இன்று சென்னையில் தொடக்கக்கல்வி இயக்குநர் மதிப்புமிகு இளங்கோவன் அவர்களை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலப்பொதுச் செயலாளர் திரு.பாலச்சந்தர், மாநிலத் தலைவர் திரு.மோசஸ், மாநிலத்துணைத் தலைவர் திரு.ஜோதிபாபு மற்றும் நாமக்கல், திருவண்ணாமலை மாவட்ட பொறுப்பாளர்கள் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் குறித்த விவாதித்தனர். இயக்குநர் அவர்கள் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்கள்.
1. தமிழகத்தில் இணையவழி ஊதிய பரிமாற்றம் (E-pay) அமுல்படுத்தப்பட்டதால் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாததந்திர ஊதியம் பெறுவதில் உள்ள கால தாமதத்தையும், அதற்கு காரணமான உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்கள் உரிய பணியினை மேற்கொள்ள மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர்கள் அறிவுரை வழங்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டது.
2. உயர்கல்விக்கல்விக்கு பின்னேற்பு வழங்குவது குறித்து அரசிற்கு 23458/E/2015 நாள் 6.7.2015 நாளிட்ட கடிதம் மூலமும், ஈரோடு மேகலா தேவிக்கு 5784/E2/2015 நாள் 29.6.2015 நாளிட்ட கடிதம் மூலமும் அனுப்பியுள்ளதாக இயக்குநர் தெரிவித்தார்கள்.
3. திருவள்ளூர் - திருவலங்காடு, திருவண்ணாமலை - மேற்கு ஆரணி, ஜவ்வாது மலை ஆகிய ஒன்றியங்களின் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்களின் ஊழியர் விரோதபோக்கின் மீது நடவடிக்கை எடுக்க கோரப்பட்டது.
4. திருப்பூர் மாவட்டத்தில் ஆசிரியர்கள் மீது பழிவாங்கும் விதமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை உடனடியாக திரும்ப பெற வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டது.
5. விருதுநகர் - வெம்பக்கோட்டை சுரேஷ்குமார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது.
6. எஸ்.எஸ்.ஏ பள்ளிகளுக்கு வழங்கியது போல் எஸ்.எஸ்.ஏ. அல்லாத நடுநிலைப்பள்ளிகளுக்கும் மூன்று பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வழங்கவேண்டும் என்ற சிவகங்கை மாவட்டச் செயற்குழு முடிவுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
7. கோவை மாவட்டம் வால்பாறை தலைமையாசிரியரின் நிர்வாக மாறுதலுக்கு முன்னுரிமை, தொண்டாமுத்தூர் இரட்டைப்பட்ட முன்னுரிமை, அன்னூர் ஆசிரியர் சேமநலநிதி கணக்கில் உள்ள குறைபாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
8. இடைநிலையாசிரியர் பணியிடத்தில் பணியமர்த்தப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பெற்ற உயர்கல்விக்கு ஊக்க ஊதியம் மற்றும் பதவி உயர்வு வழங்க வேண்டுமென்ற நமது நீண்ட நாள் கோரிக்கை குறித்து அரசிற்கு தாம் கடிதம் எழுதியுள்ளதாக இயக்குநர் அவர்கள் தெரிவித்தார்கள்.
9. திருவண்ணாமலைTPF கணக்கு, தூத்துக்குடி - விளாத்திகுளம் தலைமையாசிரியர் பணியிடம், கண்ணியாகுமரி - குளச்சல் தனியார் பள்ளி பணியிடம், விருதுநகர் -திருச்சுழி இருசக்கர வாகன முன்பணம், திண்டுக்கல் - குஜிலியம்பாறை கோம்பை பள்ளிக்கு பட்டதாரி ஆசிரியர் பணியிடம் குறித்து விவாதிக்கப்பட்டது.
10. பணி மூப்பு பட்டியலில் இரமநாதபுரம் - மண்டபம், கோவை - தொண்டாமுத்தூர், நாமக்கல் - பள்ளிபாளையம், திருநெல்வேலி - நாங்குநேரி உள்ளிட்ட ஒன்றியங்களில் உள்ள பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
தகவல் பகிர்வு:
முத்துப்பாண்டியன்.ஆ
TNPTF மாவட்டச் செயலாளர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக