நேற்று இரவு சிங்கம்புணரி வட்டார அலுவலகத்தில் பொறுப்பாளர்களுடன் உரையாடிகொண்டிருந்தோம். இரவு 8.30 மணியிருக்கும், நமது வட்டாரத்தைச் சார்ந்த இயக்க உறுப்பினர் திரு. அஜ்மீர் அவர்களிடமிருந்து அவசர தொலைபேசி. சிங்கம்புணரியிலிருந்து 5கி.மீ தொலைவில் கல்லம்பட்டி சாலையில் மலை பாம்பினால் மறிக்கப்பட்டுள்ளேன், அவசரமாக வரவும் என கூறி தொலைபேசி துண்டிக்கப்பட்டது. உடனடியாக நாம் இயக்க பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் 10க்கும் மேற்பட்டவர்களுடன் இருசக்கர வாகனத்தில் புறப்பட்டோம். 3நிமிடத்திற்குள் இடத்தை அடைந்தோம். மிகப்பெரிய மலை பாம்பு சாலையின் குறுக்கே கிடந்ததைப் பார்த்து ஆச்சரியப்பட்டு போனோம். பின்பு நம் வாகனங்களின் ஒளியை கண்டவுடனும், அதிர்விலும் பாம்பு நகரத் தொடங்கியது. உடனடியாக நாம் சிங்கம்புணரி தீயணைப்பு மற்றும் மீட்பு துறையைச் சார்நத நண்பர் பிரகாஷ் அவர்களுக்கு தகவல் தெரிவித்தோம். நமது நண்பர்களால் பாம்பு சுற்றி வளைக்கப்பட்டது. உடனடியாக பாம்பு அருகில் உள்ள புளிய மரத்தில் மிக வேகமாக ஏறி பதுங்கிக் கொண்டது. 20 நிமிடத்தில் தீயணைப்பு வீரர்கள் வருகை புரிந்தார்கள். பின்பு நம் இயக்க உறுப்பினர்களின் உதவியுடன் மரத்தில் ஏறி உலுப்பி பின் கீழே விழ வைத்து பாம்பு பிடிக்கப்பட்டது. 8அடிக்கு மேல் நீளமுள்ள அந்த பாம்பு மலை பாம்பு வகையைச் சார்ந்த வெங்கணத்தி என்று கூறினார்கள். பின்பு இரவு 10 மணிக்கு பிரான்மலை மலைக்காட்டில் பாம்பு விடப்பட்டது. மிகவும் இருட்டான அந்த இரவில் வாகனத்தின் ஒளியை பயன்படுத்தி பாம்பு பிடிக்கப்பட்டது என்பது குறிபிபடத்தக்கது. எவ்வளவோ சமூகம் சார்ந்த பணிகளை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செய்து கொண்டிருந்தாலும் நேற்றைய இரவு என்பது திகிலாக கழிந்தது. ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் பயணிக்கும் சாலையில் இருந்த பாம்பை பத்திரமாக மீட்டு காட்டில் விட்டு திரும்பியது என்பது மற்க்க இயலாத நிகழ்வுதான்.
1/10/2014
திகிலான இரவு -9.01.2014
லேபிள்கள்:
Singai TNPTF NEWS

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக