பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
வாழ்த்துக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாழ்த்துக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

3/04/2015

அன்பான தேரழமைகளுக்கு!
 வருகிற  8.3.2015 அன்று ஜாக்டோ மாவட்ட பேரணி உள்ளதால் மாவட்டத்தில் உள்ள நமது அமைப்பின் ஆசிரியர்களை முழுமையாக பங்கேற்க உரிய முயற்சிகளையும், வட்டார கூட்டங்களையும் நடத்துமாறு வட்டாரச் செயலாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் மார்ச்-8 மகளிர் தினம் என்பதால் அன்று கொண்டாட வேண்டிய மகளிர் தின கருத்தரங்குகளை மார்ச் மாத இறுதிக்குள் எதாவது ஒரு தினத்தில் மாவட்ட அமைப்பின் வழிகாட்டுதல் படி நடத்துமாறு வட்டாரச் செயலாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் மாநில மகளிரணி நிர்வாகிகள் தங்கள் வட்டார நிகழ்வுகளில் பங்கேற்க வழிவகை செய்யப்படும்.


தோழமையுடன்..........
முத்துப்பாண்டியன்.ஆ
மாவட்டச் செயலாளர்
சிவகங்கை மாவட்டம்

1/31/2015

வெற்றிகரமாக நடந்தேறிய சிவகங்கை த.மு.எ.க.ச.மாவட்ட மாநாடு

சிவகங்கை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்ட மாநாடு திருப்பத்தூர் பிரபா செல்வி மஹாலில் இன்று சிறப்பாக நடந்தேறியது. வாழ்த்துரை வழங்க மாவட்ட அமைப்பால் அழைக்கப்பட்டிருந்தேன். விழாவிற்கு தோழர்களுடன் பயணம் செய்கையில் வட்டாரத்தலைவர் திரு.பாலகிருஷ்ணன் அவர்களின் தந்தையார் மறைவு செய்தி எட்டியது. எனவே இயக்க தோழர்களை உடனடியாக இறுதி சடங்கு வேலைகளை கவனிக்க பாதி வழியிலேயே திருப்பி அனுப்பிவிட்டு வட்டாரச் செயலாளர் திரு.பால்துரை, கூட்டுறவு சங்கத் தலைவர் திரு.சுரேஷ் ஆகியோருடன் திருப்பத்தூர் பயணமானோம். மாவட்ட மாநாட்டில் சிறப்பு அழைப்பாளாராக அழைக்கப்பட்டிருந்த மதிப்புமிகு தோழர் இரா.தெ.முத்து அவர்களை ரேடியாக சந்தித்தில் மிக்க மகிழ்ச்சி. அதிலும் அவரே எனக்கு கைத்தறி ஆடை போர்த்தி கௌரவித்தது, எனது அருகிலே அமர்ந்து மதிய உணவு அருந்தியது என இரட்டிப்பு மகிழ்வு. மாநாட்டில் வாழ்த்துரை வழங்கிய நான் சிங்கம்புணரியில் விரைவில் த.மு.க.எ.ச. கிளையை அமைப்பது எனவும், வருகிற மே-2015ல் சிங்கம்புணரி கிளையின் சார்பாக கலை இரவு நடத்துவது எனவும் உறுதியளித்துள்ளேன். எனவே தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தோழர்கள், கலை ஆர்வம் மிக்க நண்பர்கள் ஆதரவு தர வேண்டுகிறேன். மேலும் த.மு.எ.க.ச. தெருமுனை பிரச்சாரங்கள் மேற்கொண்டு இச்சமுதாயத்தை நல்வழி படுத்த வேண்டும் என்ற எனது அவாவையும் வெளிப்படுத்தியுள்ளேன். மேலும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் தோழர் ஜீவானந்தம் அவர்களுடன் நீண்ட நேரம் கருத்து பரிமாற்றம் செய்தது மகிழ்ச்சி அளித்தது. மாநாட்டை சிறப்பாக நடத்திய திருப்பத்தூர் கிளைக்கும், குறிப்பாக எமது அமைப்பின் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் தேழர் சிங்கராயருக்கும் பாராட்டுகள்.
மாவட்ட மாநாடு முடிவில்
மாவட்டத் தலைவராக ஜீவசிந்தன்,
செயலாளராக சங்கரசுப்பிரமணியன்,
பொருளாளராக செல்வக்குமார்,
துணைத்தலைவர்களாக குணசேகரன்,ராசேந்திரன்,செல்வகதிரவன்,
துனைச்செயலாளர்களாக ஜனநேசன்,தமிழ்கனல்,குமரேசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
தோழர்களுக்கு வாழ்த்துக்கள்.

1/20/2015

இயக்க பணி சிறக்க வாழ்த்துகிறோம்

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அருமை சகோதரர் தே.ஜோசப் ரோஸ் அவர்களின் இயக்க பணி சிறக்க வாழ்த்துகிறோம்.

9/22/2014

வாழ்த்துகிறோம்!!!

இன்று பிறந்தநாள் காணும்  TNPTF கல்லல் வட்டாரப் பொருளாளர் திரு.ஆரோக்கிய லூயிஸ் லெவே அவர்களை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வாழ்த்துகிறது. வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்ள 9487412927

6/19/2014

வாழ்த்துகிறோம்!!!

சிங்கம்புணரி ஒன்றியத்தில் உதவித் தொடக்கக்கல்வி அலுவலராக இன்று பணியேற்றுள்ள திரு.குமார் அவர்களின் பணி சிறக்க வாழ்த்துகிறோம்.


5/30/2014

TNPTF பாராட்டு

தமிழ்நாடுஆரம்பப்பள்ளிஆசிரியர்கூட்டணி மாநில செயற்குழு கூட்டத்தில் பணி நிறைவு பெற்ற தூத்துக்குடி மாவட்ட செயலாளர் தோழர் முத்தையா. தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் தோழர் குருசாமி ஆகியோருக்கு பாராட்டு விழா நடந்தது.



5/25/2014

இயற்கையை நேசிக்க இசையால் அசத்தும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்

இயற்கையை நேசிக்க இன்றைய தலைமுறைக்கு ஏற்ற  வகையில் எளிமையான பாடல்களில் ஒரு குறுந்தகட்டு ஆல்பத்தை வெளியிட்டு அசத்தி வருகிறார்கள் முக நூல் தோழர் மகேந்திர பாபு குழுவினர். நண்பர் மகேந்திர பாபு பாடல்கள் இயற்ற பாடிய அனைவரும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் என்பது நமக்கு கிடைத்த பெருமை. பள்ளிகளில் ஆண்டு விழாக்களில் பயன்படுத்தும் நோக்கில் லாப நோக்கமின்றி வெளியிட்டுள்ள இக்குறுந்தகட்டை அனைத்து ஆசிரியர் பெருமக்களும் ரூ50 சலுகை விலையில் வாங்கி ஆசிரியர் குழுவை பெருமை படுத்த வேண்டும். தோழர் மகேந்திரபாபு மற்றும் குழுவினர்க்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வாழ்துகளை தெரிவித்துக்கொள்கிறது.
தொடர்புக்கு: மு.மகேந்திர பாபு - 97861 41410

4/29/2014

தஞ்சை மாவட்ட செயலாளருக்கு பணி நிறைவு பாராட்டு விழா


இன்று பாவேந்தர் பிறந்த தினம்

பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து பெரும் புகழ் படைத்த பாவலர்.

இவருடைய இயற்பெயர் சுப்புரத்தினம். தமிழாசிரியராக பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக்கொண்டார்.

பாரதிதாசன் தம் எழுச்சி மிக்க எழுத்தால் புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் பரவலாக அழைக்கப்படுபவர்.

இவர் குயில் என்னும் கவிதை வடிவில் ஒரு திங்களிதழை நடத்தி வந்தார்.

3/27/2014

105வது ஆண்டு விழா சிறப்படைய வாழ்த்துகிறோம்.


  TNPTF சிவகங்கை மாவட்டச்செயலாளர் திரு.தாமஸ் அமலநாதன் அவர்கள் தலைமையாசிரியராக பணியாற்றும் காளையார் கோவில் கிழக்கு பள்ளியின் 105வது ஆண்டு விழா சிறப்படைய வாழ்த்துகிறோம்.