சிவகங்கையில், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் தாமஸ் அமலநாதன் தலைமை வகித்தார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் புரட்சித்தம்பி முன்னிலை வகித்தார்.
மாவட்டச் செயலர் முத்துப்பாண்டியன் தீர்மானங்களை முன் மொழிந்தார்.
மாவட்டப் பொருளாளர் குமரேசன், மாவட்டத் துணைத் தலைவர் சூசைராஜ், மாவட்டத் துணைச் செயலர்கள் ரவி, ராஜகோபால், மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள் ஞானஅற்புதராஜ், சிங்கராயர் உள்ளிட்ட மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், எஸ்.எஸ்.ஏ. நடுநிலைப் பள்ளிகளைப் போல் எஸ்.எஸ்.ஏ. அல்லாத நடுநிலைப் பள்ளிகளுக்கும் தலா மூன்று பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கி ஆசிரியர்களை பதவி உயர்வில் நியமிக்க வேண்டும்.
1997 முதல் 1999 வரை இடைநிலை ஆசிரியர் பணியிடத்தில் நியமிக்கப்பட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி பட்டதாரி ஆசிரியர்களுக்கு, உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் மற்றும் பதவி உயர்வு வழங்க வேண்டும்.
61 மாணவர்கள் இருந்தால் மூன்று ஆசிரியர் என்பதை, 46 மாணவர்களுக்கு மூன்று ஆசிரியர் என மாற்றியமைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய தொழிற்சங்க சம்மேளனங்கள் செப்டம்பர் 2 ஆம் தேதி நடத்தும் அகில இந்திய வேலை நிறுத்தத்தில் இயக்கத்தின் அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக