புதுடில்லி : தொழிலாளர்களுக்கான இ.பி.எப். வட்டி விகிதம் 8.75 சதவீதமாக
உயர்ந்துள்ளது. வருங்கால வைப்பு நிதி திட்டத்தில், சேர்ந்து கணக்கு
வைத்துள்ளவர்களுக்கு, அவர்கள் கணக்கில் வரவு வைக்கப்படும் தொகைக்கு,
ஆண்டுதோறும், வட்டி வழங்கப்படுகிறது. இந்த வட்டி, எவ்வளவு சதவீதம் என்பதை,
இ.பி.எப்.ஓ., என்ற, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தின் கீழ்
செயல்படும், டிரஸ்டிகளின் மத்திய போர்டு கூடி முடிவு செய்யப்படும். இந்த
வகையில், 2013-14ம் ஆண்டுக்கான, வட்டியை 8.75 சதவீதமாக உயர்த்தியுள்ளதாக
மத்திய அமைச்சர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் அறிவித்துள்ளார். முன்னதாக இ.பி.எப்.,
டிபாசிட் வட்டி 8.5 சதவீதமாக இருந்தது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக