அடலேறு வேங்கையே!
தயாராகிவிட்டாயா?
உன் அடுத்த கட்ட சுதந்திர போருக்கு. 02.02.2014 உன் மாவட்ட தலைநகரத்தை உன்
சகோதர ஆசிரியர்களால் நிலைகுலைய வைக்க உன் முயற்சிகள் முடுக்கப்பட்டுள்ளதா?.
வெற்று வார்த்தைகளால் வீண் கதைகள் பேசி மீண்டும் உன் தரநிலையை தரம் தாழத்த
போகிறாயா? உன் தர ஊதியம் உயராமல் சமுதாயத்தில் உன் தரம் உயரப்பேவதில்லை
எனபது புரியுமா?. இல்லை எப்பொழுதும்போல் எதுவும் புரியாதது போல் என
இருந்துவிட்டு இயக்க உணர்வாளர்கள் தன் சுக-துக்கங்களை மறந்து போராடி
பெற்றத் தர இருக்கும் பலன்களை எவ்வித குற்ற உணர்வு இல்லாமல் பெறுவதற்கு
ஏ.டி.எம். இயந்திரங்களின் குளிர் அறைகளில் குதூகலத்துடன் காத்திருக்கும்
சாதாரண ஆசிரியர் போல் இருந்து விடப்போகிறாயா?. நாம் பெற்ற அனைத்து
உரிமைகளும் நமது இயக்க முன்னோடிகளின் சமரசமற்ற போராட்டத்தினால் மட்டுமே
கிடைத்தது என்பது நீ அறிவாயா?. கற்று கொடுப்பவன் நீ. உனக்கு கற்று கொடுக்க
தேவையில்லை. உரிமையை
இழந்தால் உணரவற்று போவாய். பல்வேறு ஊதிய குழுவில் நம்மை குறி வைத்து இந்த
ஊதிய குழுவில் பகை தீர்த்து கொண்டது சில பகல் வேஷம் போடும் அதிகார வரக்கம்.
அவர்களின் முகமூடிகளை உனது போராட்ட வீச்சு பிய்தெறியட்டும். இப்பொழுதே
உனது வெற்றி முரசு கொட்டட்டும். சென்ற போராட்ட களத்தில் இளைக்கப்பட்ட
துரோகங்களை மறந்து அனைத்து சகோதர சங்கங்களையும் உடன் அழைத்து வா. போர்
களத்தில் ஆக்ரோஷம் நிறைந்த உன் கோஷத்தை கேட்க உன்னோடு சேர்ந்து விண்ணை
முட்டும் கோஷம் எழுப்ப ஆவலுடன் கார்த்திருக்கிறேன். போராட்டங்கள்
விளையாட்டல்ல! கோரிக்கைகள் கேளிக்கையல்ல!! என்பதை ஆட்சியாளர்களை உணர
வைப்போம். கொட்டட்டும் போர் முரசு. தோழா உனக்காக போர்களத்தில் கோரிக்கைகள்
வெல்லும் வரை போராட மூத்த தலைமுறைகளையும் உடன் அழைத்து வா.
ஆசிரியப்பேரினமே அணி திரள்வோம!! சிறை நிரப்புவோம்!!!
தோழமையுடன்.........
ஆ.முத்துப்பாண்டியன்
TNPTF மாவட்டத்தலைவர், சிவகங்கை மாவட்டம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக