பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

12/29/2011

இதழ் செய்தி

ஆண்டுதோறும் பள்ளிகள் ஜுன் முதல் தேதி திறப்பது மரபு. இந்த ஆண்டு ஜுன் 15 அன்று திறக்கப்பட்டது. இந்த ஆண்டில் சமச்சீர் கல்விபாட நூல்களை நிறுத்தி
வைத்து வழக்காடு மன்றம் சென்று சட்டமன்றத்தில் அறிவித்து பாடநூல்கள்
ஒருவழியாக ஆகஸ்டு  மாதத்தில் விநியோகம் செய்யப்பட்டது.
மேலும் :
பாடநூல்கள் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டாலும், ஏ.பி.எல், எஸ்.ஏ.எல்.எம்,
ஏ.எல்.எம் முறைகளில் தான் 1 முதல் 8 வகுப்பு மாணவர்களுக்கு கற்றல் -
கற்பித்தல் நடைபெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பும்
இன்றுவரை  விவாதத்திற்குரிய ஒன்றாகவே உள்ளது. நடைமுறை சாத்திய  மற்றதாகவே காணப்படுகிற்து. பள்ளிகளின் சூழலுக்கு ஏறப் சுயேட்சையான, சுதந்திரமான கல்விச் செயல்பாடுகளுக்கு வழிவகை ஏதும் அளிக்கப்படவில்லை. கல்வி ஆண்டு தொடங்கி முடிந்துள்ள 7 மாதங்களில் விதவிதமான ஆசிரியர் பணியிட ஒதுக்கீடு அறிவிப்புகளும், கல‌ந்தாய்வு கூட்ட அறிவிப்புகளும், வெளிவந்த வண்ணமே உள்ளது. ஆனால் நடைமுறையில் பல்லாயிரக்கண்க்கான ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை என்பதே நிதர்சனமான உண்மையாகும்.
கல்வி ஆண்டு தொடங்கி டிசம்பர் மாதம் வரையிலும் எஸ்.எஸ்.ஏ நடுநிலைப்
பள்ளிகளுக்கு 2வது, 3வது பட்டதாரி  ஆசிரியர் பணியிடங்கள்
ஏற்படுத்தப்படவில்லை. நிலை இறக்கம் செய்யப்பட்ட தொடக்கப்பள்ளிகளுக்கு
ஆண்டுக் கண்க்கில் இடைநிலை தலைமை ஆசிரியர் பணியிடங்கள்
ஏற்படுத்தப்படவில்லை. காலியாக உள்ள, தேவையுள்ள இடைநிலை ஆசிரியர்
பணியிடங்களும் நிரப்பபடவில்லை.
பள்ளிக்கல்வித்  துறையின் அரசாணை எண்:170, நாள்:02.11.2011இன் வழியில்
அனுமதிக்கப்பட்டுள்ள 3135 ஆசிரியர் பணியிடங்கள், அர‌சாணை எண்:193,
நாள்:02.12.2011 இன்ப‌டி ஒப்ப‌ளிக்க‌ப்ப‌ட்டுள்ள‌ 1581 கூடுத‌ல் ப‌ட்ட‌தாரி ஆசிரிய‌ர் ப‌ணியிட‌ங்கள், 3565 கூடுத‌ல் இடைநிலை ஆசிரியர் ப‌ணியிட‌ங்க‌ள் நிர‌ப்ப‌ப‌ட்வில்லை.
அர‌சாணை எண்:197, நாள்:07.12.2011 இன்படி தோற்றுவிக்க‌ப்ப‌ட்ட 831
நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் பதவி உயர்வின் வழி
நிரப்பப்பட வேண்டும் என்பது ஆங்காங்கே காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது.
மேலிட சிபாரிசுகள் என்ற பெயரில் இடமாறுதல்களின் வழியில்
நிரப்பப்பட்டுள்ளது. பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வுகள் முழுமையாக
வழ‌ங்கப்படவில்லை. அர‌சாணை 198, நாள்:07.12.2011 இன்ப‌டி நிலை இற‌க்க‌ம்
செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌ 710 தொட்க்கப்ப‌ள்ளிக‌ளுக்கு இடைநிலை த‌லைமை ஆசிரியர்
ப‌ணியிட‌ம் ஏற்ப‌டுத்த‌வில்லை.
இரண்டாம் கட்ட இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் என்று கல்வித் துறை
அலுவலர்களால் கூறப்பட்டது. ஆனால் ந‌டைமுறையில் உறுதி
காப்ப‌ற்ற‌ப்ப‌ட‌வில்லை.
ப‌த‌வி உய‌ர்வு க‌ல‌ந்தாய்வு ந‌டைபெறும் என்று அறிவிக்க‌ப்ப‌டுகிற‌து.
ஆனால் ந‌ட‌ந்த‌தோ ப‌த‌வி இற‌க்க‌, ப‌த‌வி ஈர்ப்பு இட‌மாறுத‌ல்க‌ள் தான்.
ந‌ட‌ந்துள்ள‌ ப‌த‌வி இற‌க்க‌ங்க‌ள், ஈர்ப்புக‌ள் ஊதிய‌க் குறைப்பை, ஊதிய‌
வெட்டினை அறிமுக‌ப்ப‌டுத்தி ப‌ய‌முறுத்தி வ‌ருகின்ற‌து. ப‌த‌வி
இற‌க்க‌ங்க‌ளால் ப‌ட்ட‌தாரி ஆசிரிய‌ர் ப‌ணியிட‌ இன்மை உருவாகி ப‌ட்ட‌தாரி
ஆசிரிய‌ர்க‌ளுக்கு ப‌ணியிட‌ம் ஒதுக்க‌ முடியாத‌ நிலையில் எழுந்துள்ள‌து.
ப‌ல்வேறு மாவ‌ட்ட‌த் தொட‌க்க‌ப்ப‌ள்ளி அலுவ‌ல‌ர்க‌ள் செய்வ‌த‌றியாது
திகைத்து நிற்கும் நிலையும் உள்ள‌து.
இத்தனை இல்லைகளுடன் தான் கல்லாமையை இல்லாமையாக்கிட தமிழ்நாட்டு ஆசிரியர் சமுதாயம் தன்னை தியாகப்படுத்திக் கொண்டு வருகிறது. எல்லோருக்கும் தரமான கல்வி அளித்திடும் பெரும் பொறுப்பினை அர்ப்பணிப்பு உணர்வோடு நிறைவேற்றி
வருகிறது.
நன்றி : தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி இதழ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக