சென்னை: அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 34
ஆண்டுகளாக பதவி உயர்வு இல்லாமல் அவதிபட்டு வரும் தொழிற்கல்வி
ஆசிரியர்களுக்கு, பதவி உயர்வு அளிக்க பள்ளிக்கல்வித் துறை பரிசீலனை செய்து
வருகிறது.
தமிழகத்தில் உள்ள 2,595 அரசு மேல்நிலைப்
பள்ளிகளில், 1,605 பள்ளிகளில் மட்டும், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில்,
தொழிற்கல்விப் பிரிவு இயங்கி வருகிறது. இவற்றில், 4,000 தொழிற்கல்வி
ஆசிரியர் பணிபுரிந்து வருகின்றனர். பட்டதாரி, முதுகலை ஆசிரியர்களைப் போல்,
தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு, பதவி உயர்வு அளிக்கப்படுவதில்லை. 34
ஆண்டுகளாக, ஆசிரியர்களாகவே பணியாற்றி, எவ்வித பதவி உயர்வும் இல்லாமல்,
ஓய்வு பெறுகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து, தமிழ்நாடு மேல்நிலைப்
பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழக பொதுச் செயலர், ஜனார்த்தனன் மற்றும்
நிர்வாகிகள், பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் இணை இயக்குனரை (தொழிற்கல்வி)
சந்தித்து பேசினர்.
இதுகுறித்து, ஜனார்த்தனன் கூறுகையில்,
"எங்களுக்கு, உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் அல்லது மேல்நிலைப் பள்ளி
தலைமை ஆசிரியர் பதவி உயர்வை வழங்க வேண்டும் என, இயக்குனரிடம்
வலியுறுத்தினோம். நியாயமான இந்த கோரிக்கையை பரிசீலனை செய்து, நடவடிக்கை
எடுப்பதாக, இயக்குனர் உறுதி அளித்தார்" என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக