தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, சிவகங்கை மாவட்ட பொறுப்பாளர்கள் நேற்று(29.6.15) மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் திரு.அப்துல் ரஹீம் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். புதிதாக பொறுப்பேற்றமைக்கு வாழ்த்து தெரிவித்ததோடு மாவட்டத்தில் பல்வேறு ஒன்றியங்களில் உள்ள பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அனைத்தையும் பொறுமையுடன் உள்வாங்கி கொண்டு கோரிக்கைகள் நிறைவேற்றுவதற்கு முழு உத்தரவாதம் அளித்தார்கள்.
மேலும் திருப்பத்தூர் ஒன்றியத்தில் முறையான விசாரணையின்றி ஒரு பெண் ஆசிரியை பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளது குறித்து இயக்கம் தன்னுடைய கடுமையான அதிருப்தியை பதிவு செய்தது. இச்செயல் வருங்காலத்தில் எந்த ஆசிரியரையும் விசாரணையின்றி பணி நீக்கம் செய்ய வழி வகுக்கும், எனவே இது குறித்து மீளாய்வு செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது.
திருப்புவனம் ஒன்றியத்தில் பழையூர் நடுநிலைப்பள்ளியின் பட்டதாரி ஆசிரியர்களின் முறையற்ற பணிக்கலாச்சாரம் குறித்து முறையிடப்பட்டது. அப்பள்ளியின் கல்விச்சூழல் சுமூகமாக அமைய தக்க நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்ளப்பட்டது.
சிங்கம்புணரி உதவித் தொடக்கக்கல்வி அலுவலகத்திற்கு இயக்கத்தின் கடுமையான முயற்சியால் பேரூராட்சி நிர்வாத்திடம் இருந்து பெறப்பட்ட நிலத்தில் உடனடியாக அலுவலகம் கட்ட நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்ளப்பட்டது.
அனைத்து உதவித் தொடக்கக்கல்வி அலுவலகங்களிலும் காலிப்பணியிட விபரம் மற்றும் ஆசிரியர்களின் குழு பட்டியல் விபரம் வெளியிட ஆவண செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டது.
மேலும் பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இச்சந்திப்பில் மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன், மாவட்ட பொருளாளர் குமரேசன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் புரட்சித்தம்பி, மாநிலப்பொதுக்குழு உறுப்பினர் சிங்கராயர், சிவகங்கை வட்டாரச் செயலாளர் ஜெயக்குமார், பொருளாளர் பாலமுருகன், திருப்புவனம் செயலாளர் சத்தியேந்திரன், தலைவர் ஜான் கென்னடி மற்றும் பல்வேறு வட்டார நிர்வாகிகள் பங்குபெற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக