சிங்கம்புணரி ஆசிரியர்-அரசு ஊழியர் சிக்கன நாணய கூட்டுறவு சங்கம் சிங்கம்புணரி மற்றும் எஸ்.புதூர் ஒன்றியங்களில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை உறுப்பினர்களாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் தன் அவசர தேவைக்காக கடன் கோரி பல மாதங்களாக தவம் கிடக்க வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது. கூட்டுறவுத் தேர்தல் முடிந்தால் எல்லாம் சரியாகி விடும் என்ற சிறப்பு அலுவலரின் வாக்குறுதி காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக நிறுத்தப்பட்டு தலைவாராக வெற்றி பெற்றுள்ள கூட்டுறவு சங்க தலைவர் திரு. சுரேஷ் அவர்களிடம் இயக்கம் தன்னுடைய கடுமையான அதிர்ப்தியை தெரிவித்துள்ளது. மாவட்ட அதிகாரிகளிடம் இது குறித்து விரிவாக பேசியுள்ளதாக நம்மிடம் தெரிவித்துள்ளார். இத்தனைக்கும் இச்சங்கத்தில் எவ்வித வராக்கடனும் இல்லை. பங்குத் தொகையும் அதிகமாகவே உள்ளது. மாவட்ட பதிவாளர் மற்ற நலிவடைந்த சங்கங்களுக்கு நிதியை திருப்பி விடுவதால் தொய்வு ஏற்படுவதாக தெரிகிறது. இந்த நிலையை சரி செய்து உடனடியாக மாவட்ட நிர்வாகம் கடனை அனுமதிக்காவிட்டால் இயக்கம் தன்னுடைய இயக்க நடவடிக்கையை மேற்கொள்ள தயாராகி வருகிறது. சிக்கன நாணய சங்கத் தலைவர் திரு.சுரேஷ் அவர்களிடம் TNPTF தன்னுடைய கடுமையான கோபத்தை எழுத்து பூர்வமாக தெரிவித்துள்ளது. இயக்கம் சார்பாக வெற்றியடைந்த மற்ற இயக்குநர்களிடமும் இது குறித்து தன்னுடைய கவலையை பகிர்ந்துள்ளது. நிலைமை மாறாவிட்டால் மாற்றியமைக்க TNPTF தயங்காது என்பது அனைவரும் அறிந்ததே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக