பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

6/30/2011

What is the differences between EPF, GPF and PPF?

EPF- Employees Provident Fund
GPF – General Pension Fund
PPF – Public Provident Fund
GPF – General Provident Fund which is for the Government Employees
PPF – Individuals can save to a maximum of Rs.60000/- in a year in the account. Account can be maintained in a Post Office.
EPF – Employees Provident Fund for Private sector where 12% of Employees share and 12 % of Employer’s share of Basic Salary + DA is deducted and remitted to PF Authorities
PF vs PPF: What’s the difference ?
1. What is PPF and PF?
EPF/ PF (Employees Provident Fund / Provident Fund)
The Employee Provident Fund, or provident fund as it is normally referred to, is a retirement benefit scheme that is available to salaried employees.
Under this scheme, a stipulated amount (currently 12%) is deducted from the employee’s salary and contributed towards the fund. This amount is decided by the government.
The employer also contributes an equal amount to the fund.
However, an employee can contribute more than the stipulated amount if the scheme allows for it. So, let’s say the employee decides 15% must be deducted towards the EPF. In this case, the employer is not obligated to pay any contribution over and above the amount as stipulated, which is 12%.
PPF (Public Provident Fund)
The Public Provident Fund has been established by the central government. You can voluntarily decide to open one. You need not be a salaried individual, you could be a consultant, a freelancer or even working on a contract basis. You can also open this account if you are not earning.
Any individual can open a PPF account in any nationalised bank or its branches that handle PPF accounts. You can also open it at the head post office or certain select post offices.
The minimum amount to be deposited in this account is Rs 500 per year. The maximum amount you can deposit every year is Rs 70,000.
2. What is the return on this investment?
EPF: 8.5% per annum
PPF: 8% per annum
3. How long is the money blocked?
EPF
The amount accumulated in the PF is paid at the time of retirement or resignation. Or, it can be transferred from one company to the other if one changes jobs.
In case of the death of the employee, the accumulated balance is paid to the legal heir.
PPF
The accumulated sum is repayable after 15 years.
The entire balance can be withdrawn on maturity, that is, after 15 years of the close of the financial year in which you opened the account.
It can be extended for a period of five years after that. During these five years, you earn the rate of interest and can also make fresh deposits.
Save tax and get rich
4. What is the tax impact?
EPF
The amount you invest is eligible for deduction under the Rs 1,00,000 limit of Section 80C.
If you have worked continuously for a period of five years, the withdrawal of PF is not taxed.
If you have not worked for at least five years, but the PF has been transferred to the new employer, then too it is not taxed.
The tenure of employment with the new employer is included in computing the total of five years.
If you withdraw it before completion of five years, it is taxed.
But if your employment is terminated due to ill-health, the PF withdrawal is not taxed.
PPF
The amount you invest is eligible for deduction under the Rs 1,00,000 limit of Section 80C.
On maturity, you pay absolutely no tax.
5. What if you need the money?
EPF
If you urgently need the money, you can take a loan on your PF.
You can also make a premature withdrawal on the condition that you are withdrawing the money for your daughter’s wedding (not son or not even yours) or you are buying a home.
To find out the details, you will have to talk to your employer and then get in touch with the EPF office (your employer will help you out with this).
PPF
You can take a loan on the PPF from the third year of opening your account to the sixth year. So, if the account is opened during the financial year 1997-98, the first loan can be taken during financial year 1999-2000 (the financial year is from April 1 to March 31).
The loan amount will be up to a maximum of 25% of the balance in your account at the end of the first financial year. In this case, it will be March 31, 1998.
You can make withdrawals during any one year from the sixth year. You are allowed to withdraw 50% of the balance at the end of the fourth year, preceding the year in which the amount is withdrawn or the end of the preceding year whichever is lower.
For example, if the account was opened in 1993-94 and the first withdrawal was made during 1999-2000, the amount you can withdraw is limited to 50% of the balance as on March 31, 1996, or March 31, 1999, whichever is lower.
If the account extended beyond 15 years, partial withdrawal — up to 60% of the balance you have at the end of the 15 year period — is allowed.
Courtesy : rediff.com

சமச்சீர் கல்விக் குழுவின் ஆய்வு முடிந்தது-ஜூலை 5ல் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்!

சென்னை: உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சமச்சீர் கல்வித் திட்டத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவின் ஆய்வு முடிவடைந்துள்ளது. இதையடுத்து ஜூலை 5ம் தேதி இக்குழு தனது அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறது.

1 மற்றும் 6 ம் வகுப்புகளுக்கு இந்த ஆண்டும் சமச்சீர் கல்வித் திட்டம் தொடர வேண்டும். பிற வகுப்புகளுக்கு இதை அமல்படுத்துவது குறித்து குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி குழு அமைக்கப்பட்டது.

தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி தலைமையிலான இக்குழுவில், மத்திய இடைநிலைக் கல்வி வாரிய முன்னாள் இயக்குனர் (கல்வி) ஜி.பாலசுப்பிரமணியன், சென்னை லேடி ஆண்டாள் மெட்ரிகுலேஷன் பள்ளி மற்றும் தாம்பரத்தில் உள்ள சென்னை சேவா சதன் ஆலோசகர் விஜயலட்சுமி சீனிவாசன், சென்னை கோபாலபுரம் டி.ஏ.வி.பள்ளிகள் குழுமம் நிறுவனர் மற்றும் செயலாளர் சி.ஜெயதேவ், சென்னை பத்மா சேஷாத்ரி பாலபவன் பள்ளிகள் முதல்வர் மற்றும் இயக்குனர் டாக்டர் ஒய்.ஜி.பார்த்தசாரதி, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன பிரதிநிதிகளான புதுடெல்லி அறிவியல் மற்றும் கணிதவியல் கல்வித்துறை பேராசிரியர் பி.கே.திரிபாதி, புதுடெல்லி சமூக அறிவியல் துறை பேராசிரியர் அனில் சேத்தி, பள்ளிக் கல்வித் துறை செயலாளர் டி.சபீதா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் வசுந்தராதேவி குழுவின் உறுப்பினர் செயலாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்தக் குழு 3 முறை கூடி ஆலோசனை நடத்தியிருந்தது. இந்த நிலையில் நேற்று இறுதி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து ஜூலை 5ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் தங்களது ஆய்வு முடிவுகளை குழு சமர்ப்பிக்கும் என்று குழு உறுப்பினரான சபீதா தெரிவித்தார்.

ஜூலை 6ம் தேதிக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது நினைவிருக்கலாம். அறிக்கை தாக்கல் செய்த பின்னர் அதை ஒரு வாரத்திற்குள் தினசரி விசாரணை நடத்தி தீர்ப்பு அளிக்க வேண்டும் என்று உயர்நீதி்மன்றத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு களப்பயணம் குறித்த அட்டவணை வெளியீடு

பழநி: பள்ளிகளுக்கான பாடவேளை அட்டவணையை, அரசு வெளியிட்டுள்ளது. வேலைநாளில், மாணவர்களின் களப்பயணத்திற்கு முக்கியத்துவம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜூலை 15 வரை செல்லத்தக்க பத்தாம் வகுப்பு வரையிலான(ஒன்று, ஆறாம் வகுப்புகளைத் தவிர), பாடவேளை அட்டவணையை பள்ளிக்கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ளது. காலை 9 முதல், மாலை 3.30 மணிவரை பள்ளிநேரம். காலை 11 முதல் 11.10 மணிவரை இடைவேளை. பகல் 12 முதல் ஒரு மணிவரை உணவு இடைவேளை, என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பகுதிக்கேற்ப, பள்ளி துவங்கும் நேரத்தை மாற்றியமைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என, தலா ஒரு மணிநேரத்திற்கு ஒரு பாடவேளை ஒதுக்க வேண்டும். கடைசி பாடவேளைக்கு 30 நிமிடத்தில், கல்வி சார்ந்த பிற செயல்பாடுகள் இடம்பெறும். தமிழ், ஆங்கில பாடவேளைகளில் கேட்டல், பேசுதல் திறன் வளர்ப்பு, கணித பாடவேளையில் கூட்டல், கழித்தல், பெருக்கல், வரைபடம், புள்ளி வரைபடம் மற்றும் பொருளாதாரம், இந்திய அரசியலமைப்பு தொடர்பான தகவல்களை கற்பிக்க வேண்டும். இது தவிர சர்வசிக்ஷா அபியான் மூலம் கடந்தாண்டுவரை வழங்கப்பட்ட 409 புத்தகங்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம். கல்வி சார்ந்த பிற செயல்பாடுகளில், சுற்றுலா, மனநலம், உடல்நலம், சுகாதாரம், சமூக, கலாசார பழக்கங்கள், ஊடகம், கம்ப்யூட்டர், இணையதளம் வாயிலான அறிவு மேம்பாடு போன்றவை இடம்பெறும். வேலைநாளில், மாணவர்களுக்கான களப்பயணத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
Source: Dinamalar

துவக்கப்பள்ளியில் இருவகை பாடத்திட்டம்

நாமக்கல்: துவக்கப்பள்ளியில் சமச்சீர் மற்றும் ஏ.பி.எல்., என, இருவகையான பாடத்திட்ட முறையில் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டிய நிலை உள்ளது. அதில், "ஏ.பி.எல்., திட்டத்தை மறு பரிசீலனை செய்து, புத்தகம் மூலம் மாணவர்கள் பாடம் கற்கும் வழக்கத்தை நடைமுறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகத்தில், 40 ஆயிரத்துக்கும் அதிகமான அரசு, அரசு உதவி பெறும் துவக்க, நடுநிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றது. பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியரின் புத்தக்க சுமையை குறைக்கும் வகையில், கடந்த, 2004ம் ஆண்டு ஏ.பி.எல்., (செயல்வழிக் கற்றல்) முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறையில், மாணவர்கள் புத்தகம் இன்றி அட்டைகளில் உள்ள படங்களை பார்த்து கல்வி கற்க வேண்டும்.இம்முறை, முதலில் ஒவ்வொரு யூனியனில் உள்ள பத்து பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்பின், 2007ம் ஆண்டு 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளிலும் ஏ.பி.எல்., கல்வி முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.

இப்பாடத் திட்டத்தில், ஒவ்வொரு வகுப்பிலும் ஒரு பாடத்துக்கு குறிப்பிட்ட படிநிலை உள்ளது. அந்த படிநிலை நிறைவு செய்யும் மாணவர்கள், அடுத்தடுத்த வகுப்புக்கு செல்லலாம். இம்முறையில், தேர்வு எதுவும் நடத்துவதில்லை. எனவே, இப்பாடத்திட்ட முறைக்கு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.இச்சூழலில், கடந்த ஆண்டு, 1 மற்றும் 6ம் வகுப்புக்கு சமச்ச்சீர் கல்வி முறை கொண்டு வரப்பட்டது. வரும் கல்வியாண்டு முதல், 1 முதல் எஸ்.எஸ்.எல்.ஸி., வரை உள்ள அனைத்து வகுப்புக்கும் சமச்சீர் கல்வி முறை கொண்டு வரப்படும் என, கடந்த தி.மு.க., ஆட்சியில் அறிவிக்கப்பட்டது.
அதை எதிர்த்து தற்போதைய அரசு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில், 1 மற்றும் 6ம் வகுப்புக்கு சமச்சீர் கல்வி முறை அமல்படுத்த வேண்டும். மற்ற வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி முறையிலான பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக குழு அமைத்து அறிக்கை தயாரிக்க வேண்டும் என, உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.அந்த குழுவினர் அளிக்கும் அறிக்கைக்கு பின்னரே, 2, 3, 4, 5, 7, 8, 9 மற்றும் எஸ்.எஸ்.எல்.ஸி., வரை எந்த முறையிலான பாடம் தொடரும் எனத் தெரியவரும். இது ஒரு புறம் இருந்தாலும், துவக்கப் பள்ளிகளில் ஏ.பி.எல்., திட்டம் நடைமுறையில் உள்ளது. அதில், 1ம் வகுப்பு சமச்சீர் கல்வி முறை உள்ளதால், அந்த வகுப்பினர் மட்டும் புத்தகம் மூலம் பாடம் படிக்கின்றனர். மற்ற வகுப்பினருக்கு ஏ.பி.எல்., திட்டம் உள்ளது.துவக்கப்பள்ளியில் இரு வகையான பாடத்திட்டம் நடைமுறையில் உள்ள சூழலில், தற்போது அமைக்கப்பட்டுள்ள குழு, சமச்சீர் கல்வி முறையை அமல்படுத்தும்படி அறிக்கை அளித்தால், அப்பாடத்துக்கு ஏற்றாற் போல், ஏ.பி.எல்., கார்டு அடித்து தரவேண்டும்.பழைய பாடத்திட்டம் தொடர வேண்டும் என அறிக்கை அளித்தால், புதிய ஏ.பி.எல்., கார்டுகள் வழங்க வேண்டும். இப்பிரச்னை காரணமாக எந்த முறையில் மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பது என்ற குழப்பமான சூழலில், துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் உள்ளனர்.இதுகுறித்து துவக்கப்பள்ளி ஆசியர்கள் சிலர் கூறியதாவது:கடந்த, 2004ம் ஆண்டு ஏ.பி.எல்., திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. படிப்படியாக அடுத்தடுத்த வகுப்புக்கு ஏ.பி.எல்., பாடத்திட்டம் கொண்டு செல்லவேண்டும்.

ஆனால், அதுபோல் இல்லாமல், 2007ம் ஆண்டு அனைத்து துவக்கப்பள்ளி வகுப்புக்கும் ஏ.பி.எல்., பாடத்திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டது.இத்திட்டத்தால், மாணவர்களது கல்வி பாதிக்கப்படுகிறது. துவக்கப்பள்ளியில் 1ம் வகுப்புக்கு சமச்சீர் கல்வி முறை, பிற வகுப்புக்கு ஏ.பி.எல்., பாடத்திட்டம் என இருவகையான கல்வி முறை நடைமுறையில் உள்ளது. இது, ஆசிரியர் மட்டுமின்றி மாணவர்களுக்கும் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.எனவே, துவக்கப்பள்ளியில் நடைமுறையில் உள்ள ஏ.பி.எல்., கல்வி முறையை, அரசு மறுபரிசீலனை செய்து, புத்தகம் மூலம் மாணவர்கள் கற்கும் முறையை கொண்டு வரவேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
Thanks: Dinamalar

6/29/2011

கட்டாய கல்வி சட்ட‌ம்: த‌மிழக அரசு‌க்கு உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் 6 வார‌ம் கெடு

கட்டாய கல்வி சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிகளை 6 வாரங்களுக்குள் அறிவிக்க வேண்டும் எ‌ன்று தமிழக அரசுக்கு உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது.

வழ‌க்க‌றிஞ‌ர் எஸ்.சத்திய சந்திரன் தாக்கல் செய்த பொது நல மனுவில், 6 வயது முதல் 14 வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாய இலவச கல்வியை அளிக்க வகை செய்யும் சட்டம் கடந்த 1.4.2010 அன்று அமலுக்கு வந்தது எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.

இந்த சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிகளை ஒவ்வொரு மாநில அரசும் உருவாக்க வேண்டும் என்று அந்த சட்டத்தின் 38வது பிரிவில் கூறப்பட்டுள்ளது எ‌ன்று‌ம் தமிழகத்தில் அதற்கான விதிகள் உறுதி செய்யப்படவில்லை எ‌ன்று‌ம் மனு‌வி‌ல் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இதனால் தமிழகத்தில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை அமலுக்கு கொண்டுவர முடியவில்லை எ‌ன்று தெ‌ரி‌வி‌த்து‌ள்ள ச‌ந்‌திர‌ன், எனவே அதற்கான விதிகளை உறுதிப்படுத்த உத்தரவிட வேண்டும் என்று மனு‌வி‌ல் கூறியு‌ள்ளா‌ர்.

இந்த மனுவை ‌விசா‌ரி‌த்த தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் கொ‌ண்ட அம‌ர்வு, இந்த விதிகளை முடிவு செய்து 6 வாரங்களுக்குள் தமிழக அரசு அறிவிக்கையாக வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

தமிழக அரசு வழங்கும் இலவச லேப்டாப்- மாணவர்கள் விவரம் சேகரிப்பு

சென்னை: தமிழக அரசு வழங்கும் இலவச லேப்டாப்களைப் பெறத் தகுதியான மாணவ, மாணவியர் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் எத்தனை லேப்டாப் தேவை என்ற விவரமும் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.

அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் ஒன், பிளஸ்டூ படிக்கும் மாணவர்களுக்கும், அரசு கல்லூரி மாணவர்களுக்கும் இலவசமாக லேப்டாப் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்தத் திட்டத்தை நிறைவேற்ற முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து லேப்டாப் தயாரிப்புக்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. சமீபத்தில் டெண்டரில் விண்ணப்பித்த நிறுவனங்களை நேரில் அழைத்து அரசின் தேவைகள் விளக்கிக் கூறப்பட்டன.

முதல் கட்டமாக 9.12 லட்சம் மாணவ, மாணவியருக்கு முதல்வர் ஜெயலலிதா செப்டம்பர் 15ம் தேதி இலவச லேப்டாப்களை வழங்கவுள்ளார்.

இந்த நிலையில் தற்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் எத்தனை மாணவ, மாணவியர் உள்ளனர், எத்தனை லேப்டாப்கள் தேவைப்படும் என்ற கணக்கெடுப்பு தற்போது நடந்து வருகிறது.

முதலில் பிளஸ் 1, பிளஸ்டூ மாணவர்களின் கணக்கெடுப்பு நடக்கிறது. அடுத்து கல்லூரி மாணவர்களின் விவரம் சேகரிக்கப்படும்.

திமுக அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வித் திட்டம் தரமற்றது- தமிழக அரசு

சென்னை: ஒரே மாதிரியான புத்தகம் வழங்குவது மட்டும் சமச்சீர் கல்வி அல்ல. மாணவர்களின் ஒட்டுமொத்த அறிவு வளர்ச்சிக்கு தேவையான தரமான பாடங்களை வழங்குவதுதான் சமச்சீர் கல்வி. ஆனால் முந்தைய அரசு தரமற்ற சமச்சீர் கல்வியை அமல்படுத்தியதால்தான் அதில் தமிழக அரசு திருத்தம் செய்தது என்று தமிழக அரசின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பூந்தமல்லி மனோன்மணி உள்ளிட்ட சிலர் சமச்சீர் கல்விக்கு தடை விதிக்கக் கூடாது என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. அதன்படி தமிழக அரசு பதில் மனுவைத் தாக்கல் செய்தது.

அதில் தமிழக அரசு கூறியுள்ளதாவது:

சமச்சீர் கல்விச் சட்டம்-2010 என்ற சட்டத்தை இயற்றிய போது கடந்த ஆட்சியாளர்கள், மத்திய அரசின் கட்டாய கல்விச் சட்டத்தை கருத்தில் கொள்ளவில்லை. கல்விச் சட்டங்களை இயற்றுவதற்கு அதுதான் மூலச்சட்டமாக உள்ளது.

தேசிய பாடத் திட்டங்கள் வடிவமைப்பு-2005-ல் வகுக்கப்பட்ட விதிமுறைகளுக்கு இணையாக சமச்சீர் பாடத்திட்டங்கள் தரமானதாக அமையவில்லை.

சமச்சீர் கல்வித் திட்டம் குறித்து அன்று ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கல்விக் குழு தமிழக அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தது. அதில் சில குறைகளை கல்விக் குழு சுட்டிக்காட்டியது. அந்த குறைகளை முந்தைய அரசு நிவர்த்தி செய்யவில்லை. சமச்சீர் கல்வி பற்றி உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், புத்தகங்களை தேர்வு செய்யும் உரிமை பள்ளிக்கூடங்களுக்கு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டாய கல்விச் சட்டத்திலேயும் இந்த ஷரத்து இடம்பெற்றுள்ளது. ஆனால் இதை நடைமுறையில் முந்தைய அரசு கடைபிடிக்கவில்லை. எனவே அது அந்த சட்டத்தை மீறுவதுபோல் அமைந்துவிட்டது.

சமச்சீர் கல்விக்கான பாடப்புத்தகங்களின் அட்டவணையை 15.5.10-க்குள் அங்கீகரிக்க வேண்டும் என்று சமச்சீர் கல்வி வாரியத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அதன்படி நடந்துகொள்ளவில்லை. கட்டாய கல்விச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய விதிமுறைகளை வகுக்காமல் சமச்சீர் கல்வியை அமல்படுத்த முடியாது.

இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் கடந்த 14-ந் தேதி உத்தரவு ஒன்றை பிறப்பித்து இருந்தது. அதை இரவு-பகலாக பாடுபட்டு நிறைவேற்றி வருகிறோம். சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி ஜுலை 5-ந் தேதிக்குள் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டால், மனுதாரரின் குற்றச்சாட்டு தவிடுபொடியாகிவிடும். மனுதாரரின் கோரிக்கை ஏற்கத்தக்கதாக இருக்காது.

ஒரே மாதிரியான புத்தகம் வழங்குவது மட்டும் சமச்சீர் கல்வி அல்ல. மாணவர்களின் ஒட்டுமொத்த அறிவு வளர்ச்சிக்கு தேவையான தரமான பாடங்களை வழங்குவதுதான் சமச்சீர் கல்வி.

ஆனால் சமூகநீதி என்ற பெயரில் தரமற்ற பாடத்திட்டத்தை மாணவர்கள் மீது திணிக்க மனுதாரர்கள் முயற்சி மேற்கொள்கின்றனர். சமச்சீர் பாடத்திட்டத்தை இந்த அரசு கைவிடவில்லை. அந்த கல்வியை நாங்கள் நீக்காமல், சமச்சீர் சட்டத்தின் 3-ம் பிரிவை மட்டும்தான் (சமச்சீர் கல்வியை 1 மற்றும் 6-ம் வகுப்பு தவிர மற்ற வகுப்புகளுக்கும் இந்த கல்வி ஆண்டில் இருந்து நடைமுறைப்படுத்துவதற்கு வகை செய்யும் பிரிவு) திருத்தம் செய்தோம்.

முத்துக்குமரன் கமிட்டி, விஜயகுமார் ஆகியோரின் பரிந்துரைப்படி, சமச்சீர் கல்விக்கான மாநில கவுன்சில் அமைக்கப்பட்டு இருக்க வேண்டும். இந்தக் கவுன்சில்தான் கல்வி தரத்துக்கான வழிமுறைகளை தொடர்ந்து வகுத்தளிக்கும். ஆனால் இந்த குழுவை முந்தைய அரசு ஏற்படுத்தவில்லை.

சமச்சீர் கல்வி விவகாரத்தில் அரசு அவசரமாக முடிவு செய்யவில்லை. தீர விசாரித்து, நிதானமாக யோசித்துதான் நடவடிக்கைகளை எடுத்தோம். எனவே இந்த நடவடிக்கைகளால் எந்த பிரிவினருக்கும் அரசியல் சாசனம் தரும் உரிமைகள் பாதிக்கப்படாது.

மத்திய அரசின் கட்டாய கல்விச் சட்டத்தை அமல்படுத்தாமல் இருந்தால், தமிழகத்தில் உள்ள 54,957 பள்ளிகளில் படிக்கும் ஒரு கோடியே 35 லட்சம் மாணவர்களும் பாதிக்கப்படுவார்கள்.

சமச்சீர் கல்வி புத்தகங்களுக்காக செலவிடப்பட்ட ரூ.200 கோடி வீணாய்ப் போகும் என்ற மனுதாரரின் குற்றச்சாட்டு மிகையானது. சட்டங்களை அமல்படுத்தவும் அவற்றில் குறையிருந்தால் அதை திருத்தி அமல்படுத்தவும் அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது.

தற்போது சுப்ரீம் கோர்ட் பிறப்பித்துள்ள உத்தரவுப்படி அமைக்கப்பட்ட குழு எப்படிப்பட்ட பாடத்திட்டத்தை வகுத்தளிக்கிறதோ, அதனடிப்படையிலான புத்தகங்களை மாணவர்களுக்கு இந்த அரசு வழங்கும் என்று உறுதி அளிக்கிறோம். எனவே மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

6/28/2011

மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங் ஜூன் 30-ல் ஆரம்பம்!

சென்னை: எம்பிபிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான கவுன்சிலிங் வரும் ஜூன் 30-ம் தேதி சென்னையில் ஆரம்பமாகிறது.

கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலக வளாகத்தில் இந்த கவுன்சிலிங் நடக்கிறது.

காலை 9 மணிக்குத் தொடங்கும் இந்த கவுன்சிலிங் பிற்பகல் 2 மணி வரை நடக்கிறது. ஜூன் 30-ம் தேதி முதல் ஜூலை 6-ம் தேதி வரை தொடர்ந்து பல்வேறு பிரிவினருக்கு தனித்தனியாக கவுன்சலிங் நடக்கிறது.

ஜூன் 30-ம் தேதி விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணவத்தினரின் பிள்ளைகளுக்கான இட ஒதுக்கீட்டுக்காக கவுன்சலிங் நடக்கிறது.

ஜுலை 1 ந் தேதி பொது கவுன்சிலிங் நடக்கிறது. இது பொதுப்பிரிவினருக்கானது. இதில் அதிக மார்க் எடுத்த அனைத்து சமூகதைச் சேர்ந்த மாணவ மாணவிகளும் கலந்து கொள்கின்றனர்.

ஜூலை 2 ந் தேதி பிற்பகல் 2 மணிக்கும், 4 ந் தேதி காலை 9 மணிக்கும், பிற்பகல் 2 மணிக்கும் பிற்படுத்தப்பட்ட மாணவ மாணவிகளுக்கு மட்டும் கவுன்சலிங் நடக்கும்.

ஜூலை 4 ந் தேதி பிற்பகல் 2 மணிக்கு முஸ்லிம்களுக்கும் நடத்தப்படுகிறது.

ஜூலை 5 ந் தேதி காலை 9 மணிக்கும், பிற்பகல் 2 மணிக்கும் மிகப் பிற்பட்டோருக்கு கவுன்சலிங் நடைபெறுகிறது.

6 ந் தேதி காலை 9 மணிக்கு தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு கவுன்சிலிங் நடக்க உள்ளது. அன்று பிற்பகல் 2 மணிக்கு அருந்ததியினருக்கும், மலைவாழ் பழங்குடி மக்களுக்கும் கவுன்சிலிங் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கவுன்சிலிங்குக்கு வரும் நேரம், கட் ஆப் மார்க் விவரம் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவ மாணவிகள் கவுன்சிலிங்குக்கு அவர்களுக்கு குறிப்பிட்டுள்ள நேரத்திற்கு ஒரு மணிநேரத்துக்கு முன்னதாக வந்துவிடவேண்டும். இதுகுறித்து விண்ணப்பித்த அனைத்து மாணவ மாணவிகளுக்கும் தனிப்பட்ட கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது. கடிதம் கிடைக்காவிட்டாலும் இணையதளத்தை பார்த்து கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளவேண்டும்.

பிளஸ் 2 தேர்வில் மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டில் மார்க் மாற்றம் இருந்தால் அதற்கான சரியான சான்றுடன் மாணவர்கள் வரவேண்டும். கவுன்சிலிங்கின்போது இருக்கும் இடம்தான் கொடுக்கப்படும்.

முதல் கட்ட கவுன்சிலிங்கின்போது மாணவர்கள் வரவில்லையென்றால் 2 வது கட்ட கவுன்சிலிங்குக்கு வர அனுமதி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

6/27/2011

டி.வி.டி, சி.டிக்கள் மூலம் பாடங்கள் கற்பித்தல்: எஜூசாட் மூலம் அதிகாரிகளுக்கு உத்தரவு

பள்ளிகளில் டி.வி.டி, சி.டிக்கள் மூலம் பாடங்களை கற்பிக்கவும், நாடகம், வில்லுப் பாட்டுகள் நடத்தவும் எஜூசாட் மூலம் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. 


தமிழகத்தில் 1 மற்றும் 6ம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி முறை அமல்படுத்தப்பட்டது. பிற வகுப்புகளில் எந்த பாடத் திட்டம் என்பது தொடர்பாக குழப்பம் நீடிப்பதால் பாட புத்தகங்கள் இல்லாமலேயே வகுப்புகள் நடந்து வருகிறது. எனினும், குழந்தை மைய இணைப்பு பயிற்சி மூலம் பள்ளிகளில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கான அட்டவணைகளும் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்கள், ஆசிரியர்கள் விபரம், கால அட்டவணை, டி.வி சி.டிக்கள் உட்பட பல்வேறு வசதிகள் குறித்து பள்ளி பார்வையும் நடத்தப்பட்டு இதற்கான அறிக்கையும் தயாரிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து குழந்தை மைய இணைப்பு பயிற்சி தொடர்பாக எஜூசாட் மூலம் வீடியோ கான்பரன்சிங் ஆலோசனை நேற்று தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நடந்தது. இதனை அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட இயக்குனர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் நடத்தினார்.
 
இதில் குழந்தை மைய இணைப்பு பயிற்சி, கால அட்டவணை தவிர பிற வசதிகளை பயன்படுத்தி பள்ளிகளில் வகுப்புகளை நடத்த அறிவுரை வழங்கப்பட்டது. புத்தக பூங்கொத்து திட்டத்தின் கீழ் அனைத்து பாடங்களுக்கும் வழங்கப்பட்ட புத்தகங்கள் மூலம் வினாடி வினா, கதை கூறுதல், விவாதம் நடத்துதல், குழு விவாதம், நாடகம், வில்லுப்பாட்டு, தானே கற்றல் கணித உபகரண பெட்டி பயன்படுத்தி கணித பாட அடிப்படை செயல்பாடுகளை நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. 

பள்ளிகளில் டிவி, டி.வி.டி பிளேயர், சி.டிக்கள், கம்ப்யூட்டர்கள், லேப்டாப்கள் பயன்படுத்தி "ஹலோ இங்கிலீஷ்', சிம்பிள் இங்கிலீஷ், பன் வித் இங்கிலீஷ் போன்ற கேசட்கள் மூலம் ஆங்கில பாடம் கற்பிக்க வேண்டும், கம்ப்யூட்டர வழி கல்வியை தீவிரப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது.


மேலும், மாணவர்களை அருகில் உள்ள இடங்களுக்கு கள ஆய்வு அழைத்து சென்று வரலாற்று சிறப்பு மிக்க இடங்களுக்கு அழைத்து செல்லுதல், போஸ்ட் ஆபீஸ் மற்றும் பிற அலுவலகங்களுக்கு அழைத்து சென்று செயல்பாடுகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு தெரிவிக்க அறிவுரை வழங்கப்பட்டது. எழுத்து பயிற்சி, பேச்சு பயிற்சி, வாசிப்பு பயிற்சியை மேம்படுத்தவும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது. 

இப்பணிகளை வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள், ஆசிரிய பயிற்றுனர்கள், உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள், முதன்மை கல்வி அலுவலர்கள் பள்ளிகளுக்கு ஆய்வு சென்று கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டது.

நன்றி


முதல்வர் ஜெயலலிதாவை 29ம் தேதி சந்திக்கிறது சமச்சீர் கல்வி ஆய்வுக் குழு

சென்னை: உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்டுள்ள சமச்சீர் கல்வி ஆய்வுக் குழு வருகிற புதன்கிழமை முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கவுள்ளது.

கடந்த திமுக ஆட்சியில் சமச்சீர் கல்வித் திட்டம் கொண்டு வரப்பட்டது. முதல் கட்டமாக கடந்த ஆண்டு 1 மற்றும் 6 ஆகிய வகுப்புகளுக்கு இது அமல்படுத்தப்பட்டது. இந்த ஆண்டு முதல் அனைத்து வகுப்புகளுக்கும் இது விரிவுபடுத்தப்படுவதாக இருந்தது.

இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதிமுக ஆட்சி அமைந்ததும் நடப்பு ஆண்டுக்கு சமச்சீர் கல்வித் திட்டம் நிறுத்தி வைக்கப்படுவதாகவும், அடுத்த ஆண்டு இதை அமல்படுத்துவது குறித்து ஆய்வு செய்து முடிவெடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த உயர்நீதிமன்றம், தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

இதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தது. அதை விசாரித்த உச்சநீதிமன்றம், 1, 6 ஆகிய வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வித் திட்டத்தைத் தொடரலாம். பிற வகுப்புகளுக்கு அமல்படுத்துவது குறித்து நிபுணர் குழு அமைத்து 2 வாரங்களில் ஆராய வேண்டும். அந்த குழு அறிக்கையை உயர்நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். அதை ஒரு வாரத்திற்குள் விசாரித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து தமிழக அரசு நிபுணர் குழுவை அமைத்தது. தலைமைச் செயலாளர் தேவேந்திர நாத் சாரங்கி தலைமையிலான இக்குழுவில் மொத்தம் 9 உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இந்தக் குழுவினர் இதுவரை 3 முறை கூடி ஆலோசனை நடத்தியுள்ளனர். இதையடுத்து வருகிற புதன்கிழமை முதல்வர் ஜெயலலிதாவை குழுவினர் சந்தித்து இதுவரை நடந்த பேச்சுக்கள் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளனர்.

அதன் பின்னர் உச்சநீதிமன்றம் அறிவித்தபடி ஜூலை 6ம் தேதிக்குள் தங்களது அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பார்கள்.

+2 மறு கூட்டல், மறுமதிப்பீடு: மதிப்பெண் விபரம் இந்த வாரம் வெளியீடு?

நாகர்கோவில்: தமிழகத்தில் பிளஸ் டூ மறுகூட்டல், மறுமதிப்பீடு செய்தவர்களுக்கு இந்த வாரம் மதி்ப்பெண் விபரங்கள் அளிக்கப்படும் என்று கூறப்படுகின்றது.

பிளஸ் டூ தேர்வில் மதிப்பெண்கள் குறைவாக பெற்றவர்கள், தேர்ச்சி பெறாதவர்கள் பலர் மறுகூட்டல், மறு மதிப்பீடு செய்வதற்காக விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்திருந்தனர். 82 ஆயிரம் பேர் விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்திருந்த நிலையில் அனைவருக்கும் விடைத்தாள் நகல்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

விடைத்தாள் நகலுடன், மறுகூட்டல், மறுமதிப்பீடு விண்ணப்பங்களும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஏராளமான மாணவர்கள் மறுகூட்டல், மறுமதிப்பீடுக்காக விண்ணப்பித்திருந்தனர்.

விடைத்தாள் மறுகூட்டல், மறுமதி்ப்பீடு செய்யும் பணிகள் இறுதிகட்டத்தில் உள்ளன. இதில் மதிப்பெண்களில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மறுமதிப்பீடு, மறுகூட்டல் முடிந்த பின்னர் கிடைக்கின்ற மதிப்பெண்களை மாணவர்கள் பொறியியல் மற்றும் மருத்துவ கலந்தாய்வுக்கு பயன்படுத்திக் கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விபரங்கள் அண்ணா பல்கலைக்கழக மருத்துவ கல்வி இயக்குநரகத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த வாரம் மாணவர்களுக்கு மதிப்பெண் விபரங்களை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

“Kalpana Chawla Award”

GOVERNMENT OF TAMIL NADU
PUBLIC (GENERAL.I) DEPARTMENT
SECRETARIAT, CHENNAI – 9.
ADVERTISEMENT
The “Kalpana Chawla Award” for Courage and Daring
Enterprise to a woman who is native of Tamil Nadu, will be
presented by the Hon’ble Chief Minister of Tamil Nadu during the
Independence Day Celebrations 2011. This award carries a cheque
for Rs.5.00 lakhs and a Medal.
2. A comprehensive bio-data and application with all
relevant particulars and supporting documents may be sent to the
Secretary to Government, Public Department, Secretariat,
Chennai-600 009, on or before 15.07.2011. The Awardee will be
selected by a Selection Committee, constituted by the Government
of Tamil Nadu.
KUMAR JAYANT,
SECRETARY TO GOVERNMENT.

அரசு ஊழியர்களுடன் நல்லுறவு : வதந்திகளை நம்பாதிருக்க யோசனை

அரசு ஊழியர் சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசிய உயரதிகாரிகள், இந்த ஆட்சி, அரசு ஊழியர்களுக்கு எதிரானது அல்ல என்றும், வதந்திகளை நம்பவேண்டாமென்றும் உத்தரவாதம் அளித்தனர். அங்கீகரிக்கப்பட்ட அரசு ஊழியர் சங்கங்களின் நிர்வாகிகளை, தமிழக அரசின் பொதுத் துறை செயலர், பணியாளர் நலத்துறை செயலர் அழைத்துப் பேசினர். இதில், தலைமைச் செயலக சங்கம், "சி அண்டு டி' பிரிவு ஊழியர்கள் சங்கம், என்.ஜி.ஓ., சங்கம் உட்பட முக்கிய சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அப்போது, "அரசு ஊழியர்களுக்கு எதிரான அரசு என்பது போன்ற தோற்றம் உருவாக்கப்படுகிறது. ஆனால், இந்த அரசு, ஊழியர்களுடன் நல்லுறவையே விரும்புகிறது' என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். மேலும், "முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு டிஸ்மிஸ் செய்யப்பட்ட ஊழியர்கள் மீது இந்த அரசு நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும், ஈட்டு விடுப்பு எண்ணிக்கையை குறைக்க உள்ளதாகவும். சனிக்கிழமைகளை பணி நாளாக அறிவிக்க இருப்பதாகவும் பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. அவற்றை நம்ப வேண்டாம். எவ்வித எதிரான நடவடிக்கையை எடுக்கும் எண்ணம் இந்த அரசுக்கு இல்லை' என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரசின் இந்த கருத்தை தங்களது சங்கத்தில் உள்ள அனைத்து ஊழியர்களுக்கும் தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொண்டனர். அரசு ஊழியர்கள் நன்றாக செயல்பட்டால் தான், திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும் என்றும், அரசு ஊழியர்கள், இந்த அரசுக்கு நல்ல பெயர் பெற்றுத் தர வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டனர்.

அரசு ஊழியர்களது நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றும், கோரிக்கைகள் பற்றி இன்னொரு நாளில் பேசலாம் என்றும், சலுகைகள் குறித்து பட்ஜெட் சமயத்தில் முதல்வர் முடிவெடுப்பார் என்றும் கூறினர். ஊழியர் சங்க நிர்வாகிகளும், தங்களுக்கு இந்த அரசு மீது எவ்வித கசப்புணர்வும் இல்லை என்றும், அரசின் செயல்பாடுகளுக்கு முழு ஒத்துழைப்பு தருவோம் என்றும் உறுதியளித்தனர்.

-நமது சிறப்பு நிருபர்-
நன்றி: தினமலர் 

மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு : தமிழகத்தில் அதிக ஆர்வம்

சென்னை : மத்திய அரசு பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கான தகுதி தேர்வு நேற்று நடந்தது. தமிழகத்தில் ஆயிரக்கணக்கில் இதில் பங்கேற்றனர். ஒன்று முதல் எட்டு வரையுள்ள வகுப்புகளுக்கான ஆசிரியர்களை, ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் விதிகளின்படி தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும் என, அனைவருக்கும் கல்வி உரிமைக்கான சட்டம் கட்டாயமாக்கியுள்ளது.

இதற்கான தேர்வு, முதல் முறையாக நேற்று நாடு முழுவதும் மத்திய கல்வி வாரியத்தால் (சி.பி.எஸ்.இ.,) நடத்தப்பட்டது. மத்திய அரசுப் பள்ளி ஆசிரியர் பணிக்காக நடத்தப்பட்ட தகுதித் தேர்வில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற வேண்டும். தமிழகத்தில், சென்னை, மதுரை மற்றும் கோவை ஆகிய இடங்களில் இத்தேர்வு நடந்தது.

சென்னையில் நுங்கம்பாக்கம், கே.கே.நகர்., அண்ணா நகர் உட்பட 31 இடங்களில் அமைக்கப்பட்ட மையங்களில் தேர்வு நடந்தது. காலை மற்றும் பிற்பகலில் நடந்த இத்தேர்வை ஏராளமான ஆசிரியர்கள் ஆர்வமுடன் பங்கேற்று எழுதினர். காலையில் இடைநிலை ஆசிரியர்களும், பிற்பகலில் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் நடத்தப்பட்டது.

மத்திய ஆசிரியர் தகுதி தேர்வை, நாடு முழுவதும் எட்டு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் எழுதியதாக கூறப்பட்டது. தேர்வு முடிவுகள், வரும் ஜூலை 26ம் தேதி வெளியிடப்படுகிறது.