பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
court news லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
court news லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

9/25/2014

ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கிய அரசாணை ரத்து

ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் தளர்வு வழங்கிய அரசாணையை மதுரை உயர் நீதிமன்ற கிளை ரத்து செய்தது.
ஆசிரியர் தகுதித்தேர்வில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கி அரசாணை வெளியிடப்பட்டது. இதனை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் தளர்வு வழங்கிய அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது.
“பல்வேறு தரப்பினரின் கோரிக்கையால் தகுதித் தேர்வில் 5 சதவீத தளர்வு வழங்கியதாக தமிழக அரசு கூறுவதை ஏற்க முடியாது. ஆசிரியர் தகுதித் தேர்வு முடிந்தபின்பு மதிப்பெண் தளர்வு வழங்கியது சரியல்ல. தகுதித்தேர்வை போட்டித்தேர்வு போன்று தமிழக அரசு கருதியுள்ளதை ஏற்க இயலாது. சமூக நீதி என்பதை இதில் எதிர்பார்க்கவேண்டியதில்லை” என்று உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், மதிப்பெண் தளர்வு அரசாணைப்படி மதிப்பெண் சலுகை பெற்று பணி நியமனம் பெற்றவர்களை பணி நீக்கம் செய்யக்கூடாது என்றும் உத்தரவிட்டது.

9/22/2014

ஆசிரியர் தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் முறையை எதிர்த்து தொடர்ப்பட்ட வழக்குகள் தள்ளுபடி


ஆசிரியர் தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் முறையை எதிர்த்து தொடர்ப்பட்ட வழக்குகளை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது. தகுதித்தேர்வு மூலம் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. இந்த பணியை ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொண்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெறும் மதிப்பெண்ணுடன் அவர்கள் பிளஸ்-2, பட்டப்படிப்பு, பி.எட், ஆசிரியர் பயிற்சி படிப்பு போன்றவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தற்போது பணி நியமனம் நடைபெறுகிறது.
இந்த வெயிட்டேஜ் முறைக்கு ஆசிரியர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வெயிட்டேஜ் முறையில் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில் வெயிட்டேஜ் முறை, 5 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கு விசாரணையின் போது சென்னை ஐகோர்ட்டு, ஆசிரியர் தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் முறையை எதிர்த்து தொடர்ப்பட்ட வழக்குகள் அனைத்தையும் தள்ளுபடி செய்தது. 45- க்கும் மேற்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்யப்பட்டது. நிபந்தனைகளை ஏற்று தகுதித்தேர்வு எழுதிவிட்டு தற்போது எதிர்ப்பதை ஏற்க முடியாது என்று ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது. சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பின் மூலம் ஆசிரியர் நியமனத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீங்குகிறது

ஆசிரியர் நியமனம் வழக்கு தடை நீங்கியது.

TET சம்பந்தமான வழக்குகள்  அனைத்தும் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு. இதனால் ஆசிரியர்கள் பதவியேற்பதில் உள்ள தடை நீங்கியதாக தெரிகிறது.

9/17/2014

ET வழக்கு :5% தளர்வு G.O 71 குறித்த விசாரணை - தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு

G.O 71 க்கு எதிரான வாதம் 16.9.14 காலை 11 அளவில் வாதிகளின் சார்பாக 5 முக்கிய வழக்குரைஞர்களும் அரசு சார்பாக 5 வழக்குரைஞர்களும் ஆஜராகி வாதாடினார்கள்.
அமர்வு நீதிமன்றத்தில் மாண்புமிகு நீதிபதிகள் திரு.அங்கோத்ரி அவர்களும் திரு.மணிஷ்குமார் அவர்களும் வழக்கை விசாரித்தனர். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தது .அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்தது. இதற்கு மேல் வாதங்கள் கிடையாது.மேலும் யாரேனும் கருத்து தெரிவிக்க விரும்பினால் எழுத்து பூர்வமாக மட்டுமே அளிக்க வேண்டும் என நீதிபதி கூறினார்தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு

9/16/2014

TET தற்போதைய நிலவரம் (16.9.2014)

இன்று காலை 11 அளவில் TET குறித்த விவாதம் நடைபெறத் துவங்கியது.வாதிகளின் சார்பாக 5 முக்கிய வழக்குரைஞ்சர்களும் அரசு சார்பாக 5 வழக்குரைஞ்சர்களும் ஆஜராகி வாதாடினார்கள்.அமர்வு நீதிமன்றத்தில் மாண்புமிகு நீதிபதிகள் திரு.அங்கோத்ரி அவர்களும் திரு.மணிஷ்குமார் அவர்களும் வழக்கை விசாரித்தனர்.
காலையில் 5% தளர்வு முன் தேதியிட்டு வழங்கியது செல்லாது என்று வாதாடிய வழக்குரைஞ்சர்களுக்கு 5% தளர்வு வழங்குவதும் வழங்காததும் அரசின் கொள்கை முடிவு என்று நீதிபதிகள் தீர்க்கமான வார்த்தைகளை உதிர்த்ததாக தெரிகிறது.எனவே 5% தளர்வு குறித்துயாரும் பயம் கொள்ள வேண்டாம்.
அடுத்து G.O 71 க்கு எதிரான வாதம்.இந்த வாதத்தின் போது தமிழகத்தில் பல்வேறு பாடத்திட்டம்(syllabus) பின்பற்றப்பட்டு பல்வேறு வகையான வழியில்(medium-CBSC,STATE BOARD.......like that) கல்வி கற்பிக்கப் படுகிறது.எனவே weightage முறையில் அவர்கள அனைவரையும் ஒரே மாதிரி கணக்கில் கொள்வது தவறு என்று வாதிகளின் வழக்குரைஞ்சர்கள் வாதாடினார்கள். அதற்கு மறுப்பு தெரிவித்த மாண்புமிகு நீதிபதிகள், பிற கலந்தாய்வுகளின் பொழுது CBSC க்கு தனியானதொரு கலந்தாய்வும் state board க்கென ஒரு தனியான கலந்தாய்வும் நடைபெறுகிறதா என்ற கேள்வியை அந்த வாதங்களை முன் வைத்த வழக்குரைஞ்சர்களிடமே முன் வைத்தார்.அதற்கு சில வினாடிகளுக்குப் பிறகு இல்லையென்றே பதில் வந்தது.அதைப்போலவே CBSC,STATE BOARD க்கு என தனித்தனியான weightage மதிப்பெண் வழக்கும் முறை கடைபிடிக்க முடியாது என நீதிபதி அவர்களே தெரிவித்துள்ளார்கள்.வாதிகளின் பல கேள்விகளுக்கு நீதிபதிகள் அவர்களே எதிர் கேள்வி கேட்டு நியாத்தை வெளிக்கொணர்கிறார்கள்.அரசு தரப்பில் வாதாடும் AG அவர்களும் இன்ன பிற வழக்குரைஞர்களும் சிறப்பாக வாதாடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.வாதங்கள் தற்பொழுதும் நடந்து கொண்டிருக்கிறது.

9/12/2014

பள்ளிகளில் நன்னெறிக் கல்வி - அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு

மதுரை: பள்ளி, கல்லூரிகளில் நன்னெறிக் கல்வி கற்பித்தலை துவக்கி, மாணவர்களுக்கு ஆலோசனை மையங்கள் அமைக்கக்கோரிய வழக்கில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
மதுரை அண்ணாநகர் ராஜேந்திரன் தாக்கல் செய்த பொது நல மனு: பள்ளிகளில் முன்பு நாட்டுப்பற்று, கலாசாரம், நீதி, நேர்மையை கற்பிப்பது வழக்கம். துவக்கத்திலிருந்து கடமை, சகிப்புத் தன்மை, பெண்களை மதிப்பது பற்றி கற்பிக்க வேண்டும். தற்போது நன்னெறிக் கல்விக்கு (நீதி போதனை) முக்கியத்துவம் தருவதில்லை. பாடத்திட்டத்தில் உள்ளவற்றை கற்பிப்பதில் மட்டும் கவனம் செலுத்துகின்றனர். இதனால் சமூக முன்னேற்றம் தடைபட்டுள்ளது.
நன்னெறிக் கல்வி இல்லாததால், மாணவர்கள் மத்தியில் அனைத் திலும் குற்றம், குறைகாணும் தன்மை அதிகரித்துள்ளது. மேற்கத்திய கலாசாரம் நம் சமூகத்தில் ஊடுருவியுள்ளது. இதனால், சமூகத்தில் குற்றங்கள் அதிகரித்துள்ளன. திருமணங்கள் விவாகரத்தில் முடிகின்றன. எத்திசையில் பயணிப்பது என மாணவர்கள் விழிபிதுங்குகின் றனர். சகிப்புத் தன்மை, சமத்துவம் ஏற்பட வேண்டுமெனில் சமூக மாற்றத்திற்கான கமிஷன் அமைக்க வேண்டும்.
பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், கலெக்டர் அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்களில் ஆலோசனை மையங்கள் உருவாக்க வேண்டும். மேற்கு வங்கத்தில் பள்ளி, கல்லூரிகளில் நன்னெறிக் கல்வியை, மாநில அரசு அமல்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நன்னெறிக் கல்வி பெயரளவில் உள்ளது.
சமூக மாற்றத்திற்கான கமிஷன் அமைத்து, பள்ளி, கல்லூரிகளில் நன்னெறிக் கல்வி கற்பிக்கும் பணியை துவக்க வேண்டும். ஆலோசனை மையங்கள் அமைக்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எம்.ஜெய்சந்திரன், ஆர்.மகாதேவன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் சாமிதுரை ஆஜ ரானார். உயர்கல்வித்துறை செயலாளர், சமூக நலத்துறை செயலா ளருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்

9/03/2014

பணி நியமனம் பெற்ற ஆசிரியர்கள் பணியேற்க தடை. உச்ச நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு

TET Posting: Stary Order Issued For Paper1 & Paper2 Appointment - பணி நியமனம் நடைபெறக்கூடாது என மதுரை கிளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெட் வெயிட்டேஜ் முறைப்படி ஆசிரியர்களை பணிநியமனம் செய்வதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மதுரை கிளை நீதிமன்றம் இன்று உத்தரவு.
இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை பணி நியமனம் செய்யவதற்கான கலந்தாய்வு திட்டமிட்டபடி, நடத்த அனுமதி உண்டு. ஆனால் உரிய பணி இடத்தை தேர்ந்தெடுத்தவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கக்கூடாது என மதுரை கிளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Source: Facebook News

8/21/2014

டி.இ.டி. மதிப்பெண் சலுகை ரத்து கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

மதுரை: ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் சலுகை வழங்கிய உத்தரவை ரத்து செய்யக்கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
மதுரை, சொக்கிகுளம் ஜெயகிருஷ்ணா தாக்கல் செய்த மனு: ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி.) வெற்றிபெற 60 சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்.சி.டி.இ.) நிர்ணயித்தது.
இதில் அந்தந்த மாநிலங்களில் நிலவும் சூழ்நிலைக்கு ஏற்ப ஆதிதிராவிடர், பழங்குடியினர், இதர பிற்பட்டோருக்கு (ஓ.பி.சி.) மதிப்பெண் சலுகை வழங்கலாம் என உத்தரவிட்டது. 2011 ல் ஆதிதிராவிடர், பழங்குடியினர், ஓ.பி.சி., மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்க என்.சி.டி.இ. உத்தரவிட்டது.
தமிழகத்தில், 2012 ஜூலை 12 ல் முதன்முதலில் நடந்த டி.இ.டி. தேர்வில் 0.36 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இதனால் தமிழக அரசு மறு தேர்வு நடத்தியது. இட ஒதுக்கீடு அடிப்படையில் சலுகை பெற்ற பிரிவினருக்கு, 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கி 2014 பிப்.6 ல் தமிழக அரசு உத்தரவிட்டது.
தகுதியை நிர்ணயிப்பதற்கு மட்டுமே என்.சி.டி.இ.க்கு அதிகாரம் உள்ளது. மதிப்பெண் சலுகை வழங்க என்.சி.டி.இ. மற்றும் தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை. மதிப்பெண் சலுகை வழங்கிய என்.சி.டி.இ. மற்றும் தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
2013 ஆகஸ்டில் நடந்த டி.இ.டி. தேர்வு அடிப்படையில், பணி நியமனம் மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும். வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு, கற்பித்தல் அனுபவம் அடிப்படையில் வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி கே.கே.சசிதரன் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் எபனேசர் ஆஜரானார். நீதிபதி, "பணி நியமனம் இவ்வழக்கின் இறுதித் தீர்ப்பைப் பொறுத்து அமையும்" என்றதுடன், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை செயலாளர், என்.சி.டி.இ., ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர், தலைவருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

8/18/2014

அங்கீகாரமற்ற மழலையர் பள்ளிகள்: நடவடிக்கை எப்போது?- உயர் நீதிமன்றத்தில் அரசு கால அட்டவணை தாக்கல்

உரிய அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் மழலையர் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான கால அட்டவணையை தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இது தொடர்பாக சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.பாலசுப்பிரமணியன் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார்.
“தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்குபடுத்துதல் சட்டத்தின்படி, அரசு அங்கீகாரம் பெறாமல் எந்தத் தனியார்பள்ளியும் செயல்பட முடியாது. ஆனால், சென்னையில் 700-க்கும் மேற்பட்ட மழலையர் பள்ளிகள் அங்கீகாரம் இல்லாமல் செயல்படுகின்றன. அந்தப் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் மாணவர்களும் பெற்றோர்களும் பெரும் பாதிப்புகளை அடைந்துள்ளனர்” என்று அந்த மனுவில் அவர் கூறியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் ஏ.எல்.சோமையாஜி மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் குறிப்பிட்டிருந்ததாவது: அங்கீகாரம் பெறாமல் செயல்படும் பள்ளிகளுக்கு செப்டம்பர் 14-ம் தேதிக்குள் நோட்டீஸ் அனுப்பப்படும். அது தொடர்பாக அக்டோபர் 15-ம் தேதிக்குள் பள்ளிகள் பதிலளிக்க வேண்டும். பள்ளியை அங்கீகரிக்கும்படி கோரும் விண்ணப்பதையும் பள்ளிகள் அளிக்கலாம். சம்பந்தப்பட்ட கல்வித் துறை அதிகாரிகள் நவம்பர் 30-ம் தேதிக்குள் பள்ளிகளில் ஆய்வு நடத்தி, ஜனவரி 31-ம் தேதிக்குள் இறுதி உத்தரவுகளைப் பிறப்பிப்பார்கள். ஆய்வின்போது பள்ளிக்கு அங்கீகாரம் வழங்கும்படி உரிய முறையில் பள்ளி நிர்வாகங்கள் விண்ணப்பித்தால், அங்கீகாரம் வழங்குவது பற்றி கல்வித் துறை அதிகாரிகள் பரிசீலிப்பார்கள். அங்கீகாரம் பெறவே தகுதியில்லாத பள்ளி என தெரிய வந்தால், பள்ளியை மூடுவதற்கான நோட்டீஸை உடனடியாக அதிகாரிகள் விநியோகிப்பார்கள். அத்தகைய பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அருகேயுள்ள அரசு அல்லது தனியார் பள்ளிகளில் உடனடியாக அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.இதனையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது: அரசின் மனுவில் கூறியுள்ளவாறு நடவடிக்கை எடுத்தால் தங்களுக்கும் திருப்திதான் என மனுதாரர் தரப்பில் தெரிவித்துள்ளனர். ஆகவே, மனுவில் கூறியுள்ளவாறு கல்வித் துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் பள்ளிகள் தொடர்பாக அரசு பிறப்பிக்கும் அனைத்து சுற்றறிக்கைகளையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் ஹேமா சம்பத் கூறியுள்ளார். அதனை நாங்களும் ஏற்றுக்கொள்கிறோம். அனைத்து சுற்றறிக்கைகளும் 2 வாரங்களுக்குள் பதிவேற்றம் செய்யப்படும் என அரசு தலைமை வழக்கறிஞரும் உறுதி அளித்துள்ளார். இந்நிலையில் இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.

8/14/2014

பள்ளி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு அதிகாரம் உண்டு: உயர்நீதிமன்றம்

மதுரை: ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் உள்ள பள்ளி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க, கலெக்டருக்கு அதிகாரம் உள்ளது என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ், கன்னியாகுமரி பேச்சிப்பாறையில் அரசு பழங்குடியினர் உறைவிட மேல்நிலை பள்ளி உள்ளது. இங்கு ஆசிரியராக பணிபுரிந்தவர் ரசாலம். இவர், நாகர்கோவில் பஸ் ஸ்டாண்டில் இருந்த பிளஸ் 2 மாணவர்களை, கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று, போராட்டத்தை தூண்டினார் எனக்கூறி, கன்னியாகுமரி கலெக்டர் 2013 ல் சஸ்பெண்ட் செய்தார்.
இதை எதிர்த்து ரசாலம், என் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு அதிகாரம் இல்லை. ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிதான் நடவடிக்கை எடுக்க முடியும். விளக்கம் அளிக்க வாய்ப்பளிக்கவில்லை. கலெக்டர் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என, ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
நீதிபதி கே.கே.சசிதரன் முன், மனு விசாரணைக்கு வந்தது. கலெக்டர் தரப்பில், தேர்வு  சமயத்தில் மாணவர்களை படிக்கவிடாமல், கலெக்டர் அலுவலகம் அழைத்து வந்தார். இது நன்னடத்தையை மீறிய செயல் என வலியுறுத்தப்பட்டது.
நீதிபதி: கலெக்டர்தான் மாவட்டத்திற்கு தலைவர். அனைத்துத் துறைகளுக்கும் பொறுப்பானவர். பொதுத் தேர்வு துவங்க 5 நாட்களுக்கு முன்பு, மாணவர்களை கலெக்டர் அலுவலகத்திற்கு, மனுதாரர் அழைத்து வந்தது நன்னடத்தையை மீறிய செயல். இது பற்றி, குழந்தைகள் நலக்குழு, நேசமணி நகர் போலீசில் புகார் செய்துள்ளது.
மனுதாரர் மீது கலெக்டர் முதலில் நடவடிக்கை எடுத்தாலும், பின் ஆதிதிராவிடர் நலத்துறையின் ஒப்புதல் பெற்றுள்ளார். இதில் தவறு காண முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றார்.

7/17/2014

மாறுதலில் அநீதி: நீதி கேட்டு கண்ணகி போல் நீதிமன்றத்தில் வாதாடி வென்றார் ஆசிரியை சங்கீதா

ஆசிரியர் இட மாறுதல் கவுன்சிலிங்கில், பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் இனிமேல் அநீதி இழைக்க மாட்டார்கள் என நம்புவதாக, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. மதுரை பீ.பீ.குளம் சங்கீதா தாக்கல் செய்தமனு:சிவகங்கை புழுதிப்பட்டி அரசு உயர்நிலை பள்ளியில், பட்டதாரி ஆசிரியராகபணிபுரிகிறேன். ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் மூலம், மதுரை திருப்பாலை அரசு உயர்நிலை பள்ளிக்கு மாறுதல் செய்து 2012 ஜூலை 24 ல் உத்தரவிடப்பட்டது. 2012 ஆக.,22 வரை அப்பள்ளியில் நான் பணியில் சேரவில்லை எனக்கூறி, ஆசிரியை கிரிஜாவை அங்கு கல்வித்துறை அதிகாரிகள் இடமாறுதல் செய்தனர். கவுன்சிலிங் முடிவை அதிகாரிகள் மதிக்கவில்லை. கவுன்சிலிங் முடிவின்படி, திருப்பாலை பள்ளிக்கு இடமாறுதல் செய்து,பணியாற்ற அனுமதிக்க உத்தரவிட வேண்டும், என குறிப்பிட்டார். நேற்று முன் தினம் நீதிபதி எஸ்.நாகமுத்து, "மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மனுதாரர்இடமாறுதல் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்," என்றார்.நீதிபதி எஸ்.நாகமுத்து முன்,நேற்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டதால், மனுதாரரே ஆஜரானார். அவரை, திருப்பாலை அரசு உயர்நிலை பள்ளிக்கு மாறுதல் செய்து, அதற்கான உத்தரவை,முதன்மைக் கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி சமர்ப்பித்தார். இவ்வழக்கில், மனுதாரரான இப்பெண் தனக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து, உரிய ஆதாரங்களுடன் மூத்தவக்கீல் போல் வாதிட்டார். இது, 'சிலப்பதிகார'த்தில் கண்ணகி கால்சிலம்புடன் மதுரையில் நீதி கேட்டு,வாதாடியதுபோல் இருந்தது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இனிமேல், இதுபோன்ற அநீதியை இழைக்க மாட்டார்கள் என நம்புகிறேன். மனு பைசல் செய்யப்படுகிறது, என்றார்.

7/16/2014

கவுன்சலிங்கில் உத்தரவு வழங்கியும் பயனில்லை இடமாறுதல் பெற்ற பள்ளியில் வேறொரு ஆசிரியர் நியமனம்

மதுரை, பீ.பீ.குளம், சேக்கிழார் தெருவை சேர்ந்தவர் சங்கீதா. ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்திருந்த மனு: சிவகங்கை மாவட்டம் புழுதிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக (கணிதம்) 2008ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறேன். வயதான தாய், நோய் தாக்கமுள்ள குழந்தை ஆகியோரை உடன் இருந்து கவனிக்க வேண்டி இருந்தது. இதனால் மதுரை, திருப்பாலை அரசு உயர்நிலைப்பள்ளியில் புதிதாக துவக்கப்பட்ட பட்டதாரி கணித ஆசிரியர் பணியிடத்திற்கு மாற்றம் செய்ய கோரினேன். இதன்படி 24.7.2012ல் மதுரையில் நடந்த ஆசிரியர்களுக்கான கவுன்சலிங்கில் என்னை திருப்பாலை பள்ளிக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவு நகல் சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு (சிஇஓ) கிடைக்காததால் என்னை அங்கிருந்து விடுவிக்கவில்லை. ஆனால் 22.8.2012 வரை மாறுதல் செய்யப்பட்ட திருப்பாலை பள்ளியில் நான் பணியில் சேரவில்லை எனக்கூறி அந்த இடத்திற்கு திருச்சி மாவட்டத்திலிருந்து கிரிஜா என்பவரை மாற்றி உத்தரவிட்டுள்ளனர். கவுன்சலிங் உத்தரவை அதிகாரிகள் மதிக்கவில்லை. தினசரி 4 மணிநேரம் பயணிப்பதில் சிரமம் உள்ளது. எனவே என்னை கவுன்சலிங் உத்தரவுப்படி திருப்பாலை பள்ளிக்கு மாற்றி உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நேற்று நீதிபதி நாகமுத்து முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடப்பதால் மனுதாரரின் வக்கீல் ஆஜராகவில்லை. இதனால் ஆசிரியை சங்கீதா நீதிபதி முன் ஆஜராகி வாதாடினார். சிஇஓ நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட் டார். இதைத் தொடர்ந்து சிஇஓ ஆஞ்சலோ இருதயசாமி நீதிபதி முன் ஆஜராகி விளக்கமளித்தார். மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரர் குறிப்பிடும் புகார் உண்மையென தெரியவந்தால் நீதிமன்றம் கடும் நடவடிக்கையை எடுக்கும். லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டிய நிலை வரும். இந்த ஆசிரியைக்கு பணி மாறுதல் வழங்கப்பட்டது, தற்போதைய நிலை, மனுமீது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை ஆகியவை குறித்து மேலதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து நாளை (இன்று) நீதிமன்றத்தில் ஆஜராகி முழு அறிக்கையை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
 பெண்கள் அழக்கூடாது:வழக்கு விசாரணையில் நேரில் ஆஜராகிய ஆசிரியை சங்கீதா, நீதிபதி முன் கண்ணீர் விட்டு அழுதார். அப்போது பேசிய நீதிபதி, நீதிக்காக போராடிய கண்ணகி மதுரையை எரித்தார். எனவே பெண்கள் எதற்கும் அழக்கூடாது. போராட வேண்டும். அதுவும் ஆசிரியையாக இருப்பவர் அழக்கூடாது என்றார்

7/11/2014

60% குறைவான மதிப்பெண் பெற்றவர்களுக்கும் கல்விக் கடன் பெற உரிமை உள்ளது: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

12-ம் வகுப்பில் 60 சதவீதத்துக்கு குறைவான மதிப்பெண் பெற்றவர்களுக்கும், பி.இ. உள்ளிட்ட படிப்புகளுக்காக வங்கிகளிடம் கல்விக் கடன் பெற உரிமை உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
ஏ.ரவி என்பவரது மகன் 12-ம் வகுப்பில் 59 சதவீத மதிப்பெண்கள் பெற்று, நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ. படிப்பில் சேர்ந்தார். தனது மகனுக்கு பி.இ. பயில்வதற்காக ரூ.1 லட்சத்து 88 ஆயிரம் கல்விக் கடனாக வழங்கும்படி திருப்பூர் பெரமணல்லூரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ரவி விண்ணப்பம் அளித்தார்.
எனினும் 12-ம் வகுப்பில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்றும், மனுதாரரின் மகன் 59 சதவீத மதிப்பெண்கள் மட்டுமே பெற்றுள்ள தால் கல்விக் கடன் வழங்க முடியாது எனவும் ஐ.ஓ.பி. நிர்வாகம் மறுத்துவிட்டது.
இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் ரவி மனு தாக்கல் செய்தார். மனுதாரரின் மகனுக்கு கல்விக் கடன் வழங்கும்படி தனி நீதிபதி உத்தரவிட்டார். அதனை எதிர்த்து வங்கி நிர்வாகம் மேல் முறை யீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கள் என்.பால் வசந்தகுமார், எம்.சத்தியநாராயணன் ஆகி யோர் வங்கி நிர்வாகம் தாக்கல் செய்த மேல் முறை யீட்டு மனுவை தள்ளுபடி செய்து அண்மையில் தீர்ப்பளித்துள்ளனர்.
நீதிபதிகளின் தீர்ப்பில் கூறியுள்ளதாவது:
பொருளாதார ரீதியில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் உயர் கல்வி பயில வசதியாக தேசியமய மாக்கப்பட்ட வங்கிகள் மூலம் கல்விக் கடன் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்தக் கடன் இலவசமாக வழங்கப்படவில்லை. வட்டியுடன் சேர்த்து பிறகு மாணவர்கள் திருப்பி செலுத்தப்போகிறார்கள். பின் தங்கிய சமூகங்களைச் சேர்ந்தவர்களும் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் என்ற சமூக அக்கறையுடன் இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
அரசின் இந்தக் கொள்கையை மனதில் கொண்டு கல்விக் கடன் கோரும் விண்ணப்பங்கள் மீது வங்கி கள் முடிவெடுக்க வேண்டும். நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் உயர் கல்வி நிறுவனங் களில் சேரும் மாணவர்களுக்கும் கல்விக் கடன் பெற உரிமை உண்டு என்று கடந்த 27.9.2012 அன்று நடைபெற்ற பொதுத்துறை வங்கிகளின் தலைமை செயல் அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 15 முதல் 30 நாள்களுக்குள் கல்விக் கடன் விண்ணப்பங்கள் மீது முடிவெடுக்க வேண்டும் என்றும் அந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று 12-ம் வகுப்பு முடித்தவர்கள் நுழைவுத் தேர்வு மூலமாகவோ அல்லது 12-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலோ இந்தியாவில் அல்லது வெளிநாடுகளில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட உயர் கல்வி நிறுவனங்களில் சேரும்போது, அவர்களுக்கு கல்விக் கடன் வழங்கலாம் என்று இந்திய வங்கிகள் சங்கம் தகுதி நிர்ணயம் செய்துள்ளது.
இந்நிலையில் 12-ம் வகுப்பில் 60 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் கள் பெற்றவர்களுக்கு மட்டுமே கல்விக் கடன் வழங்க முடியும் என வங்கிகள் கூற முடியாது என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

5/22/2014

அரசு ஊழியர்களின் விடுமுறையைக் குறைக்கக் கோரி வழக்கு : தீர்ப்பு ஒத்திவைப்பு.

ஒரு ஆண்டுக்கு 196 நாட்கள் மட்டுமே அரசு ஊழியர்கள் பணிபுரிவதாகவும், சம்பளக் கமிஷன் பரிந்துரைப்படி விடுமுறை நாட்களை குறைக்கக் கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.
பொது நலன் மனுவில், அரசு ஊழியர்கள் சனி, ஞாயிறு என 104 நாட்களும், தேசிய மற்றும் பிற விடுமறைகள் 18ம், தற்செயல் விடுப்பு 15ம், ஈட்டிய விடுப்பு 15ம், மருத்துவ விடுப்பு 12 என மொத்தமாக ஒரு ஆண்டுக்கு 164 நாட்கள் விடுமுறை எடுக்கின்றனர். அதன்படி பார்த்தால் அவர்கள் ஆண்டுக்கு 196 நாட்கள் தான் பணியாற்றுகின்றனர். இது குறித்து 2008ஆம் ஆண்டு சம்பளக் கமிஷன் பரிந்துரையில், அரசு அலுவலகங்களில் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள விடுமுறை நாட்களை குறைக்க வேண்டும். விடுமுறையை 2 முதல் 8 நாட்களாக கட்டுப்படுத்த வேண்டும். தேசிய விடுமுறை (குடியரசு தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி) நாட்களின் போது மட்டும், அரசு அலுவலகங்கள் மூடப்பட வேண்டும் என பரிந்துரைத்தது என்று கூறப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த மதுரைக் கிளை நீதிபதிகள் என். கிருபாகரன், எஸ். வைத்தியநாதன் ஆகியோர் கொண்ட அமர்வு, இடைக்கால உத்தரவு பிறப்பிப்பதாகக் கூறி தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

கல்வித்துறை விதி எண் 76 மற்றும் 77 ன்படி, பள்ளிகளில் விடுமுறை நாட்களில் வகுப்பு நடத்த தடை கோரி வழக்கு

விடுமுறை நாட்களில் பள்ளிகளில் வகுப்பு நடத்த தடை கோரிய மனு மீது ஐகோர்ட்டில் விசாரணை நடந்தது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த அருண் என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொது நல மனு:தமிழகத்தில் அரசு, தனியார் மற்றும் அரசு உதவி பெறும் 15 ஆயிரம் பள்ளிகள் உள்ளன. இதில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் படிக்கின்றனர். பள்ளிகள் அனைத்தும் தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை இயக்குநரின் கட்டுபாட்டில் உள்ளன. பள்ளி கல்வி விதிப்படி ஒரு நாளைக்கு 5.40 மணி நேரத்திற்கு குறையாமலும், ஆண்டுக்கு 200 நாளும் பள்ளி நடக்க வேண்டும்.இதில் 180 நாட்கள் கல்வி கற்பிக்கவும், 20 நாட்கள் தேர்வுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன.&ஆனால் மெட்ரிக் பள்ளிகள் மற்றும் சில அரசு பள்ளிகளில் விடுமுறை நாட்களில் வகுப்பு நடக்கிறது. தனியார் பள்ளிகள் ரேங்க் பெறும் போட்டியில் 10ம் வகுப்பு பாடத்தை 9ம் வகுப்பிலும், 12ம் வகுப்பு பாடத்தை 11ம் வகுப்பிலும் நடத்துகிறார்கள். இதற்காக மாணவர்களை படிக்கும் இயந்திரமாக மாற்றுகிறார்கள். இதனால் ஏற்படும் மன அழுத்தத்தால் சில மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர்.சமச்சீர் கல்வியின் நோக்கம் பாதிக்கிறது. சில பள்ளிகளில் மாணவர்களுக்கு விடுப்பு தர மறுக்கின்றனர். எனவே நீதிமன்றம் தலையிட்டு கல்வித்துறை விதி எண் 76 மற்றும் 77 ன்படி, விடுமுறை நாட்களில் வகுப்பு நடத்த அனுமதிக்க கூடாது என மனுவில் கூறியிருந்தார்.இந்த மனுவை நேற்று நீதிபதிகள் என்.கிருபா கரன், எஸ்.வைத்தியநாதன் பெஞ்ச் விசாரித்தது. மனு குறித்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக கூறி ஒத்திவைத்தனர்.<

5/13/2014

இரட்டைப்பட்டம் வழக்கில் புதிய திருப்பம் - இரட்டைப்பட்டம் செல்லும் என் யு.ஜி;சி; அறிவிப்பு

இரட்டைப்பட்டடம் வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் தள்ளுபடியானதை தொடர்ந்து அதன் ஒருங்கிணைப்பாளர்கள் புது தில்லி உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இவ்வழக்கு உச்ச நீதி மன்றம் 6வது அமர்வில் நீதியரசர்கள் இரதாகிருஷ்ணன் மற்றும் விக்ராம் சிங்சென் முன்னிலையில் 25வது வழக்காக கடந்த 02.05.2014 அன்று விசாரணைக்கு வந்தது. இதில் அரசு மற்றும் பல்கலைகழக மானியக் குழுவிற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். வழக்கினை முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதியும், இன்றைய மூத்த வழக்குரைஞரான கிரி அவர்கள் பங்கேற்று வாதாடினார். வழக்கை ஏற்றுக்கொண்ட நீதி பதி அவர்கள் 7.5.2014 அன்று உத்தி வைத்தனர்.  வழக்கானது மீண்டும் 9.05.2014 அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அதில் பங்கெடுத்த யு.ஜி.சி. 10+2+3+1 என்ற அடிப்படையில் பயின்றால் அந்த படிப்பு தகுதியானது பதில் அளித்தது. இருந்தாலும் விரிவாக பதிலுரை தாக்கல் செய்ய கால அவகாசம் தேவைப்படுவதாக யு.ஜி.சி. கேட்டுக்கொண்டது.  தமிழக அரசும் கால அவகாசம் கேட்டுள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே உச்ச நீதி மன்றத்தில் வழக்கை தாக்கல் செய்த அனைவருக்கும் வழக்கு குறித்த விபரம் அனுப்ப நீதி மன்றம் முனைந்துள்ளது. அதன் பின் வழக்குரைஞர்கள் மூலம் உச்ச நீதி மன்றத்தை நாடியுள்ளவர்களின் பட்டியல் இறுதி செய்யப்படும்.
இது குறித்து இதன் ஒருங்கிணைப்பாளர் திரு.கலியமூர்த்தி அவர்கள் நம்மிடம் கூறியதாவது: இரட்டைப்பட்டம் வழக்கை உச்ச நீதி மன்றம் ஏற்றுக்கொண்டது என்பதே எங்களுக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறோம். ஏனென்றால் வழக்கியல் நியாயம் இல்லாமல் உச்ச நீதி மன்றம் எந்த வழக்கையும் ஏற்றுக்கொள்வதில்லை. இதில் யு.ஜி.சியும் எங்களுக்கு சாதகமாக பதில் அளித்துள்ளது. இதில் யாருடைய பதவி உயர்வையோ அல்லது பணியமர்த்துவதையோ தடுப்பது எங்கள் நோக்கம் அல்ல. ஆனால் அதே நேரத்தில் உச்ச நீதி மன்றத்தை நாடிள்ள அனைவருக்கும் 1.1.2012 முன்னுரிமையை பெறுவது என்பது உறுதியாகி விட்டது. எனவே நாங்கள் இந்த முறை உறுதியாக வெற்றியடைவோம்.  இது குறித்து இரட்டைப்பட்டம் படித்து பதவி உயர்வை தவறவிட்டவர்கள் மற்றும் ஆசிரியர் தகுதி தேர்வில் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களின் கூட்டம் சென்னை அல்லது திருச்சியில் தேர்தல் முடிவுக்கு பின்பு நடத்துவதற்கு ஆலோசணை செய்து வருகிறோம் என்றார். மேல் விபரங்களுக்கு கீழ் கண்ட தொடர்பாளர்களை தொடர்பு கொள்ளலாம்.
1. திரு. கலியமூர்த்தி - 9894718859 (விழுப்புரம்)
2. திரு.ஆரோக்கியராஜ் - 9942575162 (சிவகங்கை)
3.திரு.கணேஷ் -   9976105153 (சிவகங்கை)
4.திரு.கருணாலய பாண்டியன் - 9894192500 (திருவள்ளூர்)
5.திரு.இரவிச்சந்திரடுலு - 8608273362
6.திரு. விஸ்வநாத் - 9842942105

4/30/2014

ஆசிரியர் தகுதித் தேர்வு: வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடும் பழைய முறை ரத்து

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனத்துக்காக வழங்கப்படும் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் கணக்கிடும் பழைய முறையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், அடுத்த கல்வி ஆண்டுக்குள் புதிய அறிவியல் பூர்வ முறையை உருவாக்கி வெயிட்டேஜ் மதிப்பெண்கள் கணக்கிட தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த சி.பிரியவதனா உள்பட பலர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் என இரு பிரிவினருக்கு தனித்தனியாக மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
அதில், இடைநிலை ஆசிரியர்களுக்காக, மேல்நிலைப் படிப்புக்கு 10 சதவீத மதிப்பெண்ணும், டிகிரி படிப்புக்கு 15 சதவீத மதிப்பெண்ணும், ஆசிரியர் பட்டயப்படிப்புக்கு 15 சதவீத மதிப்பெண்ணும், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 60 சதவீத மதிப்பெண்ணும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதே போல், பட்டதாரி ஆசிரியர்களுக்காக,மேல்நிலைப் படிப்புக்கு 15 சதவீத மதிப்பெண்ணும், டிகிரி மற்றும் பி.எட். படிப்புக்கு 25 சதவீத மதிப்பெண்ணும், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 60 சதவீத மதிப்பெண்ணும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், 2012-ஆம் ஆண்டு அரசு ஆணையின் படி ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனத்துக்கான வெயிட்டேஜ் மதிப்பெண்களை ஆசிரியர் தேர்வு வாரியம் வழங்குகிறது.
அதில், இடைநிலை ஆசிரியர்கள் 90 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்றால், அதற்கு, 15 வெயிட்டேஜ் மதிப்பெண்கள், 80 முதல் 90 சதவீத மதிப்பெண்களுக்கு 12 வெயிட்டேஜ் மதிப்பெண்கள், 70 முதல் 80 சதவீத மதிப்பெண்களுக்கு, 9 வெயிட்டேஜ் மதிப்பெண்ணும், 60 முதல் 70 சதவீத மதிப்பெண்ணுக்கு 6 வெயிட்டேஜ் மதிப்பெண்ணும், 50 முதல் 60 சதவீத மதிப்பெண் பெற்றால் 3 வெயிட்டேஜ் மதிப்பெண்ணும் வழங்கப்படுகிறது.
இதே போன்று பட்டதாரி ஆசிரியர்களுக்கும் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.
இதன் மூலம், 80 முதல் 90 மதிப்பெண் பெற்றவருக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடுவதிலும், 90 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்தவருக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடுவதிலும் அதிக வேறுபாடு உள்ளது. அவ்வாறு வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடுவது தவறு.
அதனால், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடப்படும் முறையை மாற்ற வேண்டும். அதற்காக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.
மேலும், ஆசிரியர் தேர்வின் தேர்ச்சி வீதத்தில் வழங்கப்படும் 5 சதவீதத்தை ரத்து செய்ய வேண்டும் என சிலரும், 2012-ஆம் ஆண்டு முதல் தேர்ச்சியில் 5 சதவீதம் தளர்வு வழங்க உத்தரவிட வேண்டும் என சிலரும் மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் மீது நீதிபதி எஸ்.நாகமுத்து முன்பு விசாரணை நடந்தது. மனுதாரர் பிரியவதனா தரப்பில் வழக்குரைஞர் எஸ்.நமோநாராயணன் ஆஜரானார். அரசுத் தரப்பில் அரசு தலைமை வழக்குரைஞர் ஏ.எல்.சோமையாஜி ஆஜரானார்.
விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு: ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீதம் மதிப்பெண் தளர்வு வழங்குவது அரசின் கொள்கை முடிவு. அதில் நீதிமன்றம் தலையிட முடியாது.
மேலும், 5 சதவீத தளர்வை முன் தேதியிட்டு வழங்குமாறும் அரசுக்கு உத்தரவிட முடியாது. அவ்வாறு உத்தரவிட்டால் அதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்படும். எனவே, தேர்ச்சி சதவீதத்தை எதிர்த்து தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.
மேலும், 60 லிருந்து 69 சதவீதம் பெற்றவருக்கு ஒரு வெயிட்டேஜ் மதிப்பெண்ணும், 70 மதிப்பெண் பெற்றவருக்கு வேறொரு வெயிட்டேஜ் மதிப்பெண்ணும் கணக்கிடப்படுவதை ஏற்க முடியாது. அதில் நிறைய வேறுபாடுகள் உள்ளன.
ஒவ்வொருவரும் பெற்ற மதிப்பெண்ணுக்கேற்ப வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிட வேண்டும். அதில் அறிவியல் பூர்வ முறையை பின்பற்ற வேண்டும். அது தொடர்பாக நீதிமன்றம் ஒரு முறையை அரசுக்கு பரிந்துரை செய்கிறது.
அதை பின்பற்றினாலும் சரி அல்லது அரசு தரப்பில் வேறு ஒரு அறிவியல் பூர்வ அணுகுமுறையை கொண்டுவந்தாலும் சரி. அது தொடர்பாக புதிய அரசாணை வெளியிட வேண்டும். அரசு இந்த முறையை அடுத்த கல்வி ஆண்டுக்குள் கொண்டு வரும் என இந்த நீதிமன்றம் நம்புகிறது.
எனவே, வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடப்படும் பழைய முறை ரத்து செய்யப்படுகிறது என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது