சகோதர இயக்கங்களை குறை சொல்ல வேண்டும் ஆசை எமக்கு இல்லை. அதற்கான நேரமும்
இல்லை. இன்றைய சூழலில் ஒன்று இணைந்தால் எளிதில் இலக்கை அடையலாம் என்பதன்
அவாவே எமது பதிவுகள். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் இப்பொழுது
தொடக்கக்கல்வித் துறையில் உள்ள இயக்கங்கள் ஒன்று சேர்ந்து போராடி
இயக்கங்களின் அடி நாதமாக உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு தீர்வு
காணப்படவில்லையைன்றால் எதிர்கால சமுதாயம் நிச்சயம் மன்னிக்காது. தலைமைகளே
சிந்தியுங்கள். எங்களுக்காகத்தான் இயக்கங்கள். தலைவர்களுக்காக இல்லை. இது
அரசியல் கட்சி அல்ல. அறிவாளிகளின் கூட்டம். இணைவது எங்கே தடைபடுகிறது என்று
சிந்தியுங்கள். தடையை தகர்த்தெறியுங்கள். அப்பாவி இடைநிலை ஆசிரியர்களை
ஏமாற்றாதீர்கள். தலைமைகளை நம்பும் கூட்டம் இருக்கத்தான் செய்கின்றன.
நம்பிக்கை துரோகம் வேண்டாம்.
வேண்டுகோளுடன்......
முத்துப்பாண்டியன்@TNPTF
வேண்டுகோளுடன்......
முத்துப்பாண்டியன்@TNPTF
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக