1,267 முதுகலை ஆசிரியர்களும், 11,321 பட்டதாரி ஆசிரியர்களும் விரைவில் நியமிக்கப்படுவர். இவ்வாறு அவர் கூறினார்.
4/12/2014
மிகவும் அவசரம்! அதிகம் பகிரவும்!!! (12.04.2014)
லேபிள்கள்:
அறிவிப்பு
சிங்கம்புணரி ஒன்றியம் வேங்கைப்பட்டி நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவியின் தாயார் திருமதி.உமாமகேஸ்வரிக்கு பொன்னமராவதி துர்க்கா மருத்துவமனையில் (அழகேசன் மருத்துவமனை) நடைபெற இருக்கும் அறுவை சிகிச்சைக்கு AB+ இரத்தம் தேவைப்படுகிறது. புதுகோட்டை மற்றும் பொன்னமராவதிக்கு அருகில் உள்ள குருதி கொடையாளர்கள் துர்க்கா மருத்துவமனையை தொடர்பு கொள்ளும்படி வேண்டுகிறோம். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, பொன்னமராவதி வட்டாரக் கிளைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குருதி கொடையுள்ளம் கொண்டோர்கள் உதவி செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.
3/28/2014
பள்ளிகளுக்கு ஏப். 23 முதல் கோடை விடுமுறை: ஜூன் 2-ல் மீண்டும் திறப்பு
லேபிள்கள்:
அறிவிப்பு,
Educational News
பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் வருடாந்திர தேர்வுகள் ஏப்ரல் 16-ம் தேதி முடிவடைகின்றன.
ஏப்ரல் 17, 18 ஆகிய இரு நாட்கள் (பெரிய வியாழன், புனித வெள்ளி) விடுமுறை ஆகும். அதன்பிறகு சனி, ஞாயிறு விடுமுறைக்குப் பின்னர் ஏப்ரல் 21, 22-ம் தேதிகளில் பள்ளிகள் இயங்கும்.
ஏப்ரல் 23-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை கோடை விடுமுறை விடப்பட்டு ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வரன் முருகன் தெரிவித்தார்.
3/26/2014
2/28/2014
பசுமையான, சுத்தமான மூன்று பள்ளிகளுக்கு விருதுகள்
லேபிள்கள்:
அறிவிப்பு
தேர்தல் வகுப்பு எதிரொலி - ஆசிரியர் உரிமை இயக்கம் உண்ணாவிரதம் ஒத்திவைப்பு.
லேபிள்கள்:
அறிவிப்பு
இன்று (28.2.2014) சிவகங்கையில் பல்வேறு ஒன்றியங்களில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு தேர்தல் வகுப்பு நடைபெறுவதால் இன்று சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு நடைபெறவிருந்த ஆசிரியர் உரிமை இயக்கம் உண்ணாவிரதம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. உண்ணாவிரதம் வருகிற 2.2.2014 ஞாயிற்று கிழமை அதே இடத்தில் நடைபெறும் என ஆசிரியர் உரிமை இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு. இளங்கோ தெரிவித்தார். ஆசிரியர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டுகிறோம்.
2/21/2014
மத்திய அரசின் நவோதயா பள்ளிகளில் ஆசிரியர் பணி
லேபிள்கள்:
அறிவிப்பு
இந்திய அரசின் மனித வளத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நவோதயா
வித்யாலயா சமிதி பள்ளிகளில் காலியாக உள்ள 937 இளநிலை மற்றும் முதுகலை
பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
துறைவாரியான முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலியிடங்கள் விவரம்:
01. உயிரியல் - 41 (பொது- 19, ஒபிசி- 9, எஸ்சி- 13).
02. வேதியியல் - 51 (பொது- 20, ஒபிசி- 10, எஸ்சி- 6, எஸ்டி- 15).
03. வணிகவியல் - 25 (பொது- 8, ஒபிசி- 8, எஸ்சி- 5, எஸ்டி- 4).
04. பொருளியல் - 76 (பொது- 25, ஒபிசி- 12, எஸ்சி- 29, எஸ்டி- 10).
05. ஆங்கிலம் - 53 (பொது- 40, எஸ்சி- 5, எஸ்டி- 8).
06. புவியியல் -33 (பொது- 17, ஒபிசி- 6, எஸ்சி- 6, எஸ்டி- 4).
07. இந்தி -51 (பொது- 37, எஸ்சி- 6, எஸ்டி- 8).
08. வரலாறு - 41 (பொது- 31, எஸ்சி- 8, எஸ்டி- 2).
09. கணிதம் - 84 (பொது- 14, ஒபிசி- 19, எஸ்சி- 27, எஸ்டி- 24).
10. இயற்பியல் - 59 (பொது- 24, ஒபிசி- 10, எஸ்சி- 6, எஸ்டி- 19).
கல்வித்தகுதி: சம்பந்தப்பட்ட துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அத்துடன் பி.எட்., பட்டமும் பெற்றிருக்க வேண்டும். இந்தி மற்றும் ஆங்கிலத்தில் சரளமாக பயிற்றுவிக்கும் திறன் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300- 34,800 மற்றும் தர ஊதியம் 4,800.
வயதுவரம்பு: 31.01.2014 தேதியின்படி 40க்குள். இருக்க வேண்டும்.
பட்டதாரி ஆசிரியர் காலியிடங்கள் விவரம்:
01. ஆங்கிலம் - 88 (பொது- 32, ஒபிசி- 10, எஸ்சி- 13, எஸ்டி- 33).
02. இந்தி - 65 (பொது- 45, எஸ்சி- 12, எஸ்டி- 8).
03. கணிதம் - 179 (பொது- 62, ஒபிசி- 15, எஸ்சி- 45, எஸ்டி- 57).
04. அறிவியல் - 53 (பொது- 25, ஒபிசி- 1, எஸ்சி- 7, எஸ்டி- 20).
05. சோஷியல் ஸ்டடீஸ் - 38 (பொது- 26, ஒபிசி- 1, எஸ்சி- 4, எஸ்டி- 7).
கல்வித்தகுதி: 50 சதவிகித மதிப்பெண்களுடன் சம்பந்தப்பட்ட துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட துறையில் பி.எட். பட்டம் பெற்றிருப்பதுடன் மத்திய அரசின் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலம் மற்றும் இந்தி அல்லது சம்பந்தப்பட்ட மாநில மொழிகளில் பயிற்றுவிக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 31.1.2014 தேதியின்படி வயது வரம்பு கணக்கிடப்படும்.
எஸ்சி., எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்களும் தளர்வு அளிக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: அகில இந்திய அளவில் நடைபெறும் தகுதித்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்ப்பட்டு நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டுவார்கள். நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள செலானை பதிவிறக்கம் செய்து யூனியன் பாங்க் ஆப் இந்தியா கிளையில் பணமாக செலுத்த வேண்டும். எஸ்சி., எஸ்டி மறஅறும் மாற்றுத்திறனாளிகள், பெண்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: www.navodaya.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
எழுத்துத்தேர்வு நடைபெறும் தேதி: 27.04.2014.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.02.2014.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.navodaya.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

1/22/2014
கருப்பு பேட்ஜ் அணிந்து அறப்போராட்டம்
லேபிள்கள்:
அறிவிப்பு
ஆசிரியத் தோழமைக்கு வணக்கம்,
17.01.2011 வெள்ளிக்கிழமை அன்று சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளியில நடைபெற்ற சிவகங்கை மாவட்ட ஆசிரியர் உரிமை இயக்கக் கூட்டத்தில், ஆசிரியர்களுக்குப் பணிப்பாதுகாப்பு வழங்க கோரி எதிர்வரும் 27.01.2014 திங்கள் கிழமை அன்று கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றுவது என்று தீர்மானிக்கப்ட்டது.
அன்பு கூர்ந்து தாங்கள் சார்ந்த ஆசிரியத் தோழர்களுக்கு இச்செய்தியைத் தெரிவித்து கருப்பு பேட்ஜ் அணியும் அறப்போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கனிவுடன் வேண்டுகிறோம்.
கனிவுடன்
ஆசிரியர் உரிமை இயக்கம்
சிவகங்கை மாவட்டம்.
தகவல்: தோழர் நீ.இளங்கோ, ஒருங்கிணைப்பாளர், ஆசிரியர் உரிமை இயக்கம், சிவகங்கை மாவட்டம்.

1/07/2014
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான கருணை தொகை வழங்குவதற்கான மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் செய்தி வெளியீடு
லேபிள்கள்:
அறிவிப்பு
12/17/2013
நீலகிரி பள்ளிகளுக்கு வரும் 18ம் தேதி உள்ளூர் விடுமுறை
லேபிள்கள்:
அறிவிப்பு
ராமநாதபுரம், குமரியில் பள்ளிகளுக்கு விடுமுறை
லேபிள்கள்:
அறிவிப்பு
ராமநாதபுரம் : ராமாநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கையில் உள்ள கோவிலில்
ஆருத்தரா தரிசன திருவிழாவை ஒட்டி மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு
விடுமுறையை அறிவித்தள்ளார் அம்மாவட்ட கலெக்டர் நந்தகுமார். மேலும் 10ம்
வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு திட்டமிட்ட படி அரையாண்டு தேர்வு
நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார்.
இதேபோல், கன்னியாகுமரி மாவட்டத்தில் (சுசீந்திரம்)தானுமாலைய சுவாமி திருக்கோவில், தேர் திருவிழாவையொட்டி பள்ளிகளுக்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்று அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

11/20/2013
11/17/2013
தேசிய திறனறிதல் தேர்வு 24ம் தேதிக்கு தள்ளிவைப்பு
லேபிள்கள்:
அறிவிப்பு
சென்னை: இன்று நடக்க இருந்த, மாநில அளவிலான தேசிய திறனறிதல் தேர்வு 24ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன் கூறுகையில், "புயல் மற்றும் கனமழை காரணமாக, தேர்வு தள்ளி வைக்கப்பட்டு, 24ம் தேதி நடத்தப்படுகிறது. ஏற்கனவே, மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ள மையங்களிலேயே தேர்வு நடக்கும்" என தெரிவித்துள்ளார்.
பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர், இந்த தேர்வை எழுத உள்ளனர். ஒன்பதாம் வகுப்பு பொதுத் தேர்வில், கணிதம், அறிவியல் பாடங்களில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதி வாய்ந்த, ஒரு லட்சம் பேர், திறனறிதல் தேர்வில் பங்கேற்கின்றனர்.
இதில், தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய இரு ஆண்டுகளுக்கு, கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

9/16/2013
ஓணம்:3 மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை
லேபிள்கள்:
அறிவிப்பு
சென்னை: சென்னை, கன்னியாகுமரி மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இன்று
ஓணம் பண்டிகையை முன்னிட்டு இந்த 3 மாவட்டங்களுக்கும் உள்ளூர் விடுமுறை என
மாவட்ட ஆட்சியாளர்கள் அறிவித்துள்ளனர். இந்த மாவட்டங்களில் இன்று கல்வி
நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
9/11/2013
பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
லேபிள்கள்:
அறிவிப்பு
கனமழை பெய்து வருவதை அடுத்து சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர்
மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை
நடைபெறுவதாக இருந்த காலாண்டுத் தேர்வு கடைசித் தேர்வுக்கு பின் நடைபெறும்
எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

.jpg)