கட்டாய கல்வி சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிகளை 6 வாரங்களுக்குள் அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கறிஞர் எஸ்.சத்திய சந்திரன் தாக்கல் செய்த பொது நல மனுவில், 6 வயது முதல் 14 வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாய இலவச கல்வியை அளிக்க வகை செய்யும் சட்டம் கடந்த 1.4.2010 அன்று அமலுக்கு வந்தது என்று கூறியுள்ளார்.
இந்த சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிகளை ஒவ்வொரு மாநில அரசும் உருவாக்க வேண்டும் என்று அந்த சட்டத்தின் 38வது பிரிவில் கூறப்பட்டுள்ளது என்றும் தமிழகத்தில் அதற்கான விதிகள் உறுதி செய்யப்படவில்லை என்றும் மனுவில் தெரிவித்துள்ளார்.
இதனால் தமிழகத்தில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை அமலுக்கு கொண்டுவர முடியவில்லை என்று தெரிவித்துள்ள சந்திரன், எனவே அதற்கான விதிகளை உறுதிப்படுத்த உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் கொண்ட அமர்வு, இந்த விதிகளை முடிவு செய்து 6 வாரங்களுக்குள் தமிழக அரசு அறிவிக்கையாக வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக