சிவகங்கை மாவட்டத்தில் 2015-16ம் கல்வியாண்டில் கருத்தாய்வு மைய கூட்டத்தில் கலந்து கொண்டால் ஈடு செய் தற்செயல் விடுப்பு அனுமதிக்க இயலாது என தலைமையாசிரியர் கூட்டத்தில் தகவல் தெரிவித்ததாக நமக்கு இயக்க பொறுப்பாளர்கள் தகவல் தெரிவித்தனர். உடனடியாக மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் மற்றும் கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த கல்வியாண்டிற்கான தொடக்கக்கல்வி இயக்குநரின் வேலைநாள் டைரியில் கருத்தாய்வு மைய கூட்ட நாட்கள் சேர்க்கப்படவில்லை எனவும், CRC நாட்களை தவிர்த்து 220 பணி நாட்கள் வெளியிடப்பட்டுள்ளதை அவர்களின் கவனத்திற்கு தெரிவித்தோம். நமது நியாயமான கோரிக்கையை புரிந்துகொண்டு கருத்தாய்வு மைய கூட்டத்தில் கலந்து கொள்வபர்கள் அரசு விதிக்கு உட்பட்டு ஈடு செய் தற்செயல் விடுப்பு துய்க்கலாம் என தெரிவித்தார்கள். மேலும் இது குறித்து அனைத்து உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கும் தகவல் தெரிவிப்பதாக உறுதியளித்தார்கள்.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கோரிக்கையை ஏற்று நடைமுறைப்படுத்திய
மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் மற்றும் கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் ஆகியோர்க்கு நன்றி.
உண்மையை உரக்கச் சொல்லுவோம்!!!
உரிமையைப் போராடி பெறுவோம்!!!
தோழமையுடன்...
முத்துப்பாண்டியன்.ஆ
மாவட்டச் செயலாளர்
TNPTF - Sivaganga
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கோரிக்கையை ஏற்று நடைமுறைப்படுத்திய
மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் மற்றும் கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் ஆகியோர்க்கு நன்றி.
உண்மையை உரக்கச் சொல்லுவோம்!!!
உரிமையைப் போராடி பெறுவோம்!!!
தோழமையுடன்...
முத்துப்பாண்டியன்.ஆ
மாவட்டச் செயலாளர்
TNPTF - Sivaganga
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக