சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உதவி தொடக்கக் கல்வி அலுவலரைக் கண்டித்து, பழைய பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டணியின் வட்டாரத் தலைவர் ரமேஷ்குமார் தலைமை வகித்தார். செயலாளர் தங்கமாரியப்பன், மாவட்டத் தலைவர் முத்துப்பாண்டியன், மாவட்டச் செயலாளர் தாமஸ்அமலநாதன், பொருளாளர் சிங்கராயர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ஆசிரியர் விரோதப் போக்குடன் செயல்படுவதாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில நிர்வாகி ஜோசப்ரோஸ், மாநில செயற்குழு உறுப்பினர் பாஸ்கரன், மாவட்ட துணைத் தலைவர் ஜீவரத்தினம், சி.ஐ.டி.யு. மாவட்டச் செயலாளர் வீரையா, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்டத் தலைவர் புவனேஸ்வரன், துணைத் தலைவர் சீமைச்சாமி, போக்குவரத்து தொழிலாளர் சம்மேளன நிர்வாகி பரமாத்மா, டி.ஆர்.இ.யு. கோட்டத் தலைவர் ஜோசப் அமல்ராஜ் உள்ளிட்டோர் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் கூட்டணியைச் சேர்ந்த ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக