பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

மின்னஞ்சல் மூலம் பதிவுகளை பெறலாம்

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

10/31/2013

தீபாவளியால் திண்டாடிய இரட்டைப்பட்டம் வழக்கு

இன்று (31.10.2013) முதல் அமர்வில் 36வது வழக்காக விசாரணைக்கு வந்த இரட்டைப்பட்டம் வழக்கு 13.11.20.13 - புதன்கிழமை அன்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்று 11.40க்கே தன் எல்கையை தொட்ட இந்த வழக்கில் அனைத்து தரப்பு வழக்குரைஞர்களும் வாதாட தயாராகவே இருந்தனர். ஆனால் தலைமை நீதியரசர் தன்னுடைய பெஞ்ச் இன்று விசாரணைக்கு தயாராக இல்லை என்று வழக்கை வருகிற 13.11.2013 அன்று ஒத்தி வைத்தார். இதனால் அங்கு குழுமியிருந்த ஆசிரியர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

தகவல் பரிமாற்றம்: தோழர்கள் ஆரோக்கியராஜ், கலியமூர்த்தி

ஆசிரியர் தகுதித்தேர்வு குளறு படி டி.ஆர்.பி., தலைவருக்கு ரூ.5000அபராதம்

பொன்னமராவதி உதவித்தொடக்கக்கல்வி அலுவலகம் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியால் முற்றுகை

தீபாவளி முன்பணம், DA arrears, surrender  உட்பட பணபலன்கள் ஏதும் பெற்றுத்தராத  பொன்னமராவதி உதவித்தொடக்கக்கல்வி அலுவலகம் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆசிரியர்களால் நேற்று முற்றுகையிடப்பட்டு உள்ளிருப்பு போரட்டம் 5மணி முதல்  இரவு 9மணிக்கும் தொடர்ந்து நடைபெற்றது. (70 ஆசிரியர்கள் பெண் ஆசிரியர்கள் 30 பேர் உட்பட) கலந்துகொண்டனர்.


 

விடுமுறை நாட்களில் நடத்தப்படும் பயிற்சிகளுக்கு ஈடு செய்யும் விடுப்பு வழங்கப்பட வேண்டும் என்று ஆசிரியர்கள் வலியுறுத்தினர்.

இது
குறித்து
கூடுதல் முதன்மை கல்வி
அலுவலரிடம்,
தமிழ்நாடு ஆரம்ப
பள்ளி ஆசிரியர்
கூட்டணி மாவட்ட செயலாளர்
சுடலைமணி மற்றும்
நிர்வாகிகள் அளித்த மனுவில்
தெரிவித்துள்ளதாவது:கடந்த
கல்வி ஆண்டுகளில்
அனைவருக்கும் கல்வி இயக்கம்
சார்பில்
பள்ளி வேலை நாட்களில்
துவக்க மற்றும் நடுநிலைப்
பள்ளி ஆசிரியர்களுக்கு 10
நாட்கள் குறுவள மைய
பயிற்சி மற்றும் 10 நாட்கள்
வட்டார வள மைய அளவில்
பயிற்சி, ஆண்டுக்கு 20
நாட்கள் பயிற்சிகள்
வழங்கப்பட்டன. அதிகமான
பயிற்சிகள் வழங்கப்படுவதால்
மாணவர்களின் கல்வி நலன்
பாதிக்கப்படும் என
தெரிவிக்கப்பட்டதை
தொடர்ந்து இப்பயிற்சி நாட்கள்
ஆண்டுக்கு 7 நாட்களாக
குறைக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதே வேளையில்
பள்ளி விடுமுறை நாட்களில்
பயிற்சிகள்
அளிக்கப்படுகிறது. கடந்த
ஆண்டுகளில்
விடுமுறை நாட்களில்
பயிற்சியில்
கலந்து கொள்ளும் உயர்நிலை
, மேல்நிலை பள்ளிகளில்
பணிபுரியும்
ஆசிரியர்களுக்கு ஈடு செய்யும்
விடுப்பு வழங்கப்பட்டு வந்தது
. அரசு ஊழியர்கள்
விடுமுறை நாளில்
பணியாற்றினால்
அவர்களுக்கு ஈடு செய்யும்
விடுப்பு அல்லது ஈட்டிய
விடுப்பு வழங்கப்படுகிறது.
தற்போது விடுமுறை
நாட்களில் பயிற்சியில்
பங்கேற்கும் துவக்க மற்றும்
நடுநிலைப்பள்ளிகளில்
பணிபுரியும்
ஆசிரியர்களுக்கும் இந்த
சலுகை வழங்க வேண்டும். 6
மாதங்கள் வரை இந்த ஈடு செய்
விடுப்பை அனுமதிக்க உரிய
நடவடிக்கை எடுக்க
வேண்டும்.இவ்வாறு அந்த
மனுவில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரட்டைப்பட்டம் இன்று (31.10.2013) வரிசை எண் 36 ல் விசாரணைக்கு வருகிறது

இன்று  (31.10.2013) இரட்டைப்பட்டம்
சென்னை உயர்
நீதிமன்றத்தில் வரிசை எண்
36-ல் விசாரணைக்கு வருகிறது.

10/30/2013

பள்ளிக் கல்வித்துறைக்கு ஆறாவது அமைச்சர் கே.சி.வீரமணி

சென்னை: தமிழகத்தின் புதிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக கே.சி.வீரமணி நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக அமைச்சரவை அடிக்கடி மாற்றியமைக்கப்பட்டு வருவது நாம் அறிந்ததே. இதில் பள்ளிக் கல்வித்துறைக்கு மட்டும் இதுவரை 5 அமைச்சர்கள் மாறிவிட்டனர்.

இந்த வகையில், சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த கே.சி.வீரமணி, பள்ளிக் கல்வித்துறைக்கு 6வது அமைச்சராக தற்போது வந்துள்ளார். இதுதவிர, விளையாட்டு, இளைஞர் நலன் மற்றும் தமிழ் பண்பாட்டுத் துறை உள்ளிட்ட துறைகளையும் அவர் கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதாரத் துறைக்கு புதிய அமைச்சராக விஜய பாஸ்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

பள்ளிக் கல்வித் துறைக்கு மட்டுமே, இதுவரை, சி.வி.சண்முகம், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சிவபதி, வைகை செல்வன், பழனியப்பன் ஆகிய 5 பேர் அமைச்சர்களாக இருந்துள்ளனர். தற்போது ஆறாவது நபராக கே.சி.வீரமணி வந்துள்ளார்.

அதேசமயம், உயர்கல்வித் துறையில் இதுவரை அமைச்சர்கள் மாற்றப்படவில்லை. 2011ம் ஆண்டு அரசு பதவியேற்கும்போது நியமிக்கப்பட்ட பழனியப்பன், இதுவரை அதே துறையை வகித்து வருவது

குறிப்பிடத்தக்கது.

குறட்டை விடுகிறதா? கூட்டுறவு சங்கம். கோபமடையும் TNPTF.

சிங்கம்புணரி ஆசிரியர்-அரசு ஊழியர் சிக்கன நாணய கூட்டுறவு சங்கம் சிங்கம்புணரி மற்றும் எஸ்.புதூர் ஒன்றியங்களில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை உறுப்பினர்களாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் தன் அவசர தேவைக்காக கடன் கோரி பல மாதங்களாக தவம் கிடக்க வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது. கூட்டுறவுத் தேர்தல் முடிந்தால் எல்லாம் சரியாகி விடும் என்ற சிறப்பு அலுவலரின் வாக்குறுதி காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக நிறுத்தப்பட்டு தலைவாராக வெற்றி பெற்றுள்ள கூட்டுறவு சங்க தலைவர் திரு. சுரேஷ் அவர்களிடம் இயக்கம் தன்னுடைய கடுமையான அதிர்ப்தியை தெரிவித்துள்ளது. மாவட்ட அதிகாரிகளிடம் இது குறித்து விரிவாக பேசியுள்ளதாக நம்மிடம் தெரிவித்துள்ளார். இத்தனைக்கும் இச்சங்கத்தில் எவ்வித வராக்கடனும் இல்லை. பங்குத் தொகையும் அதிகமாகவே உள்ளது. மாவட்ட பதிவாளர் மற்ற நலிவடைந்த சங்கங்களுக்கு நிதியை திருப்பி விடுவதால் தொய்வு ஏற்படுவதாக தெரிகிறது. இந்த நிலையை சரி செய்து உடனடியாக மாவட்ட நிர்வாகம் கடனை அனுமதிக்காவிட்டால் இயக்கம் தன்னுடைய இயக்க நடவடிக்கையை மேற்கொள்ள தயாராகி வருகிறது. சிக்கன நாணய சங்கத் தலைவர் திரு.சுரேஷ் அவர்களிடம் TNPTF தன்னுடைய கடுமையான கோபத்தை எழுத்து பூர்வமாக தெரிவித்துள்ளது. இயக்கம் சார்பாக வெற்றியடைந்த மற்ற இயக்குநர்களிடமும் இது குறித்து தன்னுடைய கவலையை பகிர்ந்துள்ளது. நிலைமை மாறாவிட்டால் மாற்றியமைக்க TNPTF தயங்காது என்பது அனைவரும் அறிந்ததே.

இரட்டைப்பட்டம் வழக்கு - 30.10.2013

இன்று 44வது வழக்காக பட்டியலிடப்பட்ட வழக்கு தன்னுடைய எல்கையைத் தொடாமல் விடை பெற்றது. நாளை விசாரணைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தீப ஒளித் திருநாளில் கூட இந்த வழக்கிற்காக ஒருங்கிணைப்பாளர்கள் நீதி மன்ற வளாகத்தில் தவம் கிடக்கிறார்கள். வழக்கு முடிய வாழ்த்துக்கள்.

10/29/2013

ஆசிரியரை தாக்கிய9-ம் வகுப்பு மாணவர்கள்

ஸ்ரீவில்லிபுத்தூரில் குடிபோதையில் பள்ளிக்கு வந்த 9-ம் வகுப்பு மாணவர்கள் ஆசிரியரை தாக்கியுள்ளார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர், திருமுக்குளம் கரையில் சி.எம்.எஸ். மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 9-ம் வகுப்பில் சின்ன அத்திகுளத்தைச் சேர்ந்த முத்துக்குமாரும், 10-ம் வகுப்பில் சித்தாலம்புத்தூரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரும், கம்மாப்பட்டி-ரெங்கநாதபுரத்தைச் சேர்ந்த சுந்தரராஜ் என்பவர் 9-ம் வகுப்பிலும் படித்து வருகிறார்கள்.

சனிக்கிழமை மூவரும் பஸ்நிலையம் அருகேயுள்ள டாஸ்மாக் கடையில் மது குடித்துவிட்டு பள்ளிக்குச் சென்றுள்ளனர். 9-ம் வகுப்பு ஆசிரியை இவர்கள் மது அருந்திவிட்டு வகுப்பறையில் உட்கார்ந்து தகாதவிதமாக நடப்பது குறித்து உதவித் தலைமை ஆசிரியர் முத்துராஜூடம் கூறியுள்ளார். அவர் மாணவர்களிடம் விசாரித்துள்ளார். இதனையடுத்து அவரை மாணவர்கள் மிரட்டியுள்ளார்கள். இது குறித்து கேள்விப்பட்டு 10-ம் வகுப்பு மாணவர் மணிகண்டனும் வந்துள்ளார். பின்னர் பென்சமின் என்ற ஆசிரியர் மாணவர்களுக்கு புத்திமதி கூறியுள்ளார். அவரிடம் மூன்று மாணவர்களும் தகராறு செய்து அவரைத் தாக்கியுள்ளார்கள்.
இதனையடுத்து மூன்று மாணவர்களையும் ஆசிரியர்கள் பிடித்து அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனைக்குட்படுத்தினர். இதில் மூவரும் மது குடித்திருந்தது உறுதியானது.ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் ஆசிரியர்களை மிரட்டி, தாக்கிய மூன்று மாணவர்கள் மீதும் புகார் செய்யப்பட்டது.
இது குறித்து போலீஸார் கூறுகையில் முத்துக்குமார் என்ற மாணவர் கடந்த சில நாட்களுக்கு் முன்னர் அவர்கள் கிராமத்தின் வழியே செல்லும் மினி பஸ்ஸில் தகராறு செய்து கல்லால் அடித்ததில் பஸ் கண்ணாடி உடைந்தது. மாணவரின் தந்தை தீப்பெட்டி தொழிற்சாலை வைத்துள்ளார். அவர் பின்னர் இதனை சமரசமாக பேசி முடித்துள்ளார். மாணவர்கள் மூவரும் சேர்ந்து ஆஃப் மது பாட்டில் வாங்கி பிரித்துக் குடித்துள்ளார்கள் என்றனர்.
ஆசிரியர்கள் இது குறித்து கூறுகையில் மாணவர்கள் மீது திருடினால் கூட எந்த நடவடிக்கையும் எடுக்க இயலவில்லை. உடனடியாக சம்பந்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் வந்துவிடுகிறார்கள். ஆசிரியர்களை மாணவர்கள் பார்த்தால் பயம் கலந்த மரியாதை இருந்த காலம்மாறி, மாணவர்களைப் பார்த்து ஆசிரியர்கள் பயப்பட வேண்டியுள்ளது. எந்தக் குற்றச்சாட்டையும் கூசாமல் மாணவர்கள், மாணவிகள் ஆசிரியர்கள் மீது கூறுகிறார்கள். ஆசிரியர்கள் தங்கள் குடும்பத்தைக் காப்பாற்ற பள்ளிக்குச் சென்றோம், வந்தோம் என்று மட்டும் இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது என்றனர்.

ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வு மதிப்பெண்ணில் மாற்றம் இல்லை

சென்னை: "ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வில், மாணவர்கள் எடுக்க வேண்டிய மதிப்பெண்ணில், எவ்வித மாற்றமும் கிடையாது" என கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் தெரிவித்தார்.
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வு தொடர்பாக, சட்டசபையில், நேற்று விவாதம் நடந்தது. அதன் விவரம்:
இ.கம்யூ., குணசேகரன்: டி.என்.பி.சி., குரூப் - 1, தேர்வு எழுதுவோருக்கான வயது வரம்பை, 45 ஆக உயர்த்த வேண்டும். ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கான மதிப்பெண்ணை, இட ஒதுக்கீடு அடிப்படையில், மாற்றி அமைக்க வேண்டும்.
அமைச்சர் பழனியப்பன்: மத்திய அரசு, கட்டாய கல்வி சட்டத்தை அறிமுகப்படுத்தியபோது, ஆசிரியர் தேர்வு எப்படி இருக்க வேண்டும் என, சில விதிகளை வகுத்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு நடத்தப்படுகிறது. ஆசிரியர் தேர்வில், ஒருவர் குறைந்தது, 60 சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என்பது விதி.
அதன் அடிப்படையில், தமிழகத்தில், 150 மதிப்பெண்களுக்கு, தேர்வு நடத்தப்பட்டு, தேர்ச்சி பெற, 90 மதிப்பெண் பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான மதிப்பெண்களை, மாநில அரசு விரும்பினால் குறைக்கலாம். ஆனால், குறைந்த மதிப்பெண் எடுத்தவர்களை, ஆசிரியர்களாக தேர்வு செய்தால், குழந்தைகளின் கல்வித்தரம் பாதிக்கப்படும்.
எனவே, மதிப்பெண் குறைக்கப்படவில்லை. அதற்கு பதிலாக, முதல்வர் உத்தரவு படி, தோல்வி அடைந்தவர்களுக்காக, மீண்டும் தேர்வு நடத்தப்பட்டது.
மா.கம்யூ., பாலபாரதி: பட்டதாரி ஆசிரியர் தேர்வு முதலில் நடத்தப்பட்டபோது, 90 மதிப்பெண் பெற்றவர்கள் தேர்ச்சி பெற்றனர். அடுத்து நடந்த தேர்வில், 96 மதிப்பெண் எடுத்தவர், தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. &'கட்-ஆப்&' மதிப்பெண், சீராக இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமைச்சர்: தொடக்கக் கல்வி ஆசிரியர் தேர்வுக்கும், முதுகலை ஆசிரியர் தேர்வுக்கும் வித்தியாசம் உண்டு. தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு, தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. முதுகலை ஆசிரியர்களுக்கு, போட்டித் தேர்வு நடத்தப்படுகிறது. தொடக்கப் பள்ளி ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், பணி மூப்பு அடிப்படையில், பணி அமர்த்தப்படுகின்றனர்.
முதுகலை ஆசிரியர் தேர்வில், அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு, வேலை வழங்கப்படுகிறது. மருத்துவம், பொறியியல் படிப்பிற்கு, &'கட்-ஆப்&' மதிப்பெண் நிர்ணயிக்கப்படுவது போல், முதுகலை ஆசிரியர் பணிக்கும், &'கட்-ஆப்&' மதிப்பெண், நிர்ணயம் செய்யப்படுகிறது. இவ்வாறு, விவாதம் நடந்தது.

மாணவர்களை பள்ளிக்குள் அனுமதிக்க மறுத்த நிர்வாகம்: விசாரணை நடத்த உத்தரவு

சிவகங்கை: சிவகங்கையில், பள்ளிச் சுற்றுச்சுவர் கல்லை உடைத்ததாக, 11 மாணவர்களை, பள்ளிக்குள் அனுமதிக்க மறுத்த நிர்வாகத்திடம் விசாரணை நடத்த கலெக்டர் ராஜாராமன் உத்தரவிட்டார்.
சிவகங்கையில் உள்ளது, புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளி. இப்பள்ளி திடலில், 25ம் தேதி, 11ம் வகுப்பை சேர்ந்த மாணவர்கள் 11 பேர் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த பள்ளி முதல்வர், மார்க்கிரேட் சில்வியா பள்ளி காம்பவுண்ட் சுற்றுச்சுவர் கல்லை ஏன் உடைத்தீர்கள் என மாணவர்களிடம் கேட்டுள்ளார். அதற்கு மாணவர்கள் தாங்கள் உடைக்கவில்லை என பதிலளித்தனர்.
இதை ஏற்காத முதல்வர், "நீங்கள் தான் உடைத்தீர்கள்; அதற்கு அபராதம் செலுத்த வேண்டும்" என கூறியுள்ளார். இதற்கு மறுத்த மாணவர்களை, அதன்பின் பள்ளிக்கு வர அனுமதிக்கவில்லை. மாணவர்களின் பெற்றோர் சென்று, மன்னிப்பு கேட்டும் பலனில்லை. இதையடுத்து, பெற்றோருடன், நேற்று கலெக்டர் அலுவலகம் வந்த மாணவர்கள் கலெக்டர் ராஜாராமனிடம் புகார் தெரிவித்தனர்.
சி.இ.ஓ., செந்திவேலனிடம் பேசிய கலெக்டர், நேரடியாக பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தி, மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

பள்ளிகளில் செயல்படாத "அன்னையர் குழு":மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் எச்சரிக்கை

கோவை: கோவை மாவட்டத்தில் செயல்படும் தனியார், மெட்ரிக் பள்ளிகளில் " அன்னையர் குழு" செயல்படுவது இல்லை என்று பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
பள்ளிகளின் தரத்தை உடனுக்குடன் ஆய்வு செய்து, அதில் உள்ள குறைகளை களையும் நோக்கில் "அன்னையர் குழு" பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் அனைத்து பள்ளிகளிலும் அமைக்கப்பட்டது. இக்குழுவில் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் ஐந்து பேர் இடம் பெற்றிருக்கவேண்டும்.
வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று இக்குழு கூடி, பள்ளியின் அடிப்படை வசதிகள் பராமரிப்பு, குடிநீர், சுகாதார வசதிகளை ஆராய்ந்து கருத்துக்களை பதிவேட்டில் பதிவு செய்தல் அவசியம். அவ்வாறு, பதிவு செய்யப்படும் குறைகளை உடனடியாக சரிசெய்ய பள்ளி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், இக்குழுவில் தொடர்ந்து ஒரே நபர்கள் இடம் பெறாமல் ஒவ்வொரு வாரமும் பெற்றோர் உறுப்பினர்களை மாற்ற வேண்டும். கோவை மாவட்டத்தில், 200க்கும் மேற்பட்ட தனியார், மெட்ரிக் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.
இதில், சொற்ப எண்ணிக்கையிலான பள்ளிகளில் கூட இக்குழு சார்ந்த பணிகளை முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. பெரும்பாலான தனியார், மெட்ரிக் பள்ளிகளில் "அன்னையர் குழு" அமைக்கப்படவில்லை.
ஒருங்கிணைந்த மாணவர் நல பெற்றோர்கள் சங்க மாவட்ட தலைவர் மணிமோகன் கூறுகையில், "அன்னையர் குழு என்ற ஒன்று எந்த பள்ளிகளிலும் செயல்படுத்தப்படுவது கிடையாது. அன்னையர் குழு மட்டுமின்றி, கட்டாய கல்வி உரிமைச் சட்ட மாணவர்கள் சேர்க்கை கண்காணிப்பு, கட்டண விவகாரத்தில் செலவினங்கள் கண்காணிப்பு போன்ற எதற்கும் ஆட்கள் இல்லை" என்றார்.
மாவட்ட மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் மனோகரன் கூறுகையில், "அனைத்து பள்ளிகளிலும் அன்னையர் குழு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுசார்ந்த ஆய்வுகளும் தொடர்ந்து மேற்கொண்டு, பதிவேடுகள் கண்காணிக்கப்படுகின்றன. இதுபோன்ற பள்ளிகளின் புகார்களை பெற்றோர்கள் தாராளமாக தெரிவிக்கலாம்; உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

ஆங்கில வழிக்கல்வி: அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு

சென்னை: "அரசு பள்ளிகளில், ஆங்கில வழிக்கல்வி அறிமுகப்படுத்தப்பட்ட பின், மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. நடப்பாண்டு, 1.21 லட்சம் மாணவ, மாணவியர், ஆங்கில வழிக் கல்வியில் சேர்க்கப்பட்டுள்ளனர்" என, கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் தெரிவித்தார்.
அரசு பள்ளிகளில், ஆங்கில வழிக் கல்வி துவக்கப்பட்டது தொடர்பாக, நேற்று, சட்டசபையில் விவாதம் நடந்தது. அதன் விவரம் வருமாறு:
மா.கம்யூ., பாலகிருஷ்ணன்: அரசு பள்ளிகளில், ஆங்கில வழிக் கல்வி துவக்கப்பட்டுள்ளதால், தமிழ் மொழி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அமைச்சர் பழனியப்பன்: ஆங்கிலம் தொடர்பு மொழியாக உள்ளது. பன்னாட்டு நிறுவனங்களில், வேலைவாய்ப்பு பெற, ஆங்கிலத் திறன் அவசியமாகிறது. ஆங்கிலவழிக் கல்வி கற்றவர்கள், எளிதாக வேலைவாய்ப்பு பெறுகின்றனர். எனவே, பெற்றோர் தங்கள் குழந்தைகளை, தனியார் ஆங்கில வழிக் கல்வி நிலையங்களில், சேர்க்கின்றனர்.
அங்கு கட்டணம் அதிகம் இருந்தாலும், சிரமப்பட்டு படிக்க வைக்கின்றனர். இதை மனதில் கொண்டு, அரசு பள்ளிகளில், ஆங்கில வழிக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால், தமிழுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. தொடக்கப் பள்ளிகளில் இருந்து, கல்லூரி வரை, தமிழ் கட்டாயம் கற்பிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆங்கில வழிக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்ட பின், அரசு பள்ளிகளில், மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளது. இவ்வாறு அமைச்சர் பேசினார்.

டி.இ.டி., தேர்வு முடிவு இந்த வாரத்தில் வெளியீடு

சென்னை: சட்டசபை கூட்டத்தொடர் முடிந்ததும், இந்த வார இறுதிக்குள், டி.இ.டி., தேர்வு முடிவு வெளியாகிறது.
ஆசிரியர்களை தேர்வு செய்வதற்காக, கடந்த ஆகஸ்டில், டி.இ.டி., தேர்வு நடந்தது; 6.5 லட்சம் பேர், எழுதினர். விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, முடிவுகள் தயாராக உள்ளன. தற்போது, சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருவதால், முடிவு வெளியாவது தள்ளிப்போவதாக, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாளையுடன், சட்டசபை கூட்டத்தொடர் முடிகிறது. அதன்பின், டி.இ.டி., தேர்வு முடிவு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

டிட்டோ-ஜாக் கூட்டம் - இயக்கங்கள் பங்கேற்க முடிவு

டிட.டோ-ஜாக் கூட்டம் வருகிற 9.11.2013 அன்று சென்னையில நடைபெற உள்ளது. இதில் ஏற்கனவே அங்கம் வகிக்கும்
1. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,
2. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,
3. தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி,
4. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
5. தமிழக ஆசிரியர் கூட்டணி,
6. தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,
7. தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்
ஆகிய 7 அமைப்புகளும் இதில் பங்கேற்று ஒரு மிகப்பெரிய போராட்ட அறிவிப்பனை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற இயக்கங்களும் ஆதரவளித்தால் ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிகிறது.
முக்கிய முடிவுகளை மேற்கண்ட 7 இயக்கஙகளும் இணைந்து மேற்கொள்ளும்.


டிட்டோ-ஜாக்

வருகிற 9ந் தெதி நடக்க இருக்கும் டிட்டோ-ஜாக் கூட்டத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலப் பொறுப்பாளர்கள் பங்கேற்பது என நேற்று நடந்த மாநில மையக்கூட்டத்தில் முடிவாற்றப்பட்டது.

குறை தீர்க்கும் முகாம் தேதி மாற்றம்

10/26/2013

வாழ்த்துகிறோம் ஒரு சிறந்த மனிதருக்கு
சரியான காலகட்டத்தில்
கொடுக்கப்பட்ட சிறந்த விருது.
பெருமையுடன் வாழ்த்துகிறேன்.
அவரின் பெருமை
சிங்கை நகர் முழுவதும்
வியாபித்திருக்கும்
வாழ்த்து பதாகைகளே சாட்சி!


  10-10 tnptf.jpg 
Photo

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான வினாவங்கி மற்றும் மாதிரி வினா புத்தகங்கள் வியாழக்கிழமை (அக்டோபர் 24) முதல் விற்பனை

தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக வினாவங்கி மற்றும் மாதிரி வினா புத்தகங்கள் மிகக் குறைந்த விலையில் அச்சிடப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த ஆண்டும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 3 தொகுதிகள் கொண்ட வினா-வங்கி மற்றும் மாதிரி வினா புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. தமிழ் வழி புத்தகங்கள் ரூ.185-க்கும், ஆங்கில வழிப் புத்தகங்கள் ரூ.180-க்கும் விற்பனை செய்யப்பட உள்ளன.
இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் பிரத்யேக விற்பனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதன் விவரம்:
1. சென்னை - அரசு மேல்நிலைப் பள்ளி, எம்.எம்.டி.ஏ. காலனி, அரும்பாக்கம், ஜெய்கோபால் கரோடியா மகளிர் மேல்நிலைப் பள்ளி, சைதாப்பேட்டை, ஈஎல்எம் பேப்ரிஷியஸ் மேல்நிலைப் பள்ளி, புரசைவாக்கம், எம்.சி.சி. மேல்நிலைப் பள்ளி, ஹாரிங்டன் சாலை, சேத்துப்பட்டு.
2. காஞ்சிபுரம் - அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, குரோம்பேட்டை, சென்னை.
3. திருவள்ளூர் - ஆர்.எம். ஜெயின் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி, திருவள்ளூர்.
4. கடலூர் - அரசு மேல்நிலைப் பள்ளி, மஞ்சக்குப்பம், கடலூர்.
5. விழுப்புரம் - ராமகிருஷ்ணா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பூந்தோட்டம், விழுப்புரம்.
6. தஞ்சாவூர் - அரசு மேல்நிலைப் பள்ளி, மேம்பாலம் அருகில், தஞ்சாவூர்.
7. நாகப்பட்டினம் - சி.எஸ்.ஐ. மேல்நிலைப் பள்ளி, பழைய பஸ் நிலையம் அருகில், நாகப்பட்டினம்.
8. திருவாரூர் - அரசு மேல்நிலைப் பள்ளி, திருவாரூர்.
9. மதுரை - சேதுபதி மேல்நிலைப் பள்ளி, வடக்குவெளி வீதி, மதுரை.
10. தேனி - என்.எஸ். ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, தேனி.
11. திண்டுக்கல் - அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பழனி சாலை, திண்டுக்கல்.
12. ராமநாதபுரம் - ராஜா மேல்நிலைப் பள்ளி, ராமநாதபுரம்.
13. விருதுநகர் - டி.டி.என்.எம். நகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளி, விருதுநகர்.
14. சிவகங்கை - புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளி, மதுரை சாலை, சிவகங்கை.
15. திருநெல்வேலி - அரசு மேல்நிலைப் பள்ளி, ரத்னா திரையரங்கம் எதிரில், திருநெல்வேலி.
16. தூத்துக்குடி - லசால் மேல்நிலைப் பள்ளி, தூத்துக்குடி.
17. கன்னியாகுமரி - அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி, நாகர்கோயில்.
18. வேலூர் - வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளி, வேலூர்.
19. திருவண்ணாமலை - தியாகி நா.அண்ணாமலைப் பிள்ளை மேல்நிலைப் பள்ளி, திருவண்ணாமலை.
20. சேலம் - பாரதி வித்யாலயா மேல்நிலைப் பள்ளி, மறவனேரி, சேலம்.
21. நாமக்கல் - அரசு மேல்நிலைப் பள்ளி, அண்ணாசாலை, ராசிபுரம்.
22. தருமபுரி - அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, தருமபுரி.
23. திருச்சி - அரசு சையது முர்துஷா மேல்நிலைப் பள்ளி, திருச்சி.
24. கரூர் - நகராட்சி மேல்நிலைப் பள்ளி, கரூர்.
25. பெரம்பலூர் - தந்தை ரோவர் மேல்நிலைப் பள்ளி, வெங்கடேசபுரம், பெரம்பலூர்.
26. புதுக்கோட்டை - அருள்மிகு பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளி, புதுக்கோட்டை.
27. கோவை - நல்லாயன் உயர்நிலைப் பள்ளி, பெரிய கடை வீதி, கோவை.
28. ஈரோடு - அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, பன்னீர்செல்வம் பூங்கா அருகில், ஈரோடு.
29. உதகமண்டலம் - அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி, குன்னூர்.
30. கிருஷ்ணகிரி - அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, பெங்களூர் சாலை, கிருஷ்ணகிரி.
31. அரியலூர் - அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அரியலூர்.
32. திருப்பூர் - அரசு மேல்நிலைப் பள்ளி, விஜயாபுரம், திருப்பூர்.

1.2 கோடி மாணவர்களின் விவரம் இணையதளத்தில் பதிவு

ஐகோர்ட்டு அதிரடி! கணினி ஆசிரியர்கள் மகிழ்ச்சி!

காலியாக உள்ள 1440 கணினி ஆசிரியர் (Computer Teacher) பணியிடங்களை வரும் ஜனவரி 31ம் தேதிக்குள் நிரப்ப ஐகோர்ட்டு உத்தரவிட்டதைத் தொடர்ந்து கணினி ஆசிரியர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர். 


1998ம் ஆண்டு எல்காட் நிறுவனத்தால் நிரப்பப்பட்ட தற்காலிக கணினி ஆசிரியர்களை தேர்வு மூலம் பணி நிரந்தரம் செய்ய 2006ம் ஆண்டு தமிழக அரசால் முடிவு செய்யப்பட்டது. 

அதன்பிறகு 2008, 2010 மற்றும் 2012ம் ஆண்டுகளில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட கணினி ஆசிரியருக்கான சிறப்புத்தேர்வுகளில் முறையே 894, 125 மற்றும் 15 எண்ணிகையிலான ஆசிரியர்கள் மட்டும் 50% மதிப்பெண்களுக்கும் மேல் பெற்று வெற்றி பெற்றனர். அதனைத் தொடர்ந்து 1440 தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

இதை எதிர்த்து அவர்களில் சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்குகள் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று அந்த வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதிகள் ஆர்.பானுமதி மற்றும் கே.கே. சசிதரன் அவற்றை தள்ளுபடி செய்து, "தகுதித் தேர்வில் வெற்றி பெறாத ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டது சரியே" என கூறினர். மேலும் அவர்கள் கூறியதாவது:
"அந்த ஆசிரியர்களுக்கு இரண்டுக்கும் மேற்பட்டு முறைகள் வாய்ப்பு வழங்கப்பட்ட போதும், அவர்கள் தேர்ச்சி பெறவில்லை. எனவே அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டது சரியே. இருந்த போதும் அவர்களின் பெயர்களை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அவர்கள் முன்னே பெற்றிருந்த பதிவு மூப்புடன் சேர்க்கலாம். தற்போதைய அரசின் கொலைப்படி அவர்கள் ஆசிரியர் தேர்வு தகுதித் தேர்விலும் கலந்து கொள்ளலாம். அப்பொழுது வயது வரம்பை தளர்த்தக் கோரி அவர்கள் ஆசிரியர் தேறு வாரியத்தைக் கேட்டுக் கொள்ளலாம்."

மேலும் காலியாக உள்ள அந்த 1440 கம்ப்யூட்டர் டீச்சர் பணியிடங்கள் 31-1-2014க்குள் நிரப்பப்பட வேண்டும் என்றும் அவர்கள் உத்தரவிட்டனர்.

*இந்த செய்தியை படித்துக் கொண்டிருக்கும் நீங்கள் கணினி படித்தவாரக இருந்தால் நீங்கள் குறித்துக் கொள்ளவேண்டியது.
நீதிபதிகள் ஆசிரியர் நியமனம் பற்றி தெளிவாக கூறவில்லை.
அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வு மே 2014க்கு பிறகுதான் நடத்தப்படக் கூடும். இந்த ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்விலோ பெரும்பாலான கணினி ஆசிரியர்கள் விண்ணப்பிக்கவில்லை.
அடுத்த ஜனவரிக்குள் பணி நியமனம் முடிக்கப்பட வேண்டிய நிலையில் அதற்கு முன்பாக கணினி ஆசிரியர்களுக்கு மட்டும் தனியாக தேர்வு நடத்தப்படலாம் அல்லது பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படலாம்.

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்ளுக்கான கூடுதல் பட்டியல் சான்றிதழ் சரிபார்ப்பு நவம்பர் 5, 6-ஆம் தேதிகளில் நடைபெறும் ?

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்காக 212 தேர்வர்கள் அடங்கியகூடுதல் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வகுப்பு
வாரியாக ஒரே கட்-ஆஃப்மதிப்பெண் பெற்றவர்களையும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

இதையடுத்து, மொத்தம் 212பேர் அடங்கிய பட்டியலை ஆசிரியர்தேர்வு வாரியம் வியாழக்கிழமை இரவு வெளியிட்டது. இவர்கள் அனைவருக்கும் நவம்பர் 5, 6-ஆம் தேதிகளில் சென்னையில் சான்றிதழ்சரிபார்ப்பு நடைபெறும் எனத் தெரிகிறது. சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் இடம், நேரம் ஆகியவை பின்னர் அறிவிக்கப்படும் என ஆசிரியர்தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

2,881 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான போட்டித் தேர்வு ஜூலை 21-ஆம் தேதி நடைபெற்றது. தமிழ் பாடம் தவிர மீதமுள்ள பாடங்களுக்கான தேர்வு முடிவுகள் அக்டோபர் 7-ஆம்தேதி வெளியிடப்பட்டன. சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டவர்களின் பட்டியல் அக்டோபர் 11-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்தத் தேர்வு முடிவுகளை வெளியிடவும் உயர் நீதிமன்றமதுரை கிளை தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அரசுப் பள்ளி மூடல்

அரசு தேர்வுகள் தேர்ச்சியை அதிகரிக்க புதிய திட்டம்

அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு ஏமாற்றம்

மாநில அரசு, பள்ளிகளில் செஸ் விளையாட்டை ஊக்குவிக்க,மாநில அளவிலான செஸ் போட்டி நடத்த உள்ளது; முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட உள்ளது. அதற்காக, மாவட்டந்தோறும், கல்வி மாவட்ட, மாவட்ட, மண்டல அளவில் போட்டிகள் நடத்தப்பட்டன; மாநிலம் முழுக்க உள்ள மாவட்டங்கள், 16 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலத்தில் இருந்தும் 24 மாணவ, மாணவியர் வீதம், மாநில போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சமீபத்தில் நடந்து முடிந்த மண்டல அளவிலான போட்டிகளில், அரசு, ஊராட்சி ஒன்றிய, உதவி பெறும் மற்றும் மெட்ரிக்., பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். பெரும்பாலான மாவட்டங்களில், அரசு பள்ளி மாணவ, மாணவியரை பின்னுக்கு தள்ளி, மெட்ரிக்., மற்றும் உதவி பெறும் பள்ளி
மாணவ, மாணவியர் வெற்றி பெற்றுள்ளனர்.ஆசிரியர்கள் ஆதங்கம்:அரசு பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:"பணக்கார விளையாட்டு' எனப்படும் செஸ் விளையாட்டை, மெட்ரிக்., மற்றும் உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியர் வீடுகளிலேயே விளையாடுகின்றனர்; பல மாணவர்கள் ஆங்காங்கே உள்ள பயிற்சி மையங்களுக்கு சென்று, அதிகபட்சம் மாதம் 8,000 ரூபாய் வரை கட்டணம் செலுத்தி, பயிற்சி பெறுகின்றனர். விளையாடும் போது, "டைமர்' உபகரணம் வைத்து, சர்வதேச விதிகளுக்கு உட்பட்டுவிளையாடுகின்றனர்.மாறாக, கிராமப்புற அரசு, ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்த மாணவ, மாணவியருக்கு, செஸ் விளையாட்டு என்பது புதிது; அவர்களில் பலர் செஸ் விளையாடினாலும், "டைமர்' இல்லாமல், விதிமுறைகள் குறித்து தெளிவான அறிவு இல்லாமல் தான் விளையாடுகின்றனர். சமீபத்தில் நடந்த மண்டல அளவிலான போட்டிகளில், அரசு பள்ளி மாணவர்கள், மெட்ரிக்., பள்ளி மாணவர்களுடன் மோதினர். மெட்ரிக்., பள்ளி மாணவ, மாணவியர்

"டைமர்' வைத்து, நுட்பத்துடன் விளையாடிதை பார்த்து, அரசு பள்ளி மாணவர்கள் பயந்து, நிலை குலைந்து போயினர்.

மெட்ரிக்., மற்றும் உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு இணையான திறமையை அரசு பள்ளி மாணவ, மாணவியரும் பெற வேண்டும் என்ற நோக்கில் அறிவிக்கப்பட்ட மாநில அரசின் சிறப்பு திட்டம், அரசு பள்ளி மாணவர்களுக்கு முழு பயனைஅளிக்கவில்லை.இவ்வாறு, ஆசிரியர்கள் கூறினர்.

செஸ் போர்டு எங்கே?"மாநில அரசின் இச்சிறப்பு திட்டத்தின் கீழ், ஒவ்வொரு அரசு, ஊராட்சி ஒன்றிய, உதவி பெறும் பள்ளிகளுக்கு, தலா 900 ரூபாய் வீதம் ஒதுக்கப்பட்டு, அதில் 9 செஸ் பலகைகள் வாங்கப்பட வேண்டும்; பள்ளிகள் தோறும் "செஸ் கிளப்' உருவாக்கப்பட வேண்டும்' என, அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை, பெரும்பாலான பள்ளிகளுக்கு ஒரே ஒரு செஸ் பலகை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது; பல பள்ளிகளில் செஸ் கிளப்புகள் துவங்கப்படவில்லை. எனவே, இச்சிறப்பு திட்டத்தில் உள்ள குறைகளை களைய, மாநில அரசு முன்வர வேண்டும்.
 

சிவகங்கை மாவட்டத்தில் தமிழ் வாசிக்க புதிய திட்டம் - CEO(SSA)

பண்டிகை முன்பணம் வழங்க மறுப்பு தமிழக முதல்வர் தலையிட அரசு ஊழியர் சங்கம் வேண்டுகோள்

தமிழக அரசு ஊழியர் களுக்கு பண்டிகை முன்பணம் ரூ.5 ஆயிரம் வழங்கப்படுமென தமிழக முதல்வர் கடந்த ஆண்டு தெரிவித்தார்.

அதனடிப்படையில் பல பண்டிகை களுக்கு ஏற்கனவே ரூ.5 ஆயிரம் முன்பணம் வழங்கப் பட்டுள்ளது.ஆனால் தற்போது போதுமான பணம் ஒதுக்கீடு இல்லை எனக் காரணம் கூறி கருவூலங்களில் பல துறை அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகைக்கு முன்பணம் வழங்க மறுத்து வருகின்றனர். இதுதொடர்பாக அரசுத்துறைகளின் தலைமை அலுவலர்களை தொடர்பு கொண்டால் போதுமான நிதி ஒதுக்கீடு இல்லை எனதெரிவித்து வருகின்றனர். இத னால் அரசு ஊழியர்கள் மிகுந்த அதிருப்தியும், வேதனையும் அடைந்துள்ளனர். முன்பணத்திற்கு போதுமான நிதி வழங்க வேண்டியது அரசின் கடமை என்பதை வலியுறுத்துகிறோம்.

எனவே, தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலைமையில் தமிழக முதல்வர் தலையிட்டு விண்ணப்பித்த அனைவருக்கும் முன்பணம் வழங்கிட ஆவன செய்து உதவுமாறு கேட்டுக் கொள் கிறோம்.மேற்கண்டவாறு சங் கத்தின் மாநிலத் தலைவர் இரா.தமிழ்செல்வி, பொதுச்செயலாளர் இரா.பால சுப்பிரமணியன் ஆகியோர் அறிக்கை ஒன்றில் கூறியுள் ளனர்.

10/25/2013

தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும் பதவி உயர்வு வழங்க பரிசீலனை

சென்னை: அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 34 ஆண்டுகளாக பதவி உயர்வு இல்லாமல் அவதிபட்டு வரும் தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு, பதவி உயர்வு அளிக்க பள்ளிக்கல்வித் துறை பரிசீலனை செய்து வருகிறது.
தமிழகத்தில் உள்ள 2,595 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 1,605 பள்ளிகளில் மட்டும், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில், தொழிற்கல்விப் பிரிவு இயங்கி வருகிறது. இவற்றில், 4,000 தொழிற்கல்வி ஆசிரியர் பணிபுரிந்து வருகின்றனர். பட்டதாரி, முதுகலை ஆசிரியர்களைப் போல், தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு, பதவி உயர்வு அளிக்கப்படுவதில்லை. 34 ஆண்டுகளாக, ஆசிரியர்களாகவே பணியாற்றி, எவ்வித பதவி உயர்வும் இல்லாமல், ஓய்வு பெறுகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து, தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழக பொதுச் செயலர், ஜனார்த்தனன் மற்றும் நிர்வாகிகள், பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் இணை இயக்குனரை (தொழிற்கல்வி) சந்தித்து பேசினர்.
இதுகுறித்து, ஜனார்த்தனன் கூறுகையில், "எங்களுக்கு, உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் அல்லது மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வை வழங்க வேண்டும் என, இயக்குனரிடம் வலியுறுத்தினோம். நியாயமான இந்த கோரிக்கையை பரிசீலனை செய்து, நடவடிக்கை எடுப்பதாக, இயக்குனர் உறுதி அளித்தார்" என்றார்.

கலந்தாய்வும் இல்லை; பதவி உயர்வும் இல்லை: பட்டதாரி ஆசிரியர் புலம்பல்

சென்னை: தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, ஒன்றியம் விட்டு ஒன்றியம் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தவில்லை. பள்ளிக் கல்வித் துறையில், தகுதிவாய்ந்த பட்டதாரி ஆசிரியருக்கு, முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு வழங்குவதற்கான கலந்தாய்வும் நடத்தவில்லை. இதனால், இரு துறைகளிலும் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர், புலம்பி வருகின்றனர்.
இரு துறைகளிலும், பணியிட மாறுதல் கலந்தாய்வுகள் முடிந்து விட்டன. ஆனால், மேற்குறிப்பிட்ட இரு கலந்தாய்வுகள் மட்டும், இதுவரை நடக்கவில்லை. இரட்டை பட்டம் பெற்றவர்களுக்கு, பதவி உயர்வு வழங்குவது தொடர்பாக, வழக்கு நிலுவையில் இருப்பதால், கலந்தாய்வு நடத்த முடியவில்லை என, தொடக்கக் கல்வித் துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
ஆனால், ஆங்கில ஆசிரியர் மட்டுமே, இரு பட்டங்களை பெற்றுள்ளனர். எனவே, ஆங்கிலம் தவிர்த்து, இதர ஆசிரியர்களுக்கு, பணியிட மாறுதல் கலந்தாய்வை நடத்த, தொடக்கக் கல்வித்துறை முன்வர வேண்டும் என, பட்டதாரி ஆசிரியர் எதிர்பார்க்கின்றனர்.
இது குறித்து, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலர், பேட்ரிக் ரைமாண்ட் கூறியதாவது: விரைவில், டி.இ.டி., தேர்வு முடிவு வரப்போகிறது. அப்போது, தொடக்கக் கல்வித் துறையில், 1,500 பட்டதாரி ஆசிரியர் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களை நியமனம் செய்வதற்கு முன், ஏற்கனவே பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, பணியிட மாறுதல் பெறுவதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும்.
அதேபோல், பள்ளிக்கல்வித் துறையில் 2,881 முதுகலை ஆசிரியர் புதிதாக நியமிக்கப்பட உள்ளனர். இவர்களை நியமனம் செய்வதற்கு முன் தகுதிவாய்ந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

புதிய முறையில் சான்றிதழ் சரிபார்ப்பு: ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை

சென்னை: ஆசிரியர் தேர்வு வாரியம், வழக்கமான பாணியை மாற்றி, புதிய முறையில், முதுகலை ஆசிரியர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பை நடத்தியுள்ளது. தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்யும் விவகாரத்தில், சி.இ.ஓ., உள்ளிட்ட 4 அலுவலர்களை பொறுப்பேற்கச் செய்திருப்பதை நினைத்து, அதிகாரிகள் பீதி அடைந்துள்ளனர்.
வழக்கமாக, சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் முடிந்ததும், தேர்வர்களுடைய ஆவணங்கள் அனைத்தும், டி.ஆர்.பி., அலுவலகத்திற்கு கொண்டு வரப்படும். பின், அதிகாரிகள் அடங்கிய குழு, ஒவ்வொரு தேர்வரின் சான்றிதழ்களையும், ஆய்வு செய்யும். இந்தப் பணிகள் முடிவதற்கே, பல நாட்கள் ஆகிவிடும்.
இந்நிலையில், 23, 24ம் தேதிகளில், மாநிலம் முழுவதும், 14 மையங்களில், முதுகலை ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. இதில், வழக்கத்திற்கு மாறாக, புதிய முறையை, டி.ஆர்.பி., கையாண்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு மையத்திற்கும், சி.இ.ஓ., தலைமையில், நான்கு அலுவலர்கள், சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பொறுப்பு ஏற்கச் செய்தது.
தேர்வர்களுடைய சான்றிதழ்களை, மையத்தில் உள்ள பல்வேறு குழுக்கள் ஆய்வு செய்து முடித்ததும், அது குறித்த விவரங்களை, அங்கே இருந்தபடி, டி.ஆர்.பி., இணையதளத்தில், அப்லோட் செய்தனர். மேலும், தேர்வர்களின் சான்றிதழ்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்றும், ஆசிரியர் பணிக்கு, தகுதியானவர் என்றும், தேர்வு செய்யப்பட்ட தேர்வரின் ஆவணத்தில், சி.இ.ஓ., உட்பட, நான்கு பேரும் கையெழுத்திட்டு, அதன் நகலை, தேர்வர்களுக்கு வழங்கவும், டி.ஆர்.பி., நடவடிக்கை எடுத்தது.
இதன்மூலம், டி.ஆர்.பி., அலுவலகத்தில், மீண்டும் ஒருமுறை தனியாக, சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடக்காது. நேரடியாக, தேர்வுப்பட்டியல் தயாரிக்கப்பட்டு, பட்டியல் வெளியிடப்படும். அதே நேரத்தில், தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்யும் விவகாரத்தில், சி.இ.ஓ., உள்ளிட்ட நான்கு அலுவலர்களை பொறுப்பேற்கச் செய்திருப்பதை நினைத்து, அதிகாரிகள் பீதி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து, அதிகாரி ஒருவர் கூறுகையில், "தேர்வு செய்யப்படும் ஆசிரியரில், யாராவது பின்னாளில், தகுதியற்றவர்களாக கண்டுபிடிக்கப்பட்டால், சான்றிதழை சரிபார்த்த, நான்கு அலுவலர்கள் மீதும், துறை ரீதியாக, கடும் நடவடிக்கை எடுப்பதற்கு, டி.ஆர்.பி., வழிவகை செய்துள்ளது. இது, எங்களுக்கு, தேவையற்ற, டென்ஷனை ஏற்படுத்தி உள்ளது" என்றார்.

தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்படமாட்டாது.

செப்/அக் 2013ல் நடைபெற்ற HSC / SSLC துணைத் தேர்வெழுதிய தனித்தேர்வர்கள் மதிப்பெண் சான்றிதழ்களை 25.10.2013 முதல்
30.10.2013 வரை அவர்கள் தேர்வெழுதிய மையங்களில் நேரில் பெற்றுகொள்ளலாம், தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்படமாட்டாது
செப்டம்பர் / அக்டோபர் 2013ல் நடைபெற்ற மேல்நிலை மற்றும் எஸ்.எஸ்.எல்.சி துணைத் தேர்வெழுதிய தனித்தேர்வர்கள் மதிப்பெண் சான்றிதழ்களை 25.10.2013 முதல் 30.10.2013 வரை அவர்கள் தேர்வெழுதிய மையங்களில் நேரில் பெற்றுகொள்ளலாம், தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்படமாட்டாது என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

மேல்நிலைத் தேர்வினை "சிறப்பு அனுமதி திட்டம்" (தட்கல்) திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து தேர்வெழுதிய தனித்தேர்வர்களின் மதிப்பெண் சான்றிதழ்கள் அவர்களின் வீட்டு முகவரிக்கு பதிவஞ்சலில் அனுப்பி வைக்கப்படும் என்று அரசு தேர்வு துறை அறிவித்துள்ளது.

பள்ளி ஆங்கில வழி வகுப்புகளில் ஆங்கிலத்தில் மட்டுமே பேச ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்

அரசு பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளில் ஆசிரியர்கள் ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளது. அரசு
பள்ளியில் முதல் வகுப்பு மற்றும் 6ம் வகுப்பில் ஆங்கில வழிக்கல்வி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆங்கில வழியில் 6ம் வகுப்பு மற்றும் 7ம் வகுப்பிற்கு பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கான பயிற்சி நேற்று குகை மேல்நிலைப் பள்ளியில் அளிக்கப்பட்டது. இதில் 180 ஆசிரியர்கள் பங்கேற்றனர். ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் உள்ளிட்ட பாடங்களை ஆங்கிலத்தில் நடத்துவது குறித்து விளக்கப்பட்டது. டயட் விரிவுரையாளர்கள் பாடத்துக்கு இருவர் வீதம் பயிற்சி அளித்தனர். இது குறித்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஈஸ்வரன் கூறியதாவது: அரசு பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளில் ஆசிரியர்கள் ஆங்கிலத்தில் பேசவும், பாடங்களை முழுமையாக ஆங்கில மொழியில் கற்றுத்தரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக டயட் விரிவுரையாளர்கள் மூலம் தமிழ் தவிர மற்ற பாடங்களை ஆங்கிலத்தில் நடத்துவது குறித்து இரண்டு நாள் பயிற்சி ஆசிரியர்களுக்கு அளிக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் பேச மாணவர்களை ஊக்குவித்தல் மற்றும் ஆங்கில வழியில் தொடர் முழு மதிப்பீட்டு முறையை நடைமுறைப்படுத்துவது குறித்தும் ஆசிரியர்களுக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது. மாணவர்களின் முழுத்திறனையும் வெளிக்கொண்டு வரும் வகையிலும், தனித்திறன்களை மேம்படுத்திக் கொள்ள வாய்ப்பளிக்கும் விதமாகவும் வகுப்பறையின் சூழலை மாற்றவும் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. ஆங்கில வழி வகுப்பில் ஆசிரியர்கள் ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும் என்பது நடைமுறை படுத்தப்படுகிறது. இவ்வாறு முதன்மைக்கல்வி அலுவலர் ஈஸ்வரன் கூறினார்.

10/24/2013

"காத்து வாங்கும்' அரசு பள்ளிகள் ஒருங்கிணைக்க புதிய திட்டம்

அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக கொண்ட பள்ளிகளை ஒருங்கிணைக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதுசார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு (சி.இ.ஓ.,) உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 48 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளும், 3000க்கும் மேற்பட்ட உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும், கல்வித்தரத்தை மேம்படுத்தவும், அரசு பல்வேறு நலத்திட்டங்களுடன் கூடிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்க இலவச சீருடை, பென்சில், நோட்டு புத்தகங்கள், காலணிகள் போன்றவை மட்டும் இன்றி ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஆங்கில வழிக்கல்வி, கணினி வழி கல்வி போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படுகின்றன. இருப்பினும், மாணவர்கள் சேர்க்கை நாளுக்கு நாள் வெகுவாக குறைந்து வருகிறது. சொற்ப எண்ணிக்கையில் மாணவர்கள் பயிலும் பள்ளிகளுக்கு ஆசிரியர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், பராமரிப்பு செலவு என அரசுக்கு செலவினங்கள் தேவையின்றி அதிகமாக உள்ளது. எனவே 10 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளிகளின் பெயர் பட்டியல், ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் பெறப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து குறைவான மாணவர்கள் எண்ணிக்கையை கொண்ட பள்ளிகளை, வேறு பள்ளியுடன் ஒருங்கிணைக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பள்ளிகளை ஒருங்கிணைப்பதில், பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. தெளிவான விதிமுறைகள் ஏதும், கொடுக்கப்படவில்லை. கட்டாய கல்வி உரிமைப்படி, ஒரு கி.மீ., தொலைவுக்குள் ஒரு தொடக்கப் பள்ளி, 3 கி.மீ., தொலைவில் ஒரு நடுநிலைப்பள்ளி, 5 கி.மீ., தொலைவில் உயர்நிலைப்பள்ளி, 8 கி.மீ., தொலைவில், ஒரு மேல்நிலைப்பள்ளி செயல்படவேண்டும். பள்ளிகளை ஒருங்கிணைக்கும்பட்சத்தில், இந்த விதிமுறைகள் மீறப்படலாம். இதுசார்ந்த ஆய்வுகளை, மாவட்ட அளவில் மேற்கொண்டு வருகிறோம். மேற்கொண்டு மாணவர்கள் சேர வாய்ப்பில்லை எனும் பட்சத்தில் மட்டும், பள்ளிகள் ஒருங்கிணைக்கப்படும். மாணவர்களின் கல்விக்கு எவ்வித பாதிப்பும் இன்றி இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள தலைமை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில மையக் கூட்டம்

அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்க தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில மையக் கூட்டம் வருகிற 27/10/2013 அன்று மாநில அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் முக்கிய முடிவுகள் எதிர்பார்க்கப்படுகிறது.

தாவி ஓடும் இரட்டைப்பட்டம் வழக்கு. தவிக்கும் பதவி உயர்வு ஆசிரியர்கள். முடிவு எப்போது?

இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் முதல் அமர்வில் வரிசை எண் 35ல் விசாரணைக்கு வந்த இரட்டைப்பட்டம்வழக்கு சரியாக பிற்பகல் 2.25க்ககு அதன் எல்கையை தொட்டது.  அதற்கு முன்னும், பின்னும் ஒரு பெரிய குழு விசாரணை நிலுவையில் இருந்ததால் வழக்கம் போல் வருகிற 30.10.2013- புதன்கிழமை இவ்வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது. நாளை நிறைவடையும் என நம்பிக்கையுடன் இருந்த பதவி உயர்வு ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்ததுதான் மிச்சம். இதை வைத்து மெகா சீரியல் வெளியிட்டால் நல்லா இலாபம் கிடைக்கும் என்பதே இப்போதைய பேச்சு. பொறுத்திருப்போம் புதன்கிழமை வரை.
தகவல் பரிமாற்றம்: தோழர் கலியமூர்த்தி விழுப்புரம்.

10/23/2013

PRIST University - படித்தால் ஊக்க ஊதிய உயர்வு இல்லை

தேவர் ஜெயந்தி: சிவகங்கை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு - தி இந்து

தேவர் ஜெயந்தி: சிவகங்கை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு - தி இந்து

முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியல் இப்போதைக்கு வராது?

சென்னை: ஒரு இடத்திற்கு, ஒருவர் வீதம், வெறும், 2,276 பேருக்கு, சான்றிதழ் சரிபார்ப்பை நடத்தி, முதுகலை ஆசிரியர், இறுதி தேர்வு பட்டியலை, விரைந்து வெளியிட, டி.ஆர்.பி., திட்டமிட்டிருந்த நிலையில், ஐகோர்ட், மதுரை கிளை வெளியிட்ட உத்தரவு காரணமாக, தேர்வெழுதிய, 1.6 லட்சம் பேருக்கும், சான்றிதழ் சரிபார்ப்பு நடத்த உள்ளது.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில், காலியாக உள்ள, 2,881 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஜூலை, 21ல், போட்டித்தேர்வு நடந்தது. அடுத்தடுத்த பணிகளை, விரைந்து முடிக்க, டி.ஆர்.பி., நடவடிக்கை எடுத்த நிலையில், தமிழ் பாட கேள்வித்தாளில், 47 கேள்விகள், பிழையாக அச்சடிக்கப்பட்டிருந்ததாக கூறி, ஐகோர்ட், மதுரை கிளையில், ஒரு தேர்வர், வழக்கு தொடர்ந்தார். தமிழ் பாடத்திற்கு, மறு தேர்வை நடத்த, கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மறு தேர்வை நடத்துவதா, அல்லது கோர்ட் தீர்ப்பை எதிர்த்து, மேல் முறையீடு செய்வதா என, இதுவரை, டி.ஆர்.பி., முடிவு எடுக்கவில்லை. இந்நிலையில், தமிழ் பாடம் தவிர்த்து, இதர பாடங்களுக்கு, ஒரு பணிக்கு, ஒருவர் வீதம், 2,276 பேருக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு பணி, நேற்று துவங்கியது. மாநிலம் முழுவதும், 14 மையங்களில், நேற்று, சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. இன்றும், தொடர்ந்து நடக்கிறது.
இந்நிலையில், வரலாறு பாடத்தில், 111 மதிப்பெண் எடுத்தும், தமக்கு, சான்றிதழ் சரிபார்ப்பிற்கான அழைப்புக் கடிதத்தை, டி.ஆர்.பி., அனுப்பவில்லை என்றும், இதே மதிப்பெண் எடுத்த மற்றவர்களுக்கு, அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறி, நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த, ஜான் ஆபிரகாம் என்பவர், ஐகோர்ட், மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இதேபோல், விலங்கியல் பாடம் சம்பந்தமாகவும், வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி, நாகமுத்து, ஒவ்வொரு பாடத்திலும், கடைசி, "கட் ஆப்" மதிப்பெண் பெற்றவர் வரை, அனைவருக்கும், சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி, அதன் பட்டியலை, கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும்" என உத்தரவிட்டார். இதன் காரணமாக, தேர்வெழுதிய, 1.6 லட்சம் பேருக்கும், சான்றிதழ் சரிபார்ப்பு நடத்த வேண்டிய நிலைக்கு, டி.ஆர்.பி., தள்ளப்பட்டுள்ளது.
இவ்வளவு பேருக்கும், சான்றிதழ் சரிபார்ப்பு நடத்துவது குறித்த அட்டவணையை, விரைவில் தயாரிக்க, டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது. எனவே, இப்போதைக்கு, தேர்வுப் பட்டியல் வெளிவர வாய்ப்பில்லை என, தேர்வர்கள் புலம்ப ஆரம்பித்து விட்டனர்.
முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் ஏற்படும் தாமதத்தால், மாணவ, மாணவியர் பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் பாதிக்காமல் இருக்க, 2,645 முதுகலை ஆசிரியர்களும், 3,900 பட்டதாரி ஆசிரியர்களும், தற்காலிக அடிப்படையில், பணி நியமனம் செய்ய, கடந்த, 7ம் தேதி, முதல்வர் உத்தரவிட்டார்.
இதுகுறித்து, பள்ளிக் கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகனிடம் கேட்ட போது, "80 சதவீத ஆசிரியர், பணியில் சேர்ந்துவிட்டனர். மீதம் உள்ள, 20 சதவீத ஆசிரியர்களும், இந்த வார இறுதிக்குள் சேர்ந்துவிடுவர்" என்றார். "ரெகுலர்" முதுகலை ஆசிரியர் நியமனம் தள்ளிப் போகும் நிலையில், தற்காலிக ஆசிரியர் பணி நியமனம், மாணவர்களுக்கு, பெரிதும் பயனளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கணித ஆசிரியரின் கணக்கை முடித்த மாணவன் தற்கொலை

வாஷிங்டன்: அமெரிக்காவில், கணித ஆசிரியரை சுட்டு கொன்று விட்டு, மாணவன் ஒருவன் தற்கொலை செய்து கொண்டான். அமெரிக்காவில், துப்பாக்கி சூடு சம்பவங்கள் சகஜமாகி விட்டன. நிவேடா மாகாணத்தில், உள்ள உயர்நிலை, பள்ளியில், ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன், விளையாட்டு மைதானத்தில் நுழைந்து, அங்கு விளையாடி கொண்டிருந்த வகுப்பு தோழர்கள் மீது துப்பாக்கியால் சுட்டான். இதில், இரண்டு மாணவர்கள் காயமடைந்தனர். அங்கிருந்த கணக்கு ஆசிரியர், மைக்கேல் லேண்ட்ஸ்பெரி, 45, ஓடி வந்து, மாணவனை சமாதானப்படுத்தி, துப்பாக்கியை கீழே போடும் படி அறிவுறுத்தினார். ஆனால், அந்த மாணவன், ஆசிரியர் மைககேல் மீதும் சரமாரியாக சுட்டான். இதில் அவர் அங்கேயே உயிரிழந்தார்.
அங்கிருந்த மாணவர்கள் அனைவரும் அலறியடித்து கொண்டு ஓடி விட்டனர். சுற்று முற்றும் பார்த்த அந்த மாணவன், அதே துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு, தற்கொலை செய்து கொண்டான்.
எதற்காக மாணவர்களையும், ஆசிரியரையும் அந்த மாணவன் சுட்டான், என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

மாணவரும் ஆசிரியரும்

இந்தியாவின் வருங்காலமே இளைஞர்களின் கையில்தான் உள்ளது என அனைவரும் உரக்கக் கூறி வரும் நிலையில், இளைஞர்களின் அண்மைக்கால நடவடிக்கைகள் இந்த சமூகத்தில் எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதைப் பார்த்தால் அவை கவலை அளிக்கும் விதமாகவே உள்ளன.

தங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்ததற்காக தனியார் பொறியியல் கல்லூரி முதல்வரை கல்லூரி வளாகத்திலேயே மாணவர்கள் வெட்டிக் கொலை செய்வது என்பதைவிட கொடுஞ்செயல் வேறு எதுவும் கிடையாது.

ஆங்காங்கே, சில கலைக் கல்லூரி மற்றும் சட்டக் கல்லூரி மாணவர்களிடம் இருந்து மட்டுமே இதுவரை வன்முறைச் சம்பவங்களை கண்ட மக்களுக்கு பொறியியல் கல்லூரி மாணவர்களின் இந்தச் செயல் மாணவ சமுதாயத்திற்கு ஒரு கரும்புள்ளி என்றே கூறலாம்.

மாணவ பருவத்தில் பெற்றோரைவிட ஆசிரியர்களுடன்தான் அதிக நேரங்களைப் பகிர்ந்து கொள்ளும் நிலையில், ஏன் இதுபோன்ற குற்றச்செயல்கள் நடைபெறுகின்றன என்பதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன.

குறிப்பாக, ஆசிரியர்கள் தங்களுடன் நண்பர்களைப் போல பழகாமல் அடிமைத்தனத்துடன் நடத்துவதாக மாணவர்கள் தரப்பில் இருந்து குற்றச்சாட்டு எழுப்பப்படுகிறது.

படி.. படித்துக் கொண்டே இரு.. என்ற வார்த்தையைக் கேட்டாலே எரிச்சல் கொள்ளும் மாணவர்கள், படிக்காமல் எந்த உயர்ந்த இடத்தையும் தங்களால் எட்ட முடியாது என்பதை உணர மறுப்பது ஏன்?

ஒரு கல்லூரியை முதல்வரின் வேலை, தவறு செய்யும் மாணவர்களைக் கண்டறிந்து அவர்களை நல்வழிப்படுத்துவதுதான். அந்தப் பணியைத்தான் அண்மையில் கொலையுண்ட கல்லூரி முதல்வரும் செய்துள்ளார். அதற்காக, அவரை கொலை செய்வது என்பது வன்முறையின் உச்சமல்லவா?

ஒரு மாணவனின் எதிர்கால வாழ்க்கையைக் கெடுக்கும் வகையில் ஆசிரியர்கள் ஒருபோதும் செயல்பட மாட்டார்கள். ஆனால், தொடர்ந்து, வேண்டாத செயல்களில் ஈடுபட்டு, படிப்பில் கவனம் செலுத்தாமல் சுற்றித் திரியும் மாணவர்களையும் சற்று கண்டிக்கும் வகையில், லேசான மிரட்டல் தோணியில் பேசுவதும் ஆசிரியர்களின் கடமையே.

கல்வி விஷயத்தில் பெற்றோருக்கு இருக்கும் கவலையைவிட ஆசிரியர்களுக்கு அதிக கவலையும் பொறுப்பும் உண்டு என்பதை இளைய தலைமுறையினர் உணர்ந்து கொள்ள வேண்டும்.

நான்கு ஆண்டுகள் தாங்கள் படித்த படிப்பு கல்லூரி முதல்வரின் நடவடிக்கையால் வீணாகிவிடுமோ என்ற அச்சம்தான் இந்த கொலைக்கு காரணம் என கூறப்படுகிறது.

கல்லூரி படிப்பை முடித்தாலும் வாழ்க்கையில் நம்மால் ஒன்றும் செய்துவிட முடியாது என நினைத்துக் கொண்டு அதற்கு பதிலாக முதல்வரை பழிவாங்கிவிட்டு சிறையில் வாழ்க்கையை ஓட்டிவிடலாமே என்ற எண்ணத்துக்கு மாணவர்களை தள்ளியது எது என்பதுதான் தற்போதைய இமாலயக் கேள்வி.

ஒட்டுமொத்த மாணவ சமுதாயமும் இத்தகைய மனநிலையில்தான் இருக்கிறது என எண்ணுவதும் தவறே. படிப்பை மட்டுமே வேலையாகக் கொண்டு புதிய புதிய கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்தும் மாணவர்களையும், விளையாட்டுத் துறையில் சாதனைகளை படைக்கும் மாணவர்களையும் நாம் தினம் தினம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

கல்லூரிக்கு படிக்கத்தான் செல்கிறோம் என்ற உறுதியும், தங்களுக்கு ஆர்வம் உள்ள கலை, விளையாட்டு, அறிவியல் கண்டுபிடிப்புகள் போன்றவற்றில் கவனத்தைச் செலுத்தும் முனைப்பும் மாணவர்களுக்கு வர வேண்டும்.

ஊதாரித்தனமாக சுற்றினால் போதும் என்ற மனநிலைக்கு வரும் ஒருசில மாணவர்களால் ஒட்டுமொத்த இளைய தலைமுறைக்குமே அவப்பெயர் ஏற்பட்டிருப்பது வருத்தப்பட வேண்டிய விஷயமாகும்.

மாணவப் பருவம் என்பது கல்வியையும், ஒழுக்கத்தையும் கற்றுக்கொள்வதற்கான பருவமாகும். அதைவிட்டுவிட்டு சில அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடுவது இளைய தலைமுறையினருக்கு அழகல்ல.

பெற்றோரும், ஆசிரியர்களும் தங்களது நலனுக்காகத்தான் சற்று கடுமையாக நடந்து கொள்கிறார்கள் என்ற உண்மையை மட்டும் புரிந்து கொள்ளுங்கள் மாணவர்களே.

பெரியோர் சொல் கேட்டு அறிவுசார்ந்தவர்களாக உருவாகி புதிய உலைகைப் படைத்து பெற்றோருக்கும், நாட்டுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் செயல்படுவோம் என்ற உறுதிமொழியை இளைஞர்கள் அனைவரும் ஏற்க வேண்டும்.
தி. இன்பராஜ்/
தினமணி /22.10.2013

Education department starts drive against unrecognized schools

COIMBATORE: Sixty eight nursery and primary schools without the mandatory state recognition have been issued notices by the department of elementary education. If they do not comply and obtain recognition, they will be sent a second round of notices by the end of November. If these continue to function further without the required certificates, they will be directed to shut shop before March, so that the students in these schools could be admitted in other schools. Officials believe that most of these schools will not be able to meet the conditions mandated by the government and will have to be closed down.

P Jeyaraj, district elementary education officer (DEEO), said after a meeting of assistant education officers (AEO)s on Tuesday that unauthorised schools were issued notices in the last few weeks. "About three months ago, head masters of government schools were asked to identify schools in their locality. Notices were sent to those schools that were found to be functioning without approval," he said. They have been asked to get the various certificates required to run a school.

A team of officials from the education department will visit these schools next week and hold inspections and note the progress made with regard to the required norms. Certifications including stability certificate, fire and safety certificate as well as certificates from the department of health and the city corporation are necessary to run a school. Most important of these conditions is the minimum land required to run a school. Schools in corporation limits should have a minimum of 33 cents, in municipality areas 55 cents, town panchayat an acre and village panchayats three acre to function. If these schools fail to comply with all the norms, they will be directed to close down before the end of the academic year.

According to S Mayadevi, president, private school welfare association, many schools have not renewed their licences as they do not have the required land. The criterion on minimum land was imposed only a year ago. Obtaining an acre to three acres in the rural areas has become impossible, she said.

She also said the closure of schools will affect the students. Around 30 schools were closed at the start of this academic year for similar reasons. "This had affected the students who found it hard to get admission in other schools. A similar situation could arise," she said. She wondered how many government school followed the norms.

However, Jeyaraj insisted that all the unauthorised schools will be closed down before March, so that students can obtain admission in other schools.

The certificates required for schools

Stability certificate

Fire and safety certificate

'D-Form' certificate from tahsildar

Sanitary certificate from the health department

Approval from Local Planning Authority (LPA) for building plan

Minimum land as mandated by the state government

10/22/2013

சான்றிதழ்களை சமர்ப்பிக்கா விட்டால் தேர்வு ரத்தாகி விடும் - TRB

சான்றிதழ்களை சமர்ப்பிக்கா விட்டால் தேர்வு ரத்தாகி விடும், முதுகலை ஆசிரியர் விவகாரத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் எச்சரிக்கை

முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு, வரும், 22, 23ம் தேதிகளில், மாநிலம் முழுவதும், 14 இடங்களில் நடக்கின்றன. இதில் பங்கேற்பதற்கான அழைப்பு கடிதங்கள், டி.ஆர்.பி., இணையதளத்தில், நேற்று வெளியிடப்பட்டன. "சான்றிதழ் சரிபார்ப்பின்போது, உரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்க தவறினால், சம்பந்தப்பட்ட தேர்வர், தகுதியற்றவராக கருதி, நீக்கப்படுவார்" என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.

தொடக்கக் கல்வி துறையில் நிர்வாக மாறுதலுக்கு முன்னுரிமை அளிக்க அரசு உத்தரவு

தொடக்கக்கல்வித்துறையில் பொது மாறுதல் கலந்தாய்வின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளில் நிர்வாக மாறுதல் குறித்து பல்வேறு சிக்கல்கள் நீடித்து வந்தது. மேலும் இப்பிரச்சனையின் காரணமாக திண்டுக்கல் மாவட்டம் குஜிலம்பாறை மற்றும் வத்தலக்குண்டு ஒன்றியங்களில் 2013-14ஆம் ஆண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறவில்லை. இப்பிரச்சனை குறித்து ஆசிரியர் சங்கங்கள் தமிழக அரசுக்கும், இயக்குநரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இதையடுத்து இப்பிரச்சனைக்கு தீர்வு காணும் விதமாக தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதையடுத்து மேற்காணும் ஒன்றியங்களில் ஆசிரியர்களின் எதிர்ப்பால் தடைப்பட்ட கலந்தாய்வு விரைவில் நடைபெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அப்பாவி இடைநிலை ஆசிரியர்களை ஏமாற்றாதீர்கள்

சகோதர இயக்கங்களை குறை சொல்ல வேண்டும் ஆசை எமக்கு இல்லை. அதற்கான நேரமும் இல்லை. இன்றைய சூழலில் ஒன்று இணைந்தால் எளிதில் இலக்கை அடையலாம் என்பதன் அவாவே எமது பதிவுகள். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் இப்பொழுது தொடக்கக்கல்வித் துறையில் உள்ள இயக்கங்கள் ஒன்று சேர்ந்து போராடி இயக்கங்களின் அடி நாதமாக உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு தீர்வு காணப்படவில்லையைன்றால் எதிர்கால சமுதாயம் நிச்சயம் மன்னிக்காது. தலைமைகளே சிந்தியுங்கள். எங்களுக்காகத்தான் இயக்கங்கள். தலைவர்களுக்காக இல்லை. இது அரசியல் கட்சி அல்ல. அறிவாளிகளின் கூட்டம். இணைவது எங்கே தடைபடுகிறது என்று சிந்தியுங்கள். தடையை தகர்த்தெறியுங்கள். அப்பாவி இடைநிலை ஆசிரியர்களை ஏமாற்றாதீர்கள். தலைமைகளை நம்பும் கூட்டம் இருக்கத்தான் செய்கின்றன. நம்பிக்கை துரோகம் வேண்டாம்.
வேண்டுகோளுடன்......
முத்துப்பாண்டியன்@TNPTF

TRB தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு

தேர்வு பயம் போக்க உளவியல் பயிற்சி

TET தேர்வு முடிவு எப்போது?

டிட்டோ-ஜாக் பொறுப்பாளர்களுக்கு மீண்டும் TNPTF -ன் வேண்டுகோள்