பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

மின்னஞ்சல் மூலம் பதிவுகளை பெறலாம்

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

7/22/2015

STFI


தினகரன் செய்தி வெளியீடு 18.7.2015


தொடக்கக்ல்வி இயக்குநர் மதிப்புமிகு இளங்கோவனுடன் 20.7.2015 அன்று சந்திப்பு


Dinathanthi News 22.7.2015

Dinamalar - 22.7.2015


Dinakaran 22.7.2015


Dinakaran 21.7.2015


7/14/2015

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ள மூன்றாண்டு முடித்திருக்க வேண்டும் என்ற அதிர்ச்சியான அறிவிப்புக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கடும் கண்டனம் - பத்திரிக்கைச்செய்தி


தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயற்குழுக் கூட்டம்

சிவகங்கையில், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.
   மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் தாமஸ் அமலநாதன் தலைமை வகித்தார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் புரட்சித்தம்பி முன்னிலை வகித்தார்.
 மாவட்டச் செயலர் முத்துப்பாண்டியன் தீர்மானங்களை முன் மொழிந்தார்.
 மாவட்டப் பொருளாளர் குமரேசன், மாவட்டத் துணைத் தலைவர் சூசைராஜ், மாவட்டத் துணைச் செயலர்கள்  ரவி, ராஜகோபால், மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள் ஞானஅற்புதராஜ், சிங்கராயர் உள்ளிட்ட மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
  கூட்டத்தில், எஸ்.எஸ்.ஏ. நடுநிலைப் பள்ளிகளைப் போல் எஸ்.எஸ்.ஏ. அல்லாத நடுநிலைப் பள்ளிகளுக்கும் தலா மூன்று பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கி ஆசிரியர்களை பதவி உயர்வில் நியமிக்க வேண்டும்.
  1997 முதல் 1999 வரை இடைநிலை ஆசிரியர் பணியிடத்தில் நியமிக்கப்பட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி பட்டதாரி ஆசிரியர்களுக்கு, உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் மற்றும் பதவி உயர்வு வழங்க வேண்டும்.
 61 மாணவர்கள் இருந்தால் மூன்று ஆசிரியர் என்பதை, 46 மாணவர்களுக்கு மூன்று ஆசிரியர் என மாற்றியமைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய தொழிற்சங்க சம்மேளனங்கள் செப்டம்பர் 2 ஆம் தேதி நடத்தும் அகில இந்திய வேலை நிறுத்தத்தில் இயக்கத்தின் அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

7/10/2015

சிவகங்கை மாவட்டத்தில் ஈடு செய் தற்செயல் விடுப்பு குழப்பத்திற்கு TNPTF முற்றுப்புள்ளி

சிவகங்கை மாவட்டத்தில் 2015-16ம் கல்வியாண்டில் கருத்தாய்வு மைய கூட்டத்தில் கலந்து கொண்டால் ஈடு செய் தற்செயல் விடுப்பு அனுமதிக்க இயலாது என தலைமையாசிரியர் கூட்டத்தில் தகவல் தெரிவித்ததாக நமக்கு இயக்க பொறுப்பாளர்கள் தகவல் தெரிவித்தனர். உடனடியாக மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் மற்றும் கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலருடன் தொலைபேசியில்  தொடர்பு கொண்டு இந்த கல்வியாண்டிற்கான தொடக்கக்கல்வி இயக்குநரின் வேலைநாள் டைரியில் கருத்தாய்வு மைய கூட்ட நாட்கள் சேர்க்கப்படவில்லை எனவும்,  CRC நாட்களை தவிர்த்து 220 பணி நாட்கள் வெளியிடப்பட்டுள்ளதை அவர்களின் கவனத்திற்கு தெரிவித்தோம். நமது நியாயமான கோரிக்கையை புரிந்துகொண்டு கருத்தாய்வு மைய கூட்டத்தில் கலந்து கொள்வபர்கள் அரசு விதிக்கு உட்பட்டு ஈடு செய் தற்செயல் விடுப்பு துய்க்கலாம் என தெரிவித்தார்கள். மேலும் இது குறித்து அனைத்து உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கும் தகவல் தெரிவிப்பதாக உறுதியளித்தார்கள்.
 தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கோரிக்கையை ஏற்று நடைமுறைப்படுத்திய
மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் மற்றும் கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் ஆகியோர்க்கு நன்றி.

உண்மையை உரக்கச் சொல்லுவோம்!!!
உரிமையைப் போராடி பெறுவோம்!!!

தோழமையுடன்...
முத்துப்பாண்டியன்.ஆ
மாவட்டச் செயலாளர்
TNPTF - Sivaganga

சிவகங்கை மாவட்டச் செயற்குழு கூட்டம் - தினத்தந்தி செய்தி வெளியீடு (10.7.15)

7/07/2015

சிவகங்கை மாவட்டச் செயற்குழு முடிவுகள் (4.7.2015)

தலைமை: ஆ.தாமஸ் அமலநாதன், மாவட்டத் தலைவர்
1.    திருப்புவனம் வட்டாரத்தலைவர் திரு.ஜான் கென்னடி அவர்களின் தந்தை திரு.சீனியப்பன், வட்டாரப் பொருளாளர் திரு.வேதக்கண்ணு அவர்களின் தந்தை திரு.சாமிதாஸ், மாவட்டத் துணைத் தலைவர் திரு.சூசைராஜ் அவர்களின் சகோதரர் திரு.ஆச்சரியம், சிவகங்கை ஒன்றிய ஓய்வறியா உறுப்பினர் திருமதி.புனிதா ஆகியோரின் மறைவிற்கு இச்செயற்குழு  மௌன அஞ்சலி செலுத்துகிறது.
2.    மாவட்டப் பொருளாளரால் படைக்கப்பட்ட 10.11.2014 முதல் 30.06.2015 வரை உள்ள வரவு செலவுகளை இம்மாவட்டச் செயற்குழு ஏகமனதாக ஏற்பு செய்கிறது.
3.    இயக்கத்தின் வங்கி கணக்கை புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்டத் தலைவர் திரு.தாமஸ் அமலநாதன் மற்றும் மாவட்டப் பொருளாளர் திரு.குமரேசன் ஆகியோருக்கு மாற்றம் செய்திட இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
4.    இளையான்குடி வட்டாரக் கூட்டத்தினை மாவட்டத் துணைச் செயலாளர் திரு.இராஜகோபால் அவர்களும், சாக்கோட்டை வட்டாரக் கூட்டத்தினை மாவட்டத் துணைத் தலைவர் திரு.சூசைராஜ் அவர்களும் சம்பந்தப்பட்ட வட்டார நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து விரைவில் கூட்டுவதற்கும், அக்கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கவும் இச்செயற்குழு முடிவாற்றுகிறது.
5.    ஜூன்-10 ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்திட களப்பணியாற்றிய அனைத்து நிர்வாகிகளையும் இச்செயற்குழு பாராட்டுகிறது.
6.    மாவட்டத் தணிக்கை முடிப்பதற்கு ஏதுவாக அனைத்து வட்டாரங்களும் 2014-15ம் ஆண்டிற்கான வரவு-செலவுகளை வட்டாரச் செயற்குழுவின் ஒப்புதலுக்கு உட்படுத்தி வரும் ஜூலை-23க்குள் தங்கள் கிளையின் தணிக்கையினை நிறைவு செய்து முடிக்க இச்செயற்குழு முடிவாற்றுகிறது.
7.    இயக்க இதழ் சந்தாதாரர்களை உயர்த்த வேண்டிய நடவடிக்கைகளை முடுக்கி விட வட்டார நிர்வாகிகளை இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
8.    2015-16ம் ஆண்டிற்கான உறுப்பினர் சேர்க்கையை விரைந்து முடித்து ஆகஸ்ட்-30ஃ2015க்குள் பட்டியலுடன் உரிய பங்கு தொகையையும் செலுத்த வேண்டும் என இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
9.    ளுளுயு நடுநிலைப்பள்ளிகளைப் போல் ளுளுயு அல்லாத நடுநிலைப்பள்ளிகளுக்கும் தலா மூன்று பட்டதாரி ஆசிரியர் பணியி;டங்களை உருவாக்கி ஆசிரியர்களை பதவி உயர்வில் நியமிக்க வேண்டும் என இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
10.    1997 முதல் 1999 வரை இடைநிலை ஆசிரியர் பணியிடத்தில் நியமிக்கப்பட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின பட்டதாரி ஆசிரியர்களுக்கு உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் மற்றும் பதவி உயர்வு வழங்க வேண்டும்.
11.    உயர்கல்வி பயின்ற ஆசிரியர்களுக்கு பின்னேற்பு வழங்கிட தொடக்கக்கல்வி இயக்குனர் அரசாங்கத்திடம் அனுமதி பெற்றுத் தர வேண்டும் எனவும் இதை மாநில மையம் வலியுறுத்த வேண்டுமெனவும் இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
12.    பி.லிட்., பட்டம் பெற்று நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியராக பதவி வகிக்கும் ஆசிரியர்களுக்கு பி;எட்., பயின்றமைக்கு  ஒரு ஊக்க ஊதியம் வழங்கிட வேண்டும்.
13.    61 மாணவர்கள் இருந்தால் மூன்று ஆசிரியர் என்பதை மாற்றி கல்வி சூழல் சிறப்பாக அமைய 46 மாணவர்களுக்கு மூன்று ஆசிரியர் என மாற்றியமைத்திட வேண்டும் என இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
14.    தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை கை விடல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்க சம்மேளனங்கள் செப்டம்பர்-2ஃ2015ல் நடத்தும் அகில இந்திய வேலை நிறுத்தத்தில் இயக்கத்தின் அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்பது என முடிவாற்றப்படுகிறது.
------------உண்மை நகல்------------

இன்று (7.7.2015) காலை 11.00 மணிக்கு தொடக்கக்கல்வி இயக்குநருடன் TNPTF மாநிலப் பொறுப்பாளர்கள் சந்திப்பு.

இன்று சென்னையில் தொடக்கக்கல்வி இயக்குநர் மதிப்புமிகு இளங்கோவன் அவர்களை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலப்பொதுச் செயலாளர் திரு.பாலச்சந்தர், மாநிலத் தலைவர் திரு.மோசஸ், மாநிலத்துணைத் தலைவர் திரு.ஜோதிபாபு மற்றும் நாமக்கல், திருவண்ணாமலை மாவட்ட பொறுப்பாளர்கள் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் குறித்த விவாதித்தனர். இயக்குநர் அவர்கள் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்கள்.

1. தமிழகத்தில் இணையவழி ஊதிய பரிமாற்றம் (E-pay) அமுல்படுத்தப்பட்டதால் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாததந்திர ஊதியம் பெறுவதில் உள்ள கால தாமதத்தையும், அதற்கு காரணமான உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்கள் உரிய பணியினை மேற்கொள்ள மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர்கள் அறிவுரை வழங்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டது.

2. உயர்கல்விக்கல்விக்கு பின்னேற்பு வழங்குவது குறித்து அரசிற்கு 23458/E/2015 நாள் 6.7.2015 நாளிட்ட கடிதம் மூலமும், ஈரோடு மேகலா தேவிக்கு 5784/E2/2015 நாள் 29.6.2015 நாளிட்ட கடிதம் மூலமும் அனுப்பியுள்ளதாக இயக்குநர் தெரிவித்தார்கள்.

3. திருவள்ளூர் - திருவலங்காடு, திருவண்ணாமலை - மேற்கு ஆரணி, ஜவ்வாது மலை ஆகிய ஒன்றியங்களின் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்களின் ஊழியர் விரோதபோக்கின் மீது நடவடிக்கை எடுக்க கோரப்பட்டது.

4. திருப்பூர் மாவட்டத்தில் ஆசிரியர்கள் மீது பழிவாங்கும் விதமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை உடனடியாக திரும்ப பெற வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டது.

5. விருதுநகர் - வெம்பக்கோட்டை சுரேஷ்குமார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது.

6. எஸ்.எஸ்.ஏ பள்ளிகளுக்கு வழங்கியது போல் எஸ்.எஸ்.ஏ. அல்லாத நடுநிலைப்பள்ளிகளுக்கும் மூன்று பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வழங்கவேண்டும் என்ற சிவகங்கை மாவட்டச் செயற்குழு முடிவுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

7. கோவை மாவட்டம் வால்பாறை தலைமையாசிரியரின் நிர்வாக மாறுதலுக்கு முன்னுரிமை, தொண்டாமுத்தூர் இரட்டைப்பட்ட முன்னுரிமை, அன்னூர் ஆசிரியர் சேமநலநிதி கணக்கில் உள்ள குறைபாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

8. இடைநிலையாசிரியர் பணியிடத்தில் பணியமர்த்தப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பெற்ற உயர்கல்விக்கு ஊக்க ஊதியம் மற்றும் பதவி உயர்வு வழங்க வேண்டுமென்ற நமது நீண்ட நாள் கோரிக்கை குறித்து அரசிற்கு தாம் கடிதம் எழுதியுள்ளதாக இயக்குநர் அவர்கள் தெரிவித்தார்கள்.

9. திருவண்ணாமலைTPF கணக்கு, தூத்துக்குடி  - விளாத்திகுளம் தலைமையாசிரியர் பணியிடம், கண்ணியாகுமரி - குளச்சல் தனியார் பள்ளி பணியிடம், விருதுநகர் -திருச்சுழி இருசக்கர வாகன முன்பணம், திண்டுக்கல் - குஜிலியம்பாறை கோம்பை பள்ளிக்கு பட்டதாரி ஆசிரியர் பணியிடம் குறித்து விவாதிக்கப்பட்டது.

10. பணி மூப்பு பட்டியலில் இரமநாதபுரம் - மண்டபம், கோவை - தொண்டாமுத்தூர், நாமக்கல் - பள்ளிபாளையம், திருநெல்வேலி - நாங்குநேரி உள்ளிட்ட ஒன்றியங்களில் உள்ள பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

தகவல் பகிர்வு:
முத்துப்பாண்டியன்.ஆ
TNPTF மாவட்டச் செயலாளர்

7/01/2015

சிவகங்கை மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலருடன் TNPTF பொறுப்பாளர்கள் சந்திப்பு


தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, சிவகங்கை மாவட்ட பொறுப்பாளர்கள் நேற்று(29.6.15) மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் திரு.அப்துல் ரஹீம் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். புதிதாக பொறுப்பேற்றமைக்கு வாழ்த்து தெரிவித்ததோடு மாவட்டத்தில் பல்வேறு ஒன்றியங்களில் உள்ள பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அனைத்தையும் பொறுமையுடன் உள்வாங்கி கொண்டு கோரிக்கைகள் நிறைவேற்றுவதற்கு முழு உத்தரவாதம் அளித்தார்கள்.

மேலும் திருப்பத்தூர் ஒன்றியத்தில் முறையான விசாரணையின்றி ஒரு பெண் ஆசிரியை பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளது குறித்து இயக்கம் தன்னுடைய கடுமையான அதிருப்தியை பதிவு செய்தது. இச்செயல் வருங்காலத்தில் எந்த ஆசிரியரையும் விசாரணையின்றி பணி நீக்கம் செய்ய வழி வகுக்கும், எனவே இது குறித்து மீளாய்வு செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது.
திருப்புவனம் ஒன்றியத்தில் பழையூர் நடுநிலைப்பள்ளியின் பட்டதாரி ஆசிரியர்களின் முறையற்ற பணிக்கலாச்சாரம் குறித்து முறையிடப்பட்டது. அப்பள்ளியின் கல்விச்சூழல் சுமூகமாக அமைய தக்க நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்ளப்பட்டது.
சிங்கம்புணரி உதவித் தொடக்கக்கல்வி அலுவலகத்திற்கு இயக்கத்தின் கடுமையான முயற்சியால் பேரூராட்சி நிர்வாத்திடம் இருந்து பெறப்பட்ட நிலத்தில் உடனடியாக அலுவலகம் கட்ட நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்ளப்பட்டது.
அனைத்து உதவித் தொடக்கக்கல்வி அலுவலகங்களிலும் காலிப்பணியிட விபரம் மற்றும் ஆசிரியர்களின் குழு பட்டியல் விபரம் வெளியிட ஆவண செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டது.
மேலும் பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இச்சந்திப்பில் மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன், மாவட்ட பொருளாளர் குமரேசன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் புரட்சித்தம்பி, மாநிலப்பொதுக்குழு உறுப்பினர் சிங்கராயர், சிவகங்கை வட்டாரச் செயலாளர் ஜெயக்குமார், பொருளாளர் பாலமுருகன், திருப்புவனம் செயலாளர் சத்தியேந்திரன், தலைவர் ஜான் கென்னடி மற்றும் பல்வேறு வட்டார நிர்வாகிகள் பங்குபெற்றனர்.