பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

மின்னஞ்சல் மூலம் பதிவுகளை பெறலாம்

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

11/30/2014

நாங்கள் லோடு மேன்களா? - புலம்பும் துவக்கப் பள்ளி ஆசிரியைகள்

சென்னை: துவக்கப் பள்ளி மாணவர்களுக்கான இலவச பொருட்களை, பல கி.மீ., தூரம் பயணித்து, ஆசிரியர்கள், தங்கள் பள்ளிகளுக்கு எடுத்துச் செல்கின்றனர். பாடம் சொல்லிக் கொடுக்கும் நாங்கள், லோடு மேன்களா? என துவக்கப் பள்ளி ஆசிரியைகள் ஆதங்கப்படுகின்றனர்.
தமிழக அரசு, துவக்கப் பள்ளி மாணவ, மாணவியருக்கு சீருடை, புத்தகம், நோட்டு, பை, செருப்பு, வண்ண பென்சில் டப்பா உட்பட பல்வேறு பொருட்களை இலவசமாக வழங்கி வருகிறது. மாநிலத்தில், 23 ஆயிரம் துவக்கப் பள்ளிகள் உள்ளன. இதில், 17 ஆயிரம் பள்ளிகள், ஈராசிரியர் பள்ளிகள். அரசு கொடுக்கும் இலவச பொருட்கள் நேரடியாக, இப்பள்ளிகளை சென்றடைவதில்லை.
மாவட்டத்தில் உள்ள யூனியன் அலுவலகத்திற்கு கட்டுப்பட்ட குடோனில், இலவச பொருட்கள் பாதுகாக்கப்படுகின்றன. துவக்கப் பள்ளி ஆசிரியர்கள், தங்கள் பள்ளியில் இருந்து, பல கி.மீ., தூரம் பயணம் செய்து, குடோனில் இருக்கும் பொருட்களை எடுத்து வருகின்றனர். மொத்தமுள்ள, 1.25 லட்சம் துவக்கப் பள்ளி ஆசிரியர்களில், 75 சதவீதத்தினர் ஆசிரியைகள். இவர்கள், இலவச பொருட்களை கொண்டு செல்வதில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன.
துவக்கப்பள்ளி ஆசிரியை ஒருவர் கூறியதாவது: ஓராண்டில், மூன்று பள்ளி பருவங்கள் வருகின்றன. ஒவ்வொரு பருவத்திற்கும், ஒவ்வொரு பொருளாக அரசு தருகிறது. புத்தக பை, காலணியை மட்டுமே, ஆண்டிற்கு, ஒருமுறை தருகிறது. மற்ற பொருட்களான புத்தகம், நோட்டு போன்றவற்றை, கொஞ்சம் கொஞ்சமாக தருகிறது.
இதனால், அதிகம் பாதிக்கப்படுவது ஈராசிரியர் பள்ளிகள் மட்டுமே. ஒரு ஆசிரியர் சென்று விட்டால், மற்றொரு ஆசிரியர் பாடம் நடத்த முடியாது. மாணவர்களை ஒழுங்குபடுத்தவே நேரம் சரியாக இருக்கும். இப்பிரச்னைக்கு தீர்வுகாண, சத்துணவு திட்டத்தை போன்று, இலவச பொருட்களை, பள்ளிகளுக்கு நேரடியாக வினியோகம் செய்ய வேண்டும்.
பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு, குறிப்பிட்ட தேதியை குறிப்பிட்டு, அந்த தேதியில், இலவச பொருட்களை ஒட்டுமொத்தமாக கொடுத்து விட்டால், பாடம் நடத்துவதில் ஆசிரியர்கள் கவனம் செலுத்துவர். நாங்கள் என்ன, மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் லோடு மேன்களா? இவ்வாறு, அவர் கூறினார்.
தொடக்க கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்த ஆண்டிற்கு, இலவச பொருட்கள் தயாரிப்புக்கு, டெண்டர் விடப்பட்டு, பொருட்கள் வினியோகம் நடக்கிறது. ஒவ்வொரு பொருள் தயாரிப்புக்கும் கால அளவு மாறுபடுகிறது. முதலில் எந்த பொருள் வருகிறதோ, அதை தாமதிக்காமல், மாணவர்களுக்கு சேர்க்க வேண்டும் என, மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளோம்.
எல்லா பொருட்களையும் ஒட்டுமொத்தமாக தயாரித்து, ஒரே நேரத்தில் கொடுப்பதற்கு சில நடைமுறை சிக்கல்கள் உள்ளன. வரும் ஆண்டில் இது குறித்து பரிசீலிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் TNPTF - மாவட்டம்/ நகரம் /வட்டார நிர்வாகிகளின் முகவரி பட்டியல்

சிவகங்கை மாவட்டம் - மாவட்டத்தேர்தல் முடிவுகள்


சிவகங்கை மாவட்டம் - வட்டார நகரத் தேர்தல் முடிவுகள்


TNPTF மாநில நிர்வாகிகள் தொடக்கக்கல்வி இயக்குநருடன் சந்திப்பு

இச்சந்திப்பில் உயர் கல்வி பயின்றமைக்கு பின்னேற்பு வழங்குவது குறித்தும், கருத்தாய்வு மையக் கூட்டங்களில் பங்கேற்றமைக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு குறித்து விரைவில் முடிவெடுத்து அறிவிப்பு வெளியிடுவதாக உறுதியளித்துள்ளார்

11/29/2014

திட்டமிட்டபடி ஆர்ப்பாட்டம் நடைபெறும்

நேற்று நடந்த மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் பேச்சு வார்த்தை ஒரு முடிவை எட்டாததால் வருகிற 2.12.2014 அன்று சிவகங்கை மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலகம் முன்பு திட்டமிட்டபடி ஆர்ப்பாட்டம் நடைபெறும். ஆசிரியர் பேரினமே

அலை கடலென திரண்டு வா!!!

பள்ளி கல்வி இணை இயக்குனர்கள் ஆறு பேர் இடமாற்றம்


11/25/2014

ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி தொடக்க கல்வி அலுவலர் கைது

திண்டுக்கல்: கிராஜூவிட்டியை வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி தொடக்க கல்வி அலுவலர் கைது செய்யப்பட்டார். தேனி மாவட்டத்தை சேர்ந்த சந்திரசேகர் என்பவர். திண்டுக்கல்லில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து, கடந்த ஜூலை மாதம் ஓய்வு பெற்றார். தனக்கு வர வேண்டிய கிராஜூவிட்டி ரூ.9 லட்சத்தை பெறுவதற்காக உதவி தொடக்க கல்வி அலுவலர் கலைச்செல்வியை அணுகினார். இதற்கு ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டார். ரூ.20ஆயிரம் லஞ்சம் தர ஒப்புக்கொண்ட சந்திரசேகர், இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பஸ் ஸ்டாண்டில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கலைச்செல்வியை லஞ்ச ஒழிப்புபோலீசார் கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டத் தேர்தல் - தினத்தந்தி செய்தி வெளியீடு


TNPTF சிவகங்கை மாவட்டத் தேர்தல் - தினமலர் செய்தி வெளியீடு


தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, சிவகங்கை மாவட்டத் தேர்தல் முடிவுகள்

நாள்: 23.11.2014     இடம்: தனலெட்சுமி மஹால், சிவகங்கை

ஆணையாளர்: திரு.எஸ்.கிருஷ்ணசாமி ,
                             தேனி மாவட்டச்செயலாளர்

துணை ஆணையாளர்: திரு.பெரியகருப்பன்,
                                          மாநில செயற்குழு உறுப்பினர்

கீழ்கண்ட பொருப்பாளர்கள் போட்டியின்றி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்
________________________________________________________

மாவட்டத் தலைவர்:  திரு.ஆ;தாமஸ் அமலநாதன்
                                         (காளையார்கோயில் வட்டாரம்)
துணைத்தலைவர்கள்:   1. திரு.ம.சூசைராஜ் (கல்லல் வட்டாரம்)
                                            2. திரு.வி.சி.சண்முகம்,
                                              (எஸ்.புதூர் வட்டாரம்)
                                             3. திருமதி.ஆ.ஜீவரத்தினம்        
                                                (மானாமதுரை வட்டாரம்)

மாவட்டச் செயலாளர்:      திரு.ஆ.முத்துப்பாண்டியன்
                                                         (சிங்கம்புணரி வட்டாரம்)

துணைச் செயலாளர்கள்:   1.திரு.என்.இராஜகோபால்
                                                    (இளையான்குடி வட்டாரம்)
                                                 2. திரு.வீ.இரவி
                                                     (காளையார்கோயில் வட்டாரம்)
                                                 3. திருமதி.ஜி.இந்தராகாந்தி
                                                     (சிவகங்கை நகரம்)

மாவட்டப் பொருளாளர்:    திரு.மு.குமரேசன்
                                                    (சிவகங்கை வட்டாரம்)

மாநிலச் செயற்குழு உறுப்பினர்:  திரு.மு.க.புரடசிதம்பி
                                                              (தேவகோட்டை வட்டாரம்)

மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள்:

1. திரு.எஸ்.ஞான அற்புதராஜ் (சிங்கம்புணரி வட்டாரம்)   2.திரு.ம.வேதராஜசேகரன் (காளையார்கோயில் வட்டாரம்)   3.திரு.வெ.சிங்கராயர் (திருப்பத்தூர் வட்டாரம்)


முப்பருவ பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு முதல் சவால்: தேர்ச்சி விகிதம் குறையுமா?

கோவை: தமிழகத்தில், கடந்த கல்வியாண்டு வரை, முப்பருவ பாடத்திட்டத்தின்படி பயின்ற மாணவர்கள், முதல்முறையாக, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை இக்கல்வியாண்டில் எதிர்கொள்கின்றனர்.
ஒட்டுமொத்த பாடங்களையும், ஒரே சமயத்தில் எழுதுவதால், தேர்ச்சி விகிதம் குறைய வாய்ப்புகள் உள்ளதாகவும், மாணவர்களை தயார்படுத்துவதில், மிகுந்த சிரமம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஆசிரியர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2012--13 கல்வியாண்டில், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு முப்பருவக் கல்விமுறையும், முழுமையான தொடர் மதிப்பீட்டு முறையும் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், 2013- - 14-ல், ஒன்பதாம் வகுப்புக்கும் விரிவுப்படுத்தப்பட்டது.
முப்பருவ கல்விமுறையின்படி, நான்கு மாதங்களுக்கு ஒரு பருவம் என்ற அடிப்படையில் முதல் பருவம், இரண்டாம் பருவம், மூன்றாம் பருவம் என, புத்தகங்களை மூன்றாக பிரித்து, பாடம் நடத்தி தேர்வு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு பருவத்தேர்வும் முடிந்தபின், அவர்கள் படித்த பாடப்புத்தகம், அதன்பின் தேவைப்படுவது இல்லை. அந்த பாடங்களை மாணவ, மாணவியர் மறந்து விடுகின்றனர். அடுத்த பருவத்துக்கான பாடங்களில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர்.
இந்நிலையில், பத்தாம் வகுப்பில் பொதுத்தேர்வு எழுத வேண்டும். ஆண்டு முழுவதும், படித்த பாடங்களை மொத்தமாக தேர்வெழுத வேண்டும். இதனால், முழு பாடங்களை படிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. முப்பருவமுறையில், 60 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதியவர்கள், தற்போது 100 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதுவதிலும் சிரமம் ஏற்படும். மேலும், பாடங்கள் அனைத்தும் அவசர கதியில் டிசம்பர் மாதத்துக்கு முன்பே, நடத்தி முடிக்கப்படுகிறது.
அரசு பள்ளி ஆசிரியர் பகத்சிங் கூறுகையில், "ஒன்பதாம் வகுப்பு வரை முப்பருவ முறை மற்றும் ஆல்-பாஸ் திட்டத்தில் படித்து வரும் மாணவர்களை, பொதுத்தேர்வுக்கு, குறைந்த நேரத்தில் தயார்படுத்துவதில் அதிக சிரமம் ஏற்பட்டுள்ளது. முப்பருவ முறையில் பகுதி, பகுதியாக படித்த மாணவர்கள், முழு பாடங்களையும் மனதில் நிறுத்துவது சிரமம்.
ஆசிரியர்களின் நிலை, மாணவர்களின் நலம் உணர்ந்து ஒன்பதாம் வகுப்பு முறையை பத்தாம் வகுப்பிலும் பின்பற்றும்படி, பாடத்திட்டங்களை ஏற்படுத்த வேண்டும் அல்லது பத்தாம் வகுப்பு தேர்வு முறையை ஒன்பதாம் வகுப்பில் இருந்தே பின்பற்றலாம்" என்றார்.
மதிப்பெண் ஆய்வுக்கு திட்டம்
கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி கூறுகையில், "பத்தாம் வகுப்பு வரும் மாணவர்கள் வயதுக்கேற்ப, அதிக பாடங்களை படிக்க தகுதி பெறுவதாக கருதுகிறேன். இருப்பினும், அரையாண்டு தேர்வு முடிவுகளை, கடந்த கல்வியாண்டில் நடந்த அரையாண்டு தேர்வுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது" என்றார்.
இடைநிற்றல் அதிகரிக்க வாய்ப்பு
மாணவர்கள், ஒன்பதாம் வகுப்பு வரை முப்பருவ கல்வி முறையில் எளிமையாக படித்து, ஆல்-பாஸ் திட்டத்தின்படி, அடுத்த வகுப்புகளுக்கு தேர்ச்சி பெற்றுவிடுகின்றனர். பத்தாம் வகுப்பில், அனைத்து பாடங்களையும் ஒட்டு மொத்தமாக படிக்க, சராசரிக்கும் சற்று குறைவாக உள்ள மாணவர்களால் இயலாமல், பள்ளிக்கு வருவதை தவிர்க்கின்றனர்.
இதனால், கல்விக்கு முழுக்கு போடும் சூழல் மறைமுகமாக நடந்து வருகிறது. இதை, அதிகாரிகள் கவனத்தில் கொண்டு, பத்தாம் வகுப்பில், இடைநிற்றல் குறித்து ஆய்வுசெய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

11/24/2014

உயர் கல்வி பயில துறை அலவலர்கள் அனுமதிக்க தொடக்கக்கல்வி இயக்குனர் வழிகாட்டுதல்

பள்ளியில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள்1.ஆசிரியர் வருகைப் பதிவேடு
2.மாணவர் வருகைப் பதிவேடு
3.மாணவர் சேர்க்கை நீக்கல் பதிவேடு
4.சேர்க்கை விண்ணப்பங்கள் தொகுப்பு
5.பதிவுத்தாட்கள் உண்மை நகல்


6.அளவைப் பதிவேடு
7.நிறுவனப்பதிவேடு

8.பள்ளி தளவாடச் சாமான்கள் பதிவேடு
9.தணிக்கைப் பதிவேடு
10.பார்வையாளர் பதிவேடு

11.பள்ளி விவரப் பதிவேடு (school profile )
12.ஊதியப்பட்டியல் பதிவேடு
13.ஊதிய செல்லுப் பட்டியல் பதிவேடு
14.மதிப்பெண் பதிவேடு
15.தேக்கப் பட்டியல்

16.வருகைப்பட்டியல்
17.மாதாந்தர அறிக்கை தொகுப்பு பதிவேடு
18.வரத்தவறியவர் பதிவேடு
19.சிறுபான்மை மொழி பேசுவோர் பதிவேடு
20.மாணவர் தினசரி வருகைச் சுருக்கம்

21.மக்கள் தொகை கணக்குப் பதிவேடு
22.சுற்றறிக்கைப் பதிவேடு
23.பொறுப்பு ஏற்புப் பதிவேடு
24.தலைமையாசிரியர் கூட்ட விவரப் பதிவேடு
25.தற்செயல் விடுப்பு

26.மருத்துவ விடுப்பு மற்றும் ஈட்டிய விடுப்புபதிவேடு
27.தலைமையாசிரியர் கண்காணிப்பு பதிவேடு
28.ஆதிதிராவிட மாணவியர் ஊக்கத்தொகை வழங்கும் பதிவேடு
29.வாசிப்புத்திறன் பதிவேடு
30.அஞ்சல் பதிவேடு

31.தொலைக்காட்சிவானொலி வகுப்புப் பதிவேடு
32.அறிவியல் உபகரணங்கள் இருப்புப் பதிவேடு
33.கணினி ,மடிக்கணினி இருப்புப் பதிவேடு
34.Inspire விருது பதிவேடு
35.கிராமக்கல்விக்குழு பதிவேடு

36.பெற்றார் ஆசிரியர் கழக்க் கூட்டப்பதிவேடு
37.அன்னையர் குழு பதிவேடு
38.பள்ளி மேலாண்மைக் குழு பதிவேடு
39.மன்றப் பதிவேடுகள்
a.தமிழ் இலக்கிய மன்றப் பதிவேடு
b.கணித மன்றம்
c.அறிவியல் மன்றம்
d.செஞ்சிலுவைச் சங்கம்
e.சுற்றுச்சூழல் மன்றம்
40.கால அட்டவணை

41.வகுப்பு வாரியான பாடவேளை பணிமுடிப்புபதிவேடு (work done)
42.சாதிச்சான்றிதழ் வழங்கிய பதிவேடு
43.பாடத்திட்டம் ,கால அட்டவணையுடன்
44.பிறப்புச் சான்றிதழ் பதிவேடு
45.பள்ளி சுகாதாரக் குழு பதிவேடு (school health club )

46.S.S.A பொருட்கள் இருப்புப் பதிவேடு
47.S.S.A வரவு செலவுப் பதிவேடு
48.வங்கி கணக்குப் புத்தகம்
49.பள்ளி மான்யம் மற்றும் பராமரிப்புமான்யம் வரவு செலவு இரசீதுபதிவேடு
50.E.E.R பதிவேடு
51.S.S.A பார்வையாளர் பதிவேடு

52.நலத்திட்டப் பதிவேடுகள்

1.விலையில்லா பாடநூல்கள் வழங்கிய பதிவேடு
2.விலையில்லா நோட்டுப் புத்தகங்கள் வழங்கிய பதிவேடு
3.விலையில்லா புத்தகப்பை வழங்கிய பதிவேடு
4.விலையில்லா சீருடை வழங்கிய பதிவேடு
5.மதிய உணவுத் திட்டம் பயனடைவோர்பதிவேடு
6.விலையில்லா காலனி வழங்கிய பதிவேடு
7.விலையில்லா பயணச்சீட்டு பயனடைவோர் பதிவேடு
8.விலையில்லா வண்ணப் பென்சில்கள் வழங்கியபதிவேடு
9.விலையில்லா கணித உபகரணப் பெட்டிவழங்கிய பதிவேடு
10.விலையில்லா புவியியல் வரைபட நூல் வழங்கியபதிவேடு
11.வருவாய் ஈட்டும் தாய் தந்தையரைஇழந்த குழந்தைக்கு கல்வி உதவித்தொகை பதிவேடு

December Dairy


11/22/2014

தகுதித் தேர்வு மூலமாக மட்டுமே சிறப்பாசிரியர்கள் தேர்வு: பள்ளிக் கல்வித்துறை

சென்னை: உடற்கல்வி, ஓவியம், தையல், இசை போன்ற சிறப்பாசிரியர்கள், ஆசிரியர் தேர்வு வாரிய (டி.ஆர்.பி.,) தேர்வு மூலமே தேர்வு செய்யப்படுவர் என, பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழக பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், தையல் மற்றும் இசை என, சிறப்பாசிரியர்கள், வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில், இனவாரி சுழற்சி முறையில் தேர்வு செய்யப்பட்டு வந்தனர். கடந்த 2012ல், சிறப்பாசிரியர் பிரிவில், உடற்கல்வி ஆசிரியர்கள் 1,028 பேரை நியமிக்க, ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுத்தது. வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில், மாநில அளவில் தேர்வானவர்கள் பட்டியலை வெளியிட்டது. இதை எதிர்த்து முத்துவேலன் என்பவர், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
விசாரணை முடிவில், சிறப்பாசிரியர் பணிக்கு, வேலைவாய்ப்பு பதிவுமூப்பு பட்டியலில் உள்ளவர்கள் மற்றும் தமிழகத்தில் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெற்று, முழு தகுதி அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டும்.மேலும், எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வு அமைய வேண்டும் என்றும் கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, சிறப்பு ஆசிரியர்களை தேர்வுசெய்ய, புதிய விதிகளை உருவாக்க, டி.ஆர்.பி.,யிடம், தமிழக அரசு கேட்டுக் கொண்டது.
இதன்படி, டி.ஆர்.பி., அளித்த புதிய விதிமுறைகளை, பரிசீலித்த தமிழக அரசு, அவற்றை அமல்படுத்தி, அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி, சிறப்பாசிரியர்கள், வேலைவாய்ப்பு பதிவுமூப்பு அடிப்படையில் அல்லாமல், டி.ஆர்.பி.,யால் நடத்தப்படும் தேர்வு அடிப்படையில் மட்டுமே நியமிக்கப்படுவர். வேலைவாய்ப்பு பதிவு மூப்பு பட்டியலில் உள்ளவர்கள் மற்றும் பத்திரிகை விளம்பரங்கள் மூலம் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படும்.
மொத்தம் 100 மதிப்பெண்களில், 95 மதிப்பெண்கள் எழுத்துத் தேர்விற்கும், 5 மதிப்பெண்கள் நேர்முகத் தேர்வுக்கும் வழங்கப்படும். ஒவ்வொரு காலியிடத்திற்கும், ஐந்து விண்ணப்பதாரர்கள், நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படுவர்.
மாநில, கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில், பாடத்திட்டத்தை தயாரிக்கும். தேர்வு, மூன்று மணி நேரம், ஒரே தாளாக நடத்தப்படும். அப்ஜக்டிவ் அடிப்படையில், 190 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு கேள்விக்கும், அரை மதிப்பெண் என 95 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
தேர்வு, நேர்முகத்தேர்வு நடத்துதல், தேர்வுத்தாள் திருத்தும் பணி, இட ஒதுக்கீடு அடிப்படையில் தேர்வர்கள் பட்டியல் வெளியிடுதல் என அனைத்து பணிகளையும் டி.ஆர்.பி., மேற்கொள்ளும். தேர்விற்கு 500 ரூபாய் கட்டணம்; உடல் ஊனமுற்றவர்கள் மற்றும் ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு 250 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். இவ்வாறு  அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
5 மதிப்பெண்கள் எப்படி?
கூடுதல் கல்வித்தகுதி - 0.5
முன்தகுதி (அரசு அல்லாதது) - 0.5
அரசுப் பணி தகுதி - 1
என்.சி.சி.,உட்பட கூடுதல் தகுதி - 1.5
தோற்றப் பொலிவு - 1.5
மொத்தம் - 5

11/17/2014

பள்ளி மாணவர்களின் விபரங்களைப் பதிய கல்வித் தகவல் மேலாண்மை முறை

சென்னை: அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களின் விபரங்களை, இணையதளத்தில் பதிவு செய்யும் வகையில், கல்வித் தகவல் மேலாண்மை முறையை, தமிழக தொடக்க கல்வி இயக்ககம் அறிமுகப்படுத்த உள்ளது.
இதுகுறித்த அரசு உத்தரவு: தொடக்கக் கல்வி இயக்ககத்துக்கு உட்பட்ட, துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவ, மாணவியரின் எடை, உயரம் சம்பந்தமான விபரங்களை, இணையதளத்தில் பதிவுசெய்ய வேண்டியுள்ளது.
இதற்கு, பள்ளிகளில் பயன்பாட்டில் உள்ள, அளவிடுதல் கருவிகளை பயன்படுத்திக் கொள்ளலாம். அந்த வசதி இல்லாத பள்ளிகள், அருகிலுள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகங்களில் உள்ள அளவிடுதல் கருவிகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள், விபரங்களை சேகரித்து, தொடக்க கல்வி இயக்ககத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது

மாணவ, மாணவியரின் பாதுகாப்பிற்காக 113 விதிமுறைகள் தயார்!

பெங்களூரு: பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மாணவியரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, 113 அம்சங்கள் அடங்கிய விதிமுறைகளை அமல்படுத்த, கர்நாடக மாநில அரசு தீர்மானித்துள்ளது. இதற்கான சட்ட வரைவு வெளியிடப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகளில், மாணவ, மாணவியரின் ஆரோக்கியம், அடிப்படை வசதிகள், தனிப்பட்ட பாதுகாப்பு, போக்கு வரத்து வசதி உள்ளிட்ட அனைத்து விஷயங்கள் தொடர்பாக, 113 விதிமுறைகளை வகுத்துள்ள கல்வித்துறை, அதற்கான வரைவு பிரதியை வெளியிட்டுள்ளது.
கருத்துக்கள்: இந்த விதிமுறைகள் குறித்து, வரும், 25ம் தேதிக்குள் ஆலோசனைகள், கருத்துக்களை தெரிவிக்கும்படி பெற்றோர், கல்வி வல்லுனர்கள், கல்வி நிறுவனங்களிடம் கேட்டுள்ளது.
சமீபத்தில், பள்ளி, கல்லூரி மாணவியர் மீதான பாலியல் வன்முறை சம்பவங்களுக்குப் பின், மாணவ, மாணவியரின் பாதுகாப்புக்காக, கர்நாடக அரசு வழி காட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. இதை தொடர்ந்து, கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவின்படி, பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் அலுவலகமும் விதிமுறைகளை வெளியிட்டது. இத்தனைக்கு பின்னரும், பெங்களூருவில், சிறுமியர் மீதான பாலியல் வன்முறை குற்றங்கள் குறையவில்லை.
இதை தீவிரமாக எடுத்துக்கொண்ட அரசு, முதன் முறையாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரின் பாதுகாப்புக்காக, சட்ட விதிமுறைகளை அமல்படுத்த முன்வந்துள்ளது. இதன் மூலம், கல்வி நிறுவனங்களுக்கு சட்டத்தினாலேயே, கடிவாளம் போட அரசு முன் வந்துள்ளது. சட்ட விதிமுறை, 3 பகுதிகளை கொண்டுள்ளது. 71 பக்கம் கொண்ட, சட்ட வரைவு கல்வித்துறையின் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முதல் பகுதியில், பள்ளி, ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்கள், பெற்றோர், மாணவர்களின் பொறுப்பு பற்றிய தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அடிப்படை வசதிகள்: அடுத்த பகுதியில், பாதுகாப்பு நடவடிக்கைகள், அதை செயல்படுத்துவது தொடர்பாக விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைசி பகுதியில், பள்ளிகளில் கட்டாயமாக தேவைப்படும் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட மற்ற அம்சங்கள் குறித்து விரிவாக தெரிவிக்கப் பட்டுள்ளது. கல்வித்துறை குறிப்பிட்டுள்ள, 113 அம்சங்களில், 94 அம்சங்களை கட்டாயமாக பின்பற்ற வேண்டுமென்றும், சட்ட வரைவில் உத்தரவிடப்பட்டுள்ளது.
குழந்தை தொழிலாளர்கள் தடை சட்டம், குழந்தைகள் நியாய சட்டம், குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு சட்டம், குழந்தை திருமண தடைச் சட்டம், கல்வி உரிமை சட்டம், போஸ்கோ சட்டம், ஐ.நா., சபையின் வழிகாட்டுதலின்படியும், இந்த சட்ட வரைவு அமைக்கப்பட்டுள்ளது. கல்வித்துறை மற்றும் சட்டதுறையின் வல்லுனர்கள் ஒருங்கிணைந்து, இந்த சட்ட வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் அதிகரிக்கும் வன்முறை; மாணவர்களுக்கு சிறப்பு ‘கவுன்சிலிங்’

கோவை: பள்ளி மாணவர்கள் மத்தியில், அதிகரிக்கும் வன்முறைகளை தவிர்க்க, பிரச்னைகளுக்குரிய மாணவர்களை கண்டறிந்து தனித்தனியாக சிறப்பு கவுன்சிலிங் வழங்க, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில், பள்ளி மாணவர்கள் மத்தியில், சினிமா, ’டிவி’, மொபைல் போன், இன்டர்நெட் உள்ளிட்ட, பல்வேறு காரணங்களால், வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில், மாணவர்கள் ஈடுபடும் குற்றச்சம்பவங்கள், பெருமளவில் அதிகரித்துவிட்டது.
மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள திடீர் வன்முறை எண்ணங்களால், பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். சாதாரண பிரச்னைகளுக்கு கூட, மாணவர்கள் வன்முறையிலும், கொலைவெறித் தாக்குதலிலும் ஈடுபடும் காரணத்தை அறிந்து, உடனடி தீர்வு காண வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில், 1300க்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில், ஆறு லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளி ஆசிரியரை தாக்குதல், மிரட்டுதல் போன்ற சம்பவங்கள் கோவை மாவட்டத்திலும், ஆங்காங்கே அரங்கேறி வருகின்றன. குறிப்பாக, உயர்நிலை மேல்நிலைப்பள்ளி மாணவர்களிடம் வன்முறை சம்பவங்கள் தலை தூக்குவதை காணமுடிவதாக, ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மாணவர்களை பென்சில், பேனாவால் குத்துதல், விளையாட்டு பாடவேளை நேரங்களில், திட்டமிட்டு பந்தால் எறிந்து தாக்குதல் போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் பெற்றோர் தரப்பில் புகார் செய்யப்படுகிறது. இதில், மாணவியரும் விதிவிலக்கல்ல.
கல்விக் கூடங்களில் வன்முறை கலாசாரத்தை தடுக்கும் முயற்சியில், நடமாடும் உளவியல் ஆலோசனை மையத்தின் மண்டல உளவியல் நிபுணர் உதவியோடு மாணவர்களுக்கு, ’சிறப்பு கவுன்சிலிங்’ வழங்கப்பட்டு வருகிறது.
ஒரு சில பள்ளிகளில் ஆசிரியர், தலைமையாசிரியர் மற்றும் மாணவர்கள் மத்தியில் சரியான உறவுமுறை அமையாததன் காரணமாக, மாணவர்களின் மனப்போக்கு மாறுவதுடன், கல்வித்தரமும் பாதிக்கப்படுகின்றது.
மண்டல உளவியல் நிபுணர் அருள்ஜோதி கூறுகையில்,”மாணவர்கள் மத்தியில், கவனிக்கும் தன்மை குறைந்து வருகிறது. பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்ட பின்பே, மாணவர்களின் கவனத்தை ஒருங்கிணைக்க முடிகிறது. குறிப்பாக, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளிடம் சிறிய அளவிலான வன்முறை சம்பவங்களை தொடர்ந்து காண முடிகிறது. இதை கண்டுகொள்ளாமல் விடும் பட்சத்தில், பெரும் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
தற்போது, சில பள்ளிகளில் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மத்தியில் காணப்படும் முரண்பாடுகள் மாணவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால், ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கி வருகிறோம். மாணவர்கள் மத்தியில், சிறிதளவில் உருபெற்றிருக்கும் வன்முறைகளை களைய, அனைத்து பள்ளிகளிலும், பிரச்னைகளுக்குரிய மாணவர்களை கண்டறிந்து தனிப்பட்ட முறையில் கவுன்சிலிங் வழங்க திட்டமிட்டுள்ளோம்.
மேலும், பெற்றோர்களின் பங்களிப்பு மிகவும் வருத்தமளிக்கும் வகையில் உள்ளது. தங்களது பிள்ளைகளின் நிலையை அறிந்துகொள்ள பள்ளிக்கு அழைத்தாலும், வருவதில்லை. இதுபோன்ற குடும்பச் சூழலே பெரும்பாலான பிள்ளைகளுக்கு அதிகப்படியான வன்முறை உணர்வுகளை தூண்டுகின்றது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

உதவித் தொடக்கக்கல்வி அலுவலகத்தில் ஆசிரியர்கள் பணியாற்றுவதை தடுக்க TNPTF புகார்


மாவட்ட செயற்குழு கூட்டம்

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, சிவகங்கை மாவட்ட செயற்குழு கூட்டம் வருகிற 19.11.204 அன்று காலை 10.00 மணிக்கு சிவகங்கை அரசு ஊழியர் சங்க மாவட்ட கட்டிடத்தில் நடைபெற இருப்பதால் அனைத்து மாவட்ட செயற்குழு உறுப்பினர்களும் தவறாது பங்கேற்க வேண்டுகிறோம். வருகிற 23.11.2014 அன்று நடைபெறும் மாவட்ட தேர்தல் குறித்து விவாதிக்க வேண்டியுள்ளதால் குறித்த நேரத்தில் பங்கெடுக்க வேண்டுகிறோம்.

11/15/2014

தினகரன் செய்தி வெளியீடுஉதவி தொடக்கக் கல்வி அலுவலரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உதவி தொடக்கக் கல்வி அலுவலரைக் கண்டித்து, பழைய பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டணியின் வட்டாரத் தலைவர் ரமேஷ்குமார் தலைமை வகித்தார். செயலாளர் தங்கமாரியப்பன், மாவட்டத் தலைவர் முத்துப்பாண்டியன், மாவட்டச் செயலாளர் தாமஸ்அமலநாதன், பொருளாளர் சிங்கராயர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ஆசிரியர் விரோதப் போக்குடன் செயல்படுவதாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில நிர்வாகி ஜோசப்ரோஸ், மாநில செயற்குழு உறுப்பினர் பாஸ்கரன், மாவட்ட துணைத் தலைவர் ஜீவரத்தினம், சி.ஐ.டி.யு. மாவட்டச் செயலாளர் வீரையா, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்டத் தலைவர் புவனேஸ்வரன், துணைத் தலைவர் சீமைச்சாமி, போக்குவரத்து தொழிலாளர் சம்மேளன நிர்வாகி பரமாத்மா, டி.ஆர்.இ.யு. கோட்டத் தலைவர் ஜோசப் அமல்ராஜ் உள்ளிட்டோர் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் கூட்டணியைச் சேர்ந்த ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
Dinamani

11/13/2014

CPS-Account Slip - இயக்குனர் உத்தரவு


தொடக்கக்கல்வி - EMIS - மாணவ/மாணவிகளின் எடை, உயரம், அலைபேசி எண் உள்ளிட்ட தகவல்களை சேகரிக்க இயக்குனர் உத்தரவு


தமிழகத்திற்கு ரூ.2000 கோடி ஒதுக்கீடு எஸ்.எஸ்.ஏ., திட்ட இயக்குனர் தகவல்


11/12/2014

மானாமதுரை உதவித் தொடக்கக்கல்வி அலுவலரின் ஆசிரியர் விரோதபோக்கை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டம் - தீக்கதிர் செய்தி வெளியீடு


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டார கிளையில் TNPTFசார்பாக மானாமதுரை உதவித் தொடக்கக்கல்வி அலுவலரின் ஆசிரியர் விரோதபோக்கை கண்டித்துநடைபெற்ற ஆர்ப்பாட்டம்


11/06/2014

சிங்கம்புணரி வட்டாரத் தேர்தல் - தினமலர் செய்தி வெளியீடுசிங்கம்புணரி வட்டாரத் தேர்தல் - தினத்தந்தி செய்தி வெளியீடு


சிங்கம்புணரி வட்டாரத் தேர்தல் முடிவுகள்


11/05/2014

TNPTF நிர்வாகிகள் தேர்வு
ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் தேர்வு

சிங்கம்புணரி வட்டார ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் தேர்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சிங்கம்புணரி வட்டார நிர்வாகிகள் தேர்வுக்கு காளையார்கோவில் வட்டாரத் தலைவர் ஜான் அந்தோணி தேர்தல் ஆணையராக பணியாற்றினார். துணை ஆணையராக காளையார்கோவில் வட்டாரப் பொருளாளர் முத்துக்குமார் பணியாற்றினார்.
 இதில் போட்டியின்றி வட்டாரத் தலைவராக பாலகிருஷ்ணனும், துணைத் தலைவர்களாக ராகவன், கவிதா, லதா ஆகியோரும், வட்டாரச் செயலராக பொன் பால்துரையும், துணைச் செயலர்களாக அஸ்மீர், சாந்தி, உமாமகேஸ்வரியும், பொருளாளராக பாலசுப்பிரமணியும் தேர்வு செய்யப்பட்டனர்.
 செயற்குழு உறுப்பினராக 21 பேரும், சி.ஆர்.சி பொறுப்பாளராக 7 பேரும் தேர்வு செய்யப்பட்டனர். நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் முத்துப்பாண்டியன், மாநில துணைத்தலைவர் ஜோசப் ரோஸ், மாவட்டச் செயலர் தாமஸ் அமலநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.