நாமக்கல்: துவக்கப்பள்ளியில் சமச்சீர் மற்றும் ஏ.பி.எல்., என, இருவகையான பாடத்திட்ட முறையில் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டிய நிலை உள்ளது. அதில், "ஏ.பி.எல்., திட்டத்தை மறு பரிசீலனை செய்து, புத்தகம் மூலம் மாணவர்கள் பாடம் கற்கும் வழக்கத்தை நடைமுறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகத்தில், 40 ஆயிரத்துக்கும் அதிகமான அரசு, அரசு உதவி பெறும் துவக்க, நடுநிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றது. பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியரின் புத்தக்க சுமையை குறைக்கும் வகையில், கடந்த, 2004ம் ஆண்டு ஏ.பி.எல்., (செயல்வழிக் கற்றல்) முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறையில், மாணவர்கள் புத்தகம் இன்றி அட்டைகளில் உள்ள படங்களை பார்த்து கல்வி கற்க வேண்டும்.இம்முறை, முதலில் ஒவ்வொரு யூனியனில் உள்ள பத்து பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்பின், 2007ம் ஆண்டு 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளிலும் ஏ.பி.எல்., கல்வி முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.
இப்பாடத் திட்டத்தில், ஒவ்வொரு வகுப்பிலும் ஒரு பாடத்துக்கு குறிப்பிட்ட படிநிலை உள்ளது. அந்த படிநிலை நிறைவு செய்யும் மாணவர்கள், அடுத்தடுத்த வகுப்புக்கு செல்லலாம். இம்முறையில், தேர்வு எதுவும் நடத்துவதில்லை. எனவே, இப்பாடத்திட்ட முறைக்கு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.இச்சூழலில், கடந்த ஆண்டு, 1 மற்றும் 6ம் வகுப்புக்கு சமச்ச்சீர் கல்வி முறை கொண்டு வரப்பட்டது. வரும் கல்வியாண்டு முதல், 1 முதல் எஸ்.எஸ்.எல்.ஸி., வரை உள்ள அனைத்து வகுப்புக்கும் சமச்சீர் கல்வி முறை கொண்டு வரப்படும் என, கடந்த தி.மு.க., ஆட்சியில் அறிவிக்கப்பட்டது.
அதை எதிர்த்து தற்போதைய அரசு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில், 1 மற்றும் 6ம் வகுப்புக்கு சமச்சீர் கல்வி முறை அமல்படுத்த வேண்டும். மற்ற வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி முறையிலான பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக குழு அமைத்து அறிக்கை தயாரிக்க வேண்டும் என, உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.அந்த குழுவினர் அளிக்கும் அறிக்கைக்கு பின்னரே, 2, 3, 4, 5, 7, 8, 9 மற்றும் எஸ்.எஸ்.எல்.ஸி., வரை எந்த முறையிலான பாடம் தொடரும் எனத் தெரியவரும். இது ஒரு புறம் இருந்தாலும், துவக்கப் பள்ளிகளில் ஏ.பி.எல்., திட்டம் நடைமுறையில் உள்ளது. அதில், 1ம் வகுப்பு சமச்சீர் கல்வி முறை உள்ளதால், அந்த வகுப்பினர் மட்டும் புத்தகம் மூலம் பாடம் படிக்கின்றனர். மற்ற வகுப்பினருக்கு ஏ.பி.எல்., திட்டம் உள்ளது.துவக்கப்பள்ளியில் இரு வகையான பாடத்திட்டம் நடைமுறையில் உள்ள சூழலில், தற்போது அமைக்கப்பட்டுள்ள குழு, சமச்சீர் கல்வி முறையை அமல்படுத்தும்படி அறிக்கை அளித்தால், அப்பாடத்துக்கு ஏற்றாற் போல், ஏ.பி.எல்., கார்டு அடித்து தரவேண்டும்.பழைய பாடத்திட்டம் தொடர வேண்டும் என அறிக்கை அளித்தால், புதிய ஏ.பி.எல்., கார்டுகள் வழங்க வேண்டும். இப்பிரச்னை காரணமாக எந்த முறையில் மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பது என்ற குழப்பமான சூழலில், துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் உள்ளனர்.இதுகுறித்து துவக்கப்பள்ளி ஆசியர்கள் சிலர் கூறியதாவது:கடந்த, 2004ம் ஆண்டு ஏ.பி.எல்., திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. படிப்படியாக அடுத்தடுத்த வகுப்புக்கு ஏ.பி.எல்., பாடத்திட்டம் கொண்டு செல்லவேண்டும்.
ஆனால், அதுபோல் இல்லாமல், 2007ம் ஆண்டு அனைத்து துவக்கப்பள்ளி வகுப்புக்கும் ஏ.பி.எல்., பாடத்திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டது.இத்திட்டத்தால், மாணவர்களது கல்வி பாதிக்கப்படுகிறது. துவக்கப்பள்ளியில் 1ம் வகுப்புக்கு சமச்சீர் கல்வி முறை, பிற வகுப்புக்கு ஏ.பி.எல்., பாடத்திட்டம் என இருவகையான கல்வி முறை நடைமுறையில் உள்ளது. இது, ஆசிரியர் மட்டுமின்றி மாணவர்களுக்கும் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.எனவே, துவக்கப்பள்ளியில் நடைமுறையில் உள்ள ஏ.பி.எல்., கல்வி முறையை, அரசு மறுபரிசீலனை செய்து, புத்தகம் மூலம் மாணவர்கள் கற்கும் முறையை கொண்டு வரவேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
Thanks: Dinamalar

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக