பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

1/13/2014

நமக்கான விடியல் நாளை மலரட்டும். கோரிக்கை வென்றெடுக்க கூட்டுப்போராட்டமே உகந்த வழி.(TETOJAC)

இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய உயர்வு - உரிமை மீட்பு போராட்டம் என்பது விழலுக்கு இரைத்த நீராக போய் கொண்டிருப்பது வருத்தத்துக்குறியது. அனைத்து இயக்கங்களும் தனிச்சங்க நடவடிக்கை எடுத்த பின்பும் கூட தமிழக அரசோ, கல்வித்துறையோ காது கேளாமல் இருப்பதென்பது நமது போராட்ட வியூகத்தை மாற்ற வேண்டிய கட்டாய நிலைக்கு உட்படவேண்டியது அவசியமாகிறது. உழைப்பவர்களின் உரிமைகள் எங்கு மதிக்கப்படுவதில்லையோ அந்த தேசம் உருப்பட்டதாக வரலாறு இல்லை.

தவறுதலாக கதவை தட்டிய கையைத் தான் வெட்டிக்கொண்டதால் பொற்கைப் பாண்டியன் எனப் பாராட்டப்பட்டான் பாண்டிய மன்னன் ஒருவன் என்பது பண்டையத் தமிழ் நூல் காட்டும் பண்பாட்டுச்செய்தி. அவசரப்பட்டுக் கோவலனைக் கொல்ல தானே காரணம் எனக் கூறித் தன்னுயிர் நீத்தான் பாண்டிய மன்னன் என்பது சிலப்பதிகாரம் காட்டும் செய்தி. அதன்பின் ஆங்கிலேய கம்பெனி ஆட்சி அன்னல் காந்தியின் அறவழி போராட்டத்தினால் விடுதலை கிடைத்தது.

இனறைய நிலையை நினைத்தால் ஏமாற்றம் தான் மிஞ்சுகிறது. ஆட்சியாளர்கள் வாய்மூடி மௌனம் சாதிக்கும் நோக்கம் என்ன? ஆசிரியப் பேரினம் இவ்வளவு எழுச்சி மிகு போராட்டங்களை நடத்திய பின்பும் ஒரு சிறு அதிர்வு கூட அரசாங்கத்திடம் இருந்து வரவில்லை என்பதுதான் கசப்பான உண்மை. கடந்த கால சாதனைகள் நமது கூட்டு முயற்சியல் விளைந்தவை என்பதை மறக்க - மறைக்க இயலாது.

துன்பங்கள் தொடர்கதைகளா? முடிவே இல்லையா? என ஏங்வோர் சிலர் பலராகி ஒன்றுபட்டு ஓரணி நிற்பது உறுதியாகிவிட்டால் தன்னலப்பார்வை ஒழித்து பொதுநலச் சிந்தணை மேலோங்கும்பொழுது நமக்கான விமோச்சனம் உறுதியாகிவிடும். எனதருமை தோழர்களே உயிர் முடிச்சின் இறுதி கட்டத்தில் இருக்கிறோம். இங்கே ஈகோ பார்த்தால் எல்லாம் நிர்கதியாகிவிடும். கூட்டு போராட்டத்திற்கு தங்கள் தலைமைகளை நிர்பந்தியுங்கள். விமர்சனம் இல்லாமல் ஒருவன் வளர இயலாது. விமர்சியுங்கள் - விவாதியுங்கள். முடிவு பெறும் வழியை கண்டறியுங்கள்.

'உச்சிமலையில் ஊறும் அருவிகள்

ஒரே வழியில் கலக்குது

ஒற்றுமை யில்லா மனிதகுலம்

உயர்வும் தாழ்வும் வளர்க்குது

பச்சைக் கொடிகள் வேலியிலே

பாகுபாடின்றித் தழைக்குது - அதைப்

பார்த்திருந்தும் சிலபத்தாம் பசலிகள்

பக்கம் ஒண்ணாய் பறக்குது - அன்பு

பாலம் பழுதாய்க் கிடக்குது' என்ற பட்டுக்கோட்டையாரின் பாடல் வேறுபட்டு நிற்கும் மக்களை வீறு கொண்டெழுந்து விடியல் காண அழைப்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

தோழர்களே ஆண்டவர்களுக்கும் - ஆட்சியாளர்களுக்கும் அடங்கி ஒடுங்கி அகப்பட்டதை சுருட்டும் தலைமைகளை புறந்தள்ளுவோம். எது நடந்தாலும் எனக்கென்ன என்றிருக்கும் நடைபிணங்களை, வருங்கால சந்ததியின் வருத்தத்தை எண்ணிப் பார்க்காது வாழ்நாளை வீணாக்கும் வீணர்களை, உண்டு, உறங்கி, ஊர்வம்பு பேசும் திண்ணைப் பேச்சு வீரர்களின் அலட்சிய போக்கினைச் சுட்டிக்காட்டி இயக்க உணர்வாளார்களாக மடை மாற்றுவோம். வீடு திருந்தின் தெரு திருந்தும். தெரு திருந்தின் ஊர் திருந்தும். ஊர் திருந்தின் நாடு திருந்தும். நாடு திருந்தின் உலகம் திருந்தும். முதலில் நாம் நம்மையும் நம்மை சுற்றியுள்ளோரையும் திருத்துவோம். சுயநலம் முழுதாக ஒழிக்கப்பட்டு பொதுநலம் மலரட்டும். நமக்கான விடியல் நாளை மலரட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக