பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

1/31/2014

சிவகங்கையில் பிப்ரவரி-2ல் டிட்டோஜாக் பேரணி

சிவகங்கையில் வருகிற பிப்ரவரி-2ந் தேதி மாலை 3.00 மணிக்கு டிட்டோஜாக் சார்பில் 7 அம்ச கேரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் பேரணி அரண்மனை வாசலில் தொடங்கி  மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நிறைவு அடைகிறது. இப்பேரணி முடிவில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத் துணைத் தலைவர் தோழர் ச.மயில் கலந்து கொண்டு நிறைவு பேரூரை ஆற்ற இருக்கிறார். ஆசிரியப் பேரினம் எழுச்சியுடன் பங்கேற்க இருக்கும் இப்பேரணியில் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி, தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் ஆகிய கூட்டணியைச் சார்ந்த ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர். கோரிக்கைகள் வென்றெடுக்க வாழ்த்துக்கள்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 90% லிருந்து 100% ஆக உயருகிறது. மார்ச் மாதம் அறிவிப்பு வெளியாகும்.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, ஜூலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வுவழங்கப்படும். இதையொட்டி மாநில அரசும் தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்கும். 

கடைசியாக கடந்த 2013 ஜூலை முதல் 80 சதவீதமாக இருந்த அகவிலைப்படியை 10 சதவீதம் அதிகரித்து தற்போது 90 சதவீதமாக இரு அரசு ஊழியர்களும் பெற்று வருகின்றனர். இனி 2013டிசம்பர்மாத அடிப்படையில் அகவிலைப் படியை அறிவிக்க வேண்டும். இதன்படிடிசம்பர்இறுதியில், நுகர்வோர் விலைக்குறியீட்டு எண் அடிப்படையில், மத்திய அரசு 10 சதவீத அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்தொகையை ஜனவரி முதல் நிலுவையாக வைத்து வழங்கும். இதையடுத்து மாநில அரசும் அகவிலைப்படி உயர்வை மார்ச்சில் அறிவித்து, ஏப்ரலில் 3 மாத நிலுவையுடன் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .

ஆசிரியர்களுக்கான மருத்துவ முகாம்

சிவகங்கை, :  மானாமதுரையில் ஆசிரியர் ஊரிமை இயக்கம் சார்பில் ஆசிரியர்களுக்கு மருத்துவ ஆலோசனை மற்றும் பரிசோதனை முகாம் வரும் 1ம் தேதி மானாமதுரை ஓவிசி மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது. 
இதில் மன அழுத்தத்தை நீக்குவதற்கான மருத்துவ ஆலோசனை, இரத்த அழுத்தம், பொதுசிகிச்சை பரிசோதனைகள் செய்யப்பட உள்ளது. 
மதுரை தேவதாஸ் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையை சேர்ந்த 15பேர் கொண்ட மருத்துவ குழுவினர் இதில் பங்கேற்க உள்ளனர். 
தலைமையாசிரியர்கள் மாரிராஜன், பொக்கிஷம், சேவியர்ஆரோக்கியதாஸ், தமிழாசிரியர் இளங்கோ உள்ளிட்டோர் இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

முதுகலை பட்டம் படித்து விட்டு மீண்டும் இளங்கலை பட்டம் பயின்றவர் ஆசிரியர் பணிக்கு தகுதியில்லை என்ற டிஆர்பி உத்தரவுக்கு ஐகோர்ட் தடை

ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் தீ: ஆவணங்கள் கருகின

 திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், லாடனேந்தல் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில், மாணவர் சேர்க்கை ஆவணங்கள் மற்றும் ஜெராக்ஸ் மிஷின் உள்ளிட்ட பொருட்கள் கருகின.
இப்பள்ளியில் மூன்று ஆசிரியர்கள், 72 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். நேற்று அதிகாலை, பள்ளியில் இருந்து புகை வருவதை பார்த்த கிராம மக்கள் ஆசிரியர்களுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள், பள்ளியை திறந்து பார்த்த போது துவக்க பள்ளி மாணவ, மாணவியர் சேர்க்கை ஆவணம், மாற்றுச் சான்று உள்ளிட்ட, 54 வகையான ஆவணங்கள் மற்றும் ஜெராக்ஸ் மிஷின் கருகியது தெரிந்தது. தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

"மாநில வேலைவாய்ப்பு இணையதளம் துவக்கப்படும்"

சென்னை: தமிழக சட்டசபை கூட்டத்தொடர், கவர்னர் உரையுடன் நேற்று துவங்கியது. "பொருளாதாரத்திற்கு ஊக்கம் அளிக்க, 2014 15ம் ஆண்டிற்கான, திட்டச் செலவின இலக்கு 42,185 கோடி ரூபாய் அளவிற்கு உயர்த்தப்படும். வேலை தேடுவோரையும், வேலைவாய்ப்பு அளிப்போரையும், இணைக்கும் தளமாக மாநில வேலைவாய்ப்பு இணையதளம் துவக்கப்படும்" என கவர்னர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டசபையில் நேற்று பகல் 12:00 மணிக்கு கவர்னர் ரோசய்யா உரையாற்றினார்.
உரையின் சிறப்பம்சம்: இலங்கையில் உள்ள சிறுபான்மை தமிழர்களுக்கு உரிமைகளை பெற்றுத் தர, இந்த அரசு உறுதியான ஆதரவை தொடர்ந்து அளிக்கும்.
வளர்ச்சி விகிதம், 2013-14ல் மேம்பட்டு, 5 சதவீதத்தை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொருளாதாரத்திற்கு ஊக்கம் அளிக்க, 2014 15, திட்டச் செலவின இலக்கு 42,185 கோடி ரூபாய் அளவிற்கு உயர்த்தப்படும்.
மாநிலத்தின் உணவு தானிய உற்பத்தி, 100 லட்சம் டன் அளவை 2013-14ல் மிஞ்சும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேலை தேடுவோரையும், வேலைவாய்ப்பு அளிப்போரையும் இணைக்கும் தளமாக மாநில வேலைவாய்ப்பு இணையதளம் துவக்கப்படும். இதில், வேலைவாய்ப்பு ஆலோசனைகள், பயிற்சிகள் மற்றும் பணியமர்வு உதவிகள் குறித்த தகவல்கள் வழங்கப்படும்.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு இயக்கத்திற்காக, சர்வதேச நிதி நிறுவனங்களிடம் இருந்து, நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை, நம் மாநிலம் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
நகர்ப்புற கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், திட்டங்களை செயல்படுத்தும், திறனை உயர்த்தவும், "தமிழ்நாடு நிலைக்கத்தக்க நகர்ப்புற வளர்ச்சி திட்டம்"  செயல்படுத்த, உலக வங்கியிடம் நிதி கோரப்பட்டுள்ளது.
சென்னை, வண்ணாரப்பேட்டையில் இருந்து, திருவொற்றியூர் செல்லும் மெட்ரோ ரயில் வழித் தடத்திற்கு மத்திய அரசிடம் இருந்து, விரைவில் ஒப்புதல் பெறவும், திட்டத்தின் 2ம் கட்டத்திற்கான புதிய வழித்தடங்களுக்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யவும், அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இவ்வாறு, கவர்னர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி2 பேரணி - உரிமை மீட்டெடுப்பு பேரணி.

யார் போராடி கோரிக்கைகள் வென்றாலும் அனைத்து ஆசிரியர்களுக்கும் அதனால் பலன் கிடைக்கும். அதே போல் யாராவது போராடுவார்கள் நமக்கென்ன என யாராவது ஒதுங்கி நிற்பதால் போராட்டம் வலுவிழந்து கோரிக்கை நிறைவேறத் தாமதமானால் அது அனைத்து ஆசிரியர்களுக்கும் இழப்பே!
ஆகவே இது நமக்கான போராட்டம் ஆசிரியர் சமுதாயத்தின் நலன் காப்பதற்கான போராட்டம் என்பதை உணர்ந்து ஆசிரியர் சமுதாய ஒற்றுமையையும் பலத்தையும் அரசுக்கு காட்டிட பேரணியில் அணி வகுக்க வேண்டும். மத்திய அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் என்பது அரசு தாமே மனமுவந்து அளித்ததல்ல. ஆசிரியர்களின் கூட்டுப் போராட்டத்தால் விளைந்த வெற்றி. ஆசிரியர்களின் போராட்டத்தின் வலிமையை உணர்ந்து அரசு வழங்கிய ஊதியம். பல கட்ட போராட்டக் களம் கண்டதன் விளைவாய் ஆசிரியர் சமுதாயம் பெற்று வந்த மத்திய அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை ஆறாவது ஊதியக் குழுவை நடைமுறைப்படுத்தியதன் மூலம் அரசு நம்மிடமிருந்து அதனைப் பறித்துள்ளது. நம்முடைய தாத்தா,அப்பா பாடுபட்டுச் சேர்த்த சொத்தை யாராவது அபகரித்தால் நாம் நமக்கென்ன என்று சும்மா இருப்போமா? அது போலத்தான் மத்திய அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் என்பது நம்முடைய ஆசிரியர் சமுதாயத்தின் குடும்பச் சொத்து. அன்று நம் முன்னோர்கள் போராடிப் பெற்றுக் கொடுத்த உரிமையை இன்று நாம் இழந்து விட்டு நிற்கிறோம். இழந்த நம் குடும்பச் சொத்தை போராடி மீட்க வேண்டாமா? நம் முன்னோர் நமக்காகப் போராடிப் பெற்றுக் கொடுத்த உரிமையை நாம் நமக்குப் பின்னால் வரும் ஆசிரியச் சந்ததிகளுக்கு விட்டுச் செல்ல வேண்டாமா? அந்தக் கடமையும் பொறுப்பும் தமிழ்நாட்டு ஆசிரியர்களாகிய நம் அனைவருக்கும் உள்ளது. ஆகவே இழந்த உரிமையை மீட்டெடுக்க ஆசிரியர் சமுதாயத்தின் ஒற்றுமையையும் வலிமையையும் அரசுக்கு உணர்த்திட அணி திரண்டு பிப்ரவரி-2 பேரணிக்கு வாரீர் தோழர்களே!
By Jagadeesh Varan

இரட்டைப்பட்டம் தீர்ப்பு வெகு விரைவில்

தமிழகத்தில் அனைவராலும் எதிர்பார்க்கப்படும் இரட்டைப்பட்டம் வழக்கின் இறுதி தீர்ப்பு வருகிற 5.2.2013 - புதன்கிழமை சென்னை உயர்நீதி மன்றம் முதல் அமர்வில் வரும் என எதிபார்க்கப்படுகிறது. இச்செய்தி நம்பகமான நபர்களால் நம்மிடம் தெரிவிக்கப்பட்டது. இத்தேதியில் மாற்றம் எதுவும் இருக்க வாய்ப்பில்லை. நல்ல செய்தி  வெளியாக நாம் வாழ்த்துகிறோம்.

தகுதிதேர்வில் சலுகை கோரி வழக்கு

பத்தாம் வகுப்பு மற்றும் ப்ளஸ் 2 பொது தேர்வு பணிகளுக்கு ஆசிரியர்களை இனி தேர்வு துறை இயகுனரகமே நியமிக்கும்

பள்ளிகளில் "தாத்தா பாட்டி மாணவர் குழு " அமைக்க பரிந்துரை -அரசுக்கு அனுப்ப மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு .

1/30/2014

தோழா! கலைக்கப்பட்டுள்ளதா உன் தூக்கம்? (TETOJAC)

தோழா! கலைக்கப்பட்டுள்ளதா உன் தூக்கம்? இல்லை தூங்குவது போல் பாசாங்கு செய்கிறாயா? ஒரு இனத்தின் தரத்தை தரமிடப்போகின்ற நேரத்தில் உனக்கு உறக்கமா? தரமில்லாமல் தாழ்ந்து போன உன் விடியலுக்காக பிப்ரவரி - 2  TETOJAC  நடத்தும் மாபெரும் பேரணியில் இயக்கம் கடந்து சங்கமிப்போம் - சாதித்து காட்டுவோம். சாதிக்க துடிக்கும் இளைஞர் பட்டாளம் நிறைந்தது தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோட்டை. போர் முரசு கொட்டி பகை விரட்டி, கோரிக்கைகள் வெற்றி பெற தோழனே உடனே புறப்படு. பகல் முழுதும் ஆசிரியர் சந்திப்பு, இரவு திட்டமிடல் எளிதான வெற்றியின் சூத்திரம். தர்மம் தன்னை சூது கவ்வும். இறுதியில் தர்மமே வெல்லும். தர்மம் வெல்ல புறப்படும் படை இது. யார் தடுத்தாலும் நிற்காது. போராட்ட களம் பல கண்ட நமக்கு சொல்லி தெரிவதில்லை. களத்தை சூடுபடுத்து. பாதிப்பை அறியாத பாவப்பட்ட ஆசிரிய இனத்தை தட்டி எழுப்பு. பிறர் எழுப்புவார் என்று இருந்து விடாதே!. மற்றவர்களை பற்றி கவலை கொள்ளாமல் உன் இயக்க பணியை மேற்கொள். பிப்ரவரி - 2  TETOJAC  பேரணியில் அணி அணியாய் திரள்வோம். ஆட்சியாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்குவோம். ஒவ்வொரு ஊதியக்குழுவிலும் ஒப்பாரி வைத்தே நம் உரிமைகள் நிலைநாட்டப்பட்டுள்ளது. இப்பொழுதும் ஒப்பாரி வைப்போம். நமக்கு ஏற்பட்ட அநீதிகளை நாடறியும் வகையில் ஒப்பாரி வைப்போம். நமது ஒப்பாரி உரிமைக்கான ஒப்பாரி. தலைமை அறிவித்துள்ள போராட்ட வியூகங்களை முறையாக கடைப்பிடித்து உரிமையை மீட்போம். உரிமைக்கு உரத்த குரல் கொடுக்கவில்லையென்றால் நம்மை உதவாக்கரைகள் என்று வரலாறு பேசும். நாம் பிறக்கும் பொழுதே போராட்ட குணத்துடன் பிறந்தவர்கள். உதிக்கும்பொழுதே போராட்டத்தில குதித்த ஒரே இயக்கம். போராடுவதற்கும், போராட்டத்திற்கு அழைப்பதற்கும் தகுதியும், திராணியும் நம்மிடம் நிறையவே உண்டு. மனம் சோராமல் மடை திறந்த வெள்ளம் போல் மடமடவென பிப்ரவரி - 2  TETOJAC பேரணியில்  குதிப்போம். போராட்டம் ஒன்றே நமது நிலயை மாற்றும். நம் நிலை உயரும் வரை போராட்டத்தை கைவிடோம் என சபதம ஏற்போம். நெஞ்சில் மூண்ட நெருப்பிற்கு சமரசம் ஏதுமில்லை என்ற பதாகையை உயர்த்தி பிடிப்போம். TETOJAC கொடியால் மாவட்டத்தை நிரப்புவோம். பேரணியில் உன் போராட்ட வீச்சினை மற்றவர்களும் கடைப்பிடிக்கட்டும்.
ஆகவே யார் ஒதுங்கினாலும் நம் வீரப் போராட்டம் நமக்கு நிச்சயம் வெற்றியைக் கொடுக்கும்!
வாழ்க TETOJAC!
வெல்க நம் மறியல் போராட்டம்!

தோழமையுடன்.........
ஆ.முத்துப்பாண்டியன்
TNPTF மாவட்டத்தலைவர்,
சிவகங்கை மாவட்டம்.
www.mptnptf.blogspot.com

பிப்ரவரி-2014 மாத இயக்குனர் வெளியிட்ட நாகாட்டி


ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகள் ஆன்லைனில் பதிவேற்றம்

தொடக்கக் கல்வித் துறையில் கல்வி மேலாண்மைத் தகவல் முறையின் (EMIS) ஓர் அங்கமான ஆசிரியர் தன்விவரங்களை (Teachers Profile) ஆன்லைனில் பதிவேற்றுவதற்காக மாவட்டக் கருத்தாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை நேற்று (28.01.14) சென்னையில் நடைபெற்றது. இதில் மாவட்டத்திற்கு இருவர் வீதம் கலந்து கொண்டனர். ஏற்கனவே ஆஃப்லைனில் பதிவு செய்த விவரங்களும் பள்ளிகளுக்கான DISE விவரங்களும் அரசு இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. அதில் ஆசிரியர்களின் தற்போதைய அடிப்படை விவரங்கள் அனைத்தும் அந்தந்த ஒன்றியங்களில் ஆன்லைனில் பதிவிட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி, பணிப்பதிவேட்டிலுள்ள அனைத்துப் பதிவுகளும் பதிவிடப்படவுள்ளன. முதற்கட்டமாக அடிப்படை விவரங்களையும் புகைப்படத்தையும் தரவேற்றும் பணி பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கப்பட உள்ளது. ஏற்கனவே பள்ளிகள் குறித்த DISE விவரங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. அதில் e-ServiceRegister என்னும் பக்கத்தில் ஆசிரியர்களின் அடிப்படை விவரங்களான பெயர் பிறந்த தேதி, பணியில் சேர்ந்த தேதி, மொழி, இனம், பதவி உயர்வு, சம்பளம், வீட்டு முகவரி, இரத்த வகை, அங்க மச்ச அடையாளங்கள், புகைப்படம், மெயில் முகவரி, செல்பேசி எண், இருசக்கர நாற்சக்கர ஓட்டுநர் உரிம எண், PAN கார்டு எண், போன்றவை தற்போது பதியப்படுகின்றன. பணிப்பதிவேட்டில் பதியும் அனைத்து விவரங்களும் விடுப்பு, சரண்டர் போன்ற விவரங்களும் TPF, CPS, SPF, HF, பணிக்கொடை போன்றவற்றுக்கான வாரிசு நியமனம், ஆதார் எண் போன்றவையும் அடுத்த கட்டப் பணியின் போது பதிவேற்றப்பட உள்ளன. சம்பளக் கமிஷன் ஊதிய நிர்ணயம், ஓய்வுக் காலப் பயன்கள், மாநிலக் கணக்காயருக்குக் கருத்துரு அனுப்புதல், ஓய்வூதிய நிர்ணயம், பதவி உயர்வு, மாவட்ட மாறுதல், முன்னுரிமைப் பட்டியல், வாரிசு நியமனம் போன்ற அனைத்தையும் எளிதில் தெளிவாக முடிக்க e-ServiceRegister உதவிகரமாக இருக்கும் என்பதால் இம்முறையை மகிழ்ச்சியுடன் வரவேற்கலாம். மேலும் அலுவலகத்தில் பணிப்பதிவேடு சிதிலமடைந்தாலோ, வெள்ளம், தீ, இடிபாடு போன்றவற்றால் பாழடைந்தாலோ காணாமல் போய்விட்டாலோ இனி கவலைப்படத் தேவையில்லை.

இடமாறுதலை 5–ந் தேதிக்குள் முடிக்க வேண்டும்: தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி அரசு நடவடிக்கை

பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான அறிவிப்பு பிப்ரவரி மாதம் இறுதியில் அல்லது மார்ச் மாதம் முதல் வாரம் வெளியாகலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது. எனவே அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்யும் நடவடிக்கைகளை பிப்ரவரி 5–ந் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷன் உத்தர விட்டுள்ளது. இதையடுத்து இதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி மாவட்ட கலக்டர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதில், ‘ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் அரசு அதிகாரிகளையும், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அதிகாரிகள் சொந்த தொகுதியில் பணிபுரிந்தால் அவர்களையும் இடமாற்றம் செய்ய வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது. பாராளுமனற தேர்தல் நடைபெற உள்ளதால் பிப்ரவரி 5–ந் தேதிக்குள் இடமாறுதல்களை செய்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி மாறுதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கிறது. தேர்தல் பணியில் நேரடியாக ஈடுபடுத்தப்படும் தாசில்தார்கள், வருவாய் துறையினர், வட்டார வளர்ச்சி அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கு அடுத்த மாதம் 5–ந் தேதிக்குள் இடமாற்ற உத்தரவுகள் வழங்கப்பட உள்ளன. வாக்குச்சாவடி பணியில் ஆசிரியர்கள், கல்வித் துறையினர் மற்றும் பல்வேறு அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்கள் வசிக்கும் தொகுதி அல்லாத வேறு தொகுதிகளில் அந்த பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். பாராளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகளில் தேர்தல் கமிஷன் தீவிரமாக உள்ளது. இதன் ஒரு நடவடிக்கையாக இந்த மாறுதலுக்கான உத்தரவை பிறப்பித்துள்ளது. ------------------------------------------------------------------------------------ வாக்குச்சாவடி பணியில் ஆசிரியர்கள், கல்வித் துறையினர் மற்றும் பல்வேறு அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்கள் வசிக்கும் தொகுதி அல்லாத வேறு தொகுதிகளில் அந்த பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். ---------------------------------------------------------------------------------------

கல்லல் வட்டாரச் செய்தி - தினமலர் செய்தி


1/29/2014

ஆசிரியர் நியமனம் - கல்வித்துறை முயற்சி

கற்றல் திறன் குறைவாக உள்ள மாணவர்களை மேம்படுத்த முடிவு

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் கற்றல் திறன் குறைவாக உள்ள 9ம் வகுப்பு அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பிப்ரவரி மாதம் திறனாய்வுத் தேர்வு நடக்கிறது.
அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் கல்வித் திறனை மேம்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் 9ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளின் கல்வித் திறனை அந்தந்த மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
அதன்படி, கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர் மற்றும் விருத்தாசலம் என, இரண்டு கல்வி மாவட்டங்களில் 227 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆய்வு நடந்தது. ஆய்வின் போது தமிழ், கணக்கு, ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்களில் 6,954 மாணவ, மாணவிகள் உச்சரிப்புத் திறன், வாசிப்புத் திறன், எழுதும் திறன் ஆகியவற்றில் தேர்ச்சி குறைவாக இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து தேர்ச்சி குறைந்த மாணவ, மாணவிகளின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் அனைவருக்கும் கல்வி இடைநிலைக் கல்வித் திட்டம் சார்பில் மூன்று மாதங்கள் சிறப்பு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக தேர்ச்சி குறைவான பள்ளிகள் அருகே வசிக்கும் 233 ஆசிரியர்கள் தனியாக நியமிக்கப்பட்டனர்.
பயிற்சி கடந்தாண்டு நவம்பரில் துவங்கி நடந்து வருகிறது. காலை 8:30 மணி முதல் 9:30 மணி வரையும், மாலை 4:30 மணி முதல் 5:30 மணி வரையும் பயிற்சி நடக்கிறது. பிப்ரவரி 15ம் தேதி வரை இப்பயிற்சி நடக்கிறது. இந்நிலையில், பயிற்சி பெற்ற தேர்ச்சி குறைவான மாணவர்களின் கல்வித் திறனை சோதிக்க திறனாய்வு தேர்வு வரும் பிப்ரவரி மாதம் நடத்தப்பட உள்ளது.  இதற்காக, வினாத்தாள் சென்னையில் அச்சடிக்கப்பட்டு முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "வாசிப்புத் திறன் குறைவான 9ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில், மாணவர்கள் எந்தளவுக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பதை கண்டுபிடிக்க பிப்ரவரி மாதம் திறனாய்வுத் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு தேவையான வினாத்தாள் வந்துள்ளது. இதனை பிரித்து சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு அனுப்பும் பணி துவங்கப்பட உள்ளது. இத்தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி குறைவாக பெற்றால் மேலும், சிறப்பு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்படும்" என்றார்.

புறக்கணிக்கப்பட்ட நல்லொழுக்க வகுப்பு: பாதுகாப்பின்றி ஆசிரியர்கள்

காரைக்குடி: நல்லொழுக்க வகுப்பு புறக்கணிக்கப்பட்டு வருவதால் பணியிடத்தில் ஆசிரியர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத நிலை நிலவுகிறது என முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் வேதனை தெரிவித்துள்ளது.
மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் கூறியதாவது: "திருப்புவனம் பள்ளி ஆசிரியர் பைரவரத்தினம் மாணவரால் தாக்கப்பட்டுள்ளார். இதை முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் வன்மையாக கண்டிக்கிறது. இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் ஏற்படாதவாறு பணியிடத்தில் ஆசிரியர்களுக்கு போதுமான பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கையை மாவட்ட கல்வி அலுவலகம் மேற்கொள்ள வேண்டும்.
நல்லொழுக்க வகுப்பு புறந்தள்ளப்பட்டு முழு தேர்ச்சி பெற வேண்டும் என்பதை அடிப்படையாக கொண்டு கல்வித்துறை செயல்படுவதால், இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதை தடுக்க மாணவர்களுக்கு நல்ல மதிப்பீடு வழங்கும் முறையை பள்ளிக் கல்வித்துறை மேற்கொள்ள வேண்டும்" என்றார்.

கல்வி துறைக்கு ரூ.20 ஆயிரம் கோடி?பட்ஜெட்டில் எதிர்பார்ப்பு

பள்ளி கல்வித் துறைக்கு, வரும் பட்ஜெட்டில், 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.'ஜெட்' வேகம்ஒவ்வொரு ஆண்டும், அதிகபட்ச நிதி, பள்ளி கல்வித் துறைக்கு ஒதுக்கப் படும். முந்தைய, தி.மு.க., ஆட்சியில், 10 ஆயிரம் கோடியை தாண்டிய நிலையில், அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின், இந்த துறைக்கான நிதி ஒதுக்கீடு, 'ஜெட்' வேகத்தில், எகிறி வருகிறது.கடந்த, 2011 - 12ல், 13,333 கோடி; 12 - 13ல், 14,552 கோடி, 13 - 14ல், 16,965 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. எனவே, வரும் பட்ஜெட்டில், 20,௦௦௦ கோடி ரூபாய் ஒதுக்கப்படலாம் என, கல்வித் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்காக, புதிய திட்டங்கள் குறித்த அறிக்கை தயாரிக்கும் பணிகளில், அதிகாரிகள் இறங்கி உள்ளனர். இந்த அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்தால், மிகப்பெரும் சாதனையாக இருக்கும்.இவ்வளவு நிதி ஒதுக்கினாலும், நிதியில், ஆசிரியர், அதிகாரிகளுக்கு, பெரும்பகுதி சம்பளம் அளிக்கப்படுகிறது. இலவச பாட புத்தகங்கள்,சைக்கிள் உள்ளிட்ட, 14 வகையான இலவச திட்டங்களுக்காக, 2,500 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்படுகிறது.அறிவுசார் பூங்காகடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், 'கல்வித் துறைஅலுவலகங்கள் மற்றும் சென்னை, கோட்டூர்புரம்நுாலகம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, டி.பி.ஐ., வளாகத்தில், அறிவுசார் பூங்கா என்ற, பிரமாண்டமான கட்டடம் கட்டப் படும்' என, அறிவிக்கப்பட்டது. ஆனால், இத்திட்டம் அறிவிப்பு அளவிலேயே நிற்கிறது.-

நாகப்பட்டினம் டிட்டோஜாக் பதாகை



எம்பில் படித்த ஆசிரியருக்கு ஊக்க தொகை வழங்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு.

எம்பில் படித்த ஆசிரியருக்கு ஊக்க தொகை வழங்க அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. நாகை மாவட்டம் வேதராண்யம் தாலுக்காவை சேர்ந்த ஆசிரியர் மதியழகன் சார்பாக வக்கீல் காசிநாதபாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். 

அதில் ஆசிரியர் மதியழகன் கூறியிருப்பதாவது:நான் நாகை மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் ஆசிரியர். எம்.ஏ. படித்த பிறகு எனக்கு ஒரு ஊக்க தொகையை அரசு வழங்கியது.இதன்பிறகு நான் பிஎட் படித்தேன். அதற்கு 2வது ஊக்க தொகை அரசு கொடுத்தது. இதை தொடர்ந்து நான் எம்பில் படித்து முடித்தேன். இதற்கு 3வது ஊக்க தொகை கேட்டு விண்ணப்பித்தேன். இதை அரசு தரவில்லை. 3வது ஊக்க தொகை கேட்டு பல முறை மனு கொடுத்தும் எந்த பலனும் ஏற்படவில்லை.

இதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ம்தேதி மீண்டும் மனு கொடுத்தேன்.இந்த மனுவை பரிசீலனை செய்து, எனக்கு 3வது ஊக்க தொகை தர அரசுக்கு உத்தரவிட வேண்டும். அரசாணையின்படி எனக்கு 3வது ஊக்க தொகை தர வேண்டும். இதற்கு உயர்நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு அவர் வழக்கில் கூறியுள்ளார்.இந்த வழக்கை நீதிபதி சுப்பையா விசாரித்து மனுதாரரின் மனுவை தமிழக அரசின் தொடக்க கல்வித்துறை இயக்குனர் பரிசீலனை செய்து 8 வாரத்திற்குள் மனுதாரருக்கு 3வது ஊக்க தொகை தருவது தொடர்பாக உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

கல்லல் வட்டார AEEOக்களை கண்டித்து தட்டி


கரூர் ஒன்றிய தொடக்கக்கல்வித்துறையின் செயல்படா தன்மையை கண்டித்து TNPTF கண்டனத்தட்டி

TETOJAC - கரூர் வட்டாரம்

முதன்மை கல்வி அதிகாரிகள் 7 பேர் மாற்றம்

பள்ளிக்கல்வி இயக்குனரகம் உத்தரவு சென்னை, தொடக்க கல்வித்துறை துணை இயக்குனர் புகழேந்தி( முதன்மை கல்வி அதிகாரி ரேங்க்) மாற்றப்பட்டு திருவண்ணாமலை அனைவருக்கும் கல்வி திட்ட கூடுதல் முதன்மை கல்வி அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இதுவரை அந்த பணியில் இருந்து திருவண்ணாமலை கூடுதல் முதன்மை கல்வி அதிகாரி நூர்ஜகான் சென்னையில் உள்ள தொடக்க கல்வித்துறை துணை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பி.அருண்பிரசாத், தமிழ்நாடு தொடக்க கல்வி துணை இயக்குனராக மாற்றப்பட்டார். தொடக்க கல்வி துணை இயக்குனர் பொன்னையா, திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக நியமிக்கப்பட்டார். தூத்துக்குடி கூடுதல் முதன்மை கல்வி அதிகாரி சரோஜா, கோவை மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அதிகாரியாக மாற்றப்பட்டார். கோவை கூடுதல் முதன்மை கல்வி அதிகாரி லத்திகா, தூத்துக்குடி மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அதிகாரியாக மாற்றப்பட்டார். சென்னையில் உள்ள தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளர் சுப்பிரமணியன் பள்ளிக்கல்வி மின் ஆளுமை துணை இயக்குனராக நியமிக்கப்பட்டார். சேலம் மாவட்ட கல்வி அதிகாரி ஆர்.மனோகரன் சென்னையில் உள்ள தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளராக பதவி உயர்வு பெற்று நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை:- பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்துள்ளார்.

1/27/2014

பிப்ரவரி 2ல் டிட்டோஜாக் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் அளிக்க வேண்டிய மனு



புதிய ஓய்வூதிய திட்ட நிதியில் முதலிட்டிலிருந்து 25% வரை பெற்றுக்கொள்வதற்கான பரிந்துரை

"பான்கார்டு" வாங்க கடுமையாகிறது விதிமுறை

புதுடில்லி: வருமான வரி துறையின், "பான்கார்டு" வாங்குவதற்கான விதிமுறை கடுமையாகிறது.
நிதி பரிவர்த்தனை நிரந்தர கணக்கு எண் எனப்படும், "பான்கார்டு", வருமான வரி செலுத்துவோருக்கு மட்டுமின்றி, இதர நிதி சார்ந்த அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் அத்தியா வசியமாக உள்ளது. தற்போது, "பான்கார்டு" கோருவோர், அதற்கான விண்ணப்பத்துடன், தங்களின் அடையாளம் மற்றும் வசிப்பிட சான்று நகல்களை அளித்தால் போதுமானது. இனி, இவர்கள், விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் போது, அடையாளம் மற்றும் வசிப்பிட சான்றுகளின் அசல் ஆவணங்களையும் அளிக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட அலுவலர், அந்த அவணங்களை சரிபார்த்து விட்டு திரும்ப அளித்து விடுவார். அதன் பிறகே, "பான்கார்டு" விண்ணப்பம் ஏற்கப்படும். இந்த புதிய விதிமுறை வரும் பிப்ரவரி 3ம் தேதி முதல், அமலுக்கு வருகிறது என நிதி அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஒரு சிலர், போலியான சான்றுகளை அளித்து, "பான்கார்டு" பெற்று வருவது, அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. இத்தகைய முறையில், வரிஏய்ப்பு நடைபெறுவதை தடுக்கும் நோக்குடன், "பான்கார்டு" விதிமுறை கடுமையாக்கப்பட்டுள்ளதாக, அந்த அதிகாரி மேலும் கூறினார்.

அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கும்: அதிகாரிகள் நம்பிக்கை

சென்னை: "வரும் பொது தேர்வில் அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம், கணிசமாக அதிகரிக்கும்" என கல்வித்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
மாநிலம் முழுவதும், 5,691 அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் இருந்து 10ம் வகுப்பு பொது தேர்வையும், 2,595 மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து பிளஸ் 2 தேர்வையும், மாணவ, மாணவியர் எழுத உள்ளனர். கடந்த தேர்வில் அரசு பள்ளிகள் 10ம் வகுப்பில் 79 சதவீத தேர்ச்சியையும் பிளஸ் 2 தேர்வில் 80 சதவீத தேர்ச்சியையும் பெற்றன.
பத்தாம் வகுப்பு தேர்வில் 453 அரசு பள்ளிகளும், பிளஸ் 2 தேர்வில் 100 பள்ளிகளும், 100 சதவீத தேர்ச்சியை பெற்றன. வரும் தேர்வில் இந்த சதவீதத்தை அதிகரிக்கவும், 100 சதவீத தேர்ச்சியை பெறும் பள்ளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் அதிகாரிகள் குழு தீவிரமாக பணியாற்றி வருகிறது. இதற்காக, பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: நன்றாக படிக்கக்கூடிய மாணவர்களை அடையாளம் கண்டு அவர்கள் மாநில அளவில் "ரேங்க்" பெறும் வகையில் மேலும் ஊக்கப்படுத்தி சிறப்பு பயிற்சி அளித்து வருகிறோம். சுமாராக படிக்கக் கூடிய மாணவர்களுக்கு விடுமுறை நாட்களிலும், சிறப்பு வகுப்புகள் நடத்துவதுடன் அதிக மதிப்பெண் பெறுவதற்காக, "வெற்றி உங்கள் கையில்" என்ற வழிகாட்டி கையேட்டை தயாரித்து வழங்கி உள்ளோம்.
அனுபவம் வாய்ந்த ஆசிரியர் குழுவைக்கொண்டு, மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. மாதிரி தேர்வுகளும், தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. அறிவியலில், ஒரு மதிப்பெண் கேள்விகள் எப்படி வரும் அவற்றுக்கான விடை அளிப்பது எப்படி என்பது குறித்தும் விளக்கி உள்ளோம். இதனால் வரும் தேர்வில் அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம், கண்டிப்பாக உயரும். இவ்வாறு, இயக்குனர் கூறினார்.
சமீபத்தில் சென்னையில் நடந்த ஒரு விழாவில் பேசிய, பள்ளி கல்வித்துறை செயலர் சபிதா, "இரு தேர்வுகளிலும், ஒட்டுமொத்த தேர்ச்சியை 95 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளோம்" என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிளஸ் 1ல் தொடரும் பழைய பாடத்திட்டம்: அதிகாரிகள் மெத்தனம்

சென்னை: பிளஸ் 1 வகுப்புக்கு, புதிய பாடத்திட்டம் தயாரிப்பு பணியில், அதிகாரிகள் மெத்தனமாக உள்ளதால், வரும் கல்வியாண்டில், மீண்டும் பழைய பாடத்திட்டமே தொடர்வது உறுதியாகி உள்ளது.
தமிழகத்தில், பிளஸ் 2 வகுப்புக்கான, பாடத்திட்டத்தை மாற்றியமைத்து பல ஆண்டுகளாகி விட்டதால் இரு ஆண்டுகளுக்கு முன் புதிய பாடத்திட்டம் அமல்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது. ஆனால் அதன்பின், பாடத்திட்டம் எழுதும் ஆசிரியர் குழு அமைப்பது உள்ளிட்ட பணிகள் துவங்கப்படவில்லை. இன்னும், நான்கு மாதங்களில் அடுத்த, கல்வியாண்டு துவங்கிவிடும்; அதற்குள், புதிய பாடத்திட்ட புத்தகங்கள் தயாராவது கடினம்.
எனவே வரும் கல்வியாண்டிலும், மீண்டும் பழைய பாடத்திட்டமே தொடர்வது உறுதியாகி உள்ளது. வரும் கல்வியாண்டில் 10ம் வகுப்பில் முப்பருவக் கல்வி முறை மற்றும் தொடர் மதிப்பீட்டு முறை அமல்படுத்த, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு பின் அதை பிளஸ் 1 வகுப்புக்கும் விரிவாக்கம் செய்யலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து கல்வித்துறை அலுவலர்கள் கூறியதாவது: வரும் கல்வியாண்டில், 10ம் வகுப்புக்கான, முப்பருவக்கல்வி முறை அமல்படுத்தப்படுமா என்பதே சந்தேகமாக உள்ளது. அதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வந்தாலும், பொதுத் தேர்வு என்பதால் மதிப்பீடு செய்வதில் குளறுபடி வருமோ என்ற அச்சம் ஆசிரியர்களிடம் ஏற்பட்டுள்ளது. எனவே, 10ம் வகுப்புக்கு முப்பருவக்கல்வி முறையை சிக்கல் இல்லாமல், அமல்படுத்துவதில் மட்டுமே அதிகாரிகள் கவனமாக உள்ளனர்.
பிளஸ் 1 பாடத்திட்டம் குறித்து யோசிக்கும் நிலையில் இல்லை. கடந்த முறை, சமச்சீர் கல்வி புத்தகம் வழங்கப்பட்ட அடுத்த ஆண்டே மீண்டும் முப்பருவக்கல்வி முறை அமல்படுத்தப்பட்டது. இதே போன்று அமையாமல் 10ம் வகுப்பு முப்பருவக்கல்வி முறையை நல்ல முறையில் அமல்படுத்திய பின் அடுத்த கல்வியாண்டில் பிளஸ் 1 வகுப்புக்கும் அதே பாணியில் பிளஸ் 2 வகுப்புக்கும் முப்பருவக் கல்வி முறையை மாற்றம் செய்ய வாய்ப்பு உள்ளது. இதனால் வரும் கல்வியாண்டில் பிளஸ் 1 வகுப்புக்கு பழைய பாடத்திட்டமே தொடர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

சிவகங்கை மாவட்டத்தில் ஆசிரியர்கள் அறப்போராட்டம்

இன்று ஆசிரியர்களின் பணி பாதுகாப்பு கோரி சிவகங்கை மாவட்டத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் அனைவரும் கருப்பு பட்டை அணிந்து பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். இந்த அறப் போராட்டம் வெற்றியடைய வாழ்த்துகிறேன். ஆசிரியர்கள் உரிமை இயக்கம் இதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளது. அனைத்து ஆசிரிய இயக்கங்களும் இதில் பங்கெடுத்துள்ளன.

1/26/2014

TETOJAC

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்களம் வட்டாரச் செயற்குழு கூட்டம் அதன் மாவட்டத்  துணைத்தலைவர் திரு. மாரியப்பன் தலைமையில் நடைபெற்றது. செயற்குழு உறுப்பினர் திரு.பாலமுருகன் அனைவரையும் வரவேற்று பேசினார். கோரிக்கைகள் பற்றி வட்டாரத் துணைத்தலைவர் போஸ்ராஜன் மற்றும் பொருளாளர் தியாகு எடுத்து கூறினர். கூட்டத்தில் வருகிற 2.2.2014 அன்று மாவட்டத்தில் நடைபெறும் டிட்டோஜாக் பேரணியில் அனைவரும் கலந்து கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயற்குழு உறுப்பினர் திரு.குமார் தீர்மானங்களை முன் மொழிந்தார். இறுதியாக செயற்குழு உறுப்பினர் தான்சிங் நன்றி கூறினார். 

அனைவருக்கும் எங்கள் இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்


1/24/2014

அடலேறு வேங்கையே! தயாராகிவிட்டாயா?

அடலேறு வேங்கையே!
தயாராகிவிட்டாயா? உன் அடுத்த கட்ட சுதந்திர போருக்கு. 02.02.2014  உன் மாவட்ட தலைநகரத்தை உன் சகோதர ஆசிரியர்களால் நிலைகுலைய வைக்க உன் முயற்சிகள் முடுக்கப்பட்டுள்ளதா?. வெற்று வார்த்தைகளால் வீண் கதைகள் பேசி மீண்டும் உன் தரநிலையை தரம் தாழத்த போகிறாயா? உன் தர ஊதியம் உயராமல் சமுதாயத்தில் உன் தரம் உயரப்பேவதில்லை எனபது புரியுமா?. இல்லை எப்பொழுதும்போல் எதுவும் புரியாதது போல் என இருந்துவிட்டு இயக்க உணர்வாளர்கள் தன் சுக-துக்கங்களை மறந்து போராடி பெற்றத் தர இருக்கும் பலன்களை எவ்வித குற்ற உணர்வு இல்லாமல் பெறுவதற்கு ஏ.டி.எம். இயந்திரங்களின் குளிர் அறைகளில் குதூகலத்துடன் காத்திருக்கும் சாதாரண ஆசிரியர் போல் இருந்து விடப்போகிறாயா?. நாம் பெற்ற அனைத்து உரிமைகளும் நமது இயக்க முன்னோடிகளின் சமரசமற்ற போராட்டத்தினால் மட்டுமே கிடைத்தது என்பது நீ அறிவாயா?. கற்று கொடுப்பவன் நீ. உனக்கு கற்று கொடுக்க தேவையில்லை.  உரிமையை இழந்தால் உணரவற்று போவாய். பல்வேறு ஊதிய குழுவில் நம்மை குறி வைத்து இந்த ஊதிய குழுவில் பகை தீர்த்து கொண்டது சில பகல் வேஷம் போடும் அதிகார வரக்கம். அவர்களின் முகமூடிகளை உனது போராட்ட வீச்சு பிய்தெறியட்டும். இப்பொழுதே உனது வெற்றி முரசு கொட்டட்டும். சென்ற போராட்ட களத்தில் இளைக்கப்பட்ட துரோகங்களை மறந்து அனைத்து சகோதர சங்கங்களையும் உடன் அழைத்து வா. போர் களத்தில் ஆக்ரோஷம் நிறைந்த உன் கோஷத்தை கேட்க உன்னோடு சேர்ந்து விண்ணை முட்டும் கோஷம் எழுப்ப ஆவலுடன் கார்த்திருக்கிறேன். போராட்டங்கள் விளையாட்டல்ல! கோரிக்கைகள் கேளிக்கையல்ல!! என்பதை ஆட்சியாளர்களை உணர வைப்போம். கொட்டட்டும் போர் முரசு. தோழா  உனக்காக போர்களத்தில் கோரிக்கைகள் வெல்லும் வரை போராட மூத்த தலைமுறைகளையும் உடன் அழைத்து வா. ஆசிரியப்பேரினமே அணி திரள்வோம!! சிறை நிரப்புவோம்!!!
தோழமையுடன்.........
ஆ.முத்துப்பாண்டியன்
TNPTF  மாவட்டத்தலைவர், சிவகங்கை மாவட்டம்

டிட்டோஜாக் - மாநில பொறுப்பாளர்கள் முகவரி


குடியரசு தினம் கொண்டாடுவது குறித்து தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள்.



தொழில் வரி 30 சதவீதம் உயர்வு, மாத ஊதியம் ஈட்டுவோர் அதிருப்தி


டிட்டோ ஜாக் சார்பாக சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு


இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க கோரி பிப்ரவரி 2ம்தேதி மாவட்ட தலைநகரங்களில் பேரணி நடைபெறுகிறது. தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு(டிட்டோஜாக்) நிர்வாகிகள் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று 1988ம் ஆண்டு தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்தது.

அதை தொடர்ந்து மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை பெற்று வந்தோம். ஆனால் 6வது ஊதியக் குழுவின் படி, இடைநிலை ஆசிரியர்களுக்கான அடிப்படை சம்பளத்தில் ரூ.5,500 குறைத்தனர். இதை எதிர்த்து கடந்த 3 ஆண்டு காலமாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறோம். அதிமுக அரசு தேர்தல் வாக்குறுதியின் போது, மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை பெற்று தருவதாக வாக்குறுதியளித்தது. ஆனால் அதையும் நிறைவேற்றவில்லை. அதோடு ஊதியக் குழுவில் ஆசிரியர்களின் கல்வி தகுதியை ஏளனம் செய்து தமிழக அரசு அறிக்கை தந்தது.

இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை நீக்கவில்லை. மேலும் ஆசிரியர் தகுதித் தேர்வை நீக்குவது, தொடக்க கல்வித்துறையில் தமிழ் கல்வி முறை தொடர்ந்திட செய்வது உட்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 2ம்தேதி மாவட்ட தலைநகரங்களில் பேரணி நடத்தி கலெக்டரிடம் மனு அளிக்க உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.




1/22/2014

கருப்பு பேட்ஜ் அணிந்து அறப்போராட்டம்

ஆசிரியத் தோழமைக்கு வணக்கம்,
17.01.2011 வெள்ளிக்கிழமை அன்று சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளியில நடைபெற்ற சிவகங்கை மாவட்ட ஆசிரியர் உரிமை இயக்கக் கூட்டத்தில், ஆசிரியர்களுக்குப் பணிப்பாதுகாப்பு வழங்க கோரி எதிர்வரும் 27.01.2014 திங்கள் கிழமை அன்று கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றுவது என்று தீர்மானிக்கப்ட்டது.
அன்பு கூர்ந்து தாங்கள் சார்ந்த ஆசிரியத் தோழர்களுக்கு இச்செய்தியைத் தெரிவித்து கருப்பு பேட்ஜ் அணியும் அறப்போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கனிவுடன் வேண்டுகிறோம்.
கனிவுடன்
ஆசிரியர் உரிமை இயக்கம்
சிவகங்கை மாவட்டம்.
தகவல்: தோழர் நீ.இளங்கோ, ஒருங்கிணைப்பாளர், ஆசிரியர் உரிமை இயக்கம், சிவகங்கை மாவட்டம்.

நமது CPS முதலிட்டிலிருந்து 25% வரை நாம் பெற்றுக்கொள்ள புதிய ஏற்பாடு

தோழர்களே!
PFRDA நமது CPS முதலிட்டிலிருந்து 25% வரை நாம் பெற்றுக்கொள்வதற்கான பரிந்துரையை 15/01/2014 அன்று தனது வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக நமது கருத்துகளை 15/02/2014 ஆம் தேதிக்குள் தெரிவிக்கும்படி k.sumit@pfrda.org.in என்கின்ற மின்அஞ்சல் முகவரியை வழங்கியுள்ளது.

நிபந்தனைகள்:
1) தேவைகள்
a) குழந்தைகளின் மேல் படிப்பு செலவு
b) குழந்தைகளின் திருமணம்
c) வீடு கட்டுவதற்கு (ஏற்கனவே சொந்த வீடு வைத்துள்ளவர்கள் இது பொருந்தாது)
d) கீழ் கண்ட ஏதாவது ஒரு மருத்துவ செலவு நமக்கோ அல்லது நமது குடும்பத்தினர்க்கு (மனைவி அல்லது குழந்தை) ஏற்படும் பொழுது.

1. Cancer
2. Kidney Failure (End Stage Renal Failure)
3. Primary Pulmonary Arterial Hypertension
4. Multiple Sclerosis
5. Major Organ Transplant
6. Coronary Artery Bypass Graft
7. Aorta Graft Surgery
8. Heart Valve Surgery
9. Stroke
10. Myocardial Infarction (First Heart Attack)
11. Coma
12. Total blindness
13. Paralysis

இது போன்ற தருணங்களில் நாம் நமது CPS முதலிட்டில் இருந்து 25% வரை பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் இதற்கு நாம் CPS திட்டத்தில் குறைந்தது 10 வருடம் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும். மேலும் இது போன்று நாம் 3 முறை நமது CPS முதலிட்டிலிருந்து 25 % மிகாமல் பெற்றுகொள்ள முடியும். ஆனால் குறைந்தது 5 வருட இடைவெளியில். அதே வேளையில் மருத்துவ தேவைக்கு மட்டும் இந்த 5 வருட நிபந்தனை பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விரிவான தகவல்களிர்க்கு PFRDA வின் வலைதளத்தை பார்க்கவும். தங்களின் மேலான கருத்துகளை மேலே குறிப்பிட்டுள்ள மின் அஞ்சல் முகவரிக்கு தவறாமல் அனுப்பவும்.

ஒன்றுபடுவோம்! போராடுவோம்! வெற்றிபெறுவோம்!

என்றும் அன்புடன்
FREDERIC ENGLES

ஜப்பானியக் குழந்தைகளுக்கு பஞ்சாயத்துப் பள்ளி ஆசிரியர் பாடம்!

ஜப்பான் அரசின் அழைப்பின் பேரில் ஜப்பான் சென்ற உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியப் பள்ளி ஆசிரியர் அன்பழகன், அங்கு மாணவர்களுக்கு அறிவியல் பாடம் நடத்திவிட்டு வந்திருக்கிறார். இந்தியாவிலிருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரே ஆசிரியர் இவர்தான்

ஜப்பானில் உள்ள தொடக்கப் பள்ளிக் குழந்தைகளுக்கு அறிவியல், கணிதம் ஆகிய பாடங்களைக் கற்றுத் தருவதை மேம்படுத்துவதற்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சிறந்த பள்ளி ஆசிரியர்களை ஜப்பான் இன்டர்நேஷனல் கோ-ஆபரேஷன் ஏஜென்சி அழைத்தது. இந்தியா, பிஜு தீவுகள், குக் தீவு, எத்தியோப்பியா, சாலமன் தீவு, மார்ஷல் தீவு, பலூ உள்பட 11 நாடுகளைச் சேர்ந்த 12 ஆசிரியர்கள் இந்தத் திட்டத்தின்கீழ் ஜப்பான் சென்று வருவதற்காகத் தேர்வு செய்யப்பட்டனர். இந்தியாவிலிருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரே ஆசிரியர் என்.அன்பழகன் (வயது 39). அவர் தமிழகத்தைச் சேர்ந்தவர். அவர் உத்திரமேரூர் (1-3 வார்டு) ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர் என்பது அரசுப் பள்ளிகளுக்குப் பெருமை தரக்கூடியது.

பஞ்சாயத்துப் பள்ளி ஆசிரியரான இவர் எப்படித் தேர்வு செய்யப்பட்டார்? 2004-ஆம் ஆண்டில் மைக்ரோசாப்ட் நடத்திய ஆசிரியர்களுக்கான புராஜக்ட் சிக்ஷா பயிற்சி முகாமில் கலந்து கொண்டேன். அதன் மூலம் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தி மாணவர்களுக்குப் பாடங்களை நடத்துவது குறித்து அறிந்து கொண்டேன். அதனை மாணவர்களுக்கு செயல்படுத்திக் காட்டும் முயற்சியிலும் ஈடுபட்டேன். அத்துடன் பாடத்தை அனிமேஷன் மூலம் நடத்துவதற்கான பணிகளிலும் ஈடுபட்டுள்ளேன்.

மாணவர்களுக்கு அறிவியல் பாடங்களை செயல்வழிக் கற்றல் மூலம் கற்பிப்பதற்கான அட்டைகளைத் தயாரிப்பதிலும் ஈடுபட்டேன். அதற்கு பள்ளிக் கல்வித் துறையின் பாராட்டு கிடைத்தது. பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சிகளை நடத்தியதிலும் எனது பங்கு இருக்கிறது. எனது ஊக்கத்தினால், எனது பள்ளியைச் சேர்ந்த மாணவி கலைஅரசி, வாரணாசியில் நடைபெற்ற குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் சாண எரிவாயு குறித்த ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்து விருது பெற்றார். அத்துடன் இன்ஸ்பயர் விருதும் அவருக்குக் கிடைத்தது. அத்துடன் 2011-இல் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இனவேஷன் டீச்சர் லீடர்ஷிப் விருதும் கிடைத்தது. இதுபோன்ற காரணங்களால், இந்தியாவின் சார்பில் ஜப்பான் செல்லும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது" என்கிறார் அன்பழகன்.

ஜப்பானில் உள்ள ஹோஹைடு பல்கலைக்கழகத்துடன் இணைந்து தொடக்கப்பள்ளியில் பத்து நாட்கள் தங்கி இருந்து, அங்குள்ள மாணவர்களுடனும் ஆசிரியர்களுடனும் கற்பித்தல் முறைகள் குறித்து பரஸ்பரம் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டோம். பள்ளியில் இருக்கும் போது, மதிய உணவு அங்குள்ள குழந்தைகளுடன்தான். நமது உணவுகள் பற்றிய விவரங்களை ஆர்வத்துடன் கேட்ட மாணவர்கள், தாங்கள் சாப்பிடும் ஜப்பான் உணவுகள் குறித்தும் எங்களிடம் விளக்கினார்கள். தங்களது அன்பின் வெளிப்பாடாக ஒரிகாமி மூலம் காகிதத்தில் தயாரித்த பல்வேறு வேலைப்பாடுகளை என்னிடம் பரிசாகக் கொடுத்து மகிழ்ந்தார்கள். குறைந்த செலவில் பாடம் கற்பிக்கும் பொருள்களைத் தயாரித்து மாணவர்களுக்கு அறிவியல் பாடங்களை நான் விளக்கினேன். அதை அவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். அதைத் தொடர்ந்து பக்கத்தில் உள்ள ஐந்து பள்ளிகளைப் பார்வையிட்டோம்" என்ற அவர், அங்குள்ள கோளரங்கத்தையும் அருங்காட்சியகத்தையும் பார்க்கக் கிடைத்தது ஒரு நல்ல வாய்ப்பு என்று மகிழ்கிறார்.

பல்வேறு நாடுகளில் இருந்து வந்திருந்த ஆசிரியர்கள் தங்களது நாட்டுக் கல்வி முறை குறித்தும் தங்களது கற்பித்தல் முறைகள் குறித்தும் பரஸ்பரம் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்கள். ஜப்பானியக் கல்வி முறை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விளக்கப்பட்டன. ஜப்பானியர்கள் ஜப்பானிய மொழியில் பேசும் வழக்கம் கொண்டவர்கள். அதனால் அவர்கள் சொல்வதை எங்களுக்கும் நாங்கள் சொல்வதை அவர்களுக்கும் மொழிபெயர்க்க மொழிபெயர்ப்பாளர்கள் இருந்தனர். ஜப்பானில் இருந்தபோது ஸ்கைப் மூலம் தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசு மற்றும் ஊராட்சி ஒன்றியப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் தொடர்புகொண்டு பேசினேன். ஜப்பானிலிருந்து தமிழக ஆசிரியர் ஒருவர் பேசுவதைப் பார்த்து மாணவர்கள் ஆச்சரியப்பட்டுப் போனார்கள். ஆசிரியர்கள் ஆர்வத்துடன் உரையாடலில் பங்கேற்றனர்.

சர்வதேச ஆசிரியர்களுடன் இணைந்து ஜப்பானிய தொடக்கப் பள்ளிகளில் பாடம் கற்பிக்கும் முறையை அறிந்துகொண்டு அங்குள்ள பள்ளி மாணவர்களுக்கு பாடங்களை நடத்தும் அனுபவம் ஊராட்சி ஒன்றிய ஆசிரியரான எனக்குக் கிடைத்த அரிய வாய்ப்பு. எனது முதல் வெளிநாட்டுப் பயணமும் இதுதான். பொறுமை, நிதானம், நேர மேலாண்மை போன்றவற்றை அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். எனது ஜப்பான் அனுபவங்களை எனது மாணவர்களுடனும் சக ஆசிரியர்களுடனும் பகிர்ந்து வருகிறேன்" என்கிறார் ஆசிரியர் அன்பழகன்.

ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றிபெற்றோர் மாவட்டம் வாரியாக விவரம்

கிருஷ்ணகிரி - 927 பேர்
தர்மபுரி  -1339 பேர்
சேலம் - 1904 பேர்
கன்னியாகுமரி - 475 பேர்
திருச்சி - 1368பேர். 

திருப்பூர் - 577 பேர்
நாமக்கல் -1,123 பேர் .
சிவகங்கை - 487 பேர்
தேனி - 915 பேர்
திருவண்ணாமலை -1,129 பேர்
வேலூர் -1,550 பேர் தேர்ச்சி.

1/20/2014

அடைவுத்திறன் தேர்வு: ஆசிரியர்,மாணவர்களுக்கு தனி வினாத்தாள்

தமிழகத்தில், நாளை துவங்க உள்ள, 3, 5, 8ம் வகுப்பு ஆசிரியர், மாணவர்களுக்கென அடைவுத்திறன் தேர்விற்கான வினாத்தாள்கள் தனித்தனியாக தரப்படும் என, அனைவருக்கும் கல்வி திட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். 

அனைவருக்கும் கல்வி திட்டம் மூலம், மாநிலத்தில் 412 ஒன்றியங்களில்,3, 5, 8-ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களின் கற்றல் திறன் மற்றும் ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை சோதித்து அறியும், அடைவுத்திறன்தேர்வு நாளை துவங்க உள்ளது. இதற்காக, ஒன்றியத்திற்கு ஒவ்வொரு வகுப்பிற்கும், 10 பள்ளிகள் வரை தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதில், 3 மற்றும் 5ம் வகுப்பிற்கு நாளை தமிழ், கணிதமும், 22-ல் ஆங்கிலமும், 8ம் வகுப்பிற்கு 23ல் தமிழ்,கணிதம், 24-ல் ஆங்கில தேர்வும் நடக்கும். தேர்வு அறைக்கு இரண்டு கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். ஒரு கண்காணிப்பாளர், ஆசிரியர் பயிற்றுனர் அல்லது சிறப்பு கல்வியாளர். இவர்கள் தான் பணிபுரியும் ஒன்றியத்திலிருந்து அடுத்த ஒன்றியத்தில் கண்காணிப்பாளராக இருக்க வேண்டும். 

இரண்டாவது கண்காணிப்பாளராக ஆசிரியர் ஒருவர் செயல் படுவார்கள்.மாணவர்களுக்கு ஒரு வினாத்தாளும், ஆசிரியர்களுக்கு ஒரு வினாத்தாளும், தனித்தனியாக வழங்கப்படும்.மாணவர்கள், ஆசிரியர்களின் அடைவுத்திறன் அடிப்படையில், அடுத்த இரண்டு ஆண்டுக்கான கல்வி திட்டம் தயாரிக்கப்படும்.மாணவர், ஆசிரியர் விடைத்தாள் மதிப்பீடு செய்து, மதிப்பெண்கள் இணையதளம் மூலம், பதிவேற்றம் செய்யப்படும், என, அனைவருக்கும் கல்வி திட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

காலம் கடத்துவதால் யாருக்கு பயன்? (TETOJAC)

இடைநிலை ஆசிரியர் ஊதியமாற்றம் என்பது இன்று அனைத்து சங்க ஆசிரியர்களாலும் எதிர்பார்க்கப்படும் ஒன்று. தனிச்சங்க நடவடிக்கை ஒருபுறம் இருந்தாலும் கூட்டு நடவடிக்கை என்பதே சிறந்த தீர்வாக இருக்க முடியும்.
இதில் மெத்தனம் காட்டுவதின் மர்மம் என்ன? என்பதுதான் இன்று அனைவரும் மனதிலும் எழுக்கூடிய கேள்வி. ஏன் வரத்தயங்குகிறீர்கள் என்று கேட்டால் 40 ஆண்டுக்கு முந்தைய வரலாறு சொல்வதும் அதற்கு மற்றவர்கள் பதில் சொல்வதும் நான் பெரியவன், நீ துரோகி என்ற கருத்து மோதல்கள் நடைபெறுவதும் என்பது அரசியல் களம் போல் ஆகி விட்டது. களம் அமைத்து போராடுவது பெரிய விசயமல்ல. கடைசி வரை களமாடுபவர்கள் யார் என்பதுதான் கேள்வி. கடந்த காலங்களில் நடந்த விசயங்களை மறந்து இயக்கத் தலைவர்கள் கோரிக்கை வென்றெடுக்க என்ன முயற்சிகள் எடுக்க வேண்டும் என்பதை பற்றி சிந்திக்க வேண்டும். இயக்கத்தில் பொறுப்பாளர்கள் யார் கட்டுப்பாடு இல்லாமல் சுததந்திரமாக முடிவெடுக்க முயல வேண்டும். இல்லையேல் வருங்கால சமுதாயம் நம்மை கடைநிலை ஊழியர்கள் நிலையில் கொண்டுபோய் வைத்துவிடும். கோரிக்கைகளை செவிமடுக்கும் இயக்குநராக தொடக்கக்கல்வி இயக்குநர் உள்ளார். எனவே நம் கோரிக்கைகளை அரசிடம் கொண்டு சேர்க்கும் பாலமாக அவரை பயன்படுத்திக்கொள்ளலாம். அதே நேரத்தில் நம் உரிமைகளை பெறுவதில் சிறிதும் தயங்காமல் ஒரு பெரிய போராட்ட நடவடிக்கையை கூட்டு நடவடிக்கைக்குழு அறிவிக்க வேண்டும். அறிவூட்டும் துறை தன்னுடைய உரிமையை பெற யாருக்கு அறிவூட்டுவது என தெரியாமல் திண்டாடுவது நகைப்புக்குறியதாகும். ஒற்றுமையே பலம் எனவும், கூடி வாழ்நதால் கோடி நன்மை என பாடம் நடத்தும் நமக்க யார் பாடம் நடத்துவது என்று தெரியவில்லை. இந்த கோரிக்கையை மையமாக வைத்து தெருவுக்கு ஒரு சங்ஙகம் தினமும் முளைத்துக்கொண்டிருக்கின்றன. இது நமது ஒற்றுமையின்மையை ஆட்சியாளர்களுக்கு படம் பிடித்து காட்டிவிடுகிறது. பரிதாப்ப்ட்ட இனமாய் இன்று இடைநிலை ஆசிரயர் சமுதாயம் உள்ளது. பத்திரிக்கைச் செய்திகள் யார் தலைமையேற்பது என்ற போட்டி சங்கங்களுக்கிடையில் நடக்கிறது என்று பத்தி வைக்கின்றன. இயக்கங்களை கட்டுப்படுத்தும் சக்திகள் துர விலகி நின்றாலே நமக்கான போராட்டத்தை நாம் வகுத்துக்கொள்ளலாம். ஒன்று சேர விடாமல் தடுக்கும் தீய சக்திகளை இயக்க நடவடிக்கைகளிலிருந்து துரத்தியடியுங்கள். நமக்கான உரிமையை நாம்தான் போரடி பெற வேண்டும். இங்கு யாருடைய தயவும் தேவையில்லை. எத்தனை காலம்தான் வாய் மூடி மௌனமாக காலம் கடத்த போகிறோம். முதலில் நாம் சார்ந்துள்ள இயக்கத்தில் நமக்கான உரிமையை கேட்டுப் பெறுங்கள். அதன்பின் அரசிடம் உள்ள உரிமைகளை கேட்பதற்கு துணிந்து விடுவீர்கள். பலங்கதைகள் பேசி நம்மை மழுங்கடிக்கும் நாசகார கும்பல்களிடம் இருந்து விடுதலை கோருங்கள். நமக்கான விடியல் வெகு தொலைவில் இல்லை. மீண்டும் எச்சரிக்கை செய்கின்றேன். உரிமை மீடக ஒன்று கூடுவோம். வென்றெடுப்போம்.

உண்மையை உரக்கச் சொல்லுவோம்!!!

உரிமையை போராடிப் பெறுவோம்!!!

தியாக வேங்கையே! திரட்டு உன் வரிப்புலி கூட்டத்தை!! (TETOJAC)

TETOJAC உன் உரிமை மீட்பிற்காக வருகிற 02.02.2014 அன்று நடத்தவிருக்கும் மாபெரும் மாவட்ட பேரணிக்கு உன் வரிப்புலி கூட்டத்தை திரட்டி விட்டாயா?. திட்டமிட்ட செயல் கெட்டுப்போனதாக வரலாறு இல்லை. தமது திட்டம் நாளைய வெற்றியின் படிக்கல். மறந்த போன நினைவுகளை! மழுங்கி போன உணர்வுகளை!! தட்டி எழுப்பி தன்மானமுள்ள தியாக வேங்கையாக போருக்கு புறப்பட தயாராகயிரு. உனது வெற்றி முரசு சத்தம் சக ஆசிரிய சகோதரனை தட்டி எழுப்பும் சங்கொலியாக அமையட்டும். உனக்கு இந்த ஒரு மாத காலத்தில் 10க்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதியுள்ளேன். அனைத்தையும் உன் சக ஆசிரியனிடம் பகிர்ந்தாயா?. அடடா! எத்தனை விமர்சனங்கள். அந்த விமர்சனங்கள்தான் என்னை கூர் தீட்டின. இன்று பெறவில்லையென்றால் என்று பெறப்போகிறோம்? நீண்ட இரயில் பயணத்தில் பயணிகளை பத்திரமாக சேருமிடம் சேர்க்கும் தொடர் வண்டி போல் தமிழக ஆசிரியர்களை பாதிப்புக்களின்றி பயணிக்க செய்கின்ற தொடர் வண்டிதான்TETOJAC. ஆகஸ்டு புரட்சி இந்திய வரலாற்றில் இன்றளவும் பேசப்படுகிறது. அதை போலத்தான் நமது மாவட்ட பேரணியும் இயக்க வரலற்றில் பேசப்படும். ஆள்பவர்களுக்கும், ஆண்டு முடித்தவர்களுக்கும் சேதாரம் இல்லாமல் போரடுவது போல் பாசாங்கு செய்ய தெரியாது நமக்கு. நெஞ்சில் மூண்ட நெருப்புக்கு சமரசம் ஏதுமில்லை என்ற இலட்சிய வேட்கையை நெஞ்சில் ஏந்தி வெற்றி கிட்டும் வரை போராட மட்டுமே நமக்கு தெரியும். தங்கம் செய்யாததை தங்கம் செய்யும் என்பதில் உறுதியுள்ளவன் நான். FEb-2nd இலட்சியவாதிகள் சங்கமிக்கும் நாள். ஆளும் அரசின் மனதை மாற்றப்போகும் நாள். மற்றவர்கள் துணிந்து செய்யாததை துணிச்சலுடன் எதிர்கொள்வதே எமது இயக்கத்தின் வழக்கம். இது நமக்கான பாதிப்பு. நாம் திரட்டவில்லையென்றால் யாரால் இயலும்? நாம் திரட்டுகின்ற கூட்டம் எதிர் கால ஆசிரிய சமுதாயத்தின் இயல்பு வாழ்க்கைக்கு இடக்கூடிய அடி உரம். எனவே இயக்கம் இட்ட கட்டளையை நிறைவேற்ற பல போராட்ட களம் கண்ட தியாக வேங்கைகளே திரட்டு உன் படைகளை. நம் பலம் என்ன என்பதை மற்றவர்களுக்கு புரியவைப்போம். போராட்ட களம் ஒன்றும் நமக்கு புதிதல்ல. புரட்சிகரமான கோஷங்களால் புது வரலாறு படைப்போம். குள்ள நரி கூட்டங்களை நம் கூட்டம் கூண்டோடு விரட்டட்டும். நம்மை எள்ளி நகையாடுபவர்கள் நடுங்கி ஓடட்டும். நல்லவர்கள் கூட்டம் நம்மோடு இணையட்டும். களத்தை சூடுபடுத்தி இலட்சிய வேட்கையுடன் மாவட்ட பேரணிக்கு அழைத்து வா! உன் வரவை ஆவலுட்ன எதிர்பார்க்கிறேன். வட்டார நிர்வாகிகளை சந்தித்து உற்சாகப்படுத்த இன்று நேரில் உன்னை நோக்கி எமது பயணம். தோழனே வாழ்வாதாரத்ததை மீட்டெடுக்க உன் வரி-புலி கூட்டத்தை திரட்டிடுக. வெற்றி நமதே!

தோழமையுடன்.........
ஆ.முத்துப்பாண்டியன்
TNPTF மாவட்டத்தலைவர்,
சிவகங்கை மாவட்டம்.
www.mptnptf.blogspot.com
TNPTF

1/13/2014

நமக்கான விடியல் நாளை மலரட்டும். கோரிக்கை வென்றெடுக்க கூட்டுப்போராட்டமே உகந்த வழி.(TETOJAC)

இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய உயர்வு - உரிமை மீட்பு போராட்டம் என்பது விழலுக்கு இரைத்த நீராக போய் கொண்டிருப்பது வருத்தத்துக்குறியது. அனைத்து இயக்கங்களும் தனிச்சங்க நடவடிக்கை எடுத்த பின்பும் கூட தமிழக அரசோ, கல்வித்துறையோ காது கேளாமல் இருப்பதென்பது நமது போராட்ட வியூகத்தை மாற்ற வேண்டிய கட்டாய நிலைக்கு உட்படவேண்டியது அவசியமாகிறது. உழைப்பவர்களின் உரிமைகள் எங்கு மதிக்கப்படுவதில்லையோ அந்த தேசம் உருப்பட்டதாக வரலாறு இல்லை.

தவறுதலாக கதவை தட்டிய கையைத் தான் வெட்டிக்கொண்டதால் பொற்கைப் பாண்டியன் எனப் பாராட்டப்பட்டான் பாண்டிய மன்னன் ஒருவன் என்பது பண்டையத் தமிழ் நூல் காட்டும் பண்பாட்டுச்செய்தி. அவசரப்பட்டுக் கோவலனைக் கொல்ல தானே காரணம் எனக் கூறித் தன்னுயிர் நீத்தான் பாண்டிய மன்னன் என்பது சிலப்பதிகாரம் காட்டும் செய்தி. அதன்பின் ஆங்கிலேய கம்பெனி ஆட்சி அன்னல் காந்தியின் அறவழி போராட்டத்தினால் விடுதலை கிடைத்தது.

இனறைய நிலையை நினைத்தால் ஏமாற்றம் தான் மிஞ்சுகிறது. ஆட்சியாளர்கள் வாய்மூடி மௌனம் சாதிக்கும் நோக்கம் என்ன? ஆசிரியப் பேரினம் இவ்வளவு எழுச்சி மிகு போராட்டங்களை நடத்திய பின்பும் ஒரு சிறு அதிர்வு கூட அரசாங்கத்திடம் இருந்து வரவில்லை என்பதுதான் கசப்பான உண்மை. கடந்த கால சாதனைகள் நமது கூட்டு முயற்சியல் விளைந்தவை என்பதை மறக்க - மறைக்க இயலாது.

துன்பங்கள் தொடர்கதைகளா? முடிவே இல்லையா? என ஏங்வோர் சிலர் பலராகி ஒன்றுபட்டு ஓரணி நிற்பது உறுதியாகிவிட்டால் தன்னலப்பார்வை ஒழித்து பொதுநலச் சிந்தணை மேலோங்கும்பொழுது நமக்கான விமோச்சனம் உறுதியாகிவிடும். எனதருமை தோழர்களே உயிர் முடிச்சின் இறுதி கட்டத்தில் இருக்கிறோம். இங்கே ஈகோ பார்த்தால் எல்லாம் நிர்கதியாகிவிடும். கூட்டு போராட்டத்திற்கு தங்கள் தலைமைகளை நிர்பந்தியுங்கள். விமர்சனம் இல்லாமல் ஒருவன் வளர இயலாது. விமர்சியுங்கள் - விவாதியுங்கள். முடிவு பெறும் வழியை கண்டறியுங்கள்.

'உச்சிமலையில் ஊறும் அருவிகள்

ஒரே வழியில் கலக்குது

ஒற்றுமை யில்லா மனிதகுலம்

உயர்வும் தாழ்வும் வளர்க்குது

பச்சைக் கொடிகள் வேலியிலே

பாகுபாடின்றித் தழைக்குது - அதைப்

பார்த்திருந்தும் சிலபத்தாம் பசலிகள்

பக்கம் ஒண்ணாய் பறக்குது - அன்பு

பாலம் பழுதாய்க் கிடக்குது' என்ற பட்டுக்கோட்டையாரின் பாடல் வேறுபட்டு நிற்கும் மக்களை வீறு கொண்டெழுந்து விடியல் காண அழைப்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

தோழர்களே ஆண்டவர்களுக்கும் - ஆட்சியாளர்களுக்கும் அடங்கி ஒடுங்கி அகப்பட்டதை சுருட்டும் தலைமைகளை புறந்தள்ளுவோம். எது நடந்தாலும் எனக்கென்ன என்றிருக்கும் நடைபிணங்களை, வருங்கால சந்ததியின் வருத்தத்தை எண்ணிப் பார்க்காது வாழ்நாளை வீணாக்கும் வீணர்களை, உண்டு, உறங்கி, ஊர்வம்பு பேசும் திண்ணைப் பேச்சு வீரர்களின் அலட்சிய போக்கினைச் சுட்டிக்காட்டி இயக்க உணர்வாளார்களாக மடை மாற்றுவோம். வீடு திருந்தின் தெரு திருந்தும். தெரு திருந்தின் ஊர் திருந்தும். ஊர் திருந்தின் நாடு திருந்தும். நாடு திருந்தின் உலகம் திருந்தும். முதலில் நாம் நம்மையும் நம்மை சுற்றியுள்ளோரையும் திருத்துவோம். சுயநலம் முழுதாக ஒழிக்கப்பட்டு பொதுநலம் மலரட்டும். நமக்கான விடியல் நாளை மலரட்டும்.

உண்மையை உரக்கச் சொல்லுவோம்!!! உரிமையைப் போராடி பெறுவோம்!!!! -TETOJAC

தமிழ்நாட்டடில் பணிபுரியும் அரசு ஊழியர் - ஆசிரியர்களில் இடைநிலை ஆசிரியர்கள் மட்டும் ஆட்சியாளர்களின் மாற்றந்தாய் மகனாக மாற்றப்பட்டதன் மர்மம் என்ன? எங்களை ஆட்சியாளர்களின் மனத்திறையிலிருந்து பிரித்த கயவர்கள் யார்? ஒரே பணி நிலை - ஒரே கல்வி நிலை - மாறுபட்ட ஊதியம் ஏன்? விளக்கினார்களா? முதல்வருக்கு. இல்லை முதல்வர்தான் விளக்கம் கேட்டாரா? என்ன நடக்கிறது இங்கே? ஒரு ஜனநாயக நாட்டில் இதைவிட அறவழியில் எவ்வர்று நம் உரிமையை கேட்பது. கேட்பது உரிமை என்று தெரிந்தும் அரசு ஊமையாய் இருப்பது ஏன்? புலனாய்வு அதிகாரிகள் முதல்வருக்கு அனுப்பிய அறிக்கையில் 40000 இடைநிலை ஆசிரியர்களின் அவல நிலையை உணர்த்தவில்லையா? இல்லை முதல்வர் உணர விரும்பவில்லையா? ஒரு தாய் தன் பிள்ளைகளின் பசியறிந்து உணவளிக்க வேண்டாமா? பிள்ளை அழுது புலம்பி நா வற்றியும் கூட வரம் தர வில்லையென்றால் என்ன செய்வது? சுயநலமிக்க சில தலைவர்களின் தான்தோன்றிதனமான முடிவுகளால் தரம் தாழந்து போன எங்களின் வாழ்வை மீட்டெடுப்பது எப்போது? அருமை தோழர்களே தாங்கள் சார்ந்துள்ள இயக்கத்தின் மாநிலத் தலைமையின் அலை பேசியை தொடர்ந்து அலையுங்கள். கூட்டுப்போராட்டம் நடத்துவதற்கு நெருக்குதல் கொடுங்கள். டிட்டோ-ஜேக் கூட்டத்திற்கு ஏன் வர மறுக்கிறீர்கள் என்று வினா தொடுங்கள். வர மறுக்கும் தலைமைகளை இயக்க நடவடிக்கைகளிலிருந்து அப்புறப்படுத்துங்கள். நம்மை வைத்து சுக போக வாழ்க்கை வாழும் அவர்களின் முகத்திரையை கிழித்தெறியுங்கள். யோசிக்க நேரமில்லை. சிந்தித்து சிந்தித்து செயலற்று போய்விட்டோம்? உள்ளே நடக்கும் திரை மறைவு வேலைகளை நம்மிடம் மறைத்து தவறான வரலாற்றை நம் மனதில் பதியவைத்து நம்மை அடி முட்டாளாக ஆக்குவதை அம்பலப்படுத்துங்கள். கேள்வி கேட்க முடியாத உயரத்தில் இருக்கும் தலைமை நமக்கு வேண்டாம. நம்மை உறுப்பினாரக கொண்டுள்ள இயக்கத்தில் கேள்வி தொடுக்க முழு உரிமை நமக்கு உண்டு என்பதை உணருங்கள். உசுப்புங்கள் உங்கள் தலைமையை. தனிச்சஙக் நடவடிக்கை தவிர்த்து கூட்டு நடவடிக்கைக்கு கூப்பாடு போடுங்கள். உறங்க நேரமின்றி உழைக்க தயாராகுங்கள். உண்மையான போர்களம் எது என்பதை உலகிற்கு புரிய வையுங்கள். உன்னோடு களம் காண ஆவலாக உள்ளேன். உரிமை போரின் சங்கொலி என் காதில் ஒலிக்கத் தொடங்கி விட்டது. போர்! போர்! வீர வேல்! வெற்றி வேல்!!

உண்மையை உரக்கச் சொல்லுவோம்!!!

உரிமையைப் போராடி பெறுவோம்!!!!

தோழமையுடன்...

A.Muthuppandian

TNPTF _ Singampunari

உணர்ந்திடு தோழா!! உரைத்திடு தோழா!!! - TETOJAC

என் இனிய அப்பாவி இடைநிலை ஆசிரிய தோழனே!

உன் உரிமைகள் கொஞ்சம் கொஞ்சமாக உன்னிடமிருந்து பறிக்கப்படுவதை உணர்ந்தாயா? உன் தரநிலை தர ஊதியத்தால் தரம் கெட்டு போனதை அறிந்தாயா? அறிந்தும் உன்னிடம் எவ்வித சலனமோ,  சஞ்சலமோ இருப்பதாக தெரியவில்லை. உன்னால் உனக்கான சரியான இயக்கத்தைக்கூட தெரிவு செய்ய இயலாமல் சிதறிக் கிடக்கிறாய். போராட்ட களத்தில் உன் பங்களிப்பு என்பது சொல்லும் அளவிற்கில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. ஏன் இந்த தயக்கம். நாம் ஏன் செல்ல வேண்டும்? நமக்காக யாராவது போராடுவார்கள் என்ற அசட்டையா? இல்லை அச்சமா? புரியவில்லை. இந்த நாட்டின் தலைவிதியை நிரணயிக்கப்போகும் மாணவர் சமுதாயம் உன் கையில். உன்னுடைய பிரதிபலிப்பு உன் மாணவர் சமுதாயத்திற்கும் தொடரும் என்பது உனக்கு பரியாததா?. உன் உரிமைகளைக் கூட கேட்க திராணியற்று ஊமையாய் உருக்குலைந்து இருக்கும் உன்னால் எப்படி உன் மாணவர் சமுதாயத்திற்கு உரிமையை பெற கற்றுக்கொடுக்க போகிறாய்?. போராட்டக் களத்தில் மற்றவர்கள் போராடிப் பெறும் உரிமைகளை எவ்வித கூச்சமும் இன்றி எப்படி உன்னால் அனுபவிக்க இயலுகிறது. மீண்டும் பகத்சிங் பிறந்தா உன்னை காப்பற்ற முடியும்?. இல்லை சேகுவரா தோன்ற வேண்டுமா?. உனக்கான பகத்சிங், சே யார் என்று அடையாளம் கண்டுக்கொள். இன்று தவறவிட்டால் இழந்த உரிமைகளை உன்னால் இனிமேல் பெற இயலாது. பல கட்ட போராட்டங்கள் தனித்தும், இணைந்தும் அரங்கேற்றியாகிவிட்டது. அரசோ, அதிகாரிகளோ அசையவில்லை. 30000க்கும் குறைவாக உள்ள பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு பாதிப்பு நீக்க முன்வர அரசு தயங்க காரணம் யோசித்தாயா? தொடக்கக்கல்வித் துறையில் உள்ள சங்கங்களின் போராட்டங்களை பார்த்தாலே பயம் கொள்ளும் அரசாங்கம் அமைதி காப்பதன் அர்த்தம் புரிந்தாயா? போராட்ட களத்தில் உன் பங்களிப்பு குறைந்ததன் விளைவே என்பதை நீ அறிவாயா?. அளவு மாற்றம் குணம் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை என்றாவது நினைத்ததுண்டா?. போராட்டம் யாருக்கோ என்று வெளியில் நின்று வேடிக்கை பாரப்பது எவ்வளவு கேவலம் என்பது இனிமேலாவது உணர்ந்து கொள். இயக்கங்கள் அறிவிக்கும் போராட்டத்தில் எழுச்சியுடன் கலந்து கொள்ள தயாராகு. மற்றவர்களையும் தயார் படுத்து. இடைநிலை ஆசிரியர்களில் இளைஞர்கள் பலம் அதிகமாகிவிட்டது. உன் பலத்தை பலவீனமாக்க சில சுயநலமிக்க தலைவர்கள் திட்டமிட்டு காய் நகர்த்துகிறார்கள். அதில் சிக்கி சின்னாபின்னமாகி விடாதே. சிந்தித்து செயல்படு. சிந்தணை செய்யாதவன் ஜெயித்ததாக வரலாறு இல்லை. உனக்காக போராட கூட்டு நடவடிக்கைக்குழு தயாராகிவிட்டது. கோரிக்கை வென்றெடுப்பதே இலட்சியம். வருகிற போராட்டங்களில் உன் வரவை தோழமையுடன் எதிர்பார்க்கிறேன்.

உணர்வாயா? மற்றவர்க்கும் உணர்த்துவாயா?

உண்மையை உரக்கச் சொல்லுவோம்!!!

உரிமையைப் போராடிப் பெறுவோம்!!!

என்றும் இயக்க பணியில...

முத்துப்பாண்டியன்.ஆ
TNPTF மாவட்டத்தலைவர்

Sivagangai

டிட்டோஜாக் மாவட்ட பேரணி வழிகாட்டும் குறிப்புகள்


TETOJAC - மாவட்ட பேரணி அழைப்பிதழ்

Displaying Picture1p 015.jpg

25 ஆண்டுகள் பணி முடித்தால் ஊக்க விருது வழங்க வேண்டும்

நாமக்கல், : தொடர்ச்சியாக 25 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு ஊக்க விருது வழங்க வேண்டும் என ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாமக்கல் நகரில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியின் மாவட்ட செயற்குழுகூட்டம் மாவட்டதலைவர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. வெண்ணந்தூர் வட்டார செயலாளர் ஜெகநாதன் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் கலைச்செல்வன், மாநில செயற்குழு உறுப்பினர் பாலமுரளி, மாவட்ட செயலாளர் தங்கவேல், முன்னாள் பொதுச்செயலாளர் முருகசெல்வராசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், உயர்கல்வி படிக்க முன்னேற்பு ஆணை கிடைக்க பெறாத ஆசிரியர்களுக்கு பின்னேற்பு ஆணைகள் வழங்க வேண்டும்.
25 ஆண்டுகள் பணி முடித்த அனைத்து ஆசிரியர்களுக்கும் ஊக்க விருது வழங்க வேண்டும். நாமக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் பொங்கல் பண்டிகைக்குள் போனஸ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பொங்கல் நல் வாழ்த்துக்கள்

இ.பி.எப். வட்டி 8.75 சதவீதமாக உயர்வு

புதுடில்லி : தொழிலாளர்களுக்கான இ.பி.எப். வட்டி விகிதம் 8.75 சதவீதமாக உயர்ந்துள்ளது. வருங்கால வைப்பு நிதி திட்டத்தில், சேர்ந்து கணக்கு வைத்துள்ளவர்களுக்கு, அவர்கள் கணக்கில் வரவு வைக்கப்படும் தொகைக்கு, ஆண்டுதோறும், வட்டி வழங்கப்படுகிறது. இந்த வட்டி, எவ்வளவு சதவீதம் என்பதை, இ.பி.எப்.ஓ., என்ற, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தின் கீழ் செயல்படும், டிரஸ்டிகளின் மத்திய போர்டு கூடி முடிவு செய்யப்படும். இந்த வகையில், 2013-14ம் ஆண்டுக்கான, வட்டியை 8.75 சதவீதமாக உயர்த்தியுள்ளதாக மத்திய அமைச்சர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் அறிவித்துள்ளார். முன்னதாக இ.பி.எப்., டிபாசிட் வட்டி 8.5 சதவீதமாக இருந்தது
இ.பி.எப். வட்டி 8.75 சதவீதமாக உயர்வு

TETOJAC - கோரிக்கைகள்

Displaying Picture1p 013.jpg

TETOJAC- மாநிலப் பொதுக்குழு முடிவுகள்

Displaying Picture1p 011.jpg
Displaying Picture1p 012.jpg

அனைத்து ஆசிரியர் காலியிடங்களும் இன்னும் 15 நாட்களுக்குள் நிரப்பப்படும்: அமைச்சர் கே.சி.வீரமணி

காலியாகவுள்ள அனைத்து ஆசிரியர் பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும் என தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.சி. வீரமணி கூறியுள்ளார். வேலூரில் நடைபெற்ற கல்வித்துறை அலுவலர்கள், தலைமை ஆசிரியர்களுக்காக ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற அவர் இதனை தெரிவித்தார்.
 
              இதுவரை 50 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாகவும் இன்னும் 15 நாட்களுக்குள் காலியாகவுள்ள அனைத்து இடங்களும் நிரப்பப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.இந்த ஆண்டு 10 மற்றும் 12- ஆம் வகுப்புத் தேர்வில், மாணவ- மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 95 சதவீதமாக உயர்த்தி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். பள்ளி கல்வித்துறையை மேம்படுத்த தமிழக அரசு 45 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆசிரியர் நியமனத்திற்கு வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடுவது எப்படி?

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு 60 சதவீத மதிப்பெண் (150–க்கு 90 மதிப்பெண்) எடுக்க வேண்டும்.
 
         பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு, தகுதி தேர்வு மதிப்பெண், பிளஸ்–2 மதிப்பெண், பட்டப் படிப்பு மற்றும் பி.எட். மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையில் நியமனம் நடைபெறும்.

         தகுதித்தேர்வுக்கு 60 மதிப்பெண்ணும், பிளஸ்–2 தேர்வுக்கு 15 மதிப்பெண்ணும், பட்டப் படிப்புக்கு 15 மதிப்பெண்ணும், பி.எட். படிப்புக்கு 15 மதிப்பெண்ணும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மொத்தம் 100 மதிப்பெண். தகுதித்தேர்வில் ஒருவர் எடுக்கும் மதிப்பெண் 60–க்கு மாற்றப்படும். பிளஸ்–2, டிகிரி, பி.எட். தேர்வில் மதிப்பெண் ஒதுக்கீடு விவரம் பின்வருமாறு:–

12–ம் வகுப்பு

              90 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்றிருந்தால் – 10 (அதிகபட்ச முழு மதிப்பெண்)
80 சதவீதம் முதல் 90 சதவீதத்திற்குள் – 8 மதிப்பெண்
70 சதவீதம் முதல் 80 சதவீதத்திற்குள் – 6 மதிப்பெண்
60 சதவீதம் முதல் 70 சதவீதத்திற்குள் – 4 மதிப்பெண்50 சதவீதம் முதல்
60 சதவீதத்திற்குள் – 2 மதிப்பெண்

பட்டப் படிப்பு

70 சதவீதம் மற்றும் அதற்கு மேல் – 15 மதிப்பெண் (முழு மதிப்பெண்)
50 சதவீதம் முதல் 70 சதவீதத்திற்குள் – 12 மதிப்பெண்
50 சதவீதத்திற்கு கீழ் – 10 மதிப்பெண்

பி.எட். படிப்பு
70 சதவீதம் மற்றும் அதற்கு மேல் – 15 மதிப்பெண் (முழு மதிப்பெண்)
50 சதவீதம் முதல் 70 சதவீதத்திற்குள் – 12 மதிப்பெண்

தகுதித்தேர்வு

90 சதவீதம் மற்றும் அதற்கு மேல் – 60 மதிப்பெண் (முழு மதிப்பெண்)
80 சதவீதம் முதல் 90 சதவீதத்திற்குள் – 54 மதிப்பெண்
70 சதவீதம் முதல் 80 சதவீதத்திற்குள் – 48 மதிப்பெண்
60 சதவீதம் முதல் 70 சதவீதத்திற்குள் – 42 மதிப்பெண்

18 ஆயிரம் ஆசிரியர்களின் தேர்வுப் பட்டியலை பிப்ரவரி மாதத்துக்குள் பள்ளிக் கல்வித் துறையிடம் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டம்

ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளின் திருத்தப்பட்ட தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் சனிக்கிழமை (ஜன.11) வெளியிட்டது. இரண்டாம் தாளில் 4 கேள்விகளுக்கான முக்கிய விடைகளை மாற்ற செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, நான்கில் இரண்டு கேள்விகளை நீக்கி ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுத்தது. நீக்கப்பட்ட இரண்டு கேள்விகளுக்கும் தலா ஒரு மதிப்பெண் வழங்கப்பட்டதால், இரண்டாம் தாளில் 2 ஆயிரத்து 436 பேர் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். இதையடுத்து, இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 16,932 ஆக உயர்ந்துள்ளது.

          முதல் தாள் தேர்வுக்கான முக்கிய விடைகளில் மாற்றம் இல்லாததால், அந்த தேர்வு முடிவுகளில் எந்த திருத்தமும் செய்யப்படவில்லை.

          ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள் தேர்வுகள் ஆகஸ்ட் 17, 18 தேதிகளில் நடைபெற்றது. முதல் தாளை 2.62 லட்சம் பேரும் இரண்டாம் தாளை 4 லட்சம் பேரும் எழுதினர்.

          இந்தத் தேர்வு முடிவுகள் கடந்த நவம்பர் 5-ஆம் தேதி வெளியிடப்பட்டன. ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் 12 ஆயிரத்து 596 பேரும் இரண்டாம் தாளில் 14 ஆயிரத்து 496 பேரும் தேர்ச்சி பெற்றனர்

         இந்தத் தேர்வுக்கான முக்கிய விடைகளை எதிர்த்து பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.

     வழக்குகளை விசாரித்த நீதிமன்றம் இரண்டாம் தாளில் 4 முக்கிய விடைகளை மாற்றி உத்தரவிட்டது. அதனடிப்படையில், விடைத்தாள்கள் மறுமதிப்பீடு செய்யப்பட்டு, திருத்தப்பட்ட புதிய தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் சனிக்கிழமை வெளியிட்டுள்ளது.

         ஜனவரி 20 முதல் 28 வரை சான்றிதழ் சரிபார்ப்பு: ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜனவரி 20 முதல் 28 வரை நடைபெற உள்ளது. நீலகிரி, பெரம்பலூர் மாவட்டங்களைத் தவிர்த்து மீதமுள்ள 30 மாவட்டங்களில் இந்த சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

      சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க நீதிமன்றத்தின் மூலம் அனுமதி பெற்ற தேர்வர்கள், ஜனவரி 27-ஆம் தேதி நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கலாம். இவர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மாவட்டங்களில் உள்ள சான்றிதழ் சரிபார்ப்பு மையங்களுக்குச் செல்ல வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வின் அடிப்படையில் 2 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் 13 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

அடுத்தடுத்து தேர்வு முடிவுகள்:

            நீதிமன்ற வழக்குகளால் தடைபட்டிருந்த முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு, ஆசிரியர் தகுதித் தேர்வுகளின் திருத்தப்பட்ட முடிவுகள் அடுத்தடுத்து வெளியிடப்பட்டுள்ளன.

           மொத்தம் 2,881 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்காக நடைபெற்ற போட்டித் தேர்வின் திருத்தப்பட்ட தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை இரவு வெளியிடப்பட்டன.

        இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கான ஆசிரியர் தகுதித் தேர்வின் திருத்தப்பட்ட முடிவுகள் பொங்கலுக்குப் பிறகு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், தொடர்ந்து பணியாற்றியதன் காரணமாக, ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளின் திருத்தப்பட்ட தேர்வு முடிவுகள் சனிக்கிழமையே வெளியிட முடிந்ததாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

           முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் என மொத்தம் சுமார் 18 ஆயிரம் ஆசிரியர்களின் தேர்வுப் பட்டியலை பிப்ரவரி மாதத்துக்குள் பள்ளிக் கல்வித் துறையிடம் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.

வருவாய்வழி திறன் தேர்வு: ஜன., 20 வரை விண்ணப்பிக்கலாம்

திண்டுக்கல்: தேசிய வருவாய் வழி, திறன்படிப்பு தேர்வுக்கு,ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜன.,20 வரை வாய்ப்பளிக்கப்பட்டு உள்ளது.
எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படும் தேசிய வருவாய் வழி மற்றும் திறன்படிப்பு உதவி தொகை திட்டத் தேர்வு பிப்.,22ல் நடக்க உள்ளது. தேர்வு கட்டணமாக ஒருவருக்கு ரூ.50 செலுத்த வேண்டும். வெற்றி பெறுபவர்களுக்கு, பிளஸ்2 வரை மாதந்தோறும் ரூ.500 உதவித்தொகை வழங்கப்படும்.
தேர்வு எழுதுபவர்கள், ஜன.,10 வரை www.tndge.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டிருந்தது. தற்போது விண்ணப்பிக்கும் தேதி ஜன.,20 வரை நீடிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்த பின், பதிவிறக்கம் செய்த விண்ணப்பம் மற்றும் தேர்வு கட்டணத்துடன், ஜன.,21, 22 ல் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலங்களிலும், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாவட்ட தொடக்க கல்வி அலுவலகங்களிலும் ஒப்படைக்க வேண்டும்.

இணையதள வகுப்பறைகள்: மாற்றம் காணும் கல்வி

ஆசிரியப்பணியானது தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு புதிய பரிமாணங்களைப் பெற்று வந்துகொண்டிருக்கிறது. புதிய புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகமாகும்பொழுது, அவை கற்பித்தலிலும் மாற்றங்களை உண்டாக்கும் வகையில் தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. அப்படிப்பட்ட தொழில்நுட்பங்களில் முக்கியமானதும், அவசியமானதுமான தொழில்நுட்பமாக இணையதளம் விளங்குகிறது.
தற்போதைய சூழ்நிலையில், இணையதளமானது கற்றலுக்கான தேடலை எளிதாக்கியுள்ளது. அளவில்லாத தகவல்களை உள்ளடக்கி இருந்தாலும் முறைப்படி, எளிதாகக் கற்றுக்கொடுக்க ஆசிரியர் தேவைப்படுகிறார். இந்த தேவையை சரி செய்வதற்காக பரவலாக பயன்படுத்த ஆரம்பித்திருக்கும் முறைதான் "ஆன்-லைன் கிளாஸ்ரூம்" ஆகும். இணைய வகுப்பறைகள் மூலமாக கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்கள் "டிஜிட்டல் டீச்சர், டிஜிட்டல் புரொஃபசர்" என அழைக்கப்படுகிறார்கள்.
சாதாரண வகுப்பறையில் ஆசிரியர் ஒரு பாடத்தை கற்றுக்கொடுத்து சென்ற பின்னர், மீண்டும் அதே பாடத்தை அறிய விரும்பினால் அது சற்று கடினமான செயலாக மாறிவிடுகிறது. ஆனால் இணையவழிக் கற்றல் முறையில் இது எளிதான செயல். ஏனெனில், ஒரு முறை ஆசிரியரால் எடுக்கப்பட்டப் பாடம் இணையத்திலேயோ அல்லது கணினியிலோ சேமித்து வைக்கப்பட்டிருக்கும், இந்த முறை மூலம் எத்தனை முறை மற்றும் எப்பொழுது வேண்டுமானாலும் குறிப்பிட்ட பாடத்திற்கான காணொளி காட்சியைப் பார்த்து அறிந்து கொள்ளலாம்.
மேலும், உலகின் எந்த மூலையிலிருக்கும் மாணவருக்கும், எந்த நேரத்திலும் கற்றுக்கொடுக்க முடிவது இதன் சிறப்பம்சமாகும். நேரடி காணொளி மென்பொருட்கள் மற்றும் உரையாடல் வசதியை தரும் இணையதளங்கள் மூலமாக மாணவர்கள் தங்கள் சந்தேகங்களை கேட்க முடியும். ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் உள்ள மாணவர்களால் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்த இணையவழிக் கற்றல் முறை இன்று உலகம் முழுவதும்  வேகமாகப் பரவி வருகிறது.
தேவையான கல்வித்தகுதி
பள்ளி மாணவர்களுக்கு கற்றுக்கொடுப்பதற்கு இளநிலையில் பி.எட். மற்றும் முதுநிலையில் எம்.எட். படித்திருக்க வேண்டும்.
கல்லூரி மாணவர்களுக்கு கற்றுக்கொடுப்பதற்கு "நெட்" தேர்வில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் அல்லது பிஎச்.டி. முடித்திருக்க வேண்டும்.
இவை தவிர சிறப்புப் பாடங்கள், இசை, நடனம், வடிவமைப்பு போன்றவை சார்ந்த குறுகிய காலப் படிப்புகளுக்கு அந்த அந்தத் துறையில் சிறப்பான ஆற்றலை பெற்றிருப்பது அவசியம். 

வாசிப்பு திறனை மேம்படுத்த உத்தரவு

வருமான வரி செலுத்துவோருக்கு புதிய சலுகை

பிப்ரவரி-2 மாவட்ட பேரணி - டிட்டோஜாக் கூட்டத்தில் முடிவு

சென்னை, ஜன.13-

தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களில் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோஜாக்) மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் செ.பாலசந்தர் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி, தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழக ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு தொடக்க-நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம் ஆகிய 7 அமைப்புகளின் சார்பில் உயர்மட்டக்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், 7 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி அடுத்த மாதம் (பிப்ரவரி) 2-ந்தேதி தமிழகம் முழுவதும் மாவட்டத்தலைநகரங்களில் தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் பேரணி நடத்துவது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் செ.முத்துசாமி, தமிழக ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் அ.வின்சென்ட் பால்ராஜ், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் செ.பாலசந்தர், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் ரா.தாஸ், தமிழ்நாடு தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் சி.சேகர், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச்செயலாளர் க.மீனாட்சி சுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1/11/2014

TET - I&II Call Letter


Teachers Recruitment Board  College Road, Chennai-600006

TNPT - சமூகம் சார்ந்த பணி

இன்று பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி , சிங்கம்புணரி வட்டாரக்கிளையின் சார்பாக பிஸ்கட் பாக்கெட் மற்றும் குடி தண்ணீர் வழங்கப்பட்டது. 1500 பக்தர்களுக்கு வழங்கப்பட்ட இச்சேவை கடந்த நான்கு வருடங்களாக தொடர்கிறது. சமூகம் சார்ந்த பணிகளில் ஒரு பகுதியாக இயக்கம் இதை செய்து வருகிறது.

சிவகங்கையில் டிட்டோஜாக் கூட்டம்

சிவகங்கையில் நடந்த டிட்டோஜாக் கூட்டத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொருளாளர் திரு.மோசஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் தமிழ்நாடு ஆரம்பப்ள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்

வருமானவரி கணக்கீட்டு படிவம்(IT) - 2014

1/10/2014

ஆசிரியர்களின் கட்டாய டியூஷன் - பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை

சென்னை: மாணவர்களிடம் கட்டணம் வசூலித்து, கட்டாய டியூஷன் எடுக்கும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை எச்சரித்துள்ளது.
அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில், மாணவர்களிடம் கட்டணம் வசூலித்து, கட்டாய டியூஷன் எடுக்கும் வழக்கம், ஆசிரியர்களிடையே பரவலாக உள்ளது.
இதனால் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. டியூஷன் சேர முடியாத மாணவர்கள், ஒதுக்கப்படும் நிலை உருவாகிறது மற்றும் ஆசிரியர்களின் பணி அக்கறையும் குறைகிறது. தங்களிடம் டியூஷன் படிக்கும் மாணவர்களிடம் மட்டுமே அவர்கள் தனி அக்கறை காட்டுகின்றனர். பிற மாணவர்களை கண்டுகொள்ளாமல் விடும் சூழல் ஏற்படுகிறது.
எனவே, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் இத்தகைய நடவடிக்கைகளை ஆசிரியர்கள் கைவிட வேண்டும். இல்லையேல், அத்தகையோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை எச்சரித்துள்ளது.

ஆசிரியர் மீது சோடா பாட்டில் தாக்கு : ப்ளஸ் 2 மாணவர்கள் மீது வழக்கு

 
திருப்புவனம்: திருப்புவனம், அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியரை, மாணவர்கள், சோடா பாட்டிலால் தாக்கினர். காயமடைந்தவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 1,200 மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளியில், கழிப்பறை வசதி இல்லாததால், அருகில் உள்ள, வைகை ஆற்றுக்கு, மாணவர்கள் செல்கின்றனர். இதனால், சிலர், வகுப்புகளை புறக்கணிப்பதுடன், நாணல் செடிகளுக்குள் மறைந்து, தவறான செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால், ஆசிரியர்களுக்கும், பிளஸ் 2 மாணவர்களிடையே, அடிக்கடி மோதல் நடக்கிறது. ஒழுங்கீனமாக செயல்படும் மாணவர்கள் மீது, உதவித் தலைமை ஆசிரியர், பைரவரத்தினம், நடவடிக்கை எடுத்து வந்தார். இந்நிலையில், பைரவரத்தினம், நேற்று மதியம், 2:00 மணிக்கு, வீட்டில் இருந்து, இருசக்கர வாகனத்தில், பள்ளிக்கு சென்றார். திருப்புவனம் பெரியகோயில் முன் சென்ற போது, மாணவர்கள் சிலர், பைரவரத்தினத்தை, சோடா பாட்டிலால் தாக்கினர். இதில், தலையில் காயம் அடைந்தவர், அங்கேயே மயங்கி விழுந்தார். இதையடுத்து, பைரவரத்தினம், மதுரையில் உள்ள, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திருப்புவனத்தை சேர்ந்த, பிளஸ் 2 மாணவர்கள், ஆசிரியரை தாக்கியதாக, போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘கல்வி உரிமைச் சட்டத்தை 10 சதவீத பள்ளிகள் கூட பின்பற்றவில்லை

 
கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை 10 சதவீதப் பள்ளிகள்கூட பின்பற்றவில்லை என்று முன்னாள் துணைவேந்தர் முனைவர் வே.வசந்திதேவி கூறியுள்ளார். தி இந்து குழுமத்தின் `அரசியல் மற்றும் பொதுக்கொள்கை மையம்’ சார்பில் ‘இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட் டத்தை சிறப்பாக செயல்படுத்துவதில் பின்பற்ற வேண்டிய உத்திகள், ஏற்படும் தடைகள், உருவாகும் விளைவுகள்’ குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.இந்த கலந்துரையாடலை நெல் லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் வே.வசந்தி தேவி நெறிப்படுத்தினார்.இதில், ஹார்வர்டு பல்கலைக்கழக நிர்வாகவியல் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் அக்சய் மங்லா, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியும், அனைவருக்கும் கல்வி திட்டத் தின் (எஸ்.எஸ்.ஏ.) தமிழ்நாடு திட்ட இயக் குநருமான எம்.பி.விஜயகுமார், மூத்த கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலன், ‘எய்டு இந்தியா’ அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி பாலாஜி சம்பத் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த கலந்துரையாடலில் முனைவர் வசந்திதேவி பேசியதாவது:21-ம் நூற்றாண்டில் வல்லரசாக வேண்டும் என்ற கனவோடு இந்தியா செயல்பட்டு வருகிறது. அதேநேரத்தில், நம் நாட்டில் லட்சக்கணக்கான குழந் தைகள் கல்வி பெற முடியாத நிலையில் இருந்து கொண்டிருக்கிறார்கள். பொதுக்கல்வி முறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி.) கல்விக்கு 6 சதவீத நிதி ஒதுக்கீடு, அனைவருக்கும் தரமான கல்வி என்பன உள்பட பல்வேறு பரிந்துரைகளை கடந்த 1966-ல் கோத்தாரி கமிட்டி அரசுக்கு முன்வைத்தது. ஆனால், இன்றுவரை அனைவருக்கும் தரமான கல்வி கிடைத்த பாடில்லை.6 வயது முதல் 14 வயதுக் குட்பட்ட குழந் தைகள் கல்வி பெறுவதை உரிமையாக்கி இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், அதன் இலக்கு இன்னும் நிறைவேறவில்லை. 10 சதவீத பள்ளிகள்கூட இந்த சட்டத்தை நடை முறைப்படுத்தவில்லை என்பது வருந்தத்தக்கது.அரசுப் பள்ளிகளில் இலவசமாக கல்வி வழங்கப்படுகிறது. ஆனால், இதைவிட்டு பணம் செலுத்தி படிக்கும் தனியார் பள்ளிகளைத்தான் பெற்றோர் நாடுகிறார்கள். தனியார் பள்ளிகளில் நடத்தப்படும் ஆங்கிலவழி வகுப்புகள் தான் இதற்குக் காரணம். அரசுப் பள்ளிகளில் இலவசமாக வழங்கப்படும் கல்வியை தரம் குறைந்த கல்வி என்றுதான் எல்லோரும் நினைக்கிறார்கள்.இவ்வாறு அவர் பேசினார். எஸ்.எஸ்.ராஜகோபாலன் எஸ்.எஸ்.ராஜகோபாலன் பேசுகையில், “அனைத்து ஏழைகளுக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற அர சியல் துணிவு அவசியம். காமராஜர் ஆட்சிக் காலத்தில் 98 சதவீத பள்ளிகள் அரசு பள்ளிகள்தான். ஆனால், இப்போது சமூக, பொருளாதார நிலைக்கு ஏற்ப, குழந்தைகள் வெவ்வேறு மாதிரியான பள்ளிகளில் சேர்க்கப்படுகிறார்கள். இதனால், பல்வேறு ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுகின்றன. அனை வருக்கும் தரமான கல்வி அளிக்க வேண்டி யது அரசின் தலையாய கடமை” என்றார். நீதிபதி கே.சந்துரு சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு பேசுகையில் “மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி 1975 அவசர நிலைக்குப் பிறகு பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது. ஏராளமான ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் தொடங்குவதற்கு அங்கீகாரம் அளித்து விட்டு இப்போது ஆசிரியர்களை தேர்வுசெய்ய தகுதித்தேர்வு நடத்துகிறார்கள். கல்வி நிர்வாகத்தை உள்ளாட்சி வசம் ஒப்படைக்க அரசு விரும்பவில்லை. அரசுப் பள்ளிகளில் பெயரளவுக்குத்தான் மாணவர் சேர்க்கை அதிக எண்ணிக்கையில் காட்டப்படுகிறது” என்றார்.முன்னதாக மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வி.எஸ்.சம்பந்தன் வர வேற்று அறிமுகவுரையாற்றினார்.