முந்தைய அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள், அதற்கான நிதி ஒதுக்கீடுகள் ரத்து செய்யப்பட்டு, புதிய திட்டங்களுடன், புதிய அரசு பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளது.
முதல்வர் ஜெயலலிதா தலைமையில் புதிய அரசு அமைந்து, கவர்னர் உரையுடன் சட்டசபை கூட்டத்தொடரும் நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து, இந்த நிதியாண்டுக்கான முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டியுள்ளது. இம்மாத இறுதியில் அல்லது ஜூலை மாதத்தில், புதிய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். அதன்பின், பட்ஜெட் மீது விவாதமும், துறை வாரியான மானியக் கோரிக்கைகள் மீது விவாதமும் என, ஒரு மாதத்துக்கு மேல் சட்டசபை தொடர் நடக்கும்.முந்தைய அரசு ஏற்கனவே, இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. இதில், பல்வேறு திட்டங்களும், அதற்கான நிதி ஒதுக்கீடுகளும் செய்யப்பட்டன. குறிப்பாக, கலைஞர் வீடு வழங்கும் திட்டத்துக்காக, 2,250 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. பேரூராட்சிகளில் வீடுகள் கட்டித் தர, 375 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சிக்கென, 8,812 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
இது தவிர, முந்தைய அரசின் கவர்னர் உரையில், 32 கோடி ரூபாய் செலவில் மரபணு பூங்காக்கள், புதிய தலைமைச் செயலகத்தின் இரண்டாம் கட்ட பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு தவிர, கலைவாணர் அரங்கம், 60 கோடியே 86 லட்ச ரூபாய் செலவில் கட்டப்படுமென அறிவிக்கப்பட்டது.இதுபோன்று, தி.மு.க., அரசு அறிவித்த திட்டங்கள் மற்றும் அதற்கான நிதி ஒதுக்கீடுகள் அனைத்தும் நிறுத்தப்பட உள்ளன.
இதற்கு பதிலாக, புதிய அரசு வெளியிட உள்ள பட்ஜெட்டில் இடம் பெறும் புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படும். எனவே, அனைத்து துறைகளுக்கான நிதி ஒதுக்கீட்டில் மாற்றம் இருக்கும்.இடைக்கால பட்ஜெட்டில் இந்த நிதியாண்டுக்கான வருவாய் வரவு, 79 ஆயிரத்து 413 கோடி ரூபாய் என்றும், வருவாய் செலவு, 78 ஆயிரத்து 974 கோடி ரூபாய் என்றும் மதிப்பிடப்பட்டிருந்தது. இந்த மதிப்பீடுகளிலும், புதிய பட்ஜெட்டில் மாற்றம் ஏற்படும். வரி வருவாயிலும் மாற்றங்கள் இருக்கும்.ஏற்கனவே, முதல்வர் அறிவித்து செயல்படுத்தப்பட்டு வரும் இலவச அரிசி, தாலிக்கு தங்கம், திருமண உதவித் திட்ட நிதி அதிகரிப்பு, மீனவர்களுக்கான உதவித் தொகை உயர்வு, ஓய்வூதியம் உயர்வு போன்றவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகள், பட்ஜெட்டில் இடம் பெறும். இதனால், முந்தைய அரசு ஒதுக்கிய நிதி அளவில் மாற்றங்கள் ஏற்படும்.எனவே, புதிய அரசு தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட், மக்களிடையே மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக