சிவகங்கையில் வருகிற பிப்ரவரி-2ந் தேதி மாலை 3.00 மணிக்கு டிட்டோஜாக் சார்பில் 7 அம்ச கேரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் பேரணி அரண்மனை வாசலில் தொடங்கி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நிறைவு அடைகிறது. இப்பேரணி முடிவில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத் துணைத் தலைவர் தோழர் ச.மயில் கலந்து கொண்டு நிறைவு பேரூரை ஆற்ற இருக்கிறார். ஆசிரியப் பேரினம் எழுச்சியுடன் பங்கேற்க இருக்கும் இப்பேரணியில் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி, தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் ஆகிய கூட்டணியைச் சார்ந்த ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர். கோரிக்கைகள் வென்றெடுக்க வாழ்த்துக்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக