பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

7/08/2014

ஆபத்தை அறியாத சிங்கம்புணரி அரசு ஊழியர் - ஆசிரியர் குடியிருப்பு.

சிங்கம்புணரியில் பணியாற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி 1971ல் அப்போதைய அமைச்சர் மதிப்புமிகு சிங்கம்புணரி மாதவன் அவர்களால் கொண்டுவரப்பட்ட என்.ஜி.ஓ. காலனி குடியிருப்பு இன்று கிட்டதட்ட 45 ஆண்டுகளை கடந்து தன் நிலை மாறி சிதிலமடைந்துள்ளது. இந்த குடியிருப்பில் தங்காத ஆசிரியர் பெருமக்களே கிடையாது. அதே போல் அங்கு டியூசன் படிக்காத சிங்கம்புணரி மாணவர்களே இல்லாத அளவிற்கு நம்முடன் இரண்டற கலந்து விட்ட குடியிருப்பு. 40 வீடுகளை கொண்ட குடியிருப்பில் ஒரு காலத்தில் ஆசிரியர்கள் மட்டுமே குடியிருந்தார்கள். காலப்போக்கில் கட்டிடம் தன் உறுதி தன்மையை இழக்கவும் ஆசிரியர்கள் மெல்ல மெல்ல அங்கே இருந்து நகர்ந்து விட்டார்கள். தற்பொழு கடைநிலை ஊழியர்கள்தான் முழுவதுமாக ஆக்கிரமித்து உள்ளனர்.
இக்கட்டிடத்தின் அவல நிலையை அறிந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன் நாங்கள் சார்ந்த தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மூலம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு புகார் மனு அளிக்கப்பட்டது. உடனடியாக களத்தில் இறங்கிய அதிகாரிகள் இக்கட்டிடங்கள் குடியிருக்க தகுதியில்லை எனவும் உடனடியாக இடித்து 200 வீடுகள் கட்ட கருத்துரு அனுப்பப்போவதாக தெரிவித்தார்கள். நாடகள் உருண்டோடிவிட்டன. காரியம்தான் நடக்க வில்லை.  தற்பொழுது மௌலிவாக்கம் விபத்திற்கு பின்னால் என்னை தொடர்புகொண்ட தினத்தந்தி நிருபர் நண்பர் தனசேகரன் அரசு ஊழியர் - ஆசிரியர் குடியிருப்பின் தற்போதைய நிலையை கேட்டறிந்தார். நாமும் முழு விளக்கம் அளித்தோம். அதன் பின்னால் இது குறித்து தங்கள் செய்தி தாளில் செய்தி வெளியிட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதியளித்தார். அதன் தொடர்ச்சியாக நேற்று காலை நானும் அவரும் குடியிருப்பின் சிதிலமடைந்த பகுதிகளை புகைப்படம் எடுக்க அங்கு சென்றோம். அங்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.  அங்கு குடியிருக்கும் குடியிருப்பாளர்கள் ஒருவர் கூட தங்கள் வீட்டை திறந்து காட்ட தயாராக இல்லை. அப்படி வீட்டை திறந்து காட்டினால் எங்களை உடனடியாக காலி செய்ய சொல்லி அதிகாரிகள் மிரட்டுவார்கள் என்ற நம்மிடம் அவர்கள் சொன்ன காரணம் சற்று அதிர்ச்சியாகவே இருந்தது. நடக்கப்போகும் ஆபத்தை உணராமல் அரசு ஊழியர்களே அப்பாவி போல் பேசுவது எப்படி நியாயம்?. ஆற்றோரத்தில் கட்டப்பட்டுள்ள அக்கட்டிடம் மழை காலங்களில் தண்ணீரால் சூழப்பட்டுவிடும். குறைந்த வாடகை என்பதால் நாமே ஆபத்தை தேடிக்கொள்ளலாமா?. அரசு இப்பகுதியில் பணியாற்றும் அரசு ஊழியர் - ஆசிரியர்களுக்கு வகைப்படுத்தப்படாத வீட்டு வாடகை பட்டியலில் வைத்து குறைந்த அளவு வாடகை படி கொடுப்பதும் ஒரு காரணம். எனவே அரசாங்கமாவது விழித்து கொண்ட துரித நடவடிக்கை மூலம் இக்கட்டிடங்களை அகற்றி விட்டு புதிய கட்டிடங்கள் உருவாக்கி தர முன் வரவேண்டும். அப்படி கட்டும்பொழுது தற்பொழுது குடியிருக்கும் குடியிருப்பாளர்களுக்கு முன் உரிமை அளிக்கலாம். என்.ஜி.ஓ. காலனி குடியிருப்பு என்பதும் சிங்கம்புணரியின் அடையாளங்களுள் ஒன்று. அடையாளம் மாறாமல் பாதுகாக்க நாம் அனைவரும் முயல்வோம். இந்த முயற்சிக்கு ஆதரவு அளித்து வரும் தினத்தந்தி நாளிதழுக்கும், நம் கருத்தினை மையப்படுத்தி செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கும் நான் சார்ந்துள்ள தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக