சென்னை: அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களின் விபரங்களை, இணையதளத்தில் பதிவு செய்யும் வகையில், கல்வித் தகவல் மேலாண்மை முறையை, தமிழக தொடக்க கல்வி இயக்ககம் அறிமுகப்படுத்த உள்ளது.
இதுகுறித்த அரசு உத்தரவு: தொடக்கக் கல்வி இயக்ககத்துக்கு உட்பட்ட, துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவ, மாணவியரின் எடை, உயரம் சம்பந்தமான விபரங்களை, இணையதளத்தில் பதிவுசெய்ய வேண்டியுள்ளது.
இதற்கு, பள்ளிகளில் பயன்பாட்டில் உள்ள, அளவிடுதல் கருவிகளை பயன்படுத்திக் கொள்ளலாம். அந்த வசதி இல்லாத பள்ளிகள், அருகிலுள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகங்களில் உள்ள அளவிடுதல் கருவிகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள், விபரங்களை சேகரித்து, தொடக்க கல்வி இயக்ககத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக