கோரிக்கைகளை வலியுறுத்தி ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள்
நடத்திய ஒருநாள் வேலை நிறுத்தத்தில் சிவகங்கை மாவட்டத்தில் 1045
ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டத்தைத் தொடர வேண்டும்,
ஆசிரியர் தகுதித் தேர்வினை ரத்து செய்ய வேண்டும், தொடக்கக் கல்வித் துறையில் தமிழ்வழியில் கல்வியைத் தொடர வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மற்றும் தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டனர்.
சிவகங்கை மாவட்டத்தில் 851 ஆரம்பப் பள்ளிகள் உள்ளன. இப்போராட்டத்தையொட்டி 200 பள்ளிகளில் பதிலி ஆசிரியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இருப்பினும் 600க்கும் மேற்பட்ட பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாக செயல்பட்டன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக