தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, சிங்கம்புணரி வட்டாரக் கிளையின் சார்பாக தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச் சாவடி அலுவலர்களுக்கான சிறப்பு பயிற்சி மற்றும் கலந்துரையாடல் வகுப்பு 18.4.2014 அன்று சிங்கம்புணரி பள்ளி எண்-4ல் நடைபெற்றது. பயிற்சியினை மாவட்டப் பொதுக்குழு உறுப்பினர்கள் இராகவன், வைரம் மற்றும் வட்டாரத்தலைவர் ஞான அற்புதராஜ் ஆகியோர் அளித்தனர். இப்பயிற்சியில் ஆசிரியர்களுக்கு ஏற்பட்ட அனைத்து வகை சந்தேகங்களும் தீர்த்து வைக்கப்பட்டன. மேலும் வாக்கு பதிவு அன்று நிரப்பப்பட வேண்டிய படிவங்கள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. பயிற்சியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மன நிறைவு தெரிவித்தனர். தேர்தலை எவ்வித பிரச்சனைகளுக்கும் இடம் கொடாமல் நடத்தவும், தேர்தல் பயிற்சியில் கிடைக்காத தெளிவினை தங்களின் உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டும் என்ற சமூக நோக்கின் அடிப்படையிலும் இயக்கம் இப்பணியினை மேற்கொண்டது. பயிற்சியில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பாக தேர்தல் அலுவலர்களுக்கான விளக்க குறிப்பு வழங்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக