பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல், மே மாதங்களில்
நடைபெற உள்ளது. தேர்தலுக்கான அறிவிப்பு பிப்ரவரி மாதம் இறுதியில் அல்லது
மார்ச் மாதம் முதல் வாரம் வெளியாகலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது. எனவே
அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்யும் நடவடிக்கைகளை பிப்ரவரி 5–ந்
தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷன் உத்தர விட்டுள்ளது.
இதையடுத்து இதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி மாவட்ட கலக்டர்களுக்கு தமிழக
அரசு உத்தரவிட்டுள்ளது. அதில், ‘ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல்
பணிபுரியும் அரசு அதிகாரிகளையும், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும்
அதிகாரிகள் சொந்த தொகுதியில் பணிபுரிந்தால் அவர்களையும் இடமாற்றம் செய்ய
வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.
பாராளுமனற தேர்தல் நடைபெற உள்ளதால் பிப்ரவரி 5–ந் தேதிக்குள் இடமாறுதல்களை
செய்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி மாறுதல்
நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கிறது.
தேர்தல் பணியில் நேரடியாக ஈடுபடுத்தப்படும் தாசில்தார்கள், வருவாய்
துறையினர், வட்டார வளர்ச்சி அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் பட்டியல்
தயாரிக்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கு அடுத்த மாதம் 5–ந் தேதிக்குள்
இடமாற்ற உத்தரவுகள் வழங்கப்பட உள்ளன.
வாக்குச்சாவடி பணியில் ஆசிரியர்கள், கல்வித் துறையினர் மற்றும் பல்வேறு
அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்கள் வசிக்கும் தொகுதி அல்லாத
வேறு தொகுதிகளில் அந்த பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
பாராளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகளில் தேர்தல் கமிஷன் தீவிரமாக உள்ளது.
இதன் ஒரு நடவடிக்கையாக இந்த மாறுதலுக்கான உத்தரவை பிறப்பித்துள்ளது.
------------------------------------------------------------------------------------
வாக்குச்சாவடி
பணியில் ஆசிரியர்கள், கல்வித் துறையினர் மற்றும் பல்வேறு அரசு ஊழியர்கள்
ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்கள் வசிக்கும் தொகுதி அல்லாத வேறு தொகுதிகளில்
அந்த பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
---------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக