பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Teto-Jac லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Teto-Jac லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

12/17/2015

ஜேக்டோ கூட்டம் முடிவுகள்

1. டிசம்பர் மாவட்ட மறியல் மழை வெள்ள பாதிப்பால் ஜனவரி 30, 31, மற்றும் பிப்ரவரி முதல் தேதிக்கு மாற்றம்.
2. மாவட்ட ஜேக்டோ கூட்டத்தை உடனடியாக கூட்டுதல்
3. மாநில உயர்மட்ட ஜேக்டோ அடுத்த கூட்டம் வருகிற ஜனவரி 10ந் தேதி திருச்சியில் கூட்டுவது என முடிவாற்றப்பட்டது.
4. ஜனவரி 27, 28, 29 ஆகிய தேதிகளில் ஆசிரியர் சந்திப்பு
5. அரசு உத்தரவிடாமல் சில மாவட்டங்களில் அக்டோபர் 8 வேலை நிறுத்த ஊதியம் பிடித்ததை இயக்குநரிடம் முறையிடுவது
6. அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மாநில திட்ட இயக்குனரின் ஆசிரியர் விரோதபோக்கு குறித்து நேரிடையாக இன்றே சந்தித்து முறையிடுவது  உள்ளிட்ட முடிவுகள் முடிவாற்றப்பட்டன.

தகவல்: திரு.பாலச்சந்தர், மாநிலப்பொதுச்செயலாளர், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
பகிர்வு: முத்துப்பாண்டியன், மாவட்டச் செயலாளர், சிவகங்கை மாவட்டம்

மழை வெள்ள பாதிப்பால் ஜேக்டா மாவட்ட மறியல் தேதி ஒத்தி வைப்பு

மழை வெள்ள பாதிப்பால் ஜேக்டோ சார்பாக டிசம்பர் மாதத்தில் நடைபெற இருந்த மாவட்ட மறியல் வருகிற ஜனவரி 30, 31 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய தேதிக்கு ஒத்தி வைத்து மாநில ஜேக்டோ கூட்டத்தில் இன்று முடிவாற்றப்பட்டது.

10/13/2015

ஜேக்டோ பொதுக்குழு கூட்டம்

ஜேக்டோ பொதுக்குழு கூட்டம்

ஜேக்டோ(JACTTO) மாநிலப் பொதுக்குழு கூட்டம் வருகிற 31.10.2015 அன்று சனிக்கிழமை சென்னையில்

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,
மாநிலப் பொதுச் செயலாளர்
தோழர் செ.பாலச்சந்தர்
 தலைமையில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் ஒவ்வொரு இயக்கங்களின் மாநிலத் தலைவர், பொதுச்செயலாளர் மற்றும் மாநிலப் பொருளாளர் கலந்து கொள்ள இருக்கின்றனர். இக்கூட்டம் சென்னை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அலுவலகத்தில் நடைபெற உள்ளது. வேலை நிறுத்தத்திற்கு பின்பு நடைபெறும் முதல் பொதுக்குழு என்பதால் அதி முக்கியத்துவம் வாய்ந்த கூட்டமாக கருதப்படுகிறது.


ஒற்றுமையின் பலத்தை அரசுக்கு உணர்த்துவோம்...
உரிமையை போராடி பெறுவோம்...
வெற்றி எட்டும் தூரத்தில்

தொடர்ந்து உன்னோடு பயணிப்பேன்...

தோழமையோடு...
ஆ.முத்துப்பாண்டியன்
TNPTF மாவட்டச்செயலாளர்
ஜேக்டோ மாவட்ட உயர்மட்டக்குழு உறுப்பினர்

10/06/2015

முகவரி இல்லாமல் முணுமுணுப்பவரின் முகத்திரையை கிழித்தெறிந்து உண்மையை உணர்த்திடு தோழா...


இனிய தோழமையே...
ஜேக்டோ வேலை நிறுத்த களப்பணியில் நீ களைத்திருக்கும் வேலையில் முகவரியில்லா சங்கங்களை வைத்து வேலை நிறுத்தம் வாபஸ் என்று ஊடகங்களில் அளிக்கும் பேட்டிதான் இந்த ஆண்டின் தலை சிறந்த நகைச்சுவையாக இருக்கும் என்பதை நீ அறிவாய். கடந்த இரண்டு நாட்களாக நாம் இதுவரை அறிந்திராத பெயர்களில் சங்கம் என்ற பெயரில் நாங்கள் ஜேக்டோ வேலை நிறுத்தத்தில் பங்கேற்க போவதில்லை என்ற அறிவிப்புகள் நம் வீட்டு மழலைகளின் ஏளனத்திற்கு சிரிப்புக்கும் ஆளான செய்தி நீ அறிவாய்.
ஜேக்டோவின் உறுதியை அறிந்த அரசு ஆளே இல்லாத இயக்கங்களின் தலைவர்களை வைத்து வாபஸ் நாடகத்தை அரங்கேற்ற துவங்கியுள்ளது. ஒரு பக்கம் பேச்சு வார்த்தை மறுபக்கம் குழப்பம் விளைவிக்கும் போக்கு. தனிச்சங்க நடவடிக்கையிலேயே இந்த சூட்சமத்தையெல்லாம் உடைந்தெறிந்த உனக்கு இன்று அசுர பலத்தோடு களம் காணும்பொழுது இதெல்லாம் ஒரு பொருட்டேயில்லை என்பதை நானறிவேன். இருந்தாலும் வதந்திகளுக்கு வரப்பில்லை. வாய்ப்பு கிடைக்குமிடமெல்லாம் அது வழிந்தோடும் என்பதால் நீ கொஞ்சம் கவனத்தோடு களப்பணியாற்று. இரண்டு நாட்களாக உனது ஆசிரியர் சந்திப்பில் 100 சதவீத ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கிறார்கள் என்ற மகிழ்வான செய்தி அறிந்து நானும் பெருமையடைந்தேன். உளவு துறை மூலம் அரசின் செவிகளுக்கும் இது எட்டியுள்ளது என்பதுதான் உண்மை.
  இடைநிலை ஆசிரியர்களின் துயர் துடைக்க பிறந்த அவதாரம் என்று தன்னை பிரகடனம் செய்துள்ளவர்களின் இன்றைய டி.வி. பேட்டி அவர்களின் முகத்திரையை கிழத்தெறிந்து உண்மை முகத்தை இந்த உலகிற்கு காட்டியுள்ளது. பழமைவாத சங்கங்கள் என்று நம்மைப்பற்றி குறை கூறி நம்மை போன்ற இடைநிலை ஆசிரியரியர்களை ஏமாளியாக்க ஆடிய கபட நாடகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 15 அம்ச கோரிக்கையில் நமது பிரதான கோரிக்கையான இடைநிலை ஆசிரியரின் தர ஊதிய மாற்றம், எதிர் கால வாழ்க்;கையை கேள்வி குறியாக்கும் தன்பங்கேற்பு ஓய்வூதிய திட்டம ஒழிப்பு இருந்தபொழுதும் ஏன் இந்த எதிர் சவுடால்.
ஒன்றை மட்டும் சக ஆசிரியர்களுக்கு தெளிவு படுத்த மறந்து விடாதே. ஊடகங்கள் வாயிலாக வேலை நிறுத்தம் வாபஸ் மற்றும் பங்கேற்க போவதில்லை என்று வெற்று அறிவிப்புகள் வெளியிடும் சங்கங்கள் எதுவும் ஜேக்டோவில் இல்லையென்ற உண்மையையும், இவைகள் ஆளும் கட்சிகளாக வரும் அரசியல் தலைவர்களின் அடிவருடிகளாக மாறி ஆசிரியர்களின் நலன்களுக்கு எதிராக நடக்கும் பகல் வேடதாரிகள் என்பதை மட்டும் தெளிவு படுத்து தோழா. அக்டோபர் 8 பதில் சொல்லட்டும்.
உண்மையை உரக்கச் சொல்லுவோம்!!!  உரிமையைப் போராடி பெறுவோம்!!!
தொடர்ந்து உன்னோடு பயணிப்பேன்....
தோழனாக...
ஆ.முத்துப்பாண்டியன்
TNPTF மாவட்டச் செயலாளர் 
சிவகங்கை மாவட்

ஜேக்டோவிற்கு அனுப்பப்பட்ட அழைப்பு கடிதம்


ஜேக்டோ வேலை நிறுத்தத்தில் பங்கேற்பதால் பள்ளியை நடைமுறைப்படுத்த உதவி மற்றும் கூடுதல் உதவித் தொடக்கக்கல்வி அலுவலருக்கு கொடுக்கப்பட வேண்டிய மாதிரி கடிதம். அவசியம் ஏற்பட்டால் மட்டும்


10/05/2015

பேச்சு வார்த்தை நடத்த ஜேக்டோவுக்கு அவசர அழைப்பு

பேச்சு வார்த்தை நடத்த ஜேக்டோவுக்கு அவசர அழைப்பு

கல்வித்துறைச் செயலர் மதிப்புமிகு சபிதா அவர்கள் பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநருடன் இன்று மாலை அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். இதற்காக தொடக்கக்கல்வி இயக்குநர் அவசரஅவசரமாக சிவகங்கையிலிருந்து சென்னை புறப்பட்டார். ஆலோசனை கூட்டம் நிறைவடைந்த சிறிது நேரத்தில் ஜேக்டோ உயர்மட்ட குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு வந்தது. நாளை இயக்குநர் தலைமையில் முதல் கட்ட பேச்சு வார்த்தை நடைபெறுகிறது. பேச்சு வார்த்தையில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலப் பொதுச் செயலாளர் திரு.செ.பாலச்சந்தர் அவர்கள் அவசர பயணமாக கன்னியாகுமரியிலிருந்து சென்னை புறப்பட்டார். 
இயக்குநர் அளவிலான பேச்சுவார்த்தைக்கு பின்னால் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மதிப்புமிகு.சபிதா அவர்கள் ஜேக்டோவுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
ஒற்றுமையின் பலத்தை அரசுக்கு உணர்த்துவோம்...
உரிமையை போராடி பெறுவோம்...
வெற்றி எட்டும் தூரத்தில்
தொடரட்டும் வேலைநிறுத்த களப்பயணம்


தொடர்ந்து உன்னோடு பயணிப்பேன்...
தோழமையோடு...
ஆ.முத்துப்பாண்டியன்
TNPTF மாவட்டச்செயலாளர்
ஜேக்டோ மாவட்ட உயர்மட்டக்குழு உறுப்பினர்

3/07/2014

வேலை நிறுத்தத்தில் ஒரு இலட்சம் ஆசிரியர் பங்கேற்பு - டிட்டோஜாக் நன்றி அறிவிப்பு



சிவகங்கையில் ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் - தினமலர் செய்தி


1045 ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் வேலை நிறுத்தம்

கோரிக்கைகளை வலியுறுத்தி ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் நடத்திய ஒருநாள் வேலை நிறுத்தத்தில் சிவகங்கை மாவட்டத்தில் 1045 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
 இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டத்தைத் தொடர வேண்டும்,
ஆசிரியர் தகுதித் தேர்வினை ரத்து செய்ய வேண்டும், தொடக்கக் கல்வித் துறையில் தமிழ்வழியில் கல்வியைத் தொடர வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மற்றும் தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டனர்.
 சிவகங்கை மாவட்டத்தில் 851 ஆரம்பப் பள்ளிகள் உள்ளன. இப்போராட்டத்தையொட்டி 200 பள்ளிகளில் பதிலி ஆசிரியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இருப்பினும் 600க்கும் மேற்பட்ட பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாக செயல்பட்டன.
 Dinamani

ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் - தினமலர் நாளேடு


3/06/2014

பெருமை அடைகிறேன்

05.03.2014 தேர்தல் தேதி அறிவித்த மறு நொடியிலிருந்து டிட்டோஜாக் வேலை நிறுத்தத்தை வலுவிலக்கச் செய்ய எத்தனை புரளிகள். வேலை நிறுத்தம் இல்லை, தேர்தல் தேதியில் போராடினால் மீட்டெடுக்க முடியாத தண்டனை, ஊதிய வெட்டு, ஒழுங்கு நடவடிக்கை, முதல்வரின் கோபம், விடுமுறை விண்ணப்பம் கொடுக்காமல் போராடுவது தவறு, பலவித கற்பனைகளுடன் உலாவிய குறுந்தகவல்கள்......... அப்பாடா எத்தனை! எத்தனை!!......... நாம் பொறுமை காத்தோம்....... இனறைய வேலை நிறுத்தத்தில்  எழுச்சியுடன் பங்கெடுத்து முகத்தில் அறைந்தது போல் பதில் சொல்லிய இலட்சிய வேங்கைகளே பெருமை அடைகிறேன். தொடரட்டும் இலட்சிய பயணம்.........

3/04/2014

7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கல்வி ஆசிரியர்கள் 6ம் தேதி மீண்டும் ஸ்டிரைக்

மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 6ம் தேதி ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் 1 லட்சம் பேர் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளனர்.ஏற்கனவே கடந்த 26, 27 தேதிகளில் போராட்டம் நடந்த நிலையில் மீண்டும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் காரணமாக அன்று பள்ளிகளை மூடக்கூடாது என்றும், போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட உத்தரவுகளை தொடக்க கல்வி இயக்குநர் பிறப்பித்துள்ளார்.

தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குநரின் உத்தரவு:தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) மார்ச் 6ம் தேதி அன்று நடத்த உள்ள அடையாள வேலைநிறுத்தத்தின் காரணமாக எந்த பள்ளிகளும் மூடப்படக்கூடாது. மாற்று பணியில் மற்ற பள்ளிகளில் இருந்தும், வேலைநிறுத்தத்தில் கலந்துகொள்ளாத ஆசிரியர்களை கொண்டும் எழுத்து பூர்வமாக ஆணை அளித்து ஆசிரியர்களை பணியமர்த்தி வகுப்புகளை நடத்த வேண்டும்.வேலை நிறுத்தத்தில் கலந்துகொள்பவர்கள் பட்டியலை சேகரித்து போராடுவோர் எண்ணிக்கை விபரங்களை 6ம் தேதி காலை 10 மணிக்கு தொலைபேசியில் இயக்குநர் அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும். வேலை நிறுத்தத்தில் கலந்துகொள்ளும் ஆசிரியர்களுக்கு ஒரு நாள் ஊதியத்தை நிறுத்தம் செய்ய உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.

6ம் தேதி விடுப்பு விண்ணப்பம் பெறப்பட்டால் அதனை ரத்து செய்து ஆணை வழங்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.