கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்களம் வட்டாரச் செயற்குழு கூட்டம் அதன் மாவட்டத் துணைத்தலைவர் திரு. மாரியப்பன் தலைமையில் நடைபெற்றது. செயற்குழு உறுப்பினர் திரு.பாலமுருகன் அனைவரையும் வரவேற்று பேசினார். கோரிக்கைகள் பற்றி வட்டாரத் துணைத்தலைவர் போஸ்ராஜன் மற்றும் பொருளாளர் தியாகு எடுத்து கூறினர். கூட்டத்தில் வருகிற 2.2.2014 அன்று மாவட்டத்தில் நடைபெறும் டிட்டோஜாக் பேரணியில் அனைவரும் கலந்து கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயற்குழு உறுப்பினர் திரு.குமார் தீர்மானங்களை முன் மொழிந்தார். இறுதியாக செயற்குழு உறுப்பினர் தான்சிங் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக