பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

12/31/2011

தற்காலிக பணியாளருக்கும் மகப்பேறு விடுப்பு பொருந்தும்

அரசு துறையில் பணிபுரியும் தற்காலிக, தினக்கூலி, தொகுப்பூதிய பணியாளர்களுக்கும் மகப்பேறு விடுப்பு, பணி மற்றும் பணப்பயனுடன் அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இதனை அடிப்படையாக கொண்டு அரசு ஆணை வெளியிட்டால் தொகுப்பூதிய பணியாளர்கள் பயனைடைவார்கள்.

Tamil Nadu State and Subordinate Services Rules

12/30/2011

TNPTF

ஆசிரியர் கல்விச் சுற்றுலாவுக்கு ரூ.8 கோடி ஒதுக்கீடு-

சேலம்: அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ், 16 ஆயிரம் தமிழக ஆசிரியர்கள் கல்விப் பயணம் அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.
தமிழகத்தில், அரசுப் பள்ளிகளில், இடைநிலைக் கல்வியான, 9 மற்றும் 10ம் வகுப்பு கல்வித் தரத்தை மேம்படுத்த, மத்திய அரசின் நிதியுதவியுடன், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம், செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், ஆசிரியர்களுக்கு பயிற்சி, புதிய வகுப்பறை கட்டடம், புதிய ஆசிரியர் நியமனம் உள்ளிட்ட, பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
நடப்பு கல்வியாண்டில், 9 மற்றும் 10ம் வகுப்பு பாடம் நடத்தும் பட்டதாரி ஆசிரியர்களுக்காக, கல்விப் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, ஒவ்வொரு மாவட்டத்திலும், தலா, 500 பேர் வீதம், தமிழகம் முழுவதும், 16 ஆயிரம் பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். கல்விப் பயணத்துக்காக, ஒவ்வொருவருக்கும் தலா, 5,000 ரூபாய் வீதம், 8 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இக்கல்விப் பயணம், வட மாநில சுற்றுப் பயணத்துக்கு, 100 பேர், தென் மாநில சுற்றுப் பயணத்துக்கு, 150 பேர், தமிழக சுற்றுப் பயணத்துக்கு, 100 பேர், மாவட்ட சுற்றுப் பயணத்துக்கு, 140 பேர், கடல் கடந்து செல்லும் பயணத்துக்கு, 10 பேர் என, ஐந்து பிரிவாக, 500 பட்டதாரி ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
இதில், அனைவருக்கும் இடைநிலைக்கல்வித் திட்டத்தின் கீழ் செயல்படும் மாதிரிப் பள்ளிகள் மற்றும் புதிதாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளி ஆசிரியர்களுக்கு, முன்னுரிமை வழங்கப்பட உள்ளது. கல்விப் பயணம் மேற்கொள்ளும் பயண நாள், வேலை நாட்களாக எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. இக்கல்விப் பயணத்தை, தமிழ்நாடு சுற்றுலாத் துறை மற்றும் இந்திய ரயில்வே துறையினர் இணைந்து நடத்துகின்றனர்.
இதற்கான பயணச் செலவு, உணவு மற்றும் தங்குமிடம் அனைத்தும், அனைவருக்கும் இடைநிலைக்கல்வித் திட்டம் ஏற்றுக்கொள்கிறது. இதற்கான தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தை, மாவட்டந்தோறும், ஜனவரி 3ம் தேதிக்குள் கூட்ட உத்தரவிடப்பட்டுள்ளது.

12/29/2011

AEEO பணி மாறுதல் கலந்தாய்வு விபரம்

bullet [Press Release No.797] ( From the Director of Elementary Education )     Click Here 

6,872 ஆசிரியர்கள் நியமனம், கவுரவபேரசிரியர்களின் ஊதியம் 10000 ஆக உயர்வு

சென்னை: உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 6,872 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். கல்லூரிகளில் பணியாற்றிவரும் கவுரவ விரிவுரையாளர்களின் சம்பளம் ரூ. 10 ஆயிரமாக அதிகரிக்கப்படுகிறது. இது குறித்து தமிழக அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டள்ளதாவது,

அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு, 1:40 என்ற ஆசிரியர்-மாணவர் விகிதாசாரப்படி, நடப்பு கல்வியாண்டில் (2011-12) அனைவருக்கும் இடைக்கல்வி திட்டத்தின் கீழ் கூடுதலாக 6,752 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களையும், மேலும், கூடுதலாக தேவைப்படும் 120 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களையும் சேர்த்து ஆக மொத்தம் 6,872 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கiளை தோற்றுவிக்க மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இதனால் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு 181 கோடியே 36 லட்சம் ரூபாய் செலவாகும். இதுமட்டுமல்லாமல், அரசு/நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கைக்கு தக்கவாறு 1:40 என்ற ஆசிரியர்-மாணவர் விகிதாச்சாரப்படி, கூடுதலாக 1,590முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தோற்றுவிக்கவும், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இதற்காக அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு 45 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவாகும்.

தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற 3,137 தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு அவர்கள் 1.6.1988க்கு முன்பு பணியாற்றிய இடைநிலை ஆசிரியர் மற்றும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணிக்காலத்தை 1.6.1988க்குப் பிறகு பணிபுரிந்த பணிக்காலத்துடன் சேர்த்து தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவியில் தேர்வுநிலை. சிறப்பு நிலை அனுமதித்து ஊதியம் நிர்ணயம் செய்ய மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இதனால் அரசுக்கு 24 கோடியே 25 லட்சத்து 44 ஆயிரத்து 210 ரூபாய் செலவு ஏற்படும்.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இரண்டாம் சுழற்சி முறை வகுப்புகளை நடத்துவதற்காக 2011-12 ஆண்டிற்கு 1,661 கௌரவ விரிவுரையாளர்கள் 6,000 ரூபாய் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டனர். அவர்களது கல்வித் தகுதி மற்றும் பணித்தன்மையைக் கருத்தில் கொண்டு,அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் தொகுப்பூதியத்தினை 6,000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாக உயர்த்தி வழங்க மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இதனால் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு கூடுதலாக 8 கோடி ரூபாய் செலவு ஏற்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 

இதழ் செய்தி

ஆண்டுதோறும் பள்ளிகள் ஜுன் முதல் தேதி திறப்பது மரபு. இந்த ஆண்டு ஜுன் 15 அன்று திறக்கப்பட்டது. இந்த ஆண்டில் சமச்சீர் கல்விபாட நூல்களை நிறுத்தி
வைத்து வழக்காடு மன்றம் சென்று சட்டமன்றத்தில் அறிவித்து பாடநூல்கள்
ஒருவழியாக ஆகஸ்டு  மாதத்தில் விநியோகம் செய்யப்பட்டது.
மேலும் :
பாடநூல்கள் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டாலும், ஏ.பி.எல், எஸ்.ஏ.எல்.எம்,
ஏ.எல்.எம் முறைகளில் தான் 1 முதல் 8 வகுப்பு மாணவர்களுக்கு கற்றல் -
கற்பித்தல் நடைபெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பும்
இன்றுவரை  விவாதத்திற்குரிய ஒன்றாகவே உள்ளது. நடைமுறை சாத்திய  மற்றதாகவே காணப்படுகிற்து. பள்ளிகளின் சூழலுக்கு ஏறப் சுயேட்சையான, சுதந்திரமான கல்விச் செயல்பாடுகளுக்கு வழிவகை ஏதும் அளிக்கப்படவில்லை. கல்வி ஆண்டு தொடங்கி முடிந்துள்ள 7 மாதங்களில் விதவிதமான ஆசிரியர் பணியிட ஒதுக்கீடு அறிவிப்புகளும், கல‌ந்தாய்வு கூட்ட அறிவிப்புகளும், வெளிவந்த வண்ணமே உள்ளது. ஆனால் நடைமுறையில் பல்லாயிரக்கண்க்கான ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை என்பதே நிதர்சனமான உண்மையாகும்.
கல்வி ஆண்டு தொடங்கி டிசம்பர் மாதம் வரையிலும் எஸ்.எஸ்.ஏ நடுநிலைப்
பள்ளிகளுக்கு 2வது, 3வது பட்டதாரி  ஆசிரியர் பணியிடங்கள்
ஏற்படுத்தப்படவில்லை. நிலை இறக்கம் செய்யப்பட்ட தொடக்கப்பள்ளிகளுக்கு
ஆண்டுக் கண்க்கில் இடைநிலை தலைமை ஆசிரியர் பணியிடங்கள்
ஏற்படுத்தப்படவில்லை. காலியாக உள்ள, தேவையுள்ள இடைநிலை ஆசிரியர்
பணியிடங்களும் நிரப்பபடவில்லை.
பள்ளிக்கல்வித்  துறையின் அரசாணை எண்:170, நாள்:02.11.2011இன் வழியில்
அனுமதிக்கப்பட்டுள்ள 3135 ஆசிரியர் பணியிடங்கள், அர‌சாணை எண்:193,
நாள்:02.12.2011 இன்ப‌டி ஒப்ப‌ளிக்க‌ப்ப‌ட்டுள்ள‌ 1581 கூடுத‌ல் ப‌ட்ட‌தாரி ஆசிரிய‌ர் ப‌ணியிட‌ங்கள், 3565 கூடுத‌ல் இடைநிலை ஆசிரியர் ப‌ணியிட‌ங்க‌ள் நிர‌ப்ப‌ப‌ட்வில்லை.
அர‌சாணை எண்:197, நாள்:07.12.2011 இன்படி தோற்றுவிக்க‌ப்ப‌ட்ட 831
நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் பதவி உயர்வின் வழி
நிரப்பப்பட வேண்டும் என்பது ஆங்காங்கே காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது.
மேலிட சிபாரிசுகள் என்ற பெயரில் இடமாறுதல்களின் வழியில்
நிரப்பப்பட்டுள்ளது. பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வுகள் முழுமையாக
வழ‌ங்கப்படவில்லை. அர‌சாணை 198, நாள்:07.12.2011 இன்ப‌டி நிலை இற‌க்க‌ம்
செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌ 710 தொட்க்கப்ப‌ள்ளிக‌ளுக்கு இடைநிலை த‌லைமை ஆசிரியர்
ப‌ணியிட‌ம் ஏற்ப‌டுத்த‌வில்லை.
இரண்டாம் கட்ட இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் என்று கல்வித் துறை
அலுவலர்களால் கூறப்பட்டது. ஆனால் ந‌டைமுறையில் உறுதி
காப்ப‌ற்ற‌ப்ப‌ட‌வில்லை.
ப‌த‌வி உய‌ர்வு க‌ல‌ந்தாய்வு ந‌டைபெறும் என்று அறிவிக்க‌ப்ப‌டுகிற‌து.
ஆனால் ந‌ட‌ந்த‌தோ ப‌த‌வி இற‌க்க‌, ப‌த‌வி ஈர்ப்பு இட‌மாறுத‌ல்க‌ள் தான்.
ந‌ட‌ந்துள்ள‌ ப‌த‌வி இற‌க்க‌ங்க‌ள், ஈர்ப்புக‌ள் ஊதிய‌க் குறைப்பை, ஊதிய‌
வெட்டினை அறிமுக‌ப்ப‌டுத்தி ப‌ய‌முறுத்தி வ‌ருகின்ற‌து. ப‌த‌வி
இற‌க்க‌ங்க‌ளால் ப‌ட்ட‌தாரி ஆசிரிய‌ர் ப‌ணியிட‌ இன்மை உருவாகி ப‌ட்ட‌தாரி
ஆசிரிய‌ர்க‌ளுக்கு ப‌ணியிட‌ம் ஒதுக்க‌ முடியாத‌ நிலையில் எழுந்துள்ள‌து.
ப‌ல்வேறு மாவ‌ட்ட‌த் தொட‌க்க‌ப்ப‌ள்ளி அலுவ‌ல‌ர்க‌ள் செய்வ‌த‌றியாது
திகைத்து நிற்கும் நிலையும் உள்ள‌து.
இத்தனை இல்லைகளுடன் தான் கல்லாமையை இல்லாமையாக்கிட தமிழ்நாட்டு ஆசிரியர் சமுதாயம் தன்னை தியாகப்படுத்திக் கொண்டு வருகிறது. எல்லோருக்கும் தரமான கல்வி அளித்திடும் பெரும் பொறுப்பினை அர்ப்பணிப்பு உணர்வோடு நிறைவேற்றி
வருகிறது.
நன்றி : தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி இதழ்.

School Education Department

G.O Ms.No. 213
Dt : December 26, 2011
 School Education – Right to Education Act (RTE), 2009 - Constitution of School Management Committee – Orders – Issued.

ஆர்ப்பாட்டம்


தினகரன் - 23/12/11

ஆர்ப்பாட்டம்

தினமலர் 23/12/11

ஆர்ப்பாட்டம்

தினமணி - 23/12/2011

ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி - 23/12/11

12/26/2011

உதவி தொடக்கக் கல்வி அலுவலர் தேர்வு தள்ளிவைப்பு

சென்னை, டிச. 25-

ஆசிரியர் தேர்வு வாரி யம் நடத்த இருந்த உதவி தொடக்கக் கல்வி அலுவலர் (ஏஇஇஓ) போட்டித் தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் 34 பேரை போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்வதற்கான அறி விப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த அக்டோபர் 25ம் தேதி வெளியிட்டது.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவல கத்தில் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப் பட்டன. போட்டித் தேர்வு, ஜனவரி 8ம் தேதி நடை பெறும் என்று அறிவிக்கப் பட் டது.

இந்த தேர்வுக்கு காது கேளாத மற்றும் பார்வை தெரியாத மாற்றுத் திறனாளி களைத் தவிர, உடல் ஊன முற்ற மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என்று தற்போது அறிவிக்கப்பட் டுள்ளது. விண்ணப்பக் கட் டணம் செலுத்துவதில் இருந் தும் விலக்கு அளிக்கப் பட்டுள்ளது. டிசம்பர் 26ம் தேதியில் இருந்து ஜனவரி 6ம் தேதி வரை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் விண்ணப் பங்கள் கிடைக்கும்.

ஏற்கனவே, விண்ணப் பித்துள்ள மாற்றுத் திறனா ளிகள் மீண்டும் விண்ணப் பிக்க வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள், தேர்வுக் கட்ட ணம் செலுத்தி இருந்தால் கட்டணம் திருப்பி அளிக் கப்படும்; உதவி தொடக்க கல்வி அலுவலர் தேர்வு ஏற்கனவே அறிவித்தபடி வரும் 8ம் தேதி நடை பெறாது. தேர்வு தேதி பின் னர் அறிவிக்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
 

12/25/2011

பகுதிநேர ஆசிரியர் நியமனத்தில் மீண்டும் தாமதம்

சென்னை: பகுதிநேர ஆசிரியர் நியமனப் பணிகளை செய்ய, பெரும்பாலான மாவட்டங்களில், பதிவுமூப்பு பட்டியல்கள் அனுப்பப்படாததால், என்ன செய்வது என தெரியாமல், அதிகாரிகள் முழித்து வருகின்றனர்.
இதனால், 26ம் தேதி துவங்க இருந்த நேர்முகத் தேர்வு, மேலும் சில நாட்களுக்கு தள்ளிப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
நேர்முகத் தேர்வு: 16 ஆயிரத்து, 549 பகுதி நேர ஆசிரியர்கள் தேர்வுக்கு, கடந்த 19ம் தேதியில் இருந்து, வரும் 25ம் தேதி வரை, நேர்முகத் தேர்வுக்கான கடிதங்களை அனுப்ப வேண்டும் என்றும்; 26ம் தேதியில் இருந்து, நேர்முகத் தேர்வை நடத்த வேண்டும் என்றும், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டனர். ஆனால், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களில் இருந்து, இன சுழற்சி வாரியாக, பதிவுமூப்பு பட்டியல் வரவில்லை. சென்னை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், பதிவுமூப்பு பட்டியல் இன்னும் பெறப்படவில்லை. இதனால், திட்டமிட்டபடி நேர்முகத் தேர்வு துவங்குமா என்பது, கேள்விக்குறியாகி உள்ளது.
அடுத்த வாரத்தில்: இதுகுறித்து, கல்வித் துறை அதிகாரிகள் கூறும்போது, "இன சுழற்சி அடிப்படையில், ஒரு பணியிடத்திற்கு ஐந்து பேர் வீதம், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம், பதிவுமூப்பு பட்டியலை அனுப்ப வேண்டும். இந்த பட்டியலை வைத்துதான், நேர்முகத் தேர்வை நடத்த முடியும்" என்றனர். மேலும், "பெரும்பாலான மாவட்டங்களில், இந்த பட்டியல்கள் வந்து சேரவில்லை; அடுத்த வாரத்தில்தான் பட்டியல்கள் கிடைக்கும். அதன்பின், நேர்முகத் தேர்வில் பங்கு பெறுவோருக்கான கடிதங்களை அனுப்ப வேண்டும்,&'&' என்றனர்.
நடக்குமா?: சென்னை மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட, 326 பணியிடங்களுக்கு, 1,400 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இவர்களில், ஒரு நாளைக்கு, 100 பேர் முதல், 120 பேர் வரை, நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட உள்ளனர். 12 நாட்கள் வரை, நேர்முகத் தேர்வு நடக்க உள்ளது. ஜனவரி 15ம் தேதிக்குள், நேர்முகத் தேர்வு பணிகளை முடித்து, 16ம் தேதி முதல் பணி நியமன உத்தரவுகளை வழங்க வேண்டும் என, தமிழக அரசு தெரிவித்து இருந்தது.
 

ஆசிரியர் கலந்தாய்வு: உயர் நீதிமன்ற உத்தரவை மீறியதாக கல்வித்துறை மீது புகார்

வேலூர்: சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை மீறி வேலூர் தொடக்கப்பள்ளி அலுவலகத்தில் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் செ. சரவணன் கூறியதாவது,

தமிழக அரசின் உத்தரவின்படி நடப்பாண்டில் நேரடியாக பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்கள். இதனால் ஏற்கனவே பல ஆண்டுகள் பணிபுரிந்த ஆசிரியர்களின் சீனியாரிட்டி மிகவும் பாதிக்கப்படுகிறது.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் திருப்பத்தூரைச் சேர்ந்த 8 ஆசிரியர்கள் தடை உத்தரவு பெற்றனர். இதனால் கடந்த 21ம் தேதி வேலூரில் நடந்த பதவி உயர்வு கலந்தாய்வில் திருப்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பதவி உயர்வுப் பட்டியல் நிறுத்தி வைக்கப்பட்டது.

ஆனால் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை மீறி பாதிக்கப்பட்ட 8 ஆசிரியர்கள் இன்றி கலந்தாய்வு நடத்தி 19 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளித்துள்ளனர். இதற்கான சான்றிதழை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ராஜமாணிக்கமே வழங்கியுள்ளார் என்றார்.
 

12/24/2011

பட்டதாரி ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு இல்லாமல் பணி நியமனம்

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் கலந்தாய்வு இல்லாமல் முதல் றையாக துறை அதிகாரிகளே பணி நியமனம் செய்கின்றனர்.
தமிழகத்தில் கல்வித் துறையை மேம்படுத்த தமிழக அரசு அதீத அக்கறை செலுத்தி வருகிறது. அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்ற இலக்கோடு பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.
அந்த வகையில், பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஆசிரியர்களை நியமிக்கும் பணி துவங்கியது.
வேலை வாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் 2,804 பேர் பள்ளிக் கல்வித் துறைக்கும், 1,155 பேர் துவக்கக் கல்வித் துறைக்கும் தேர்வு செய்யப்பட்டனர்.
இதுவரை காலியாக உள்ள பணியிடங்கள் பட்டியல் வெளியிடப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்கள் அவர்களுக்கான பள்ளிகளை கலந்தாய்வு மூலம் தேர்வு செய்யும் முறை இருந்தது. ஆனால் இம்முறை கலந்தாய்வின்றி, பள்ளிக் கல்வி இயக்குநரகம், 2,804 ஆசிரியருக்கும், அவர்கள் பணியாற்ற வேண்டிய பள்ளியை தேர்வு செய்து பணி நியமன ஆணையை தபாலில் அனுப்பி வைத்தனர். அதன்படி, ஆசிரியர்கள் அவரவர்க்கு ஒதுக்கப்பட்ட பள்ளிகளில் பணிக்கு சேர்ந்தனர்.
அதேப்போல, துவக்கக் கல்வித் துறை அதிகாரிகளும், 1,155 ஆசிரியர்களுக்கான பள்ளிகளை தேர்வு செய்து அது குறித்த விவரத்தை தபாலில் அனுப்ப திட்டமிட்டுள்ளனர். ஜனவரி 2ம் தேதிக்குள் பணிநியமன ஆணை ஆசிரியர்களிடம் கிடைக்கும் வகையில் துரிதமாக பணி நடந்து வருகிறது.
ஆனால், இது குறித்த எந்த முன்னறிவிப்பும் ஆசிரியர்களுக்கு அளிக்கப்படவில்லை. எப்போது கலந்தாய்வு நடத்தப்படும் என்று தெரியாமல் பலரும் குழம்பியுள்ளனர். அதிகாரிகளே பணியிடத்தை தேர்வு செய்வதால் பலருக்கும் வேறு மாவட்டங்களில் வேலை கிடைத்து அதனால் அவர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்படலாம்
 

மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்படும் 20 சதவீத ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடாக 4.5 சதவீதத்தை சிறுபான்மையினருக்கு ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் அளிக்கப்பட்ட இந்த ஒப்புதலை அடுத்து, மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் அதற்கான அரசாணையையும் வெளியிட்டுவிட்டது. அதன்படி, 2012, ஜனவரி 1ம் தேதி முதல் இந்த ஒதுக்கீடு நடைமுறைக்கு வருகிறது.
இதன் மூலம், முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர் உட்பட தேசிய சிறுபான்மையின ஆணையம் வரையறுத்துள்ள மதம் மற்றும் மொழி அடிப்படையில் சிறுபான்மையினராகக் கருதப்படும் அனைத்து மாணவர்களும் பயன் பெறலாம்.
இந்த உள் ஒதுக்கீட்டின் மூலம், ஐஐஎம், ஐஐடி, ஏஐஐஎம்எஸ், என்ஐடி, என்ஐஎப்டி, என்ஐடீ, 44 மத்திய பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றின் சேர்க்கையில் சிறுபான்மையின மாணவர்கள் பயன்பெறலாம்.
மத்திய கல்வி நிறுவனங்களில் ஏற்கனவே நுழைவுத் தேர்வுக்கான அறிவிக்கைகள் வெளியாகிவிட்டதால், மாணவ சேர்க்கையில் வரும் கல்வியாண்டில் இந்த இட ஒதுக்கீட்டு மாற்றத்தை அனைத்து கல்வி நிறுவனங்களும் நடைமுறைப்படுத்த ஏதுவாக இருக்கும்.