சிங்கம்புணரியில் 2007க்கு முன்னால் உதவித்தொடக்கக்கல்வி அலுவலகம் மற்றும் கருவூலத்தில் சர்வ சாதரணமாக கையூட்டு பெறுவது என்பது நடைமுறையில் இருந்து வந்தது. 2007க்கு பின்னால் தமிழ்நாடு ஆரமப்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மறு கட்டமைப்பு செய்யப்பட்டு இயக்க எழுச்சி நாள் மூலம் முன்னாள் பொதுச்செயலாளர் தோழர் பர்வதராஜன் அவர்களின் இயக்க பேரூரையோடு எழுச்சி கண்டது. அதன் பின்னாள் மாற்று இயக்கமில்லா ஒன்றியமாக சிங்கம்புணரி மாற்றம் கண்டது. இயக்கம் அலுவலகத்தில் நடக்கும் தில்லுமுல்லுகளை கொஞசம் கொஞசமாக களைய தொடங்கியது. ஒரு கட்டத்தில் உதவித்தொடக்கக்கல்வி அலுவலகத்தில் கையூட்டு என்பது கருவூலக ஊழியர்கள் சிலரின் வலுக்கட்டாயமான வசூல் என்பது தெரியவந்தது. உடனடியாக இயக்கத்தின் முக்கிய பொறுப்பாளர்கள் மற்றும் செய்தி ஊடகத்தோடு சிங்கம்புணரி கருவூலகம் முற்றுகையிடப்பட்டது. கருவூலத்தில் இருந்து குறிப்பிட்ட அலுவலரால் உதவித்தொடக்கக்கல்வி அலுவரகத்துக்கு அனுப்பப்பட்ட துண்டுச்சீட்டு நமக்கு கிடைத்தது. பார்த்ததும் அதிர்ச்சி. அதில் மளிகை கடை சிட்டை போல் வரவேண்டிய கையூட்டு பண பாக்கி இன வாரியாக, தேதி வாரியாக எழுதப்ட்டிருந்தது. இது குறித்து நீண்ட விவாதம் கருவூல அலவலரிடம் நடந்தது. அதன்பின் மறுநாள் தினத்தந்தி முக்கிய செய்தியாக சிங்கம்புணரி கருவூலகம் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியால் முற்றுகை என தமிழகம் முழுமைக்கும் செய்தி வெளியிட்டது. அச்செய்தி உயர் அலுவலர்களின் பார்வைக்கு சென்று விசாரணை துவங்கியது. நாமும் மாவட்டக்கிளையின் உதவியோடு மாவட்ட கருவூலக அதிகாரியிடம் மனு அளித்தோம். அப்போதைய மாவட்ட கருவூலக அலவலர் திரு. முரளிதரன் அவர்கள் இயக்கத்தின் மீது அதிக மரியாதை செலுத்தி நாம் கொடுத்த மனுவிற்கு உடனடியாக விசாரணை அதிகாரியை நியமித்து அனைத்து உண்மைகளையும் வெளிகொணர்ந்து அதற்கு காரணமான அலுவலரை உடனடி இடமாற்றம் செய்தார். தனிப்பட்ட தொலை பேசி எண் கொடுத்து தினமும் ஒரு மாத காலத்திற்கு கருவூல செயல்பாடுகள் குறித்து அலைபேசியில் நம்மிடம் உரையாடினார். நாமும் இது குறித்த அனைத்து தகவல்களையும் கருவூலத்துறையின் அப்போதைய ஆணையாளர் மதிப்புமிகு. மோகன் பியாரே அவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்தோம். இதன் காரணமாக அன்றைய தினம் நிறுத்தப்பட்ட கையூட்டு இதுநாள் வரையில் தொடர்கிறது. சிங்கம்புணரி கருவூலத்தில் பணம் பெறும் அனைத்து அலவலகங்களும் செய்ய தயங்கிய இச்செயலை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கையில் எடுத்து அதில் வெற்றியும் கண்டது. அதன் மூலம் சிங்கம்புணரி மற்றும் எஸ்.புதூர் ஒன்றியங்களில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன் அடைந்தனர். உதவித்தொடக்கக்கல்வி அலுவலகத்திற்கான மிக அவசியமான தேவைகளை நிறைவேற்ற தேவைப்படும் பணத்திற்காக இயக்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க ஒன்றியத்தில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களையும் மாதத்திற்கு ஆர்.டி.ரூ.500 செலுத்த ஏற்பாடு செய்தோம். அதன் மூலம் பெறப்படும் கமிசன் தொகையை அலுவலகத்தின் அத்தியாவசிய தேவைக்கு பயன்படுத்திக்கோண்டோம் அதன் கணக்கு வழக்குகளை இயக்கத்திற்கு முறையாக தெரியப்புடுத்த கட்டாயப்படுத்தினோம். ஒன்றியம் கையூட்டு இல்லாத ஒன்றியமாக திகழ்கிறது. இதற்கு ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி. இது யார் மனதையும் புன்படுத்தும் நோக்கில் பதிவிடப்படவில்லை. நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க வெளியிட்டோம்.
உண்மையை உரக்கச் சொல்லுவோம்!!!
உரிமையைப் போராடி பெறுவோம்!!!
_________________MP@TNPTF_______________________
உண்மையை உரக்கச் சொல்லுவோம்!!!
உரிமையைப் போராடி பெறுவோம்!!!
_________________MP@TNPTF_______________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக